சோழப் பெருநாட்டில், திரு எருக்கத்தான் புலியூரில் திருநீலகண்டயாழ்ப்பாணர் என்பவர் சிவபெருமானிடம் பேரன்பும் பக்தியும் பூண்டு வாழ்ந்து வந்தார். யாழ் வாசிப்பதில் (வீணை போன்ற இசைக்கருவி) அவர் வல்லவர். புனிதக் கோயில்களுக்குச் சென்று இறைவனுடைய பெருமைகளை யாழில் வாசிப்பது அவருடைய வழக்கம். அவர் ஒரு முறை மதுரைக்குச் சென்றார். வாசலில் நின்று கொண்டு அவர் பாடிக் கொண்டிருந்தார். இறைவன் அவரை மிகவும் அணுக்க மாக இருக்கச் செய்து கேட்க விரும்பி அடுத்த நாள் வரும் யாழ்ப்பாணரைக் கோயிலில் உள் கருவரைத்து அழைத்து வருமாறு தம் பக்தர்களின் கனவில் தெரிவித் தார். அந்தணர்கள் அவரைக் கோயிலின் உள்ளே அழைத்துச் சென்றபோது யாழ்ப்பாணர் ஆச்சரிய மடைந்தார் ஆனால் இது இறைவன் திருவிளையாடல் என்று புரிந்து கொண்டு, இறைவன் தம்மை அருகே இருந்து யாழிசைப்பதைக் கேட்க விரும்புவதை அறிந்து கொண்டார். அவர் யாழிசைத்துப் பாடியபோது விண்ணில் ஒரு அசரீரி எழுந்து பின் வருமாறு கூறியது "இசைக்கருவி ஈரமான தரையில் பட்டால் முறிந்து விடும். எனவே அவர் அமர்வதற்குப் பொற்பலகை இடுங்கள். உடனே அவருக்குப் பொற்பலகை இடம் பட்டது. யாழ்ப்பாணர் இறைவனைப் பணிந்து வணங்கி இறைவனுடைய மிக உயர்ந்த கருணைத் திறங்களை எல்லாம் பொற்பலகைமீது நின்றவாறே பாடினார்.
யாழ்ப்பாணர், பின்னர் திருவாரூருக்குச் சென்றார். இங்கு கூட அவர் கோயிலின் வெளியில் நின்று பாடினார். இங்கும் இறைவன் அவரைத் தமக்கு மிகவும் அருகில் இருந்து பாட வேண்டும் என்று விரும்பினார் கோயிலின் வடக்குப் புறத்தில் ஒரு வாசலை உண்டாக் கினார். யாழ்ப்பாணர் இறைவனுடைய விருப்பத்தைப் புரிந்து கொண்டு அவ்வாசல் வழியே புகுந்து இறைவன் திருமுன்பு பாடினார். அவர் சம்பந்தரைச் சந்தித்த வரலாறும் முக்தியடைந்த நிகழ்ச்சியும் ஏற்கனவே சம்பந்தர் வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளன.