Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

குறுந்தொகை 241-250

குறுந்தொகை 241,

கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

யாமே காமம் தாங்கவும், தாம் தம்
கெழுதகைமையின அழுதன தோழி,
கன்று ஆற்றுப்படுத்த புன்தலைச் சிறாஅர்
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி
ஏறாது இட்ட ஏமப் பூசல் 5
விண் தோய் விடரகத்து இயம்பும்
குன்ற நாடன் கண்ட, எம் கண்ணே.

Kurunthokai 241,

Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend

I can bear the pain of this
love, but my eyes weep
because of their intimacy
with man from the mountains,
where,
children with parched heads
who herded calves, saw the
pretty blossoms of the vēngai
trees in the village square,
and without climbing on the
trees, raised delightful cries that
echo back from the caves and
gorges, and reach up to the sky.

Notes: பிரிவிடை ஆற்றாள் என கவன்ற தோழியிடம் தலைவி கூறியது.

இரா. இராகவையங்கார் உரை – சிறாஅர் மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி ஏறாது இட்ட ஏமப் பூசல் விண் தோய் விடரகத்து இயம்பும் குன்ற நாடன் என்றது தமக்குரிய காரியமாக விளையாடல்களை முடித்த ஆயம் இவள் வேறுபாடு நோக்கி, இவள் உயர்வு கருதி, இவள் விளையாடாமலேயே உண்டாக்கிய அலர் தாயரும் தன் ஐயரும் அறியச் செய்து இவன் செவியினும் புகாநிற்பவும் வரைய முயலாது வாளாவிருப்பவன் என்றது குறித்ததாம்.

பொ. வே. சோமசுந்தரனார் உரை – மன்ற மரத்தில் தெய்வம் உறைதலின் ஏறாயாயினர் என்க. கெழுதகைமையின அழுதன (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – என் கண்களே முதன்முதலாக தலைவனைக் கண்டனவாதலின் தமக்கு உண்டான சிறப்புரிமையானே தாமே அழுகின்றன என்றவாறு.

Meanings: யாம் – I (தன்மைப் பன்மை, first person plural), ஏ – அசை நிலை, an expletive, காமம் தாங்கவும் – bear my love pain, தாம் தம் கெழுதகைமையின – because of the intimacy they feel, அழுதன – they cried, தோழி – O friend, கன்று ஆற்றுப்படுத்த – herded the calves on the path, புன்தலை – parched heads, dirty heads, heads with scanty hair, small heads, சிறாஅர் – children (இசைநிறை அளபெடை), மன்ற வேங்கை – Indian kino trees in the public grounds, Pterocarpus marsupium, மலர் பதம் நோக்கி – on seeing its flowers blossom beautifully, ஏறாது இட்ட ஏமப் பூசல் – without climbing they shouted happily, விண் தோய் – sky high, விடர் அகத்து இயம்பும் – sounds roar inside the caves, குன்ற நாடன் – the man from the mountain country, கண்ட எம் கண் – my eyes that saw him (எம் – தன்மைப் பன்மை, first person plural), ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 242,

குழற்றத்தனார், முல்லைத் திணை – செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொன்னது

கானங்கோழி கவர் குரல் சேவல்
ஒண் பொறி எருத்தின் தண் சிதர் உறைப்பப்
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில்
சீறூரோளே மடந்தை, வேறு ஊர்
வேந்து விடு தொழிலொடு செலினும், 5
சேந்துவரல் அறியாது செம்மல் தேரே.

Kurunthokai 242,

Kulatrathanār, Mullai Thinai – What the foster mother said to the heroine’s mother

Our innocent daughter lives in a
small village in the woodland with
fragrances of flowers, where cold
water droplets dripping from bushes,
spray on the neck of a jungle fowl
that calls his female with his sweet,
desirable calls.
The noble man who had to travel
on the king’s business, will not stay
away for long.
His chariot will come back soon.
Notes: தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று மீண்டு வந்த செவிலித்தாய் நற்றாயிடம் கூறியது.

பொ. வே. சோமசுந்தரனார் உரை – புதல் கானங்கோழியின் எருத்தில் தண் சிதர் உறைக்கும் என்றது, தன் பால் அடைக்கலம் புக்க தலைவியின் பால் தலைவன் பெரிதும் தண்ணளியுடையவன் என்னும் குறிப்பிற்று. கவர் குரல் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கவர்கின்ற இனிய குரல், உ. வே. சாமிநாதையர் உரை – கவர்த்த குரல். கவர்வு – கவர்வு விருப்பு ஆகும் (தொல்காப்பியம் உரியியல் 66).

Meanings: கானங்கோழி – forest fowl (அம் – சாரியை), கவர் குரல் சேவல் – a rooster that calls out in a desirable voice, a rooster that calls with split sounds, ஒண் பொறி எருத்தின் – on the brightly spotted neck, தண் சிதர் உறைப்ப – cold water sprays, புதல் நீர் வாரும் – water drips from the bushes, பூ நாறு புறவில் – in the woodlands with flower fragrance, சீறூரோள் – the woman from a small town, ஏ – அசை நிலை, an expletive, மடந்தை – the naive young woman, வேறு ஊர் – to another town, வேந்து விடு தொழிலொடு செலினும் – even if he went on the king – sent business (செலினும் – உம்மை சிறப்பின்கண் வந்தது), சேந்துவரல் அறியாது – won’t know to stay there and come, செம்மல் – the esteemed man’s, தேர் – chariot, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 243,

நம்பி குட்டுவனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின்
தார் மணி அன்ன ஒண் பூக் கொழுதி,
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்,
புள் இமிழ் பெருங்கடல் சேர்ப்பனை
உள்ளேன் தோழி, படீஇயர் என் கண்ணே. 5

Kurunthokai 243,

Nampi Kuttuvanār, Neythal Thinai – What the heroine said to her friend

I will not think about him,
O friend,
the lord of the vast ocean
shores where birds screech,
and bright-bangled girls
play with little sand houses,
plucking flowers, as bright
as the bells strung around the
necks of horses, of adumpu
creepers whose double-lobed
leaves are like deer hooves.
May my eyes go to sleep!
Notes: தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி வருந்தியது கண்டு ‘நீ ஆற்றி இருக்க வேண்டும்’ என்று வற்புறுத்திய தோழியிடம் தலைவி கூறியது.

உ. வே. சாமிநாதையர் உரை – தம் விளையாட்டு ஒன்றையே கருதி, மகளிர் பூவை அலைக்கும் சேர்ப்பன் என்றது, தன் வினை ஒன்றையே கருதிப் பிரிந்து என்னை வருந்தச் செய்வான் என்னும் குறிப்பினது.

இரா. இராகவையங்கார் உரை – மகளிர் தார்மணி போன்ற நல்ல அரும்பின் மலரைக் கொழுதி வண்டற் பாவைக்குச் சூட்டி மகிழும் சேர்ப்பனாகியும் தான் என்னைச் சூட்டாது மடிந்திருப்பான் என்று குறித்தாள்.

Meanings: மான் அடி அன்ன – like deer hooves/hoofs, கவட்டு இலை அடும்பின் – adumpu vine’s forked/split leaves – Ipomoea pes-caprae, தார் மணி அன்ன – bells on the chain on horses like, ஒண் பூ – bright flowers, கொழுதி – pluck, ஒண் தொடி மகளிர் – woman with bright bangles, வண்டல் அயரும் – playing with little sand houses, புள் இமிழ் பெருங்கடல் சேர்ப்பனை – the lord of the vast ocean seashore where birds screech, உள்ளேன் தோழி – I will not think about him my friend, படீஇயர் என் கண் – may my eyes go to sleep (படீஇயர் – சொல்லிசை அளபெடை, வியங்கோள் வினைமுற்று விகுதி, வேண்டல் பொருளில் வந்தது, verb ending with a command, used as a request), ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 244,

கண்ணனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது

பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்து,
உரவுக் களிறு போல் வந்து இரவுக் கதவு முயறல்,
கேளேம் அல்லேம், கேட்டனெம் பெரும,
ஓரி முருங்கப் பீலி சாய
நன் மயில் வலைப் பட்டாங்கு, யாம் 5
உயங்குதொறும் முயங்கும் அறன் இல் யாயே.

Kurunthokai 244,

Kannanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero

You came at night
when everyone was sleeping,
like a mighty bull elephant,
and tried to open our night door.
It’s not that we did not hear it.
We heard it, lord!
We were like fine peacocks
that were caught in a net
with their head-crests crushed
and tail feathers ruined, since our
mother without justice embraced
us whenever we were distressed.
Notes: தலைவன் இரவுக்குறி வந்து ஒழுகிய காலத்தில் காப்பு மிகுதியால் தலைவியைக் காணப் பெறாமையின், தோழி அதன் காரணம் கூறி வரைவு கடாயது. நள் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – நளி ‘நள்’ என்பதன் திரிபு.

உ. வே. சாமிநாதையர் உரை – ஓரி – ஆண் தலைமயிர். இங்கே ஆண் மயிலின் கொன்றைக்காயிற்று. அறன் இல் யாய் – குறுந்தொகை 244, 262, நற்றிணை 63, 145, 376.

Meanings: பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்து – at pitch dark midnight time when everyone was sleeping, உரவுக் களிறு போல் வந்து – you came like a strong elephant, இரவுக் கதவு முயறல் – you tried to open the night door, கேளேம் அல்லேம் – it is not that we did not hear, கேட்டனெம் – we heard it, பெரும – O lord, ஓரி முருங்க – head crest crushed, பீலி சாய – feathers ruined, நன் மயில் வலைப்பட்டாங்கு – like a fine peacock that got caught in the net, யாம் உயங்குதொறும் – whenever we moved in distress, முயங்கும் – she embraced us, she held us closely, அறன் இல் – without fairness (அறன்- அறம்என்பதன்போலி), without justice, யாய் – mother, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 245,

மாலைமாறனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என்
நலம் இழந்ததனினும் நனி இன்னாதே,
வாள் போல் வாய கொழு மடல் தாழை
மாலை வேல் நாட்டு வேலி ஆகும்
மெல்லம்புலம்பன் கொடுமை, 5
பல்லோர் அறியப் பரந்து வெளிப்ப்படினே.

Kurunthokai 245,

Mālaimāranār, Neythal Thinai – What the heroine said to her friend

If his cruelty were known to
many, the lord of the delicate
shores,
where thick thālai trees with
leaves having sword-like sharp
edges are fences,
it would be much worse than
the loss of my beauty that was
praised by my friends,
in the beautiful seashore grove.

Notes: வரைவிடை வைத்துப் பொருள்வயின் தலைவன் பிரிந்த காலத்தில், தலைவி ஆற்றாள் என கவன்ற தோழியிடம் தலைவி கூறியது.

உ. வே. சாமிநாதையர் உரை – செயற்கையானன்றி இயல்பாகவே உள்ள தாழை வேலி ஆவது போல, நீ கூற வேண்டாமே இயல்பாகவே தலைவன் கொடுமையை நான் மறைத்து ஆற்றுவேன் என்பது குறிப்பு.

இரா. இராகவையங்கார் உரை – வாள் போல வாய கொழுமடல் தாழை என்றது தாழை கொழுமடலுடையது, வாள் போல் வாயுடைய தோடும் உடையதாயினாற் போல, இக்களவு இன்பமுடையதாயும் துன்பமுடையதாயும் இருத்தல் இயல்பென்று குறித்தாள்.

Meanings: கடல் அம் கானல் – beautiful seashore grove, seashore grove (அம் – சாரியையுமாம்), ஆயம் ஆய்ந்த என் நலம் – my virtue/beauty that they praised, இழந்ததனினும் – more than the loss, நனி இன்னாதே – gives lot of pain, வாள் போல் வாய – sword like edges, கொழு மடல் – thick fronds, தாழை – thālai trees, Pandanus odoratissimus, மாலை வேல் நாட்டு – like rows of spears stuck, வேலி ஆகும் – is a fence, மெல்லம்புலம்பன் – the lord of the delicate shores (அம் – சாரியை, புலம்பு = கடற்கரை), கொடுமை – cruelty, பல்லோர் அறிய – for many to know, பரந்து வெளிப்ப்படின் – if it comes out widely, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 246,

கபிலர், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி

பெருங்கடல் கரையது சிறுவெண்காக்கை
களிற்றுச் செவியன்ன பாசடை மயக்கிப்
பனிக் கழி துழவும் பானாள், தனித்தோர்
தேர் வந்து பெயர்ந்தது என்ப, அதற்கொண்டு
ஓரும் அலைக்கும் அன்னை, பிறரும் 5
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர்
இளையரும் மடவரும் உளரே
அலையாத் தாயரொடு நற்பாலோரே.

Kurunthokai 246,

Kapilar, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby

They say a single chariot
came and went away in the
middle of the night
on the vast ocean shores,
where a small white gull looks
for food in the cold backwaters,
disturbing the green leaves
that look like elephant ears.
Mother has been harassing me
since then. There are many young
naive women with hanging braids
and gleaming jewels, who have the
good destiny to have mothers who
do not bother them.
Notes: தோழிக்கு கூறுவாளாய்த் காவல் மிகுதியைக் கூறி வரைவு கடாயது. பானாள் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – பாதி இரவு, இரா. இராகவையங்கார் உரை – பாதியாகிய பகல். பின்னு விடு (6) – உ. வே. சாமிநாதையர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பின்னல் நாலவிடப்பட்ட (தொங்கவிடப்பட்ட), பின்னுதல் செய்யப்பட்ட கூந்தல் எனினுமாம். பின்னு விடு – அகநானூறு 158 – வேங்கடசாமி நாட்டார் உரை – பின்னல் நெகிழ்ந்தமையின்,

பொ. வே. சோமசுந்தரனார் உரை – பின்னல் அவிழ்ந்தமையாலே, நற்றிணை 51 – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பின்னி விடுத்தற்குரிய, ஒளவை துரைசாமி உரை – பின்னப்படுகின்ற.

Meanings: பெருங்கடல் கரையது – on the seashore of the big ocean, சிறுவெண்காக்கை – a small sea-gull, Indian black-headed sea gull, Larus ichthyactus, களிற்றுச் செவியன்ன – like the ears of male elephants, பாசடை – green leaves, மயக்கி – disturbing, பனிக் கழி – cold salty backwaters, துழவும் – searches for food, பானாள் – midnight (பானாள் – பால் + நாள், பாதி நாள், நடு இரவு), தனித்து ஓர் தேர் வந்து பெயர்ந்தது – a single chariot came alone and went, என்ப – they say, அதற் கொண்டு – since then, ஓரும் – அசை நிலை, an expletive, அலைக்கும் அன்னை – harassing mother, பிறரும் – others, பின்னு விடு கதுப்பின் – with hair with braids, with hanging hair, மின் இழை மகளிர் – girls wearing flashy jewels, இளையரும் மடவரும் – young and naive woman, உளர் – are there, ஏ – அசை நிலை, an expletive, அலையாத் தாயரொடு – with mothers who do not bother them, நற்பாலோர் – those with good destiny, ஏ – அசை நிலை, an expletive, தேற்றம், certainty

குறுந்தொகை 247,

சேந்தம் பூதனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது

எழின் மிக உடைய ஈங்கு அணிப்படூஉம்
திறவோர் செய் வினை அறவதாகும்,
கிளை உடை மாந்தர்க்குப் புணையுமாம் இவ்வென
ஆங்கு அறிந்திசினே தோழி, வேங்கை
வீயா மென் சினை வீ உக யானை 5
ஆர் துயில் இயம்பு நாடன்
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே.

Kurunthokai 247,

Sēnthampoothanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her

This is what I understand,
O friend!
A beautiful thing will happen
here very soon!
For women with relatives,
this is good support.
Wise elders are working on it,
and it is the right thing to do.
He has held his faultless love
in his chest,
your man from the country where
an elephant takes a rare nap, and
snores loudly under a vēngai tree
with unspoiled, delicate branches
that shed flower blossoms.

Notes: தலைவன் விரைவில் வரைந்து கொள்வான் என்று தலைவியிடம் தோழி கூறியது.

உ. வே. சாமிநாதையர் உரை – வேங்கை மலர் தன் மேல் உதிரப் புறத்தே செவிப்படும் ஒளியோடு யானை தூங்கும் நாடன் என்றது தலைவன் இருவகைச் சுற்றத்தாரும் பாராட்ட அவரிடையே தலைவியை மணந்துக் கொண்டு வெளிப்படையாகத் தலைவியின் இன்பம் நுகர்வான் என்ற குறிப்பினது. திறவோர் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரணஞ் செய்யும் முறைகளைத் திறம்பட கற்றோர் என்பாள், ‘திறவோர்’ என்றாள். மென் சினை வீ உக (4-5) – உ. வே. சாமிநாதையர் உரை – மெல்லிய கிளைகளில் இருந்து மலர்கள் உதிர, அங்ஙனம் உதிரும் இடத்திலே, தமிழண்ணல் உரை – மெல்லிய கிளை பூக்களை உதிர்க்குமாறு அதன் கீழ்ப் படுத்திருக்கும் யானை பெருமூச்சு விடும். சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).
Meanings: எழின் மிக உடைய – it is very beautiful, ஈங்கு அணிப்படூஉம் – will happen here soon (அணிப்படூஉம் – இன்னிசை அளபெடை), திறவோர் செய் வினை – wise people are doing it, those who know wedding rituals are doing it, அறவதாகும் – it is the just thing, கிளை உடை மாந்தர்க்கு – for those with relatives, புணையுமாம் – becomes support, இவ்வென ஆங்கு – thus, there, அறிந்திசின் – I understand (இசின் – தன்மை அசை நிலை, an expletive of the first person), ஏ – அசை நிலை, an expletive, தோழி – my friend, வேங்கை – Indian kino trees, Pterocarpus marsupium, வீயா மென் சினை – unspoilt delicate branches, வீ உக – flowers drop, யானை ஆர் துயில் இயம்பு – elephants take rare sleep with sounds/snores/snorts, நாடன் – the man from such country, மார்பு உரித்து ஆகிய – holding in his chest, மறு இல் நட்பு – faultless friendship, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 248,

உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது

அது வரல் அன்மையோ அரிதே, அவன் மார்
உறுக வென்ற நாளே குறுகி
ஈங்கு ஆகின்றே தோழி, கானல்
ஆடு அரை புதையக் கோடை இட்ட
அடும்பு இவர் மணல் கோடு ஊர நெடும் பனைக் 5
குறிய ஆகும் துறைவனைப்
பெரிய கூறி யாய் அறிந்தனளே.

Kurunthokai 248,

Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to her

Mother knows about him
from great words, my friend,
the lord of the seashore
where tall palmyra trees appear
short in the seashore groves,
their swaying trunks half-buried
in the sand dunes brought by the
westerly winds on which adumpu
creepers have spread.
It would be rare if the wedding
does not happen soon. They will
ask you to be in his embraces.
You need not be depressed.
Notes: வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைவியை நோக்கி ‘வரைவு நிகழ்தற்குரிய ஏதுக்கள் உளவாதலை உணர்த்தித் தோழி ஆற்றுப்படுத்தியது.

பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெடிய பனையின் அடியைக் கோடைக் காற்றுப் புதைத்துக் குறியதாக்கும் என்றது, வரைவுக்கு நெடிதாயிருந்த காலத்தை ஊழ் அணித்தே கொண்டு வந்தது என்னும் குறிப்பிற்று. யாய் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டுச் செவிலி. பெரிய கூறி (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவி கற்புக்கடம் பூண்டமையை யான் கூறுதலானே, உ. வே. சாமிநாதையர் உரை – முருகனென்று சொல்லி வெறியெடுத்து.

Meanings: அது வரல் – for the wedding to happen (அது – நெஞ்சறி சுட்டு, வரைவு நாளைச் சுட்டியது), அன்மை – close, ஓ – அசை நிலை, an expletive, அரிது – it will be rare if it isn’t, ஏ – தேற்றம், certainty, அவன் மார்பு – his chest, உறுக – to embrace, என்ற நாளே குறுகி – getting closer to that day, ஈங்கு ஆகின்றே – it is happening here, தோழி – my friend, கானல் – seashore grove, ஆடு – swaying, அரை புதைய – trunk buried (in the shifting sands), கோடை இட்ட – summer winds brought, அடும்பு இவர் – adumpu creepers spread, Ipomoea pes-caprae., மணல் – sand, கோடு – heaps, ஊர – moving, shifting, நெடும் பனை – tall palmyra palms, குறிய ஆகும் – the arrangements appear to be getting close, துறைவனை – the lord of the seashore, பெரிய கூறி – telling the family about your love affair, from the veriyāttam ritual, யாய் அறிந்தனள் – mother knows about it, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 249,

கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

இன மயில் அகவும் மரம் பயில் கானத்து
நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்பப்
படுமழை பொழிந்த சாரல் அவர் நாட்டுக்
குன்ற நோக்கினென் தோழி,
பண்டை அற்றோ கண்டிசின் நுதலே? 5

Kurunthokai 249,

Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend

Look at my forehead, O friend!
Has my brow become lovely like
it used to be in the past,
since I looked at his mountain
where heavy rain pours down,
peacocks cry in tree-filled forests
and white-faced, black monkeys
tremble with their young in the
cold on the slopes?

Notes: தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்த காலத்தில் ‘ நீ ஆற்றும் ஆற்றல் உடையையோ?’ என்ற தோழியிடம் தலைவி கூறியது.

உ. வே. சாமிநாதையர் உரை – தலைவி “இப்பொழுது என் நுதலைப் பார். பழைய விளக்கம் அதன்பால் உண்டாயிற்றன்றே. இங்ஙனமே தலைவர் குன்றத்தைப் பார்த்துப் பார்த்து ஆற்றுவேன்” என்று கூறினாள். சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

Meanings: இன மயில் அகவும் – flocks of peacock cry, மரம் பயில் கானத்து – in the forests filled with trees, in the forest dense with trees (பயில் – நெருங்கிய, அடர்ந்த), நரை முக ஊகம் – black monkeys with white faces, பார்ப்பொடு – with their young, பனிப்ப – causing trembling, causing chillness, படுமழை பொழிந்த – heavy rains fall, rain fell low, சாரல் – mountain slopes, அவர் நாட்டுக் குன்ற நோக்கினென் – I saw his country’s mountain, தோழி – my friend, பண்டை அற்றோ – is it like in the past, கண்டிசின் – see this (இசின் – முன்னிலை அசை, an expletive of the second person), நுதல் – my brow, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 250,

நாமலார் மகனார் இளங்கண்ணனார், பாலைத் திணை – தலைவன் தேர்ப் பாகனிடம் சொன்னது

பரல் அவல் படுநீர் மாந்தித் துணையோடு
இரலை நன் மான் நெறி முதல் உகளும்
மாலை வாரா அளவைக் கால் இயல்
கடு மாக் கடவுமதி பாக, நெடு நீர்ப்
பொரு கயல் முரணிய உண்கண் 5
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே.

Kurunthokai 250,

Nāmalār Makanār Ilankannanār, Pālai Thini – What the hero said to his charioteer

Urge your swift steeds and ride fast,
O charioteer! Go like the wind!
Let’s go before evening, when fine
stags drink the stagnant water from
ditches with pebbles, and romp
around with their mates on our path,
so that we can remove the sorrow
of the woman of chosen, sweet words,
whose kohl-lined eyes are like warring
carp fish that are in deep waters.
Notes: வினை முற்றி மீண்டுவரும் தலைவன் தலைவியை விரைந்து காணும் அவாவினால் பாகனுக்குக் கூறியது. உண்கண் (5) – இரா. இராகவையங்கார் உரை – மையிட்ட கண்கள், என் நெஞ்சத்தை உண்ட கண்கள் என்பதுமாம். மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26).

Meanings: பரல் அவல் படுநீர் – stagnant water in ditches with small pebbles, மாந்தி – drinking, துணையோடு இரலை – a stag with his female, நன் மான் – fine deer, நெறி முதல் உகளும் – they romp around on the path, மாலை வாரா அளவை – before evening time, கால் இயல் – fast like the wind, கடு மாக் கடவுமதி பாக – ride rapidly your fast horse O charioteer (மதி – முன்னிலை அசை, an expletive of the second person), நெடு நீர் – deep water, பொரு கயல் – fighting carp fish, cyprinus fimbriatus, முரணிய – differing, hostile, உண்கண் – kohl rimmed eyes, தெரி தீம் கிளவி – chosen sweet words, தெருமரல் உய – to escape sorrow, ஏ – அசை நிலை, an expletive

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.