மேவார் இளவலான ஸங்கன் அப்படித் திடீரெனத் தமது அரண்மனையில் தோன்றியது பிரமரகுல ராஜ புதரனான கரம்சந்த்துக்குப் பேராச்சரியமாயிருந்ததே யொழிய, அவர் புத்திரி சொர்ணாதேவிக்கு அது எத்தகைய வியப்பையும் அளிக்கவில்லை . யாதவர்கள் குடிசையில் அவனைப் பார்த்ததும், அவன் யாதவனல்ல என்பதையும் ஷீத்திரிய வீரன் என்பதையும், அரசுரிமைக்குப் பிறந்தவன் என்பதையும் புரிந்து கொண்டிருந்த சொர்ணாதேவி, பாதித்தன் அனுப்பியிருந்த சித்திரத்தைக் கண்டதும் கன யாரென்பதை நொடிப்பொழுதில் ஊகித்துக் தாள. பிருத்விராஜன் சித்திரத்திற்கும் ஸங்கனுக்கு மிருந்த முகஜாடை ஒற்றுமையையும், மேவார் இளவரசன் திடீரென மறைந்து விட்டானென்று ராஜபுதனத்தில் உலவிய வதந்தியையும் இணைத்துப் பார்த்த சொர்ணாதேவிக்கு உண்மை வெட்ட வெளிச்சமாகிவிட்டது. ஆனால், ஸங்கன் யாதவர்களிடம் மறைந்திருந்த விவரங்களை அறியாத கரம்சந்த் மட்டும், திடீரென ஸங்கன் தம் அரண்மனையில் வந்து முளைத்ததைப்பற்றிப் பிரமிப்பையே அடைந்தார். ஸங்கனைப் பலமுறை மேவார் தலைநகரில் பார்த்திருந்த கரம்சந்த்துக்கு ஸங்கனை அடையாளங் கண்டுபிடிப்பது அப்படியொரு பெருங்கஷ்டமாயில்லை.
ஸங்கனை அடையாளம் கண்டுபிடித்துக்கொண்ட தால் சில விநாடிகள் வாயடைத்து நின்ற கரம்சந்த், ''இந்த எளியவன் இருப்பிடத்திற்கு மேவாரின் பட்டத்து இளவரசன் வந்தது பிரமரர்கள் செய்த பாக்கியம்' என்று முகமன் கூறி அவனை வரவேற்றார்.
இதைக் கேட்டதும் முகத்தில் முறுவல் சற்றே படர, கம்பீர நடை நடந்து, வாயிற்படியைத் தாண்டி, அரண்மனையின் அந்தப் பெருங்கூடத்துக்குள் நுழைந்த ஸங்கன், எதிரேயிருந்த பிருத்விராஜன் படத்தையும் நோக்கி விட்டுக் கடைசியாகத் தன் கண்களை கரம்சந்த்தின்மீது திருப்பி, ''தாங்கள் தவறாக மதிப்பிட்டுவிட்டீர்கள். மேவாரின் பட்டத்துக்குரியவன் அதோ இருக்கிறான்'' என்று பிருத்விராஜன் படத்தைச் சுட்டிக் காட்டினான்.
கரம்சந்த் ஸங்கனை ஆச்சரியத்துடன் நோக்கி விட்டுச் சொன்னார், ''பட்டத்துக்குரியவர் உரிமையையும் கடமையையும் காற்றில் பறக்கவிட்டு மறைந்ததால் இவர் பட்டத்துக்குரியவரானார்'' என்று.
இப்போது இளவரசுப் பட்டம் பிருத்விக்குக் அடைத்துவிட்டதல்லவா?'' என்று வினவினான் ஸங்கன்.
''ஆம், கிடைத்துவிட்டது. தாங்கள் இருக்குமிடமோ, இருப்பதாகத் தகவலோ கிடைக்காததால் மேவார் மன்னர் பிருத்விராஜனைப் பட்டத்து இளவரசராக நியமித்திருக் கிறார்'' என்று சற்று கண்டிப்புடன் சொன்னார் கரம்சந்த்.
“என் மனம் ஆனந்தப்படுகிறது" என்றான் ஸங்கன்.
“தங்கள் தந்தை மனமும் மக்கள் மனமும் ஆனந்தப் படவில்லை '' என்றார் கரம்சந்த் பதிலுக்கு.
"ஏன்? பிருத்வி பெரிய வீரன். என்னைவிட வாளை நன்றாகச் சுழற்றக்கூடியவன்'' என்று ஸங்கன், பிருத்வி ராஜனுக்குப் பரிந்து பேசினான்.
கரம்சந்த்தின் ஆச்சரியம் எல்லை கடந்தது. சாருணீ தேவியின் ஆலயத்தில் நடந்த சம்பவங்கள் அந்தக் குறுகிய காலத்திற்குள் ராஜபுதனம் முழுவதும் பரவாவிட்டாலும் பல இடங்களில் பரவிவிட்டது. மாமனான சூரஜ்மல், தேவி ஆலயத்தில் நடந்ததை அப்படியே மன்னன் ரேமல்லனுக்கு ஒப்புவித்திருந்தான். அதனால் சினங்கொண்ட ரேமல்லன், சிலதினங்கள் பிருத்விராஜன் மீது சீற்றங்கொண்டாலும், ஸங்கன் இருப்பிடம் தெரியாததாலும், மேவாரைப்போன்ற பரரசு இளவரசனின்றி இருக்க முடியாதாகையாலும் தவிராஜனுக்கு இளவரசுப் பட்டத்தைச் சூட்டினான். கன் மறைந்த காரணம், பிருத்விராஜன் கொடுமை ஆகிய அனைத்தையும் உணர்ந்திருந்ததால், ஸங்கனுடைய எ மனப்பான்மையைக் கண்டு வியப்பின் எல்லையை அடைந்த கரம்சந்த், அரசுபீடத்தில் உட்கார ஸங்கன் எத்தனை தகுதியுள்ளவன் என்பதை நினைத்துப் பார்த்தார்.அதன் விளைவாகச் சற்று உக்கிரத்துடனேயே ஸங்கனுக்குப் பதில் சொன்னார், "அரசை ஏற்பவன் வாள் வீரனாக மட்டும் இருந்தால் போதாது" என்று.
“வேறெப்படி இருக்க வேண்டும்?'' என்று ஸங்கன் வினவினான்.
கரம்சந்த் உடனே பதில் சொல்லவில்லை . சிலாதித்தன் வரைந்து அனுப்பியிருந்த பிருத்விராஜன் சித்திரத்தின்மீது சில விநாடிகள் தமது கண்களை ஓட்டினார். பிறகு அந்தச் சித்திரத்தைச் சுட்டிக்காட்டி, "இளவரசே! இதோ பாருங்கள். இந்தக் கண்களில் போர்வெறி தெரிகிறது. உதடுகளில் நிதானமற்ற தன்மை தெரிகிறது. இவர் அரசரானால் பெரும் போர்கள் நாட்டில் நிகழும். யாருடனாவது சண்டை பிடிக்கும் மனப்பான்மை யிருக்கிறது தங்கள் சகோதரருக்கு. நாட்டைக் காக்கப் போர் வன்மை அவசியந்தான். ஆனால் தானாகப் போரை இழுக்கும் தன்மை அரசனுக்குக் கூடாது. அரசனின் முதல் வேலை மக்களைப் பரிபாலிப்பது; மக்களுக்கு நன்மை பயக்கும் காரியங்களைச் செய்வது. போர் அத்தகைய பணியல்ல. போரினால் மக்கள் அவதியடைகிறார்கள். அதுவும் அவசியமற்ற வீண் போர்கள் நாசத்தையே விளைவிக்கும். அத்தகைய ஆட்சியைத்தான் இவரிடம் எதிர்பார்க்கலாம்'' என்றார்.
"வேறு யாராவது பட்டத்துக்கு வந்தால் போர் நேரிடாது என்பது என்ன நிச்சயம்?'' என்று வினவினான் ஸங்கன்.
"நிச்சயமில்லை. போர் நேரிடலாம். உதாரணமாக தில்லியிலுள்ள இஸ்லாமியர் நம்மீது படையெடுக்கலாம் அப்பொழுது போர் நேரிடும். அது நாட்டைக் காக்கும் அவசியமான போர். அந்தப்போரை உங்கள் சகோதரரிடம் நான் எதிர்பார்க்கவில்லை. உள்நாட்டுப் போரை, ராஜபுத்ரன் ராஜபுத்ரனை அழிக்கும் போரை- நான் எதிர்பார்க்கிறேன். சகோதரனைப் பட்டத்துக்காகக் கொல்லத் துணியும் சுபாவம் வேறு வழியில் கொண்டு விடாது'' என்று பதில் சொன்னார் கரம்சந்த்.
"பிருத்விராஜ் சிறுபிள்ளை . இதுவரை பொறுப் பில்லை. பொறுப்பு ஏற்பட்டால் சரியாகிவிடுவான்" என்று பதில் சொன்னான் ஸங்கன்.
இருப்பினும் கரம்சந்த் அதை ஒப்புக்கொள்ள வில்லை. ஒப்புக்கொள்ளவில்லையென்பதை அவர் புன்முறுவல் நிரூபித்தது. அது மட்டுமல்ல, அவர் ஸங்கனிடம் நடந்து கொண்ட எல்லையற்ற மதிப்பையும் நிரூபித்தது. மேவார் அரியணையில் உட்கார இத்தகைய பரந்த மனப்பான்மையும் வீரத்துடன் நிதானமும் உள்ளவனே தகுந்தவன் என்று தனக்குள் லேசாகச் சொல்லிக்கொண்டார். தவிர, ஸங்கனை நீண்ட நேரம் நிற்க வைத்துவிட்டதை அறிந்த கரம்சந்த், “மன்னிக்க வேண்டும். தங்களை நிற்க வைத்தே பேசுகிறேன். உள்ளே வாருங்கள்'' என்றழைத்த கரம்சந்த், அதுவரை எதுவுமே பேசாமல் மௌனியாகிவிட்ட சொர்ணாதேவியை நோக்கி, ''சொர்ணா! நீ வரச்சொல்லியிருக்கும் அந்த வீரனை மற்றொரு நாள் பார்க்கிறேன் என்று சொல்லியனுப்பிவிடு. இன்னும் சில நாட்கள் அவன் யாதவருடன் இருக்கட்டும். முதலில் நாம் மேவார் இளவரசரைக் கவனிக்க வேண்டும்" என்றார்.
இதைக் கேட்ட சொர்ணாதேவி மெள்ள நகைத்தாள். அவள் சிரிப்பின் காரணத்தை அறியாத கரம்சந்த்தின் விழிகளில் கோபம் மண்டியது. "சொர்ணா, நீ குறுநில மன்னனின் மகள். ஆகவே, பேரரசின் இளவல்கள் வரும் போது நடந்து கொள்ளும் முறையைக் கற்றுக்கொள்ள வேண்டும். மேவார் இளவரசரின் முன்பு இப்படி நகைப்பது சரியல்ல” என்று கண்டிக்கவும் செய்தார்.
ஸங்கன் தன் ஒற்றை விழியை அவளை நோக்கித் திருப்பினன். அந்தப் பார்வையைச் சந்திக்கத் திறனற்ற சொர்ணாதேவி, தன் கண்களை நிலத்தில் ஓட்டினாள். அதைக் கண்ட ஸங்கன் மெள்ள நகைத்து, ''பிரமரகுல மன்னர் இளவரசியைக் கண்டித்துப் பயனில்லை'' என்றான்.
"ஏன்?"
''என்னைப் பார்த்துப் பலமுறை இளவரசி ஏளனச் சிரிப்புச் சிரித்திருக்கிறார்!"
''உண்மையாகவா'' கரம்சந்த் சினத்தின் வசப் பட்டார். |
''வேண்டுமானால் இளவரசியையே கேளுங்கள்'' என்றான் ஸங்கன்.
கரம்சந்த் தமது கோப விழிகளைச் சொர்ணா தேவியின்மீது திருப்பி, "இது உண்மையா, சொர்ணா?'' என்று வினவினார்.
'ஆம்'' சொர்ணாதேவி நிலத்திலிருந்து கண்களை எழுப்பாமலே பதில் சொன்னாள்.
"என்ன துணிவு உனக்கு?" என்று சீறினார் கரம்சந்த்.
"துணிவுக்குக் காரணம் அறிவீனம்'' என்றாள் சொர்ணாதேவி.
அது புரிகிறது!'' சீற்றத்தில் ஏளனமும் கலந்திருந்தது கரம்சந்த்தின் குரலில்.
"நீங்கள் நினைக்கும் அறிவீனமல்ல...'' என்று மீண்டும் தொடங்கினாள் சொர்ணாதேவி.
"அறிவீனத்தில் பலவகை இருக்கிறதா?"
“இருக்கிறது. அதில் இவரை யாரென்று நான் உணராதது ஒன்று.''
“தெரியாமற் செய்த குற்றமா?''
“ஆம்."
"மேவார் இளவரசரைத் தெரியாதவர்கள் உண்டா ?''
இதைக் கேட்ட கரம்சந்த், அப்பொழுதுதான் முதன் முதலாக ஸங்கன் உடையைக் கவனித்தார். பாதி சொந்த உடையும், பாதி யாதவர் உடையும் அணிந்திருந்த ஸங்கனைப் பார்த்ததும் அவருக்கு மெள்ள உண்மை விளங்கலாயிற்று. ''அப்படியானால் நீ கூறிய வீரர்...?'' என்று தட்டுத் தடுமாறிக் கேட்டார் கரம்சந்த்.
'இவர்தான்'' என்று கூறிய சொர்ணாதேவி, அதற்கு மேல் அங்கு நிற்காமல் ஸங்கன்மீது தன் கண்களை ஒருமுறை திருப்பிவிட்டு, உள்ளே சென்று விட்டாள்.
கரம்சந்த்தின் மனத்தில் ஆனந்த வெள்ளம் புரண் பாடியது. ஸங்கனைச் சந்தித்த விவரங்களைச் சொர்ணா முதல் நாள் கூறியபோது, அவளுக்கிருந்த உற்சாகத்தை கவனிக்கத் தவறாததால், அவள் மனப்போக்கை 4 புரிந்து கொண்ட கரம்சந்த், தமது மகளின் மனத்தை னை துரிதத்தில் கவர்ந்தவன் யாராயிருக்க முடியும் எண்ணியதாலேயே, அவனை நேரில் அரண்மனைக்கு வரவழைத்துப் பார்க்கத் தீர்மானித்தார். அப்பொழுது அவன் மேவார் இளவரசனாயிருக்க முடியுமென்பதை அவர் சொப்பனத்தில் கூட நினைக்காததால், குழம்பிக் கிடந்த அவர் மனத்தில், அந்த வீரன் ஸங்கனேயென்பதை அறிந்ததும், பெரு மகிழ்ச்சி குடிகொண்டதில் என்ன வியப்பிருக்க முடியும்?
ஆகவே, ஸங்கன் என்ன மறுத்துச் சொல்லியும் கேளாமல், அவனைத் தம்முடனேயே அரண்மனையில் நிறுத்திக் கொண்டார் கரம்சந்த். மேவாரின் இளவரசனுக் குரிய சகல மரியாதைகளும் அவனுக்குக் காட்டப்பட்டன. ஸங்கன் எங்கு சென்றாலும் அவனைத் தொடர்ந்து செல்லப் பதினைந்து ராஜபுத்ரர்களும் மெய்க்காவலாக நியமிக்கப் பட்டார்கள். சிலாதித்தன் அனுப்பிய சித்திரத்தை அவர் அன்றே எடுத்துத் திருப்பியனுப்பி விட்டார். பிருத்விராஜனுக்குப் பெண்ணைக் கொடுக்க முடியாததற்கு மன்னிப்புக்கோரி ஓர் ஓலையையும் சிலாதித்தனுக்கு அனுப்பினார். ஓலையில் மரியாதை நிரம்பிக் கிடந்தது. ஆனால், கேவலம், ஒரு சிற்றரசன் தனது பெண்ணை மேவார் பட்டத்து இளவரசனுக்குக் கொடுக்க மறுத்ததால் பெரும் சினங் கொண்டான் சிலாதித்தன். எப்படியும் பிரமரர்கள் சிற்றரசை ஒழித்து விடுவதென அன்று முதல் கங்கணமும் கட்டிக் கொண்டான். 'எவன் சொர்ணா தேவிக்கு மாலை சூடினாலும் அவன் என் எதிரி' என்று, பலர் முன்னிலையில் சபதமும் செய்தான். சபதத்தைக் கேட்டுப் பல ராஜ புத்திரர்கள் நகைத்தார்கள். ஆனால், சரித்திரம் நகைக்கவில்லை . மிகவும் விபரீதமான விளைவை மேவாருக்கு விளைவித்தது அந்தச் சபதம். சபதத்தின் பலன் உடனே கிட்டவில்லையென்பது உண்மை. ஆனால் சிலாதித்தன் இதயத்தில் அது எரிமலையெனப் புகைந்து கொண்டிருந்தது. சில எரிமலைகள் வெடிக்க நாளாகிற தல்லவா? அப்படித்தானிருந்தது சிலாதித்தன் விரோதமும். வெடிக்க வருஷங்கள் பல ஆயின. வெடித்தபோது அது ராஜபுதனத்துக்கே பெரும் நாசத்தை விளைவித்தது.
இப்படி உருவாகும் விரோதத்தை அறியாமலே ஸங்கன் பல மாதங்களைப் பிரமரர்கள் சிற்றரசில் கழித்தான். அவன் அங்கிருந்ததால், பிரமரர்கள் சிற்றரசு நாளுக்குநாள் வலுப்பட்டது. மஞ்சளாற்றங்கரையிலிருந்த யாதவகுலத்தோரைத் தாக்கி வந்த திருடர் கூட்டத்தை ஸங்கன் அடியோடு அழித்துவிட்டதால் யாதவர்கள் பயமில்லாமல் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு முன்பெல்லாம் தனியாக மஞ்சளாற்றங்கரைக்குப் போகாத சொர்ணாதேவி தனது அரசில் ஏற்பட்ட பய நிவர்த்தியால் தனியாகவே மஞ்சளாற்றுக்கு அடிக்கடி போய் வந்தாள். அவள் உள்ளம் ஆனந்தத்தில் ஆழ்ந்து கிடந்தது. காரணம், ஸங்கன் அருகிலிருந்தது மட்டுமல்ல. பிருத்விராஜன் வேறு ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு விட்டானென்பதையும், பிருத்விராஜனுக்கு ரேமல்லன் இளவரசுப் பட்டத்தைக் கட்டி விட்டார் என்பதையும் கேட்டதும் அதற்கு ஒரு காரணம். இனி ஸங்கன் தன்னை மணம் செய்யத் தடை சொல்ல முடியா தென்று அவள் எண்ணினாள். அது மட்டுமல்ல; இனி அவன் மேவாருக்குச் செல்வதில் அர்த்தமில்லையாகையால் பிரமரர் நாட்டிலேயே இருப்பான்; அதாவது, தன் அருகில் இருப்பானென்பது இன்னொரு காரணம்.
இத்தகைய எண்ணங்களில் பூரிப்படைந்த சொர்ணா தேவி, மகிழ்ச்சிக்கடலில் மூழ்கிக் கிடந்தாளேயொழிய அந்தப் பல மாதங்களில் ஸங்கனை ஒரு முறைகூடச் சந்திக்கும் வாய்ப்பு அவளுக்குக் கிட்டவில்லை. அவன் புரவியில் அமர்ந்து, இடுப்புக் கச்சையால் கட்டப்பட்ட வாள் புரவியின் நடையில் அசைய , பிரமர சிற்றரசின் மாற்றாரை அடக்கச் செல்லும் காட்சியை உப்பரிகையி லிருந்து பலமுறை பார்த்திருக்கிறாளானாலும், அவனை அணுகிப் பேசும் சந்தர்ப்பம் மட்டும் கிடைக்கவில்லை. அவளுக்கு அது எதிர்பாராமல் கிடைத்தபோது அடுத்த பலனும் மிக வேகமாகவே கிட்டியது.
மஞ்சளாற்றில் தோழிகளுடன் அவள் நீராடிக் கொண்டிருக்கையில் அந்தப் பக்கம் வந்த ஸங்கன் தனது புரவிக்கு நீர்காட்ட அவளிருந்த துறையை அடைந்தான். ஆனால், அங்கிருந்த பெண்கள் கூட்டத்தைக் கண்டதும் திடீரெனப் புரவியின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேறு துறைக்குச் செல்லத் திரும்பினான். அவன் வருவதைக் கண்டதும் சொர்ணாதேவியின் தோழிகள் கரையேறிப் பக்கத்துத் தோப்பில் மறைந்து விட்டார் களானாலும், சொர்ணாதேவி மட்டும் வேண்டுமென்றே தாமதித்தாள். அவன் நதிக்கரையை அடைந்து புரவிக்கு நீர் காட்டாமல் திரும்ப முற்பட்டதும், சொர்ணாதேவி சட்டென்று நீரிலிருந்து எழுந்து, கரையை அடைந்து “புரவிக்கு நீர் காட்டுங்கள்; அதை தாகத்துடன் அழைத்துச் செல்ல வேண்டாம்' என்றாள் தைரியத்துடன்.
ஸங்கன் மெள்ள புரவியை இழுத்துக்கொண்டு மீண்டும் திரும்பி வந்தவன், சொர்ணாதேவியைக் கண்டு ஒரு கணம் தயங்கினான். அவள் ஈர உடை வெளிப்படுத்திய அவள் இணையற்ற அழகைப் பார்த்து ஒரு முறை அவன் உடல் நடுங்கியது. அவளைப் பார்த்த கண் திடீரென நிலத்தை நோக்கியது. மஞ்சளாற்றையும் ஒருமுறை பார்த்து அவளையும் பார்த்த ஸங்கன், 'அவள் மஞ்சள் நிற மேனியழகுக்கு மஞ்சளாற்றின் நிறம் தூசி பெறாது" என்று கனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். பிறகு, பேசாமல் புரவியை இழுத்துக்கொண்டு துறையில் இறங்கினான்.
சொர்ணாதேவியின் கண்கள், ஸங்கன் உடல் நடுங்கியதையோ, அவன் குழப்பத்தையோ கவனிக்கத் தவறாததால் அவள் உள்ளத்தில் இன்ப வெள்ளம் ஓடியது. ஒரு கண்ணில்லாத நிலையிலும் அவன் முகம் எத்தனை கம்பீரமாயிருக்கிறது என்பதை நினைத்துப் பெருமூச்சு விட்டு, மெள்ள நடந்து தன் தோழிகளிருந்த தோப்புக்குள் சென்றாள்.
புரவிக்கு நீர்காட்ட மஞ்சளாற்றுத்துறையில் இறங்கிய ஸங்கன், நீண்டநேரம் கரையிலேயே உட்கார்ந்து விட்டான். அவன் மனம், சாருணீதேவியின் ஆலயத்திலிருந்து அன்று வரை நடந்த சம்பவங்களை எண்ணிக் கொண்டிருந்தது. தன் மனம் சொர்ணாதேவியிடம் அடிபட்டுச் சிக்கிவிட்டதை எண்ணிப் பெருமூச்செறிந்தான். 'ஒரு கண்ணற்றவன், அரசைத் துறந்து மறைந்துறைபவன், என்னால் அவளுக்கு என்ன பயன்? அழகுக்குக் கண் தேவை. சுகபோகங்களுக்கு அரசு தேவை. இரண்டுமில்லாத நான் அவளை எண்ணு வதும் பிசகு' என்று தன்னையே நிந்தித்துக்கொண்டே நீண்ட நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான்.
அந்தச் சிந்தனையைச் சொர்ணாதேவியே கலைத் தாள. ''எத்தனை நேரம் இப்படி உட்கார்ந்திருப்பதாக உத்தேசம்?” என்று பக்கத்திலிருந்து வந்த சொற்களால் "சியடைந்து திரும்பிய ஸங்கன், தனது பக்கத்தில் சரசகுமாரி அமர்ந்திருப்பதையும், அவள் புது ஆடை யணிந்து, தலையைக்கோதி முடித்து, அதில் ஒரு மலரையும் செருகிக் கொண்டிருப்பதையும் கண்டு, என்ன சொல்வ தென்றறியாமல் ஒருகணம் திகைத்தான். பிறகு, "நீங்களா" என்று கேட்டு எழுந்திருக்கவும் முயன்றான்.
"எழுந்திருக்க வேண்டாம். உட்காருங்கள்'' என்றாள்.
"ஏன்? இங்கென்ன வேலையிருக்கிறது?'' என்று வினவினான் ஸங்கன், சொர்ணாதேவியின் அருகில் சங்கடத்துடன் மகிழ்ச்சியும் கலந்த குரலில்.
“வேலையில்லாததால் உட்கார்ந்திருக்க ஆசைப் படுகிறேன்'' என்றாள் சொர்ணாதேவி, மஞ்சளாற்று நீரை விட்டுக் கண்களைத் திருப்பாமலே.
"தோழிகள்?".
"போய்விட்டார்கள்.''
“உங்களுக்குத் துணை?''
"மேவார் இளவரசர் இருக்கிறார்.''
"மேவார் இளவரசர் பிருத்விராஜன்.''
''அதுமற்றவர்களுக்கு."
''உங்களுக்கு மட்டும் சட்டம் வேறா?''
''ஆமாம். நீதியின் சட்டம். நேர்மையின் சட்டம். அந்தச் சட்டப்படி எங்களுக்கு மேவார் இளவரசர் ஒருவர் தான்.''
"நீங்கள் சொல்வது தவறு, அரசகுமாரி...'' என்று ஆரம்பித்த ஸங்கனை இடைமறித்த சொர்ணாதேவி, "நீங்கள் என்றழைத்தால் இனிப் பதில் சொல்லமாட்டேன்'' என்றாள்.
“பின் எப்படி அழைப்பது?'' என்று கேட்டான் ஸங்கன்.
“நீ என்றழைப்பது.'' "அரசகுமாரியையா?''
"ஆமாம். சிற்றரசன் பெண்ணைப் பேரரசின் இளவல் அப்படித்தானே அழைக்க வேண்டும்?''
"தவறு, அரசகுமாரி. அந்தஸ்துக்கும் கண்ணியமான நடைமுறைக்கும் சம்பந்தமில்லை. மணமாகாத ஒரு பெண்ணிடம் யாராயிருந்தாலும் மரியாதையுடன் நடந்து கொள்வதுதான் நியாயம்.''
''மணமாகிவிட்டால்?''
"அப்பொழுதும் உரியவன்தான் நீ என்றழைக் கலாம்."
சொர்ணாதேவி மஞ்சளாற்றை விட்டுத் தன் கண்களை ஸங்கன் மீது திருப்பி, "உரியவர் அழைக்கலாமல்லவா?'' என்றாள்.
“அழைக்கலாம்'' என்றான் ஸங்கன்.
சொர்ணாதேவி மேற்கொண்டு பேசவில்லை. தன் கையிலொன்றைக் காட்டி "இதைப்பாருங்கள்'' என்றாள்.
"என்ன பார்க்க வேண்டும்?' ஸங்கன் தயக்கத்துடன் கேட்டான்.
“நீங்கள் குதிரையிலிருந்து என்னை யாதவர்கள் முனபு தள்ளிய போது ஏற்பட்ட காயத்தின் தழும்பு இது” என்றாள் சொர்ணாதேவி.
அவள் புறங்கையைத் தன் கையால் பிடித்து பறை திருப்பிப் பார்த்தான் ஸங்கன். சொர்ணாதேவி கலகலவென நகைத்தாள். ''என்ன நகைக்கிறீர்கள் தேவி?" என்று கேட்டான் ஸங்கன்.
"மணமாகாத ஒரு பெண்ணின் கையைப் பற்றும் உரிமை யாருக்கு உண்டு?'' என்று கேட்டாள் சொர்ணா தேவி.
ஸங்கன் அதிர்ச்சியடைந்தான். காரணம், அவள் கேள்வி அல்ல. இன்னும் பலரின் நகைப்பு அவன் காதில் விழுந்தது. சரேலென்று கரையிலிருந்து எழுந்த ஸங்கன், வேட்டைக்குப் போய் வந்த கரம்சந்த்தும் மற்றும் சில வீரர்களும் சிறிதும் தூரத்தில் புரவிகளில் அமர்ந்தவண்ணம் தங்களைப் பார்த்து நகைப்பதைக் கண்டான்.