ஆரியர்கள் பொய் சொல்வதில் மிகத் துணிவுள்ளவர்கள்! எப்படியெனில்:
அவர்கள் குறிப்பிடும் காலக் கணக்கெல்லாம் யுகம், சதுர்யுகம், லட்சம் சதுர்யுகம், கோடி சதுர்யுகம், என்று தான் குறிப்பிடுவார்கள்.
அவர்களது ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள் என்பவர்கள் எல்லாம் கடவுள்களுக்கே சாபம் கொடுக்கக்கூடியவர்களாகவே இருப்பார்கள்.
தாசிகள் கூட பெரிய தவ சிரேஷ்டர்களுக்குச் சாபம் கொடுப்பார்கள்.
ஆண்களைப் பலாத்காரம் செய்த விபசாரிகளையும் பதிவிரதை 'லிஸ்ட்டில் சேர்த்துவிடுவார்கள்.
மூன்று அடி உயரமுள்ள குரங்கு, 1000 அடி உயரம் தன்னை உயர்த்திக் காட்டும்.
10 அல்லது 150 பவுண்டு எடையுள்ள குரங்குகள் லட்சம், பத்து லட்சம், கோடி, நூறு கோடி பவுண்டு எடையுள்ள மலைகளைத் தூக்கி வீசி எறிந்ததாகவும் அதனால் பல லட்சம் பேர்கள் செத்ததாகவும் எழுதுவார்கள்.
இப்படியாக இவை போன்ற ஏராளமான பொய்கள், புனை சுருட்டுகளை இராமாயணத்தில் ஏராளமாகக் காணலாம்.
இராவணனிடமிருந்து மீட்டு வந்த சீதையை பார்த்தவுடன் இராமனுக்குச் சந்தேகம் உண்டாகிறது. ஏன்? சீதை இதுவரைக் கணவனைவிட்டுப் பிரிந்து சோகத்தால் வாடியவளாகத் தென்பட வில்லை . அவள் அணிந்திருந்த ஆடைகளும், ஆபரணங்களும், இராமனுக்கு ஆத்திரத்தை மூட்டியது.
சீதையைக் கண்டான்; உன்மீது எனக்கு விருப்பமில்லை என்கிறான். ''நான் எங்கே போவேன்'' என்கிறாள் சீதை."நீ யாருடனாவது எக்கேடு கெட்டாவது போ' என்கிறான் ராமன்.
உனக்குத்தான் என் விஷயம் தெரியுமே! ஏன் இராவணனிடமி ருந்து மீட்டு வந்தாய்? என்று சீதை இராமனிடம் வாதாடுகிறாள்; சத்தியம் செய்து சீதை தீயில் இறங்க வேண்டும் என்பதாக இறுதியில் சமரசத்துக்கு வருகின்றனர். ஆனாலும் சீதை, கைகாரியல்லவா? முதல் நம்பர் விபசாரியல்லவா? பஜாரிகளுக்கும் தெரியாத ஜாலங்களும் தெரிந்தவளல்லவா? இராமனை ஏய்த்துவிடுகிறாள்.
Tamil eBooks Online Reading
தமிழ் மின் புத்தகங்கள் படிக்க
Tamil eBooks Read Online
மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.