Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

குறுந்தொகை 261-270

குறுந்தொகை 261,

கழார்க்கீரன் எயிற்றியார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி

பழ மழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய
சிதட்டுக்காய் எண்ணின் சில் பெயல் கடை நாள்
சேற்று நிலை முனைஇய செங்கண் காரான்,
நள்ளென் யாமத்து ஐ எனக் கரையும்
அஞ்சுவரு பொழுதினானும், என் கண் 5
துஞ்சா வாழி தோழி, காவலர்
கணக்கு ஆய் வகையின் வருந்தி என்
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே.

Kurunthokai 261,

Kalārkeeran Eyitriyanār, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby

May you live long, my friend!
Old rains have fallen making
sesame pods lose perfection and
and become mushy, toward the
last days of the rainy season with
with few showers.
Hating to stand in the mud,
a red-eyed female buffalo bawls
in the middle of the night.
Even at that fearful time, because
of the torment of my wounded
heart, my eyes are unable to sleep,
like the guards who calculate time
with caution.
Notes: வரைவு கடாயது.

பொ. வே. சோமசுந்தரனார் உரை – தனக்கு ஒவ்வாத மழை பெய்தமையாலே உருகிச் சிதடாய்ப் போன எள்ளையுடைய காலம் என்றது, தனக்கு ஒல்லாத் துன்பங்களாலே நெஞ்சுருகி யான் அழியாநின்றேன் என்னும் குறிப்பிற்று என்க. இற்செறிக்கப்பட்ட தன் நிலைக்கு உள்ளுறை உவமமாகச் சேற்று நிலை முனையஇய செங்கட் காரான் கரைதலைக் கூறினாள். விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

Meanings: பழ மழை பொழிந்தென – since the old rains fell, பதன் அழிந்து – perfection got ruined, உருகிய சிதட்டுக்காய் – mushy pods with empty insides (sesame pods), எண்ணின் – with sesame, having sesame, சில் பெயல் கடை நாள் – small showers toward the end of the season, சேற்று நிலை – to stand in the mud, முனைஇய – hating (சொல்லிசை அளபெடை), செங்கண் காரான் – a red-eyed female buffalo, நள்ளென் யாமத்து – in the pitch dark night, ஐ எனக் கரையும் – shouts loudly, அஞ்சுவரு பொழுதினானும் – even at that fearful time, என் கண் துஞ்சா – my eyes do not sleep, வாழி தோழி – may you live long my friend, காவலர் கணக்கு ஆய் வகையின் – like the guards who calculate time in an analytical manner, வருந்தி – saddened, என் நெஞ்சு – my heart, புண் உற்ற – got hurt, விழுமத்தான் – because of the sorrow, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 262,
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது

ஊஉர் அலர் எழச் சேரி கல்லென
ஆனாது அலைக்கும், அறன் இல் அன்னை
தானே இருக்க தன் மனை, யானே
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க
உணல் ஆய்ந்திசின், அவரொடு சேய்நாட்டு 5
விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன்
கரும்பு நடு பாத்தி அன்ன
பெரும் களிற்று அடிவழி நிலைஇய நீரே.

Kurunthokai 262,

Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the heroine’s friend said to her

Gossip will rise in town;
there will be uproar in our street;
and your unfair mother will be
left alone in her house.
I think about you being with him
in a faraway land in the foothills
of a sky-high blocking mountain,
drinking water from puddles
created by the feet of a large bull
elephants, that appear like the
water in the plots where sugarcane
is planted,
and eating gooseberries that will
make your sharp teeth shine.
Notes: தோழி தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தியது. அறன் இல் யாய் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவியின் நிலையை ஊகத்தால் அறிந்து அவள் விரும்பிய தலைவர்க்கு அவளை மணஞ் செய்வித்தற்கு முயறல் போக்கி, இற்செறித்தல் முதலியவற்றானே அலைத்துக் கொடுமை செய்தலின், அறனில் அன்னை என்றாள். ஈண்டு அறன் என்பது தலைவியைத் தலைவனோடே கூட்டுவிக்கும் செயலை. அறன்இல்லாரோடுஉடனுறைதலும்தகாதுஎன்பாள்‘தானே இருக்க தன் மனை’ என வெறுத்தோதினாள். குறுந்தொகை 244, 262, நற்றிணை 63, 145, 376.

பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெல்லிக்காயின் துவராலே பல் மாசுபடுதலின் அது தீரவும் நெல்லிக்காயைத் தின்ற பின்னர் நீர் பருகின் அஃது இனிதாதலினாலும் ‘முள் எயிறு தயங்க நீருணல்’ என்றாள். தலைவனோடேஇருந்துஉண்ணப்படுவதுவறியநீரேஆயினும்அமிழ்தினும்இனிதென்பதுபட‘அவரொடு உணல்’ என்றாள். இது தான் நீ இப்பொழுது செய்யக்கிடந்த அறம் என்பாள் ‘ஆய்ந்திசின்’ என்றாள். சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

Meanings: ஊஉர் அலர் எழ – slander arose in town (ஊஉர் – இன்னிசை அளபெடை), சேரி கல்லென – loud noises in our streets, loud noise in our neighborhood, ஆனாது அலைக்கும் – with unsettling sorrow, அறன் இல் அன்னை – mother without fairness (அறன்- அறம்என்பதன்போலி), தானே – she (ஏ – பிரிநிலை, exclusion), இருக்க – staying there, தன் மனை – in her house, யான் – me, ஏ – அசை நிலை, an expletive, நெல்லி தின்ற – gooseberry eating, முள் எயிறு – sharp teeth, தயங்க – to shine, உணல் – eating, ஆய்ந்திசின் – I have analyzed this, I have thought about this (சின் – தன்மை அசை, an expletive of the first person), அவரொடு – with him, சேய் நாட்டு – in a distant country, விண் தொட நிவந்த – sky touching high, விலங்கு மலை – blocking mountain, கவாஅன் – adjoining mountains, mountain slopes (இசை நிறை அளபெடை), கரும்பு நடு பாத்தி அன்ன – like plots where sugarcane is planted, பெரும் களிற்று – of a big male elephant, அடிவழி – footprints, depressions caused by the feet, நிலைஇய – stayed (சொல்லிசை அளபெடை), நீர் – water, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 263,

பெருஞ்சாத்தனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி

மறிக் குரல் அறுத்துத் தினைப் பிரப்பு இரீஇச்
செல் ஆற்றுக் கவலைப் பல் இயம் கறங்கத்
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்திப்
‘பேஎய்க் கொளீஇயள் இவள்’ எனப்படுதல் 5
நோதக்கன்றே தோழி, மால் வரை
மழை விளையாடும் நாடனைப்
பிழையேம் ஆகிய நாம் இதன் படவே.

Kurunthokai 263,

Perunchāthanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby

A young goat’s neck is slit,
offering of millet is given,
and many instruments are played
in the river islet, with prayers to
many big gods.
These are nothing but appearances
that will not heal your affliction.
To hear them say that you are
possessed by a spirit hurts me,
O friend.
There is no fault in our conduct
with the lord of the mountains,
where clouds play on tall peaks.
Notes: அன்னை வெறியாட்டெடுக்க கருதியதை தலைவிக்குக் கூறுவாளாகித் தலைவனுக்கு உரைத்தது. கவலை (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆற்றிடைக் குறை. ஆற்றிடைக் குறையில் தெய்வம் உறையும் என்பதை ‘கவின்பெறு துருத்தியும்’ (திருமுருகாற்றுப்படை 223) என்றும் ‘நல்யாற்று நடுவும்’ (பரிபாடல் 4-67) என்றும் பிறர் கூறுமாற்றானும் உணர்க. மறி – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

Meanings: மறிக் குரல் அறுத்து – cutting a young goat’s neck, தினைப் பிரப்பு – millet offerings, Italian millet, Setaria italicum, இரீஇ – placing, giving (சொல்லிசை அளபெடை), செல் ஆற்று கவலை – island in the moving river, path with people movement, பல் இயம் கறங்க – many instruments sound, தோற்றம் அல்லது – nothing but an appearance, நோய்க்கு மருந்து ஆகா – is not the cure to your disease, வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்தி – praying to many different big gods, பேஎய்க் கொளீஇயள் இவள் – she is seized by a spirit, she is seized by a ghoul (பேஎய் – இன்னிசை அளபெடை, கொளீஇயள் – சொல்லிசை அளபெடை), எனப்படுதல் – to be spoken of like that, நோதக்கன்று – it hurts, it is painful, ஏ – அசை நிலை, an expletive, தோழி – my friend, மால் வரை – tall mountains, மழை விளையாடும் – clouds play, நாடனை – the man from such country, பிழையேம் ஆகிய நாம் – for no fault of us, இதன்பட – for this, to be in love, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 264,

கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

கலி மழை கெழீஇய கான்யாற்று இகு கரை
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு
நயந்தனன் கொண்ட கேண்மை,
பயந்தக் காலும் பயப்பு ஒல்லாதே. 5

Kurunthokai 264,
Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend

My pallor has nothing to do
with the loving friendship
that he has with me, the man
from the country,
where, on the low banks of a
forest river swollen by loud
rains, peacocks that sway their
luxuriant, long plumes while
walking and dancing, screech.
Notes: தலைவனின் பிரிவால் வருந்திய தலைவி ‘நான் ஆற்றியிருப்பேன்’ என்றது.

பொ. வே. சோமசுந்தரனார் உரை – மழையின் ஆரவாரத்தையுடைய காட்டாற்றின் கரைக்கண் உள்ள மயில், இனி முகில் மழை பொழிதல் உறுதியென எண்ணிக் களித்து ஆடுதலே அன்றி அகவினாற் போன்று என் உள்ளம் அவனது கேண்மையை நினையுந்தோறும் களித்து மகிழாநின்றது என்பது குறிப்பு. கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

Meanings: கலி மழை கெழீஇய – with the loud rains that fell (கெழீஇய – சொல்லிசை அளபெடை), கான் யாற்று – of a forest river, இகு கரை – low bank, ஒலி நெடும் பீலி – thick long plumes, துயல்வர – swaying, இயலி – walking, ஆடு மயில் அகவும் – dancing peacocks screech, நாடன் – the man from such country, நம்மொடு – with me, நயந்தனன் கொண்ட கேண்மை – the friendship he has (with me) with love, பயந்தக் காலும் – even when I have pallor, பயப்பு ஒல்லாது – it is not agreeable with the pallor, ஏ – அசை நிலை, an expletive

eகுறுந்தொகை 265,

கருவூர்க்கதப் பிள்ளை, குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது

காந்தள் அம் கொழு முகை காவல் செல்லாது
வண்டு வாய் திறக்கும் பொழுதில், பண்டும்
தாம் அறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடன் அறி மாக்கள் போல இடன் விட்டு
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன், 5
நன்னர் நெஞ்சத்தன் தோழி, நின் நிலை
யான் தனக்கு உரைத்தனென் ஆகத்
தான் நாணினன், இஃது ஆகாவாறே.

Kurunthokai 265, Karuvūr Kathapillai, Kurinji Thinai – What the heroine’s friend said to her
He felt ashamed when I told
him about your situation,
realizing that it cannot go on
like this.
He has a good heart, the lord
of the lofty mountains, where
pretty, plump glory lily buds
give way and unfold their petals
when bees pry them open, like
dutiful men, who, when they see
great wise elders they know from
past, know their responsibilities.
Notes: பொருள்வயின் தலைவன் பிரிந்த பொழுது, ‘அவர் பிரிந்தது வரைவு கோடல் காரணமாக’ என்று கூறி தோழி தலைவியை ஆற்றுவித்தது.

உ. வே. சாமிநாதையர் உரை – தானே மலரும் பருவத்திற்கு முன் வண்டு மலரைத் திறக்கும் என்றது களவு வெளிப்பட்டு அலராதலுக்கு முன் வரைந்து கொள்ளும் எண்ணம் உடையான் தலைவன் என்ற குறிப்பினது.

Meanings: காந்தள் அம் – beautiful glory lilies, Gloriosa superba, கொழு முகை – fat buds, காவல் செல்லாது – not waiting for them to bloom, வண்டு வாய் திறக்கும் பொழுதில் – when bees open them and cause them to bloom (by swarming), பண்டும் தாம் அறி – who we knew in the past, செம்மைச் சான்றோர்க் கண்ட – those who saw wise elders, கடன் அறி மாக்கள் போல – like people who know responsibilities, இடன் விட்டு – allowing, இதழ் தளை அவிழ்ந்த – petals release their ties (and bloom), ஏகல் வெற்பன் – the lord of the lofty mountains, நன்னர் நெஞ்சத்தன் தோழி – he has a good heart O friend, நின் நிலை யான் தனக்கு உரைத்தனென் ஆக – when I told him about your situation, தான் நாணினன் – he was embarrassed, he was shy, இஃது – this, ஆகாவாறு – it cannot happen (any more), ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 266,

நக்கீரனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

நமக்கு ஒன்று உரையார் ஆயினும், தமக்கு ஒன்று
இன்னா இரவின் இன் துணை ஆகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ,
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே?

Kurunthokai 266,

Nakkeeranār, Pālai Thinai – What the heroine said to her friend

Even if he does not send
a message to me, the man
who was able to leave me,
I can understand that.
How can he not send a bird
message to the vēngai tree
in our grove, a sweet friend
to him during painful nights?

Notes: தலைவன் வரையாது பிரிந்தவிடத்து தலைவி கூறியது.

உ. வே. சாமிநாதையர் உரை – வேங்கைக்குத் தூது மறந்தனர் கொல் என்றது, இரவுக் குறியின் இடத்து வந்து அளவளாவிய செய்திகளை மறந்தனரோ என்னும் கருத்தினது.

Meanings: நமக்கு ஒன்று உரையார் ஆயினும் – even if he doesn’t say something for my sake, தமக்கு – to him, ஒன்று இன்னா இரவின் இன் துணை ஆகிய படப்பை வேங்கைக்கு – to the vēngai tree in the grove which was a sweet friend during painful nights, வேங்கை – Kino Tree, Pterocarpus marsupium, மறந்தனர் கொல் – did he forget (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), ஓ – அசை நிலை, an expletive, துறத்தல் வல்லியோர் – the man who was able to leave me, புள்வாய்த் தூது – message through the birds, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 267,

காலெறி கடிகையார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

இருங்கண் ஞாலத்து ஈண்டு பயப் பெரு வளம்
ஒருங்குடன் இயைவது ஆயினும், கரும்பின்
கால் எறி கடிகைக் கண் அயின்றன்ன
வால் எயிறு ஊறிய வசை இல் தீ நீர்க்
கோல் அமை குறுந்தொடிக் குறுமகள் ஒழிய, 5
ஆள் வினை மருங்கில் பிரியார், நாளும்
உறன் முறை மரபிற் கூற்றத்து
அறன் இல் கோள் நற்கு அறிந்திசினோரே.

Kurunthokai 267,

Kāleri Kadikaiyār, Pālai Thinai – What the hero said to his heart

Those who know well the
ancient tradition of Kootruvan
who kills every day without
any compassion, will not part
from the young woman,
……….with small, thick bangles, her
……….white teeth secreting faultless
……….sweet liquid as sweet as the
……….pieces of sugarcane cut from
……….the bases of the canes,
despite all the riches that this
wide world yields, which they can
earn through their own efforts.

Notes: தலைவன் செலவு தவிர்த்தது.

பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரும்பின் அடிப்பகுதியை மிகவும் இனிதாதல் பற்றிக் ‘கரும்பின் கால் எறி கடிகை’ என்றான். சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

Meanings: இருங்கண் ஞாலத்து – of the wide spaced earth, ஈண்டு பயப் பெரு வளம் – all the riches that it yields, ஒருங்குடன் இயைவது ஆயினும் – even if they are all put together, கரும்பின் கால் – sugarcane stalks, எறி கடிகை கண் – the cut pieces, அயின்றன்ன – like eating them, வால் எயிறு – white teeth, ஊறிய – secreted, வசை இல் தீ நீர் – faultless sweet liquid, கோல் அமை – being thick, being rounded, குறுந்தொடிக் குறுமகள் – young girl with small bangles, ஒழிய – parting, ஆள் வினை – manly effort, earning wealth, மருங்கில் – because of that, due to that, பிரியார் – they will not part, நாளும் – daily, உறன் முறை மரபிற் கூற்றத்து – of the god of death with an ancient tradition, Kootruvan, அறன் இல் – without compassion, without fairness (அறன்- அறம்என்பதன்போலி), கோள் – seizing, murder, நற்கு – well (நற்கு – நன்கு என்பதன் விகாரம்), அறிந்திசினோர் – those who understand (இசின் – படர்க்கையின் கண் வந்தது, an expletive of the third person), ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 268,

கருவூர்ச் சேரமான் சாத்தனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி

‘சேறிரோ’ எனச் செப்பலும் ஆற்றாம்,
‘வருவிரோ’ என வினவலும் வினவாம்,
யாங்குச் செய்வாம் கொல் தோழி, பாம்பின்
பையுடை இருந்தலை துமிக்கும் ஏற்றொடு
நடுநாள் என்னார் வந்து 5
நெடுமென் பணைத்தோள் அடைந்திசினோரே?

Kurunthokai 268,

Karuvūr Chēramān Sathanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby

We are unable to ask him
whether he is going to leave,
or when he will be back,
……….the man who comes
……….without thinking in the
……….middle of the night when
……….thunder chops large heads
……….of snakes with hoods,
to embrace your long, delicate,
arms that are like bamboo.
What can we do, my friend?
Notes: தலைவன் சிறப்புறத்தே இருப்ப, இரவுக்குறிக்கண் உண்டாகும் ஏதத்திற்கு அஞ்சுதலையும் தலைவனது வருகையின் இன்றியமையாமையையும் கூறி, வரைந்து கோடலே தக்கதெனப் புலப்படுத்தியது. There is a convention that thunder ruins and kills snakes. Akanānūru 92, 119, 182, 202, 274, 323, 328, Kalithokai 45, 113, Kurunthokai 158, 190, 268, 391 and Natrinai 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, Puranānūru 17, 37, 58, 126, 211, 366 and 369 have similar descriptions of thunder ruining or killing snakes. சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

Meanings: சேறிரோ எனச் செப்பலும் ஆற்றாம் – we are unable to ask him whether he is going to leave, வருவிரோ என வினவலும் வினவாம் – we cannot ask him when he will come back, யாங்குச் செய்வாம் – what can we do, கொல் – அசை நிலை, an expletive, தோழி – O friend, பாம்பின் பையுடை – of snakes with hoods, இருந்தலை – big heads, துமிக்கும் – chops, ஏற்றொடு – with thunder, நடுநாள் என்னார் வந்து – not thinking he comes in the middle of the night, நெடுமென் பணைத்தோள் – long delicate bamboo-like arms, அடைந்திசினோர் – the man who embraced (இசின் – படர்க்கையின் கண் வந்தது, an expletive of the third person), ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 269,

கல்லாடனார், நெய்தற் திணை – தலைவி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி

சேயாறு சென்று துனை பரி அசாவாது
உசாவுநர்ப் பெறினே நன்று, மற்றில்ல
வயச் சுறா எறிந்த புண் தணிந்து எந்தையும்
நீல் நிறப் பெருங்கடல் புக்கனன், யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய 5
உப்பு விளை கழனிச் சென்றனள், அதனால்,
பனி இரும் பரப்பின் சேர்ப்பற்கு
இனி வரின் எளியள், என்னும் தூதே.

Kurunthokai 269,

Kallādanār, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby

It would be nice if someone
can go on the long path, walking
swiftly without getting tired, to give
him the message,
that the wound father got catching
a powerful shark has healed and
he has gone back to the blue-colored,
vast ocean, mother has gone to the
salt pans to sell salt and buy white
rice,
and that it would be easy for the lord
of the cold, wide shore to come and
see me now. This is my desire!

Notes: தோழிக்குக் கூறுவாள் போல் தலைவனிடம் கூறியது. அகநானூறு 140 – நெல்லின் நேரே வெண்கல் உப்பு, அகநானூறு 390 – நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளீரோ, குறுந்தொகை 269 – உப்பை மாறி வெண்ணெல் தரீஇய. குறுந்தொகை 52, மற்றில்ல – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பிற இலவாகும், உ. வே. சாமிநாதையர் உரை – மன் தில்ல, தில் விழைவின்கண் வந்தது, தமிழண்ணல் உரை – மன் தில்ல, மன் – மிக, தில் விருப்பத்தை உணர்த்தும் இடைச்சொல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நற்றிணை 392 – மன் தில்ல என்னும் இடைச்சொற்கள் மற்றில எனப் புணர்ந்தன. Barter is mentioned in Akanānūru 60, 61, 126, 140, 245, 296, 390, Natrinai 183, Kurunthokai 221, 269, Ainkurunūru 47, Porunarātruppadai 214-215, 216-7, Pattinappālai 28-30, and Malaipadukādam 413-414. துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19). துனை பரி அசாவாது – உ. வே. சாமிநாதையர் உரை – விரையும் நடையினால் வருந்தாது, விரைந்து நடந்து போதலுக்கு சோர்வுறாது, பொ. வே. சோமசுந்தரனார் உரை, தமிழண்ணல் உரை – விரைகின்ற புரவிகள் தளராமையிலே. மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

Meanings: சேய் ஆறு சென்று – going afar on a path, துனை பரி – walking fast, அசாவாது – without getting tired, உசாவுநர்ப் பெறின் – to get someone who will give information (to him), ஏ – அசை நிலை, an expletive, நன்று – it would be very good, மற்றில்ல – nothing else or மன் – மிக, much, தில்ல – தில் விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச் சொல், ஈறு திரிந்தது வந்தது, a particle which implies desire, வயச்சுறா – powerful shark, big shark, எறிந்த – cut, attacked, புண் தணிந்து – wound has healed, எந்தையும் – also my father, நீல் நிறப் பெருங்கடல் – blue big ocean (நீல் – கடைக்குறை, poetical license which consists in the shortening of a word by elision of one or more letters in the end), புக்கனன் – he has entered, யாயும் – my mother, உப்பை மாறி – selling salt, வெண்ணெல் தரீஇய – to bring white rice, to get white rice (தரீஇய – சொல்லிசை அளபெடை), உப்பு விளை கழனி – salt pans where salt crystals grow, சென்றனள் – she went, அதனால் – so, பனி – cold, இரும் – vast, பரப்பின் சேர்ப்பற்கு – to the lord of the vast seashore, இனி வரின் – if he comes now, எளியள் – it would be easy to see her, என்னும் – that it would be, thus, தூது – message, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 270,

பாண்டியன் பன்னாடு தந்தான், முல்லைத் திணை – தலைவன் மேகத்திடம் சொன்னது

தாழ் இருள் துமிய, மின்னித் தண் என
வீழ் உறை இனிய சிதறி ஊழின்
கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப்
பெய்து இனி வாழியோ பெரு வான், யாமே,
செய் வினை முடித்த செம்மல் உள்ளமோடு, 5
இவளின் மேவினம் ஆகிக் குவளைக்
குறுந்தாள் நாள் மலர் நாறும்
நறு மென் கூந்தல் மெல் அணையேமே.

Kurunthokai 270,

Pāndiyan Pannādu Thanthān, Mullai Thinai – What the hero said to the clouds

May you live long, O huge clouds
showering sweetly cool droplets of
water along with lightning bolts that
ruin deep darkness, and according to
to tradition, roaring again and again
with rumbling thunder that sounds
like drums struck continuously with
sticks!
Now that I have finished my tasks
that I set to do, and have a fulfilled
heart with great love for her, I am lying
on her soft hair with the fragrance of
fresh blue waterlilies with short stems.
Notes: வினை முற்றி மீண்ட தலைவன் சொன்னது. செம்மல் உள்ளமோடு (5) – உ. வே. சாமிநாதையர் உரை – நிறைவை உடைய உள்ளதோடு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைமைத் தன்மையுடைய உள்ளத்தோடு.

பொ. வே. சோமசுந்தரனார் உரை – புலவரின் பெயர் பாண்டியன் பன்னாடு தந்தான் எனப்படுத்தலின், இவரே நாடு தரற்பொருட்டுத் தன் தலைவியைப் பிரிந்து சென்று வினை முற்றி மீண்டு தலைவியோடு இருந்த பொழுது பெய்த மழையாலே உவகையுற்றுச் சுட்டி ஒருவர் பெயர் கூறாது அகப்பொருட்துறையில் இப்பாடலை யாத்தனர் என்று கருதுவது மிகையாகாது.

Meanings: தாழ் இருள் துமிய – ruining staying darkness, மின்னி – flashing lightning streaks, தண் என – causing coldness, வீழ் உறை – falling down, இனிய சிதறி – scattering your sweet (water), ஊழின் – according to tradition, கடிப்பு – small sticks, drum sticks, இகு – beaten, முரசின் முழங்கி – roaring like drums (முரசின் – இன் உருபு ஒப்புப் பொருளது), இடித்து இடித்து – thundering again and again, பெய்து – falling, இனி – now, வாழி – may you live long, ஓ – அசை நிலை, an expletive, பெரு வான் – huge clouds, யாம் – myself (தன்மைப் பன்மை, first person plural), ஏ – அசை நிலை, an expletive, செய் வினை முடித்த – since I finished my task, செம்மல் உள்ளமோடு – with a noble heart, with a fulfilled heart, இவளின் மேவினம் ஆகி – me being with the desire to be with her (மேவினம் – தன்மைப் பன்மை, first person plural), குவளை – blue waterlilies, Blue nelumbo, Nymphaea odorata, குறும் தாள் நாள் மலர் – short-stemmed fresh flowers, நாறும் – spreads fragrance, நறு மென் கூந்தல் – fragrant soft hair, மெல் – delicate, அணையேம் – I am lying (தன்மைப் பன்மை, first person plural), ஏ – அசை நிலை, an expletive

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.