குறுந்தொகை 221,
உறையூர் முதுகொற்றனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அவரோ வாரார், முல்லையும் பூத்தன,
பறி உடைக் கையர் மறி இனத்து ஒழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்,
ஆடுடை இடைமகன் சென்னிச்
சூடிய எல்லாம் சிறு பசு முகையே. 5
Kurunthokai 221,
Uraiyūr Muthukotranār, Mullai Thinai – What the heroine said to her friend
He has not come back,
but jasmine has blossomed.
Leaving others who carry palm
fronds as rain guards to care
for their herd with young,
a goat herder comes with milk
and leaves with milk-rice, and
all he has in his hair are tiny,
fresh jasmine buds.
Notes: பருவ வரவின்கண் ‘நீ ஆற்றியிருக்க வேண்டும்’ என வற்புறுத்திய தோழியிடம் தலைவி கூறியது. பறி (2) – உ. வே. சாமிநாதையர் உரை – இடையர்கள் மழைக்காகத் தலையில் கவிழ்த்துக் கொள்ளும் ஒரு வகைக் கருவி. இது பனை ஓலையால் செய்யப்பட்டது. கூழொடு (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாற்சோரோடே, உ. வே. சாமிநாதையர் உரை – பாற்சோற்றைப் பெற்று, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – உணவு, இழிந்தாருண்ணும் கூழுமாம். இடைமகன் சென்னிச் சூடிய எல்லாம் சிறு பசு முகையே (4-5) – இரா. இராகவையங்கார் உரை – தான் சூடலாகாமை குறித்ததாம்.
தமிழண்ணல் உரை – பாலைத் தந்து உணவைப் பெறுவது பண்டமாற்று. உ.
வே. சாமிநாதையர் உரை – மேய்ப்பவர்கள் மேய்ச்சல் நிலத்தில் தங்க இடையன் இடையன் பாலை வீட்டிற்குக் கொணர்ந்து கொடுத்து அவர்களுக்குப் பால் சோற்றைக் கொண்டு சென்றான். பாலை விற்கும் பொருட்டு வந்த இடையன் ஊரில் அதனை விற்று விட்டு அதற்கு விலையாக உணவிற்குரிய தானியத்தைப் பெற்றுச் சென்றான் எனலும் உண்டு. Barter is mentioned in Akanānūru 60, 61, 126, 140, 245, 296, 390, Natrinai 183, Kurunthokai 221, 269, Ainkurunūru 47, Porunarātruppadai 214-215, 216-7, Pattinappālai 28-30, and Malaipadukādam 413-414. அகநானூறு 123 – இறவொடு வந்து கோதையொடு பெயரும், அகநானூறு 149 – பொன்னொடு வந்து கறியொடு பெயரும், குறுந்தொகை 221 – பாலொடு வந்து கூழொடு பெயரும். மறி – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).
Meanings: அவர் – he, ஓ – அசை நிலை, an expletive, இரங்கற் குறிப்புமாம், வாரார் – he has not come, முல்லையும் – the mullai flowers, Jasminum sambac, உம்மை சிறப்பு, பூத்தன – they have blossomed, பறி உடைக் கையர் – those carrying palm leaf mats used as umbrellas in their hands, மறி இனத்து ஒழிய – leaving behind the goat herd with young, பாலொடு வந்து – he comes with milk, கூழொடு பெயரும் – he leaves with rice gruel, ஆடுடை இடைமகன் – a herder with goats, சென்னி சூடிய எல்லாம் – all that he wore on his head, சிறு பசு முகையே – tender fresh buds (ஏ – பிரிநிலை, exclusion)
குறுந்தொகை 222,
சிறைக்குடி ஆந்தையார், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
தலைப் புணைக் கொளினே தலைப் புணைக் கொள்ளும்,
கடைப் புணைக் கொளினே கடைப் புணைக் கொள்ளும்,
புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின்
ஆண்டும் வருகுவள் போலும், மாண்ட
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகைச் 5
செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்
துளி தலைத் தலைஇய தளிர் அன்னோளே.
Kurunthokai 222,
Siraikkudi Ānthaiyār, Kurinji Thinai – What the hero said to his heart
If her friend holds on to the front
of the raft, she will do that.
If her friend holds on to the back
of the raft, she will do that.
If her friend lets go of the raft and
goes with the current, it appears
that she will do the same,
the young woman who is delicate
like a new sprout sprinkled with
rain drops, her big, cool eyes like the
water-dripping buds of rainy season’s
pichi flowers with red sides.
Notes: தலைவியும் தோழியும் ஆயமகளிருடன் நீராடும்பொழுது, அத் தோழியின்பால் தலைவிக்கு உளதாகிய ஒற்றுமையை அறிந்து, ‘இவளே தலைவியை நாம் பெறுதற்குரிய வாயில்’ என தலைவன் நினைந்தது. பித்திகம் (5) – உ. வே. சாமிநாதையர் உரை – பிச்சி மலர். ஒன்றித் தோன்றுந் தோழி (தொல்காப்பியம் அகத்திணை 39).
இரா. இராகவையங்கார் உரை – பித்திகத்துக்கு மாரிப் பருவமும் தளிர்க்குத் துளியும் போல இத் தோழி தலைவிக்கு இன்றியமையாமையும் நினைத்தானாம். தலைப் புணை, கடைப் புணை – உ. வே. சாமிநாதையர் உரை – புணைத்தலை, புணைக்கடை என்பவை மாறி நின்றன. புணையென்பது வாழைமரத்துண்டு, மிதக்கும் மரத்துண்டுகள் போன்றவை.
Meanings: தலைப் புணை – head of the raft, கொளின் – if she takes, ஏ – அசை நிலை, an expletive, தலைப் புணை – head of the raft, கொள்ளும் – she will take, கடைப் புணை – end of the raft, கொளின் – if she takes, ஏ – அசை நிலை, an expletive, கடைப் புணைக் கொள்ளும் – she will take the rear, புணை கைவிட்டு – if she lets go of the raft, புனலோடு ஒழுகின் – if she goes with the water, ஆண்டும் வருகுவள் போலும் – it appears that she’ll do that, மாண்ட – esteemed, fine, மாரிப் பித்திகத்து – of rainy season jasmine flowers, பிச்சிப்பூ, Jasminum grandiflorum, நீர் வார் – water dripping, கொழு முகை – big buds, செவ்வெரிந் – red sides, உறழும் – like, கொழுங்கடை – big on the sides, மழைக்கண் – big watery eyes, big moist eyes, துளி தலைத் தலைஇய – raindrop fallen on it (தலைஇய – சொல்லிசை அளபெடை), தளிர் அன்னோள் – she’s delicate like a sprout, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 223,
மதுரைக் கடையத்தார் மகனார் வெண்ணாகனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
‘பேரூர் கொண்ட ஆர்கலி விழவில்
செல்வாம் செல்வாம்’ என்றி, அன்றி வண்
நல்லோர் நல்ல பலவால் தில்ல
தழலும் தட்டையும் முறியும் தந்து, ‘இவை
ஒத்தன நினக்கு’ எனப் பொய்த்தன கூறி, 5
அன்னை ஓம்பிய ஆய் நலம்
என் ஐ கொண்டான், யாம் இன்னமால் இனியே.
Kurunthokai 223,
Mathurai Kadaiyathār Makanār Vennākanār, Kurinji Thinai – What the heroine said to her friend
You said again and again,
“Let’s go, let’s go,” to the
uproarious carnival celebrated
in the big city, on the day when
the wise people here spoke of
many omens.
He gave me a noise-producing
gadget and a rattle to chase
birds along with tender leaves,
saying they were perfect for me.
He uttered lies and took my fine
virtue that mother had protected.
Now I have become like this!
Notes: வரைபொருள் நிமித்தம் தலைவன் பிரிந்த காலத்தில் ‘நீ ஆற்றியிரு’ என வற்புறுத்திய தோழியிடம் தலைவி கூறியது. செல்வாம் செல்வாம் என்றி (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ இடையறாது வற்புறுத்துகின்றனை என்பாள் ‘செல்வாம் செல்வாம் என்றி’ என அடுக்கிக் கூறினாள். நல்ல (3) – உ. வே. சாமிநாதையர் உரை – நல்ல நிமித்தமாகிய வாய்ச்சொல்லை. இதனைப் புள் என்றும் விரிச்சி என்றும் கூறுவர். தழல் (4) – உ. வே. சாமிநாதையர் உரை – கையால் சுற்றிய காலத்துத் தன்னிடத்துப் பிறக்கும் ஓசையாற் கிளி முதலியவற்றை ஓட்டும் கருவி. குறிஞ்சிப்பாட்டு 43 – தழலும் தட்டையும் குளிறும் பிறவும். தட்டை (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை குறிஞ்சிப்பாட்டில் – மூங்கிலை குறுக்கே நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசை உண்டாகும்படி ஒன்றிலே தட்டும் கருவி. கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).
Meanings: பேரூர் கொண்ட – in the big city, ஆர்கலி விழவில் – to the uproarious festival, செல்வாம் செல்வாம் என்றி – you said many times, ‘let us go, let us go’ (என்றி – முன்னிலை ஒருமை), அன்றி வண் நல்லோர் – wise people on that day, நல்ல பலவால் – good few desired words (பலவால் – ஆல் அசைநிலை, an expletive), தில்ல – தில் காலத்தின்கண் வந்த இடைச் சொல், ஈறு திரிந்தது வந்தது, a particle which implies time or ஒழியிசை என்னும் பொருளில் வந்த இடைச் சொல், ஈறு திரிந்தது வந்தது, a particle which implies suggestion, தழலும் – and a slingshot (கழக அகராதி), and a a handheld noise-making whirling device (உ. வே. சா மற்றும் பொ. வே. சோ உரைகள்), தட்டையும் – and bamboo noise-making gadget, முறியும் தந்து – he also gave tender leaves (women rubbed leaf pastes on their breasts – Natrinai 9, Ainkurunūru 341), he also gave a garment with tender leaves, இவை ஒத்தன நினக்கு – that these are suitable for you, என – thus, பொய்த்தன கூறி – he uttered lies, அன்னை ஓம்பிய ஆய் நலம் – the fine virtue that mother protected, என் ஐ கொண்டான்– my lover took it, யாம் – me (தன்மைப் பன்மை, first person plural), இன்னமால் – I am like this (இன்னம் + ஆல், ஆல் – அசை நிலை), இனி, now, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 224,
கூவன் மைந்தனார், பாலைத் திணை – தலைவி சொன்னது
கவலை யாத்த அவல நீள் இடைச்
சென்றோர் கொடுமை எற்றித் துஞ்சா
நோயினும் நோய் ஆகின்றே, கூவல்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போலத் 5
துயர் பொறுக்கல்லேன் தோழி, நோய்க்கே.
Kurunthokai 224,
Koovan Mainthanār, Pālai Thinai – What the heroine said
My distress for my friend,
who is suffering on my
behalf,
is like that of a dumb man
who witnessed the suffering
of a tawny cow that fell into
a well at night.
It is worse than the pain that
has made me sleepless,
thinking of the cruelty of my
lover who went away to the
harsh wilderness, on long,
forked paths with yā trees.
Notes: தலைவன் பிரிந்த காலத்தில் ‘இவள் இறந்து படுவாளோ’ என்று கவலையுற்ற தோழி கேட்பத் தலைவி உரைத்தது. இதுமுன்னிலைப்புறமொழியாகத்தோழிக்குஅறிவுறுத்தியது. உயர்திணை ஊமன் (5) – உ. வே. சாமிநாதையர் உரை – ஊமன் என்பது அஃறிணையாகிய கோட்டானுக்கும் வருதலின் அதை விலக்க ‘உயர்திணை ஊமன்’ என்றாள். இது வெளிப்படை என்னும் இலக்கணத்தின் பாற்படும்.
Meanings: கவலை – forked paths, யாத்த – with yā trees, ஆச்சா மரம், Hardwickia binata, அவல நீள் இடை – long path, சென்றோர் – the man who went, my lover who went, கொடுமை எற்றி – thinking about his cruelty, துஞ்சா நோயினும் – more than painful sleeplessness, நோய் ஆகின்று – it is a painful disease, ஏ – அசை நிலை, an expletive, கூவல் – well, குரால் ஆன் – tawny colored cow, படு துயர் – suffering, இராவில் கண்ட உயர்திணை ஊமன் போல – like a dumb person who heard the cry at night, துயர் பொறுக்கல்லேன் – I am unable to bear the distress, தோழி – friend, நோய்க்கு – love distress, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 225,
கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கன்று தன் பய முலை மாந்த முன்றில்
தினை பிடி உண்ணும் பெருங்கல் நாட!
கெட்டிடத்து உவந்த உதவி கட்டில்
வீறு பெற்று மறந்த மன்னன் போல,
நன்றி மறந்து அமையாய் ஆயின், மென் சீர்க் 5
கலி மயில் கலாவத்தன்ன இவள்
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே.
Kurunthokai 225,
Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
O lord of the huge mountains
where an elephant eats millet in
the front yard of a house as her
calf suckles at her yielding breast!
If you are not like a proud king
who forgot gratitude to those who
helped him in bad times, but
remain constant in not forgetting the
favors you got from us, her thick, soft
hair like a delicate, lovely, clamoring
peacock’s plume, will be yours alone.
Notes: வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரியும் தலைவனிடம் தோழி கூறியது. கெட்டிடம் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கெட்ட இடம் என்பது, பெயரெச்சத் தகரம் கெட்டுக் கெட்டிடம் என ஆயிற்று.
Meanings: கன்று தன் பய முலை மாந்த – a calf suckles at her yielding breast, முன்றில் – front yard (முன்றில் – இல்முன்), தினை பிடி உண்ணும் – a female elephant is eating millet, Italian millet, Setaria italicum, பெருங்கல் நாட – O lord of the huge mountains, கெட்ட இடத்து – in bad times, உவந்த உதவி – help that is given, கட்டில் வீறு பெற்று மறந்த மன்னன் போல – like a king seated proudly on his throne who forgot, நன்றி மறந்து அமையாய் ஆயின் – if you don’t forget gratitude, மென் சீர்க் கலி மயில் – delicate lovely clamoring peacock, delicate lovely proud peacock, கலாவத்தன்ன – like the feathers, like a plume (கலாவத்து – கலாவம், அத்து சாரியை), இவள் ஒலி மென் கூந்தல் – her thick, soft hair, உரியவால் – will rightfully belong (ஆல் அசைநிலை, an expletive), நினக்கு – to you, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 226,
மதுரை எழுத்தாளனார் சேந்தம்பூதனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பூவொடு புரையும் கண்ணும், வேய் என
விறல் வனப்பு எய்திய தோளும், பிறை என
மதி மயக்குறூஉ நுதலும் நன்றும்
நல்ல மன், வாழி தோழி, அல்கலும்
தயங்கு திரை பொருத தாழை வெண்பூக் 5
குருகு என மலரும் பெருந்துறை
விரிநீர்ச் சேர்ப்பனொடு, நகாஅ ஊங்கே.
Kurunthokai 226,
Mathurai Eluthālanār Sēnthampoothanār, Neythal Thinai – What the heroine said to her friend
Before I laughed with the lord
of the wide ocean with vast shores,
where, every night glittering waves
batter thālai trees whose blossoms
look like white herons,
my flower-like eyes, bamboo-like pretty
arms, and forehead that was mistaken
for the crescent moon, were truly fine,
O friend.
Notes: தலைவன் வரை பொருள் ஈட்டப் பிரிந்த காலத்தே, தலைவி ஆற்றாள் என வருத்திய தோழியிடம் தலைவி உரைத்தது.
இரா. இராகவையங்கார் உரை – தாழை வெண்பூ குருகென மலரும் பெருந்துறை என்றதனால் தாழை உண்மையில் பூத்துள்ளது. குருகென்று மயங்கிக் கொள்ளப்பட்டு ஒருவரும் எடுக்க முயலாமையால் சூடாது கழிந்தாற்போல் தலைவன் தன்னிலை உண்மையின் உணராமையானும் வரைய முயலாமையானும் தான் அவனாற் துய்க்கப்படாது கழிவலோ என்பது தலைவி குறித்ததாகும். விரிநீர் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடல், அன்மொழித்தொகை. நகாஅ – நகுவதற்கு என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).
Meanings: பூவொடு புரையும் கண்ணும் – eyes that are like flowers, வேய் என – bamboo-like, விறல் வனப்பு எய்திய தோளும் – and the victorious beautiful arms, பிறையென மதி மயக்குறூஉ நுதலும் – and forehead like that gets mistaken for the moon (மயக்குறூஉ – இன்னிசை அளபெடை), நன்றும் நல்ல – good, மன் – கழிவுக் குறிப்பு, what was in the past, வாழி – அசை நிலை, an expletive, may you live long, தோழி – O friend, அல்கலும் – during nights, தயங்கு திரை பொருத – bright waves hitting, swaying waves hitting, தாழை வெண்பூக் குருகு என மலரும் – thālai trees (Pandanus odoratissimus) put out blossoms that are like white herons/egrets/storks, பெருந்துறை – big shore, விரி நீர்ச் சேர்ப்பனொடு – with the lord of the wide ocean shore, நகாஅ – laughing (இசைநிறை அளபெடை), ஊங்கு – before, ஏ – ஈற்றசை
குறுந்தொகை 227,
ஓதஞானியார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பூண் வனைந்தன்ன பொலஞ்சூட்டு நேமி
வாள் முகம் துமிப்ப, வள் இதழ் குறைந்த
கூழை நெய்தலும் உடைத்து, இவண்
தேரோன் போகிய கானலானே.
Kurunthokai 227,
Ōthagnāniyār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
Chopped by the sword-sharp,
golden rims of his chariot
wheels,
waterlilies were ruined and
their petals shredded, as he
went through the seashore.
Notes: அல்லகுறிப்பட்டு மறுநாள் வந்த தலைவன் மறைவில் இருப்ப, அவன் முதல் நாள் வந்ததை தோழி தலைவிக்கு உணர்த்தியது.
பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவன் முதல் நாள் இரவு தலைவியைக் காணாது மீண்டதற்கு அவன் குறி வாய்ப்பச் செய்யாமையே காரணம் ஆவதன்றித் தலைவியின் தவறு அன்று. அவள் ஊக்கத்துடன் எதிர்நோக்கியே இருந்து வருந்தினாள் என்று அவனுக்கு குறிப்பால் உணர்த்தியவாறாயிற்று.
இரா. இராகவையங்கார் உரை – வருதேர் நேமியால் நெய்தல் குறைதல் கூறாது போகிய போது வறியதனால் அவன் மனஞ் சோர்ந்து ஊர்ந்தது குறித்தாளாம். இங்கனம் கொள்ளாக்கால் தலைவிக்குத் தழையும் பூவும் நல்க இருக்கும் நெய்தலைச் சிதைய ஊர்ந்தான் எனப்பட்டு அருள் இலனும் அன்பு இலனும் ஆவன் தலைவன் என்க.
Meanings: பூண் வனைந்தன்ன – with rims that are set, பொலம் சூட்டு நேமி – gold-rimmed wheel, வாள் முகம் துமிப்ப – sword-like edges cut, வள் இதழ் குறைந்த – reduced dense/splendid petals, கூழை – chopped, reduced, நெய்தலும் உடைத்து – has waterlily flowers, blue waterlily, Nymphaea odorata, or white waterlily, Nymphaea lotus alba, இவண் – here, தேரோன் – one riding the chariot, போகிய – went, கானலான் – on the seashore, in the grove, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 228,
செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை
குருகு உளர் இறகின் விரிபு தோடு அவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்,
திரை வந்து பெயரும் என்ப, நம் துறந்து
நெடுஞ்சேண் நாட்டார் ஆயினும், 5
நெஞ்சிற்கு அணியர் தண் கடல் நாட்டே.
Kurunthokai 228,
Seythi Valluvar Perunchāthanār, Neythal Thinai – What the heroine said to her friend
Although he left me to be in a very
distant country, he was still close
to my heart.
In our small village near a seashore
grove,
…………..where thālai trees send
…………..down cascading roots, and
…………..their mature, plump buds
…………..open, looking like wings
…………..of herons spread for preening,
waves from the cool seas of his land
come up to our front yards and leave.
Notes: தலைவனுடன் இல் வாழ்க்கை நடத்திய தோழியை நோக்கி ‘நீ வரைவு நிகழும்வரையிலும் நன்கு ஆற்றியிருந்தனை’ என்று தோழி கூறிய பொழுது அதற்குத் தலைவி தான் ஆற்றியிருந்ததற்குக் காரணம் கூறியது.
Meanings: வீழ் தாழ் தாழை – hanging roots of thālai trees, Pandanus odoratissimus, ஊழுறு கொழு முகை – mature thick buds, குருகு உளர் – heron/egret/stork preening, இறகின் விரிபு – like wings opened (இறகின் – இன் உருபு ஒப்புப் பொருளது), தோடு அவிழும் – petals open, கானல் நண்ணிய – near the seaside grove, சிறுகுடி – small settlement, small village, முன்றில் – front yard (முன்றில் – இல்முன்), திரை வந்து பெயரும் – waves come and go, என்ப – அசை நிலை, an expletive, நம் துறந்து – leaving me, abandoning me, நெடுஞ்சேண் நாட்டார் ஆயினும் – even though he is in a very distant country, நெஞ்சிற்கு அணியர் – he is close to my heart, தண் கடல் நாட்டு – country with a cool ocean, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 229,
மோதாசானார், பாலைத் திணை – கண்டோர் சொன்னது
இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்
புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்,
காதல் செவிலியர் தவிர்ப்பவும், தவிராது
ஏதில் சிறு செரு உறுப மன்னோ,
நல்லை மன்றம்ம பாலே, மெல்லியல் 5
துணை மலர்ப் பிணையல் அன்ன, இவர்
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே.
Kurunthokai 229,
Mōthāsanār, Pālai Thinai – What the bystanders said
He used to pull her five-part braid.
She used to twist and pull his dry hair
and run away swiftly.
Their doting foster mothers intervened,
but could not stop their little battles.
Fate! You are good indeed! You made
them happy in union like two delicate
flowers woven in a garland.
Notes: தலைவனையும் தலைவியையும் முன்பு அறிந்தோர், சுரத்தில் அவர்களைக் கண்டபின் தம்முள் கூறியது. அம்ம (5) – உ. வே. சாமிநாதையர் உரை – வியப்பு இடைச்சொல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கேட்பித்தற் பொருட்டு. மன்றம்ம (5) – உ. வே. சாமிநாதையர் உரை – மன்ற அம்ம என்பது மன்றம்ம என வந்தது. விகாரம். மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17). மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).
Meanings: இவன் இவள் ஐம்பால் பற்றவும் – he pulled her five part plait, இவள் இவன் புன்தலை ஓரி வாங்குநள் – she used to twist his dry/thin/dirty hair, and pull it, பரியவும் – running away swiftly, காதல் செவிலியர் தவிர்ப்பவும் – even when their loving foster mothers intervened, தவிராது – without stopping, ஏதில் சிறு செரு உறுப – they fought unfriendly little battles with each other, மன் – கழிவுக் குறிப்பு, what was in the past, ஓ – அசை நிலை, நல்லை மன்ற – you are certainly good, (மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty), அம்ம – வியப்பு இடைச்சொல், a particle signifying surprise, you listen, பாலே – O fate, மெல்லியல் – delicate natured, துணை மலர்ப் பிணையல் அன்ன – like two flower garlands that are entwined, two flowers that are woven in a garland (துணை மலர் – ), இவர் மணம் மகிழ் இயற்கை காட்டியோய் – you made them be happy in marriage, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 230,
பாண்டியன் அறிவுடைநம்பி, நெய்தற் திணை – தோழி சொன்னது
அம்ம வாழி தோழி, கொண்கன்
தான் அது துணிகுவன் அல்லன், யான் என்
பேதைமையால் பெருந்தகை கெழுமி
நோதகச் செய்தது ஒன்று உடையேன் கொல்லோ?
வயச்சுறா வழங்கு நீர் அத்தம் 5
சின்னாள் அன்ன வரவு அறியானே.
Kurunthokai 230,
Pāndiyan Arivudainampi, Neythal Thinai – What the heroine’s friend said
May you live long, my friend!
In my naivete, did I take
liberties and do something to
hurt the lord of the shores?
He who does not have the will
to stay away, has not come the
past few days, like he used to,
braving waters with mighty sharks.
Notes: குறை நயப்பித்தது. தன்பாற் குறை இரந்த தலைவனை ஏற்றுக்கொள்ளும்படி தோழி கூறியது.
Meanings: அம்ம – இடைச்சொல், a particle, listen to me, வாழி – அசை நிலை, may you live long, தோழி – my friend, கொண்கன் – the lord of the shores, தான் அது துணிகுவன் அல்லன் – he does not have the courage, he is not strong to do that, யான் – me, என் பேதைமையால் – because of my naive nature, because of my ignorance, பெருந்தகை கெழுமி – have taken great liberties, நோதகச் செய்தது ஒன்று – a matter that hurt him, உடையேன் கொல் – did I do it (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt),, ஓ – அசை நிலை, an expletive, வயச்சுறா – strong sharks, வழங்கு நீர் – water where they frequent, அத்தம் – path, சின்னாள் அன்ன – like he used to come for a few days, வரவு அறியான் – he has not come, ஏ – அசை நிலை, an expletive