திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் சடை யனார் என்ற ஆதிசைவர் வாழ்ந்தார். அவருடைய முன் ' னோர்கள் அனைவரும் சிவபெருமானிடம் ஆழ்ந்த பக்தி பூண்டவர்கள். அவரும் ஆசாரமும் பக்தியும் உள்ளவர். இசை ஞானியார் அவருடைய கடமையுணர்வுமிக்க மனைவி. அம்மையாரும் இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவர்கள் முற்பிறப்பில் செய்து வந்த அறங்களின் பயனாக, அவர்களுக்கு ஒரு தெய்வகக் குழந்தை பிறந்தது. அக்குழந்தையே சுந்தரமூர்த்தி நாயனார். அரசர் நரசிங்க முனையர். அக் குழந்தையின் அழகினால் ஈர்ப்புண்டு தாமே அக்குழந்தையை வளர்க்க விரும்பினார்.அரசர் பெற்றோரை அணுகவும் , அவர்கள் சிறிதும் தயங்காமல் குழந்தையை அவரிடம் ஒப்படைத்தனர். இச்செயலால் அவர்கள் இவவுலகில் எப்பொருளிடத்தும் பாசம் வைக்கவில்லை என்று நிரூபித்தனர்.
அவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இல்லற வாழ்வை நடத்தி முடிவில் இறைவனுடைய திருவருளைப் பெற்றனர்.
உலகியல் பாசம் தான் மனிதனைச் சம்சாரத்தில் கட்டி வைக்கிற ஒரே சங்கிலியாக உள்ளது. பாசம் இருந்தால் சம்சாரம் அல்லது பந்தம் இருக்கிறது பாசத்திலிருந்து முற்றிலும் விடுபட்டால், நாம் உடனே ஜீவன் முக்தராகிறோம். இக்கணத்திலேயே இங்கேயே நாம் பிரம்மானந்தத்தை நுகர்வோம். இந்து மதத்தின் தனிச் சிறப்பு இதுவே; உடம்புடன் இருக்கும்போதே இவ்வுலகில் இங்கேயே நாம் உடனே முக்தி பெறுவோம் என்று உறுதியை அது தருகின்றது. உடனே இவ் வுலகம் முழுவதும் தெய்வீகப் பேரொளியின் வெளிப் பாடாக மாறுகின்றது. படைப்பின் எல்லா மர்மங்களும் புதிர்களும் நமக்குப் புலனாகின்றன.