Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

அத்தியாயம்-11: ரேமல்லர் ஊகம்

ராஜபுத்ரர் குல வழக்கப்படி வாளுக்கு மாலையிடும் படி சொர்ணாதேவிக்குக் கட்டளையிட்டதன்றி வாளையும் உருவிக் கொடுத்துவிட்டுப் பிரமரர்கள் ராஜதானியிலிருந்து சிலாதித்தனுடன் கிளம்பிய ஸங்கன் வழியில் எந்த இடத்திலும் தாமதியாமல் மேவாரின் தலைநகரமான சித்தூரை மூன்று நாட்களுக்குள் அடைந்தான். ஸங்கன் இளைப்பாறக்கூட வழியில் எந்த ஊரிலும் தங்காமல் புரவியில் விரைந்ததையும், பயண மார்க்கத்தில் எந்த வார்த்தையையும் பேசாததையுங்கண்ட சிலாதித்தன் கூட, பிருத்விராஜனை விட ஸங்கன் கடமையில் உறுதியும் நிதானமும் கொண்டவனென்பதை உணர்ந்தாலும், பிருத்விராஜனிடமிருந்த நட்பினாலும், ஸங்கனுக்குக் கிடைக்கப்போகும் மகுடம் தன் நண்பனான பிருத்விக்குக் கிடைத்திருந்தால் தன் நலன் எத்தனை தூரம் மேம் பாடடைந்திருக்கும் என்ற எண்ணத்தினாலும் ஸங்கனின் நிதானத்தையும் உறுதியையுங்கூட ஓரளவு வெறுக்கவே செய்தான். அப்படிப் பல நாளாக வேரூன்றிக் கிடந்த அந்த வெறுப்பை உணராததினாலும், அது பிற்காலத்தில் விளை விக்க இருந்த பெருங்கேட்டை அறியாத காரணத்தாலும், உள்ளத்தில் சிறிதும் கள்ளமின்றிக் கடமையையும், மரணப் படுக்கையிலிருந்த தந்தையையும் மட்டுமே எண்ணிப் பிரமரர் ராஜதானிக்கும் சித்தூருக்கும் இடையேயிருந்த பிரதேசத்தைக் கனவேகத்தில் கடந்து, மூன்றாவது நாள் சித்தூரை ஸங்கன் அடைந்தான்.

சித்தூர் துக்க சாகரத்தில் மூழ்கிக் கிடந்தது. சா நாட்களில் வாட்களைச் சுழற்றியும் ஈட்டிகளை கேடயங்களையும் தாங்கிப் போரிட்டும் ஊரில் - துமளி கிளப்பும் வீரர்களாலும், சதா வீதிகளில் ஏற்படும் புரவிகளின் நடமாட்டங்களாலும் கிளம்பும் வீர ஒலிகளால் சூழப்பட்டிருக்கும் சித்தூர், ராணாவின் தேக நிலை காரணமாக அன்று மௌனமே சாதித்தது. எப்பொழுதும் முக்காடிட்ட அரசர்குல மங்கையர்களாலும் மற்ற அக்கம் பக்க ராஜபுத்ர நாடுகளிலிருந்து வரும் சாதாரண மக்களாலும் நிறைந்திருக்கும் தன்மை வாயந்த சித்தூரின் கடைவீதி கூட ஜனநடமாட்டம் ஏதுமின்றி வெறிச்சென்று களையிழந்து கிடந்தது. வீதிகளில் நடந்த ஜனங்கள் மௌனமாக நடந்தார்கள். காவல் புரியும் வீரர்கள்கூட, தங்கள் புரவிகளை மிக மெதுவாக நடத்தினார்கள். முடிசூட வேண்டிய இளவல் நகருக்குள் நுழையும்போது முழங்க வேண்டிய பெரிய பேரிகைகூட சம்பிரதாயத்தையொட்டி லேசாகச் சப்தித்ததேயொழிய குதூகலத்துடன் பெரிதாகச் சப்திக்கவில்லை . இளவலைக் கண்டதும் 'பராக்' சொல்ல வேண்டிய பாராக்காரர்கள் பராக்கை மிக அமைதியுடன் சொன்னார்கள். சம்பிரதாயமாகத் தலையைத் தாழ்த்தினார்கள்.

எல்லோர் முகத்திலும் துக்கம் நிரம்பிக் கிடந்தது. சித்தூர் சோபை இழந்து கிடந்தது. உள்ள நிலையைக் கவனிக்க ஒரு நிமிடம் தன் புரவியை நிறுத்திய ஸங்கள் சிறிது நேரம் சித்தூர் ராஜவீதியை ஒரு முறை ஏறிட்டு நோக்கினான். தூரத்தே தெரிந்த அரண்மனையின் மதி சிசோதயர்களின் கொடி, அரண்மனையில் படுத்திரும். ராணாரேமல்லரின் இதயம் அதிகமாகப் படபடத்துக்க கொண்டிருப்பதை வலியுறுத்த இஷ்டப்பட்டது போல்,காற்றில் படபடவென்று அடித்துக் கொண்டது. அதையும் பார்த்துச் சிலாதித்தனையும் பார்த்த ஸங்கன் துக்கத்தால் பெருமூச்சு விட்டான்.

அந்தப் பெருமூச்சைக் கவனித்த சிலாதித்தன் வேண்டு மென்றே குத்தலாகச் சொன்னான், ''துக்கம் சித்தூரை வளைத்துக் கிடக்கிறது. ஆகையால்தான் முடிசூட வரும் இளவலுக்கு வரவேற்பு சரியில்லை '' என்று.

"துக்கம் எதைக் குறிக்கிறது, சிலாதித்தா?'' என்று வினவினான் ஸங்கன்.

"மன்னர் இருக்கும் நிலையைக் குறிக்கிறது'' என்று பதில் சொன்னான் சிலாதித்தன்.

"இல்லை, இல்லை; மன்னர் இருக்கும் நிலையை அல்ல, மன்னர் இருந்த நிலையைக் குறிக்கிறது'' என்று திருத்திச் சொன்னான் ஸங்கன்.

சிலாதித்தன் கண்கள் வியப்புடன் ஸங்கனை நோக்கின. “நீங்கள் சொல்வது விளங்கவில்லை' என்றான்.

''எது விளங்கவில்லை?" என்று கேட்டான் ஸங்கன். ''மன்னர் மரணப்படுக்கையிலிருக்கிறார்...'

"ஆம்."

"அதனால் மக்கள் துக்கத்துடன் இருக்கிறார்கள். ''

"அதுதான் தவறு, சிலாதித்தா! ஒருவர் மரணப் படுக்கையிலிருப்பதாலோ, மரணத்தையே அடைந்து விடுவதாலோ மக்கள் துக்கப்படுவதில்லை. அப்படித் துக்கப்படுவதானால், எத்தனையோ மன்னர்கள் இறந்திருக் கிறார்கள்; அவர்கள் இறந்தபோதோ நோய்வாய்ப்பட்ட போதோ மக்கள் துக்கப்பட்டதாக வரலாறு கூறவில்லை. சிலருக்குத்தான் அந்தப் பாக்கியம் கிடைக்கிறது.''

''அப்படியானால்...''

இன்று மேவார் துக்கத்தில் ஆழ்ந்திருப்பதற்கு மன்னர் ஏற்கெனவே இருந்த நிலைதான் காரணம். நீதிய அரசாண்டார். மக்களைத் தம் குழந்தைகள் போல நினைத்தார். தம் குடும்ப சுகதுக்கங்களையும் மக்கள் நலனுக்கு அடுத்தபடியாகவே நினைத்தார். அப்படியிருக்க மன்னர் போய்விடப் போகிறாரே என்று தான் மக்கள் வருந்துகிறார்கள். ஆகவே மன்னர்கள் மரிக்குந்தறுவாயில் மக்கள் துக்கப்படுகிறார்களென்றால், மன்னர்களின் அன்றைய நிலையல்ல காரணம்; மன்னர்கள் வாழ்க்கை வளமாக இருந்த காலத்தில் எந்த நிலையில் இருந்தார்கள் என்பதுதான் காரணம்'' என்று விளக்கிய ஸங்கன், மேற்கொண்டு சிலாதித்தன் பதிலுக்கோ கருத்துக்கோ காத்திராமல், நேராக அரண்மனையை நோக்கிப் புரவியை நடத்தினான். அரண்மனையை அடைந்ததும் புரவி யிலிருந்து குதித்த ஸங்கன், சேணத்தைப் புரவிமீதே எறிந்து விட்டு, அக்கம் பக்கத்திலிருந்த வீரர்கள் ஈட்டிகளைத் தாழ்த்தி மரியாதை செய்ததைக்கூட கவனியாமல், நேராகத் தந்தையிருக்கும் அறைக்குள் சென்றான்.

சித்தூரைச் சூழ்ந்து கிடந்த துக்கத்துக்குப் பன்மடா அதிகமான துக்க நிலையை அந்த அறையிலே க ஸங்கன், அரசன் பஞ்சணையை உடனே அணுகாமல் திறந்த பெருங்கதவுக்கருகில் சற்று நேரம் நின்று, அறை நிலையைக் கவனித்தான். அரசன் பஞ்சணைய புறத்திலும் அரசனுடைய மகிஷிகள் இருவரும் உட்கார்ந்திருந்தார்கள். அரசன் விட்டுக்கொண்டிருந்து மூச்சுக்கு இடைஞ்சல்  என்ற காரணத்தால் அந்த அ சாதாரணமாகக் கமழும் சாம்பிராணிப்  புகையின் அடையாளங்கூட எங்கும் காணோம். அரசன் மஞ்சத்தை எட்டு எட்ட இருந்த இரண்டு மூன்று பெரும் விளக்குகளின் பர்கள் கூட அரசனின் நிலையைக் கண்டு செய விமந்தவைபோல் செங்குத்தாக நின்றன. பஞ்சணைக்குப் பக்கத்தில் சிறிது தள்ளி உட்கார்ந்திருந்த அரண்மனைப் பண்டிதர் அரசனுடைய தலைக்கு ஏதோ ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்தார். அறையின் ஒரு மூலையில் தோழியர் சிலர், ராணிகள் இடக்கூடிய ஆணையைச் சிரமேற்கொள்ளத் தயாராயிருந்தனர்.

இவற்றையெல்லாம் ஒரு முறை ஆராய்ந்துவிட்ட ஸங்கன் சிங்க நடை நடந்து, அரசனின் பஞ்சணையை அடைந்து, தன் தாய் உட்கார்ந்திருந்த இடத்துக்கு அருகில் உட்கார்ந்து கொண்டான். தாய்க்கு ஆறுதலாக அவள் கையையும் சிறிது தடவிக்கொடுத்தான். தாயின் கண்களில் நீர் ஆறாகச் சுரந்தது. ஆனால் தந்தையின் கண்களில் ஓர் ஆறுதலும் இதழ்களில் புன்முறுவலும் படர்ந்தன. மரணசமயத்திலும் தந்தை காட்டிய உறுதியால் ஸங்கன் எந்த வியப்பையும் அடையவில்லை. மேவார் ராஜ குடும்பத்தின் ரத்தத்தில் அந்தத் துணிவும் உறுதியும் ஊறியிருப்பதை ஸங்கன் அறிந்தேயிருந்தான். ஆகவே தாயின் கரத்தை விட்டுத் தந்தையின் கரத்தை எடுத்துத் தன் இருகைகளிலும் சிறைப்படுத்திக் கொண்டான்.

சிறைப்பட்ட அந்தக் கரம் பெரும் வீரன் ஒருவனின் கதையைச் சொல்லியது. ஆயுள் பூராவும் வாளைப் பிடித்ததால் தழும்பேறியிருந்த அந்தக்கரத்தின் முரட்டுத் தனத்தை அனுபவித்த ஸங்கன் முகத்தில் பெருமைக்குறி தாண்டவமாடியது. தந்தை மரணப்படுக்கையிலிருக்கிறார் என்பதை அந்தச் சில விநாடிகள் ஸங்கன் மறந்தான். தன் தந்தை மகாவீரர் என்பதில் அவன் உள்ளமெங்கும் பெருமை குடி கொண்டது. ஸங்கன் முகத்தில் எழுந்த பெருமைக் குறியை ராணாரேமல்லரும் கவனிக்கத் தவறவில்லை . மகன் தன்னை முழுவதும் உணர்ந்து கொண்டிருக்கிறா னென்பதால் ஏற்பட்ட உவகை உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொள்ளவே, ராணாவின் மூச்சுக்கூட சற்று நிதானப்பட்டு வரத்தொடங்கியது. இருப்பினும், மிகுந்த சிரமப்பட்டு வைத்தியரை அப்புறம் செல்ல உத்தரவிட்டு, ''சமயத்தில் வந்தாய், ஸங்கா'' என்று வார்த்தைகளை மெல்ல உதிர விட்டு, சாந்தி நிலவிய மூச்சொன்றையும் வெளியிட்டார்.

"தெரிந்திருந்தால் முன்பே வந்திருப்பேன்'' என்றான் ஸங்கன்.

''அவசியமில்லை . வந்த சமயம் சரி. சாருணீ தேவியின் ஆணை இப்படித்தான்'' என்றார் ரேமல்லர், அத்தனை சிரமத்திலும் புன்முறுவல் செய்து.

“என்ன ஆணை, தந்தையே?''

''நீ மேவார் மன்னனாக முடி சூட வேண்டுமென்பது தேவியின் ஆணை. அது நடக்கவேண்டிய சமயத்தில் வந்தாய். அதுவும் தேவியின் கடாட்சம். நீ இருந்த இடத்தை அவள்தான் சுட்டிக்காட்டினாள்.''

"அப்படியா!'

''ஆமாம், ஸங்கா! தபஸ்வினியை விசாரிக்கச் சொன்னேன். மஞ்சளாற்றங்கரைக்கு அருகில் எங்காவது இருப்பாய் என்று அவள் சொன்னாள். மஞ்சளாற்றங் கரைக்கு இப்பாலிருப்பது பிரமரர் குறுநிலம். அங்கு சமீப காலத்தில் கொள்ளைக்காரர்கள் வெற்றிகொள்ளப் பட்டார்கள் என்பதைக் கேள்விப்பட்டேன். புரிந்து கொண்டேன். பிரமரர் நாட்டுக்கருகிலுள்ள கொள்ளையர்கள் யாரென்று எனக்குத் தெரியும். அவர்களை வெற்றி கொள்ளத் திறனுள்ளவர்கள் ராஜபுதனத்தில் இருவர். தேவன் பிருத்வி, இன்னொருவன் நீ. பிருத்வி தொடைனிருந்தான்....'' மன்னன் சிரமத்தால் வார்த்தையை முடிக்காமல் விட்டான்.

தந்தையின் கூரிய அறிவை வியந்துகொண்ட ஸங்கன் மௌனம் சாதித்தான். ராணாவின் அடுத்த கேள்வி அவனைத் தூக்கிவாரிப் போட்டது. ''அது இருக்கட்டும், ஸங்கா! நாஹ்ராமக்ரோவிலிருந்து நீ ஏன் நேராக இங்கு வரவில்லை ?'' என்று கேட்டார் ராணா.

''நான் வந்தால் மீண்டும் சச்சரவு ஏற்பட்டிருக்கும்'' என்றான் ஸங்கன்,

“பிருத்விக்கும் உனக்குமா?"

"ஆமாம்.''

“தடுக்க நானில்லையா?''

"இல்லையென்று சொல்லவில்லை, தந்தையே. ஆனால், பிள்ளைகள் சச்சரவுகளைச் சமாளிக்கும் துர்பாக்கியத்தை உங்களுக்கு அளிக்க நான் இஷ்டப்பட வில்லை . அரசுக்காகச் சகோதரனுடன் சண்டையிட்டுச் சரித்திரத்தில் சாசுவதமான அவப்பெயரைப் பெறவும் நானிஷ்டப்படவில்லை .''

ரேமல்லர் முகத்தில் பெருமை பெரிதாகப் படர்ந்தது. ஆனால், அதைத்தொடர்ந்து வாயிலிருந்து உதிர்ந்த சொற்களில் கடுமையே இருந்தது.

"உன் இஷ்டத்தைப் பிரதானமாக வைத்தது தவறு, ஸங்கா'' என்றார் ராணா.

"தந்தையே...''

''மறுத்துப் பேசாதே. நீ இளவரசனாக முடிசூட்டப் பட்டவன். உன் முதல் கடமை ராஜ்யத்துக்கு, மக்களுக்கு. உன் சகோதரனோ, நானோ, மற்ற எவரும் அப்புறந்தான். நீ இளவரசனாக உன் கடமையை நினைத்துப் பார்த்திருந்தால் நாட்டைவிட்டு ஓடியிருக்கமாட்டாய்.''

''ஆனால்..."

"ஆனால் என்பது எதுவுமில்லை . கடமைக்குப்பின், 'ஆனால்' கிடையாது. ஆரம்பமும் கடமைதான், இறுதியும் கடமைதான். போனது போகட்டும், ஸங்கா. இனியாவது உன் விருப்பு வெறுப்புகளை உதறிவிடு. ஏனென்றால், நான் போனதும் நீ முடிசூடுவாய்; முடிசூடியபின் நீ மேவாரின் மன்னன் என்பதை மட்டும் நினைப்பில் வைத்துக்கொள். நானிருக்கும்போது முடிசூடுவது சம்பிரதாயமல்ல, ஆனால் இதை அணியலாம். இந்தா'' என்று தம் கையிலிருந்த முத்திரை மோதிரத்தைக் கழற்றி ஸங்கன் விரலில் போட்ட ராணா, "இன்று முதல் அதிகாரம் . முழுவதும் உன்னுடையது, ஸங்கா. உன் முன்னோர்கள் பரிபாலித்தது போல் இந்த நாட்டைப் பரிபாலனம் செய். இன்று இரண்டு பிரமாணங்களைச் செய்ய வேண்டும். எடு உன் வாளை" என்றார்.

ஸங்கன் மறதியாக உறைப்பக்கம் கையைக்கொண்டு போனான். பிறகு, சட்டென்று கையை இழுத்துக் கொண்டான். இரண்டையும் கவனிக்கத் தவறாத ராணா புன்முறுவல் செய்தார். பிறகு, தம்மை நோக்கிக் குனியும்படி ஸங்கனுக்குச் சைகை செய்தார். ஸங்கன் தலையை மெள்ளக் குனிந்தான். ராணா ரேமல்லர் சிறிது சிரமப்பட்டுத் தலையைத் திருப்பித் தமது உதடுகளை வரங்கன் காதுக்காகக் கொண்டு சென்றார். பிறகு, உதடுகள் திர்த்தன சொற்களை. “யார் அவள் ஸங்கா?'' என்ற சொற்கள், மகிழ்ச்சியில் துளைந்து விளையாடி வந்தன.

"யாரைப் பற்றிக் கேட்கிறீர்கள்?" என்று ஸங்கனும் மெதுவாகக் கேட்டான்.

"உன் வாளுக்கு மாலையிடப் போகிறவள்'' என்றார் ராணா.

ஸங்கன் திடுக்கிட்டான். தந்தைக்கு இந்த விஷயம் எப்படித் தெரிந்தது என்று சொல்லவொண்ணா வியப்பை யும் அடைந்தான். ரேமல்லர் விளக்கினார். அவர் விளக்க விளக்க ஸங்கன் வியப்பு மேலும் விரிந்தது.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.