Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

எட்டாம்மாதம்

கவனிக்கவும் ! அங்கே ஒரு குழந்தை
இப்போது உங்கள் குழந்தை தவழவும் அல்லது தன் அடிப்பகுதியியை நகர்த்தவும் தொடங்கலாம். உங்கள் குழந்தை நகரத் தொடங்கும்போது, அவன் இடித்துக் கொள்ளவும், கீழே விழவும் தொடங்குவான். இது வளர்ச்சியின் ஒரு பகுதி. அவன் அங்கும் இங்கும் செல்வதை ரசிக்கவும், ஆனால் அந்நேரம் உங்கள் வீடு பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யவும்.

பொருட்களை அசைத்தல், தட்டுதல், கீழே போடுதல், தூக்கி எறிதல் ஆகியவற்றை குறித்து கற்றுக்கொண்டு இருக்கிறான். ஒரு பொருளை அவனால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை அவன் கற்றுக்கொண்டு இருக்கிறான்.

நீங்கள் பயன்படுத்தும் பொருட்களில் உங்கள் குழந்தை ஆர்வம் காட்டத் தொடங்கும். மெதுவாக, அவன் பொருட்களை சரியாக பயன்படுத்தத் தொடங்குவான். அவன் தன் முடியை சீவுவதை அல்லது ஒரு கோப்பையில் இருந்து குடிப்பதை நீங்கள் பார்க்க முடியும்.

உங்கள் குழந்தையின் பார்வை இப்போது அதிக தெளிவாக இருக்கிறது. இப்போது அவனால் ஏறத்தாழ உங்களைப் போலவே பார்க்க முடியும். வீட்டில் இருக்கும் அனைத்து மக்களையும், பொருட்களையும் அவனால் அடையாளம் காண முடியும். அறையின் அடுத்த முனையில் இருக்கும் பொம்மையைப் பார்த்து அதை நோக்கி அவனால் தவழ்ந்து செல்ல முடியும். அவனுடைய கண்களும் அதன் இறுதி நிறத்திற்கு அருகே வந்துவிட்ட்னா, இருப்பினும் பிற்காலத்தில் சிறு மாற்றங்களை உங்களால் காண முடியும்.

சீக்கிரத்தில் உங்கள் குழந்தையால் நிற்கவும், சுவர்களை அல்லது பொருட்களை பிடித்துக்கொண்டு அறையை சுற்றி நடக்கவும் முடியும்.
என் குழந்தையுடன் உணவு நேரங்கள்
உங்கள் குழந்தைக்கு 6 மாதங்கள் ஆகும்போது, அது திட உணவை உட்கொள்ள வேண்டும். ஆனால் அதற்குத் தொடர்ந்து தாய்ப்பாலும் தேவை.

குழந்தை மேலும் வளரும்போது, அதற்குக் கூடுதல் உணவு மட்டுமின்றி, பலவகையான உணவுகளும் தேவைப்படும். ஆனால், குழந்தைகள் சாபிபடுவதற்குத் தொந்தரவு தரலாம், மேலும் அவர்களுக்கு உணவில் சீக்கிரமாகவே ஆர்வம் குறைந்துவிடலாம்.

உங்கள் குழந்தை நன்றாகச் சாப்பிடுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள இதோ சில குறிப்புகள் உள்ளன:
• குழந்தைக்கு சுவையான உணவுகளை நிறையக் கொடுங்கள். நிறைய அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தை சாப்பிடும்போது, அதனுடன் அமர்ந்து பேசுங்கள். சாப்பிடுவது என்பது குழந்தைக்கு ஒரு புதிய திறனாகும், அதனை அது கற்று வருகிறது.

• உங்கள் குழந்தை சாப்பிட மறுத்தால், பொறுமையாக இருங்கள். கட்டாயப்படுத்தாதீர்கள். குழந்தைக்கு சர்க்கரை, சிப்ஸ், பொரித்த பண்டங்கள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளைக் கொடுக்காதீர்கள். இவ்வுணவுகளில் நற்குணங்கள் ஏதுமில்லை, இவை உங்கள் குழந்தைக்குத் தீங்கிழைப்பவை.

• உங்கள் குழந்தைக்கு ஏராளமான வண்ணங்கள், சுவைகள் மற்றும் பதங்களில் உணவுகளைக் கொடுங்கள். குழந்தைகள் வளரும்போது, அவர்களுடைய சுவைகளும் பெரும்பாலும் மாறுகின்றன. இப்போது உங்கள் குழந்தை விரும்பாத உணவுகளை, சில வாரங்களில் அது மிகவும் விரும்பக்கூடும்!

• உணவு நேரங்களை குதூகலமாக ஆக்குங்கள். குழந்தை சௌகரியமாக இருப்பதையும், உணவு நேரங்கள் உங்கள் இருவருக்குமே குதூகலம் தருவதாக இருப்பதையும் உறுதி செய்யுங்கள்.

• கண் தொடர்பை வைத்துக் கொண்டு, புன்னகை புரிந்தவாறு, குழந்தையுடன் பேசுங்கள். உணவு நேரங்கள் சமூக நேரங்களாக இருக்க வேண்டும். அது, குழந்தை உணவருந்த உதவுவதுடன், சமூகத் திறன்கள் மற்றும் புதிய வார்த்தைகளைக் கற்றுக் கொள்ளவும் உதவும்.

• உங்கள் குழந்தைக்கு சுலபத்தில் கவனச் சிதறல் ஏற்படுமானால், அதனை ஒரு அமைதியான இடத்திற்கு அழைத்துச் சென்று, சாப்பிடுவதற்குக் கனிவுடன் ஊக்கமளியுங்கள்.
என் குழந்தை நடக்கத் தொடங்கிவிட்டது!
இப்போது உங்கள் குழந்தை நடமாடத் தொடங்கிவிட்டதால், அது பாதுகாப்பாக விளையாடுவதை உறுதி செய்கின்ற நேரம் வந்துவிட்டது.

உங்கள் குழந்தை, நீர் நிரம்பிய வாளி அல்லது தீ எரிந்து கொண்டிருக்கும் அடுப்புகளை எட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அலமாரி கதவுகளை மூடி வைப்பதுடன், பெட்டிகள் மற்றும் கூடைகளை குழந்தைக்கு எட்டாத உயரத்தில் மேலே தூக்கி வையுங்கள்.

ப்ளீச் மற்றும் சலவை பவுடர் போன்ற சுத்திகரிப்புப் பொருட்கள் குழந்தைக்கு தீங்கை விளைவிக்கலாம் என்பதால், இவற்றைப் பூட்டி வையுங்கள்.

உங்கள் குழந்தையின் கோணத்தில் உலகைக் காண்பதற்கு முழங்கைகள் மற்றும் முழங்கால்களில் தவழ்ந்து பாருங்கள். தொங்குகின்ற கயிறுகள் அல்லது செடிகள் குழந்தையை ஆர்வத்துடன் எட்டிப்பிடித்து, இழுத்துத் தன்மீது போட்டுக் கொள்ளும்படி செய்யலாம்.

பர்ஸ்கள், பைகள் மற்றும் வாங்கிய பொருட்களை குழந்தைக்கு எட்டாத உயரத்தில் வையுங்கள். அன்றாட எளிய பொருட்களான உதட்டுச்சாயம் மற்றும் ஒப்பனைப் பொருட்களும்கூட குழந்தைக்கு தீங்கை ஏற்படுத்தலாம்.

மருந்துகளும், மாத்திரைகளும் அவனுக்கு எட்டாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

கழிவறை மற்றும் அழுக்குத் துணிகளைவிட்டு அவனைத் தள்ளி வைத்திருங்கள். மேலும் தண்ணீர், பிராணிகள் மற்றும் அவற்றின் கழிவுகளிலிருந்து தள்ளி குழந்தை விளையாடுவதையும் உறுதி செய்யுங்கள்.

நிலத்தில் புழுக்களும், பூச்சிகளும் வாழக்கூடும். முடியுமானால், உங்கள் குழந்தை விளையாடுவதற்கு முன் தரையை சோப் மற்றும் நீரினால் சுத்தம் செய்யுங்கள். இது குழந்தையைப் பாதுகாப்பாக வைக்கும் மற்றும் அது புழுக்களால் பாதிக்கப்படுவதிலிருந்தும் காக்கும். உங்களால் தரையைச் சுத்தம் செய்ய முடியவில்லையென்றால், ஒரு பெரிய, சுத்தமான விரிப்பு அல்லது பாயைப் போடுங்கள்.

உங்கள் குழந்தை எழுந்து நின்று, நடக்கும்போது, அதன் பாதங்களை தளர்வான காலுறைகள் அல்லது செருப்புகளால் நீங்கள் மூடுவதை உறுதி செய்யுங்கள். இது குழந்தையைப் புழுக்களிடமிருந்து காக்கும்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.