நற்றிணை 301,
பாண்டியன் மாறன் வழுதி, குறிஞ்சித் திணை – தோழி சொன்னது
நீள் மலைக் கலித்த பெருங்கோல் குறிஞ்சி
நாள் மலர் புரையும் மேனி பெருஞ்சுனை
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,
மயில் ஓரன்ன சாயல், செந்தார்க்
கிளி ஓரன்ன கிளவி, பணைத்தோள், 5
பாவை அன்ன வனப்பினள் இவள் எனக்
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி,
யாய் மறப்பு அறியா மடந்தை,
தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே.
Natrinai 301,
Pāndiyan Māran Valuthi, Kurinji Thinai – What the heroine’s friend said
Her mother will be unable
to forget her daughter who she
praised often with great desire,
her body like the fresh kurinji
flowers that grow on big stalks
on tall mountains,
her big moist eyes, like flowers from
large springs that are tied together,
her nature delicate like peacocks,
her tender speech like parrots
with red neck bands, her arms like
bamboo and and her beauty like
the Kolli goddess, this sweet young
woman with fragrant hair that does
not forget aromatic oils!
Notes:
தோழி தன்னுள்ளே சொல்லியது. தலைவன்தலைவியைவிரைந்துவரைந்துகொள்ளவேண்டி, ‘அவன் வேண்டுகோளுக்கு இயையாது மறுத்துக் கூறினோம். அவன் படும் துன்பமும் அறிந்தோம். அன்னையோ தலைவியைப் பலகாலும் புகழ்கின்றாள். நாம் தலைவியைத் தலைவனுடன் கூட்டுவிப்பதை அறியின், அன்னை எத்தன்மையள் ஆவாளோ’ என வருந்திக் கூறியது. சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).
Meanings:
நீள் மலைக் கலித்த – flourishing in the tall mountains, பெருங்கோல் குறிஞ்சி – kurinji with long/thick stems, Strobilanthes kunthiana, நாள் மலர் புரையும் மேனி – body like fresh day’s flower, பெருஞ்சுனை – big springs, big ponds, மலர் பிணைத்தன்ன – like flowers tied together, மா இதழ் மழைக் கண் – huge/dark petal-like moist eyes, மயில் ஓரன்ன சாயல் – peacock-like delicate nature, செந்தார்க் கிளி ஓரன்ன கிளவி – words like a parrot with a red neckband, பணைத்தோள் – bamboo-like arms, பாவை அன்ன வனப்பினள் – woman with beauty like that of Kolli goddess, இவள் என – that she is, காமர் நெஞ்சமொடு – with a loving heart, with a beautiful heart, பல பாராட்டி யாய் – mother who praised her often, மறப்பு அறியா – she has not forgotten, மடந்தை தேம் மறப்பு அறியா கமழ் கூந்தலளே – the naive young woman whose hair that does not forget sweet fragrance (தேம் தேன் என்றதன் திரிபு)
நற்றிணை 302,
மதுரை மருதன் இளநாகனார், பாலைத் திணை – தலைவி சொன்னது
இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த
நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக்
காடு கவின் பூத்த ஆயினும், நன்றும்
வருமழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்
நரை நிறம்படுத்த நல் இணர்த் தெறுழ் வீ 5
தாஅம் தேரலர் கொல்லோ, சேய் நாட்டுக்
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு
வெளிறு இல் காழ வேலம் நீடிய
பழங்கண் முது நெறி மறைக்கும்,
வழங்கு அருங்கானம் இறந்திசினோரே? 10
Natrinai 302,
Mathurai Maruthan Ilanākanār, Pālai Thinai – What the heroine said
Clusters of flame-like bright kondrai
flowers with long spirals have blossomed
in a desirable manner looking like women
adorned with jewels.
Sapphire colored bunches of therul flowers
on dark bushes have faded due to the rains.
Does he not know about the arrival of the
rains, the man who went to the harsh forest
where elephants kick and raise fine dust that
covers the eyes and shrouds the ancient paths
lined with tall vēlam trees with dense cores?
Notes:
பொருள்வயின் பிரிந்த தலைவன் குறித்த பருவத்தில் வராததால் வருந்திய தலைவி கூறியது. சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).
Meanings:
இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த – blossomed in a desirable manner like women wearing jewels, நீடு சுரி – long spirals, long curls, இணர சுடர் வீக் கொன்றை – with clusters of flame bright flowers, kondrai, சரக்கொன்றை, கடுக்கை – Laburnum, Golden Shower Tree, Cassia fistula, காடு கவின் பூத்த ஆயினும் – they have bloomed making the forest beautiful, நன்றும் – good, வருமழைக்கு எதிரிய – accepted the arriving rain, மணி நிற இரும் புதல் நரை நிறம்படுத்த – sapphire-colored flowers became lighter hued on the dark bushes, நல் இணர்த் தெறுழ் வீ – fine clusters of therul flowers, a kind of creeper, தாஅம் தேரலர் கொல்லோ – does he not understand, does he not know (தாஅம் – இசைநிறை அளபெடை, கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசை நிலை, an expletive), சேய் நாட்டு – in the distant country, களிறு உதைத்து ஆடிய – male elephants kicked and played, கவிழ் கண் இடு நீறு – dust that covers the eyes, வெளிறு இல் காழ வேலம் – hard core vēlam trees, vēlam trees with no softness in their trunks, Panicled babool, Acacia leucophloea, நீடிய – grown tall, பழங்கண் – sorrow, முது நெறி மறைக்கும் – hides the ancient path, வழங்கு அருங்கானம் இறந்திசினோரே – the one who went to the forest that is difficult or those who go (இசின் – படர்க்கையின் கண் வரும், an expletive of the third person, ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 303,
மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
ஒலி அவிந்து அடங்கி யாமம் நள்ளெனக்
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே;
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
மன்றப் பெண்ணை வாங்கு மடல் குடம்பைத்
துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும், 5
‘துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய்,
நம் வயின் வருந்தும் நன்னுதல்’ என்பது
உண்டு கொல், வாழி தோழி, தெண் கடல்
வன் கைப் பரதவர் இட்ட செங்கோல்
கொடு முடி அவ் வலை பரியப் போக்கிக், 10
கடு முரண் எறி சுறா வழங்கும்
நெடு நீர்ச் சேர்ப்பன் தன் நெஞ்சத்தானே?
Natrinai 303,
Mathurai Ārulaviyanāttu Ālamperi Sathanār, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
May you live long, oh friend!
Will the lord of the vast waters,
……….where fishermen with strong
……….hands throw their well-woven
……….nets with red rods into the clear
……….ocean, and very hostile, attacking
……….sharks that swim around tear them,
have sympathy in this heart for me with
a fine forehead,
knowing I will be distressed and unable to
sleep at night,
when the noisy seashore village falls asleep,
and in the common grounds, an ibis that
loves to unite with its mate cries out in
plaintive notes from its frond nest on a
palmyra tree with a thick trunk,
where a god has lived since ancient times?
Notes:
தலைவன் மீது உண்டாய காதலானது கைகடந்து பெருகிப்போனது. அதைத்தாங்கஇயலாததலைவிதோழியிடம்வருந்திஉரைத்தது.
ஒளவை துரைசாமி உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) எனத் தொடங்கும் நூற்பாவின்கண் வரும் ‘காமஞ் சிறப்பினும்’ என்பதற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.
உள்ளுறை (1) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பரதவரின் வலையைக் கிழித்துக்கொண்டு சென்று சுறா இயங்கும் என்றது தலைவி தன் அன்பினால் பிணிக்கவும் தலைவன் தங்காது செல்லும் இயல்பினன் என்பதுணர்த்தவாம்.
உள்ளுறை (2) – ஒளவை துரைசாமி உரை – அவர் தெளித்த சொல்லாகிய வலைப்பட்டு அதன்கண்ணே நிற்றற்குரிய என் நெஞ்சம் அத்தனையும் கிழித்துக்கொண்டு துயருற்று வருந்துகின்றது; என் செய்வேன் என்பாள், வெளிப்பட உரைத்தலைப் பெண்மை தடுத்தலின், கடுமுரண் எறிசுறாவின் மேல் வைத்து உள்ளுறைத்தாள். வலையின் செங்கோல்: அகநானூறு 60 – செங்கோல் அவ் வலை நெடுந்திமில் தொழிலொடு, அகநானூறு 220 – இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலை, நற்றிணை 214 – செங்கால் கொடு முடி அவ் வலை, நற்றிணை 303 – பரதவர் இட்ட செங்கோல் கொடு முடி அவ் வலை. கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).
Meanings:
ஒலி அவிந்து அடங்கி – sounds died down, யாமம் – midnight, நள்ளென – with sounds, கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே – the loud seaside village has gone to sleep (ஏ – அசை நிலை, an expletive), தொன்று உறை கடவுள் – a god has lived there from ancient times, சேர்ந்த – residing, பராரை – thick trunk (பரு அரை பராரை எனப் புணர்ந்தது), மன்றப் பெண்ணை – palmyra palm in the common grounds, Borassus flabellifer, வாங்கு மடல் – curved fronds, குடம்பை – nest, துணை புணர் அன்றில் – ibis unites with its mate, red-naped – Pseudibis papillosa or glossy ibis – Plegadis falcinellus, உயவுக் குரல் கேட்டொறும் – whenever she hears its plaintive cry, துஞ்சாக் கண்ணள் – she is unable to sleep, துயர் அடச் சாஅய் – attacked by sorrow and wilted (சாஅய் – இசை நிறை அளபெடை), நம் வயின் வருந்தும் நன்னுதல் என்பது உண்டு கொல் – will he be sad for me with a fine forehead (கொல் – ஐயப்பொருட்டு, நன்னுதல் – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, an attributive compound), வாழி – அசை நிலை, an expletive, may you live long, தோழி – my friend, தெண் கடல் – clear ocean, வன் கைப் பரதவர் – fishermen with strong hands, இட்ட செங்கோல் – thrown red rods, கொடு முடி அவ் வலை – curved knotted beautiful nets, பரியப் போக்கி – tearing and moving away, கடு முரண் எறி சுறா வழங்கும் – very hostile attacking sharks roam, நெடு நீர்ச் சேர்ப்பன் – the lord of the vast waters, தன் நெஞ்சத்தானே – in his heart (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 304,
மாறோக்கத்து நப்பசலையார், குறிஞ்சித் திணை – தலைவி சொன்னது
வாரல் மென் தினைப் புலவுக் குரல் மாந்திச்,
சாரல் வரைய கிளைஉடன் குழீஇ,
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும்
நளி இருஞ்சிலம்பின் நல் மலை நாடன்
புணரின் புணருமார் எழிலே, பிரியின் 5
மணி மிடை பொன்னின் மாமை சாய என்
அணி நலம் சிதைக்குமார் பசலை, அதனால்
அசுணம் கொல்பவர் கை போல் நன்றும்
இன்பமும் துன்பமும் உடைத்தே,
தண் கமழ் நறுந்தார் விறலோன் மார்பே. 10
Natrinai 304,
Mārōkkathu Nappasalaiyār, Kurinji Thinai – What the heroine said
When the lord of the lofty
mountains with slopes,
……….where parrot flocks eat
……….spears of delicate millet grain
……….on long stalks, and call each
……….other with cries sounding like
……….wind-blown vayir horns in
……….the vast mountain ranges,
unites with me, my beauty increases.
When he’s away, my body resembling gold
mixed with gems, loses its beauty, and my
skin turns sallow like the hands of those
who kill asunams. His victorious chest with
fragrant garlands, bring both joy and pain.
Notes:
தலைவன் வரையாது களவில் வந்தொழுகுகின்றான். அந்நிலையில் வருந்திய தலைவியை ஆற்றுப்படுத்த முயலுகின்றாள் தோழி. அவளிடம் தலைவி கூறியது.
ஒளவை துரைசாமி உரை – ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) எனத் தொடங்கும் நூற்பாவின்கண் ‘இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும்’ என்பதற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.
உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கிளிகள் கூட்டமாக வந்து தினையை உண்டு விளி பயிற்றும் நாடன் என்றது, தலைவன் தன் சுற்றத்தாரோடு வந்து என்னை மணந்து நலம் துய்த்து மகிழ்வானாக என்பதுணர்த்திற்று. The asunam is an un-identified creature. There are references to asunams in Natrinai 244, 304 and Akanānūru 88.
Meanings:
வாரல் – long, மென் தினை – delicate millet, புலவு – fragrant, குரல் – grain spears, clusters of grain, மாந்தி – eat, சாரல் வரைய – in the mountain slopes, கிளைஉடன் குழீஇ – gathering together with their relatives (குழீஇ – சொல்லிசை அளபெடை), வளி – breeze, எறி – blowing, வயிரின் – like the musical instrument vayir (இன் உருபு ஒப்புப் பொருளது), கிளி – parrots, விளிபயிற்றும் – they call each other, நளி – abundant, dense, இருஞ்சிலம்பின் – with huge mountain slopes, நல் மலை நாடன் – the man from the fine mountain country, புணரின் – when he unites with me, புணரும் ஆர் – it unites, it increases (ஆர் – அசைச் சொல், an expletive), எழிலே – beauty, (ஏ – அசை நிலை, an expletive) பிரியின் – when he separates, மணி மிடை பொன்னின் மாமை – beauty like that of gold mixed with gems, சாய – faded away, என் – my, அணி – beauty, நலம் – beauty, சிதைக்கும் ஆர் – it gets shattered (ஆர் – அசைச் சொல், an expletive), gets ruined, பசலை – sallow skin, அதனால் – so, அசுணம் கொல்பவர் கை போல் – like the hand of a person who kills asunams, a mythological creature that loves music, நன்றும் – lot, இன்பமும் துன்பமும் உடைத்தே – it has happiness and sorrow (ஏ – அசை நிலை, an expletive), தண் – cool, கமழ் – fragrant, நறுந்தார் – fragrant garland, விறலோன் மார்பே – the victorious man’s chest (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 305,
கயமனார், பாலைத் திணை – தலைவியின் தாய் தோழியிடம் சொன்னது
வரி அணி பந்தும், வாடிய வயலையும்,
மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்,
கடியுடை வியல் நகர் காண்வரத் தோன்றத்
தமியே கண்ட தண்டலையும் தெறுவர
நோய் ஆகின்றே மகளை! நின் தோழி 5
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை
வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தெள் விளி
உருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி
இலங்கு இலை வென்வேல் விடலையை,
விலங்கு மலை ஆர் இடை, நலியும் கொல் எனவே? 10
Natrinai 305,
Kayamanār, Pālai Thinai – What the heroine’s mother said to the heroine’s friend after her daughter eloped
Whenever I see her decorated ball,
withered vayalai vine, and the dark
colored clusters of nochi flowers on
the trees with leaves like feet of peacock,
in our well protected mansion, and when
I am alone in the grove, I am distressed.
Daughter! I wonder whether your friend
will cause pain to the young man with a
bright-bladed, victorious spear, on the
harsh trek through the blocking mountains,
with her warring eyes when the scorching
sun burns, after hearing pigeons with lines
on their backs cry in loud, plaintive tones,
perched on beautiful tree branches without
any leaves, when the sun’s heat is reduced.
Notes:
தலைவியை உடன்போக்கில் தலைவன் கூட்டிச் சென்று விட்டான் என்பதை செவிலித்தாய் மூலம் அறிந்த நற்றாய் தோழியிடம் சொல்லியது. நலியும் கொல் (10) – ஒளவை துரைசாமி உரை – வேண்டாத வினாக்களை எழுப்பி வருத்துதல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – துன்புறுத்தல். மயிலடி அன்ன இலை – நற்றிணை 305 – மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும், நற்றிணை 115 – மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி, குறுந்தொகை 138 – மயில் அடி இலைய மா குரல் நொச்சி.
திருமுருகாற்றுப்படை 68 – வரிப் புனை பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து, நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து. மதுரைக்காஞ்சி 333 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரியப்பட்ட பந்து, நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிதலையுடைய பந்து, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை – நூலால் வரிதலையுடைய பந்து. கலித்தொகை51 – வரிப் பந்து – நச்சினார்க்கினியர் உரை – வரியினையுடைய பந்து. In poems Natrinai 12, 305, 324 and Kurunthokai 396, which were all written by Kayamanār, there are references to a ball played by the heroine.
Meanings:
வரி அணி பந்தும் – ball with decorations, ball tied with thread, ball with beautiful lines, வாடிய வயலையும் – and withered vayalai vine, purslane vine, Portulaca quadrifida, மயில் அடி அன்ன – (leaves) like peacock feet, மாக் குரல் நொச்சியும் – and nochi trees with dark clusters of flowers, Vitex leucoxylon, Chaste tree, water peacock’s foot tree, கடியுடை – with protection, வியல் நகர் – huge house, காண்வரத் தோன்ற – appeared for me to see, தமியே – alone, கண்ட தண்டலையும் – the grove that I see, தெறுவர நோய் ஆகின்றே – causes me sadness and mental sickness (ஏ – அசை நிலை, an expletive), மகளை – oh daughter (ஐ – முன்னிலை அசை, an expletive of the second person), நின் தோழி – your friend (my daughter), எரி சினம் – intense heat of the sun, தணிந்த – reduced, இலை இல் – without leaves, அம் சினை – beautiful tree branches, வரிப் புறப் புறவின் – of pigeons with lines on their backs, புலம்பு கொள் – pitiful, sorrowful, தெள் விளி – clear sounds, உருப்பு அவிர் அமையத்து – at the time when the sun’s heat becomes excessive, அமர்ப்பனள் நோக்கி – she who has warring looks, இலங்கு இலை – bright blade, வென்வேல் – victorious spear, விடலையை – the young man, விலங்கு மலை – the blocking mountains, ஆர் இடை – on the harsh paths, நலியும் கொல் – will she cause him pain (கொல் – ஐயப்பொருட்டு), எனவே – thus (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 306,
உரோடோகத்துக் கந்தரத்தனார், குறிஞ்சித் திணை – தோழி சொன்னது சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி, அல்லது தலைவன் சொன்னது
தந்தை வித்திய மென் தினை பைபயச்
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ,
‘குளிர்படு கையள் கொடிச்சி! செல்க!’ என
நல்ல இனிய கூறி மெல்லக்
கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங்குரல் 5
சூல் பொறை இறுத்த கோல்தலை இருவி
விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவரப்,
பைதல் ஒரு நிலை காண வைகல்
யாங்கு வருவது கொல்லோ, தீஞ்சொல்
செறி தோட்டு எல் வளைக் குறுமகள் 10
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே?
Natrinai 306,
Urodakathu Kantharathanār, Kurinji Thinai – What the heroine’s friend said as the hero listened nearby, or what the hero said
Mountain dwellers have started to
pluck tender millet sown by her father.
“Young mountain girl with parrot-chasing
rattle in your hand, you may leave the field,”
they said to her nicely and sweetly.
The wide field with leftover stubble
after the heavy spears of bent grain had
been removed, looked pathetic and pitiful
like grounds where festivities have ended.
How can the marauding parrots be driven
away from the small field by the
young woman with bright, stacked bangles
from tall platforms, if she does not go?
Notes:
தலைவியை இற்செறிப்பில் வைத்தலையும் தலைவன் அறியும்படி உரைத்து வரைவு கடாயது. தலைவன் கொல்லையின் வேலிப்புறத்திலிருந்து கூறியதுமாம்.
ஒளவை துரைசாமி உரை – ‘தன்னும் அவனும் அவளும் சுட்டி’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 39) எனத் தொடங்கும் நூற்பாவின்கண் வரும் ‘தோழி தேஎத்தும்’ என்பதற்கு இதனைக் காட்டி, இது தோழி வெகுண்டு கூறுவதெனக் கொள்வர் நச்சினார்க்கினியர். இறுத்த கோல்தலை இருவி – அகநானூறு 38.
Meanings:
தந்தை வித்திய மென் தினை – the delicate millet that father seeded, பைபயச் சிறு கிளி கடிதல் – protecting from the small parrots little by little, chasing the small parrots little by little (பைபய – பையப்பைய பைபய என மருவியது), பிறக்கு – அசை நிலை, an expletive யாவணதோ – how (ஓ – அசைநிலை, an expletive), குளிர் படு கையள் – young woman with a parrot-chasing kulir rattle in your hands, கொடிச்சி – young woman of the mountains, செல்க – you may go, என – thus, நல்ல இனிய கூறி – they said nicely and sweetly, மெல்லக் கொயல் தொடங்கினரே – they started to harvest slowly (ஏ – அசை நிலை, an expletive), கானவர் – the mountain dwellers, கொடுங்குரல் – bent clusters of grain spears, சூல் பொறை – heavy and full, இறுத்த – reaped, cut, கோல்தலை இருவி – stubbles that are like sticks, விழவு ஒழி வியன் களம் கடுப்ப – the wide field looks like a place where festivities have ended (கடுப்ப – உவம உருபு, a comparison word), தெறுவர பைதல் ஒரு நிலை – to see the pathetic state with sorrow, காண – to see, வைகல் – daily, யாங்கு வருவது கொல்லோ – how can she come (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை), தீஞ்சொல் – sweet words, செறி தோட்டு – tightly stacked, எல் வளைக் குறுமகள் – the young girl with bright bangles, சிறு புனத்து – in the small field, அல்கிய – stayed, பெரும் புற நிலையே – the tall platform (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 307,
அம்மூவனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கவர் பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும்,
பெயர்பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்,
கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்த
திதலை அல்குல் நலம் பாராட்டிய
வருமே தோழி, வார் மணல் சேர்ப்பன், 5
இற்பட வாங்கிய முழவு முதல் புன்னை
மா அரை மறைகம் வம்மதி, பானாள்
பூ விரி கானல் புணர் குறி வந்து, நம்
மெல் இணர் நறும் பொழில் காணா
அல்லல் அரும் படர் காண்கம் நாம் சிறிதே. 10
Natrinai 307,
Ammoovanār, Neythal Thinai – What the heroine’s friend said to her
Oh friend! In the vast place
where people bathe in the
ocean, chiming bells of his
tall chariot drawn by rapidly
trotting horses sound, and
voices of the young men who
are with him, are heard.
The lord of the long shores is
arriving, to praise the beauty
of your loins with bright spots.
Come! Let us go and hide behind
the tall, bent, dark punnai tree
with a trunk resembling a drum,
near our home, in the fragrant
grove with flowers that bloom in
delicate clusters at night, where
you meet him.
Let us watch for a little while the
pain and distress on his face, when
he is unable to find us.
Notes:
தலைவன் குறித்த இடத்திற்கு வராது காலம் தாழ்த்தினான். அவன் வருவதை அறிந்துத் தோழி உரைத்தது.
ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும் (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின்கண் ‘நன்னயம் பெற்றுழி நயம்புரியிடத்தினும்’ என வருவதனுள், ‘நயம்புரியிடத்தினும்’ என்றதனால், ‘களவொழுக்கம் நிகழா நின்றுழிக் கூறும் கூற்றும் ஈண்டே கொள்க’ எனக் கூறி, இப்பாட்டைக் காட்டி இது வருகின்றான் எனக் கூறியது என்பர் இளம்பூரணர். நச்சினார்க்கினியரும்இதனைக்காட்டி. ‘இது தோழி தலைவிக்குப் பகற்குறிக்கண் தலைவன் வருகின்றமை காட்டி அவன் வருத்தம் காண யாம் மறைந்து நிற்பாம் வம்மோ எனக் கூறியது’ என்பர். கவர்வு – கவர்வு விருப்பு ஆகும் (தொல்காப்பியம் களவியல் 66).
Meanings:
கவர் – desiring to run, பரி – horses, நெடுந்தேர் – tall chariot, மணியும் இசைக்கும் – the bells ring, பெயர்பட இயங்கிய இளையரும் ஒலிப்பர் – there are the sounds of the young men who are arriving with him, கடல் ஆடு – bathing in the ocean, playing in the ocean, வியல் இடை- wide place, பேர் அணிப் பொலிந்த திதலை – very pretty bright spots, அல்குல் – loins, waist, நலம் பாராட்டிய வருமே – is arriving to praise its beauty, தோழி – my friend, வார் மணல் சேர்ப்பன் – the lord of the long sandy shores, இற்பட- near the house, வாங்கிய – bent, முழவு முதல் – drum-like trunk, புன்னை மா அரை – punnai tree’s dark/big trunk, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, மறைகம் – let’s hide, வம்மதி – you come with me (மதி – முன்னிலையசை, an expletive of the second person), பானாள் பூ விரி கானல் – grove where flowers bloom at midnight, புணர் குறி வந்து – where we meet for our trysts, நம் – us, மெல் இணர் – delicate flower clusters, நறும் பொழில் – fragrant grove, காணா அல்லல் அரும் படர் – distress and sadness on not seeing, காண்கம் நாம் சிறிதே – let us see it for a little bit (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 308,
எயினந்தை மகன் இளங்கீரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
செல விரைவுற்ற அரவம் போற்றி
மலர் ஏர் உண்கண் பனி வர ஆயிழை,
யாம் தற் கரையவும், நாணினள் வருவோள்,
வேண்டாமையின் மென்மெல வந்து,
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி 5
வெறி கமழ் துறு முடி தயங்க நல் வினைப்
பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து,
ஆகம் அடைதந்தோளே, அது கண்டு
ஈர் மண் செய்கை நீர்படு பசுங்கலம்
பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம் 10
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே.
Natrinai 308,
Eyinanthai Makan Ilankeeranār, Pālai Thinai – What the hero said to his heart
She honored my words when
I made rapid arrangments to
leave for wealth. Tears welled
up in her kohl-lined eyes, the
young woman with beautiful jewels,
who was shy and not able to talk.
She came gently but did not block
me, she with thick hair that spreads
fragrance,
who was devastated like a female
doll whose mechanism had failed.
After thinking about it a lot,
she reached for my chest.
On seeing that, my wealth-desiring
heart softened, like an unfired, wet clay
pot that received water from heavy rain,
and united with her in joy.
Notes: பொருள்வயின் பிரிய எண்ணிய தலைவன், தலைவியின் வருத்தத்தைக் கண்டு தன் நெஞ்சிடம் கூறியது. செலவு அழுங்கியது.
ஒளவை துரைசாமி உரை – ‘உயிரினும் சிறந்தன்று நாணே’ (தொல்காப்பியம், களவியல் 23) எனத் தொடங்கும் நூற்பா உரையில் தோழியைத் தலைவி ஆற்றுவித்தற்கு இப்பாட்டினைக் காட்டுவர் நச்சினார்க்கினியர். குறுந்தொகை 29 – பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி அரிது அவா உற்றனை நெஞ்சே.
நல் வினைப் பொறி அழி பாவையின் (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நல்ல சித்திரத் தொழிலமைந்த இயங்கும் இயந்திர மற்றழிந்த பாவை, விசைக் கயிறு அறுபட்ட நல்ல வேலைப்பாடமைந்தபாவை. Natrinai 362 has a reference of Kolli goddess statue being mechanical. பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல – குறுந்தொகை 29.
Meanings:
செல – to leave, விரைவுற்ற – rapidly getting ready, அரவம் போற்றி – listening to the words, மலர் ஏர் உண்கண் – flower-like eyes rimmed with kohl (ஏர் – உவம உருபு, a comparison word), பனி வர – with tears dripping, ஆய் இழை – the woman with chosen/delicate/beautiful jewels (அன்மொழித்தொகை), யாம் தற் கரையவும் நாணினள் – she was shy and not able to talk, வருவோள் – she who comes, வேண்டாமையின் – she did not desire for me to leave, மென்மெல வந்து – coming very slowly, வினவலும் – asking, தகைத்தலும் – and blocking, செல்லாள் ஆகி – she did not do, வெறி கமழ் – fragrance spreading, துறு முடி தயங்க – thick hair swaying, நல் வினைப் பொறி அழி பாவையின் கலங்கி – destroyed like a fine female figurine that collapsed because the equipment didn’t work, destroyed like a fine female figurine that collapsed because the joints got ruined (பாவையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), நெடிது நினைந்து – thought about it a lot, ஆகம் அடைதந்தோளே – reached my chest (ஏ – அசை நிலை, an expletive), அது கண்டு – on seeing that, ஈர் மண் செய்கை நீர்படு பசுங்கலம் பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு – like a soft wet (unfired) clay pot that accepted water from heavy rains, எம் பொருள் மலி நெஞ்சம் – my heart with a desire for great wealth, புணர்ந்து உவந்தன்றே – united with her happily (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 309,
கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும்,
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி,
‘யான் செய்தன்று இவள் துயர்’ என, அன்பின்
ஆழல், வாழி தோழி, ‘வாழைக்
கொழுமடல் அகல் இலைத் தளிதலைக் கலாவும் 5
பெருமலை நாடன் கேண்மை, நமக்கே
விழுமமாக அறியுநர் இன்று’ எனக்
கூறுவை மன்னோ நீயே,
தேறுவன் மன் யான் அவருடை நட்பே.
Natrinai 309,
Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend
Because of your love for me,
you think that you caused me
sorrow that has made my arms
to become thin, my pallor lines to
fade, and my mango-sprout-like
pretty complexion to lose its color.
Do not cry!
May you live long, my friend!
My friendship with the man
……….from the lofty mountains
……….where raindrops rest on
……….broad leaves of banana
……….trees with thick sheaths,
has caused me problems, and
nobody understands that, you say.
I clearly understand his friendship!
Notes: தலைவன் வரையாது களவில் வந்தொழுகுகின்றான். அந்நிலையில் தலைவி வருந்துவாள் என்று தோழி கவலையுற்றாள். அவளிடம் ‘நான் பொறுமையுடன் இருப்பேன். நீ வருந்தாதே’ எனத் தலைவி கூறியது.
ஒளவை துரைசாமி உரை – ‘உயிரினும் சிறந்தன்று நாணே’ (தொல்காப்பியம், களவியல் 23) எனத் தொடங்கும் நூற்பா உரையில் தோழியைத் தலைவி ஆற்றுவிப்பதற்கு இப்பாட்டினைக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.
உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வாழை மடலிலே நீர் தங்கிக் கலந்திருக்கும் என்றது, என் உள்ளத்தில் அவர் எப்பொழுதும் கலந்திருப்பாராதலால், யான் வருந்தேன் என்பதாம். வாடிய வரி (1) – ஒளவை துரைசாமி உரை – திதலை வரிகள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இரேகை. தளிர் வனப்பு (2) – ஒளவை துரைசாமி உரை – மாந்தளிர் போன்ற அழகு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மாந்தளிர் போன்ற தன்மை. விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).
Meanings:
நெகிழ்ந்த தோளும் – thinned arms, வாடிய வரியும் – faded pallor lines, தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி – looking my complexion that has lost its mango-sprout-like beauty, யான் செய்தன்று இவள் துயர் – I caused her this this sorrow (செய்தன்று – இறந்தகால முற்றுவினை, verb ending indicating past tense), என அன்பின் – with love, ஆழல் – do not cry, do not sink into sorrow (நீட்டல் விகாரம்), வாழி – அசை நிலை, an expletive, may you live long, தோழி – oh friend, வாழைக் கொழுமடல் – thick banana sheaths, அகல் இலை – broad leaves, தளிதலைக் கலாவும் – raindrops settle on them, பெருமலை நாடன் – the man from the lofty mountains, கேண்மை – friendship, நமக்கே விழுமமாக அறியுநர் இன்று என கூறுவை – you say that it has caused me problems and nobody understands it, மன்னோ – மன், ஓ அசை நிலைகள், expletives, நீயே – you, தேறுவன் – I understand, மன் – அசை நிலை, an expletive, யான் – I, அவருடை நட்பே – his friendship (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 310,
பரணர், மருதத் திணை – தோழி விறலியிடம் சொன்னது அல்லது பரத்தை விறலியிடம் சொன்னது
விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக்,
களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க,
உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர்
வாளை பிறழும் ஊரற்கு, நாளை
மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே ! 5
தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி
உடன்பட்டு ஓராத் தாயரொடு ஒழிபு உடன்
சொல்லலை கொல்லோ நீயே, வல்லைக்
களிறு பெறு வல்சிப் பாணன் கையதை
வள் உயிர்த் தண்ணுமை போல, 10
உள் யாதும் இல்லது ஓர் போர்வை அம் சொல்லே.
Natrinai 310,
Paranar, Marutham Thinai – What the heroine’s friend said to the messenger virali or what the concubine said to the messenger virali
Oh foolish woman who brings
women daily to the man from
the town where lotus blossoms
appear like lamps emitting flames,
their swaying green leaves
are like ears of male elephants
and vālai fish leap in deep
ponds where women move away
from the drinking water ports!
Did you not speak to the agreeable
mothers, who don’t think, convincing
them with ruining little lies you
uttered with your dishonest tongue,
hollow like an empty thannumai drum
with sharp tones in the hands of a bard
with food who gets powerful male
elephants as gifts? Your words are
a mere cover with no substance!
Notes: வாயில் மறுத்தது.
ஒளவை துரைசாமி உரை – ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) எனத் தொடங்கும் நூற்பாவின்கண், ‘பாணர் கூத்தர் விறலியர் என்று இவர் பேணிச் சொல்லிய குறைவினை எதிரும்’ என்புழிக் கூறிய உரையில் இப்பாட்டைக் காட்டி ‘இது விறலிக்கு வாயில் மறுத்தது’ என்பர் நச்சினார்க்கினியர். இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மகளிர் அஞ்சி ஓடுமாறு தாமரை வருந்த வாளைமீன் பிறழும் என்றது, தலைவன் தலைவி வருந்தவும், காமக்கிழத்தியர் அஞ்சி ஓடுமாறு பரத்தையிடம் சென்று சேர்கின்றனன் என்று உணர்த்தவாம். உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – தாமரையின் பாசடை தயங்க உண்டுறை மகளிர் மருண்டு நீங்கவும், மனைக்கு விளக்காகிய தலைமகளைச் சூழ்ந்துரையும் சுற்றமும் யாமும் வருந்த தலைமகன் பரத்தையர் சேரிக்கண் புறத்தொழுக்கிற் கழிக்கின்றான். அவன் பொருட்டு வாயில் வேண்டி வருதலைத் தவிர்ப்பாயாக என்பதாம். ஒழிபு (17) – ஒளவை துரைசாமி உரை – கைவிட்டு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – எய்தி. களிறு பெறு வல்சிப் பாணன் (9) – ஒளவை துரைசாமி உரை – களிற்றைப் பரிசிலாகப் பெற்று வாழும் பாணன். பாணனதுவரிசைஉணர்த்திநின்றது. There is a version of this poem with the words கன்று பெறு வல்சிப் பாணன், which does not appear to be right. In the copying and recopying process of the original poem the ‘ளி’ in களிறு could have been easily copied in error as ‘ன் ‘. Pinnathūr Narayanaswamy Iyer who wrote the first commentary for Natrinai had the words in the poem as கன்றுபெறு வல்சிப் பாணன், and interpreted them as ‘bards who peel and eat calves.’ The word ‘peel’ is just not there, nor is it implied. In Akanānūru 106, the phrase களிறு பெறு வல்சிப் பாணன் has been used, proving that the word கன்று is a copy error. There are many references to kings donating elephants to bards and poets. There are no references to bards, poets or other artists eating calves or cows. In Kurunthokai 295, the word வல்சி means ‘livelihood with a single cow’ – ஓர் ஆன் வல்சி. There are 4 references of wayside forest bandits killing and eating cows – அகநானூறு 97 – நிரை பகுத்து இருங்கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் கொலை வில் ஆடவர், அகநானூறு 129 – கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர், அகநானூறு 265 – இன் சிலை எழில் ஏறு கெண்டிப் புரைய நிணம் பொதி விழுத்தடி நெருப்பின் வைத்து எடுத்து அணங்கரு மரபின் பேஎய் போல விளர் ஊன் தின்ற வேட்கை நீங்கத் துகள் உற விளைந்த தோப்பி பருகித் குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர், அகநானூறு 309 – கடுங்கண் மழவர் அம்பு சேண் படுத்து வன் புலத்து உய்த்தெனத் தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் கொழுப்பு ஆ எறிந்து. Kings gifted bards with elephants. Puranānūru 12, 151, 233, 369, have references to this. Bards also received as gifts, gold lotus flowers in Puranānūru 12, 29, 126, 141, 244, 319, 361, 364, gold ornaments in Puranānūru 160, abundant food in Puranānūru 33, 34, 180, 212, 320, 326, 327, 328, 332, 334, 376, 382, agricultural towns in Puranānūru 302, and toddy in Puranānūru 115, 170, 224, 239. The words பாண்கடன் in Puranānūru 201 and 203 imply that the kings and benefactors owed responsibility to bards who nurtured Tamil.
Meanings:
விளக்கின் அன்ன – like lamps, சுடர்விடு – emitting brightness, emitting flames, தாமரை – lotus flowers, களிற்றுச் செவி அன்ன – like the ears of a male elephant, பாசடை – green leaves, தயங்க – moving, brightly, splendidly, உண் துறை – drinking water tank, மகளிர் – women, இரிய – move away குண்டு நீர் – pond water, வாளை பிறழும் – vālai fish leap, vālai fish roll, Trichiurus haumela, ஊரற்கு – to the man from the town, நாளை – following days, மகட் கொடை – bringing women as gifts, எதிர்ந்த – accepted, undertook, மடம் கெழு பெண்டே – oh stupid woman, தொலைந்த நாவின் – with a dishonest tongue’s, with a tongue that has lost truth, உலைந்த குறுமொழி – ruining few words, ruining small lies, உடன்பட்டு ஓராத் தாயரொடு ஒழிபு உடன் – attaining the mothers who agreed to your words without understanding, சொல்லலை கொல்லோ நீயே – did you not tell them (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை), வல்லை – rapidly, களிறு பெறு வல்சி பாணன் – bard with food who gets male elephants as gifts, bard with livelihood who gets male elephants as gifts, கையதை – in his hands (ஐ – சாரியை), வள் உயிர் தண்ணுமை போல – like a thannumai drum with sharp tones, உள் யாதும் இல்லது – nothing inside (hollow), no substance, ஓர் போர்வை – a cover, அம் சொல்லே – பொருந்திய சொற்கள், with words, lovely words (ஏ – அசை நிலை, an expletive)