குறுந்தொகை 231,
பாலைபாடிய பெருங்கடுங்கோ, மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஓரூர் வாழினும் சேரி வாரார்,
சேரி வரினும் ஆர முயங்கார்,
ஏதிலாளர் சுடலை போலக்
காணாக் கழிப மன்னே, நாண் அட்டு
நல் அறிவு இழந்த விழுந்த காமம், 5
வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே.
Kurunthokai 231,
Pālai Pādiya Perunkadunkō, Marutham Thinai – What the heroine said to her friend
He lives in the same town,
but does not come to our street.
Even if he comes to our street,
he does not embrace me with love.
Even when he sees me, he passes
by, as though he has seen a
cremation ground of strangers.
Love that has killed shame and
ruined reason has gone far away,
like an arrow shot from a bow.
Notes: தலைவனின் தூதாக வந்த தோழிக்கு வாயில் மறுத்தது. சேரி (1,2) – உ. வே. சாமிநாதையர் உரை – தெரு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தெரு. ஆர (2) – உ. வே. சாமிநாதையர் உரை – நன்றாக, மன நிறைவு உண்டாகும்படி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெஞ்சு பொருந்த, வேட்கைத் தீர. காணா (4) – செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.
Meanings: ஓரூர் வாழினும் – even though he lives in the same town, சேரி வாரார் – he does not come to our street, சேரி வரினும் – even when he comes to our street, ஆர முயங்கார் – he does not embrace me well, he does not embrace me with love, ஏதிலாளர் – strangers, சுடலை போல – like a cremation ground, காணாக் கழிப – even though he sees me he passes by (ignoring me), மன், ஏ – அசை நிலைகள், நாண் அட்டு – killing modesty, killing shame, நல் அறிவு இழந்த – good reasoning/intelligence has been lost, காமம் – love, வில் உமிழ் கணையின் – like an arrow shot from a bow (கணையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), சென்று சேண் பட– it goes far away and falls, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 232,
ஊண் பித்தையார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
உள்ளார் கொல்லோ தோழி, உள்ளியும்
வாய்ப்பு உணர்வு இன்மையின் வாரார் கொல்லோ,
மரல் புகா அருந்திய மா எருத்து இரலை
உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யாஅ வரி நிழல் துஞ்சும், 5
மா இருஞ்சோலை மலை இறந்தோரே?
Kurunthokai 232,
Oon Pithaiyār, Pālai Thinai – What the heroine’s friend said to her
Does he think about you, O friend?
Even if he thinks, will be be able to
come back until he’s finished with
what he has set out to do, the man
who crossed the mountain with huge
groves,
where a stag with a large neck, after
eating hemp plants, sleeps in the
meager shade of the remains of a yā
tree, after an elephant with feet that
look like large stone mortars, broke
and ate its branches?
Yes. He will return on time!
Notes: தலைவன் வினைவயின் பிரிந்த காலத்தில் ஆற்றாளாய தலைவிக்கு ‘நீ ஆற்றியிருக்க வேண்டும்’ என்பதுபடத் தோழி கூறியது. குறுந்தொகை 37 – பிடி பசி களைஇய பெருங்கை வேழம் மென் சினை யாஅம் பொளிக்கும், குறுந்தொகை 232 – உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வரி நிழல், குறுந்தொகை 255 – யாஅத்துப் பொரி அரை முழு முதல் உருவக் குத்தி மறங்கெழு தடக் கையின் வாங்கி உயங்கு நடைச் சிறுகண் பெரு நிரை உறு பசி தீர்க்கும் தட மருப்பு யானை, அகநானூறு 335 – யானை தன் கொல் மருப்பு ஒடியக் குத்திச் சினஞ்சிறந்து இன்னா வேனில் இன் துணை ஆர முளி சினை யாஅத்து, மலைபடுகடாம் 429 – உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்.
உ. வே. சாமிநாதையர் உரை – தனக்கு வேண்டிய உணவைப் போதிய அளவு உண்ட இரலை யாமரத்தின் அடியின்கண் வந்து துஞ்சுதலைப் பார்ப்பாராதலின் தமக்கு வேண்டிய வினையை நன்கு முடித்து ஈண்டு வந்து நின்னொடு இன்புறுவர் என்பது குறிப்பு. உள்ளார் கொல்லோ (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உள்ளார் கொல் என்ற வினா உள்ளுவர் என்னும் பொருள்பட நின்றது. வாய்ப்பு உணர்வு (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வினைமுற்றும் இடமறிதல், வினை முற்றாது மீள்வது அவர்க்குத் தகவு அன்று என்பாள் ‘உள்ளியும் வாரார்’ என்றாள்.
Meanings: உள்ளார் கொல் – does he think (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசை நிலை, an expletive, தோழி – O friend, உள்ளியும் – if he thinks, வாய்ப்பு உணர்வு இன்மையின் வாரார் கொல் – will he not come since he has not finished his work (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசை நிலை, an expletive மரல் புகா அருந்திய – ate the hemp plants, bowstring hemp, Sansevieria trifasciata, மா எருத்து இரலை – a stag with big neck, உரல் கால் யானை – an elephant with legs like the mortar/pounding stone, ஒடித்து உண்டு எஞ்சிய – broke and ate and left over, யாஅ வரி நிழல் துஞ்சும் – sleeps in the dappled shade of the yā tree, ஆச்சா மரம், Hardwickia binate (யாஅ – இசை நிறை அளபெடை), மா இருஞ்சோலை – dark, very big groves, மலை இறந்தோர் – one who went on the mountains, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 233,
பேயனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப் பாகனிடம் சொன்னது
கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறு குழி
கொன்றை ஒள் வீ தாஅய்ச் செல்வர்
பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன,
கார் எதிர் புறவினதுவே உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும், 5
வரை கோள் அறியாச் சொன்றி
நிரை கோல் குறுந்தொடி தந்தை ஊரே!
Kurunthokai 233,
Pēyanār, Mullai Thinai – What the hero said to the charioteer
My beloved, the young woman with
thick stacked, small bangles, comes
from a woodland town,
where small pits with wide openings
are dug to pull out kavalai yams,
and bright, yellow kondrai blossoms
drop into them, looking like the
treasure chests of rich people, filled
with gold, their lids open.
Her father gives alms with water to the
wise, and donates leftover rice to all.
Notes: வரையாது சென்று வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது.
பொ. வே. சோமசுந்தரனார் உரை – களவு வெளிப்பட்ட பின்னர் வரைந்து கொள்ளாதே வினைமேற் சென்ற தலைவன் வினைமுற்றி மீண்டு வரும்பொழுது தலைவியின் ஊரைப் பாகற்குக் காட்டிக் கூறியது. இச் செய்யுளைக் கற்பின்கண் பிரிவாகக் கருதுவாரும் உளர்.
Meanings: கவலை – kavalai yam, a kind of yam, கெண்டிய – dug up, அகல்வாய் – big-mouthed, wide-mouthed, சிறு குழி – small pits, small holes in the ground, கொன்றை – (the flowers are golden yellow), சரக் கொன்றை, Indian laburnum, golden shower tree, Cassia Fistula, ஒள் – bright, வீ – flowers, தாஅய் – dropped (இசைநிறை அளபெடை), செல்வர் – rich people, பொன் பெய் பேழை – boxes with gold placed in them, மூய் திறந்தன்ன – like lid is opened, கார் – rainy season, எதிர் – accepted, புறவினது – in the woodlands, ஏ – அசை நிலை, an expletive, உயர்ந்தோர்க்கு – to the wise (உ. வே. சா. – பெரியவர்களுக்கு, பொ. வே. சோமசுந்தரனார் – அந்தணர்களுக்கு), நீரொடு சொரிந்த – pours with water, gives with water, மிச்சில் – remainder, யாவர்க்கும் – to everybody, வரை கோள் அறியா – not knowing to hinder, not knowing to have limits, சொன்றி – cooked rice, நிரை – rows of, stacked, கோல் – rounded, thick, குறுந்தொடி – a woman wearing small bangles (அன்மொழித்தொகை), தந்தை ஊர் – her father’s town, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 234,
மிளைப்பெருங்கந்தனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
சுடர் செல் வானம் சேப்பப் படர் கூர்ந்து
எல் அறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார் மயங்கியோரே,
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும்
பெரும் புலர் விடியலும் மாலை, 5
பகலும் மாலை, துணை இலோர்க்கே.
Kurunthokai 234, Milaiperunkanthanār, Mullai Thinai – What the heroine said to her friend
They are confused, those who say
that evening time is when suffering
increases as the sun goes away,
the sky turns red, and mullai flowers
bloom as light fades.
The break of dawn when crested
roosters crow in the big town,
and broad daylight hours are also
like painful evenings, to those who
are separated from loved ones.
Notes: பருவ வரவின்கண் தோழிக்குத் தலைவி உரைத்தது.
Meanings: சுடர் செல் – the sun goes away, வானம் சேப்ப – the sky becomes red, படர் கூர்ந்து – sorrow increases, எல் அறு பொழுதின் – at the time when light goes away, முல்லை மலரும் மாலை – evenings when jasmine blossoms, Jasminum sambac, என்மனார் – they say so, மயங்கியோர் – those who are confused, ஏ – அசை நிலை, an expletive, குடுமிக் கோழி – cocks/roosters with combs, நெடு நகர் – tall house, big town, இயம்பும் – they crow in the big town, they crow in the big house (பொ. வே. சோமசுந்தரனார் உரை- நெடிய நகரத்தின்கண், நெடிய வீடுமாம்), பெரும் புலர் விடியலும் மாலை – early mornings are also like evenings, பகலும் மாலை – day times are also evenings, துணை – partners, இலோர்க்கு – to those who do not have, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 235,
மாயெண்டனார், பாலைத் திணை – தலைவன் வாடைக் காற்றிடம் சொன்னது
ஓம்புமதி, வாழியோ வாடை, பாம்பின்
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவிக்
கல் உயர் நண்ணியதுவே, நெல்லி
மரை இனம் ஆரும் முன்றில்
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே. 5
Kurunthokai 235,
Māyendanār, Pālai Thinai- What the hero said to the northerly winds
May you live long,
O cold northerly wind!
My fine woman’s town
where marai deer herds
eat gooseberries from the
trees in front yards of huts
woven with grass, is near
the mountain
where pure, white waterfalls
drape down the summits
like hanging snake skins.
Please protect her.
Notes: களவுக் காலத்தில் வினைமேற் பிரிந்து சென்ற தலைவன் மீளும் பொழுது பாகன் கேட்ப வாடைக் காற்றிடம் கூறுதல். அகநானூறு327 – செவ் வரை கொழி நீர் கடுப்ப அரவின் அவ்வரி உரிவை அணவரும் மருங்கில்.
இரா. இராகவையங்கார் உரை – இன மரை உண்ணும் முற்றம் என்றது இவை கண்டு தான் தலைவனொடு கூடி வாழாமை கருதி நெஞ்சு நொந்து தலைவன் வரவு நோக்கி இருப்பாள் என்ற குறிப்பிற்று. மழைக் காலத்துக்குப் பிந்தியது வாடையாதலான் வற்றிச் சிறிதாக ஒழுகும் அருவியாதல் கருதி பாம்பின் தோல் கடுக்கும் என்றான். இதனால் ஒன்று மற்றொன்றாகத் தோன்றுதல் காட்டி வரைய இருக்கும் தன்னைத் தலைவி வேறாகக் கருதி வருந்துவாள் என்பது குறித்தான். மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26). மரை (4) – A kind of deer. The University of Madras Lexicon defines this as elk. However, there are no elks in South India. மரை நெல்லி உண்ணுதல்: அகநானூறு 69 – புல் இலைப் பராரை நெல்லியம் புளித் திரள் காய் கான மடமரைக் கண நிரை கவரும். அகநானூறு 399 – மையில் பளிங்கின் அன்ன தோற்றப் பல் கோள் நெல்லிப் பைங்காய் அருந்தி, மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம், குறுந்தொகை 235 – நெல்லி மரை இனம் ஆரும் முன்றில், புறநானூறு 170 – மரை பிரித்து உண்ட நெல்லி வேலி.
Meanings: ஓம்புமதி – protect her (மதி – முன்னிலை அசை, an expletive of the second person), வாழி – may you live long, ஓ – அசை நிலை, an expletive, வாடை – O cold northern wind, பாம்பின் – of snakes, தூங்கு தோல் – hanging skins, கடுக்கும் – like, தூ வெள் அருவி – pure white waterfalls, கல் உயர் – mountain top, நண்ணியது – it is nearby, it is there, ஏ – அசை நிலை, an expletive, நெல்லி – gooseberries, மரை இனம் – marai deer herd, ஆரும் – they eat, முன்றில் – front of the house, front yard (முன்றில் – இல்முன்), புல் – grass, வேய் – woven, குரம்பை – huts, நல்லோள் – the good woman’s, the beautiful woman’s, ஊர் – town, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 236,
நரிவெரூ உத்தலையார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது, தலைவி கூறுவதைப் போல்
விட்டென விடுக்கு நாள் வருக, அது நீ
நேர்ந்தனை ஆயின், தந்தனை சென்மோ,
குன்றத்து அன்ன குவவு மணல் அடைகரை
நின்ற புன்னை நிலம் தோய் படுசினை
வம்ப நாரை சேக்கும் 5
தண் கடல் சேர்ப்ப, நீ உண்ட என் நலனே.
Kurunthokai 236,
Nariverū Uthalaiyār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero, as the voice of the heroine
O lord of the cool shores
where a newly arrived stork
roosts on a ground-touching,
low branch of a punnai tree on
sand dunes as tall as mountains!
If you abandon me, you need to return
my virtue that you took, before you leave.
Notes: வரைவிடை வைத்துத் தலைவியை பிரிந்து செல்ல எண்ணிய தலைவன் தோழியை நோக்கி ‘இவளை வருந்தாது பாதுகாப்பாயாக’ என்று கூற, அவள் ‘நீ உண்ட நலனைத் தந்து செல்வாயாக’ என்று கூறியது. நம் நலம் தா என்று தோழி கேட்டல் மரபு. மாணலந் தாவென வகுத்தற்கண்ணும் (தொல்காப்பியம், கற்பியல் 9). தலைவிக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமையால், தலைவியின் நலனைத் தன் நலன் என்று தோழி குறிப்பிடுகிறாள் – தாயத்தின் அடையா ஈயச் செல்லா வினைவயின் தங்கா வீற்றுக் கொள்ளப்படா ”எம்” என வரூஉம் கிழமைத் தோற்றம் அல்ல ஆயினும் புல்லுவ உளவே. (தொல்காப்பியம், பொருளியல் 27).
தமிழண்ணல் உரை – இது நாடக வழக்கு. வழக்கறிஞர்கட்சிக்காரராகதம்மைஎண்ணிப்பேசுவதுபோன்றது. தலைவி கூற்று எனற்பாலது சிறிது மிகைப்படின், பண்பு கருதி தோழி கூற்றென வகுத்துள்ளனர். தோழியாகவே தோன்றும் உண்மைப் பாத்திரமாகவும் தலைவியின் குரலாக ஒலிக்கும் நிழற்பாத்திரமாகவும் இருவகைப்பட இருப்பதைப் பகுத்தறிய வேண்டும்.
பொ. வே. சோமசுந்தரனார் உரை – நலன் தந்து சேறல் நினக்கியலாதாற் போன்று நின் பிரிவின்கண் அவளை ஆற்றுவித்தலும் எனக்கியலாதாம் என்பது குறிப்பு. நலம் தா – என் நலன் என்றாள் தலைவிக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமைபற்றி. தலைவனிடம்நலம்தாஎனத்தோழிகூறும்மரபு, ‘மாணலம் தாவென வகுத்தற்கண்ணும் ‘ (தொல்காப்பியம், கற்பு 9) என்பதனால் பெறப்படும்.
Meanings: விட்டென விடுக்கு நாள் வருக – if the day comes that you abandon her and leave, அது நீ நேர்ந்தனை ஆயின் – if you are agreeable, if you make it happen, தந்தனை சென்மோ – return and then leave (மோ – முன்னிலை அசை, an expletive of the second person), குன்றத்து அன்ன குவவு மணல் – sand dunes that are like hills (குன்றத்து – குன்றம், அத்து சாரியை), அடைகரை நின்ற புன்னை – laurel tree that stood on the sand- filled shores, Laurel tree, Mast wood Tree, Calophyllum inophyllum, நிலம் தோய் படுசினை – land touching low branches, வம்ப நாரை சேக்கும் – newly arrived white stork resides, Ciconia ciconia, தண் கடல் சேர்ப்ப – O lord of the cool ocean (சேர்ப்ப – அண்மை விளி), நீ உண்ட என் நலன் – my virtue that you took (she means ‘her virtue that you took’), ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 237,
அள்ளூர் நன்முல்லையார், பாலைத் திணை – தலைவன் தேர்ப் பாகனிடம் சொன்னது
அஞ்சுவது அறியாது அமர் துணை தழீஇய
நெஞ்சு நப் பிரிந்தன்று ஆயினும், எஞ்சிய
கை பிணி நெகிழின் அஃது எவனோ, நன்றும்
சேய அம்ம இருவாம் இடையே,
மாக்கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு 5
கோள் புலி வழங்கும் சோலை
எனைத்து என்று எண்ணுகோ முயக்கிடை மலைவே.
Kurunthokai 237,
Allūr Nanmullaiyār, Pālai Thinai – What the hero said to his charioteer
Not knowing fear, my heart
has gone, desiring to embrace
my beloved.
But what good is that, without
these arms that are left behind,
unable to hold her tight?
The distance between us is vast,
and hindrances are many. How can
I count the numbers of the woods,
where murderous tigers
that roar like dark ocean waves,
rise up with strength and roam?
Notes: பொருள் முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனுக்கு உரைத்தது. ‘விரைந்து செலுத்துக’ எனக் குறிப்பால் உரைத்தது. வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.
Meanings: அஞ்சுவது அறியாது – not knowing fear, அமர் துணை தழீஇய – desiring to embrace my loving partner (தழீஇய – சொல்லிசை அளபெடை), நெஞ்சு நப் பிரிந்தன்று ஆயினும் – even if my heart separated from us, எஞ்சிய கை பிணி நெகிழின் – if the remaining arms loosen their tightness, if the remaining arms do not hold her tight, அஃது எவன் – what is the use of that, ஓ – அசை நிலை, an expletive, நன்றும் சேய – very big distance, அம்ம – அசை நிலை, an expletive, இருவாம் – the two of us, இடை – between, ஏ – அசை நிலை, an expletive, மாக்கடல் – dark ocean, huge ocean, திரையின் முழங்கி – roaring like the waves (திரையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), வலன் ஏர்பு – rising up with strength, கோள் புலி வழங்கும் சோலை – groves where killer tigers roam, எனைத்து என்று எண்ணுகு – how can I count their numbers, ஓ – அசை நிலை, an expletive, முயக்கிடை – for us to unite, for us to embrace, மலைவு – the hindrances, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 238,
குன்றியனார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பாசவல் இடித்த கருங்கால் உலக்கை
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி
ஒள் தொடி மகளிர் வண்டல் அயரும்
தொண்டி அன்ன என் நலம் தந்து,
கொண்டனை சென்மோ, மகிழ்ந நின் சூளே. 5
Kurunthokai 238,
Kundriyanār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
My womanly virtue that you
took is lovely like Thondi,
where young girls wearing
bright bangles play with little
sand houses on the banks of
beautiful paddy fields, leaving
behind their black pestles that
pound fresh rice.
Lord, return my virtue that you
took, and leave! And also, take
your promises with you!
Notes: பரத்தையிடமிருந்து மீண்டு வந்த தலைவன் தலைவியின் ஊடலை நீக்கும் பொருட்டு, தோழியின்பால் சூள் கூறித் தெளிவிக்க புகுகையில், தோழி அவனுக்கு வாயில் மறுத்தது. நம்நலம்தாஎன்றுதோழிகேட்டல்மரபு. மாணலந் தாவென வகுத்தற்கண்ணும் (தொல்காப்பியம், கற்பியல் 9). நெல் (2) – உ. வே. சாமிநாதையர் உரை – வயலுக்கு ஆகுபெயர். தலைவி கூறுவதுபோல் தோழி கூறுதல் – குறுந்தொகை 236ஆம் பாடலின் தமிழண்ணல் உரை – இது நாடக வழக்கு. வழக்கறிஞர்கட்சிக்காரராகதம்மைஎண்ணிப்பேசுவதுபோன்றது. தலைவி கூற்று எனற்பாலது சிறிது மிகைப்படின், பண்பு கருதி தோழி கூற்றென வகுத்துள்ளனர். தோழியாகவே தோன்றும் உண்மைப் பாத்திரமாகவும் தலைவியின் குரலாக ஒலிக்கும் நிழற்பாத்திரமாகவும் இருவகைப்பட இருப்பதைப் பகுத்தறிய வேண்டும். நலம் தா – என் நலன் என்றாள் தலைவிக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமைபற்றி. தலைவனிடம்நலம்தாஎனத்தோழிகூறும்மரபு, ‘மாணலம் தாவென வகுத்தற்கண்ணும் ‘ (தொல்காப்பியம், கற்பு 9) என்பதனால் பெறப்படும்.
Meanings: பாசவல் இடித்த கருங்கால் உலக்கை – black pounding rods that pound fresh rice, black pounding rods that pound rice that has not been fried (பாசவல் – நெல்லை வறாமல் இடித்துச் செய்த அவல்), ஆய் – beautiful, கதிர் நெல்லின் – of the paddy fields with paddy spears (நெல் – வயலுக்கு ஆகுபெயர்), வரம்பு அணை – on the ridges, banks, துயிற்றி – placed down, ஒள் தொடி மகளிர் – women with bright bangles, வண்டல் அயரும் – playing games, playing with little sand houses, தொண்டி அன்ன – like Thondi town, என் நலம் – my virtue, my beauty (the heroine’s virtue/beauty), தந்து – return, கொண்டனை – you take, சென்மோ – you leave (மோ – முன்னிலை அசை, an expletive of the second person), மகிழ்ந – O lord, நின் – your, சூள் – promises, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 239,
ஆசிரியர் பெருங்கண்ணனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
தொடி நெகிழ்ந்தனவே, தோள் சாயினவே,
விடும் நாண் உண்டோ தோழி, விடர் முகைச்
சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள்
நறும் தாது ஊதும் குறுஞ்சிறைத் தும்பி
பாம்பு உமிழ் மணியின் தோன்றும் 5
முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே?
Kurunthokai 239,
Āsiriyar Perunkannanār, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
My bangles have slipped. My arms
have become thin.
Is there any more modesty to lose,
O friend,
for the lord of the mountains with
spiny bamboo fences, where bees
with short wings, swarm pollen of
swaying glory lilies whose fragrance
spreads into crevices and caves,
appearing like gems spit by snakes?
Notes: வரைவு கடாயது.
உ. வே. சாமிநாதையர் உரை – காந்தளின் தாதை ஊதி அதன் மணம் எங்கும் பரவும்படி செய்யும் தும்பியைப் போல, என் நலன் நுகர்ந்து அலர் எங்கும் பரவச் செய்தான். காந்தளும்தும்பியும்பொருந்தியதுபாம்பும்மணியும்போலும்வெருவரும்தோற்றத்தைத்தந்ததுப்போலஎம்இருவர்நட்பும்அஞ்சுதற்குரியதாயிற்றுஎனவும்குறிப்புக்கள்தோன்றின.
இரா. இராகவையங்கார் உரை – முந்தூழ் மலை வேலி என்று முள்ளுடை மூங்கில் வேலி கூறியதனால் தலைவன் புகற்கரிய காவலுடைமை குறித்தாளாம். There is a convention that thunder ruins and kills snakes. Akanānūru 92, 119, 182, 202, 274, 323, 328, Kalithokai 45, 113, Kurunthokai 158, 190, 268, 391 and Natrinai 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, Puranānūru 17, 37, 58, 126, 211, 366 and 369 have similar descriptions of thunder ruining or killing snakes. There was this belief that snakes spit gems. Purananuru 294, Akananuru 72, 92, 138, 192, 372, Kurunthokai 239 and Natrinai 255, have references to snakes spitting gems.
Meanings: தொடி நெகிழ்ந்தன – bangles have slipped, தோள் சாயின – arms have become slender, விடும் நாண் உண்டோ தோழி – is there any more shyness to let go, is there any more modesty to lose (ஓகாரம் – எதிர்மறை), விடர் முகைச் சிலம்புடன் – in the crevices and caves of the mountains, கமழும் – spreads fragrance, அலங்கு – moving, குலைக் காந்தள் நறும் தாது ஊதும் – swarms on the fragrant pollen on clusters of malabar glory lilies, Gloriosa superba, குறுஞ்சிறைத் தும்பி – bees with short wings, பாம்பு உமிழ் மணியின் தோன்றும் – they appear like the gems that snakes spit (மணியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), முந்தூழ் வேலிய – with spiny bamboo fences, மலை கிழவோற்கு – for the lord of the mountain, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 240,
கொல்லன் அழிசியார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பனிப் புதல் இவர்ந்த பைங்கொடி அவரைக்
கிளிவாய் ஒப்பின் ஒளி விடு பன் மலர்
வெருக்குப்பல் உருவின் முல்லையொடு கஞலி
வாடை வந்ததன் தலையும், நோய் பொரக்
கண்டிசின் வாழி தோழி, தெண் திரைக் 5
கடல் ஆழ் கலத்தின் தோன்றி
மாலை மறையும், அவர் மணி நெடுங்குன்றே.
Kurunthokai 240,
Kollan Alisiyār, Mullai Thinai – What the heroine said to her friend
May you live long, my friend!
Look at this!
The northerly winds have arrived,
and on the winter bushes green vines
of avarai beans have spread,
their bright flowers that resemble
the beaks of parrots sway and flourish
along with mullai blossoms that are
like the teeth of wild cats.
On top of that, to add to my distress,
his tall mountain that yields gems is
disappearing from my view in the
evening hours, like an ocean-plying
ship disappearing into the clear waves.
Notes: வரைப்பொருள் ஈட்டத் தலைவன் பிரிந்த பொழுது தலைவி ஆற்றாள் என கவன்ற தோழியிடம் தலைவி கூறியது. காட்டுப் பூனையின் பற்களைப் போன்ற முல்லை அரும்பு – குறுந்தொகை 220 – முல்லை வெருகு சிரித்தன்ன பசு வீ மென் பிணி குறு முகை அவிழ்ந்த, குறுந்தொகை 240 – வெருக்குப்பல் உருவின் முல்லையொடு, அகநானூறு 391 – பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன வரி மென் முகைய, புறநானூறு 117 – பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப் பாசிலை முல்லை முகைக்கும். சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).
Meanings: பனிப் புதல் – cold season bushes, wet bushes, இவர்ந்த – spread, பைங்கொடி அவரை – green avarai creeper, Field beans, dolichos lablab, கிளிவாய் ஒப்பின் – like the beaks of parrots, ஒளி விடு பன் மலர் – bright many flowers, வெருக்குப்பல் உருவின் முல்லையொடு – with jasmine that are shaped like teeth of wild cats, Jasminum sambac, கஞலி – crowded, flourishing, வாடை வந்ததன் தலையும் – when northerly winds blow, நோய் பொர – sorrow attacking, கண்டிசின் – see this (இசின் – முன்னிலை அசை, an expletive of the second person), வாழி – அசை நிலை, an expletive, may you live long, தோழி – O friend, தெண் திரை – clear waves, கடல் ஆழ் கலத்தின் தோன்றி – appearing like a plying ship in the ocean, like a ship sinking into the deep ocean (கலத்தின் – இன் உருபு ஒப்புப் பொருளது), மாலை – evening, மறையும் – it hides, அவர் மணி நெடுங்குன்று – his tall mountain with gems or his sapphire-colored tall mountain, ஏ – அசை நிலை, an expletive