குறுந்தொகை 211,
காவன்முல்லைப் பூதனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அம் சில் ஓதி! ஆய் வளை நெகிழ
நேர்ந்து நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல்,
எஞ்சினம் வாழி தோழி, எஞ்சாத்
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ்சினை
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி 5
ஆராது பெயரும் தும்பி
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே.
Kurunthokai 211,
Kāvanmullai Poothanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
May you live long,
O friend with fine, soft hair!
We do not fear our heartless man
who left us making your beautiful
bangles slip,
and went on the wasteland path,
a place without water in summer,
where honeybees and thumpi bees
swarm on a single flower cluster on
a tall branch of a reduced, parched
kadampam tree and return hungry.
Notes: தலைவன் பிரிந்த காலத்தில் சுரத்திடை துணையைப் பிரிந்த விலங்குகளும் பறவைகளும் வருந்துவது கண்டு தானும் வருந்துவானா என்று ஐயுற்ற தலைவியிடம் ‘அவன் அங்ஙனம் மீள்வான் அல்லன்’ என்று தோழி கூறியது. எஞ்சா – எஞ்சிய என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.
Meanings: அம் சில் ஓதி – O woman with beautiful delicate hair (அன்மொழித்தொகை), ஆய் வளை நெகிழ – beautiful bangles slipping down, நேர்ந்து – agreeing, நம் அருளார் நீத்தோர்க்கு – for our heartless man who left without graces, அஞ்சல் எஞ்சினம் – we removed our fear, we do not fear him, வாழி – அசை நிலை, an expletive, may you live long, தோழி – O friend, எஞ்சாத் தீய்ந்த மராஅத்து – of reduced parched kadampam trees, of stunted burned kadampam trees, கடம்பம், Common cadamba, Neolamarckia cadamba, ஓங்கல் – tall, வெஞ்சினை – dried branch, வேனில் – summer, ஓர் இணர் – one cluster (of flowers), தேனோடு ஊதி – swarming with honey bees, ஆராது – not eating, not drinking, பெயரும் தும்பி – thumpi bees that move away, நீர் இல் வைப்பின் – in a place without water, சுரன் இறந்தோரே – the man who went on the wasteland path (சுரன் – சுரம் என்பதன் போலி, இறந்தோரே – ஏ அசை நிலை, an expletive)
குறுந்தொகை 212,
நெய்தல் கார்க்கியர், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
தெண் கடல் அடைகரைத் தெளி மணி ஒலிப்பக்
காண வந்து நாணப் பெயரும்,
அளிதோ தானே காமம்,
விளிவது மன்ற நோகோ யானே. 5
Kurunthokai 212,
Neythal Kārkkiyār, Neythal Thinai – What the heroine’s friend said to her
The lord of the seashore
rides his tall chariot with an
ornamental, lotus-bud shaped
handle and clear loud bells,
along the sandy shores lapped
by the ocean’s clear waters.
We see him when he comes.
It is a shame that he leaves.
This love is pitiful! It will be
ruined, for sure. I will be sad.
Notes: தலைவியை கூட்டுவித்தற் பொருட்டுத் தோழியிடம் தலைவன் வேண்ட, அதற்கு இணங்கிய தோழி அவனை ஏற்றுக்கொள்ளும்படி தலைவியிடம் கூறியது. குறுந்தொகை 149, 395 -அளிதோ தானே நாணே, குறுந்தொகை 212 – அளிதோ தானே காமம். கொடுஞ்சி (1) – உ. வே. சாமிநாதையர் உரை – தாமரை மொட்டின் வடிவமாகச் செய்து தேர் முன் நடப்படுவது. தேரூரும் தலைவர் இதைக் கையால் பற்றிக் கொள்வது வழக்கம். மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).
Meanings: கொண்கன் – the lord of the seashore, ஊர்ந்த – rode, கொடுஞ்சி – lotus-shaped chariot decoration, நெடுந்தேர் – tall chariot, தெண் கடல் – ocean with clear water, அடைகரை – shore filled (with sand), தெளி மணி – clear bells, ஒலிப்ப – rang, காண வந்து – comes to see, நாணப் பெயரும் – shame that he leaves, அளிது – pitiable, ஏ – அசை நிலை, an expletive, தான் – அசை நிலை, an expletive, ஏ – அசை நிலை, an expletive, காமம் – love, விளிவது – getting destroyed, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, நோகு – I am saddened, தன்மை ஒருமை வினைமுற்று, ஓ – அசை நிலை, an expletive, இரக்கக் குறிப்பு, implying pity, யான் – me, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 213,
கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நசை நன்கு உடையர் தோழி, ஞெரேரெனக்
கவைத்தலை முது கலை காலின் ஒற்றிப்
பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉம் பெரும் ததரல்
ஒழியின் உண்டு வழு இல் நெஞ்சின்
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழலாகி 5
நின்று வெயில் கழிக்கும் என்ப, நம்
இன் துயில் முனிநர் சென்ற ஆறே.
Kurunthokai 213,
Kachipēttu Kānji Kotranār, Pālai Thinai – What the heroine’s friend said to her
He loves you greatly, O friend,
your lover who hated sweet
sleep with you and left on a path,
where adult stags with forked
antlers swiftly kick curved, thick
trees and peel off their bark to
ease the hunger pangs of their
frolicking fawns, eating only what
is left, and standing as shade,
protecting them from harsh sun.
Notes: வினைவயிற் பிரிந்து சென்ற தலைவர், நம் நிலை உணர்வாராயின் மேற்கொண்ட வினையின்கண் செல்லாது இடையில் மீண்டு விடுவாரோ என்று ஐயுற்ற தலைவியிடம் ‘அவர் அங்ஙனம் மீளார்’ என்று தோழி உரைத்தது.
தமிழண்ணல் உரை – மான்களின் வாழ்க்கை பற்றிய இது இறைச்சி எனப்படும். ‘இடைச் சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி அன்புறு தக்க கிளத்தல் தானே கிழவோன் செய்வினைக்கு அச்சமாகும்’ (தொல்காப்பியம், கற்பியல் 7) என்ற தொல்காப்பிய நூற்பாவிற்கு இத்தகைய பாடல்கள் தக்க சான்றாவன.
பொ. வே. சோமசுந்தரனார் உரை – உடல் நிழல் குட்டிக்கு ஆகும்படி வெயிலை மறைத்து நின்றது என்பது தான் வருந்தியும் தன் கடமை வழுவாது செய்வர் என்று உணர்த்தியவாறு. மறி – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).
Meanings: நசை நன்கு உடையர் தோழி – he has a lot of love for you O friend, ஞெரேரென – rapidly, கவைத் தலை – heads with forked antlers (கவை – ஆகுபெயர்), முது கலை – adult male deer, காலின் ஒற்றி – kicked with legs, பசிப் பிணிக்கு – to ease hunger pain, இறைஞ்சிய – curved, பரூஉம் பெருந் ததரல் – thick big bark, ஒழியின் உண்டு – eat only the leftovers, வழு இல் நெஞ்சின் – with faultless hearts, தெறித்து நடை மரபின் – with the nature to leap and walk, தன் மறிக்கு நிழலாகி நின்று – they stood as shade to their young ones, வெயில் கழிக்கும் – they remove direct sunlight, என்ப – they say, நம் இன் துயில் முனிநர் – the man who hated sweet sleep with you, the man who rejected sweet sleep with you, சென்ற – went, ஆறு – path, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 214,
கூடலூர் கிழார், குறிஞ்சித் திணை – தோழி செவிலியிடம் சொன்னது
மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய
பிறங்கு குரல் இறடி காக்கும் புறம் தாழ்
அம் சில் ஓதி அசை இயல் கொடிச்சி
திருந்திழை அல்குற்குப் பெரும் தழை உதவிச்
செயலை முழு முதல் ஒழிய, அயலது 5
அரலை மாலை சூட்டி
ஏமுற்றன்று இவ்வழுங்கல் ஊரே.
Kurunthokai 214,
Koodalūr Kilār, Kurinji Thinai – What the heroine’s friend said to the foster mother
This noisy town is fully confused.
It adorns Murukan with arali
garlands, totally ignoring the ruined
asoka tree that gives broad leaves
for the clothing that covers her loins,
the young woman with beautiful,
soft hair, perfect jewels and swaying
walk, who protects the huge clusters
of millet in the field that was plowed
and seeded by a mountain dweller
after clearing the forest trees.
Notes: வெறியாட்டு எடுத்துக் கொண்டவிடத்து தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது. தோழிதானேசெவிலிமகளே (தொல். களவியல்35). The hero has given the heroine clothing made from the leaves of asoka trees. However, the town, not aware of her love affliction, arranges for veriyāttam when arali garlands are worn. The heroine indicates to the foster mother that the heroine is in love, her lover has given her asoka clothing and that veriyāttam is not the solution. The millet field and town are muthal elements. The mountain-dwellers, asoka tree, arali flowers, millet and trees are karu elements.
உ. வே. சாமிநாதையர் உரை – ஊரென்றது தாய் முதலியோரை. அசை இயல் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – அசை இயல் – மெலிந்த சாயல், இரா. இராகவையங்கார் உரை – கட்புலனாகிவியங்கும் சாயல், தமிழண்ணல் – அசையும் இயல்பு. அயலது (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவியோடு அயன்மையுடைய மற்றொரு மரம், உ. வே. சாமிநாதையர் உரை – செயலை மரத்தோடு தொடர்பு இன்றி அயலதாய் நின்ற, இவளுக்கு யாதோர் இயைபுமில்லாத அயன்மையுடையதாகிய வெறியாட்டம். அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).
Meanings: மரம் கொல் கானவன் – a forest dweller who cuts and removes trees, புனம் துளர்ந்து வித்திய – plowed the land and seeded, dug up the land and seeded, பிறங்கு குரல் இறடி – flourishing clusters of millet, Sorghum vulgare, காக்கும் – protects, புறம் தாழ் – hanging on the backside, அம் சில் ஓதி – beautiful delicate hair, அசை இயல் – swaying walk, delicate walk, கொடிச்சி – the woman from the mountain, திருந்திழை – perfect jewels, அல்குற்கு – on her loins, on her waist, பெரும் தழை உதவி – offered big leaves (உ. வே. சா – தலைவன் அசோகந்தழையைத் தந்தான்), செயலை – asoka tree, Saraca indica, முழு முதல் ஒழிய – ruining the thick tree trunk, அயலது அரலை – nearby arali flowers, Nerium Oleander, மாலை சூட்டி – adorns with garlands, ஏம் உற்றன்று – it is confused, இ – this, அழுங்கல் – uproarious, ஊர் – town, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 215,
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
படரும் பைபயப் பெயரும் சுடரும்
என்றூழ் மா மலை மறையும் இன்று அவர்
வருவர் கொல், வாழி தோழி! நீர் இல்
வறுங்கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை
குறும்பொறை மருங்கின் அமர் துணைதழீஇக் 5
கொடுவரி இரும்புலி காக்கும்,
நெடுவரை மருங்கின் சுரன் இறந்தோரே.
Kurunthokai 215,
Alakkar Gnālar Makanār Mallanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
May you live long, my friend!
Your sorrow will go away
little by little.
The blazing sun will hide
behind the lofty mountains.
He will come today, the man
who left for the wasteland
near the tall mountains,
where a bright-tusked male
elephant searches for water in
a dried up, waterless pond
and protects his loving mate
near small boulders,
from a striped, huge tiger.
Notes: தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றாமை எய்திய தலைவியைத் தோழி ஆற்றுவித்தது.
பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீரில் வறுங் கயத்தைத் துழவிய களிற்று யானை குறும்பொறை மருங்கில் பிடியைப் புலி தாக்காமல் காக்கும் என்றது பொருள் நிமித்தம் வறிய பாலை நிலத்தே சென்ற நம் தலைவர் விரைவில் மீண்டு வந்து நின்னைப் பிரிவுத் துன்பம் வருத்தாமல் அருளுவர் என்னும் குறிப்பிற்று.
இரா. இராகவையங்கார் உரை – முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்த நிலன் ஆதலால் குறும்பொறை மருங்கும் நெடுவரை மருங்கும் கூறினாள்.
தமிழண்ணல் உரை – விலங்குகள் மக்களின் உரிப் பொருளைச் சிறப்பிக்க வருவதே இறைச்சி. யானை தன் பிடியைக் காப்பதைப் பார்க்கும் தலைவர் அன்பு தூண்டப் பெற்று நிச்சயம் திரும்புவர் என்பது குறிப்பு. இதுவே இறைச்சிப் பொருள். ‘அன்புறு தகுவன இறைச்சியுள் சுட்டலும் வன்புறை ஆகும் வருந்திய பொழுதே’ (தொல்காப்பியம், பொருளியல் 35) என்பதற்கு இது தக்க சான்றாகும்.
Meanings: படரும் பைபயப் பெயரும் – sorrow will go away little by little (பைபய – பையப்பைய பைபய என மருவியது), சுடரும் என்றூழ் மா மலை மறையும் – bright sun will hide behind the mountains, இன்று அவர் வருவர் – he will come today, கொல் – அசை நிலை, an expletive, வாழி தோழி – may you live long oh friend, நீர் இல் வறுங்கயம் – dried pond without water, துழைஇய – searching, stirring (துழைஇய – சொல்லிசை அளபெடை), இலங்கு மருப்பு யானை – elephant with splendid tusks, குறும்பொறை மருங்கின் – near a small boulder, அமர் துணை தழீஇ – hugs its loving mate (தழீஇ – சொல்லிசை அளபெடை), கொடுவரி இரும்புலி காக்கும் – protects her from a big tiger with curved stripes, நெடுவரை மருங்கின் – near the tall mountains, சுரன் இறந்தோரே – the man who went on the wasteland path (சுரன் – சுரம் என்பதன் போலி, இறந்தோரே – ஏ அசை நிலை, an expletive)
குறுந்தொகை 216,
கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அவரே கேடு இல் விழுப் பொருள் தருமார் பாசிலை
வாடா வள்ளியங்காடு இறந்தோரே;
யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ ஏங்கிப்
பாடு அமை சேக்கையில் படர் கூர்ந்திசினே;
அன்னள் அளியள் என்னாது மா மழை 5
இன்னும் பெய்ய முழங்கி,
மின்னும் தோழி, என் இன் உயிர் குறித்தே.
Kurunthokai 216,
Kachipēttu Kānji Kotranār, Pālai Thinai – What the heroine said to her friend
He
has gone through the forest
with valli yam vines
whose green leaves never fade,
to earn faultless, fine wealth.
I
am yearning for him,
suffering in pain
and lying on a well-made bed,
my stacked, beautiful, bright
bangles slipping down.
Black clouds rumble with
lightning, without consideration
for my pitiful situation.
They are after my sweet life,
my friend.
Notes: பருவ வரவின்கண் தலைவி ஆற்றாள் என வருந்திய தோழியிடம் தலைவி கூறியது. சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27). வாடா வள்ளியங்காடு (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பசிய இலைகளையுடைய வாடாத வள்ளிக் கொடி படர்ந்த காடு, உ. வே. சாமிநாதையர் உரை – பச்சையிலைகளையுடைய வாடாத வள்ளிக்கொடி படர்ந்த காடு, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – பாசிலை வாடா வள்ளிக் கூத்தினையுடைய காடு.
Meanings: அவர் – he, ஏ – அசை நிலை, an expletive, கேடு இல் விழுப் பொருள் – faultless superior wealth, தருமார் – in order to bring, பாசிலை வாடா – green leaves that are fresh, வள்ளியங்காடு இறந்தோரே – one who went through the valli yam forest (வள்ளியம் – அம் சாரியை), வள்ளிக் கொடி, valli yam vines, Dioscorea pentaphilla (அம் – சாரியை, அழகிய காடுமாம்), யான் – I, ஏ – அசை நிலை, an expletive, தோடு ஆர் எல் வளை – stacked beautiful bright bangles, ஞெகிழ – slipping down, ஏங்கி – yearning, பாடு அமை சேக்கையில் – on an arranged bed, படர் கூர்ந்திசின் – I am distressed greatly (சின் – தன்மை அசை, an expletive of the first person), ஏ – அசை நிலை, an expletive, அன்னள் அளியள் என்னாது – without considering that she’s pitiable, மா மழை இன்னும் – still, பெய்ய முழங்கி மின்னும் – black clouds fall as rain with loud thunder and lightning, தோழி – my friend, என் இன் உயிர் குறித்து – targeting my sweet life, ஏ – ஈற்றசை, an expletive that is at the end
குறுந்தொகை 217,
தங்கால் முடக்கொல்லனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
‘தினை கிளி கடிக எனின் பகலும் ஒல்லும்
இரவு நீ வருதலின் ஊறும் அஞ்சுவல்,
யாங்குச் செய்வாம் எம் இடும்பை நோய்க்கு’ என,
ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து,
ஓங்கு மலை நாடன் உயிர்த்தோன் மன்ற, 5
ஐதே காமம், யானே,
‘கழி முதுக்குறைமையும் பழியும்’ என்றிசினே.
Kurunthokai 217,
Thangāl Mudakkollanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
I said to him, “If mother tells
us to go and chase parrots in
the millet field during the day,
a meeting will be possible.
Since you come at night,
we worry about the difficulties
on the path.
What can be done about this
suffering caused by love?”
The man from the country with
lofty mountains, thought about
something and sighed in reply.
Love is delicate. I said to him,
“Your thinking is truly wise,
but it will come with blame.”
Notes: இற்செறிப்பு முதலிய காவல் மிகுதியால், தலைவனுடன் நீ உடன்போக்கில் செல்லக்கடவை என்று தோழி குறிப்பால் தலைவியிடம் கூறியது. கிளி கடி: அகநானூறு 118 – குரல் ஏனல் கிளி கடி பாடலும் ஒழிந்தனள், அகநானூறு 194 – கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும், குறுந்தொகை 142 – புனக் கிளி கடியும் பூங்கண் பேதை, குறுந்தொகை 198 – படுகிளி கடிகம் சேறும், குறுந்தொகை 217 – தினை கிளி கடிக எனின், குறுந்தொகை 291 – ஏனல் படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே இசையின் இசையா இன்பாணித்தே, குறுந்தொகை 360 – ஏனல் உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே, பதிற்றுப்பத்து 78 – மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலிக் கிளி கடி மேவலர் புறவுதொறும் நுவல. மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17). சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).
Meanings: தினை கிளி கடிக எனின் – if we are told ‘go and chase the parrots that come to eat millet in the field’, Italian millet, Setaria italicum (said mother), பகலும் ஒல்லும் – possible if it is daytime, இரவு நீ வருதலின் – since you come at night, ஊறும் அஞ்சுவல் – I am worried about your difficulties on the path (அஞ்சுவல் – தன்மையொருமை வினைமுற்று), யாங்குச் செய்வாம் – what can we do, எம் இடும்பை நோய்க்கு – for this love affliction, என – thus, ஆங்கு யான் கூறிய அனைத்திற்கு – after what I said there, பிறிது செத்து – thinking about something different, ஓங்கு மலை நாடன் – the lord of the tall mountains, உயிர்த்தோன் – he sighed, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, ஐது – delicate, astonishing, beautiful, ஏ – அசை நிலை, an expletive, காமம் – love affliction, யான் – me, ஏ – அசை நிலை, an expletive, கழி முதுக்குறைமையும் – it is very intelligent to do what you think (உம்மை – அசை நிலை), பழியும் – and reason for blame (உம்மை – அசை நிலை), என்றிசின் – I said (சின் – தன்மை அசை நிலை, an expetive of the first person), an expletive, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 218,
கொற்றனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்குக்
கடனும் பூணாம், கைந்நூல் யாவாம்,
புள்ளும் ஓராம், விரிச்சியும் நில்லாம்,
உள்ளலும் உள்ளாம் அன்றே தோழி,
உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின், தம்மின்று 5
இமைப்பு வரை அமையா நம்வயின்
மறந்து, ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே.
Kurunthokai 218,
Kotranār, Pālai Thinai – What the heroine said to her friend
O friend! He is the life of my
life. I cannot be away from
himeven for a wink of time.
If he is able to forget me
and capable of staying away,
I will not make offerings
to the victorious Kotravai
in the mountain ranges with
clefts and caves, nor tie ritual
thread on my wrist, nor listen
to omens, nor think about him,
nor wait for good words from
soothsayers.
Notes: தலைவனின் பிரிவினால் தலைவி ஆற்றாள் என வருந்திய தோழிக்குத் தலைவி உரைத்தது. விரிச்சி: நற்றிணை 40 – விரிச்சி நிற்ப, குறுந்தொகை 218 – விரிச்சியும் நில்லாம், புறநானூறு 280 – விரிச்சி ஓர்க்கும், முல்லைப்பாட்டு 11 – விரிச்சி நிற்ப. சூலிக்கு (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை, தமிழண்ணல் உரை – கொற்றவைக்கு, இரா. இராகவையங்கார் உரை – கொற்றவைக்கு, உ. வே. சாமிநாதையர் உரை – துர்க்கைக்கு.
Meanings: விடர் முகை – mountain clefts, mountain caves, அடுக்கத்து – on the mountain ranges, விறல் கெழு சூலிக்கு – to the victorious goddess Kotravai, to the mighty goddess Kotravai, கடனும் பூணாம் – I will not make offerings, கைந்நூல் யாவாம் – I will not tie threads on my hands, புள்ளும் ஓராம் – I will not listen to omens, விரிச்சியும் நில்லாம் – I will not stand and wait for omens, உள்ளலும் உள்ளாம் – I will not think about him, அன்று, ஏ – அசை நிலைகள், expletives, தோழி – O friend, உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின் – since he’s the life of my life, தம்மின்று – without him, இமைப்பு வரை – even without a wink’s time, அமையா – suffering due to separation, நம்வயின் – regarding us, உருபு மயக்கம், மறந்து – forgetting, ஆண்டு – there (where he went), அமைதல் – to stay, வல்லியோர் – the man who is capable, மாட்டு – for him, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 219,
வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார், நெய்தற் திணை – தலைவி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பயப்பு என் மேனியதுவே, நயப்பவர்
நார் இல் நெஞ்சத்து ஆர் இடை அதுவே,
செறிவும் சேண் இகந்தன்றே, அறிவே
ஆங்கண் செல்கம் எழுகென ஈங்கே
வல்லா கூறி இருக்கும் முள் இலைத் 5
தடவு நிலைத் தாழைச் சேர்ப்பர்க்கு
இடம் மன் தோழி, என் நீரிரோ எனினே.
Kurunthokai 219,
Vellūr Kilār Makanār Vennpoothiyār, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
Pallor is on my body, and my
love is in his heart with no
compassion.
My restraint has left me and
gone far away, but my thinking
that tells me to go, stays here,
saying it is impossible to leave.
If the lord of the seashore,
where thālai trees grow with
thick trunks and thorny leaves,
can ask me about my situation,
that would be the perfect thing.
Notes: தலைவன் சிறைப்புறத்தே வந்து நிற்பதை அறிந்த தலைவி, தன் துன்ப மிகுதியை அவன் உணரும் வண்ணம் தோழிக்குக் கூறுவாளாகய்க் கூறியது. நார் இல் நெஞ்சம் (2) – தமிழண்ணல் உரை, உ. வே. சாமிநாதையர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை ஆகியவற்றில் – தலைவரின் அன்பற்ற நெஞ்சம், இரா. இராகவையங்கார் உரை – என் நாரில் நெஞ்சம், நற்றிணை 269ஆம் பாடலில் உள்ள ‘அதனினுங் கொடிதே…..வாரா என் நாரில் நெஞ்சம்’ என்னும் வரிகளை எடுத்துக்காட்டாக காட்டுகின்றார். மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).
Meanings: பயப்பு – pallor, என் – my, மேனியது – on it, ஏ – அசை நிலை, an expletive, நயப்பு – love, அவர் நார் இல் நெஞ்சத்து – in his heart with no compassion, ஆர் இடை – difficult place, அது – that, ஏ – அசை நிலை, an expletive, செறிவும் – my restraint, my patience, சேண் – distance, இகந்தன்று – it has gone, ஏ – அசை நிலை, an expletive, அறிவு – my intelligence, my thinking, ஏ – அசை நிலை, an expletive, ஆங்கண் செல்கம் எழுகென – it tells me to rise up and go there, ஈங்கே வல்லா கூறி இருக்கும் – telling me impossible things and staying here, முள் இலை – thorny leaves, தடவு நிலை – thick trunks, bent trunks, தாழை – thālai trees, Pandanus odoratissimus, சேர்ப்பர்க்கு இடம் – place of the lord of the seashore, மன் – அசை நிலை, an expletive, தோழி – my friend, என் நீரிரோ எனின் – if he asks what state I am in, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 220,
ஒக்கூர் மாசாத்தியார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பழ மழைக் கலித்த புதுப் புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை,
வெருகு சிரித்தன்ன பசு வீ மென் பிணிக்
குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின் 5
வண்டு சூழ் மாலையும் வாரார்,
கண்டிசின் தோழி, பொருள் பிரிந்தோரே.
Kurunthokai 220,
Okkūr Māsāthiyār, Mullai Thinai – What the heroine said to her friend
Look my friend!
Past rains have produced new millet in
the field, stags have grazed the grains
and trimmed the stalks leaving millet
stubble with tips, and delicate jasmine
flowers have blossomed from tight buds
in the forest, appearing like the teeth of
laughing wildcats.
My man with a bee-swarming garland
has not returned from his wealth-seeking
trip.
Notes: பருவ வரவின்கண் தலைவி தோழிக்கு உரைத்தது. காட்டுப் பூனையின் பற்களைப் போன்ற முல்லை அரும்பு: அகநானூறு 391 – பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன வரி மென் முகைய, குறுந்தொகை 220 – முல்லை வெருகு சிரித்தன்ன பசு வீ மென் பிணி குறு முகை அவிழ்ந்த, குறுந்தொகை 240 – வெருக்குப்பல் உருவின் முல்லையொடு, புறநானூறு 117 – பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப் பாசிலை முல்லை முகைக்கும். பாவை இருவி (2-3) – உ. வே. சாமிநாதையர் உரை – நுனியை உடைய கதிர் அரிந்த தாள். சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).
Meanings: பழ மழை – old rain, கலித்த – flourishing, புதுப்புன வரகின் – of millet in the new field, Common millet, Paspalum scrobiculatum, இரலை மேய்ந்த – male deer grazed, குறைத்தலைப் பாவை இருவி – millet stubble got reduced, சேர் மருங்கில் – joined nearby, பூத்த முல்லை – bloomed jasmine, Jasminum sambac, வெருகு சிரித்தன்ன – like wildcat laughter, பசு வீ – fresh flowers, மென் பிணி – delicately held, குறு முகை அவிழ்ந்த – small buds opened, நறு மலர் – fragrant flowers, புறவின் – in the mullai land, in the forest, வண்டு சூழ் மாலையும் – garland swarmed with bees, வாரார் – he does not come, கண்டிசின் தோழி – look my friend – see this (இசின் – முன்னிலை அசை, an expletive of the second person), பொருள் – wealth, பிரிந்தோர் – one who has separated, ஏ – அசை நிலை, an expletive