இராமாயண மூலக் கடவுள் விஷ்ணுவே விபசாரம் செய்தவன். அதனால் சாபம் பெற்று மனிதனாக (ராமனாகப் பிறக்கிறான்.
இராமாயணத்தில் வரும் மூலரிஷிகள் (ரிஷியசிருங்கன், விஸ்வாமித்திரன், வசிஷ்டன் முதலியோர்) அயோக்கியத் தனத்தில் கைதேர்ந்தவர்களாகவும், மடையர்களாவும், காம விகாரம் கொண்டவர் களாகவும் இருக்கிறார்கள்.
இராமாயணத்தில் வரும் அரசன் (தசரதன்) பல் ஆயிரம் மனைவியர்களை உடையவனாகவும், பொய்பேசுபவனாகவும், துரோகம் செய்பவனாகவும், அயோக்கியத்தனமாய் சூழ்ச்சி, பித்தலாட்டம் முதலியவைகளில் துணிகரமாய் ஈடுபடுபவனாகவும் இருக்கிறான்.
நாடு பரதனுக்குச் சொந்தமென்பது ராமனுக்குத் தெரிந்தும், சூழ்ச்சியாகப் பட்டம் சூட்ட ஏற்பாடு செய்த தசரதனின் தந்திரத்துக்கு இராமனும் உடன் பட்டிருக்கிறான். கூடியவரை முயற்சித்தும் காரியம் பலிக்காது போன பிறகுதான் காட்டிற்குப் போகச் சம்மதிக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டபின், தானாகக் காட்டுக்கும் போவதைப்போல் போகிறான்.
பதிவிரதை என்று கூறப்படும் சீதையின் ஒவ்வொரு செய்கையும் முதல் நம்பர் பஜாரிகூட செய்வதற்குப் பயப்படும் அவ்வளவு ஒழுக்க ஈனமாகவும் விபசாரத்தில் கை தேர்ந்தவளாகவும் இருக்கிறாள்.
இவ்வளவையும் கொண்ட இராமாயணம் கடவுள் கதையா? அல்லது நீதி புகட்டும் நூலா?
Tamil eBooks Online Reading
தமிழ் மின் புத்தகங்கள் படிக்க
Tamil eBooks Read Online
மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.