Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

13. சீதையின்வயதுபற்றியபுரட்டு!

(சி.ஆர்.சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு)
திருமண காலத்தில் இராமனுக்கு வயது 5 சீதைக்கு வயது 25 பாலனுக்கும் தடிக்குமரிக்கும் திருமணம்!
இதுவரை வந்துள்ள இராமாயண ஆராய்ச்சியில் இராமனுக்குத் திருமண காலத்தில் வயது 5 என்பதை ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்தேன்.
இனி சீதையின் வயதைப்பற்றி ஆராய்வோம்.
சீதை இராவணனிடம் தன் பெருமைகளைப் பற்றிக் கூறும்பொழுது, “தான் கிழவியல்ல, குமரி என்ற உள்ளக் கருத்தின் மீது நான் கல்யாணமாகி பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து காட்டிற்கு வரும்போது எனக்கு வயது பதினேழு'' என்று கூறுவதாக ஆரண்யகாண்டம் 47 ஆவது சர்க்கம்; 130 ஆவது பக்கத்தில் காணப்படுகிறது.
இதன்படி சீதைக்குத் திருமண காலத்தில் தனக்கு வயது 5 என்று குறிப்பிட்டது கொஞ்சங்கூட பொருத்தமற்றது என்று கூறி இருக்கிறேன்.
மேலும், அவள் 5 வயதிலேயே மணப்பக்குவம் அடைந்திருக்க வேண்டும். இது அறிவுக்கு ஏற்றதல்ல. ஆனால் இவளுக்குத் திருமணம் ஆகும் காலத்தில் குறைந்தது 15 வயது இருந்திருக்க வேண்டும். இதை சீதையே ஒப்புக்கொள்கிறாள்.
சீதை அனுசூயை என்பவளிடம் தன் வரலாற்றைக் கூறும்பொழுது,
''எனக்கு விவாக காலம் சமீபித்ததைப் பார்த்து தரித்திரன் தனக்கிருந்த அல்பத்தனத்தையும் இழந்து வருந்துவதுபோல், என் பிதாவிற்கு கவலை மேலிட்டது. அவர் எல்லையற்ற கவலை கொண்டார். நான் மற்றவர்களைப் போல், ஸ்திரீயின் வயிற்றிலிருந்து பிறக்காததால் எல்லா விதத்திலும் எனக்குத் தகுந்த கணவனை எவ்வளவு சிரமப்பட்டுத் தேடியும் கிடைக்கவில்லை.
(அயோத்யா காண்டம் சர்க்கம் 118, பக்கம் 432)
குறிப்பு : இதன்படி சீதைக்கு மணமாகும் காலம் வந்ததைக் குறித்து ஜனகன் கவலைப்பட்டிருக்கிறான். ஏனெனில் இவளுக்கு யாருமே மணமகனாக அமைவதற்கு முன்வரவில்லை. எங்கோ கிடந்து எடுத்துவரப்பட்டவள். மற்றவர்களைப் போல் தாய் தகப்பன் அறிந்த பெண்ணாக இருந்திருக்குமானால் சுலபத்தில் கணவன் கிடைத்திருப்பான். இவளுடைய தாய் யாரோ தகப்பன் யாரோ எத்தனை பேரோ யார் கண்டார்கள்? எனவே யாராலோ பெற்றெடுக் கப்பட்டுத் திருட்டுத்தனமாக தரையில் போடப்பட்டுச் சென்றிருக்க வேண்டும். இப்போது நாம் அடிக்கடி பத்திரிகைகளில் படிப்பதன் மூலமும் நேரில் காணுவதன் மூலமும் அறிகிறோம். அதாவது எங்கெங்கேயோ பச்சிளங் குழந்தைகளைக் கள்ளக் காதலினால் கள்ளப் புருஷனுக்குப் பெற்றெடுத்து யாருக்கும் தெரியாமல் மூலை முடுக்கு களிலும், சந்து பொந்துகளிலும் போட்டுவிட்டுப்போய் விடுகிறார்கள். அப்படி யாரோலோ பெற்றெடுக்கப்பட்டு, தரையிலேயே கிடத்தப் பட்டவள் தான் சீதை என்பதை வால்மீகியே சீதையின் வாயாலேயே சொல்லும்படி வைக்கிறார். இவள் பிறவி இப்படியிருக்க இவளை யாருமே மணக்க வரவில்லை .
மேலும் சீதை, அதே சர்க்கத்தில் 433 ஆவது பக்கத்தில் கூறும்பொழுது, வெகு காலத்திற்குப் பிறகு இந்த ராகவனும் லஷ்ம ணனும் விஸ்வாமித்திரருடன் வந்தார்கள். அப்போது இராமனுக்கு என்னை விவாகம் செய்து கொடுத்தார் என்று கூறுகிறாள்.
'வெகு காலத்திற்குப் பிறகு' என்று கூறுவதால் இவள் மணப்பருவம் அடைந்து குறைந்தது பத்து ஆண்டுகளாவது மணமகன் யாரும் சிக்காமல் இருந்திருக்க வேண்டும். மணப்பருவம் அடையும் பொழுது பதினைந்து வயதாவது இருந்திருக்க வேண்டும். எனவே ராமனைத் திருமணம் செய்து கொள்ளும்பொழுது சீதைக்கு வயது இருபத்தைந்து இருந்திருக்க வேண்டும்.
ஆகவே, முன் ஆராய்ச்சிப்படி 5 வயதுள்ள இராமனுக்கும் இதில் கூறியபடி 25 வயதுள்ள சீதைக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
இதன்படி கல்யாணம் ஆகி பதின்மூன்று ஆண்டுகள் கழித்துக் காட்டிற்கு இராமனுடன் செல்கிறாள்; அப்போது அவளுக்கு வயது 38 இருந்திருக்க வேண்டும். ஆனால் அவள் காட்டில் இராவணனிடம் தன்னை பற்றிக் கூறும் போது, இராவணன் தன்னைக் கிழவி என்று நினைத்துவிடுவானோ என்ற எண்ணத்தின் மீது, காரணமின்றி அதுவும் சந்நியாசியிடம் தன்னுடைய வயதைக் கூறத் தேவையில்லை. அது மட்டுமல்ல தன் உண்மையான வயதைக் குறைத்துக் கூற வேண்டியக் காரணம் என்ன? தான் காட்டுக்குப் புறப்படும்போது, தனக்கு வயது பதினேழு என்று (ஆரண்ய காண்டம் 47 ஆவது சர்க்கம், 130 ஆவது பக்கத்தில்) கூறுகிறாள். இவள் இராவணனிடம் கூறும் போது இவளுக்கு வயது அய்ம்பது. எப்படியெனில் கல்யாணம் ஆகும்போது 25 வயது, 12 வருடம் கழித்துக் காட்டிற்குப் புறப்படும்போது 37வயது, பிறகு காட்டிற்கு வந்து 13 ஆம் வருடத்தில் இராவணன் வருகிறான். அப்போது வயது 50 எனவே, 50 வயதுக் கிழவி, தன்னைக் குமரி என்று காட்டிக்கொள்ள தனது 'உண்மையான' வயதில் 20 வயதைக் குறைத்துக் கூறுகிறாள்.
மேலும், சீதை கிழவி என்பதை உறுதிப்படுத்த லட்சுமணன் சூர்ப்பனகையிடம் சீதையைப் பற்றிக் கூறுகையில், ''சீதை குரூபி, துஷ்டை , வயிறொட்டினவள்'' என்று சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு ஆரண்ய காண்டம் 18ஆவது சர்க்கம் 50ஆவது பக்கத்திலும் மேலும் அண்ணங்காச்சாரியார் மொழிபெயர்ப்பு மேற்படி காண்டம் சர்க்கம், 404 ஆவது பக்கத்தில் சீதை விகார ரூபமுள்ளவள், தாழ்ந்த இடையுள்ளவள் வயது சென்றவள் (கிழவி) என்றும் கூறி, சீதை கிழவி என்பதை உறுதிப்படுத்துகிறான்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.