Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

அறிந்திடுவோம் அம்பேத்கரை

அந்தச் சிறுவன், அவனுடைய அண்ணன், இவர்களின் சகோதரி மகன்கள் நான்கு பேரும் வெளியூரில் வேலை பார்க்கும் தமது தந்தையின் அழைப்பின்படி கோடை விடுமுறையை அவருடன் கழிப்பதற்காக இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட புத்தாடை அணிந்து கொண்டு, உணவுமூட்டை, செலவுக்குப் பணம் எல்லாம் எடுத்துக் கொண்டு உற்சாகமாகத் தொடர் வண்டியில் புறப்படு கின்றனர். அவனது தந்தையார் . இவர்கள் வந்து இறங்கும் இடத்தைக் குறிப்பிட்டு அங்கிருந்து இவர் களை அழைத்துச் செல்வதற்கு அவரது உதவியாளரை அனுப்புவதாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மாலை 5.00 மணியளவில் தொடர்வண்டி அந்த இடத்தை அடைகிறது. வண்டியிலிருந்து இறங்கிய மற்ற பயணிகள் எல்லோரும் சென்றுவிடுகின்றனர். தம்மை அழைத்துச் செல்ல வருவதாகச் சொல்லியிருந்த எவரும் வராத தால் நடைமேடையில் காத்திருக்கிறார்கள்.

ஒரு மணிநேரம் கழிந்தது. நிலைய அதிகாரி சிறுவர்களின் அருகில் வந்து விசாரிக்கிறார். இவர்கள் விளக்குகிறார்கள். அந்த அதிகாரி இவர்களின் தோற்றத்தினைப் பார்த்துப் பார்ப்பனச் சிறுவர்களாகத்தான் இருப்பார்கள் என மிகவும் அனுதாபம் கொள்கிறார். இந்துக்களின் வழக் சுப்படி , திடீரென அந்த அதிகாரி நீங்கள் என்ன சாதி எனக் கேட்கிறார். கள்ளமில்லா உள்ளம் கொண்ட அச்சிறுவன் தாமதிக்காமல் மகர் (தீண்டப்படாத சாதி என்கிறான். அதுவரை அன்பொழுகப் பேசிக் கொண்டிருந்த நிலைய அதிகாரிக்கு முகம் மாறிவிட்டது. வெறுப்புடன் தனது அறைக்குப் போய்விடுகின்றார்.

சிறுவர்களுக்குக் குழப்பமும், சோகமும் சேர்ந்து திகைக் கின்றனர். அரைமணிநேரம் கழித்து அந்த அதிகாரி அருகில் வந்து என்ன செய்வதாகத் திட்டம் என வேண்டா வெறுப்புடன் கேட்கிறார். எங்களுக்கு வாடகை மாட்டு வண்டி கிடைத்தால் நாங்கள் புறப்படுவோம் என்கின்றனர். அங்கு வாடகைக்குப் பல மாட்டு வண்டிகள் இருந்தன. அதற்குள் அச்சிறுவர்களின் சாதி மாட்டு வண்டிக்காரர் களுக்குத் தெரிந்துவிடுகின்றது.

எவரும் இச்சிறுவர் களை வண்டியில் ஏற்றித் தீட்டுப்படத் தயாராக இல்லை . நேரம் கடக்கின்றது. சிறுவர்களோ வாடகை இருமடங் காகத் தருவதாகச் சொல்லியும் எந்த வண்டிக்காரரும் வர சம்மதிக்கவில்லை. இவர்களின் நிலையைக் கண்டு கல் மனமும் கரைவதுபோல் நிலைய அதிகாரி இவர் களிடம் உங்களுக்கு வண்டி ஓட்டத் தெரியுமா ? என் கிறார். இவர்களுக்கு ஏற்கெனவே பழக்கம் இருந்ததினால் தெரியும் என சொல்கின்றனர். வண்டிக்கு இரு மடங்கு வாடகை. சிறுவர்களே ஓட்டிக்கொள்ள வேண்டும். வண்டிக்காரர் பயணத்தின்போது நடந்துவரவேண்டும் (தீட்டிலிருந்து தப்பிக்க) என நிலைய அதிகாரி பேசி வண்டிக்காரரை ஒப்புக்கொள்ள வைக்கிறார். சிறுவர்கள் வண்டி ஓட்ட , வண்டிக்காரர் நடந்து வர மாலை 1.01 மணிக்கு பயணம் தொடங்குகிறது.

எங்கும் கும்மிருட்டு. நீண்ட பயணம். பிள்ளை களுக்குப் பயம். அழுகிறார்கள். வண்டிக்காரர் சமாதானம் சொன்னபடி நடக்கிறார். தூரத்தில் ஒரு வெளிச்சம். அருகில் போனால் அது ஒரு சுங்கச்சாவடி. கடும் பசியால் வாடிய சிறுவர்கள் வண்டிக்காரரிடம் நாங்கள் சாப்பிட வேண்டும். தண்ணீருக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார்கள். உங்கள் சாதி தெரிந்தால் தண்ணீர் தரமாட்டார்கள். நீங்கள் யார் என்று கேட்டால் முக மதியர் என்று சொல்லுங்கள் என்றார்.

சுங்கச்சாவடி அலுவலர் அதேபோல் யார் நீங்கள் என்றார். முகமதியர் என்றனர் சிறுவர்கள். அவர் இந்து மனநிலையிலேயே தண்ணீர் இங்கு இல்லை என்று சொல்லிவிட்டார். இரவு நேரம் ஆனதினால் தண்ணீருக்கு வழியில் லாமல் தாம் கொண்டு வந்த சாப்பாட்டைச் சாப்பிட முடியாமல் , பசியாலும், இருள் பயத்தினாலும் வண் டிக்கு அடியிலேயே படித்து இரவைக் கழிக்கின்றனர். அடுத்த நாள் காலை பசி மயக்கத்துடன் தமது பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஒன்பது வயது சிறு வனின் உள்ளத்தில் இந்நிகழ்ச்சியானது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அச்சிறுவன் வண்டியில் அமர்ந்தபடி சிந்தித்துக் கொண்டே போகிறான். பள்ளியில் மாணவர்களுடன் வரிசைப்படி அமரவைக்காமல் தனியாகச் சாக்குத் துணியில் அமர வைக்கிறார்கள். அந்தச் சாக்குத் துணி யைக்கூடப் பள்ளியை சுத்தம் செய்யும் வேலைக்காரர் தொடமாட்டார். பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்குப் போகும் போது புத்தகப்பையுடன் சாக்குத் துணியையும் கை யோடு எடுத்துக்கொண்டு போய் காலையில் பள்ளிக்கு வரும் போது அந்த சாக்குத் துணியோடு வரவேண்டும். பள்ளியில் இருக்கும் போது தண்ணீர்த் தாகம் ஏற்பட்டால் பள்ளி ஆசிரியரின் - பள்ளிப் பணியாளரின் அனுமதி பெற்று தீண்டத்தகுந்த ஒருவர் குழாயைத் திறந்தால்தான் தண்ணீ ர் குடிக்க முடியும்.

ஒரு வேளை பள்ளிப் பணியாளர் இல்லாவிட்டால் தண்ணீர் குடிக்க முடியாது. குடியிருக்கும் இடத்தில்கூட பணம் எவ் வளவு கொடுத்தாலும் சலவையாளர் துணியைத் துவைத்துக் கொடுக்க முன்வரமாட்டார். வீட்டில் சகோதரிகள்தான் அந்த வேலையைச் செய்வார்கள். பணம் எவ்வளவு கொடுத்தாலும் முடிவெட்டுபவர்கூட எங்களுக்கு முடிவெட்டிவிடமாட்டார். அதை எங்கள் சகோதரிதான் வெட்டிவிடுவார். இப்படித் தீண்டாமைத் தீயில் கறுகிக்கொண்டும் , எண்ணச்சூழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த அந்த சிறுவன் யார்? விடுதலை பெற்ற இந்தியாவிற்கு அரசமைப்புச் சட்ட வரைவை உருவாக்கித் தந்த பீம்ராவ் என்ற இயற்பெயர் கொண்ட மேதை அம்பேத்கர்தான்.

பள்ளிப்படிப்பை முடித்த அம்பேத்கர் 1912இல் பி.ஏ. தேர்ச்சி பெற்றார். பரோடா மன்னரின் உதவியால் 10 ஆண்டுகள் அவரது சம "தானத்தில் வேலைபார்க்க வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்கிறார். கொலம்பியா பல்கலைக்கழகத் தில் அவர் அரசியல் , வரலாறு, சமூகவியல், மானுடவியல், தத்துவம், உளவியல், பொருளியல் ஆகிய துறைகளைப் படித்தார். தினமும் 18 மணிநேரம் படித்தார்.

1915-இல் Administration and Finance of East India Company கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகமும், நிதியமைப்பும்) என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை அளித்து எம்.ஏ. பட்டம் பெற்றார். இந்தியாவின் தேசிய பங்கு வீதம் - வரலாற்று மற்றும் பகுப்பாய்வு மதிப்பீடு என்ற தலைப்பில் (National Dividened of India,1 Historical and Analytical Study) ஆராய்ச்சி செய்து முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார். 1916-இல் மானுடவியல் கருத்தரங்கில் கலந்துகொண்டு Castes ill India - their Mecharisill - Genesis and Devlpimelit இந்தியாவில் சாதிகள் = அவற்றின் நுட்பம் : மூலகார ணம், வளர்ச்சி என்ற கட்டுரை வாசித்தார்.

சட்டப்படிப்பிற்காக, "கிரேஸ் இன் - என்ற சட்டக் கல்லூரியிலும் , பொருளியல் படிப்பிற்காக இலண்ட ன் School of Economics and Political Science என்ற கல்லூரியில் இடம் கிடைத்தது. அதற்கு அவர் தயாரான நேரத்தில் பரோடா மன்னர் உதவித் தொகையைப் பாதியிலேயே நிறுத்திவிட்டதினால் . தனது படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு இந்தியா திரும்ப வேண்டிய தாகிவிட்டது.

1917-இல் ஒப்பந்தத்தின்படி, அம்பேத்கர் பரோடா சமஸ்தானத்தில் 10 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டிய கட்டாயம். பொதுவாகச் சமாதானத்திற்குப் பெரிய அதிகாரி யாரேனும் வந்தால் அவரை வரவேற்க அரசவை அலுவலர்கள் இரயில் நிலையத்தில் காத் திருந்து வரவேற்பது வழக்கம். அம்பேத்கர் தீண்டத்தகாத வரானதால் அவரை வரவேற்க யாரும் வரவில்லை .

மன்னர் அவரை இராணுவ செயலாளர் என்ற உயர் பதவியில் அமர்த்திவிட்ட போதிலும், அலுவலகக் கடைநிலை ஊழியர்கள் கூடக் கோப்புகளை அவர் கையிலே தராமல் அவரது மேசைமேல் தூக்கி எறி வார்கள். அவர் நாற்காலியைவிட்டு எழுந்து சென்ற பின் கீழேயுள்ள விரிப்பு துவைக்கப்படும். அலுவலகத் தில் அவருக்குக் குடிக்கத் தண்ணீர்கூடக் கிடைப்பதில்லை. சமஸ்தானத்தில் தங்குவதற்கு இடமும் தரவில்லை. தங்குவதற்கு இடம் எங்கும் கிடைக்கா த்தால் ஒரு பார்சீகாரர் விடுதியில் தான் ஒரு பார்சி எனத் தன் சாதியை மறைத்து அறை எடுத்து - சிறை யில் வாழுவது போல் தங்கியிருந்தார். எப்படியோ அதைக் கண்டுபிடித்துவிட்ட சாதிவெறியர்கள் - கையில் கம்பு, கழிகளுடன் வந்து பெட்டி படுக்கைகளை எடுத்து வெளியே போட்டுவிட்டனர். உயிர் பிழைத்தது போதும் என்ற நிலையில் பதற்றத்தோடு வெளியேறினார்.

பார்சிவிடுதியிலிருந்து வெளியேறிய அம்பேத்கர் , தங்குவதற்கு இடம் வேண்டி மன்னரிடம் முறையிட்டார். மன்னர் திவானிடம் அம்பேத்கர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யும்படி கட்டளையிட்டார். ஆனால் திவான் தனது இயலாமையைத் தெரிவித்து விட்டார். மன்னனைவிட சனாதனம் பெரிதல்லவா? இளைஞன் அம்பேத்கர் எங்கெங்கோ அலைந்தும் தங்குவதற்கு இடமின்றி கவலையுடனும் பசியுடனும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து வாய்விட்டு அழுதார். இளைஞனான அரசியல் மேதை இது போல் இன்னும் அவர் தன் வாழ்நாளில் எண்ணற்ற அவமானங்களைச் சந்தித் திருக்கிறார். இந்தச் சூழ்நிலையில்தான் 'Small holdings in India tlid their remedies" இந்தியாவில் துண்டு நிலங்களும் அவற்றிற்கான தீர்வுகளும்) எழுதினார்.

1920ம் தான் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணத்திலும் , கோல்ஹாபூர் மன்னர் அளித்த உதவியினாலும் மேற்கொண்டு படிக்க இலண்டன் பயணமானார். London Museum Library -இல் காலை 4 மணியிலிருந்து இரவு 1 மணிவரை படித்தார். காலை உணவாக ஒரு தேநீர் - ஒரு ரொட்டி, அத்தோடு இரவு உணவு. தனது அறையில் இரவெல்லாம் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும் அம்பேத்கரிடம் தனது நண்பர் தூங்குபடி கேட்கும் போது - "என்னிடம் உணவிற்கு போதுமான பணமும் இல்லை உறங்குவதற்குப் போதுமான நேரமுமில்லை என்பார்.

1921 இல் Provincial [Decentralisation of Imperial Finance in British Indian (பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியை மாநில வாரியாகப் பிரித்தளித்தல்) என்ற தலைப்பின்கீழ் M.SC.பட்டம் பெற்றார். 1922இல் The Problem of the Rupee ரூபாய் பற்றிய பிரச்சனை என்ற ஆய்வுக்கட்டுரை எழுதி D.Sc. பட்டம் பெற்றார். ஜெர்மனி Boti (பான்) பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மூன்று மாதங்கள் சமஸ்கிருதம் படித்தார். இந்தியாவில் யாரும் சொல்லித்தர முன்வரவில்லை.

1923-இல் அம்பேத்கர் லண்டனில் நடைபெற்ற ஒரு மாணவர் அமைப்பின் கூட்டத்தில் Reponsibilities of a responsible Goverrnment of India (இந்தியாவின் பொறுப்புள்ள அரசாங்கத்தின் பொறுப்புகள்) என்ற தலைப்பில் தன்னுடைய பரபரப்பான கட்டுரையை வாசித்தார். பின் இந்தியா திரும்பினார். அம்பேத்கர் பொருளியலில் சிறந்த திறமையும். ஆழ்ந்த அறிவும் பெற்றிருந்தார். Studies in History, Economics and Public 1910) - வரலாறு. பொருளியல், அனைத்து நாடுகளின் சட்டம் ஆகியவற்றில் சில அம்சங்கள் என்ற நூலினை அச்சிற்காகப் பதிப்பகத்திற்கு அனுப்பினார். ஆனால் அந்த நூல் வெளியிடப்படவில்லை .

இந்தக் காலக்கட்டத்தில்தான் தலித் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டி ஊமைகளின் தலைவன் என்கிற மாதம் இருமுறை வரக்கூடிய பத்திரிக்கையை அம்பேத்கர் தொடங்கினார். பொது வாழ்க்கைக்கு வருவதற்கு முன்னதாக அம்பேத்கரின் வரலாறு என்பது இதுதான். இவையெல்லாம் அம்பேத்கர் வாழ்வில் நடந்த சம்பவங்களா என்றால், ஆம், உண்மைதான். இதற்கு மேலும் அவரது வாழ்வில் பல சம்பவங்கள் இந்திய வரலாற்றோடு ஒட்டி நடந்திருக்கிறது. அவருக்குப் பல பரிமாணங்கள் இருக்கிறது. யானையை விவரித்து குருடனைப்போல் இச்சமூகம் ஒவ்வொரு விதமாக அவரைப் புரிந்துகொள்கிறது.

அம்பேத்கர் என்ற தலைவரை இரண்டு வகைகளில் மட்டுமே அறிஞர்களால் கூடப் பதிவு செய்யப் படுகிறது. ஒன்று நெஞ்சுருகி அவரது வாழ்க்கை வரலாறை எழுதுவது , இரண்டு அவரை கல்வி சார்ந்த சிந்தனையாளராகப் பார்ப்பது. மேற்சொன்ன இரண்டு மே புகழ்ச்சிக்கும் , அவரை ஒரு எல்லைக்குள் வைத்துச் சுருக்குவதற்கு மட்டுமே பயன்படும். ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி என்று புகழ்ந்த நாம் அவர் இந்திய அரசியல் வானில் என்றென்றும் ஒளி வீசும் கதிரவன் என்பதை உணரத் தவறிவிட்டோம்.

மனிதகுல வரலாற்றுச் சிந்தனையாளர் மார்க்சோடு ஒப்பிடும் போது மார்க்சுக்கு உலகம் எல்லை என்றால் , அம்பேத்கருக்கு இந்தியா எல்லை. இருவருமே தாங்கள் மேற்கொண்ட பணிகளைத் தடையின்றி நிறைவேற்றச் சமபலம் பெற்றிருந்தனர். தொழிலாளர்களின் வர்க்க உணர்வை மார்க்சு தனது கொள்கையாகக் கொண்டி ருந்தார். அம்பேத்கரோ , தனது சொந்த அனுபவத்தி லிருந்து உருவான தீண்டாமைக்கு எதிரான உணர்வு களிலிருந்து தத்துவத் தேடலைக் கொண்டிருந்தார்.

அம்பேத்கரை ஊடாடி பார்த்தோமானால் முன் தீண்டத்தகாத சூழலில் சிக்கித்தவித்தவரும், கல்வி அறிவியல் மேதமை கண்டவருமான இளம் அம்பேத்கர். 1942 க்குப் பின் வைஸ்ராயின் நிர்வாக சபையில் இடம்பெற்ற அம்பேத்கர் - சுதந்திர இந்தியாவில் நேருவின் முதல் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர், இந்திய அரசமைப்புச் சட்டத் தயாரிப்புக் குழுத் தலைவராக இருந்த அம்பேத்கர், புத்தமதத்தில் முழுமையாக மூழ்கிய அம்பேத்கர் என்கிற நிலைகளிலிருந்து பார்த்தோமானால் அவரது பன்முகப் பரிமாணங்களை நாம் மேலும் தெரிந்து கொள்ளலாம்.

புத்தரின் நிலையாமைத் தத்துவத்தைத் தனதாக்கிக் கொண்ட அம்பேத்கர் , மாற்றம் ஒன்றே மாறாதது என்ற மார்க்சின் தத்துவத்துடன் நேர்கோட்டில் பயணித்தார். அம்பேத்கர் மார்க்சியம் பயின்றார். நடைமுறையில் கல்வி கற்றல் மற்றும் பயிற்சி முறையில் மேற்கத்தியத் தாராள வாதத்திற்கு ஆட்பட்டிருந்தார். அவரது சிந்தனைகள் பல உயர்ந்த பொருள் பொதிந்தவை. சாதி களை ஒழிக்க வேண்டும். சுதந்திரம் சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சமூகத் தை உருவாக்க வேண்டும் என்கிற குறிக்கோளை கொண்டிருந்தார்.

மாற்றத்தைப் பெரிதும் விரும்பிய அம்பேத்கர் , தலித் மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்டாலும், அதனைப் புரட்சியிலிருந்து குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அரசு , மதம், தாராளச் சனநாயகம், அரசமைப்புச் சட்டவாதம் , சோசலிசம், புரட்சி, மார்க்சியம் போன்றவைகள் அவரது சிந்தனையில் முக்கிய இடம் பெற்றிருந்தன. தான் எழுதிய அரசியல் சட்டத்தைத் தானே கொளுத்துவேன் என பிரகடனப்படுத்தினார். தீண்டாமையின் தாக்கத்தினால் போராட்டக்குணம் கொண்டிருந்தாலும் சாதீய முறை ஒழிப்புக்காகக் களமாடினார். தலித்துகள் அடிமைப்பட்டுக் கிடக்கும் பிரச்சனைகளுக்கு அம்பேத்கர் முக்கியத்துவம் கொடுத்தாலும் வர்க்கத் தோழர்களான விவசாயிகள் தொழிலாளர்கள், பெண்கள் போன்றோர் அடக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுத்தார்.

தனது இயக்கத்திற்கு இரண்டு பெரிய எதிரிகள் முதலாளித்துவமும் பார்ப்பனியமும்தான் என அறிவித்தார். சாதிய மற்றும் வர்க்கப் போரை இணைக்கும் முயற்சிதான் அவரது சுதந்தரத் தொழிலாளர் கட்சியின் துவக்கம். தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சனைகளை இக்கட்சி கையிலெடுத்தது ; பஞ்சாலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்குத் தலைமை தாங்கியது; தொழிலாளர் நலன் காக்கும் தொழில்த் தகராறு சட்டத்திற்காக நாடாளுமன்றத்தில் போராடியது ; வைராயின் நிர்வாக சபையில் இருந்தபோது பல சீர்திருத்தங்கள் கொண்டு வந்தது. இவை எல்லாம் அம்பேத்கரின் வர்க்கப் பார்வை இல்லாமல் வேறென்ன வென்று சொல்வது?

சக்தியற்ற தலித் மக்கள் அனைத்து எதிரிகளுடனும் ஒரே நேரத்தில் போரிடுவது சாத்தியமில்லாதது என்றும் தனது வரையறுக்கப்பட்ட சக்தியைப் பல முனைகளில் செலவழிக்க விரும்பவில்லை முடியவில்லை. இந்த நாட்டுக்குள் இருக்கும் ஏகாதிபத்தியத்தின் உற்ற நண்பர்களாக நிலப்பண்ணையார்கள் . ஆலை அதிபர்கள் , லேவாதேவிக்காரர்கள் ஆகியோருக்கு எதிராக போரா டாமல் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் சாத்தியமில்லாதது " என்றார். தங்களின் சொந்த நாட்டு மக்கள் மனிதநேயமில்லாமல் சுரண்டப்படுவதைக் கண்டுகொள்ளாத மற்ற போராட்டங்களை வெறுத்தார். சுதந்திரப் போராட்டத்தை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் என்று கூறிக்கொண்டாலும் அவர்களின் உண்மையான நோக்கம் உள்நாட்டு ஆளும் வர்க் கத்திற்கு அரசியல் அதிகாரம் பெறுவதுதான் என்ற அம் பேத்கரின் கருத்தை எவர் மறுக்க முடியும்? சுரண்டப் பட்ட மக்களின் விடுதலையுடனான இந்திய விடுதலை தான் உண்மையான இந்திய விடுதலை என்று கருதினார்.

சுரண்டல்களின் ஒரு வடிவமான பெண்ணடிமைத் தனத்தைத் தனது வேலைத்திட்டங்களில் ஒன்றாக்கிக் கொண்டார். சமூகப்புரட்சி என்பது மிகவும் ஒடுக்கப் பட்டோர் நிலையிலிருந்து தொடங்க வேண்டும் என்பது அவரின் கொள்கை அவரது போராட்டங்களில் பெண் களை ஈடுபடுத்தினார். முன்னணிப் படை வரிசையில் இடமளித்தார். "மகத்தில் நடந்த போராட்டத்திலும் 50 பெண்களை முன்னணி வரிசையில் தலைமைதாங்கச் செய்தார். இந்திய அரசமைப்புச் சட்டப்படி பார்ப்பனப் பெண்கள் உட்பட மகளிர் அனுபவிக்கும் உரிமைகள் எல்லாம் அவரின் சிந்தனையில் உதித்தவைகள்தான் அவரது வியர்வையின் மறுவடிவம்தான்.

1.பெண்களுக்குச் சொத்துரிமை.

2.ஒருதார மணம்.

3.மணவிலக்கு உரிமை,

4.சாதிமறுப்புத் திருமண அங்கீகாரம்.

5.சடங்கு மறுப்புத் திருமணத்திற்கு அங்கீகாரம்.

6.ஜீவனாம்சம்.

7.மறுமணம்.

8.குழந்தை மணத் தடை.

9.வரதட்சணைக் கொடுமைகளுக்கு எதிரான தண்டனை.

  1. பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிரான தண்டனை ஆகியவைகள்.

புரட்சிக்கு மாற்றாக சீர்திருத்தங்களையே அம்பேத்கர் ஆதரித்தார். புரட்சியை வன்முறை என்றே பொருள் கொண்டார். அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளை அவர் ஆதரிக்கவில்லை . மக்கள் மனங்களில் மாற்றம் வராமல் அரசுக்கு எதிரான கிளர்ச்சி வெற்றி பெறாது என்பதே அவரது நம்பிக்கை. புரட்சிக்கான நோக்கத்திற்கு அவர் என்றும் எதிரானவரல்ல. சமூக உறவுகளில் அடிப்படை மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பது புரட்சி. இந்த மாற்றத்தால் நேரடியாக பாதிக்கக்கூடியவர்கள்தான் எப்போதும் எதிர்க்கிறார்கள். அம்பேத்கர் அந்த வகை யினர் இல்லை . நலிந்த பிரிவினராகிய தலித்துகள் புரட்சியில் ஈடுபடும் போது அவர்கள் பூண்டோடு நசுக்கப்படுவார்கள் என்ற அச்சத்தின் கண்ணோட்டத் தோடுதான் அவரது கருத்து இருந்திருக்கலாம்.

இந்திரா காந்தி கொலையுண்டபோது அப்பாவிச் சீக்கியர்கள் கொல்லப்பட்டதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் புரட்சியில் வன்முறை எப்போதும் தவிர்க்க முடியாததாகிறது. "வன்முறை என்பது வரலாற்றின் மருத்துவச்சி " என்று மார்க்க அதனால்தான் கூறு கிறார். அம்பேத்கர் வன்முறையின் அவசியத்தை நிராகரித்து விடவில்லை. அவசியம் தேவையென்றால் அதையும் மேற்கொள்ளலாம் என்பதே அவரது கருத்து. சாதியப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணாமல் செய்யப்படும் எந்த மாற்றமும் தலித் மக்களுக்குத் தீங்காகவே முடியும் என்பது அவர் எண்ணம். சாதிகள் இருப்பதால் வர்க்க உணர்வு ஏற்பட இந்திய மண் சாதகமாக இல்லை என்பது அவரது அழுத்தமான வாதம். அதனால்தான் புரட்சிக்குச் சாதி ஒழிப்பை முதல் பணி யாகக் கொள்கிறார்.

தலித்துகளுக்கு ஆதரவாகச் சில சலுகைகளை உறுதி செய்துவிடலாம் என்ற ஆர்வத்தில் ஆளும் வர்க்கச் சாதிப்பிரதிநிதிகளுக்கு ஏற்புடைய அரசமைப்புச் சட்டத்தை எழுதும் சவாரிக்குதிரைப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். கட்டுப்பாடான அந்த நேரத்தில்கூட அடித்தட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றும் நல்ல பணியினைச் செய்துவிடலாம் என்று அவர் நம்பியிருக்க வேண்டும். இந்த நாட்டின் உண்மை யான மக்கள் இயக்கம் என்பது ஏகாதிபத்தியத்தையும் உள்நாட்டு தரகு முதலாளித்துவத்தையும், நிலப்பண்ணையார்களையும் , பார்ப்பனியத்தையும் ஒரே சமயத்தில் எதிர்த்துப் போராடுவதாக இருக்க வேண்டும் எனச் சரியாகச் சொன்னவர் அம்பேத்கர் மட்டும்தான். தீண்டாமை , சாதி வேறுபாடுகள் போன்ற பிரச்சனைகளைப் பண்பாட்டுத் தளத்திலிருந்து அரசியல் தளத்திற்குக் கொண்டு வந்தவர் அம்பேத்கர். தனியார் நில உடை மை ஒழிக்கப்பட்டுப் பயிர் செய்யும் உரிமை கூட்டு றவுத் துறைக்கு மாறினால் மட்டுமே நிலப்பிரபுத் துவத்தை ஒழிக்க முடியும் என்று சொன்னார். அரசால் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்றும் கருதினார்.

வரலாற்றினை அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்த மார்க்சு முதலாளித்துவச் சகாப்தத்தின் சமூகப் புரட்சியில் தொழிலாளி வர்க்கம் முன்னணி பாத்திரம் வகிக்கும் என்றார். இந்தியாவில் தொழிலாளி வர்க் கத்தைக் காணாத அம்பேத்கர் , சாதிகள் ஒழிக்கப்படும் வரை இந்த வர்க்கம் உருவாக வாய்ப்பு இல்லை என்று கருதினார். உலகை மாற்றுவதே தத்துவத்தின் குறிக்கோள் என்று மார்க்சைப் போலவே அம்பேத் கரும் சிந்தித்தார். இதுபோன்ற ஒற்றுமைகளோடு கூட அம்பேத்கர் தனது பேச்சிலும் எழுத்திலும் மார்க்சை மேற்கோள்காட்டியிருக்கிறார்.

வாழ்நாள் முழுவதுவான போராட்டத்தின் விளைவு கள் அவர் நினைத்தது போல் அமையாததால், கடைசி காலத்தில் விரக்தி ஏற்பட்டது என்பது உண்மை . தனக்குப் பிறகு படித்த தலித்துகள் பயன்படுவார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு அற்றுப்போய்விட்டது. கிராமங்களில் வாழும் தனது மக்களுக்கு எதுவும் செய்யமுடியாமல் போய்விட்டதே என எண்ணி மனம் வெம்பினார். இந்த விரக்தியின் வெளிப்பாடுதான் தனது கடைசிக் காலத்தில் மதத்தின் மீதும் - ஆன்மீகத்தின் மீதும் அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அடித்தள மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குத் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டதும்பேத்கரின் வாழ்க்கையை நாம் பாடமாகப் பார்ப்பதோடு - தன் ஆய்வுப் பார்வையோடு பார்த்தால் அம்பேத்கர் புரட்சியாளராக வெளியில் தெரிவார்.

“தலித் மக்கள் போராட்டம் உலகின் புரட்சிகரப் போராட்டமாக மாறும் , இந்துவாகப் பிறந்த நான் இந்துவாகச் சாகமாட்டேன் " எனச் சொன்னபடி செய்து காட்டியவர் அம்பேத்கர். வாழ்நாளின் இறுதி நேரத்தில் வரும் தலைமுறையினர் புத்தர் அல்லது காரல்மார்க்க இருவரில் யாரை யாவது ஒருவரைத்தான் வழிகாட்டியாகத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும் - என்ற அம்பேத்கரையும் நினைவில் நிறுத்தி புதிய சமூகம் படைப்பதற்குப் புறப்படுவோம். வாருங்கள்.

 

 

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.