உங்கள் குழந்தை உங்களை பின்பற்ற முடியும்
உங்கள் குழந்தை அவளுடைய சுற்றுச்சூழலுக்கும், பரீட்சையமான பொருட்களுக்கும் பழக்கமாகிவிட்டாள். இந்த வயதில் அவள் அதிகமாக சில பொருட்களை பிடித்துக்கொண்டே இருப்பாள், அவளுடைய கவனம் திசைதிருப்பப்பட வேண்டும். தன் சொந்தப் போர்வையை அல்லது தனக்குப் பிரியமான பொம்மையை தன்னோடு வைத்திருந்தால் அவள் அமைதியை உணர்வாள்,
ஆகவே அவள் வெளியே சென்றாலும் வீட்டில் இருந்து சில பொருட்களை எடுத்துக்கொண்டு தான் செல்வாள். சத்தமும், அறியாதவர்களும் இல்லாத அமைதியான நேரமும் அவள் அதற்கு தன்னை பழகிக்கொள்ள உதவியாக இருக்கும்.
இப்போது, உங்கள் குழந்தை தன் பொம்மை எங்கே வைக்கப்பட்டு இருக்கிறது போன்ற காரியங்களை நினைவுபடுத்திக்கொள்வாள். ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்கு முன்பாகப் பார்த்த செயல்களையும் கூட அவளால் பிரதிபலித்து செய்ய முடியும். ஆனாலும், அவளால் எல்லாவற்றையும் நினைவில் கொள்ள முடியாது.
உங்கள் குழந்தைக்கு இரண்டு அல்லது மூன்று வயது ஆகும் வரை அவளுடைய நீண்ட நாள் நீடிக்கும் நினைவாற்றல் வளர்ச்சி அடையாது.
உங்கள் குழந்தையின் மழலை உண்மையான வார்த்தைகளைப் போல ஒலிக்கத் தொடங்கலாம். உங்கள் குழந்தை ஏதோ சொல்வதாக நினைக்கிறாள், ஆகவே அவள் உண்மையாகவே சொன்னதைப் போல பதில் சொல்லுங்கள் !
நீங்கள் அவளிடம் பேசும்போதும், அவளை பார்க்கும்போதும் உரையாடலைப் பற்றியும் முக பாவனைகளைப் பற்றியும் அவள் கற்றுக்கொள்வாள்.
இன்னும் உங்கள் குழந்தை நீங்கள் பேசும் உண்மையான வார்த்தைகளை விட உங்கள் பேச்சுத்தொனியில் இருந்து அதிகமாக புரிந்துகொள்கின்றது. ஆகவே உங்களை அவள் மகிழ்விக்கும்போது, அவளை அதிகமாகப் புகழுங்கள்.
உங்கள் குழந்தையின் குணாதிசயம் உண்மையாக வெளிவந்துகொண்டு இருக்கிறது. அவள் நட்பாக அனைவரையும் பார்த்து புன்னகைக்கலாம் அல்லது அவள் வெட்கப்பட்டு தன் முகத்தை மூடிக்கொள்ளலாம். இப்போது உங்கள் கவனத்தை எப்படி பெறுவது என்பது உங்கள் குழந்தைக்கு தெரியும் மற்றும் நீங்கள் கதவு அருகே செல்லும்போது அவள் கரம் அசைத்து உங்களுக்கு டாட்டா காட்டலாம்.
என் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு உள்ளது
உங்கள் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருக்குமானால், தான் இழக்கும் நீரை அது ஈடுசெய்ய வேணடியிருக்கும், அல்லது அதற்கு நீர்ப்பற்றாக்குறை ஏற்படும். அதாவது குழந்தையின் உடலில் அது தொடர்வதற்குப் போதிய அளவு நீர் இல்லை என்பதை இது குறிக்கிறது. தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்துக் கொண்டே இருங்கள் மற்றும் குழந்தை தான் விரும்பிய அளவிற்குப் பால் குடிக்கட்டும்.
குழந்தை 6 மாதங்களுக்கும்குறைவானதாகஇருந்தால்,
அதற்கு நீர் எதுவும் தேவைப்படாது. அதற்குத் தேவையான அனைத்தையும் தாய்ப்பாலே வழங்கிவிடும். ஆனால், அடிக்கடி குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டே இருங்கள். ஒரே நேரத்தில் முழுமையாகப் பால் குடிப்பதற்கு அதற்கு பலம் இல்லாமல் இருக்கும், அதன் காரணமாக அது அடிக்கடி குடிக்க வேண்டியிருக்கும்.
குழந்தை 6 மாதங்களுக்கும்அதிகமானதாக இருந்தால்,
குழந்தைக்கு உணவுகளுக்கு நடுவில் சிறிது சிறிதாக சுத்தமான, பாதுகாப்பான நீரை (கொதித்து, ஆறியது) கொடுங்கள். முடிந்தால், மணிக்கு சில முறை அதற்கு வாய்வழி நீர்ச்சத்து கரைசலை (ORS) சிறிது சிறிதாகக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
ORS என்பது, சுத்தமான, கொதிக்க வைத்து, ஆற வைக்கப்பட்ட 1 லிட்டர் நீரில் கரைக்கப்படும் ஒரு பொடியாகும். இதை நீங்கள் பத்திரப்படுத்தி, 8-12 மணி நேரம் வரை உபயோகிக்கலாம்.
ஒவ்வொரு முறை உங்கள் குழந்தை நீர்த்த மலம் கழித்த பின்னரும் அதற்கு சிறிது ORSகொடுங்கள். அரை மணி நேரத்திற்கு இத்தேக்கரண்டி அளவுகளைப் பரவலாக்கிக் கொடுங்கள்.
உங்கள் குழந்தை ORS-ஐ ஏற்காவிட்டால், நீங்கள் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்த எலுமிச்சை சாறு, தால் அல்லது கஞ்சி, இளநீர் அல்லது உப்பு சேர்த்த லஸ்ஸி கொடுக்கலாம்.
எந்தவொரு பழச்சாறு, கோலா அல்லது சர்க்கரை சேர்த்த பானங்களையும் குழந்தைக்குக் கொடுக்காதீர்கள்.
இந்த பானங்கள் வயிற்றுப்போக்கை மோசமடையச் செய்யலாம்.
கீழ்க்கண்ட நிலைகளில், உங்கள் குழந்தையை ஒரு மருத்துவரிடம்இயன்றவரைவிரைவாகக் கொண்டு செல்லுங்கள்:
• 1 நாளுக்கும் அதிகமாக அதற்கு வயிற்றுப்போக்கு இருத்தல்
• அதன் சருமம் அல்லது உதடுகள் உலர்ந்து காணப்படுதல்
• அது இருண்ட மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தல் அல்லது மிகக் குறைவாக சிறுநீர் கழித்தல்
• அதன் தலையில் உள்ள மென்மையான பகுதி குழிவாகக் காணப்படுதல்
• அது பால் குடிக்க மறுத்தல், மலத்தில் இரத்தம் காணப்படுதல் அல்லது வயிறு வீங்கியிருத்தல்
• ஒரு நாளுக்கும் அதிகமாக அது வாந்தியெடுத்தல், அல்லது ஒரு நாளுக்கும் மேலாக நீடித்திரும் காய்ச்சலைக் கொண்டிருத்தல்