குறுந்தொகை 251,
இடைக்காடனார், முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
மடவ வாழி மஞ்ஞை மா இனம்,
கால மாரி பெய்தென அதன் எதிர்
ஆலலும் ஆலின, பிடவும் பூத்தன,
கார் அன்று இகுளை, தீர்க நின் படரே,
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர் 5
புது நீர் கொளீஇய உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே.
Kurunthokai 251,
Idaikkādanār, Mullai Thinai – What the heroine’s friend said to her
May your sorrow end, O friend!
This is not the rainy season.
In order to drink new water from
the ocean, the clouds that held
left-over water from last year’s rainy
season, are shedding their waters as
rains with roaring thunder.
On hearing that, in ignorance, huge
peacock flocks dance and wild
jasmine flowers have blossomed.
Notes: தலைவன் கூறிச்சென்ற கார்காலம் வந்தபொழுது தலைவி வருந்த, ‘இது கார்ப்பருவ மழையன்று. வம்பமழை’ எனக்கூறி, தோழி அவளை ஆற்றுவித்தது. குறுந்தொகை – 66 – மடவ மன்ற தடவு நிலைக் கொன்றை கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை நெரிதரக் கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த வம்ப மாரியைக் கார் என மதித்தே, குறுந்தொகை 94 – பெரும் தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே, நற்றிணை 99 – பிடவமும் கொன்றையும் கோடலும் மடவ ஆகலின், மலர்ந்தன பலவே.
இரா. இராகவையங்கார் உரை – ஐயறிவுடைய மயில் காலமென ஆலின ஆதலின், ஓரறிவு உயிராகிய பிடவும் பூத்தன. இவை எல்லாம் நம் போல் ஆறறிவு உடைய அல்லாதலின் ‘மடவ’ என்று கூறி பருவம் ஆயின் அவர் வரவு தப்பாது என்று தேற்றியவாறாம்.
Meanings: மடவ – they are ignorant, வாழி – அசை நிலை, an expletive, மஞ்ஞை – peacock, மா இனம் – big flocks, dark colored flocks, கால மாரி பெய்தென – thinking it is the season’s rain, அதன் எதிர் – accepting it, reacting to it, ஆலலும் ஆலின – they danced and danced, பிடவும் பூத்தன – the pidavam flowers bloomed, wild jasmine, Bedaly emetic nut, Randia malabarica, கார் அன்று – it is not rainy season, இகுளை – my friend, தீர்க – may it end, நின் – your, படர் – sorrow, ஏ – அசை நிலை, an expletive, கழிந்த மாரிக்கு – from last season’s rain, ஒழிந்த பழ நீர் – old rain that did not fall, leftover old water, புது நீர் கொளீஇய – inorder to get new water (கொளீஇய – சொல்லிசை அளபெடை), உகுத்தரும் – falling, நொதுமல் வானத்து – of stranger clouds, of distant clouds, முழங்கு குரல் கேட்டு – on hearing the thundering sounds, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 252,
கிடங்கில் குலபதி நக்கண்ணனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த
கொடியனாகிய குன்று கெழு நாடன்
வருவதோர் காலையின் இன்முகம் திரியாது
கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி
மடவை மன்ற நீ எனக் கடவுபு, 5
துனியல் வாழி தோழி, சான்றோர்
புகழும் முன்னர் நாணுப,
பழி யாங்கு ஒல்பவோ காணுங்காலே.
Kurunthokai 252,
Kidangil Kulapathi Nakkannanār, Kurinji Thinai – What the heroine said to her friend
May you live long, my friend!
Do not be upset! You ask me
why I am a very naive woman
with the virtue of a goddess,
hospitable to the cruel man
from the mountain country
whenever he comes, without
turning away my sweet face.
The wise will feel ashamed
in front of praise. How can he
tolerate if I blame him for what
he has done?
Notes: குறிஞ்சியில் மருதம். பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனைத் தலைவி ஏற்றுக் கொள்ள, ‘இங்ஙனம் ஏற்றுக் கொள்ளல் அறிவோ?’ என்று வினவிய தோழியிடம் தலைவி கூறியது. மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17). வாழி (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வாழ்வாயாக, உ. வே. சாமிநாதையர் உரை – அசைநிலை. சான்றோர் புகழும் முன்னர் நாணுப (6-7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தங்கண் முன்னர்ப் பிறர் தம்மைப் புகழும் புகழையும் நல்லோர் நாணுப என்றவாறு, உ. வே. சாமிநாதையர் உரை – சான்றோர் இயல்பு இதுவென உலகின் மேல் வைத்துக் கூறினும் தலைவி கருதியது தலைவனையே என்க.
Meanings: நெடிய திரண்ட தோள் – long rounded arms, long thick arms, வளை ஞெகிழ்த்த – caused the bangles to slip down (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), கொடியனாகிய குன்று கெழு நாடன் – the cruel man from the country with mountains, வருவதோர் காலையின் – when he comes, இன் முகம் – sweet face, திரியாது – not differing, கடவுள் கற்பின் – with virtue like that of a goddess (கற்பின் – இன் உருபு ஒப்புப் பொருளது), அவன் எதிர் பேணி – welcoming him with hospitality, மடவை மன்ற நீ – you are a naive woman for sure (மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty), என – thus, கடவுபு – asking, துனியல் – do not be angry, do not be sad, வாழி – அசை நிலை, an expletive, may you live long, தோழி – O friend, சான்றோர் – the wise people, புகழும் முன்னர் நாணுப – they will be ashamed in front of praise, they will feel embarrassed, பழி – blame, யாங்கு – how, ஒல்ப – him tolerating, காணுங்கால் – when he faces it, if analyzed, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 253,
பூங்கண்ணனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கேளார் ஆகுவர் தோழி, கேட்பின்
விழுமிது கழிவது ஆயினும், நெகிழ் நூல்
பூச்சேர் அணையின் பெருங்கவின் தொலைந்த நின்
நாள் துயர் கெடப்பின் நீடலர் மாதோ,
ஒலி கழை நிவந்த ஓங்கு மலைச் சாரல் 5
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை
ஆறு சென் மாக்கள் சேக்கும்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
Kurunthokai 253,
Poonkannanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
He cannot hear you, my friend,
your lover who went past bright
mountains with towering peaks,
where tall bamboo stalks create
sounds banging against each
other on lofty mountain peaks,
and flesh-reeking rock caves
where tigers save their kills are
shelters for those who travel.
If he can hear you, he will give
up his quest to earn wealth.
He will return on time to abate
your torment that has ruined your
exquisite beauty, as you lie on
a bed woven with flowers, whose
threads have loosened.
Notes: தலைவன் பிரிவை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி ஆற்றுவித்தது.
உ. வே. சாமிநாதையர் உரை – கேட்பின் நீடலர் என்ற குறிப்பு நான் தூது விட்டு நின் துயர் நிலையை அறிவித்து மீளச் செய்வேன் என்னும் கருத்தைப் புலப்படுத்துகின்றது. இது கற்பு காலத்தது. விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).
Meanings: கேளார் ஆகுவர் – he is unable to hear, தோழி – my friend, கேட்பின் – if he hears, விழுமிது கழிவது ஆயினும் – even if he loses fine wealth, நெகிழ் நூல் – threads are loose, பூச்சேர் அணையின் – bed with flowers (garlands), பெருங்கவின் தொலைந்த – ruined great beauty, நின் நாள் துயர் – your sorrow, கெட – to be ruined – பின் நீடலர் – he will not delay after that, மாது – அசை நிலை, an expletive, ஓ – அசை நிலை, an expletive, ஒலி கழை – loud/flourishing bamboo, Bambusa arundinacea, நிவந்த – tall, ஓங்கு மலைச் சாரல் – lofty mountain slopes, புலி புகா உறுத்த – tigers take their food, புலவு நாறு கல் அளை- meat stinking rock cave, ஆறு சென் மாக்கள் – people who go on the path, சேக்கும் – stay, கோடு உயர் பிறங்கல் மலை – bright mountains with tall peaks, இறந்தோர் – the man who went past, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 254,
பார்காப்பானார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின்
தலை அலர் வந்தன, வாரா தோழி,
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்,
பயில் நறும் கதுப்பின் பாயலும் உள்ளார், 5
செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர்
எய்தினரால் வரூஉம் தூதே.
Kurunthokai 254,
Pārkāppanār, Pālai Thinai – What the heroine said to her friend
Swarms of bees hover on
the delicate, breast-shaped,
newly-opened buds of the
leafless, beautiful branches
of kōngam trees.
He who went with a desire
to earn wealth, has forgotten
sweet sleep of the nights on
my thick fragrant hair.
There are no messengers yet
to announce his arrival.
Notes: பருவங்கண்டு வருந்தும் தலைவியிடம் ‘நீ ஆற்றல் வேண்டும்’ என்று வற்புறுத்திய தோழியிடம் தலைவி கூறியது. கோங்க முகைப்போன்ற முலை: அகநானூறு 99 – மாண் இழை மகளிர் பூணுடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு, அகநானூறு 240 – கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து, குறுந்தொகை 254 – முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர், கலித்தொகை 56 – முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை எனப் பெயல் துளி முகிழ் எனப் பெருத்த நின் இள முலை, கலித்தொகை 117 – கோங்கின் முதிரா இள முகை ஒப்ப, புறநானூறு 336 – கோங்கின் முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை, திருமுருகாற்றுப்படை 34 – தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் குவி முகிழ் இளமுலை, சிறுபாணாற்றுப்படை 25-26 – யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப் பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை. முலை ஏர் மென் முகை (2) – உ. வே. சாமிநாதையர் உரை – நகிலை ஒத்த அரும்புகள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – முலையினது அழகைக் கொண்ட மெல்லிய அரும்புகள்.
Meanings: இலை இல் – without leaves, அம் சினை – beautiful branches, இன வண்டு ஆர்ப்ப – swarms of bees buzz, முலை ஏர் மென் முகை – breast-like delicate buds (ஏர் – உவம உருபு, a comparison word), அவிழ்ந்த கோங்கின் – open kōngam flowers, Cochlospermum gossypium, a gum producing tree, தலை அலர் வந்தன – flowers that blossom first have come, வாரா – have not come (messages), தோழி – O friend, துயில் இன் கங்குல் – night with sweet sleep, துயில் அவர் மறந்தனர் – he forgot sleep, பயில் நறும் கதுப்பின் – on the thick fragrant hair, பாயலும் – about sleeping (உம்மை உயர்வு சிறப்பு), உள்ளார் – he does not think, செய்பொருள் தரல் – to bring back wealth, நசைஇச் சென்றோர் – the one who went with desire (நசைஇ – சொல்லிசை அளபெடை), எய்தினர் – he will be back, ஆல் – அசை நிலை, an expletive, என – thus, வரூஉம் தூதே – messages that come (வரூஉம் – இன்னிசை அளபெடை, தூதே – ஏ அசை நிலை, an expletive)
குறுந்தொகை 255,
கடுகு பெருந்தேவனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பொத்து இல் காழ வத்த யாஅத்துப்
பொரி அரை முழு முதல் உருவக் குத்தி
மறங்கெழு தடக் கையின் வாங்கி உயங்கு நடைச்
சிறுகண் பெரு நிரை உறு பசி தீர்க்கும்
தட மருப்பு யானை கண்டனர் தோழி, 5
தம் கடன் இறீஇய எண்ணி இடந்தொறும்
காமர் பொருள் பிணிப் போகிய
நாம் வெங்காதலர் சென்ற ஆறே.
Kurunthokai 255,
Kaduku Perunthēvanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
Your lover goes everywhere,
thinking about his duty to earn
desired wealth.
On the wasteland path that he took,
he must have seen male elephants
thrusting their big tusks into thick,
dense yā tree trunks with no holes
and rough barks, and bending their
branches down,
to feel their small-eyed hungry herds
walking in a row with painful steps.
Notes: பொருள்வயின் பிரிந்த தலைவன் இடைநின்று மீள்வர் என்று எண்ணிய தலைவியிடம் தோழி சொன்னது. குறுந்தொகை37 – பிடி பசி களைஇய பெருங்கை வேழம் மென் சினை யாஅம் பொளிக்கும், குறுந்தொகை 232 – உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வரி நிழல், குறுந்தொகை 255 – யாஅத்துப் பொரி அரை முழு முதல் உருவக் குத்தி மறங்கெழு தடக் கையின் வாங்கி உயங்கு நடைச் சிறுகண் பெரு நிரை உறு பசி தீர்க்கும் தட மருப்பு யானை, அகநானூறு 335 – யானை தன் கொல் மருப்பு ஒடியக் குத்திச் சினஞ்சிறந்து இன்னா வேனில் இன் துணை ஆர முளி சினை யாஅத்து, மலைபடுகடாம் 429 – உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்.
தமிழண்ணல் உரை – யானைக் குடும்ப வாழ்க்கை தலைவனுக்குப் பொருளைத் தேடிச் சென்று மக்களைக் காப்பாற்ற வேண்டும் எனும் விழைவைத் தூண்டும். இதுவே இறைச்சி எனப்படும். யானை தன் குடும்பப் பசியைத் தீர்த்ததைக் காணும் அவர், பொருளைத்தேடியே திரும்புவர் என்ற குறிப்பை உணர்த்துகிறது. தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம். உரியியல் 24). அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம். உரியியல் 26).
Meanings: பொத்து இல் – without holes, without hollow parts, காழ வத்த – become hard, யாஅத்து – of yā trees, ஆச்சா மரம், Hardwickia binata, பொரி அரை – cracked barks, rough barks, முழு முதல் – thick trunks, உருவ – to be able to remove, குத்தி – thrust, மறம் கெழு – with strength, தடக் கையின் – with big trunks, with curved trunks, வாங்கி – bending, pulling, உயங்கு நடை – sad walk, சிறுகண் – small eyes, பெரு நிரை – big herd in a row, உறு பசி தீர்க்கும் – end excessive hunger, தட மருப்பு யானை – big tusked elephants, கண்டனர் தோழி – he must have seen them my friend, தம் கடன் இறீஇய எண்ணி – thinking about performing his duty, இடந்தொறும் – everywhere, காமர் பொருள் பிணிப் போகிய – went to earn desirable wealth, நாம் வெங்காதலர் – our desirable lover, சென்ற – went, ஆறு – the path, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 256,
பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவன் சொன்னது
‘மணி வார்ந்தன்ன மாக்கொடி அறுகை
பிணி கான் மென் கொம்பு பிணையொடும் ஆர்ந்த
மான் ஏறு உகளும் கானம் பிற்பட,
வினை நலம் படீஇ வருதும் அவ் வரைத்
தாங்கல் ஒல்லுமோ பூங்குழையோய்?’ எனச் 5
சொல்லா முன்னர், நில்லா ஆகி
நீர் விலங்கு அழுதல் ஆனா,
தேர் விலங்கினவால் தெரிவை கண்ணே.
Kurunthokai 256,
Unknown Poet, Pālai Thinai – What the hero said
I tried to tell her,
“O young woman wearing
flower-like earrings!
I shall go into the forests
……….where a stag prances
……….with his mate after eating
……….arukam grass with long,
……….sapphire-hued stems,
……….removing its matted roots,
and return after my work is done.
Will you endure until then?”
Even before I finished speaking,
she cried unceasingly, and her eyes,
filled with tears that hid the pupils,
halted my chariot in its tracks.
Notes: பொருள்வயின் பிரிய எண்ணிய தலைவன் செலவு அழுங்கி கூறியது. நீர் விலங்கு அழுதல் (7) – உ. வே. சாமிநாதையர் உரை – நீரால் மாறுபடுதலை உடைய அழுகை, நீர் கண்ணில் உள்ள பாவையை மறைக்கின்ற அழுகை என்பதும் ஆம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீர்த் துளிகள் புறப்பட்டு ஒழுகுதல், இரா. இராகவையங்கார் உரை – நீர்த்துளிகள் நில்லாவாய்க் குறுக்கிடும் அழுகை. அகநானூறு 5 – பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு.
Meanings: மணி வார்ந்தன்ன – like long sapphire strands, மாக்கொடி – dark creeper, அறுகை – arukam grass, பதவு, Cynodon grass, பிணி கான் – ties removed, roots removed, மென் கொம்பு – delicate stems, பிணையொடும் – with its female, ஆர்ந்த – eating, மான் ஏறு உகளும் – male deer romps around, male deer leaps around, கானம் – forest, பிற்பட – making it go behind, going past it, வினை நலம் படீஇ வருதும் – I will come after my work is finished in a good manner (படீஇ – சொல்லிசை அளபெடை), அவ் வரைத் தாங்கல் ஒல்லுமோ – will you be able to tolerate until then, பூங்குழையோய் – O one wearing flower-like earrings, O one wearing pretty earrings, எனச் சொல்லா முன்னர் – even before I said that, நில்லா ஆகி – not stopping, நீர் விலங்கு அழுதல் ஆனா – she cried not stopping her tears, she cried not stopping and her tears hid the pupils in her eye, தேர் விலங்கினவால் – they blocked my chariot (விலங்கினவால் – ஆல் அசைநிலை, an expletive), தெரிவை – the young woman, கண் – eyes, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 257,
உறையூர்ச் சிறுகந்தனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வேரும் முதலும் கோடும் ஓராங்குத்
தொடுத்த போலத் தூங்குபு தொடரிக்
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின்
ஆர்கலி வெற்பன் வருதொறும் வரூஉம்,
அகலினும் அகலாது ஆகி 5
இகலும் தோழி, நம் காமத்துப் பகையே.
Kurunthokai 257,
Uraiyūr Sirukanthanār, Kurinji Thinai – What the heroine said to her friend
Whenever he comes,
it comes too and teases me,
but does not leave when he
leaves, my enemy, this love
that I have for the lord of the
mountains with very loud noises,
where roots, trunks and branches,
are next to each other on trees on
on which clusters of ripe jackfruits
hang low.
Notes: வரைவு உணர்த்திய தோழியிடம் தலைவி சொன்னது. வீழ் கோள் பலவின் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – தணிந்த குலைகளையுடைய பலா மரத்தினை உடைய, தமிழண்ணல் உரை – விழுவதுபோலத் தோன்றும் பழக்குலைகள்.
பொ. வே. சோமசுந்தரனார் – உரைகளவிற் போன்று புணர்தலும் பிரிதலுமின்றி யாண்டும் ஒருபடியாய் இனித் தலைவன் நம்மோடு உடனுறைந்து இன்பம் செய்வன் என்பாள், ‘வேரும் முதலும் கோடும் ஓராங்குத் தொடரிய கோட்பலாவுடைய வெற்பன்’ என்றாள். கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).
Meanings: வேரும் முதலும் கோடும் – roots trunk and branches, ஓராங்குத் தொடுத்த போல – like they are all linked together, தூங்குபு தொடரி கீழ் தாழ்வு அன்ன – like hanging down continuously and low, வீழ் கோள் பலவின் – with jackfruit trees with jackfruit clusters that hang low, with jackfruit trees with desirable clusters, ஆர்கலி வெற்பன்- the lord of the very loud mountains, வருதொறும் – whenever he comes, வரூஉம் – it will come (இன்னிசை அளபெடை), அகலினும் – even when he leaves, அகலாது ஆகி – it will not leave, இகலும் – it teases me, தோழி – O friend, நம் காமத்து – my love (நம் – தன்மைப் பன்மை, first person plural, அத்து – வேண்டாவழிச் சாரியை), பகை – an enemy, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 258,
பரணர், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வாரல் எம் சேரி, தாரல் நின் தாரே,
அலர் ஆகின்றால் பெரும, காவிரிப்
பலர் ஆடு பெரும் துறை மருதொடு பிணித்த
ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை
அரியலம் புகவின் அம் தோட்டு வேட்டை 5
நிரைய ஒள் வாள் இளைஞர் பெரு மகன்
அழிசி ஆர்க்காடு அன்ன இவள்
பழி தீர் மாண் நலம் தொலைதல் கண்டே.
Kurunthokai 258,
Paranar, Marutham Thinai – What the heroine’s friend said to the unfaithful hero
Do not come to our street!
Do not give us your garland!
Gossip has risen, O lord,
since it has been lost,
her blemishless beauty,
like that of Ārcot town of Alisi,
father to Sēnthan who ties
his elephants with lifted tusks
on marutham trees on the
banks of River Kāviri
where many go to bathe,
a leader to young warriors who
feast on alcohol as food,
hunting herds of wild animals
and carrying bright, hellish spears.
Notes: தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தல். வாயில் உடன்பட்டது என்பதும் பொருந்தும். நற்றிணை190 – சேந்தன் தந்தை தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி. சேரி – உ. வே. சாமிநாதையர் உரை, குறுந்தொகை 231 – தெரு.
இரா. இராகவையங்கார் உரை – சேந்தன் பலராடு பெருந்துறை மருதிடத்து யானையைப் பிணித்த என்றது பலருமாறியப் பாணன் தலைவனைப் பரத்தையிடத்துப் பிணித்ததாகவும், அரியலம் புகவின் அம் தோடு வேட்டை என்றது அப் பரத்தையருடன் மகிழ்தற்குத் தன் செல்வம் இழப்பவன் ஆகவும் குறித்துக் கொள்ளலாம். வரலாறு: சேந்தன், அழிசி, ஆர்க்காடு, காவிரி.
Meanings: வாரல் எம் சேரி – do not come to our settlement, do not come to our street (வாரல் – அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று), தாரல் நின் தார் – do not give your garland, அலர் ஆகின்று ஆல் – since gossip has risen (ஆல் = அசைச் சொல், an expletive), ஏ – அசை நிலை, an expletive, பெரும – O lord, காவிரிப் பலர் ஆடு பெருந்துறை – big port in the Kāviri river where many play, மருதொடு பிணித்த – tied to the marutham trees, arjuna tree, Terminalia arjuna, ஏந்து கோட்டு யானை – elephant with lifted tusks, சேந்தன் தந்தை – father of Sēnthan, அரியலம் புகவின் – liquor as food (அம் – சாரியை, augment), அம் தோட்டு வேட்டை – hunting beautiful herds of animals, நிரைய – hellish (நிரயம் = hell), fierce, ஒள் வாள் – bright swords, இளைஞர் பெருமகன் – a leader to young warriors, அழிசி ஆர்க்காடு அன்ன – like Alisi of Ārcot, இவள் பழி தீர் மாண் நலம் – her blemishless fine virtue/beauty, தொலைதல் – losing, கண்டு – seeing it, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 259,
பரணர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
மழை சேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து
அருவி ஆர்ந்த தண் நறுங்காந்தள்
முகை அவிழ்ந்து ஆனா நாறும் நறுநுதல்
பல் இதழ் மழைக் கண் மாஅயோயே!
ஒல்வை ஆயினும், கொல்வை ஆயினும், 5
நீ அளந்து அறிவை நின் புரைமை வாய் போற்
பொய் மொழி கூறல் அஃது எவனோ,
நெஞ்சம் நன்றே நின் வயினானே?
Kurunthokai 259,
Paranar, Kurinji Thinai – What the heroine’s friend said to her
O my dark friend with a brow
intensely fragrant as the cool,
aroma-filled glory lily
buds that open near the waterfalls
that flow from the mountains
as rainclouds rise up and shower,
and eyes like cool lotus blossoms
with many petals!
You can tolerate my mistakes
or kill me. You are an esteemed
esteemed person and an intelligent
judge.
What is the use of telling lies?
His good heart is with you.
Notes: காவல் மிகுந்ததால் தலைவியின் உடன்பாடின்றத் தானே அறத்தொடு நின்ற தோழி கூறியது. கொல்வை ஆயினும் (5) – உ. வே. சாமிநாதையர் உரை – சினந்து கொல்வாய் ஆயினும், இரா. இராகவையங்கார் உரை – அவனுடன் போவதற்கு உன் நாணினைக் கொல்வையாயினும்.
பொ. வே. சோமசுந்தரனார் உரை – கார்ப் பருவத்தே மலையினது அருவியைப் பருகிக் காந்தள் முகை அவிழ்ந்து ஆனா நாறும் என்றது, ‘யான் அறத்தொடு நின்றமையால் செவிலி உட்கொண்டு நற்றாய் முதலியோர்க்கு உணர்த்துவள்; அதனால் தமர் வரைவு மலிந்து திருமணம் நிகழும்’ என்று குறிப்பால் உணர்த்தியவாறு.
Meanings: மழை சேர்ந்து – clouds joined together, எழுதரு – they rise up, மாரிக் குன்றத்து – on the mountains with rain, அருவி ஆர்ந்த – near the waterfall, தண் நறுங்காந்தள் – cool fragrant glory lilies, Gloriosa superba, முகை அவிழ்ந்து – buds open, ஆனா – continuous, endless, நாறும் – fragrant, நறுநுதல் – fragrant forehead, பல் இதழ் – many petaled flower/lotus, மழைக் கண் – cool eyes, மாஅயோயே – O dark woman (இசைநிறை அளபெடை, ஏகாரம் விளி), ஒல்வை ஆயினும் – if you tolerate my mistakes, கொல்வை ஆயினும் – if you kill me, நீ அளந்து அறிவை – you are intelligent to judge, நின் புரைமை – your esteem, வாய் போல் – like truth, பொய் மொழி – lies, கூறல் – to tell, அஃது எவன் – what is the use, ஓ – அசை நிலை, an expletive, நெஞ்ச நன்று – his heart is good, ஏ – தேற்றம், certainty, நின் வயினான் – for you, ஏ – அசை நிலை, an expletive
குறுந்தொகை 260,
கல்லாடனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
குருகும் இரு விசும்பு இவரும், புதலும்
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே,
சுரி வளைப் பொலிந்த தோளும் செற்றும்,
வருவர் கொல் வாழி தோழி, பொருவார்
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை 5
வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்துக்
கன்று இல் ஓர் ஆ விலங்கிய
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே.
Kurunthokai 260,
Kallādanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
Herons are flying high in the
wide sky,
striped bees swarm on bushes
causing buds to open,
and bangles made from spiraled
conch are becoming tight on your
fine arms. He will come.
May you live long, my friend!
He went past the wilderness,
where a single cow without calf,
rests in the shade of an ōmai tree
with withered trunk whose shade
prevents it from leaving, in the
mountains dense with surapunnai
trees belonging to the Thondai kings
whose fine chariots are drawn by
noble elephants that eat the soil
of enemy lands.
Notes: தலைவனது பிரிவை ஆற்றாதிருந்த தலைவியை நோக்கி ‘நல்ல நிமித்தங்கள் உண்டாகின்றன. ஆதலின் தலைவர் விரைவில் வந்து விடுவார்’ என்று தோழி கூறியது. அகநானூறு 213-1 – வினை நவில் யானை விறல் போர்த் தொண்டையர். புன் தாள் (8) – உ. வே. சாமிநாதையர் உரை – சிவந்த தாளெனலும் பொருந்தும்.
பொ. வே. சோமசுந்தரனார் உரை – நாரை வானத்தில் உயர்ந்து பறத்தல் நன்நிமித்தம் என்னும் கொள்கை உண்டு போலும். வண்டு ஊதா நிற்பப் புதல் மலர்தல் தலைவர் வருகையை அறிவிக்கும் தூது பெறுவாம் என்னும் குறிப்புடைத்து. தோள்வளை இறுகுதல் நன்னிமித்தம். கன்றில்லா மலட்டு ஆவே தங்கும் என்றமையாலே, நின்பாற் பேரன்புடைய தலைவர் நின்னை நினைந்து மீள்வர் என்பது குறிப்பு. வரலாறு: தொண்டையர்.
Meanings: குருகும் – herons/egrets/storks, இரு விசும்பு – dark sky, vast sky, இவரும் – they fly high, புதலும் – bushes (buds on bushes, புதலும் – ஆகுபெயர்), வரி வண்டு ஊத – since bees with stripes swarm, வாய் நெகிழ்ந்தனவே – they have loosened their ties, they have blossomed, சுரி வளை – whorled conch-shell bangles (வினைத்தொகை), பொலிந்த தோளும் – on the beautiful arms, on the splendid arms, செற்றும் – bangles have become tight on them, வருவர் – he will come, கொல் – அசை நிலை, an expletive, வாழி – அசை நிலை, an expletive, may you live long, தோழி – O friend, பொருவார் மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை – noble elephants that eat the benefits of the lands of enemies, noble elephants that eat help to seize the lands of enemies, வண் தேர்த் தொண்டையர் – Thondaiyar with their fine chariots (Thondai Nadu is an ancient part of the Tamil land, which included the districts of Arcot, Chingleput and Nellore, with Kancheepuram as its capital), வழை அமல் அடுக்கத்து – in the surapunnai filled ranges, Ochrocarpus Longiflius (தொண்டையர் மலை – வேங்கட மலை), கன்று இல் ஓர் ஆ – one cow without a calf, விலங்கிய – blocking from leaving its shade, புன் தாள் ஓமைய சுரன் – the wasteland with ōmai trees with dried trunks, Sandpaper tree, Dillenia indica (சுரன் – சுரம் என்பதன் போலி), இறந்தோர் – the man who went past, ஏ – அசை நிலை, an expletive