Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

அத்தியாயம்-8:இன்னொரு கண்

மஞ்சளாற்றங்கரையில் அமர்ந்த தன் மகளின் கையை இன்னொருவன் பிடித்ததைக் கண்கொண்டு பார்த்த பின்புங்கூட, பிரமரகுல ராஜபுத்திரன் சிறிதும் சீற்ற மடையாமல் கேலிச் சிரிப்புச் சிரித்ததையும் அவனுடன் வந்திருந்த மற்ற வீரர்களும் அந்தக் கேலியில் கலந்து கொண்டதையும் கண்ட ஸங்கன், திகைப்பை மட்டுமின்றி ஓரளவு வியப்பையும் அடைந்து சில நிமிடங்கள் ஸ்தம் பித்து நின்றான். அவன் திகைப்பையோ வியப்பையோ சிறிதும் லட்சியம் செய்யாத பிரமரகுல ராஜபுத்திரன், அடுத்த விநாடி அங்கு நிற்காமலும், தன் பெண்ணை வாவென்று கூட அழைக்காமலும், திடீரெனக் குதிரையைத் திருப்பிக்கொண்டு வேகமாக சென்று விட்டதும், அவன் பிெரமையை ஓரளவு உயர்த்தவே செய்ததென்றாலும், சொர்ணாதேவி மட்டும் அவன் காட்டிய எந்த உணர்ச்சிகளிலும் ஈடுபடாமல் வெட்கத்துக்கு மட்டும் இடங்கொடுத்து, அந்த வெட்கத்தால் முகம் சிவக்கப் பக்கத்தே நின்ற ஸங்கனைப் பார்க்கவும் திராணி யற்றவளாய்க் கண்களை நிலத்தில் நாட்டினாள். கரம்சந்த்தின் புரவியும் அவனுடன் வந்த வீரர்களின் புரவிகளும் கண்ணுக்கு மறையும் வரையில் அவற்றையே பார்த்துக் கொண்டு நின்ற ஸங்கன், தனது முகத்தை மெள்ளச் சொர்ணாதேவியை நோக்கித் திருப்பினான்.

சொர்ணாதேவி அப்பொழுதும் நிலத்தை நோக்கியே நின்றிருந்ததைக் கண்டு தவறாக அர்த்தம் செய்து சொண்ட ஸங்கன், ''சொர்ணாதேவி! இதில் நீங்கள் அச்சம் கொள்வதற்கு ஏதுமில்லை. உங்கள் தந்தையிடம் நான் விளக்கிச் சொல்கிறேன். அவர் புரிந்து கொள்வார்'' என்று தேறுதல் சொன்னான்.

அந்தத் தேறுதல் மொழிகளைக் கேட்ட சொர்ணா தேவி, நிலத்தை நோக்கி புன்முறுவல் செய்து கொண்டே சொன்னாள், “எனக்கு அச்சம் ஏதுமில்லை . என் தந்தைக்கும் விளக்கம் தேவையில்லை. அவர் புரிந்து கொண்டும் நாளாகிறது'' என்று.

அவள் சொற்களின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள டியாமல் ஸங்கன் சில விநாடிகள் விழித்துவிட்டு, “எதைப் புரிந்து கொண்டுவிட்டார், சொர்ணாதேவி?'' என்று வினவினான்.

“எதைப் புரிந்துகொள்ள வேண்டுமோ அதை'' என்ற தவி, களுக்கென நகைத்தாள். கலகலவென ஸ்வர ஜாலங்களைப் போல் உதிர்ந்த அந்த சிரிப் பொலியால் உணர்ச்சியில் சிக்கத் தொடங்கிய ஸங்கள் தன்னைத் திடப்படுத்திக்கொள்ளச் சுற்றும் முற்றும் நோக்கினான்.

மனோகரமான அந்த மாலை நேரத்தில் வீசிய கதிரவனின் மஞ்சள் வெயில், ஏற்கெனவே மஞ்சளாயிருந்த மஞ்சளாற்று நீரைத் தங்கமயமாக அடித்துக்கொண்டிருந்தது. ராஜபுதன பாலைவனத்தின் மணலுங்கூட அந்த மஞ்சள் வெயிலால் நிறம் மாறியிருந்ததால், எங்கும் பொன் பொடிகள் விசிறிக் கிடப்பனபோன்ற பிரமையைச் சிருஷ்டித்தன. இந்தச் சூழ்நிலையில் நின்ற சொர்ணா தேவியின் தங்க நிறக் கன்னங்கள் வெட்கத்தால் சிவந்து கிடப்பதைக் கண்ட ஸங்கன், கரம்சந்த்தை மறந்தான். அதுவரையில் தனக்கும் சொர்ணாதேவிக்கும் நடந்த உரையாடலையும் மறந்தான். 'இன்னும் சிறிது நேரம் போனால் கதிரவனும் இவள் கன்னத்தைப்போல்தானே சிவப்பான்?' என்று மட்டும் எண்ணினான். தனக்கெதிரே தலைகுனிந்து நின்ற அந்த தருணியின் அங்கலாவண்யங்கள் ஒவ்வொன்றையும் ஒற்றைக் கண்ணாலேயே பருகினான்.

நிலத்திலே தன் மீன் விழிகளைச் செலுத்தி நின்ற அந்த நேரத்திலும், மேவார் இளவலின் மனநிலையைச் சந்தேகமறப் புரிந்து கொண்டிருந்தாள் சொர்ணா தேவி. ஆண்களின் பலவீனத்தை அவர்களைப் பாராமலே புரிந்து கொள்ளும் அந்தச் சக்தியை மட்டும் ஆண்டவன் பெண்களுக்கு அளித்திராவிட்டால், பெண் சாகசம் என்ற சொற்கள் உலகத்திலேயே உதித்திருக்க மாட்டா. ஆண்களின் எண்ணங்களை உணருவதிலும், உணர்ந்தும் உணராதது போல் நடிப்பதிலும் பெண்களுக்கு ஏற்படும் உவகை எல்லையற்றது. அந்த உவகையில் அன்று மூழ்கி நின்ற சொர்ணாதேவி ஏதும் அறியாதவள்போல், "ஏன் திடீரெனப் பேச்சை நிறுத்தி விட்டீர்கள்?'' என்று நிலத்திலிருந்து தலையை உயர்த்தாமலேயே கேட்டாள்.

"தவறு செய்தவன் எப்படிப் பேச முடியும், தேவி?' என்று கேட்டான் சிறிது சங்கடத்துடன்.

"இது சரியாயிருக்கிறது?" என்றாள் சொர்ணாதேவி.

"எது சரியாயிருக்கிறது?'' ஏதும் புரியாமல் வினவினான் ஸங்கன்.

“தாங்கள் என்னைத் தேவி என்றழைத்தது'' என்று சொல்லி நகைத்தாள் கரம்சந்த்தின் மகள்.

"வேறெப்படி அழைப்பது?'' என்று ஸங்கன் கேட்டான்.

"வேறெப்படியும் அழைக்க வேண்டாம்; இதுவே சரியாயிருக்கிறது'' என்ற சொர்ணாதேவி, முகத்தில் முறுவல் கூட்டினாள்.

''அரசன் மகளை ஊழியன் அழைக்க வேண்டிய முறை அது " என்று விளக்க முற்பட்டான் ஸங்கன்.

"அந்த முறையும் உண்டு ....'' "வேறு முறை இருக்கிறதா?"

''அரசகுமாரர்கள் வாழ்க்கைத் துணைவிகளை அழைக்கும் முறையும் அதுதான்! காவிய புருஷர்கள் அப்படித்தானேஅழைக்கிறார்கள்?'' என்று மெள்ளக்  கேட்டாள் சொர்ணாதேவி.

இதற்குப் பதிலேதும் சொல்லாத ஸங்கள், பக்கத்திலிருந்த தன் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்திழுத்துக் கொண்டு வந்து, ''அரசகுமாரி! உங்கள் புரவி எங்கே? என்று வினவினான்.

"எதற்குக் கேட்கிறீர்கள்?'' என்று பதிலுக்குக் கேட்டாள் சொர்ணாதேவி.

"கதிரவன் மலைவாயிலில் விழும் சமயம் நெருங்கி விட்டது'' என்று மேல்திசையைச் சுட்டிக்காட்டினான் ஸங்கன்.

கதிரவன் தன் கிரணங்களின் உக்கிரத்தைப் பூரணமாக அடக்கிக்கொண்டு, பெரும் பழம்போல் நன்றாகச் சிவந்து மெள்ள மறைய முற்பட்டான். அந்தக் காட்சியில் மனத்தைப் பறிகொடுத்துச் சிறிது நேரம் நின்ற சொர்ணா தேவி, “என்ன அழகு, பார்த்தீர்களா!'' என்று வினவினாள்.

''அழகைப் பார்ப்பதற்காக நான் அதைச் சுட்டிக் காட்டவில்லை, அரசகுமாரி. இன்னும் சற்று நேரத்தில் இருள் கவியத் தொடங்கிவிடும் என்பதற்காகவே காட்டினேன்'' என்று கண்டிப்பான குரலில் கூறினான் ஸங்கன். அவன் குரலிலிருந்த அந்தக் கண்டிப்பின் காரணத்தைச் சொர்ணாதேவி நன்றாக உணர்ந்து கொண்டிருந்தாள். உள்ளத்தில் ஏற்பட்ட பலவீனத்தை மறைக்கவே ஸங்கன் அந்தக் கண்டிப்பைக் குரலில் காட்டுகிறானென்பதையும், எக்காரணத்தைக் கொண்டும் தன்னைப் போன்ற ஒரு பெண்ணுக்கு உலக நிந்தை ஏற்படக்கூடாதென்ற உத்தம எண்ணமே அவன் குரலின் உக்கிரத்துக்குக் காரணமென்பதையும் புரிந்து கொண்ட சொர்ணாதேவி, காதல் ததும்பும் கண்களுடன் அவனைப் பார்த்து, "உண்மைதான், சீக்கிரம் இருட்டித்தான்விடும்'' என்றாள்.

“ஆகவே சீக்கிரம் நாம் புறப்பட வேண்டும்.''

"புறப்பட வேண்டியதுதான்.''

"அதற்குத்தான் புரவியெங்கே என்று கேட்கிறேன்.''

"ஓகோ! அதற்குத்தான் கேட்டீர்களா?''

''ஆம்.'

“புரவி தோப்பில் கட்டியிருக்கிறது.''

''போய் அவிழ்த்து வா.''

கோபத்தின் வசப்பட்டதால் திடீரென ஸங்கன் தன்னிடம் மரியாதையைக் கைவிட்டு, 'புரவியை அவிழ்த்து வா' என்று கூறியதைக் கேட்டதும், விஷமமாகப் புன் முறுவல் செய்த சொர்ணாதேவி, "நன்றாகச் சொன்னீர்கள்! தோப்பில் அதோ இருள் சூழத்தொடங்கி விட்டது. நான் தனித்துப் போகமாட்டேன்'' என்றாள்.

"சரி. நானும் வருகிறேன்'' என்ற ஸங்கன், தன் புரவியை இழுத்துக்கொண்டு அவள் பின்னே சென்றான். இருள் கவியத் தொடங்கிவிட்ட அந்த நேரத்தில் சொர்ணாதேவியின் அழகு முன்னைவிடப் பன்மடங்கு அதிகமாகத் தெரிந்தது ஸங்கனின் கண்ணுக்கு. அவள் முன்னே நடந்து சென்றதால் இடை நெளிந்த அழகையும், வெட்கத்தால் பின்னிய நடையின் விளைவாக அசைந்த னயின் பின்புற லாவண்யத்தையும் ஒற்றைக் கண்ணால் பருகி கொண்டு சென்ற ஸங்கனின் மனோநிலை, மீண்டும் பெரும் உணர்ச்சிகளுக்கு இடங்கொடுக்கலாயிற்று. தள புகுந்ததும் இருட்டின் விளைவாகப் பயப் போல் சற்றுப் பின்னடைந்த சொர்ணாதேவியின் "திடீரெனத் தாக்கியதாலும், அவள் பயத்தைப் குதிரைச் சேணத்தை எறிந்த ஸங்கன் திடீரென இரு கைகளாலும் அவளைப் பிடித்ததாலும், அப்படி உடல் பூராவும் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட ஸ்பரிசத்தால் உணர்ச்சிகள் கட்டுகளை அடியோடு அறுத்துக்கொண்டு விட்டதாலும் ஸங்கன் மெய்ம்மறந்து நின்றான்.

வேண்டுமென்றே ஸங்கனை அந்தத் தோப்புக்குள் இழுத்துவந்த சொர்ணாதேவியின் உடல் பூராவும் இன்ப உணர்ச்சிகள் மின்னல் வேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தன. சுற்றிலும் தோப்பு மரங்கள் திரையிட்டு நின்றதால், அவள் சற்று தைரியத்துடன் அவன் மீது சாயவே செய்தாள். அப்படி அவள் இஷ்டத்துடன் சாய்ந்ததைக் கண்டதும், கொஞ்சநஞ்ச மிருந்த உறுதியைக் காற்றில் பறக்கவிட்ட ஸங்கன் கைகள், அவள் அழகிய தோள்களிலிருந்து கீழிறங்கி அவளை வளைத்தன. அந்தக் கரங்களின் இன்பச் சிறையில் வேண்டுமென்றே சுழன்றாள் சொர்ணாதேவி. அவள் தலை, பின்புறமாக அவன் மார்பில் சாய்ந்தது. தலையில் பக்கவாட்டில் செருகியிருந்த செண்பக மலர் தன் சுகந்தத்தை அவன் நாசிக்கு ஊட்டியது. அதனால் இன்போதை யடைந்து அவள் கழுத்தை நோக்கிக் குனிந்த ஸங்கன், வாசனைப் பொடிகளால் தேய்க்கப்பட்ட அவள் தேகத்தின் நறுமணத்தை நுகர்ந்து, 'இந்தப்பெண் மலரிடம் அந்தச் செண்பக மலர் என்ன செய்ய முடியும்?' என்று மனத்தே எண்ணினான். அடுத்த விநாடி அவன் சலனம் அகன்றது. பயம் விலகியது. லேசாக அவளைத் தழுவி நின்ற அவன் கரங்கள் திடீரென இறுகி, அவளை நசுக்கிவிடுவனபோல் நெரித்தன. வலிமையான அவன் உதடுகள் மிகுந்த துணிவுடன் அவள் கபோலத்தில் ஆழப் புதைந்தது. காலம் போவது தெரியாமல் நீண்ட நேரம் அந்த நிலையிலே நின்ற ஸங்கன், திடீரென அவளை விடுத்து, அவள் புரவியிருந்த இடத்தை வெகு வேகத்தில் நாடி, புரவியை அவிழ்த்து மத்துக்கொண்டு வந்தான். வந்தவன் அவளை ஏறக்கூட வமதிக்காமல், ஒரு சிறு குழந்தையைத் தூக்குவதுபோல் அவளைத் தூக்கிப் புரவிமேல் வைத்துத் தன் புரவியில் சானம் ஏறிக்கொண்டான். "வா சொர்ணா! மாளிகைக்குப் போவோம். இனி மறைத்துப் பயனில்லை'' என்றான் ஸங்கன், திடமான குரலில்.

அவன் கரங்களில் வலிமையைச் சற்றுமுன்பாக அனுபவித்த சொர்ணாதேவி, அவன் திடீரென ஒரு முடிவுக்கு வந்துவிட்டதைக் கண்டு, பெரும் முடிவுகளை நினைத்த மாத்திரத்தில் செய்யக் கூடிய இவரல்லவா மேவாரின் அரியணையில் இருக்க வேண்டும்' என்று எண்ணிப் பெருமூச்செறிந்தாள். அவள் பெருமூச்சின் காரணத்தைச் சரியாக உணராத ஸங்கன் சொன்னான், "கவலைப்படாதே, தேவி! நானே உன் தந்தையிடம் இதைப் பற்றிப் பேசுகிறேன்'' என்று.

"பேசவேண்டிய அவசியமில்லை '' என்றாள் சொர்ணாதேவி.

''அவசியமில்லை !'' ஸங்கன் குரலில் ஆச்சரியம் மண்டிக் கிடந்தது.

“இல்லை .''

"ஏன்?"

“தந்தை முன்னமே புரிந்து கொண்டுவிட்டார் என்று என் ஆரம்பத்திலேயே சொல்லவில்லையா?"

"அப்படியானால் உன் தந்தைக்கு...?''

என் மனோ நிலை முன்னமே தெரியும்.''

"அப்படியா!''

"இன்னும் உங்களுக்குப் புரியவில்லை ! என் மனநிலை மட்டும் என் தந்தைக்குப் புரிந்திராவிட்டால், நீங்கள் ஆற்றங்கரையில் என் கையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்ததைப் பார்த்து விட்டு நகைத்து விட்டா செல்வார்?''

இதைக் கேட்ட ஸங்கன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். இந்தச் சிறு உண்மை தனக்கு எப்படி தெரியாமற் போய்விட்டது என்பதை நினைத்து, விவரிக்க இயலாத வியப்பை எய்தினான். 'எத்தனை குருட்டுத்தனமாக இருந்து விட்டேன்...' என்று எண்ண முற்பட்ட ஸங்கனுக்கு அப்பொழுதுதான் தனக்குக் கண் ஒன்று இல்லையென்ற நினைப்பும் ஏற்பட்டது. 'என்ன தவறு செய்துவிட்டேன்! ஒரு கண்ணற்ற என்னைச் சொர்ணாதேவி எதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும்?' என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்ட ஸங்கன் இதயத்தில், பிரமரகுல ராஜபுத்திரிக்குத் தான் பெருந்தீங்கை விளைவித்த சோகம் ஏற்படவே, அந்தச் சோகத்தின் விளைவாகப் பெருமூச்செறிந்தான். அத்துடன், "சொர்ணா! பெண்கள் அதிர்ஷ்டப்படி மணவாளன் வாய்க்கிறான்'' என்று சொன்னான்.

''ஆம், நான் அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன்'' என்றாள் சொர்ணாதேவி.

''இல்லை, சொர்ணாதேவி. நீ அதிர்ஷ்டம் செய்ய வில்லை . உன்னைக் கைப்பிடிக்க முயலுபவன்...''

''மேவார் அரியணையில் அமரத் தகுதி வாய்ந்த வர்...''

"ஆனால்....'

“அதைச் சகோதரனுக்காகத் தியாகம் செய்த பெருந்தகை."

''அதுமட்டுமல்ல, சொர்ணா!"

"வேறென்ன?'' "ஒற்றைக் கண்ணன்.'' “இல்லை , இல்லை , தவறு.'' "தவறா ?''

"ஆம். இன்னொரு கண் நானிருக்கிறேன்'' என்ற சொர்ணாதேவி, தன் புரவியை அவன் புரவியுடன் நெருக்கி அவன் கைமீது தன் கையை வைத்து, “இதோ பாருங்கள், திரும்பத் திரும்ப உங்கள் குறைகளைச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்'' என்று, குரலில் காதல் பொங்கி வழியக் கூறினாள்.

அதற்குமேல் ஏதும் பேசாமல் ஸங்கன் புரவியை வேகமாக நடத்தவே, அவளும் தன் புரவியைத் தூண்டி மௌனமாகச் சென்றாள். இப்படிப் பேசாமலே சென்ற இருவரும், பிரமரர் தலைநகரின் முதல் மூன்று பெருவாயில்களையும் ம் கடந்து அரண்மனையை அணுகிய பாது, வாயிலில் புரவிகள் பல நின்று கொண்டிருப்தையும், மேவாரின் சின்னங்களை அணிந்த வீரர்கள் பலர் அவற்றின் பக்கங்களில் ஆயுதபாணிகளாய் நிற்பதையும் டனர். அதன் காரணத்தைப் புரியாது குதிரையிலிருந்து குதித்த ஸங்கனும் சொர்ணாதேவியும் ஒருவரையொருவா விநாடி நேரம் பார்த்துக் கொண்டு, விடு விடு என்று அரண்மனைக்குள் நடந்து சென்றனர். அரண்மனையின் முன்கூடத்திலிருந்த காவலனொருவன், ஸங்கனுக்காக மேவார் தளபதி காத்திருப்பதாகச் சொல்லி, அவனை கரம்சந்த்தின் அறைக்கு அழைத்துச் சென்றான். சொர்ணா தேவியை அந்தப்புரத்துக்குச் செல்லும்படி கூறிவிட்டு, கரம்சந்த்தின் அறைக்குச் சென்றான் ஸங்கன். அந்த அறையில் இருந்த தளபதி, ஸங்கனைக் கண்டதும் எழுந்து தலை தாழ்த்தி நின்றதைக் கண்டு, "சிலாதித்தனா! நீ எப்பொழுது மேவாரின் தளபதியனாய்?" என்று வினவவும் செய்தான்.

சிலாதித்தன், தாழ்த்திய தலையை நிமிர்த்தி, "தங்கள் சகோதரர்கள் அந்தப் பதவிக்கு உயர்த்தினார்கள்'' என்றான்.

''யார், பிருத்விராஜனா?" என்று கேட்டான் ஸங்கன்.

''ஆம்'' என்ற சிலாதித்தன், ஸங்கன் ஒரு கண்ணை இழந்திருப்பதைக் கண்டு திகைத்து, "மேவார் இளவரசரின் கண்ணுக்குத் தீங்கு விளைவிப்பவனும் ராஜபுதனத்தில் இருக்கிறானா? யாரவன்?'' என்று கோபத்துடன் வினவினான்.

"அந்தக் கண் போனால் பாதகமில்லை . சிலாதித்தா" என்றான் ஸங்கன்.

“ஏன்?'' என்று அர்த்தம் புரியாமல் வினவினான் சிலாதித்தன்.

''அதற்கு பதில் இன்னொரு கண் கிடைத்திருக்கிறது." "எங்கே அது?''

"இப்பொழுதான் உள்ளே சென்றது'' என்று கூறி நகைத்தான் ஸங்கன். சிலாதித்தன் நகைக்கவில்லை. ஏதோ விரும்பத்தகாத சம்பவம் நடந்திருக்கிறதென்பதை அவன் பாவத்திலிருந்தே ஊகித்துக்கொண்ட ஸங்கன், ''என்ன பாதித்தா, என்ன விசேஷம்?'' என்று விசாரித்தான், கவலை தோய்ந்த குரலில்.

சிலாதித்தன் பதில் சொன்னான். சொன்ன பதிலைக் கேட்ட ஸங்கன், அடியோடு நிலைகுலைந்து ஸ்தம்பித்து நீண்ட நேரம் நின்றுவிட்டான். அவன் வாழ்வுக்கும் பிறந்த பொன்னாட்டுக்கும் பெரும் திருப்பத்தை அளித்த பதில் அது.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.