Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

ஏழாம்மாதம்

உங்கள் குழந்தை ஆர்வம் அடையும்
உங்கள் குழந்தை தானாகவே சாப்பிட வேண்டும் என்று விரும்ப தொடங்குவாள். நீங்கள் அவளுக்கு உணவு ஊட்டும் கரண்டியை அவள் பிடித்துக்கொள்கிறாளா அல்லது உங்கள் தட்டில் இருந்து உணவை எடுத்துக்கொள்கிறாளா? அவளுடைய தட்டிலே மென்மையான உணவுப் பொருட்களில் சில துண்டுகளை வையுங்கள் ! பெண் குழந்தைகளுக்கும் ஆண் குழந்தைகளைப் போன்ற அளவிலேயே உணவு தேவைப்படும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைக்கு நல்ல பசி இருக்கலாம், ஆனாலும் அதிகமான பற்கள் இருக்காது. அவள் ஈறுகளால் மெல்லக்கூடிய அல்லது சுலபமாக தன் வாயில் அசைபோடக்கூடிய உணவுகளோடு தொடங்குங்கள்.

இந்த வயதில் குழந்தைகள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். அவள் பொம்மைகளை தூக்கி எறியலாம் அல்லது தன் அக்காவின் முடியை பிடித்து இழுக்கலாம் ! அவள் கெட்ட குழந்தை அல்ல, அவள் பல காரியங்களை சோதித்து பார்க்கிறாள், அவ்வளவு தான். நீண்ட காலம் அவளால் காரியங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாது.
ஆகவே அவளை கண்டித்தாலும் அவளால் அதிகமாக புரிந்துகொள்ள முடியாது. ஆனால் அவளுடைய கவனம் எளிதில் சிதறிவிடும். அவள் செய்யக்கூடாது என்று நீங்கள் நினைக்கும் காரியங்களை அவள் செய்வதை நிறுத்த ஒரு பொம்மையை காட்டுங்கள் அல்லது அவளுக்கு ஒரு பாடலை பாடுங்கள்.

அவளுடைய பற்களுக்கு இடையே இடைவெளிகள் இருந்தால் கவலைப்படாதீர்கள். உங்களுடைய குழந்தைக்கு மூன்று வயது ஆகும்போது, அவளுடைய குழந்தை பற்கள் அனைத்தும் முளைத்த பிறகு, அவளுடைய பற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகள் நிரம்பிவிடும்.

ஏறத்தாழ இப்போது, நீங்கள் வெளியே சென்றால் உங்கள் குழந்தை நடுக்கம் அடையக்கூடும். உங்களிடம் அதிகமாக ஈர்க்கப்பட்டு இருப்பதால், ஒரு நிமிடம் அவளை விட்டுச் சென்றாலும், அது அவளை அழ வைக்கும். இது இயல்பு தான், சிறிய பிரிவுகள் உங்கள் குழந்தை மற்ற மக்களோடு பழக உதவும். நீங்கள் எப்போதும் அவளிடம் திரும்பி வந்துவிடுவீர்கள் என்பதை அவள் சீக்கிரத்தில் கற்றுக்கொள்வாள்.

இப்போது உங்கள் குழந்தையின் உணர்வுகள் அதிக தெளிவாக தெரியத்தொடங்கும். தனக்கு பிடித்தவர்களுக்கு இப்போது அவளால் முத்தம் கொடுக்க முடியும். இப்போது அவள் பிறருடைய உணர்வுகளையும் கவனித்து அதை பின்பற்றவும் தொடங்குவாள். யாராவது அழுவதைப் பார்த்தால் அவளும் அழத் தொடங்கலாம்.
என் குழந்தைக்கு எவ்வளவு உணவு தர வேண்டும்?
• ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருவருக்குமே ஒரே அளவு உணவு தேவை.
• குழந்தையின் முதல் 6 மாத வாழ்க்கையில், அதற்குத் தேவைப்படுவதெல்லாம் உங்கள் தாய்பபால்தான்.
இதற்குப் பின், உங்கள் குழந்தைக்கு நீங்கள் தருகின்ற உணவின் அளவை நீங்கள் மெல்ல அதிகரிக்கலாம். குழந்தைக்கு 2 வயதாகும்வரை, உங்கள் தாய்ப்பால் அதற்குத் தேவை.

குழந்தையின் உணவை எவ்வாறு மெல்ல அதிகரிப்பது என்பது வருமாறு:
6 மாதக் குழந்தை: இன்னமும் தாய்ப்பால்தான் உங்கள் குழந்தையின் முக்கிய உணவாகும், என்றாலும் இப்போது மற்ற உணவுகளையும் அது சாப்பிடத் தொடங்கலாம்.
ஒரு நாளில் இருமுறை உங்கள் வீட்டு சாப்பாட்டை மசித்து உங்கள் குழந்தைக்குக் கொடுங்கள். ஒவ்வொரு உணவின்போதும் 2 வாய் நிறைய உணவு போதுமானது. பால் மறக்கச் செய்யும் எளிய உணவுகளான கிச்சடி, பருப்பு சாதம் மற்றும் சாறுகள் போன்ற எளிய உணவுகளுடன் தொடங்குங்கள். நீங்களும், உங்கள் குடும்பமும் சாப்பிடுகின்ற அதே உணவை உங்கள் குழந்தைக்கும் கொடுக்கலாம் என்றாலும், உணவு நன்றாக மசிக்கப்படுவதை உறுதி செய்யுங்கள்.
உங்கள் குழந்தைக்கான உணவில் உப்பு அல்லது மசாலாக்களை சேர்க்காதீர்கள்.

8 மாதக் குழந்தை: உங்கள் குழந்தைக்கு ஒரு நாளில் 3 உணவுகள் தேவைப்படும். ஒவ்வொரு உணவின்போதும், குழந்தை சாப்பிடும் உணவின் அளவை சுமார் 3 வாய் வரை மெல்ல அதிகரியுங்கள்.

9 மாதக் குழந்தை: இப்போது, குழந்தையின் உணவுகளில் ஒன்றின் அளவை பாதி கிண்ணம் (பவுல்) அளவிற்கு அதிகரிக்க வேண்டும். அதன் மற்ற இரண்டு உணவுகளுக்கு, தொடர்ந்து 3 வாய் நிறைய உணவு கொடுங்கள். இச்சமயத்தில் குழந்தையால் தானே உணவை எடுத்துச் சாப்பிட முடியும். எனவே, எடுத்து சாப்பிடுவதற்கு ஏதுவாக அதற்கு காய்கறி நிரப்பிய சப்பாத்தி, வேக வைத்த காய்கறிகளை சிறு துண்டுகளாக்கிக் கொடுங்கள்.

10 மாதக் குழந்தை: குழந்தைக்கு ஒரு நாளில் 2 பாதி கிண்ணம் அளவிற்கு உணவு கொடுங்கள். அதன் மீதமுள்ள உணவிற்கு, சில ஸ்பூன்கள் மட்டுமே அதற்குத் தேவை.

1 வயது: குழந்தைக்கு ஒரு நாளில் 3 அல்லது 4 பாதி கிண்ணம் அளவிற்கு, சிற்றுண்டியுடன் உணவு தேவை. அடுத்த ஓராண்டு காலத்தில், மெல்ல கிண்ணம் முழுவதும் நிரப்புங்கள்.
உங்கள் குழந்தையைப் பாதுகாப்பாக வையுங்கள்
உங்கள் வீட்டில் உங்கள் குழந்தையைப் பாதுகாப்பாக வைப்பதற்கு பின்வரும் 4 வழிகள் உள்ளன:
• உங்கள் குழந்தை எடுத்துவிடக்கூடிய பொருட்கள் ஏதேனும் உள்ளனவா என்று உங்கள் வீட்டை தினமும் சோதித்துக் கொள்ளுங்கள்.

• நாணயங்கள் போன்ற, குழந்தையின் தொண்டையில் அடைத்துவிடக்கூடிய சிறிய பொருட்கள் எதுவும், அதன் கைக்கெட்டிய தூரத்தில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கத்திகள், கத்திரிக்கோல்கள், மற்றும் பேனாக்கள் போன்ற கூர்மையான பொருட்களையும், சாப்பிடவோ அல்லது குடிக்கவோ பாதுகாப்பற்றதாக உள்ள எதையும் எடுத்துவிடுங்கள்.

• உங்கள் சமையல் எரிபொருளை பானம் அல்லது தண்ணீர் பாட்டிலில் சேமித்து வைக்காதீர்கள். உங்கள் குழந்தை தவறாக அதைக் குடித்துவிடலாம்.

• உங்கள் குழந்தை மீது எதுவும் விழுங்துவிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். அனைத்தும் பத்திரமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். எல்லா மின் ஒயர்களும் அல்லது வடங்களும் பத்திரமாக சுருட்டப்பட்டு, குழந்தையின் பாதையில் குறுக்கிடாமல் வைக்கப்பட வேண்டும்! நீங்கள் விளக்கு அல்லது பெடஸ்டல் அல்லது மேஜை மின்விசிறியைப் பயன்படுத்தும் பட்சத்தில், அது உறுதியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

• தீ மற்றும் தண்ணீரிலிருந்து உங்கள் குழந்தையைத் தள்ளி வைத்திருங்கள். உங்கள் குழந்தை ஆராய விரும்பும்; அது தீயைத் தொட்டு தன்னைச் சுட்டுக் கொண்டுவிடலாம். நீங்கள் சமைக்கும்போது, சூடான எதையும் அது தொட்டுவிடாமல் எச்சரிக்கையாக இருங்கள்.

ஒரு தடுப்பை அமைக்க முயற்சி செய்யுங்கள் மிகப்பெரிய தண்ணீர் கலன்களை குழந்தை நெருங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தை அதில் தவறி விழுந்துவிடாமல் இருக்கும்படி இறுக்கமாக மூடுகின்ற மூடிகளைக் கொண்டு அவற்றை மூடி வையுங்கள்.

• உங்கள் குழந்தை நடக்கவும், நிற்கவும் தொடங்கும்போது, அது மேலே ஏறுவதற்கு முயற்சிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! அபாயகரமான பொருட்களும், ஒயர்களும் அதற்கு எட்டாத தூரத்தில் இருப்பதை உறுதி செய்வதுடன், குழந்தை நாற்காலிகள் மற்றும் மேஜைகளிலிருந்து விழுந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்ய அதனைக் கவனித்த வண்ணம் இருங்கள்.
என் குழந்தை எப்போது எழுந்து நிற்கும்?
பெரும்பாலான குழந்தைகள், 8 மற்றும் 10 மாதங்களுக்கிடையில் முதலில் எழுந்து நிற்க முயற்சிக்கும். உங்கள் , உங்கள் கைகள், அல்லது சுவர் அல்லது மேஜை, நாற்காலி போன்றவற்றைப் பிடித்தபடி முயன்று எழுந்து நிற்கலாம்.

முதலில், உங்கள் குழந்தை உங்களையோ அல்லது ஓர் உறுதியான மேஜை நாற்காலி போன்ற பொருளையோ பிடித்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
11 மாதங்களில், குழந்தையை நீங்கள் பிடித்துக் கொள்ள வேண்டியிராமலேயே அதனால் எழுந்து நிற்க முடியலாம். குழந்தை இதைச் செய்யும்போது, நிறையப் பாராட்டி, அதை அணைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டவுடன், மேஜை நாற்காலி போன்ற ஒன்றைப் பிடித்துக் கொண்டே அது அங்குமிங்கும் நடமாடத் தொடங்குகிறது. குழந்தையால் இதனைச் செய்ய முடியும்போது, விரைவிலேயே அது நடக்கவும் ஆரம்பித்துவிடும்!

உங்கள் குழந்தையால் சுலபமாக எழுந்து நிற்க முடிந்தாலும், மீண்டும் உட்காருவதில் அதற்கு சிரமம் இருக்கக்கூடும்! நின்ற நிலையிலிருந்து மீண்டும் உட்காருவதற்கு உங்கள் குழந்தை கற்க நீங்கள் உதவலாம்.
குழந்தையைத் தூக்கி, அதனை மீண்டும் உட்கார வைப்பதற்கு பதிலாக, தனது முழங்கால்கள எப்படி மடக்க வேண்டுமென்று உங்கள் குழந்தைக்குக் காட்டுங்கள். அதன்பின், அதனை முயற்சித்துப் பார்ப்பதற்கு குழந்தையைத் தூண்டுங்கள்!
தனது முழங்கால்களை எப்படி மடக்கி உட்கார வேண்டுமென்பதை அது கற்பதற்கு சில நாட்களோ அல்லது வாரங்களோ ஆகலாம்.

உங்கள் குழந்தை இங்குமங்கும் நடமாடும்போது, அதன் கூடவே இருங்கள், ஏனென்றால், குழந்தை கீழே விழுந்தாலும், அதற்கு அடிபடாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.
மேலும், குழந்தை தானாகவே தனது முதல் தப்படியை எடுத்து வைக்கும்போது, அதை நீங்கள் தவறவிடாமலும் இருக்கலாமே!

எல்லா குழந்தைகளுமே வித்தியாசமாக வளர்கின்றனர், சிலர் மற்றவர்களைக் காட்டிலும் வேகமாக வளர்கின்றனர்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.