ஆசாரங்களை (ஒழுக்கங்கள்) அழகான மாலைப்போல் கோவையாக கோர்த்து (சேர்த்து) எழுதி உள்ளதால் இது ஆசாரக் கோவை என்று பெயர் பெறுகிறது. பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து கூறுகின்றது.
தமிழன் பல நூற்றாண்டு முன்னரே அறிவியல், வாழ்க்கை நெறிமுறை, ஆரோக்கியமாக வாழும் வழிகள் கண்டு அறிந்திருந்தான் என்பதற்கு இந்த நூல்ஒரு சிறந்த சான்றாகும்.