உங்கள் குழந்தைக்கு திட உணவை ஊட்டுங்கள்
தாய்ப்பாலோடு உணவையும் பெற்றுக்கொள்ள உங்கள் குழந்தை தயாராக இருக்கிறது !
முதலில் அவனால் சிறிய அளவு உணவை மட்டுமே சாப்பிட முடியும்: ஒரு தேனீர் கரண்டி முழுவதும் இருந்தாலே போதும்.
மசிக்கப்பட்ட உணவை அவன் விரும்புவான். அவனை பார்த்து அமர்ந்து, உங்கள் சுத்தமான விரலினால் அல்லது ஒரு தேனீர் கரண்டியினால் கொஞ்சம் மென்மையான உணவைக் கொடுங்கள். உணவை தன் நாக்கினால் அசைத்து, விழுங்குவது எப்படி என்பதை கற்றுக்கொள்ள அவனுக்கு சற்று நேரம் எடுத்துக்கொள்ளும். பொறுமையாக இருங்கள். அவன் கற்றுக்கொள்வான்.
தொடக்கத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறை அவனுக்கு மசிக்கப்பட்ட உணவைக் கொடுங்கள். பின்னர் நாளுக்கு இரண்டு முறையும், தன் பின் மூன்று முறையும் கொடுங்கள். மசிக்கப்பட்ட் உணவுக்கு முன்பதாக சிறிது தாய்ப்பாலையும், மசிக்கப்பட்ட உணவுக்கு பின்பாக சிறிது தாய்ப்பாலையும் குடிக்க அவன் விரும்பலாம்.
உங்கள் குழந்தைக்கு முதல் பல் முளைக்கும் மாதமாக இது இருக்கலாம். பொதுவாக முன் பகுதியில் உள்ள கீழ்வரிசைப் பல் ஒன்று முதலில் தோன்றும்.
அவன் ஒரு கையை மற்ற கையை விட அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கலாம். அதன் பின்னர் அவன் கைகளின் பயன்பாட்டை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அவன் வலது கை பழக்கம் உடையவனா அல்லது இடது கை பழக்கம் உடையவனா என்பதை இரண்டு அல்லது மூன்று வயது ஆகும்வரை உங்களால் உண்மையில் கண்டுபிடிக்க முடியாது. அவன் கையில் ஒரு சிறிய பொருளை பிடித்துக்கொண்டு, ஒரு கையில் இருந்து மற்றோரு கைக்கு அதை பரிமாறட்டும். இது அவனுடைய திறன்களை வளர்க்க உதவும்.
ஒருவேளை உங்கள் குழந்தை இப்போது அதிக ஈடுபாட்டோடு இருக்கலாம், மற்ற குழந்தைகளோடு இருப்பதையும் மகிழ்ந்து அனுபவிக்கலாம் !
உங்களுடைய குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது பொம்மையை பிடிக்குமா? அப்படியானால், சீக்கிரத்தில் அவனால் அது இல்லாமல் எங்கும் செல்ல முடியாது. இது இயல்பு தான், உங்கள் குழந்தையின் சுதந்திரத்திற்கு இது ஒரு அடையாளம், ஏனென்றால் உங்களுக்கு பதிலாக ஒரு பொம்மை அல்லது துணியை அவன் தன்னம்பிக்கைக்காக பயன்படுத்த முடிகிறது.
குழந்தைக்கு மலச்சிக்கல் உள்ளதா?
உங்கள் குழந்தையின் முதல் சில வாரங்களின்போது, ஒரு வழக்கத்திற்கு தன்னை சரிசெய்து கொள்வதற்கு உங்கள் குழந்தையின் மலக்குடலுக்கு சிறிது காலமாகலாம். ஒரு நாள்அதன் மலம் நீர்த்ததாகவும், இன்னொரு நாள் கெட்டியாகவும் இருக்கலாம். விரைவிலேயே எது வழக்கமானது என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
உங்கள் குழந்தை தாய்ப்பால் மட்டுமே குடித்துக் கொண்டிருக்கும்போது, அதன் மலம் மிருதுவாக, கழிப்பதற்கு சுலபமாக இருக்கும். அது திட உணவை உட்கொள்ளத் தொடங்கிய பிறகுதான், அதற்கு மலச்சிக்கல் ஏற்படக்கூடும், அப்போது அதன் மலம் கெட்டியாகவும் கழிப்பதற்கு சிரமத்தைத் தருவதாகவும் இருக்கும், மேலும் வழக்கம்போல் அடிக்கடி கழிக்க முடியாமலும் இருக்கும்.
மலச்சிக்கலின்அறிகுறிகளைசுலபமாகக் கண்டு கொள்ளலாம்.
• மலம் கழிக்கும்போது உங்கள் குழந்தை அழுதால், அது ஓர் அறிகுறியாக இருக்கலாம். அதன் மலம் உலர்வாகவும், கெட்டியாகவும் இருப்பதையும் நீங்கள் காணலாம். வழக்கத்தைவிட குறைந்த எண்ணிக்கையிலேயே, அதாவது சில சமயங்களில் வாரத்திற்கு 3 முறை மட்டுமே குழந்தை மலம் கழிக்கக்கூடும்.
• மிக மோசமாக துர்வாடை வீசுமட மலமும், வாயுவும்கூட அறிகுறிகளாகும். கடினமான, வீங்கிய வயிறும் மற்றொரு அறிகுறியாகும்.
நீங்கள் என்ன செய்யலாம்? உங்கள் குழந்தை 6 மாதங்களுக்கும் குறைவானதாக இருந்தால், அதற்கு மலச்சிக்கல் உள்ளதாக நீங்கள் கருதினால், ஏராளமாகத் தாய்ப்பாலூட்டுங்கள். தாய்ப்பால் மிகவும் சிறந்தது. குழந்தைக்கு நீர் அல்லது வேறு எந்த பானத்தையும் கொடுக்க வேண்டாம், தாய்ப்பால் மட்டும் போதுமானது.
உங்கள குழந்தை திட உணவுகளைச் சாப்பிடத் தொடங்கியிருந்தால், அதற்கு ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டுமின்றி, தாய்ப்பாலும், சுத்தமான, பாதுகாப்பான நீரும் கொடுங்கள். இது, குழந்தையின் மலத்தை மிருதுவாக்க உதவும்.
சில சமயங்களில், மிகவும் நீர்த்த மலம், மலச்சிக்கலின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நீர்த்த மலம் ஜீரண மண்டத்தை அடைத்துக் கொண்டிருக்கும் கடினமான மலத்தைச் சுற்றி வரக்கூடும். இது உங்கள் குழந்தைக்கு ஏற்பட்டுள்ளதாக நீங்கள் நினைத்தால், ஒரு மருத்துவரைப் பாருங்கள்.
என் குழந்தை எப்போது தவழும்?
உட்கார்ந்தபின், உங்கள் குழந்தையின் அடுத்த முக்கிய நிலையாக இருப்பது, தவழ்வதாகும். அது வழக்கமாக, ஆனால் எப்போதுமே அல்ல, நடக்க முடிவதற்கான முன்னேற்றமாகும்.
உங்கள் குழந்தை 6 முதல் 9 மாதங்களுக்கிடையில் இருக்கும்போது, தவழத் தொடங்கலாம். அதற்கு 1 வயதாகும்போது, நன்றாகத் தவழக்கூடும் என்பதை இது குறிக்கிறது.
ஆனால், எல்லாக் குழந்தைகளுமே தவழ்வதில்லை. கைகளையும், முழங்கால்களையும் ஊன்றி தவழ்வதற்கு பதிலாக, உங்கள் குழந்தை பிட்டத்தை நகர்த்தி நகர்த்தி வளைய வருவதை நீங்கள் காணக்கூடும். அல்லது தனது வயிற்றில் நகர்ந்து அது அங்குமிங்கும் செல்ல விரும்பலாம்.
சில குழந்தைகள் தவழ்வதே இல்லை. அதற்குப் பதிலாக, அவை நேராக தங்களை நிமிர்த்திக் கொண்டு எழுந்து நின்று, நடக்கின்றன. குழந்தை சுறுசுறுப்பாக இருப்பதுதான் முக்கியமே தவிர, அதை உங்கள் குழந்தை எப்படிச் செய்கிறது என்பதல்ல.
குழந்தைகள் பலவிதங்களில் வளர்கின்றன. உங்கள் குழந்தை மிக மெதுவாக தவழத் தொடங்கியுள்ளது அல்லது வளைய வருகிறது என்ற கவலை உங்களுக்கு இருந்தால், ஓர் மருத்துவரிடம் பேசுங்கள்