பேகன் வள்ளல் வரலாறு
பஞ்சாமிர்தம்சாப்பிட்டவர்களுக்குப் பழனி மலை நினைவுககு வராமல் போகாது. பழனி மலையின்மேல் முருகன் கோயில் கொண்டிருக்கிறான். இப்போது பழனி என்ற பெயர் மலைக்கும் அதன் அடிவாரத்திலுள்ளஊருக்கும் சேர்ந்து வழங்குகிறது. பழைய காலத்தில் இந்த மலைக்குப்பொதினி என்று பெயர்; ஊருக்கு ஆவிநன்குடி என்று பெயர். பொதினி என்பதே பிற்காலத்தில் பழனி என்று மாறிவிட்டது.
ஆவியர் குலம் என்பது ஒரு குறுநில மன்னர் குடிக்குப் பெயர். அவர்கள் அரசாண்ட இடம் ஆதலால் ஆவிநன்குடி என்று ஊருக்குப் பெயர் வந்தது. ஆவி, வையாவி என்று இரு வகையிலும் ஆவியர்குலமன்னர்களைவழங்குவதுண்டு. ஆதலால் வையாவிபுரி என்றும் சொன்னார்கள்; அதுவே நாளடைவில் வையாபுரி என்று மாறியது.
அந்த ஆவியர்குலத்தில்வந்தவன் பேகன் என்னும் குறுநில மன்னன். அவனை வையாவிக்கோப்பெரும் பேகன் என்று சொல்லுவார்கள். வையாவிஊரில் உள்ள அரசனாகிய பெரிய பேகன் என்பது பொருள்.
வள்ளல் பேகன்
பேகன் சிறந்த கொடையாளி. புலவர்களுக்கு வாரி வாரி வழங்கும் வள்ளல். யாழைவாசித்துப் பாடும் பாணர்கள் வருவார்கள். அவன் அரண்மனையில் பல நாள் தங்குவார்கள். அவர்களுடைய இசையின்பத்தை நுகர்ந்துகளிப்பான் பேகன். பிறகு பலவகைப்பரிசில்களை அளிப்பான். பொன்னாலாகியதாமரைப் பூவை அவர்கள் அணியும்படியாகத் தருவான்.
அந்தக் காலத்தில் பாணர்களுக்குப் பொற்றாமரை அளிப்பது வழக்கம்.
பாணர்களுடையமனைவிமார்கள் ஆடுவார்கள்; பாடுவார்கள். அவர்களுடைய ஆடல் பாடல்களையும் கண்டு மகிழ்வான். அவர்களுக்குப் பலவகை அணிகலன்களைப்பரிசளிப்பான். சில சமயங்களில் பாணர்களுக்கும்புலவர்களுக்கும்தேரையும்அளிப்பதுண்டு.
கபிலர் பரணர்
சங்க காலப்புலவர்களில்தலைமையும்புகழும் பெற்றவர் கபிலர். அவர் பல முறை பேகனிடம் வந்து சில நாள் தங்கிச்சென்றார். கபிலர் பரணர் என்று சேர்த்துச்சேர்த்துச் சொல்வார்கள். கபிலரைப் போலவே பரணரும்பெருமதிப்பை உடையவர். அவரும் பேகனிடம் வந்தார். வேறு புலவர்களும் அவனை நாடி வந்தார்கள்; அளவளாவினார்கள்; பாடினார்கள்.
தமிழ்ப்புலவர்களிடம் மிகவும் மதிப்பு வைத்துப்பழகினான் பேகன்.
பொதினி மலை முருகன்
பொதினிமலையின்மேல் இருந்த திருக்கோயிலில் முருகன் எழுந்தருளியிருந்தான். மலையைச் சுற்றி வாழ்ந்த குறவர்கள் இடைவிடாமல் அப்பெருமானைத் தொழுது வழிபட்டார்கள். மழை பெய்யாவிட்டால்அவனுக்குப் பூசை போடுவார்கள். மழை மிகுதியாகப்பெய்தாலும் மழை நிற்கவேண்டு மென்று கும்பிட்டு வழிபடுவார்கள். குறிஞ்சி நிலக்கடவுளாகியமுருகனிடத்தில்அந்நிலமக்களாகியஅவர்களுக்குச் சிறிதும் தளராத நம்பிக்கை இருந்தது.
பேகன் அவர்களுடைய நல்வாழ்வைக் கண்டு களித்தான். அவர்களுக்கு உதவிகளைச் செய்தான். அவனும் மலையின்மேல் உள்ள முருகப்பெருமானை அடிக்கடி வழிபட்டுவந்தான். ஆவியர்குலத்துக்குப்பொதினி மலை முருகனே வழிபடு கடவுளாகவிளங்கினான்.
பேகனும்மயிலும்
ஒருநாள்பேகன்வெளியிலேகாலாறஉலாவிவரப்புறப்பட்டான். அவனுடன்இரண்டுமெய்காவலர்சென்றனர். அதுகார்காலம். மேகம்வான்முழுதும்கப்பிக்கொண்டிருந்தது. குளிர்காற்றுமெல்லவீசியது. நெடுந்தூரம் சென்றவன் மீண்டு தன் இருப்பிடத்தை நாடி வந்து கொண்டிருந்தான். அப்போது அங்கே ஓர் அழகிய காட்சியைக் கண்டான். மரங்கள் அடர்ந்த ஓரிடத்தில் ஓர் அழகிய ஆண் மயில் தன் தோகையை விரித்து ஆடிக்கொண்டிருந்தது. அவன் அங்கே சற்று நின்றான். மயில் தன் இயல்புப்படிசர்சர்என்ற ஒலி உண்டாகும்படிதோகையைஅசைத்தது. அப்போது குளிர்ந்த காற்று வீசியது.
அவன்ஆடல்மகளிருக்குப்பலபரிசுதரும்வழக்கமுடையவன். இப்போதுஆடுகின்றஇந்தமயில்ஆடல்மகளிரைப்போலத்தான்ஒய்யாரமாகஆடியது. ஆனல்சர்சர்என்றுஒலிவருவானேன்? அது குளிரால் நடுங்குவதனால்தான் அந்த ஒலி எழுகிறதென்றுஅவனுக்குத் தோன்றியது. உடனே அவன் உள்ளத்தில்இரக்க உணர்ச்சி உண்டாயிற்று. 'பாவம்! இதற்கு வாய் இருந்தால் தனக்குக்குளிர்கிறதென்பதை எடுத்துச் சொல்லும். இந்த ஒலியினால்புலப்படுத்துகிறது போலும்! என்ன அழகான மயில் இது நடுங்க நாம் பார்த்திருக்கலாமா?' என்று சிந்தனை செய்தான். மயில் மெல்லிய பறவை அதற்கு இரங்காமல் இருக்கலாமா?
மயிலின்துயரத்தைப் போக்க
எப்படியாவது அதன் துயரத்தைப் போக்க வேண்டும் என்று எண்ணிய அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. சட்டென்று தன் மேல் உள்ள விலை உயர்ந்த போர்வையை எடுத்தான். மயிலின் அருகே சென்று அதற்குப்போர்த்துவிட்டான்.
அருகில் இருந்தவர்கள், "என்ன இது!" என்றார்கள்.
"பாவம்! குளிரால் நடுங்கும் அதற்கு இதைப்போர்த்தினால்நல்லதென்றுதோன்றிற்று!"
அவர்களுக்கு வியப்புத் தாங்கவில்லை. பேகன் செய்தது பேதைமைச் செயல் என்று அவர்கள் எண்ணவில்லை. பிற உயிர்களின் துன்பத்தைக் கண்டு தாங்காத அவனுடைய உள்ளத்தின்உயர்வையே அவர்கள் நினைத்துப் பார்த்தார்கள்.
அவனுடைய வள்ளன்மையை அவர்கள் நன்றாக அறிந்தவர்கள். புலவர்களுக்குப்பொன்னும் பொருளும் வாரி வழங்குவதைக் கண்டு வியந்திருக்கிறார்கள். பாணர்களுக்குப்பரிசில்கள்தருவதைக்கண்ணாரக் கண்டு களித்திருக்கிருர்கள். கூத்தர்களுக்குவிருந்தும்விரும்பும் பொருளும் வழங்குவதைப் பார்த்து இறும்பூதுஅடைந்திருக்கிருர்கள்.
ஆனால் இப்போது அந்த வள்ளல் செய்த செயலை வள்ளன்மைச் செயல் என்பதா? ஆடும் மயிலுக்குப் பரிசு வழங்கியதாகச்சொல்வதா? உயிர்க் கருணை என்று சொல்வதா? மயில் போர்வையைப்போர்க்குமா என்று அவன் யோசிக்கவில்லை.
அது விலை உயர்ந்த மேலாடை ஆயிற்றே என்று தயங்கி நிற்கவில்லை. ஒரு பறவைதன் நாட்டில் வாழும் பறவை—துன்புறுவதாகஎண்னினான்; அந்தக் கணத்திலே அவன் மனம் உருகியது; ஒன்றையும் எண்ணாமல் மேலே உள்ள படாத்தை எடுத்துப் போர்த்திவிட்டான்.
மயில் பறந்து போய்விட்டது. காவலர் பேகன் அளித்த போர்வையை எடுத்துக் கொண்டனர். உலகுக்குஅறிவிக்கக்காவலர்களுக்கு ஓர் அதிசயச் செய்தி கிடைத்தது. பேகனுடையஉள்ளத்தின்மென்மையை எடுத்துக் காட்டும் ஒரு நிகழ்ச்சியை அவர்கள் காணும் வாய்ப்பல்லவாபெற்றார்கள்? பேகன் அரண்மனையை அடைந்தான்.
அவனுடன் சென்றிருந்த காவலர்கள் அவன் மயிலுக்குப்போர்வையை அளித்த அதிசயத்தையாவரிடமும்சொல்லிச் சொல்லி வியந்தார்கள். புலவர்களிடம்புகன்றார்கள். புலவர்களுக்கு ஒரு செய்தி தெரிந்தால் வாளா இருப்பார்களா? தம்முடைய பாவினால் பேகன் புகழை முழக்கினார்கள்.
பரணர் அந்த அரிய செயலைப்பாராட்டினுர். “மயில் மேலாடையைஉடையாகஉடுக்குமா? அன்றி மேலே போர்வையாகத்தான்போர்த்துக்கொள்ளுமா? இது பேகனுக்குத் தெரியாதா? தெரியும். ஆனால் அந்தச் சமயத்தில் அவன் கருணை உள்ளம் உருகியது. தன் படாத்தைமயிலுக்குஅளித்துவிட்டான்” என்று பாடினார்.
கொடை மடம்
இன்னாருக்கு இன்னது கொடுக்க வேண்டும் என்பதை எண்ணிக்கொண்டிராமல், கிடைத்ததைநினைத்தபோதேகொடுப்பதைக்கொடை மடம் என்று சொல்வார்கள். மடம் என்பதற்கு அறியாமை என்று பொருள். இது சரியா, தவறா என்று ஆராயும் அறிவுக்கு இடம் கொடாமல், உள்ளத்தில்கொடுக்கத்தோன்றியபோதே கொடை மடம் உடையவர்கள்கொடுத்துவிடுவார்கள்.
பாடியவர் : பரணர்.
பாடப்பட்டோன்:வையாவிக்கோப்பெரும் பேகன்.
திணை:பாடாண்.துறை:இயன்மொழி.
அறு குளத்துஉகுத்தும், அகல் வயல் பொழிந்தும்,
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்,
வரையாமரபின்மாரிபோல,
கடாஅயானைக் கழல் கால் பேகன்
கொடைமடம் படுதல் அல்லது, 5
படைமடம்படான், பிறர் படை மயக்குறினே.
- புறநானூறு 142
விளக்கம்
பேகன் மயிலின் இயல்பை அப்போது சிந்தித்துப் பார்க்கவில்லை; போர்வையைவழங்கிவிட்டான். இந்தக் கொடை மடத்தைப் பரணர் பாராட்டினர். “தண்ணீரே இல்லாமல் போன குளத்திலும் மழை பெய்கிறது; அகன்ற வயலிலும்பொழிகிறது; சிறிதும் பயன்படாத உப்பு நிலத்திலும்பெய்கிறது. இங்கேதான் பெய்ய வேண்டும், இங்கே பெய்யக் கூடாது என்று அது யோசிப்பதில்லை.
மதம் பொருந்திய யானையையும் வீர கண்டையைஅணிந்தகாலையும் உடைய பேகன் அந்த மாரியைப்போன்றவன். வரம்பு இல்லாமல், ஆராய்ச்சி இல்லாமல் கொடையைப்பொழிகிற மழை அவன். இப்படிக் கொடை மடம் உடையவனாக இருக்கிறான் என்பதனால், வீரச்செயல்களிலும் அறியாமை உடையவன் என்று எண்ணக்கூடாது.
படையைக் கொண்டு போரிடும் திறத்தில், நன்றாகச் சூழ்ந்து, இடத்துக்கும் காலத்துக்கும் தன் வலிமைக்கும் மாற்றான் வலிமைக்கும்ஏற்றபடி செயலை வகுப்பதில் வல்லவன்.கொடை மடம் படுவானே அல்லாமல் படை மடம் படமாட்டான்”என்று அந்தப் பெரும் புலவர் பாடினர். அவன் கொடையைப்புகழ்ந்ததோடுநில்லாமல்வீரத்தையும் எடுத்துக் காட்டினர்.
அது முதல் தமிழ் மக்கள் பேகனைமயிலுக்குப் போர்வை வழங்கிய வள்ளல் என்று பாராட்டத்தொடங்கினார்கள்.
***
பாடியவர்:பாணர்
திணை:பாடாண்.
(ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச்சிறப்பித்துக் கூறுவது.)
துறை: பாணாற்று படை.
(பரிசு பெற்ற பாணன், பரிசு பெற வரும் பாணனுக்குச் செல்லும் வழியும் புரவலன் புகழும் கூறி ஆற்றுப்படுத்துதல்.)
புலவராற்றுப் படை என்றும் கூறுவர். பரிசு பெற்ற புலவர் பரிசு பற வரும் புலவர்க்குப் புரவலன் ஊரையும் பேரையும் சிறப்பையும் எடுத்துரைத்து ஆற்றுப்படுத்துதல்.
பாணன் சூடிய பசும்பொன் தாமரை
மாணிழைவிறலிமாலையொடுவிளங்கக்
கடும்பரிநெடுந்தேர்பூட்டுவிட்டுஅசைஇ
ஊரீர்போலச்சுரத்திடைஇருந்தனிர்
யாரீரோஎனவினவல்ஆனாக்
காரென்ஒக்கல் கடும் பசி இரவல!
வென்வேல் அண்ணல் காணாஊங்கே
நின்னினும்புல்லியேம்மன்னே; இனியே
இன்னேம்ஆயினேம்மன்னே; என்றும்
உடாஅபோரா ஆகுதல் அறிந்தும்
படாஅம்மஞ்ஞைக்குஈத்தஎம்கோ
கடாஅயானைக்கலிமான் பேகன்
எத்துணை ஆயினும் ஈதல் நன்றுஎன
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர், வறுமை நோக்கின்றுஅவன்கைவண்மையே.
பொருள்
வாடிய தோற்றத்தோடு காணப்படும் சுற்றத்தாரோடும் கடும் பசியோடும் உள்ள இரவலனே! (பாணனே!)
“எங்களைப் பார்த்தால் பாணன் போல் இருக்கிறதே! நீங்கள் உயர்ந்த பொன்னாலான தாமரை மலரைஅணிந்திருக்கிறீர்கள்; உங்கள் விறலியர் சிறப்பாகச் செய்யப்பட்ட மாலையோடுவிளங்குகிறார்கள். விரைவாகச் செல்லும் குதிரைகளை உங்கள் தேரிலிருந்துஅவிழ்த்துவிட்விட்டு, நீங்கள் உங்கள் சொந்த ஊரில்இருப்பதைப் போல் இந்த வழியில் இளைப்பாறுகிறீர்களே! நீங்கள் யார்?” என்று கேட்கிறாயோ?
வெற்றியைத் தரும் வேல்களையுடைய தலைவன் பேகனைக் காண்பதற்கு முன் நாங்களும் உன்னைவிட வறியர்களாகத்தான் இருந்தோம். இப்பொழுது, அவ்வறுமை நீங்கி இந்த நிலையில் உள்ளோம்.
எப்பொழுதும் உடுத்தவோ அல்லது போர்த்தவோபயன்படுத்தாது என்று தெரிந்தும் தன் போர்வையைமயிலுக்கு அளித்த எங்கள் அரசன் பேகன் மதமிக்கயானைகளும்செருக்குடையகுதிரைகளும் உடையவன். மறுமையில்வரக்கூடியநன்மைகளை எதிர்பார்க்காமல் எவ்வளவு ஆயினும் பிறர்க்கு அளிப்பது நன்று என்று எண்ணுபவன்.
அவன் வண்மை மறுமையைநோக்கியது அல்ல; அது பிறர் வறுமையைநோக்கியது.
பேகன் மனைவி கண்ணகி
இவ்வாறு புகழ்பெற்ற பேகன் ஆடல் கலையில் வல்ல ஒரு விறலியின்ஆட்டத்திலும்பாடலிலும் அவன் ஈர்ப்பு கொண்டான். அதனால் மற்றக்காரியங்களைக்கூடமறந்திருந்தான். அந்த விறலியும் சில காலம் ஆவிநன்குடியில்தங்கியிருந்தாள்.
கண்ணகியின் ஊடல்
இது சம்பந்தமாகக்கண்ணகிக்குத் தன் கணவன்மேல் ஐயம் உண்டாயிற்று. அதனால் கண்ணகிக்கு கோபமும் எழுந்தது. அதை ஊடல் என்பார்கள். எப்படியோ அந்தச் சிறிய ஊடல் பெரிதாக வளர்ந்துவிட்டது. இதை பற்றி விளக்கம் கேட்ட கண்ணகியை பேகன் ஒரு மாளிகைக்கு அனுப்பி அங்கேயே இருக்கும்படி சொல்லி விட்டான்.