Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

இருபது ஆன்மீக போதனைகள்

ஸ்ரீ சுவாமி சிவானந்தா

  1. நான்கு மணிக்கு எழுந்திருங்கள் . ஜயம், தியானம் செய்யுங்கள்.
  2. சாத்வீக ஆகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வயிறு நிறைய உணவு எடுத்துக்கொள்ளாதீர்கள்.
  3. பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமர்ந்து ஜபம் தியானம் செய்யுங்கள்
  4. தியானத்திற்கென தனி அறையை பயன் படுத்துங்கள்.
  5. உங்கள் வருவாயில் பத்தில் ஒரு பங்கினை அல்லது ரூபாய்க்கு பத்து பைசாக்கன தர்மம் செய்யுங்கள் -
  6. தினசரி பகவத் கீதையில் ஒரு அத்தியாயம் படியுங்கள் --
  7. வீர்ய சக்தியைக் காப்பாற்றுங்கள். தனியாகப் படுத்துத் தூங்குங்கள்.
  8. புகை பிடித்தல், போதை தரும் பானம், உயர்தர உணவு இவைகளை விட்டு விடுங்கள்.
  9. ஏகாதசி தினம் உபவாசம் இருங்கள் அல்லது பால் பழங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் .
  10. தினசரி 2 மணி நேரம் மௌனத்தையும், சாப் பிடும் பொழுது மௌனத்தையும் கடைபிடியுங்கள்.
  11. எந்நிலையிலும் உண்மையே பேசுங்கள். கொஞ்ச மாக இனிமையாகப் பேசுங்கள்.
  12. தேவைகளை குறைத்துக் கொள்ளுங்கள். திருப்தி யாக சந்தோஷமாக வாழ்க்கையை நடத்துங்கள்.
  13. மற்றவர்களுடைய உணர்ச்சிகளை புண்படுத்தாதீர் கள். எல்லோரிடமும் அன்பாக இருங்கள்.
  14. நீங்கள் செய்த தவறுகளை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.
  15. வேலைக்காரர்களையே நம்பி இருக்காதீர்கள். சுய - தேவையை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
  16. படுக்கையை விட்டு எழுந்தவுடனும் படுக்கைக்குச் செல்லும் முன்னும் கடவுளைத் தியானியுங்கள்.
  17. உங்கள் கழுத்திலோ, அல்லது சட்டைப் பையிலோ ஜபமாலை ஒன்றை வைத்திருங்கள்.

18.எளிமையான வாழ்க்கையும், உயர்ந்த சணமும் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கருத வேண்டும்.

  1. சாது, சன்யாசி, ஏழை எளியோர்களுக்கு உதவ வேண்டும்.
  2. கடமையை நிறைவேற்றுவதில் ஒரு பொழுதும் பின் வாங்காதீர்கள். தினசரி ஆன்மீக நாட் குறிப்பினை எழுதி வாருங்கள்.
Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.