Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

குறுந்தொகை 291-300

குறுந்தொகை 291,

கபிலர், குறிஞ்சித் திணை – தலைவன் பாங்கனிடம் சொன்னது

சுடு புன மருங்கில் கலித்த ஏனல்
படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே,
இசையின் இசையா இன்பாணித்தே
கிளி அவள் விளியென, எழல் ஓல்லாவே,
அது புலந்து அழுத கண்ணே சாரல் 5
குண்டு நீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளை
வண்டு பயில் பல் இதழ் கலைஇத்
தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றனவே.

Kurunthokai 291,

Kapilar, Kurinji Thinai – What the hero said to his friend

The parrots that came to attack
her flourishing millet field in the
burned and cleared land, thought
that her bird-chasing bamboo
gadget’s plucking sounds, along
with her voice, were sweet and
rhythmic, and refused to fly away.
Upset about it, she cried, her eyes
resembled blue waterlily flowers,
blossoming in the deep fresh springs,
their many petals swarmed by bees,
in disarray from cold water droplets.
Notes: இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் தன் தோழனிடம் தலைவியின் நிலைமை கூறியது. குறுந்தொகை 382 – தண் துளிக்கு ஏற்ற பைங்கொடி முல்லை. அகநானூறு 26 – தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ்செய் மண். குளிர் – தினைப் புனத்தில் கிளிகளை ஓட்டுபவர்கள் மூங்கிலை வீணை போல் கட்டித் தெறிக்கும் கருவி. பயில் (7) – இரா. இராகவையங்கார் உரை – செறிதல், உ. வே. சாமிநாதையர் உரை – பழகுதல். கிளி கடி: அகநானூறு 118 – குரல் ஏனல் கிளி கடி பாடலும் ஒழிந்தனள், அகநானூறு 194 – கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும், குறுந்தொகை 142 – புனக் கிளி கடியும் பூங்கண் பேதை, குறுந்தொகை 198 – படுகிளி கடிகம் சேறும், குறுந்தொகை 217 – தினை கிளி கடிக எனின், குறுந்தொகை 291 – ஏனல் படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே இசையின் இசையா இன்பாணித்தே, குறுந்தொகை 360 – ஏனல் உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே, பதிற்றுப்பத்து 78 – மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலிக் கிளி கடி மேவலர் புறவுதொறும் நுவல. இசையா – இசைத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

Meanings: சுடு புன மருங்கில் – in the burned and cleared field, கலித்த ஏனல் – flourishing millet crops, செந்தினை, red/black millet, Panicum indicum or Setaria italica, படுகிளி – parrots that come to seize millet, parrots that dive down to eat millet, கடியும் கொடிச்சி – the young woman in the mountain who chases, கை – hands, குளிர் – bird chasing bamboo gadget, ஏ – அசை நிலை, an expletive, இசையின் இசையா – played the bamboo musical gadget as she sang, இன்பாணித்தே – with sweet tempo, கிளி அவள் விளியென – the parrots thought that it was her music, எழல் – rising up and flying, ஓல்லா – not agreeable, ஏ – அசை நிலை, an expletive, அது புலந்து அழுத கண் – she was upset and her eyes dropped tears, ஏ – அசை நிலை, an expletive, சாரல் – mountain slopes, குண்டு நீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளை – blue waterlilies that have bloomed in a deep fresh spring, Blue nelumbo, Nymphaea odorata, வண்டு பயில் – bees swarm, பல் இதழ் கலைஇ – causing disarray to many petals (கலைஇ – சொல்லிசை அளபெடை), தண் துளிக்கு ஏற்ற – accepted cold droplets, மலர் போன்றன – they were like flowers, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 292,

பரணர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி

மண்ணிய சென்ற ஒண் நுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்ற தன் தப்பற்கு,
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண் கொலை புரிந்த நன்னன் போல, 5
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை,
ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்தெனப்
பகை முக ஊரின் துஞ்சலோ இலளே.

Kurunthokai 292,

Paranar, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby

Mother who does not sleep,
like a town near a battlefield,
since he came one day as a guest
with a smiling face, is like Nannan,
who killed a bright-browed young
woman, who went to bathe in the
river, for eating a mango the river
brought from his tree, refusing an
offer of eighty-one elephants and
a gold statue equal to her weight.
May she suffer in eternal hell!
Notes: தலைவி தமரால் பாதுகாக்கப்படுகின்றாள் என்பதையும் வரைந்து கொள்ளுதலே நன்று என்பதையும் புலப்படுத்துகின்றாள். புறநானூறு151 – நன்னன் மருகன் அன்றியும் நீயும் முயங்கற்கு ஒத்தனை. There is a temple (மாசாணி அம்மன் கோவில்) for this young woman in Ānaiamalai, Coimbatore district, where she is worshipped to this day. நன்னன் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவன் ஒரு குறுநில மன்னன். மலைபடுகடாம் கொண்ட நன்னன் அல்லன். மலைபடுகடாம் கொண்ட நன்னன் செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் எனப்படுவான். ஈண்டு பெண் கொலை செய்த நன்னன் கொண்கானவேள் நன்னன் எனப்படுவான்.

Meanings: மண்ணிய சென்ற – went to bathe, ஒண் நுதல் அரிவை – bright fore-headed young woman, புனல்தரு பசுங்காய் – fresh fruit that the river brought, a mango, தின்ற தன் தப்பற்கு – for her mistake of eating it, ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு – along with nine times nine (81) male elephants, அவள் நிறை பொன் செய் பாவை கொடுப்பவும் – even when offered a gold statue of her in full size, கொள்ளான் – he did not accept, he refused, பெண் கொலை புரிந்த நன்னன் போல – like Nannan who murdered a young woman, வரையா நிரையத்து – to hell with no limits, செலீஇயர் – may she go (சொல்லிசை அளபெடை, இயர் – வியங்கோள் வினைமுற்று விகுதி, verb ending with a command, இகழ்ச்சிப்பொருளில் வந்தது, used to show ill will), ஓ – அசை நிலை, an expletive, அன்னை – my mother, ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்தென – when he came as a guest with a smiling face, பகைமுக ஊரின் – like a town that is near the battlefield (ஊரின் – இன் உருபு ஒப்புப் பொருளது), துஞ்சல் – sleeping, ஓ – அசை நிலை, an expletive, இலள் – she does not, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 293,

கள்ளில் ஆத்திரையனார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கள்ளில் கேளிர் ஆத்திரை உள்ளூர்ப்
பாளை தந்த பஞ்சி அம் குறுங்காய்
ஓங்கி இரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
ஆதி அருமன் மூதூர் அன்ன,
அய வெள்ளாம்பல் அம் பகை நெறித் தழை 5
தித்திக் குறங்கின் ஊழ் மாறு அலைப்ப
வருமே சேயிழை அந்தில்
கொழுநன் காணிய, அளியேன் யானே.

Kurunthokai 293,

Kallil Āthiraiyanār, Marutham Thinai – What the heroine said to her friend

Like Āthi Aruman’s town,
where drinkers
beat a path to the toddy shop,
and when they cannot get toddy,
return with fibrous, small palmyra
fruits with soft flesh,
grown on the spathes of the tall,
dark palmyra that grows in the town,
his mistress, decked in lovely jewels,
her garment woven with beautiful
white waterlilies and varying leaves,
swaying back and forth, brushing
against her thighs with pallor spots,
is coming here to see my lord.
I am a pathetic woman, for sure.
Notes: பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்குத் தூதாக வந்த தோழியிடம் கூறியது. நற்றிணை96 – நெய்தல் அம் பகை நெறித் தழை, ஐங்குறுநூறு 187 – நெய்தல் அம் பகைத்தழை.

உ. வே. சாமிநாதையர் உரை – பனை மரத்தில் உள்ள கள்ளை உண்ணச் சென்றோர், அதனை உண்ணுதலோடு அமையாது நுங்கைக் கைக்கொண்டு அப்பனைக்கு ஊறு புரிந்தாற்போலத் தலைவனைக் காண வருபவள் அவனைக் கைக்கொண்டு தலைவி இழிவுபடுத்திச் செல்வாள் என்பது உவமையால் பெறப்படும் கருத்து. வரலாறு: ஆதி அருமன். கள்ளில் (1) – உ. வே. சாமிநாதையர் உரை – கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கள் விற்கும் கடை.

Meanings: கள் இல் கேளிர் – those who are going to drink liquor, those who are going to a liquor shop, ஆத்திரை – travel, உள்ளூர்ப் பாளை தந்த – given by the town’s palm tree spathes, பஞ்சி அம் குறுங்காய் – little fruit soft and beautiful like cotton/fibrous, ஓங்கி இரும் பெண்ணை நுங்கொடு பெயரும் – leaves with soft palmyra seeds (nungu) from the tall dark female palmyra tree, Borassus flabellifer, ஆதி அருமன் மூதூர் அன்ன – like the ancient town of Āthi Aruman, அய வெள் ஆம்பல் – pond’s white waterlilies, அம் – beautiful, பகை நெறித் தழை – garment woven well from leaves that differ from each other, U. Ve. Sa – மாறுபட்ட முழு நெறியை உடைய தழை உடை, தித்தி – pallor spots, குறங்கின் – on her thighs, ஊழ் மாறு அலைப்ப – sway back and forth, வருமே – will come, சேயிழை – woman with perfect jewels, woman with lovely jewels (அன்மொழித்தொகை), அந்தில் – in that place, கொழுநன் காணிய – to see my husband, அளியேன் – I am pitiable, I am pitiful, யான் – me, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 294,

அஞ்சில் ஆந்தையார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி

கடல் உடன் ஆடியும், கானல் அல்கியும்,
தொடலை ஆயமொடு தழுவணி அயர்ந்தும்,
நொதுமலர் போலக் கதுமென வந்து
முயங்கினன் செலினே அலர்ந்தன்று மன்னே,
தித்தி பரந்த பைத்து அகல் அல்குல் 5
திருந்திழை துயல்வுக் கோட்டு அசைத்த பசுங்குழைத்
தழையினும், உழையின் போகான்
தான் தந்தனன், யாய் காத்து ஓம்பல்லே.

Kurunthokai 294,

Anjil Ānthaiyār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby

He came swiftly like a stranger,
embraced you and ran away
when we were bathing in the sea,
resting in the seashore grove,
and performing kuravai dances,
hand in hand with our friends
wearing garlands. There was gossip.
He has been at your side, even closer
than your swaying skirt made of tender
green leaves, tied around your wide
loins resembling the spotted hoods
of snakes, decorated with perfect jewels.
Because of what he has done, mother
keeps a close guard over you.
Notes: பகற்குறிக்கண் தலைவன் வந்த இடத்து தோழி கூறியது. தித்தி பரந்த பைத்து அகல் அல்குல் (5) – இரா. இராகவையங்கார் உரை – பாம்பின் பொறிப் படத்தின் தன்மைத்தாய் அகன்ற அல்குல், உ. வே. சாமிநாதையர் உரை – தேமல் படர்ந்த விரிந்த அகன்ற அல்குல். பாம்பின் பொறி: பொருநராற்றுப்படை 69 – பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப – பொ. வே. சோமசுந்தரனார் உரை – படம் விரித்த பாம்பினது பொறியை ஒப்ப.

Meanings: கடல் உடன் ஆடியும் – played together in the ocean, கானல் அல்கியும் – stayed in the seashore grove, தொடலை ஆயமொடு – with garland wearing friends, தழுவணி அயர்ந்தும் – performed kuravai dances, நொதுமலர் போல – like a stranger, கதுமென வந்து முயங்கினன்– since he came rapidly and hugged (கதுமென – விரைவுக்குறிப்பு), செலின் – went, ஏ – அசை நிலை, an expletive, அலர்ந்தன்று – gossip has risen, மன், ஏ – அசை நிலைகள், தித்தி பரந்த – pallor spread, spots spread, பைத்து – wide, like that of a snake’s hood, அகல் அல்குல் – wide loins, wide hips, திருந்திழை – perfect jewels, துயல்வு – swaying, கோட்டு – on the sides, அசைத்த பசுங்குழைத் தழையினும் – even more than the moving skirt made with tender green leaves, உழையின் போகான் – he is not going away from you, தான் தந்தனன் – he gave, யாய் – mother, காத்து – protecting, ஓம்பல் – nurturing, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 295,

தூங்கலோரியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது

உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும்
தழை அணிப் பொலிந்த ஆயமொடு, துவன்றி
விழவொடு வருதி நீயே, இஃதோ
ஓர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை
பெரு நலக் குறுமகள் வந்தென, 5
இனி விழவு ஆயிற்று என்னும் இவ்வூரே.

Kurunthokai 295,

Thoongalēriyār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero

You bring them here with festivities,
your beautiful mistresses wearing strung
garlands, ornaments, hair decorations
and garments made with leaves.
This town has begun to say that once this
man lived off a single cow with no wealth.
Now his life has become a festival after the
greatly virtuous young woman came.
Notes: பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் வாயில் வேண்டியபொழுது தோழி கூறியது.

Meanings: உடுத்தும் – wearing as clothes, தொடுத்தும் – stringing and wearing as garlands, பூண்டும் – wearing as ornaments, செரீஇயும் – thrusting on the hair, placing on the hair (செரீஇ – சொல்லிசை அளபெடை), தழை அணி – garments made with leaves, பொலிந்த – beautiful, splendid, ஆயமொடு – with many women, with many mistresses, துவன்றி – together, closely, விழவொடு வருதி – you come with festivities, நீயே – you, இஃது – here, ஓ – அசை நிலை, an expletive, ஓர் ஆன் – one cow, வல்சி – earnings that provide food, livelihood, சீர் இல் வாழ்க்கை – life without wealth, பெரு நல – very virtuous, very beautiful, குறுமகள் வந்தென – since the young woman came, இனி – after, விழவு ஆயிற்று – it has become a festival, என்னும் – what it says, இ – this, ஊர் – town, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 296,

பெரும்பாக்கனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி

அம்ம வாழி தோழி, புன்னை
அலங்கு சினை இருந்த அஞ்சிறை நாரை
உறு கழிச் சிறு மீன் முனையின் செறுவில்
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்
தண்ணந்துறைவன் காணின், முன்னின்று 5
கடிய கழறல் ஓம்புமதி, ‘தொடியோள்
இன்னள் ஆகத் துறத்தல்
நும்மின் தகுமோ’ என்றனை துணிந்தே.

Kurunthokai 296,

Perumpākkanār, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby

May you live long, my friend! Listen!
If you see the lord of the cool shore,
……….where a stork with beautiful wings
……….sitting on a swaying branch of a
……….punnai tree, hates the tiny fish in
……….the vast salt marshes, and goes to
……….the paddy fields to enjoy clusters
……….of rice and waterlily blossoms with
……….honey scent,
do not go and stand in front of him and
tell him boldly, “Look at what happened
to the young woman with bangles, since
you left her. Is this a fitting thing for you
to do?”
Use restraint with your words and remove
harshness.
Notes: ‘நீ தலைவனைக் கழறுதலை ஒழி’ என்று கூறும் வாயிலாக தன் நிலைமையைப் புலப்படுத்துகின்றாள்.
பொ. வே. சோமசுந்தரனார் உரை – புன்னை அலங்கு சினை இருந்த நாரை, கழிச் சிறு மீனை வெறுத்துழிச் செறுவில் நெய்தல் கதிரொடு நயக்கும் எய்தும் இன்பத்தினும் துன்பமே பெரிதாகலின் இது வெறுக்கத்தக்கதாயிற்று. இனி, நாம் வரைந்து கொண்டு மனையிலிருந்து இன்புறுதலே தருவதாம் என்னும் உள்ளுறை தோற்றி நின்றது காண்க. மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26). அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28)

Meanings: அம்ம – இடைச்சொல், a particle, listen to me, வாழி – அசை நிலை, may you live long, தோழி – my friend, புன்னை அலங்கு சினை – laurel tree’s moving branches, நாகம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, இருந்த அம் சிறை நாரை – stork with beautiful wings that was on (the laurel tree), white stork, Ciconia ciconia, உறு கழிச் சிறு மீன் – small fish in the large brackish waters, முனையின் – hating, செறுவில் – in the field, கள் நாறு நெய்தல் – with waterlilies with honey fragrance, கதிரொடு – with paddy spears, நயக்கும் – desires, தண்ணந்துறைவன் – lord of the cool beautiful seashore, காணின் – if I see him (தண்டுறைவன் என்பது தண்ணந்துறைவன் ஆவது, அம் – சாரியை, விரிக்கும் வழி விரித்தல்), முன்னின்று – standing in front of him, கடிய – harshness, கழறல் – chiding, ஓம்புமதி – protect your words (மதி – முன்னிலையசை, an expletive of the second person), தொடியோள் இன்னள் ஆகத் துறத்தல் – separating from her and making the young woman with bangles such, நும்மின் தகுமோ – is this fitting for you, என்றனை – in this manner, துணிந்து – boldly, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 297,

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது

அவ்விளிம்பு உரீஇய கொடுஞ்சிலை மறவர்
வை வார் வாளி விறல் பகை பேணார்
மாறு நின்று இறந்த ஆறு செல் வம்பலர்
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும்,
கல் உயர் நனந்தலை நல்ல கூறிப் 5
புணர்ந்து உடன் போதல் பொருள் என
உணர்ந்தேன் மன்ற, அவர் உணராவூங்கே.

Kurunthokai 297,

Kāviripoompattinathu Kārikkannanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her

I certainly realized before he did,
that the right thing for him to do is
to say kind words to you,
and take you with him to the vast
land with tall mountains,
where, what appears like villages
are the leaf-covered burial mounds
of wayfarers, killed by bandits, unable
to protect themselves from the victorious
onslaught of long, sharp arrows from
deadly bows with pulled, tight strings.
Notes: தோழி ‘இனித் தலைவனுடன் சென்று அவனை மணந்து வாழ்தலே செயற்குரியது’ என்று தலைவிக்குக் கூறியது.

பொ. வே. சோமசுந்தரனார் உரை – வாளி விறல் பகை பேணார் ஆறு செல் வம்பலர் பதுக்கை ஊர்போல் தோன்றும் வழியில் போதல் பொருள் என ன் உணர்ந்தேன் என்றது, அம்மறவர் செய்யும் கொடுமையினும்காட்டில் நம் தமர் செய்யும் கொடுமை பெரிது எனத் தலைவிக்கு குறிப்பால் உணர்த்தியவாறு. அவ்விளிம்பு (1) – உ. வே. சாமிநாதையர் உரை – அகரச்சுட்டு, மேல் விளிம்பைக் குறித்தது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய விளிம்பு, அகநானூறு 175-1 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தோளின் விளிம்பு உராயும்படி, தோளின் விளிம்பினை உரசிய, அகநானூறு 371-1 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய விளிம்புகளைக் கையால் உருவி நாணேற்றிய, வேங்கடசாமி நாட்டார் உரை – அழகிய விளிம்பினை உருவி நாண் ஏற்றிய. மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17). வை– வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91). நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings: அவ்விளிம்பு உரீஇய – rubbing the edges on the top, pulling the strings on the top (உரீஇய – சொல்லிசை அளபெடை), கொடும் சிலை – harsh bows, curved bows, மறவர் – wayside bandits, வை – sharp, வார் – long, வாளி – arrows, விறல் – victorious, பகை – enmity, பேணார் – unable to protect themselves, மாறு நின்றுஇறந்த– stood across and died, ஆறு செல் வம்பலர் – the path-going wayfarers, உவல் இடு பதுக்கை – heaped leaf covered burial places, ஊரின் தோன்றும் – appearing like villages (ஊரின் – இன் உருபு ஒப்புப் பொருளது), கல் உயர் நனந்தலை – the vast land with mountains, நல்ல கூறி – saying good words, புணர்ந்து உடன் போதல் – going together with him, பொருள் என – the thing to do, உணர்ந்தேன் மன்ற – I realized for sure, (மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty), அவர் – him, உணரா – realizing, ஊங்கு – before, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 298,

பரணர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது

சேரி சேர மெல்ல வந்து வந்து,
அரிது வாய்விட்டு இனிய கூறி,
வைகல் தோறும் நிறம் பெயர்ந்து உறையும் அவன்
பைதல் நோக்கம் நினையாய் தோழி,
இன் கடும் கள்ளின் அகுதை பின்றை 5
வெள் கடைச் சிறு கோல் அகவன் மகளிர்
மடப் பிடிப் பரிசில் மானப்
பிறிது ஒன்று குறித்தது, அவன் நெடும்புற நிலையே.

Kurunthokai 298,

Paranar, Kurinji Thinai – What the heroine’s friend said to her

Think about his sad looks, my friend!
He comes to our village every day,
utters precious sweet words,
and just stands there, looking pale.
Like the innocent female elephants
won by diviner women with small
silver-tipped canes who stand behind
Akuthai, whose toddy is sweet and
strong, his polite behavior that we see,
is hiding something quite different.
Notes: தலைவன் மடல் ஏறத் துணிந்ததை உணர்த்தியது. சேரி (1) – உ. வே. சாமிநாதையர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தெரு. அகவன் மகளிர் மடப் பிடிப் பரிசில் மான – உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாடல் மகளிர் பெறா நின்ற மடப்பமுடைய பிடி யானையாகிய பரிசிலைப் போல, உ. வே. சாமிநாதையர் உரை – அகவன் மகளிர் பெறும் மடப்பம் பொருந்திய பிடியாகிய பரிசிலைப் போல, தமிழண்ணல் உரை – அகவன் மகளிர் வாய்விட்டுச் சொல்லாமல் பெற விரும்பும் பெண் யானைப் பரிசிலைப் போன்று.

Meanings: சேரி சேர – to reach our settlement, to reach our neighborhood, மெல்ல வந்து வந்து – he came gently, அரிது வாய்விட்டு இனிய கூறி – uttered precious sweet words, வைகல் தோறும் – every day, நிறம் பெயர்ந்து – color changed, becoming pale, உறையும் – staying, living, அவன் பைதல் நோக்கம் – his sad looks, நினையாய் தோழி – think about it O friend, இன் கடும் கள்ளின் அகுதை பின்றை – behind Akuthai with sweet strong liquor, வெள் கடை – white tipped, silver tipped, சிறு கோல் அகவன் மகளிர் – female diviners with small rods, female soothsayers with small rods, மடப் பிடிப் பரிசில் – innocent female elephants, gentle female elephants, மான – like (உவம உருபு, a comparison word), பிறிது ஒன்று குறித்தது – indicates something else (that he is ready to climb a madal horse), அவன் நெடும்புற நிலை – his long stay here behind me, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 299,

வெண்மணிப்பூதியார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி

இது மற்று எவனோ தோழி, முதுநீர்ப்
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல்
இணர் அவிழ் புன்னை எக்கர் நீழல்
புணர் குறி வாய்த்த ஞான்றைக் கொண்கன்
கண்டன மன் எம் கண்ணே, அவன் சொல் 5
கேட்டன மன் எம் செவியே, மற்று அவன்
மணப்பின் மாண் நலம் எய்தித்
தணப்பின் ஞெகிழ்ப எம் தட மென்தோளே.

Kurunthokai 299,

Venmanipoothiyār, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby

On the shady sand dunes in the
seashore grove lapped by ancient
ocean’s waves, where birds sing,
my desires came true when I
united with him under a punnai
tree bearing clusters of flowers.
My eyes saw my lover and my ears
heard his words.
I attain great beauty when he is with
me. My thick, delicate arms become
thin when he is away.
How strange is this, my friend!
Notes: தலைவன் அருகில் நிற்பதை அறிந்த தலைவி, தோழிக்குக் கூறுவாளாய் வரைதல் வேண்டும் என்பதை அவனுக்குப் புலப்படுத்தியது. இது (1) – உ. வே. சாமிநாதையர் உரை – செய்யுளாதலின் சுட்டு முன் வந்தது. மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4). தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம். உரியியல் 24). அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம். உரியியல் 26).

Meanings: இது – this, மற்று – அசை நிலை, an expletive, எவன் – how strange, ஓ – அசை நிலை, an expletive, தோழி – O friend, முதுநீர்ப் புணரி திளைக்கும் – ancient ocean waters lap (முதுநீர் – அன்மொழித்தொகை, முதிய நீரையுடைய கடல்), புள் இமிழ் கானல் – seashore groves with bird sounds, seashore with bird sounds, இணர் அவிழ் புன்னை – clustered flowers of laurel trees, நாகம், Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, எக்கர் – sand dunes, நீழல் – shade (நிழல் என்பதன் விகாரம்), புணர் குறி வாய்த்த ஞான்றை – when my dreams of uniting with him came true, கொண்கன் கண்டன மன் எம் கண்ணே – I have seen the lord (எம் – தன்மைப் பன்மை, first person plural), அவன் சொல் கேட்டன மன் எம் செவியே – my ears have heard his words (எம் – தன்மைப் பன்மை, first person plural), மற்று – அசை நிலை, an expletive, அவன் மணப்பின் – when he unites with me, மாண் நலம் எய்தி – attaining great beauty, தணப்பின் – when he separates, ஞெகிழ்ப – they become thin (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), எம் – my, தன்மைப் பன்மை, first person plural, தட – curved, large, மென்தோள் – delicate arms, delicate shoulders, ஏ – அசை நிலை, an expletive

குறுந்தொகை 300,

சிறைக்குடி ஆந்தையார், குறிஞ்சித் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது

குவளை நாறும் குவை இருங்கூந்தல்,
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்க்,
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண்பஃறித்தி மாஅயோயே!
நீயே அஞ்சல் என்ற என் சொல் அஞ்சலையே, 5
யானே குறுங்கால் அன்னம் குவவு மணல் சேக்கும்
கடல் சூழ் மண்டிலம் பெறினும்,
விடல் சூழலன் நான் நின்னுடை நட்பே.

Kurunthokai 300,

Siraikkudi Ānthaiyār, Kurinji Thinai – What the hero said to the heroine

Do not fear, O dark young
woman with thick, black hair
with the scent of blue waterlily
blossoms, honey-filled red mouth
with the fragrance of white
waterlilies, and tiny beauty spots
that look like the pollen of lotus
flowers growing in deep ponds!
Do not be afraid, when I ask you
not to fear.
Even if I were to gain this earth
encircled by water, on whose shores
short-legged geese live among sand
dunes, I will not think of abandoning
your love.
Notes: இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவன் தலைவியிடம் கூறியது. குறுங்கால் அன்னம் குவவு மணல் சேக்கும் (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறுங்கால் அன்னம் குவவு மணல் சேக்கும் என்றது, அன்னப்பறவை தனக்குத் தகுந்த வெண்மணற் குன்றை விரும்பி ஆண்டே உறைந்தாற் போன்று யானும் நின்னிடத்தேயே உறைவேன் என்னும் குறிப்பிற்று.

Meanings: குவளை நாறும் – with blue waterlily fragrance, Blue nelumbo, Nymphaea odorata, குவை இருங்கூந்தல் – thick dark hair, ஆம்பல் நாறும் – white waterlily fragrance, தேம் பொதி துவர் வாய் – honey filled red mouth, honey filled coral-like red mouth (தேம் தேன் என்றதன் திரிபு), குண்டு நீர்த் தாமரை – lotus flowers in deep ponds, கொங்கின் அன்ன – like pollen, நுண் – tiny, பல் தித்தி – many pallor spots (பல் தித்தி பஃறித்தி என லகரம் ஆய்தமாய்த் திரிந்தது), மாஅயோயே – O dark young woman (இசைநிறை அளபெடை, ஏகாரம் விளி), நீயே அஞ்சல் என்ற என் சொல் – my words asking you not to fear, அஞ்சலையே – do not fear (அஞ்சல், ஐ சாரியை, ஏ – அசை நிலை, an expletive), யான் – me, ஏ – அசை நிலை, an expletive, குறுங்கால் அன்னம் – short legged geese, குவவு மணல் – heaped sand, sand dunes, சேக்கும் – they stay, they reside, கடல் சூழ் மண்டிலம் – earth surrounded by oceans, பெறினும் – even if I get, விடல் – to let go, சூழலன் நான் – I will not think, நின்னுடை – your, நட்பு – friendship, ஏ – அசை நிலை, an expletive

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.