கவனமாக இருங்கள், உங்கள் குழந்தையால் நடமாட முடியும் !
பிறந்தநாள் வாழ்த்துக்கள், குழந்தாய் ! சீக்கிரத்தில் உங்கள் குழந்தை அதிக சுதந்திரம் அடைவான், அவனுடைய சிரிப்பு உணர்வை பெற்றுக்கொள்வான், எல்லாவற்றுக்கும் மேலாக உங்களை நேசிப்பதாக சொல்ல கற்றுகொள்வான்.
அவனை விட்டுச் செல்வதை உங்கள் குழந்தை விரும்ப மாட்டான். இது இயல்பு தான். போய் வருகிறேன் என்று சொல்வதற்கு அதிக நேரம் இருந்தால், அவன் பழகிக்கொள்ள போதிய நேரம் கிடைக்கும்.
சரியான வார்த்தைகளை உங்கள் குழந்தை கூறும்போது அது பரவசமூட்டுவதாக இருக்கும். ஆனால் இன்னமும் அவன் என்ன விரும்புகிறான் என்பதையும் என்ன உணர்கிறான் என்பதையும் வெளிப்படுத்த அவனால் வார்த்தைகளை பயன்படுத்த முடியாது. சில உடல் பாவனைகளை அவன் பயன்படுத்துவான். ”மேலே” என்று காட்ட அவன் கைகளை தூக்குவான் அல்லது “அது என்ன?” என்பதை கேட்க விரலை சுட்டிக் காட்டுவான்.
பல காரியங்களுக்கு அவன் ஒரே வார்த்தையைப் பயன்படுத்துவான். பேச்சுத்தொனியை கவனிக்கவும். ஒரே வார்த்தையை அவன் பல்வேறு வகையில், பல்வேறு பாவனைகளை பயன்படுத்தி பேசுவான்.
இப்போது தன் கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே அவனால் அதிக சுலபமாக சிறிய பொருட்களை எடுக்க முடியும். தரையில் கிடக்கும் பொருட்களை எடுத்து அவன் தன் வாயில் போட்டுக்கொள்ள முடியும். தரையில் என்ன இருக்கிறது என்பதை சோதித்து, அதனால் அவனுக்கு எந்தத் தீங்கும் இல்லை உறுதிசெய்யவும்.
நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் அவன் கவனிக்கிறான். மற்றவர்கள் செய்வதை குழந்தைகள் திரும்பிச் செய்ய விரும்புவார்கள், குறிப்பாக பெற்றோர்கள் செய்வதை. இப்படித்தான் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். அவன் உங்கள் வார்த்தைகளையும், உங்கள் மொழியின் ஓசையையும் கூட கற்றுக்கொள்வான்.
இப்போது அவனுக்கு நிறைய பற்கள் இருக்கலாம். மென்மையான பிரிஸ்டில்கள் உடைய சிறிய பிரஷ்சையும் ஒரு பற்பசையின் சிறு அளவை பயன்படுத்தி அவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் அன்பான குழந்தையை பார்த்து - உதவியற்ற சிறிய பச்சிளம் குழந்தையில் இருந்து ஆற்றலுள்ள 1 வயது குழந்தை வரை அவனோடு நீங்கள் செய்த பயணத்தையும் நினைவு கூறுங்கள்.
உங்கள் எதிர்காலத்திற்கு எமது வாழ்த்துக்கள் !
புழுக்கள்: நான் குழந்தையை எவ்வாறு பாதுகாப்பது?
உங்கள் குழந்தை தரையிலிருந்தோ அல்லது பாதுகாப்பற்ற நீரிலிருந்தோ புழுக்களின் பாதிப்பைப் பெறக்கூடும், அவை குழந்தையை நோயுறச் செய்யலாம்.
உங்கள் குழந்தை தரையில் இருந்து, தவழ்ந்து, விளையாடுவதற்கு முன், தரையை சோப் மற்றும் நீரைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள். இது குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்கும். உங்களால் தரையைச் சுத்தம் செய்ய முடியாவிட்டால், ஒரு பெரிய சுத்தமான விரிப்பை அல்லது பாயை விரித்து வைக்கவும்.
குழந்தை வளரும்போது, அது வெளியே விளையாட விரும்பலாம், ஆனால் சில இடங்களில் புழுக்களின் பிரச்னை இருக்கும். மண் மற்றும் நிலத்திலிருந்து புழுக்கள் தொற்றிக் கொள்கின்றன, இவை வயிற்றுவலி, இருமல் மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தலாம்.
உங்கள் குழந்தை வெளியே நடக்கத் தொடங்கும்போது, கெட்டியான காலுறைகள், செருப்புகள் அல்லது காலணிகள் அதனைப் பாதுகாக்க உதவும். குழந்தையின் கைகளை சோப் மற்றும் சுத்தமான, பாதுகாப்பான நீரினால் கழுவுங்கள். அதன் நகங்களைத் தொடர்ந்து கழுவுவதும் முக்கியமானது. இது, குழந்தை தனது கைகளை வாயில் வைக்கும்போது, நிலத்திலிருந்து புழுக்களின் முட்டை அதன் உடலில் நுழைவதைத் தடுக்கும்.
உங்கள் குழந்தைக்கு புழுக்களின் தொற்று இருந்தால், அது உங்களுக்குத் தெரியாமலே இருக்கக்கூடும். புழுநீக்க மருந்துகள், உங்கள் குழந்தையிடம் தொற்றியுள்ள எந்த புழுக்களையும் அழித்துவிடும். குழந்தையிடம் புழுக்கள் ஏதும் தொற்றியில்லாத போதிலும் இதனை அது பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளலாம்.
உங்கள் குழந்தைக்கு 1 வயது ஆனபின், 6 மாதங்களுக்கு ஒருமுறை அதற்குப் புழுநீக்க மருந்து கொடுங்கள்.