Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

மாணிக்கவாசகர்

பாண்டிய நாட்டில் திருவாதவூரில் சீலம் மிகுந்த ஓர் அந்தணர் வாழ்ந்தார். அவரும் . கடமையுணர்வு மிகுந்த அவருடைய மனைவியும் முற்பிறப்புக்களில் செய்த புண்ணியங்களின் தகுதியினால். தகுந்த மகனைப் பெற்றுத் தம் சொந்த ஊரின் பெயரால், வாதவூரர் என்று பெயரிட்டனர்.

குழந்தை வளர வளர - அறிவு நலமு-ம் நன்கு வளரலாயிற்று. விரைவில் சிறுவன் சமய நூல்கள் எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்தான். நற்குணங்கள் எல்லாவற்றின் உறைவிடமாகவும் அவன் விளங்கி அனைவருடைய அன்பையும் நன்மதிப்பையும் பெற்றான். பலமை நிறைந்த பண்டிதர்களும் ஞானிகளும் கூட அவனுடைய தோற்றத்தாலும் அறிவாற்றலாலும் கவரப்பட்டனர். மதுரை மன்னன் அரிமர்த்த ன பாண்டியன் வாதவூரரின் குண நலன்களைப்பற்றிக் கேள்வியுற்று அவர் நல்லாத் துறைகளிலும் வல்லவர் என்பதையும் நிர்வாகத் திறமை மிகுந்தவர் என்பதை யும் கண்டு கொண்டார். அரசர் அவரைத் தம் முதலமைச்சராக ஆக்கிக்கொண்டார். இங்கும் வாதவூரர் ஒப்பற்ற தம் அறிவினால் பொலிவுற்று விளங்கித் தென்னவன் பிரமராயர் என்ற பட்டத்தையும் பெற்றார் .

எனினும். நாட்கள் செல்லச் செல்ல, வாதவூரரின் உள்ளத்தில் வெறுப்பு வளர்ந்தது. அவர் உலகின் நிலயாமையை உணர்ந்து கொண்டார். பிறப்பு நோய் இறப்பு, மீளப் பிறத்தல் முதலிய ஒவ்வொன்றும் அவருக்கு வேதனை தந்தது. அவர் சிவானந்தம் என்னும் பேரின்பத்தை நுகர விரும்பினர். அரசியல் கடமைகளை அவர் நிறைவேற்றிக் கொண்டிருந்த நேரங்களில் கூட அவருடைய மனம் இறைவனுடைய தாமரை மலரடி களில் பதிந்திருந்தது. அவர் கற்றறிந்த அறிஞர்களை வரவழைத்து அவர்களுடன், வேதங்களில் உள்ள சக்கலான கருத்துக்களைப்பற்றிக் கர்க்கம் செய்வார் உண்மையான ஆன்மீக முன்னேற்றத்துக்கு ஓர குரு மிகவும் அவசியம் வேண்டும் என்று அவர் விரைவில் உணர்ந்தார். உண்மையான குருவைச் சந்திக்க அவர் மிகுந்த ஆவல் கொண்டார். கடமையின் பொருட்டு வெளியே எங்கு சென்றாலும் அவர் தம் குருவை தேடிவந்தார்.

ஒருநாள் அரசர் அரசவையை நடத்திக் கொண்டிருந்தபோது குதிரைப்படைத் தலைவன் உள்ளே துழைந்து குதிரைகள் நோயாலும், இறப்பாலும் முப்பாலும் எண்ணிக்கையில் குறைந்து விட்டன் என்றும் உடனே புதிய குதிரைகளைச் சேர்க்கவேண்டி யுள்ளதென்றும் அறிவித்தான். அரசர் உடனே நல்ல குதிரைகளை வாங்குவதற்கான ஆணை பிறப்பித்தார் - நல்ல குதிரைகளைத் தகுந்த இடத்திலிருந்து வாங்கும் பணி வாதவூரரிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. வாதவூரர். இப்பயணத்தின் போது நிச்சயம் உண்மை யான குருவைச் சந்திக்கமுடியும் என்று கருதிப் பெரு மகிழ்ச்சியடைந்தார். இவ்வாய்ப்பு அவருக்குத் தெய்வ அருளால் நேர்ந்தது. நேர்மையான உள்ளத்துடன் அவர் சோம சுந்தரக் கடவுளுக்குக் கோயிலில் வழிபாடு செய்து மேனியில் திருநீறணிந்தவராய், வாயில் இறைவன் நாமத்தை உச்சரித்தவராய்ப் போதிய நிதியுடன் குதிரைகளை வாங்கிக்கொண்டுவரும் பணியை நிறைவேற்றப் புறப்பட்டுச் சென்றார். அவர் திருப்பெருந்துறையை அடைந்தார்.

அனைவர் இதயங்களிலும் உள்ளுறையும் சிவ பெருமான் வாதவூரரின் உட்கிடக்கையான மனநிலையை அறிந்தவராய் அடியார் கூட்டத்தில் அவரைச் சேர்க்க முடிவு செய்தார். அந்தணர் கோலம் பூண்டு, கையில் சிவஞான போத நூலின் படியொன்று தாங்கித் திருப்பெருந்துறையில் கோயிலில் குருந்த மரத்தடியில் வீற்றிருந்தார். அவரைச் சுற்றிலும் மற்றவர்கள் (விண்ணுலகத் தொண்டர்கள் மக்கள் கோலம் பூண்டு) புடைசூழ்ந்திருந்தனர். வாதவூரர் கோயிலில் நுழைந்து இறைவன் முன்னிலையில் வழிபாட்டில் ஆழ்ந்து செயலற்று நின்றார். தெய்வபக்தியால் அவர் கண்ணீர் சொரிந்தார். பின்னர் அவர் கோயிலை வலம் வந்தார். குருந்த மரத்தருகே வரும்போது அவர் இறைவன் நாமத்துக்குரிய புனித ஒலி அலைகளைக் கேட்டார். ஹா ஹர என்னும் ஓசை கேட்டு அவருடைய உள்ளம் உருகிற்று. அந்தணருடைய காந்த சக்தி மிகுந்த தோற்றப்பொழிவு அவரை இழுத்தது. ததும்பி வழியும் அன்பாலும் பக்தியாலும் வாதவூரர் அந்தணர்பால். நீண்டகாலம் பிரிந்திருந்த தாய்ப் பசுவைக்கண்ட கன்று போல் ஓடிச்சென்று அந்தணரின் திருவடிகளில் வீழ்ந்தார்.

இறைவன் திருவருளால், வாதவூரர் அவரே தம் உண்மையான குரு என்று கண்டுகொள்ள முடிந்தது. அவருடைய திருவடிகளைத் தம் கைகளால் பற்றிக் கொண்டு, பெருமானே! அருள் கூர்ந்து என்னைத் தங்கள் அடிமையாக ஏற்றுக்கொண்டு அருள் செய்யுங் கள்' என்று வேண்டினார். இறைவன் இதற்காகவே காத்திருந்தான்; வாதவூரர்பால் கருணைமிக்க கடைக்கண் நோக்கம் வைத்தான். இதனால் வாதவூரர் தீவினைகளிலிருந்து விடுபட்டு மனத்தூய்மை பெற்றார். பின்னர் இறைவன் சிவஞானத்தின் தெய்வீக மர்மங் களைப் புரிந்து கொள்ளத் தீட்சை செய்தான். தீட்சை செய்த அளவிலேயே வாதவூரர் மெய்ம்மறந்து பரவசமடைந்தார். அவர் தெய்வீகப் பேரின்பத்தை நுகர்ந்து தன்னை மறந்து அதிலேயே தோய்ந்திருந்தார். பின்னர் வாதவூரர் மீண்டும் தன் நினைவு பெற்று மீண்டும் குருவின் திருவடிகளில் வீழ்ந்தார். 'பெருமானே! தெய்வீக மர்மங்களை நான் புரிந்து கொள்ளுமாறு எனக்குத் தீட்சை செய்ய வந்தவரே! ஒரு பார்வையால் என்னை வசப்படுத்தியவரே! என் மனம் உருகச் செய்தவரே! உடல் பொருள். ஆவி அனைத்தும் உணர்வும் உமக்கே ஒப்படைக்கச் செய்தவரே! தோளாமுத்தே! அழியாச் செல்வமே! பேரின்பக் கடலே! அமரத்துவம் வழங்கும் அமிர்தமே! வணக்கம்! வணக்கம்!' என்று அழுது அரற்றி இறைவன் புகழ்களைப் பாடி வாதவூரர் தம்மிடம் இருக்த உடைமைகள் எல்லாவற்றையும் குருவின் காலடிகளில் ஒப்படைத்தார். அவர் ஓர் துறவியாகி விட்டார். மேனி எங்கும் புனிதத் திருநீறு பூசி , மனத் தைக் குருவின் பாதகமலங்களில் பதித்து வாதவூரர் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கினார். இந்த தியானத் திலிருந்து அவர் விழிப்புற்றபோது இறைவன் புகழ் களைப் பாட வேண்டும் என்ற விருப்பம் அவர் மனதில் நிறைந்தது. அன்பே நாராகவும், அமுத மொழிகளே மாணிக்கங்களாகவும் பாமாலை தொகுத்துக் குருவின் காலடிகளில் அணிவித்தார். இறைவன் பெருமகிழ்ச்சி யடைந்து அவரை மாணிக்கவாசகர்' என்றழைத்தான் ஏனெனில் அவர் பாடிய பாடல்கள் அறிவொளிமிகுந்த மாணிக்கங்களாக விளங்கின. அவரை அங்கேயே தங்கியிருக்குமாறு கட்டளை தந்து இறைவன் மறைந்தான்.

இறைவனையும், குருவையும் பிரிந்திருக்க நேர்ந்த மையால் மாணிக்கவாசகரால் பிரிவுத் துன்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஆழ்ந்த வருத்தத்தையும், துயரத்தையும் அவர் அடைந்தார். விரைவில் அவர் தாமே தம்மைத் தேற்றிக்கொண்டு இறைவனும் குருவும் பற்றிய நினைவுகளிலேயே உயிர் வாழ்ந்தார். வாத வாருடன் உடன் வந்த அரசனுடைய பணியாட்கள் அவர் தாம் வந்த காரியத்தை மறந்துவிட்டார் என்று கருதிச் சில நாட்கள் பொறுத்திருந்து அவருக்கு மெதுவாக நினைவுப்படுத்தினார்கள். இன்னும் ஒரு மாத காலத்தில் மதுரைக்குக் குதிரைகள் வந்து சேரும் என்ற செய்தியுடன் மாணிக்கவாசகர் அவர்களை அரசனிடம் அனுப்பினார். வாதவூரருக்கு நிகழ்ந்தவற்றைப்பற்றி அரசன் செவியுற்றபோது சினங்கொண்டான் ஆனாலும் ஒரு மாத காலமாகட்டும் என்று பொறுமை யுடன் காத்திருந்தான்.

திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அரசனையும் தம் காரியத்தையும் மறந்து இறைவனிடம் பக்தி பூண்டிருந்தார். ஒரு கோயிலைக் கட்டுவதற்காகத் தரம் கொண்டு வந்த நிதியைச் செலவிட்டார். ஒரு மாதம் கழிந்தவுடன் அரசன் தன் சினத்தை வெளிப் படுத்தும் ஓர் குறிப்பை அவருக்கு அனுப்பி, அரசனுடன் காரியத்தில் ஈடுபடுபவர் ஓர் நாகத்துடன் ஈடுபடுவது போல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உடனே தம் முன்னே தோன்றுமாறு அறிவித்தான். மாணிக்கவாசகர் நிலைகுலைந்தார். அவர் கோயிலுக்குச் சென்றார். தம்மைக் காப் பாற்றும்படி அவர் இறைவனை வேண்டித் தொழுதார். அவருடைய நேர்மையான வழிபாட்டினால் மனம் நெகிழ்ந்த இறைவன் அன்றிரவு அவருடைய கனவில் தீட்சை செய்த குரு வடிவில் தோன்றி 'பண்புடையாய்! அஞ்சாதே! மதுரைக்கு மிக நல்ல குதிரைகளை நானே அழைத்து வருகின்றேன் . முன்னதாக நீ அங்கே போய் இரு. ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும் என்று அரசனிடம் தெரிவி' என்று கூறினார். மிகவும் விலையுயர்ந்த வைரமணியை அவருடைய கைகளில் சேர்ப்பித்து இறைவன் மறைந்தான்.

அடுத்த நாள் காலையில் மாணிக்கவாசகர் பெருந் துறைப் பெருமானிடம் விடை பெற்றுக்கொண்டு அமைச்சுத் தன்மைக்குரிய அணியாடைகளைப் புனைந்து கொண்டு மதுரை நோக்கிப் புறப்பட்டார். அரசனைப் பணிந்து வணங்கி அவனிடம் வைரமணியை வழங்கினார். அரசே! நான் கொண்டு சென்ற நிதிக் கெல்லாம் குதிரைகளை ஏற்கனவே வாங்கிவிட்டேன். குதிரைகளை எல்லாம் இங்கே கொண்டு வந்து சேர்ப் பதற்கான மங்கல நன்னாள் வரட்டும் என்று காத் திருந்தேன். ஆவணி மூலம் மிகவும் சிறந்த பொன்னாள். தங்கள் கட்டளைக்குப் பணிந்து இடையே நான் திரும் பினேன் குதிரைகள் யாவும் அந்த நன்னாளில் இங்கு வந்து சேரும் என்று தெரிவித்தார். அரசன் தான் சினத்துடன் குறிப்பை அனுப்பியமைக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டான். குதிரைகள் வந்து தங்கு வதற்காக மாணிக்கவாசகர் மிகவும் பெரிய லாயத்தைக் கட்டினார்.

மாணிக்கவாசகருடைய உறவினர்கள் அவருடைய உண்மையான மன நிலைபற்றி ஐயுற்று உலகைத் துறந்துவிடாமல் தங்கள் அனைவரையும் பேணிக் காக்குமாறு வேண்டினர். அவர் சிரித்துக் கொண்டு "நண்பர்காள்! இறைவன் எனக்குத் தீட்சை அளித்த போதே நான் எல்லாவற்றையும் அவருடைய திருவடி களில் தத்தம் செய்து விட்டேன். இறைவனும், இறைவனுடைய அடியார்களும் தவிர எனக்கு வேறு உறவினர்கள் யாரும் இல்லை. இந்த என் உடம்பின் மீதும் எனக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. நம் அனைவருடைய பாவங்களையும் போக்கிப் பேரின்பத் தைப் பொழியவல்ல இறைவன் ஒருவன் தான் எனக்குள்ள ஒரே பற்று. பிறப்பதும் துன்பம் இறப்பதும் துன்பம். இறைவனோடு தொடர்பில்லாத எதுவும் துன்பமே. இனி நான் உலகில் உள்ள எதன் பொருட்டும் கவலைப்படவில்லை. விரித்த என் உள்ளங் கையையே பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு நான் மகிழ்வுடன் பிச்சை ஏற்பேன் தற்செயலாகக் கிடைக் கும் உணவைக் கொண்டு நான் பசியாறுவேன் நான் தங்குவதற்கு இடம் தர நிலமே தயாராக இருக்கும் போது தனி மாளிகையில் நான் ஏன் அடைக்கலம் அடைய வேண்டும்? என் மேனியில் நான் பூசிக்கொள்ளும் வாசனைத்திரவியம், திருநீறு தான். பல பிறவிகளிலும் செய்த பாவங்கள் அனைத்தையும் அழிக்க வல்ல உருதத்திராட்ச மாலையே என் ஒரே உடைமை. நண்பர்காள்! நான் இறைவனுடைய பாதுகாப்பில் இருக்கும் போது நான் யாருக்காகவும் ஏன் அஞ்சவேண்டும்? என்று தெரிவித்தார்.

இறைவனிடம் லயித்த மனத்துடன், மாணிக்க வாசகர் மங்கல நன்னாளை எதிர்பார்த்துக் கொண்டிருந் தார். இதற்கிடையில், அமைச்சர்களில் ஒருவர். மாணிக்கவாசகர் உண்மையில் நிதியையெல்லாம் கோயில்களைக் கட்டுவதிலேயே செலவழித்துவிட்டார் என்றும், குதிரைகள் வரும் என்று மாணிக்கவாசகர் கூறியது பொய்யென்றும் அரசனிடம் தெரிவித்தார். அரசனுடைய ஐயம் நாளுக்கு நாள் வளர்ந்தது. அவன் தூதுவர் சிலரைப் பெருந்துறைக்கு அனுப்பி அங்கு குதிரைகள் உண்மையில் உள்ளனவா என்று பார்க்கச் சொன்னான். அவர்கள் திரும்பி வந்து 'இல்லை' என்று விடை கூறினர். இனி, இரண்டே நாட்கள் இருந்தன. குதிரைகளைப் பற்றிய தகவல் எதுவும் அரசனுக்கு வரவில்லை. ஆகையால் அரசன் தன் படைவீரர்களுக்கு மாணிக்கவாசகரைச் சித்ரவதை செய்து துன்புறுத்தி நிதியைத் திரும்பப்பெறுமாறு கட்டளையிட்டான். அவர்கள் அரசவையில் நடைபெற்ற எல்லாவற்றையும் மாணிக்கவாசகரிடத்தில் தெரிவித்தார்கள். அவர் மிகவும் அமைதியாக இருந்தார். அரச கட்டளைக்கு இணங்க அவர்கள் அவரைத் துன்புறுத்தினர். அவர் எல்லாவற்றையும் சகித்து கொண்டார். அவர் தம் மனத்தை இறைவனிடமே பதித்திருந்தார். இறைவன் தாமே தண்டனைத் துன்பங்கள் யாவற்றையும் தாங்கினார் பக்தர் விடுவிக்கப்பட்டார். அவர் எவ்வாறு பொறுத்துக் கொண்டுள்ளார் என்ற இரகசியத்தைப் படை வீரர்கள் புரிந்து கொள்ள முடிய வில்லை. அவர்கள் அவரை மேன்மேலும் துன்புறுத்தி னார்கள். அவர் இறைவனிடம் முறையிட்டார். இறைவன் தன் பக்தருடைய முறையீட்டைச் செவி யேற்றுத் தன் திருவிளையாடலை ஆட விரும்பினான். நாட்டில் உள்ள நரிகள் யாவும் பரிகள் ஆகுமாறு மனத் தில் எண்ணங்கொண்டான். விண்ணுலகில் இருந்த தன் தேவ தூதர்களைக் குதிரைப் பாகர்களாக நடிக்குமாறு அனுப்பினான். தானும் குதிரைச் சாத்து வணிகனாகக் கோலம் கொண்டான். இறைவன் மதுரையை அடைந் தான். குதிரைகளின் பாய்ச்சலால் எழுந்த தூசி விண்ணெங்கும் நிறைந்தது. அழகிய குதிரைகளைப் பார்த்த மக்கள் ஆச்சரியத்தால் வாயடைத்துப் போயினர். அன்று. ஆவணி மூலத்திருநாள். காரண மின்றி மாணிக்கவாசகரை வருத்தினோம் என்ற எண்ணம் அரசனுடைய மனத்தைப் புண்படுத்தியது. அவன் அவரை உடனே விடுவித்து மன்னிப்பை வேண்டினான். அவர்கள் இருவரும் குதிரைகள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்த இடத்தை அடைந் தார்கள். தரம் உயர்ந்த நல்ல குதிரைகளைக் கண்டு அரசன் மகிழ்வுற்றான். குதிரை வணிகனும் அழகுடன் காணப்பட்டான். அவ்வாறு வந்தவன் இறைவனே என்ற உண்மையை மாணிக்கவாசகர் அறிந்து மானசீக மாக தன் வணக்கங்களைச் செலுத்தினார். அரசனுடைய பணியாட்கள் குதிரைகளை லாயத்திற்குக் கொண்டு சென்றார்கள்.

பகல் கழிந்து இரவு வந்தது. இறைவன் விரும்பிய வாறு, குதிரைகள் யாவும் பழையபடி நரிகளாக மாறிக் கடிவாளங்களை உடைத்து விட்டு ஊளையிட்டவாறு லாயத்தைவிட்டு வெளியே ஓடிவிட்டன. அவற்றுள் சில நரிகள், உண்மையாக இருந்த குதிரைகளையும் கடித்துக்குதறின. மூப்படைந்த நரிகள் சில லாயத் திலேயே தங்கிவிட்டன. அடுத்த நாள் காலையில் குதிரைப்பாகர் , லாயத்தில் இருந்த ஒரு சில நரிகளைத் தான் கண்டான் குதிரைகள் எவற்றையும் காண வில்லை. அவர்கள் உடனே அரசனிடம் இதை அறிவித் தார்கள். மாணிக்கவாசகர் ஏதோ மாயம் செய்து தன்னை ஏமாற்றியதாகக் கருதிய அரசன் அவாமதி அடங்காச் சினங்கொண்டான். அரசனுடைய படை வீரர்கள் அவரை மீண்டும் வதைக்கத் தொடங்கினார்கள். மாணிக்கவாசகர் தம்மைக் காப்பாற்றும்படி இறைவனிடம் முறையிட்டார். உடனே இறைவன் வைகை நதியில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுமாறு செய்தான். நகரில் எங்கும் திகிலுணர்ச்சி காணப் பட்டது. காலம் அல்லாக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணத்தை மக்கள் புரிந்து கொள்ள முடியவில்லை. மாணிக்கவாசகரை காவல் செய்து படை வீரர்களும் ஓடிவிட்டனர். அவர் கோயிலுக்குச் சென்றார். அவர் சோமசுந்தரப் பெருமானைத் தொழுது தியானத்தில் முற்றிலும் மெய் மறந்து திளைத்தார். அரசன் குழப்பமடைந்தான். நகரை அழிந்து விடாமல் காப்பதற்கு அவன் விரும்பினான். எனவே அவன் நகரில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு கூடை மண் ஆற்றின் கரையில் இட்டு வெள்ளத்தைத் தடுக்குமாறு ஆணையிட்டான். வந்தி என்னும் பெயருள்ள ஒரு கிழவியைத் தவிர அனைவரும் தம் கடமையை நிறை வேற்றினர். அவள் பிட்டு (சிற்றுண்டி) விற்று வாழ்வை நடத்தி வந்தாள். அவள். சோமசுந்தரப் பெருமானிடம் மிகுந்த பக்தி பூண்டிருந்தாள் நான் தோறும் முதல் பிட்டை இறைவனுக்குப் படைத்து விட்டு விற்பனையைத் தொடங்குவாள். அவள் தற்போது துயரமடைந்தாள். உதவி செய்யுமாறு அவள் இறைவனிடம் முறையிட்டாள் . . சிவபெருமான் பெருங் கருணே கொண்டு கூலியாள் போன்ற கோலத்தில் கிழவியின் முன்னே தோன்றித் தான் பணி செய்வ தாகவும் கை நிறையப் பிட்டு தந்தால் அதுவே தனக் குரிய கூவியாகும் என்றும் தெரிவித்தான். இடையைச் சுற்றிலும் அழுக்குடை அணிந்து தலைமீது கூடை சுமந்து அவன் ஆடுவதும். பாடுவதுமாக இருப்பான். பின்னர் கரையில் மண்ணைக் கொட்டுவான். கிழவி அன்புடன் தரும் பிட்டை உண்டுவிட்டு மண்ணைக் கரையில் வேக மாகக் கொட்டுவதனால் புதிய உடைப்புகளை ஏற்படுத்தி விடுவான். சிறிது நேரம் களைத்துப் போனது போல் செயலற்றுச் சாம்பியிருந்து மீண்டும் ஆடவும், பாடவும் தொடங்குவான். அவன் பணி செய்து அடைக்க வேண்டிய இடம் அடைக்கப்படாமல் இருந்த தைக் கண்ட பணியாட்கள் அரசனிடம் புகார் செய் தனர். அரசன் பணிகளை எல்லாம் தானே நேரில் பார்வையிட்டு வருகையில் புதிய கூலியாள் வேலை எதுவும் செய்யாமல் சோம்பேறியாக இருந்ததைக்  கண்டு பிரம்பினால் அடித்தான். இறைவன் மண்ணைக் கொட்டவும் உடைப்பு அடைப்பட்டது. எனினும், அடி அண்டசராசரங்களில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பட்டது. இறைவனுடைய திருவிளையாடல் தான் இது என்று அரசன் உடனே உணர்ந்து கொண்டான். அவன் மாணிக்கவாசகருடைய பெருமையைப் புரிந்து கொண்டான். அதே நேரம் அவன் பின்வரும் அச ரீரியைக் கேட்டான். "அரசே! உன் செல்வம் முழு வதும் எனக்காகவும், என் அடியார்களுக்காகவும் செலவு செய்யப்பட்டது. இச்செயலால் மாணித்து வாசகர் உனக்குப் பெரும் புண்ணியத்தை ஈட் யள்ளார். எனவே அவரிடம் நன்றி காட்டுவதற்குப் பதிலாக அவரை மிகவும் துன்புறுத்திவிட்டாய். என்னுடைய பக்தனுக்காகவே நான் நரிகளைப் பரிகளாக மாற்றியும், திடீரென்று இந்த வெள்ளப்பெருக்கு ஏற்படுமாறும் திருவிளையாடல் புரிந்தேன். இப்போ தாவது - நீ கண் திறந்து பார். உன் எதிர்கால நலன் கருதி ஒரு பாடங்கற்றுக்கொள்'.

இதற்கிடையில், மாணிக்கவாசகர் கோயிலை அடைந்து தியானத்தில் மூழ்கினார். அரசன் இறைவனுக்குத் தந்த அடி அவர்மீதும் பட்டதை உணர்ந்தார். தியானது திலிருந்து அவர் எழுந்தார். அரசன் அவரைத் தேகம் கொண்டிருந்தான். கிழனி விண்ணுலகத் தேரில் ஏறிச் சிவபுரத்தை அடைந்தாள் என்று அவன் வரும் வழியில் சிலர் தெரிவித்தனர். அவன் திருஆலவாய்க் கோயிலை அடைந்து மாணிக்கவாசகரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். நாட்டை ஆளும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி அவன் மாணிக்கவாசகரை வேண் டினான். அவர் அதனை மறுத்து விட்டார். ஆனால் பெருந்துறைக்குச் செல்ல அனுமதி வேண்டினார். இருவரும் மதுரைக்கு வந்து இறைவனைத் தொழுதனர். பின்னர் மாணிக்கவாசகர் பெருந்துறை நோக்கிப் புறப்பட்டார். இதன் பிறகு அரசனும் எல்லாவற் றையும் துறந்து இறைவனுடைய சிவபுரத்தை அடைந்தான்.

பெருந்துறையில் மாணிக்கவாசகர் மனத்தை மிகவும் உருக்கும் பாடல்களைப் பாடி இறைவன் தமக்கு முன்பு காட்சி தந்த குரு வடிவில் மீண்டும் தோன்றுமாறு வேண்டினார். சிதம்பரத்திற்கு வருமாறு இறைவன் அவரிடம் தெரிவித்தான். வழியில் அவர் பல தலங் களையும் தரிசித்தார். ஒவ்வொரு தலத்திலும் இறைவன் முன்னைய குரு வடிவில் காட்சி தந்தாலன்றி அவர் திருப்தியடையவில்லை. திருஉத்தரகோசமங்கையில் இறைவன் குரு வடிவில் காட்சி தராமையால் அவர் கதறி அழுதார். இறைவன் அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற நேர்ந்தது. படிப்படியாக அவர் சிதம் பரத்தை அடைந்தவுடன் புனித நிலத்தில் அவர் புரண்டு உருண்டரர். கோயிலுக்கு அருகில் இருந்த ஒரு சோலையில் அவர் தங்கித் திருவாசகம் என்னும் புகழ் மிக்க பாடல்களைப் பாடினார். தில்லைவாழ் மக்கள் அப்பாடல்களைக் கேட்டுப் பேரின்பம் நுகர்ந்து மகிழ்ந்தனர்.

ஈழ நாட்டில் (இலங்கையில்) ஓர் அடியார் இடையறாது தொடர்ந்து பொன்னம்பலம் நீடு வாழ்க என்று சொல்லிக்கொண்டிருந்தார். அங்கிருந்த அரசன் பெளத்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தமையால் இதைப் புரிந்து கொள்ள முடியாமல் அவ்வடியவரை அழைத்தான். அடியார் அரண்மனையை அடைந்து அரசனுக்கு முன்னால் அமர்ந்து அதே சொற்களைச் சொன்னார். அதன் பொருளை விளக்கும்படி அரசன் கேட்ட வுடன். அவ்வடியார். 'அரசே! பொன்னம்பலம் என்பது சோழ நாட்டில் உள்ள ஒரு புனிதத்தலம். அதைச் சிதம்பரம் என்றும் கூறுவர். உருவமற்ற கடவுள் இத்தலத்தில் நடராஜ வடிவமாகிய உருவம் கொண்டு உலக நலம் கருதித் தெய்வீகக்கூத்து நிகழ்த்து கின்றார். உயிர்களை எல்லாம் மாயையின் பிடிக்களி லிருந்து விடுவிப்பதே இக்கூத்தின் நோக்கம். கோயிலின் உள்ளே சிவஞான கங்கை என்னும் திருக் குளம் உள்ளது. இக்குளத்தில் மனுவின் மைந்தனாகிய இரணியவர்மன் நீராடிக் குட்ட நோய் தீர்ந்து குணம் பெற்றான். இப்புனிதமான குளத்தில் நீராடி நடராசப் பெருமானைத் தரிசித்து வணங்குபவர்கள் எல்லாப் பரவங்களும் நீங்கிப் பரிசுத்தம் அடைகின்றனர். பின்னர் அவர்களுக்குப் பிறப்பு இல்லை. அவர்கள் சிவபுரப் , பேரின்பத்தை அடைவார்கள்" என்று கூறினார்.

இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த புத்தமதக் குரு. 'அரசே! புத்தர் பெருமானைத் தவிர இன்னொரு கடவுள் எப்படி இருக்க முடியும்? சிதம்பரத்திற்கு நானே சென்று சைவரை வாதில் வென்று கோயிலைப் பெளத்த விஹாரப்பள்ளியாக மாற்றிவிடுகிறேன்' என்று தெரிவித்தார். அவ்வாறு சொல்லி அவர் தில்லைக்குப் புறப்பட்டார் அரசனும் தன் ஊமை மகளுடன் உடன் சென்றான்.

சைவப் பெரு மக்கள் சோழ மன்னனுக்கு. பெளத் தர்கள் சிதம்பரத்தை அடைந்தவுடன் அவர்களுடன் வாது நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு செய்தி அனுப்பினர். அதற்கு முந்திய நாள். வாதத்தில் வெற்றியை ஏற்படுத்தித் தருமாறு அந்தணர்கள் நடராசப் பெருமானிடம் வேண்டினர். அன்றிரவு அவர் களின் கனவில் இறைவன் தோன்றி 'வாதவூரரை அணுகி, பௌத்த குருவை வாதில் எதிர்க்குமாறு வேண்டுங்கள் என்று தெரிவித்தார். அடுத்த நாள் காலையில் அந்தணர்கள் வாதவூரரை அணுகவும் அவர் உடனே இசைவு தெரிவித்தார். அவர் கோயிலுக்குச் சென்று இறைவனைத் தொழுது வாதம் நடைபெறும் பட்டி மன்றத்தில் நுழைந்தார். பெளத்தர்களின் முகத்தைக் காண அவர் விரும்பாமையால் அவர் ஒரு திரையின் பின்னே அமர்ந்தார். பௌத்தர்கள் வாதத் தைத் தொடங்கினர். மாணிக்கவாசகர் சைவ சமயக் கொள்கைகளை விளக்கினார். பௌத்தர்கள் தகுந்த பதில்களைக் கூற முடியவில்லை. அவர்கள் தாங்கள் சொன்னவற்றையே திருப்பிச் சொல்லிக் கொண் டிருந்தனர். மாணிக்கவாசகர் உதவி செய்யுமாறு இறைவனை வேண்டினார். இறைவனுடைய ஆணையால் கலைமகள் தன் கருணையைப் பௌத்தர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டாள். எனவே அவர்கள் அனைவரும் ஊமைகள் ஆயினர். பெளத்தர்கள் வாதத்தில் தோற்றனர்.

புத்தமத அரசன் மாணிக்கவாசகரின் பெருமை யைப் புரிந்து கொண்டான். அவன் அவரிடம் "நீங்கள் என் குருவையும் அவருடைய சீடர்கள் அனைவரையும் ஊமைகள் ஆக்கி விட்டீர்கள். என் ஊமை மகளை நீங்கள் பேசவைத்தால் நானும் என் குடிமக்களும் சைவ சமயத்தைத் தழுவுவோம் என்று கூறினான். மாணிக்க வாசகர் அவனுடைய மகளை அழைத்துவரச் சொன்னார். அவர் உதவி செய்யுமாறு இறைவனை வேண்டிப் பௌத்தகுரு சிவபெருமரனைப்பற்றி வினவிய வினாக் களுக்கெல்லாம் தகுந்த விடைகளைச் சொல்லும்படி அவர் அப்பெண்ணைக் கேட்டார். சுமைப் பெண் பேசியதோடு மட்டுமன்றி அவ்வினாக்களுக்கெல்லாம் தகுந்த பதில்களையும் தந்தாள். இந்த அதிசயத்தைக் கண்டு அனைவரும் ஆச்சரியத்தால் செயலற்றுப் போயினர். அரசனும் பௌத்தர்களும் சைவசமயத்தின் உயர்வை உணர்ந்து சைவராயினர். மாணிக்கவாசகர் பௌத்தர்கள் பேசும் சக்தியைத் திரும்பவும் பெறச் செய்தார்.

ஒருநாள் சிவபெருமான் திருவாசகத்தை மாணிக்க வாசகரின் வாயால் கேட்கவும் அவருக்குப் பேரின்பவீடு வழங்கவும் விரும்பினார். அந்தணர் கோலத்தில் அவர் மாணிக்கவாசகரை அணுகினார். மாணிக்கவாசகர் மிகவும் பணிவுடன் விருந்தினரை வரவேற்று அவருடைய தேவைகள் பற்றி வினவினார். சிவபெருமான், மாணிக்க வாசகரிடம், உங்கள் புனிதத் திருவாயால் திருவாச தத்தைக் கேட்க விரும்புகின்றேன். நான் அவற்றைக் கையால் எழுதிக்கொண்டு பல்கால் பயின்று சம்சார பந்தத்திலிருந்து விடுபட விரும்புகின்றேன்' என்று கூறினார். மாணிக்கவாசகர் திருவாசகப் பாடல்களைப் பாடினார். அந்தணர் (சிவபெருமான்) பனை ஓலைகளில் அவற்றை எழுதினார். பின் உடனே அவர் மறைந்து விட்டார். மாணிக்கவாசகர். அந்தணராக வந்தவர். இறைவனே என்ற உண்மையை உடனே அறிந்து கொண்டார். முதலில் அவரை உணர்ந்து கொள்ள வில்லையே என்ற வருத்தம் அவரை மிகவும் வாட்டியது.

மாணிக்கவாசகருக்கு அமரத்துவத்தை வழங்கி அவருடைய பெருமையை உலகுக்கு வெளிப்படுத்த இறைவன் விரும்பினார். எனவே அவர் திருவாசகப் பாடல்களைச் சித்சபையின் பஞ்சாக்ஷரப் படிகளில் வைத்திருந்தார் தில்லை அந்தணர்கள் அவற்றை அங்கே கண்டு வியப்படைந்தனர். அவர்கள் ஓலைகளைப் பிரித்துப் பாடல்களைப் படித்தனர். அவற்றின் முடிவில். ''மாணிக்கவாசகர் சொல்லத் திருச்சிற்றம்பலமுடை யான் எழுதியது" என்று காணப்பட்டது. இப்பாடல் களின் பொருளை அறிந்து கொள்ள அந்தணர்கள் விரும்பி மாணிக்கவாசகரிடம் அவற்றைக் காட்டினர். அவர் அவர்களைக் கோயிலுக்கு அழைத்துச் சென்று சிவ பெருமானுடைய திரு உருவத்தைக் காட்டி இப்பாடல் களின் பொருள் , இதோ இங்குள்ள தில்லை நடராசரே என்று கூறினார். உடனே தோன்றிய பேரொளியில் கலந்து அவர் நடராசப் பெருமானுடைய திருவடிகளை அடைந்தார்.

- முற்றிற்று –

 

 

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.