Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

கடையெழுவள்ளல்கள்

யார் தான் இந்த "கடையெழுவள்ளல்கள்இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் ஏன் இவர்களை பற்றி நாம் பேசி கொண்டு இருக்கின்றோம், இவர்கள் அப்படி என்ன தான் நமக்கு செய்தார்கள்,

7 பேர் மட்டும் தான் வள்ளல்களா!

அது ஏன்  7 பேர் மட்டும் தான் வள்ளல்களா? மற்ற வள்ளல்களுக்கும் இவர்களுக்கும் அப்படி என்ன தான் வித்தியாசம் உள்ளது.

ஏழு என்ற கணக்கைக் கொண்ட பொருள்கள் பலவற்றைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம். கீழ் உலகம் ஏழு, மேல் உலகம் ஏழு என்று ஒரு கணக்கு உண்டு. ஏழு முனிவர்கள் என்று சேர்த்துச் சொல்வது ஒரு வழக்கம். ஏழு தீவுகள் என்பது ஒரு வகையான கணக்கு. ஏழு சுரங்கள் சங்கீத உலகத்துக் கணக்கு. வாரத்தில் ஏழு நாட்கள் உண்டு என்பதை உலகில் உள்ள எல்லோருமே அறிவார்கள்.

கடையெழுவள்ளல்கள்

பள்ளிப்படிப்பின்போது, “கடையெழுவள்ளல்கள்” என்று படித்த நினைவு பலருக்கும் இருக்கும். அந்த ஏழு வள்ளல்கள் யார், யார்? என்று கேட்டால், பெரும்பாலோர் “பாரி” என்று உடனே தொடங்கி, அங்கேயே நிற்பதைக் காணலாம். சிலர் பாரி, காரி, ஓரி என்று கூறி பிறகு தயங்குவதைப் பார்க்கலாம்.

தமிழ் இலக்கியங்களைப்படித்தவர்களுக்கு ஏழு வள்ளல்கள் என்றால் நன்றாகத் தெரியும், அவர்கள் மிகப் பழைய காலத்தில் வாழ்ந்தவர்கள். ஒவ்வொருவரும்ஒவ்வோரிடத்தில்வாழ்ந்தவர். அவர்களிடம் வேறு நல்ல குணங்கள் பல இருந்தாலும், பிறருக்குப் பொருளை அளித்து இன்புறும் பண்பிலே அவர்கள் சிறந்திருந்தார்கள். தம்மை அணுகினவர்களுக்குவேண்டியதைக்குறிப்பறிந்து மனம் உவந்து வழங்குபவர்களை வள்ளல் என்று கூறுவார்கள்.

அவர்கள் தடை சிறிதும் இல்லாமல் கொடுப்பதனால்பொருளைப்பெறுகிறவர்கள் இன்பம் அடைந்தார்கள்; கொடுத்த வள்ளல்களும்கொடுப்பதனால்இன்பத்தைஅடைந் தார்கள். ஒரு நாள் யாருக்கும் எதுவும் கொடுக்க முடியாதபடி நேர்ந்துவிட்டால் அன்று அவர்களுக்கு உள்ளமும்உடம்பும்வாடும் ஏதோ நோய் வந்தவர் களைப் போல இருப்பார்கள்.

வள்ளல்களிடம் பரிசு பெருபவர்கள்

கொடுக்கும் வள்ளல்களிடம்இசையிலே வல்ல பாணர்கள் வந்து இசை பாடிப் பரிசு பெறுவார்கள். கூத்தர்கள்அணுகிக் கூத்தாடி மகிழ்வித்துப் பல பொருள்களைப்பெறுவார்கள். பாட்டுப் பாடியும் ஆடியும் தம்முடைய கலைத்திறமையைக் காட்டும் பெண்களாகியவிறலியர்களும் பரிசு பெறுவதுண்டு.

தடாரி என்ற தோல் கருவியைவாசித்துப் பரிசு பெறும் பொருநர் என்ற கலைஞர்களும் உண்டு. இவர்களேயன்றிவறுமையால்வருந்துவோரும்பிணியால்துன்புறுவோரும்கண்காதுஇல்லாமையால் உழைத்து வாழ முடியாதவர்களும்வேண்டியவற்றைப்பெற்றுச்செல்வார்கள். புலவர்கள்பாடிப் பரிசில் பெறுவார்கள்.

இத்தனை பேர்களுக்கும்பண்டமும் பொருளும் தந்து அவர்கள் துன்பத்தைப்போக்கும் உயர்ந்த பண்பை வள்ளல்களிடம் காணலாம். இவ்வளவு பேரும் தாம் பெற்ற நன்மையை எண்ணி மனமாரவள்ளல்களைவாழ்த்துவார்கள். அவர்கள் பெற்ற பொருள்களும், அவர்கள் கூறிய வாழ்த்துக்களும்நெடுநாள்நிற்பவை அல்ல. அவர்கள் எவ்வளவுதான் மனமுருகி வாழ்த்தினாலும் அது அப்போதேகாற்றோடேபோய்விடும்; அவர்கள் பெற்ற பண்டமோபொருளோ சில நாட்கள் அவர்களுக்குப் பயன்படும்; பிறகு செலவாகிவிடும்.

வள்ளல்கள்மறைந்தாலும், புகழ் மாய்வதில்லை

ஆகவே அந்த வள்ளல்களையோ அவர்களால் நலம் பெற்றவர்களையோ உலகம் சிலகாலம்நினைத்திருக்கும். அவர்கள் மறைந்தவுடன் அவர்கள் நினைவும்மறந்துபோகும். இவ்வாறு ஆகாமல் பிறருக்கு அளிப்பதிலேஇன்பங் கண்ட பெருமக்களை உலகம் என்றும் எண்ணி வாழ்த்தும்படி செய்தார்கள் புலவர்கள். வள்ளல்களிடம் நலம் பெற்றவர்கள் பல வகையினராக இருந்தாலும், மற்றவர்கள் யாவரும் தம்முடைய வாழ்த்தையும்நன்றியறிவையும் சில காலம் சிலர் காதில் போட்டிருப்பார்கள்.

புலவர்களோவள்ளல்களின்சிறப்பையும் அவர்கள் செயல்களையும்விரிவாகப் பல செய்யுட்களில்அமைத்துப் பாராட்டினார்கள். அதனால் அந்த வள்ளல்கள்மறைந்தாலும், அவர்களால் நலம் பெற்ற மக்கள் மறைந்தாலும், அவர்கள் பெற்ற பொருள்கள் அழிந்தாலும்வள்ளல்களின் புகழ் மாய்வதில்லை. புலவர்களுக்குஈந்த ஈகை வள்ளல்களின் பெயரை மங்காமல் வைத்திருக்கிறது. அவர்களின் வரலாற்றைப்புலப்படுத்தும்பாடல்கள்இலக்கியமாக வழங்கி வருகின்றன.

தமிழ்ச் சங்கம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்தமக்களைப் பற்றிய செய்திகளை அந்தக் காலத்தில் உண்டான நூல்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. அந்த நூல்களை இப்போது சங்க நூல்கள் என்று பெயரிட்டு வழங்குகிறோம். மதுரையில் பாண்டிய மன்னர்களின் ஆதரவு பெற்றுப் பல புலவர்கள்ஒன்றுகூடித் தமிழ் ஆராய்ச்சி செய்தார்கள். புதிய நூல்களை இயற்றினார்கள்.

தமிழ் நாட்டில் யாரேனும் புதிய நூல் இயற்றினால் அந்தப் புலவர்களிடம் வந்து காட்டி நன்றாக இருந்தால் மதிப்புப்பெற்றார்கள்.இத்தகைய செயல்களைப் புலவர்கள்கூடிச் செய்த இடமேதமிழ்ச் சங்கம். பல நூறு ஆண்டுகள் தொடர்ந்து சங்கம் நடந்து வந்தது. அந்தக் காலத்தில் வாழ்ந்த புலவர்கள்பாடியபாடல்கள் யாவும் இப்போது கிடைக்கவில்லை. கிடைத்தவற்றையெல்லாம்பிற்காலத்தில் வந்த மன்னர்கள், புலவர்களைக் கொண்டு சேர்த்து ஒழுங்குபடுத்தச் செய்தார்கள்.

தமிழ்ச் சங்க நூல்கள்

புலவர்கள்தொகுத்ததளால் அந்தப் பாடல்களின்கூட்டத்தைத் தொகை என்று சொன்னர்கள். பாட்டின்வகையைக்கொண்டும், பொருளைக்கொண்டும், அளவைக் கொண்டும் சில சிலநூல்களாகப்பிரித்தார்கள்.

அவற்றில்பத்துப்பாட்டுஎன்பது ஒன்று. அந்தத் தொகை நூலில் பத்து நீண்ட பாடல்கள் இருக்கின்றன. அதனோடு எட்டு வேறு நூல்கள் உள்ளன.

அவற்றைஎட்டுத் தொகைஎன்பார்கள். ஒவ்வொரு தொகையும் பல பாடல்கள் சேர்ந்த தொகுதி.

 • நற்றிணை,
 • குறுந்தொகை,
 • ஐங்குறுநூறு,
 • பதிற்றுப் பத்து,
 • பரிபாடல்,
 • கலித்தொகை,
 • அகநானூறு,
 • புறநானூறு

என்ற எட்டும்எட்டுத்தொகையாகும்.

அந்த நூல்களில் நூற்றுக்கணக்கான புலவர்களின்பாடல்கள் இருக்கின்றன. எத்தனையோ கொடையாளிகளின்வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. பல மன்னர்கள், வீரர்கள், பெரியவர்கள் முதலியவர்களைப் பற்றிய செய்திகளையும் அறிந்துகொள்ள முடிகிறது.

கொடையாளிகள்பலரைப்புலவர்கள்பாடியிருக்கிறார்கள். யாவருமேவள்ளல்களானலும் அவர்களுக்குள் ஏழு பேரை மிகச் சிறந்த வள்ளல்கள் என்று பாராட்டியிருக்கிருர்கள். அவற்களைப் பற்றி விரிவாக பார்கலாம்.

கடையெழுவள்ளல்கள்

 • பாரி
 • பேகன்
 • அதிகமான்
 • காரி
 • ஓரி
 • ஆய்
 • நள்ளி

என்ற ஏழு பேர்களையும் எழு பெருவள்ளல்கள் என்று புலவர்கள்போற்றுகிறார்கள்.இவர்கள் தமிழ்நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து புகழ் பெற்றவர்கள். இவர்கள் யாவரும் சிறிய நாடுகளுக்குத்தலைவர்களாக இருந்தவர்கள்; குறுநிலமன்னர்கள்.

சேர சோழபாண்டியர்கள்என்னும் மூன்று அரசர்களும் முடியை அணியும் பெரிய மன்னர்கள். அவர்களை முடியுடைமன்னர்கள் என்று சொல்வது வழக்கம். அவர்களின் கீழ்ப் பல சிறு அரசர்களும்நாட்டுத்தலைவர்களும் அங்கங்கே இருந்தார்கள்; தனியாகவும் இருந்தார்கள்.

குறுநிலமன்னர்கள், வேளிர் என்று அவர்களைச் சொல்வார்கள். ஏழு வள்ளல்களும்அத்தகைய சிறிய தலைவர்களே. அவர்களுடைய ஆட்சியில் பெரிய நாடுகள் இருக்கவில்லை; ஆனாலும் தம்முடைய கொடையினால் அவர்கள் புலவர்கள்உள்ளத்தைக்கவர்ந்தார்கள்.பல பெரிய மன்னர்களும்சக்கரவர்த்திகளும் பெறாத பெரும் புகழை அவர்கள் அடைந்திருக்கிறார்கள்.

அவர்கள் வரலாற்றை நாம் தெரிந்துகொள்வது இன்றியமையாதது. தம் நலனுக்காகவாழாமல் பிறருக்கு நலம் செய்வதற்காக வாழ்ந்த பெருமக்களைக்கடவுளுக்குஒப்பாகமதிப்பது தமிழ்நாடு.

ஆதலின் அந்த வள்ளல்களுடையபுகழ்க்குரியசெயல்களைத்தெரிந்துகொள்வதனால் நாம் பெருமை அடையலாம். இனி ஒவ்வொருவராக நாம் தெரிந்துகொள்ளலாம்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.