Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

12. இராமன்வயதைப்பற்றிக்கவுசலை

முன்னுக்குப்பின் முரண்!
(சி.ஆர்.சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு)
காட்டிற்குப் புறப்படும் இராமனைப் பற்றி நினைந்து கவுசல்யை துக்கப்படும்பொழுது, "தேவதைகளைப் போல் இருபத் தைந்து வயதுள்ளவனும் ஞானத்தால் முதிர்ந்தவனுமான என் ராமன் என்று கூறுகிறாள்.
(அயோத்தி காண்டம் சர்க்கம் 43, பக்கம் 189)
குறிப்பு : இதன்படி இராமன் காட்டுக்குப் புறப்படும் போது அவனுக்கு வயது இருபத்தைந்து என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் கவுசல்யை காட்டிற்குப் புறப்படும் ராமனிடம் மற்றொரு பக்கத்தில் வருத்தப்படும் பொழுது கீழ்க்கண்டவாறு வயதைக் குறிப்பிடுகிறாள்.''
"நீ பிறந்த பதினேழு வருஷங்களாய் எவ்வளவோ கஷ்டங் களைப் பொறுமையுடன் அனுபவித்து வந்தேன்''
(மேற்படி காண்டம், சர்க்கம் 20 பக்கம் 92)
குறிப்பு : இதன் படி இராமன் காட்டிற்குப் புறப்படும் போது அவனுக்கு வயது 17 என்று ஆகிறது. இவனுக்குக் கல்யாணம் ஆகி பனிரெண்டு ஆண்டுகள் சென்ற பின்பு தான் காட்டிற்குப் போகும் படி ஆகிறது. ஆகவே காட்டிற்குப் போகும்போது பதினேழு வயது என்றால் கல்யாணம் ஆனபொழுது வயது அய்ந்தாக இருக்க வேண்டும். இதன்படி இராமனுக்கு அய்ந்து வயதில் கல்யாணம் செய்யப்பட்டது. என்பது தெரிகிறது. இதை மேலும் தசரதன் உறுதிப்படுத்திக் குறிப்பிடுகையில், விசுவாமித்திரன் இராமனை தாடகையை வதம் செய்ய அழைக்கவரும் பொழுது, விஸ்வாமித்திரனிடம் தசரதன் "இராமன் பாலன், குழந்தை" என்று குறிப்பிடுகிறான். மேலும் அதே சமயத்தில் இராமனுக்கு "ஜில்பா தரிக்கும் வயது” என்கிறான். இதனால் ராமனுக்கு அப்போது குடுமி வைக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் அண்ணங்காராச்சாரியார் மொழிபெயர்ப்பு 20ஆவது சர்க்கத்தில், விஸ்வாமித்திரனிடம் தசரதன் கூறும் போது, இராமன் என் மடியைவிட்டு இறங்க வல்லவன் அல்லன் இவ் வயதில் விளையாடிக் கொண்டிருக்க வேண்டியவன் என்று குறிப்பிடப்படு கிறது. இவைகளையெல்லாம் ஆராயுமிடத்து, இராமனுக்குக் கல்யாணம் ஆகும்பொழுது சிறு பாலகன், அதாவது கவுசல்யை குறிப்பிடுவதுபோல் அய்ந்தே வயதுள்ளவன்.
ஆகவே இராமனுக்கு தன் அய்ந்தாவது வயதில் பெண்களிடம் இச்சைகொள்ளும் உணர்ச்சி வந்ததென்று இதன் மூலம் தெரிகிறது. இது சாத்தியப் படக்கூடியதோ அல்லது அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமானதோ என்று கூறுவதிற்கில்லை. இந்த ஆராய்ச்சி ஒன்றின் மூலமே இராமாயணம் பொய் புரட்டுகள் நிறைந்ததும் முன்னுக்குப் பின் முரணாக எழுதப்பட்டது மான கட்டுக் கதை என்றும் தெளிவுப்படத் தெரிகிறது.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.