வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.
இன்று நமக்கு எழும் பல சந்தேகங்கள் ஆன , எப்படிச் சாப்பிட வேண்டும், எந்த திசையில் சாப்பிட வேண்டும், எப்போது குளிக்க வேண்டும், எந்த திசையில் படுக்க வேண்டும், நீராடும் முறை என்ன, பெரியவர்களுடன் பழகும் போதுஎப்படிநடந்துகொள்ளவேண்டும், உண்ணும் போது செய்ய வேண்டிய ஒழுக்க நெறிகள்என்பது போன்ற பல கேள்விகளுக்கு இதில் விடையாகஇந்தநூல் உள்ளது.
மேலும் மலம், ஜலம் கழிக்க வேண்டிய இடங்கள், எந்த நாள்கள் பெண்ணுடன் சேர்வது நல்லது, எந்த நாள் தவிர்க்க வேண்டும் பற்றியும் இதில் பாடல்கள் உள்ளன.
ஔவையின் மூதுரை, நல்வழியைப் போல் ஆசாரக்கோவை அனைவரிடமும் பிரபலமாகவில்லைஎன்பதுவருத்தமே.
தமிழர் வாழ்வில் இன்றியமையாத விடயங்களாகக் கருதுவது
- ஒழுக்கம்,
- காதல்,
- வீரம்ஆகியமூன்றும்தான்.
பண்டையதமிழ்சங்கஇலக்கியங்களில்இந்தமூன்றுவிடயங்களைப்பற்றித்தான்அதிகப்பாடல்கள்உள்ளன. எனவேஇந்தஆசாரக்கோவைகுறிப்பாகஒழுக்கத்தைகுறித்துபேசுகின்றது.
இந்நூல் வெண்பா யாப்பில் அமைந்த 100 பாடல்களைக் கொண்டதாக உள்ளது. குறள், சிந்தியல், அளவடி வெண்பாக்களான நேரிசை, இன்னிசை மற்றும் பஃறொடை வெண்பாக்களாலும், சிதைந்த சவலை வெண்பா யாப்பிலும் இவை அமைந்துள்ளன.
ஆசார வித்து என்று முதல் மற்றும் நூறாவது வெண்பாக்கள் நிறைவுறுகின்றன.
பிற பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் சொல்லப்படாத கருத்துகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளமை இந்தநூலின்சிறப்பாகும்.