சோழப் பெரு நாட்டில் சந்திர தீர்த்தத்தின் அருகே மரங்கள் அடர்ந்த ஒரு காடு இருந்தது. அக்காட்டில் ஒரு நாவல் மரத்தினடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. ஒரு வெள்ளை யானை நாள்தோறும் அங்கு வந்து இலிங்கத்தின் முன்னால் பணிந்து தொழுது வந்தது. இலிங்கத்தின் மீது மிகவும் பக்தி பூண்டிருந்த ஒரு சிலந்தி. காய்ந்த இலைகள் அதன்மீது உதிர்ந்து விடுவதைக் கண்டு அவற்றைத் தடுப்பதற்காக இலிங்கத்தின் மேல் ஒரு வலையைப் பின்னியது.
அடுத்த நாள் வழிபாடு செய்ய யானை வந்தபோது. சிலந்தி வலையைக் கண்டு. அங்கு வந்த யாரோ அப் புனிதமான இடத்தைக் களங்கப்படுத்திவிட்டதாக நினைத்து அவ்வலையைச் சிதைத்துத் தன் வழிபாட்டைச் செய்துவிட்டு அங்கிருந்து அகன்றது சிலந்தி அவ் விடத்திற்கு வந்து தன் வலை அழிக்கப்பட்டிருந்ததைக் கண்டு வருந்தி மீண்டும் மற்றொரு வலையைப் பின்னி விட்டுச் சென்றது. அடுத்த நாள். யானை வலையைப் பிடித்து இழுத்தபோது. அங்கு வந்திருந்த சிலந்தி அதைக் கொட்டவே அதன் நஞ்சு ஏறியதால் யானை அந்த இடத்திலேயே இறந்து போயிற்று. சிலந்தியும் யானையின் துதிக்கைக்குள் அகப்பட்டிருந்தமையால். இறந்து விட்டது.
இறைவன் திருவருளால் இச்சிலந்தி, சோழ மன்னன் சுபதேவனுடைய மகனாகப் பிறந்தது. அவனும் கடமை யுணர்வுமிக்க அவனுடைய மனைவியும் சிதம்பரத்திற்குச் சென்று நடராசப் பெருமானை ஆர்வமுடன் துதித்து ஆண் குழந்தைப்பேறு வேண்டினர். இறைவன் வரம்தர இசைந்தான். விரைவில் கமலவதி கருவுற்றாள். குழந்தை பிறக்கும் நாள் அணுகியது. சில நிமிடங்கள் கழித்துக் குழந்தை பிறந்தால் அவன் மூவுலகங்களையும் அரசாளுவான் என்று சோதிடர்கள் முன்னறிந்து கூறினர். அரசியார் தம் இடுப்பை உறுதியான துணியால் கட்டி அறையின் விட்டத்தில் கயிறமைத்துத் தம்மைத் தலைகீழாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளு மாறு கேட்டார். மங்கல நேரம் வந்தபோது அம்மை பார் விடுவிக்கப்பட்டார். குழந்தையும் பிறந்தது. இது சிலந்தியின் மறு பிறப்பாகும். தாயின் கருவரையில் சிறிது நேரம் நீடித்துத் தங்கிய காரணத் கால் குழந்தையின் கண்கள் சிவந்து போயின. தாயார் அவனுடைய கண்களைப் பார்த்துக் கோச் செங்கண்ணன்' (சிவந்த கண்கள் உள்ள குழந்தை) என்று சொல்லி உயிர் துறந்தாள். எனவே அவன் கோச் செங்கட் சோழன் என்று பெற்றான். அவன் தகுந்த பருவத்தை அடைந்தபோது அவனுடைய தந்தை அவனை அரசனாக முடி சூட்டி உலகியல் வாழ்வைக் துறந்து கடுந்தவங்கள் செய்து சிவபுரம் அடைந்தான்.
கோச்செங்கட் சோழன் சைவ சமயத்தை வளர்த் தான். அவன் திரு ஆனைக்காவில் அதே நாவல் மரத்தின் கீழ் சிவலிங்கத்தை நிறுவி ஓர் அழகான கோயிலைக் கட்டினான். சோழ நாட்டில் துவன் பல கோயில்களைக் கட்டினான் தில்லை மூவாயிர அந்தணர்களின் உபயோ கத்துக்காகப் பல மாளிகைகளையும் கட்டினான். சிதம்பரத்தில் வழிபாடுகள் ஒழுங்காக நடைபெறு வதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் வசதிகளையும் செய்து தந்தான். முடிவில் அவன் சிவபுரத்தை அடைந் தான். புலவர் பொய்கையார் தம் 'களவழி நாற்பது என்ற நூலில் அவனுடைய பெருமைகளைப் பாடியுள்ளார்.