Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

நற்றிணை 311-320

நற்றிணை 311,

உலோச்சனார், நெய்தற் திணை – தலைவி சொன்னது

பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி,
இருங்கதிர் நெல்லின் யாணரஃதே
வறப்பின் மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து,
இருங்கழிச் செறுவின் வெள் உப்பு விளையும்
அழியா மரபின் நம் மூதூர் நன்றே, 5
கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கிச்,
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே,
ஒன்றே தோழி நம் கானலது பழியே,
கருங்கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி,
இருங்களிப் பிரசம் ஊத, அவர் 10
நெடுந்தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே.

Natrinai 311,

Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to her

In this town with unspoiled fine tradition,
if it rains, large spikes of rice cluster on
paddy grass like manes of leaping horses,
and there is new wealth.
If it is dry, mundakam plants grow near
the vast backwaters, mud is parched, and
the dark brackish waters produce white salt.
Cooking smells from fatty fish waft through
the streets. The shore with gnālal trees
with tiny flowers is sweet.
But there is one problem, oh friend!
It is hard to hear the sweet bell sounds of his
tall chariot when he arrives, since happily
drunk honey bees hum loud on the grove
grove punnai trees with black branches,
feasting on flower pollen.

Notes:

அலர் கூறப்பட்டு ஆற்றாளாகிய தலைவியைத் தோழி ஆற்றுவித்தது. விடு மான்(1) – H.வேங்கடராமன் உரை – துள்ளி ஓடுகின்ற மான்.

Meanings:

பெயினே – if it rains (ஏ – அசை நிலை, an expletive), விடு மான் உளையின் – like the manes of leaping horses, வெறுப்ப – dense, flourishing, தோன்றி – appearing, இருங்கதிர் நெல்லின் – with large spears of rice paddy, யாணரஃதே – there is abundance, there is richness (ஏ – அசை நிலை, an expletive) , வறப்பின் – when dry, மா நீர் – black/vast waters, முண்டகம் தாஅய் – mundakam plants spread, நீர் முள்ளி, Hygrophila spinose (தாஅய் – இசைநிறை அளபெடை), சேறு புலர்ந்து – mud becomes dry, இருங்கழிச் செறுவின் – in the dark/large muddy (waters), வெள் உப்பு விளையும் – white salt is produced, அழியா – not ruined, மரபின் – with tradition, நம் மூதூர் நன்றே – our old town is good (ஏ – அசை நிலை, an expletive), கொழு மீன் சுடு புகை – smoke from cooking fatty fish, மறுகினுள் – in the streets, மயங்கி – mixed (wafting), சிறு வீ ஞாழல் – small flowers of tigerclaw tree, புலிநகக்கொன்றை, Cassia Sophera, துறையும் ஆர் – the seashore (ஆர் – அசைச் சொல், an expletive), இனிதே – it is sweet (ஏ – அசை நிலை, an expletive), ஒன்றே தோழி – one thing oh friend, நம் கானலது பழியே – problem in our seashore grove, our seashore grove is to be blamed (ஏ – அசை நிலை, an expletive), கருங்கோட்டுப் புன்னை – black-branched punnai trees, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, மலர்த் தாது அருந்தி – eating flower pollen, இருங்களி பிரசம் – honey bees that are very happy, happily drunk dark honeybees, ஊத – humming, அவர் – his, நெடுந்தேர் இன் ஒலி – sweet sounds of the tall chariot, கேட்டலோ அரிதே – it is hard to hear (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 312,

கழார்க்கீரன் எயிற்றியார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

நோகோ யானே நோம், என் நெஞ்சே,
‘பனிப் புதல் ஈங்கை அம் குழை வருடச்,
சிறை குவிந்திருந்த பைதல் வெண்குருகு,
பார்வை வேட்டுவன் காழ் களைந்து அருள,
மாரி நின்ற மையல் அற்சிரம், 5
யாம் தன் உழையம் ஆகவும், தானே,
எதிர்த்த தித்தி முற்றா முலையள்,
கோடைத் திங்களும் பனிப்போள்,
வாடைப் பெரும் பனிக்கு என்னள் கொல்?’ எனவே.

Natrinai 312,

Kalārkeeran Eyitriyār, Pālai Thinai – What the hero said to his heart

I am hurting! My heart hurts!
How will the woman with spreading
pallor spots and young breasts,
who suffered even in the summer
months when I was near her,
be able to handle this fiercely cold
season with northern winds,
when a hunter, eying a sad white decoy
heron with shrunk feathers, brushed by
the beautiful eengai sprouts growing
on winter season bushes,
removes its shackles with kindness,
in this rainy, confusing winter?

Notes: பொருள்வயின் பிரிய எண்ணிய தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது.

உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – வேட்டுவனால் பார்வையாகப் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் குருகு ஈங்கையின் குழை வருட வருந்தும் என்றது, வீட்டில் தங்குமாறு தலைவி வருந்தித் தோழி தேற்றவும் மாரிக்காலத்தைக் கழிப்பாள் என்று உணர்த்திற்று. வெண்குருகு பார்வை வேட்டுவன் (4-5) – ஒளவை துரைசாமி உரை – பிற குருகுகளைப் பிடிப்பதற்கெனப் பயிற்றப்பட்ட குருகினைப் பார்வைக் குருகு எனல் வழக்கு. பார்வை: பார்வை வேட்டுவன் நற்றிணை 212-1, 312-4, பார்வைப் போர் – கலித்தொகை 95-17, பார்வை யாத்த – பெரும்பாணாற்றுப்படை 95, பார்வை மடப் பிணை 20-4.

Meanings:

நோகோ – I am hurting (நோகு – செய்கென்னும் தன்மை வினை, ஓ – அசை நிலை, an expletive, இரக்கக் குறிப்பு, implying pity), யானே – me (ஏ – அசை நிலை, an expletive), நோம் என் நெஞ்சே – my heart hurts, பனிப் புதல் – winter’s bush, அம் – beautiful, ஈங்கை குழை வருட – touched by eengai sprouts, Mimosa Pudica, சிறை குவிந்திருந்த – wings pointed together, பைதல் வெண்குருகு – sad white heron/egret/stork, பார்வை வேட்டுவன் – a hunter who uses one bird or animal to catch another one, காழ் களைந்து அருள – removed the shackles/ties, மாரி நின்ற மையல் அற்சிரம் – raining cold season, யாம் தன் உழையம் ஆகவும் – us remaining by her side, தானே – தான், ஏ – அசைநிலைகள், எதிர்த்த தித்தி – spreading pallor spots, முற்றா முலையள் – she with immature breasts, கோடைத் திங்களும் பனிப்போள் – she would suffer even in summer months, வாடைப் பெரும் பனிக்கு என்னள் கொல் – how sad she will be because of the fiercely cold season and northern winds (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), எனவே – thus (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 313,

தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி

கருங்கால் வேங்கை நாள் உறு புதுப் பூப்
பொன் செய் கம்மியன் கை வினை கடுப்பத்,
தகை வனப்புற்ற கண்ணழி கட்டு அழித்து
ஒலி பல் கூந்தல் அணி பெறப் புனைஇக்,
காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்கு 5
யாங்கு ஆகுவம் கொல் தோழி, காந்தள்
கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல்
கூதள நறும் பொழில் புலம்ப, ஊர்வயின்
மீள்குவம் போலத் தோன்றும் தோடு புலர்ந்து
அருவியின் ஒலித்தல் ஆனா, 10
கொய் பதம் கொள்ளும் நாம் கூஉம் தினையே?

Natrinai 313,

Thankāl Porkkollan Vennākanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby

You are elegant when you wear
on your luxuriant thick hair,
fresh blossoms of black-trunked
vēngai trees, that look like fine
jewels made by a skilled goldsmith.
Harvest time has arrived.
The millet fields where we chased
parrots with uproars are parched.
The sounds of the dried rustling
leaves are like that of waterfalls
in the mountain slopes filled
with the scents of kānthal flowers.
We feel like leaving the groves with
koothalam vines, to go back to our
town. What will happen to us, now
that he has parted?

Notes:

தலைவன் அருகில் இருப்பதை அறிந்த தோழி தலைவியிடம் உரைத்தது. வரைவுகடாவுதல். கூஉம் தினையே (11) – ஒளவை துரைசாமி உரை – கூவிக்காக்கும் வினையை கூஉம் என்றார். பெயரெச்சம் செயப்படு பொருட்பெயர் கொண்டது; எழுதும் ஓலை என்றாற் போல. Millet harvesting time is when vēngai trees put out flowers. This has been described in poems 125, 259, 313 and 389.

Meanings:

கருங்கால் – black-trunked, வேங்கை – vēngai tree, Kino Tree, Pterocarpus marsupium, நாள் உறு புதுப் பூ – new flowers that blossom daily, பொன் செய் கம்மியன் – a goldsmith who makes gold ornaments, கைவினை – hand art, கடுப்ப – like (உவம உருபு, a comparison word), தகை – beautiful, வனப்புற்ற – splendid, கண்ணழி – hindrances, கட்டு அழித்து – opening, loosening up, ஒலி பல் கூந்தல் – luxuriant thick hair, அணி பெற – making it beautiful, புனைஇ – wearing (சொல்லிசை அளபெடை), காண்டல் – seen, காதல் – love, கைம்மிக – in excess, கடீஇயாற்கு – due to the one who abandoned us (சொல்லிசை அளபெடை), யாங்கு ஆகுவம் கொல் – what will happen to us (கொல் – ஐயப்பொருட்டு), தோழி –oh friend, காந்தள் – malabar glory lily, கமழ் – fragrance, குலை – clusters, அவிழ்ந்த – open, நயவரும் – causing desire, desirable, சாரல் – mountain slopes, கூதள – koothalam vine, Convolvulus ipome vine, a three-lobed nightshade vine, நறும் பொழில் – fragrant grove, புலம்ப – to be alone, ஊர்வயின் – go toward town, மீள்குவம் போலத் தோன்றும் – we feel like we are going back, தோடு புலர்ந்து – leaves dried, அருவியின் ஒலித்தல் – like the waterfall sounds (அருவியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), ஆனா – not reduced, not ending, கொய் பதம் கொள்ளும் – reach harvest stage, reach plucking time, நாம் – we, கூஉம் தினையே – yell in the millet field (கூஉம் – இன்னிசை அளபெடை, ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 314,

முப்பேர் நாகனார், பாலைத் திணை – தலைவி சொன்னது

‘முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்,
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை,
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி
நறுங்காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்,
குறும்பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின் 5
கருங்கண் வெம்முலை ஞெமுங்கப் புல்லிக்
கழிவதாக கங்குல்’ என்று தாம்
மொழி வன்மையின் பொய்த்தனர், வாழிய,
நொடி விடுவன்ன காய்விடு கள்ளி
அலங்கல் அம் பாவை ஏறி, புலம்பு கொள் 10
புன் புறா வீழ் பெடைப் பயிரும்
என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே.

Natrinai 314,

Muppēr Nākanār, Pālai Thinai – What the heroine said

He is a liar who spoke big words. May he live long!
He said to me, “When old age comes, one cannot
get back youth. There are no scholars who know
the length of life. May our nights pass with our
embraces, my chest with a garland of moist, rainy
rainy season pichi petals and fragrant sandal paste
from trees with dense cores, pressing against your
beautiful, full breasts with black nipples and small
spots, that cause desire!”
Yet he went on the sun-scorched, long wasteland path
where a sad pigeon climbs on a kalli tree’s doll-like
swaying branch top with fruits that crack, sounding
like snapping of fingers and calls his loving mate.

Notes:

பிரிவிடை வருந்திய தலைவி கூறியது. குறுந்தொகை 174 – கள்ளிக் காய்விடு கடு நொடி.
நொடி விடுவன்ன காய்விடு கள்ளி (9) – ஒளவை துரைசாமி உரை – நெரித்து வளைத்து விட்டாற்போலக் காய்கள் காய்த்து விளங்கும் கள்ளி, H.வேங்கடராமன் உரை – விரல்களை நொடித்து விட்டாற்போன்று காய்கள் ஒலி எழுப்பி தெறிக்கின்ற கள்ளி. அலங்கல் அம் பாவை (10) – ஒளவை துரைசாமி உரை – அசைதலையுடைய தலைப்பகுதி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அசைகின்ற அழகிய பாவை போன்ற மரக்கிளை. சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

Meanings:

முதிர்ந்தோர் – those who are old, இளமை அழிந்தும் – even when their youth is over, எய்தார் – they do not attain, வாழ் நாள் – life time, வகை அளவு – kind of limit, அறிஞரும் இல்லை – there are no scholars, மாரிப் பித்திகத்து – of rainy season’s jasmine, ஈர் இதழ் – moist petals, அலரி – flowers, நறுங்காழ் ஆரமொடு – with fragrant sandal paste from tree with hard core, மிடைந்த – wearing, மார்பில் – on the chest, குறும் பொறி – small spots, கொண்ட – having, கொம்மை – large, rounded, அம் – beautiful, புகர்ப்பின் – with spots, கருங்கண் – black nipples, வெம்முலை – desire causing breasts, ஞெமுங்க – pressing, புல்லி – embracing, கழிவதாக – may it pass, கங்குல் – nights, என்று – thus, தாம் மொழி வன்மையின் – with his great words, பொய்த்தனர் – he who lied, வாழிய – may he live long, நொடி விடுவன்ன – like the sounds of cracking of fingers, காய்விடு கள்ளி – cracking cactus fruits that make sounds, prickly pear cactus or euphorbia tirukalli, milk hedge, அலங்கல் – shaking, அம் – beautiful, பாவை – doll (கள்ளியின் தலைக்கொம்பு), ஏறி – climbed on a tree, புலம்பு கொள் – lonely, sorrowful, புன் புறா – sad dove/pigeon, வீழ் பெடைப் பயிரும் – calls his loving female, என்றூழ் நீளிடை – hot long path, சென்றிசினோரே – the one who went (இசின் – படர்க்கையின் கண் வரும், an expletive of the third person, ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 315,

அம்மூவனார், நெய்தற் திணை – பரத்தை தலைவனிடம் சொன்னது

ஈண்டு பெருந்தெய்வத்து யாண்டு பல கழிந்தெனப்,
பார்த்துறைப் புணரி அலைத்தலின், புடை கொண்டு
மூத்து வினை போகிய முரிவாய் அம்பி,
நல் எருது நடை வளம் வைத்தென உழவர்
புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு, 5
நறு விரை நன் புகை கொடாஅர் சிறு வீ
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல்
முழவு முதல் பிணிக்கும் துறைவ, நன்றும்
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்
தவறும் நன்கு அறியாய் ஆயின், எம் போல் 10
ஞெகிழ் தோள் கலுழ்ந்த கண்ணர்,
மலர் தீய்ந்தனையர் நின் நயந்தோரே.

Natrinai 315,

Ammoovanār, Neythal Thinai – What the concubine said to the hero

Oh lord of the shores!
Fishermen fasten their old boats,
……….which have seen many years
……….with names of great gods,
……….tossed by waves in the ocean
……….with wide shores, their edges
……….cracked, not used any longer
……….for work,
to the drum-like trunks of punnai trees
with beautiful, rich shade, growing near
gnālal trees with tiny flowers.
They do not honor them with many
fragrant smoke offerings, like farmers
who retire their old oxen that have lost
their fine walking ability, and let them
graze on grass in the meadows.
The fine friendship that you have
will fail, if you don’t understand well
that women like me who desire you
weep, are ruined like charred flowers,
and our arms have grown thin!
Notes: தலைவனைப் பரத்தை நொந்து உரைத்தது.

ஒளவை துரைசாமி உரை – ‘புல்லுதல் மயக்கும் புலவிக்கண்ணும்’ (தொல்காப்பியம், கற்பியல் 10) எனத் தொடங்கும் நூற்பாவின் உரையில் இப்பாட்டைக் காட்டி, ‘இதனுள் மூத்து வினை போகிய அம்பி போலப் பருவஞ் சென்ற பிணிக்கப்பட்ட எம்மைப் போலாது இவள் இப்பருவத்தே இனையளாகற்பாலளோ, மலர்ந்த செவ்வியான் முறைவீயாய்க் கழியாது இடையே எரிந்து கரிவுற்ற பூவினைப் போல எனத் தலைவனுக்குக் காமக்கிழத்தி கூறியவாறு காண்க’ என்பர் நச்சினார்க்கினியர்.

பெருந்தெய்வத்து யாண்டு (1) – ஒளவை துரைசாமி உரை – ஒரு பெருங்கடவுளின் ஆணைக்கேற்ப அடுத்தடுத்து வரும் யாண்டுகள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பெரிய தெய்வமென பெயர் கொண்ட ஆண்டுகள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தெய்வம் = வருடம், தெய்வத்துயாண்டு, இருபெயரொட்டு. பார்த்துறை (2) – ஒளவை துரைசாமி உரை – பாறைகள் பொருந்திய துறை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கரையை அடுத்த துறை, முரிவாய் அம்பி (3) – ஒளவை துரைசாமி உரை – விளிம்பு முரிந்து கெட்ட தோணி, முரிந்த வாயை உடைய படகு. உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – அம்பி மிதிர்ந்தபின் புன்னையின் கீழ்ச் சேர்ப்பர் என்றது, தலைவனை வாய்ந்த மாதர் வயது முதிர்ந்தபின் கைவிடப்பெறுவர் என்பது உணர்த்தவாம். Natrinai poems 315 and 354 have descriptions of fishing boats tied to punnai trees. விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

Meanings:

ஈண்டு பெருந்தெய்வத்து யாண்டு பல கழிந்தென – since many years with the names of great gods have passed, பார்த் துறைப் புணரி அலைத்தலின் – since they were tossed around by the ocean with wide shores, since they were tossed around in the ocean with rocks, புடை கொண்டு – get attacked, get tossed, மூத்து வினை போகிய – old and not useful for business, முரிவாய் அம்பி – boats with cracked edges, boats with cracked mouths, நல் எருது நடை வளம் வைத்தென – since the fine bulls’ robust walking ability has gone, உழவர் புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு – like how the farmers left them in the groves with grass to graze, நறு விரை நன் புகை – fine smoke from mixing fragrant things, கொடாஅர் – they do not offer, சிறு வீ ஞாழலொடு – along with gnalal trees with small flowers, புலிநகக்கொன்றை, tigerclaw tree, Cassia sophera, கெழீஇய புன்னை – flourishing punnai, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum (கெழீஇய – சொல்லிசை அளபெடை), அம் கொழு நிழல் – beautiful thick shade, முழவு முதல் பிணிக்கும் – tie the to the drum-like trunks, துறைவ – oh lord of the seashore (அண்மை விளி), நன்றும் – it is good, விழுமிதின் கொண்ட – having greatness, கேண்மை – friendships, நொவ்விதின் – minutely, perfectly, தவறும் – it will fail, நன்கு அறியாய் ஆயின் – if you don’t understand it well, எம் போல் – like me, ஞெகிழ் தோள் – slim arms (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), கலுழ்ந்த கண்ணர் – those with weeping eyes, மலர் தீய்ந்தனையர் – those who are like charred flowers, நின் நயந்தோரே – those who desired you (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 316,

இடைக்காடனார், முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது

மடவது அம்ம, மணி நிற எழிலி,
மலரின் மௌவல் நலம்வரக் காட்டிக்,
‘கயல் ஏர் உண்கண் கனங்குழை, இவை நின்
எயிறு ஏர் பொழுதின் ஏய் தருவேம்’ என
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் 5
நன்னுதல் நீவிச் சென்றோர், தம் நசை
வாய்த்துவரல் வாரா அளவை அத்தக்
கல் மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து,
தளிதரு தண் கார் தலைஇ
விளி இசைத்தன்றால் வியல் இடத்தானே. 10

Natrinai 316,

Idaikkādanār, Mullai Thinai – What the heroine’s friend said to her

My friend with kohl-rimmed,
carp-shaped, pretty eyes and heavy
earrings!
He stroked your fine forehead
that resembles the moon in the wide
sky, showed flowering jasmine vines
and said that he would come when
they put out new buds that will look
like your teeth.
He has not come back with great desire.
But foolish, untimely sapphire-colored
clouds have fallen as cold rain drops,
shrouding the wasteland mountain paths,
along with roaring thunder in the wide sky.
Notes:

பிரிவிடை வருந்திய தலைவியைத் தோழி வற்புறுத்தியது. பற்களைப் போன்ற அரும்பு: குறுந்தொகை 126 – முல்லைத் தொகு முகை இலங்கு எயிறாக, குறுந்தொகை 162 – சிறு வெண்முகையின் முறுவல் கொண்டனை, குறுந்தொகை 186 – முல்லை மென் கொடி எயிறு என முகையும், நற்றிணை 316 – மௌவல் நலம்வரக் காட்டி கயல் ஏர் உண்கண் கனங்குழை இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய் தருவேம் என. இசைத்தன்றால் (10) – ஒளவை துரைசாமி உரை – முழங்கியது, H. வேங்கடராமன் உரை – குழுமி உள்ளது.

Meanings:

மடவது – they are foolish, அம்ம – அசை நிலை, an expletive, மணி நிற எழிலி – sapphire colored clouds, மலரின் – with flowers, மௌவல் நலம்வரக் காட்டி – showed beautifully jasmine vines, Jasminum angustifolium, Wild jasmine, கயல் ஏர் உண்கண் – carp shaped kohl-rimmed eyes, Cyprinus fimbriatus (ஏர் – உவம உருபு, a comparison word), கனங்குழை – oh woman with big/heavy earrings, (அன்மொழித்தொகை), இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய் தருவேம் – I will come back before these become like your teeth (ஏர் – உவம உருபு, a comparison word), என கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த – praised your forehead that appears like the moon in the wide sky (மதி – முதலிற் கூறும் சினையறி கிளவி), நின் நன்னுதல் நீவிச் சென்றோர் – stroked your pretty fine forehead, தம் நசை வாய்த்துவரல் வாரா அளவை – when he has not finished his work and come with great desire to be with you, அத்தக் கல் மிசை – over the wasteland mountains, அடுக்கம் புதையக் கால் வீழ்த்து – rains have fallen causing the mountain ranges to be hidden, தளிதரு – bringing rain drops, தண் கார் – cool clouds, cool rains, தலைஇ – pouring (தலைஇ – சொல்லிசை அளபெடை), விளி இசைத்தன்றால் – thunder is roaring, வியல் இடத்தானே – in the wide space (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 317,

மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது

நீடு இருஞ்சிலம்பின் பிடியொடு புணர்ந்த
பூம்பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்பத்,
தோடுதலை வாங்கிய நீடு குரல் பைந்தினை,
பவளச் செவ்வாய்ப் பைங்கிளி கவரும்
உயர் வரை நாட! நீ நயந்தோள் கேண்மை 5
அன்னை அறிகுவள் ஆயின், பனி கலந்து,
என் ஆகுவ கொல் தானே, எந்தை
ஓங்கு வரைச் சாரல் தீஞ்சுனை ஆடி,
ஆயமொடு குற்ற குவளை
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே? 10

Natrinai 317,

Mathurai Poovanda Nākan Vēttanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero

Oh lord of the tall mountains, where parrots with
coral-red beaks attack fresh, long spikes of millet
on top of the leaves, that are curved like the lifted
trunks of spotted male elephants who unite with their
females on the slopes of the huge, dark mountains!
If our mother knows about her friendship with you,
what will happen?
The woman you desire, her large dark eyes, like petals
of kuvalai flowers plucked with friends playing in the
sweet springs of our father’s tall mountains, will shed
tears.

Notes: வரைவு கடாயது.

உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கிளி கொண்டு செல்லும் திணைக்கதிர்கள் கிளிக்கு உணவாகுமேயன்றிப் புனத்திற்குப் பயன்படாதது போல தலைவியும் தலைவனுக்குப் பயன்தருவாளேயன்றி பிறந்த இல்லத்திற்குப் பயன்படாள் என்பதாம்.

Meanings:

நீடு இருஞ்சிலம்பின் – on the tall dark mountains, பிடியொடு புணர்ந்த – united with its female, பூம்பொறி ஒருத்தல் – male elephant with lovely spots, male elephant with lovely lines, ஏந்து கை கடுப்ப – like lifted trunk (கடுப்ப – உவம உருபு, a comparison word), தோடு தலை – from the top of leaves, வாங்கிய – bent, நீடு குரல் – long spikes/clusters, பைந்தினை – fresh millet, பவளச் செவ்வாய்ப் பைங்கிளி – green parrots with coral red beaks, கவரும் – they take, they eat, உயர் வரை நாட – oh lord of the lofty mountains, நீ நயந்தோள் – the young woman you desire, கேண்மை – the friendship/love affair, அன்னை அறிகுவள் ஆயின் – if mother knows about it, பனி கலந்து – tears mixed, என் ஆகுவ – what will happen, கொல் – அசை நிலை, an expletive, தானே – தான், ஏ – அசை நிலைகள், expletives, எந்தை – our father’s, ஓங்கு வரை – tall mountains, சாரல் – mountain slopes, தீம் சுனை ஆடி – played in the sweet springs, ஆயமொடு – with friends, குற்ற குவளை – plucked blue waterlilies, மா இதழ் மா மலர் – dark petaled large flowers, புரைஇய – like (சொல்லிசை அளபெடை, புரை – உவம உருபு, a comparison word), கண்ணே – eyes (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 318,

சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது

நினைத்தலும் நினைதிரோ ஐய, அன்று நாம்
பணைத் தாள் ஓமைப் படுசினை பயந்த,
பொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக
நடுக்கம் செய்யாது நண்ணுவழித் தோன்றி,
ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை 5
பொறிபடு தடக்கை சுருக்கி பிறிது ஓர்
ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து
என்றூழ் விடர் அகம் சிலம்பப்
புன்தலை மடப் பிடி புலம்பிய குரலே?

Natrinai 318,

Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the heroine’s friend said to the hero

In the past, when we were resting in the
scant shade of huge, dried branches of
an omai tree with huge trunk, without
making us tremble, a male elephant
with lifted tusks appeared there, broke
and ate tree branches, curled its huge,
spotted trunk and trumpeted
like it had seen something on the path.
A soft-headed, naive female elephant
responded with painful sounds
that echoed in the mountain crevices.
Have you thought about it, oh lord?
Notes:

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி சொல்லியது. இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – களிறு வேறொன்றினை நினைந்து எழுப்பிய ஒலிகேட்டுப் பிடி புலம்புமென்றது, தலைவனுக்கு யாதானும் துன்பமாயின் தலைவி துன்புறுவாள் என்றுணர்த்தவாம்.

ஒளவை துரைசாமி உரை – உடன்போக்கின்கண் தோழியும் உடன்சேறல் இல்லையாயினும், தலைவிக்கும் தோழிக்கும் உள்ள ஒருமையுளப்பாடு கருதி ‘நாம்’ என்றார். இவ்வாறு வருவனற்றை, ‘ஒன்றித் தோன்றும் தோழி மேன’ (தொல்காப்பியம், பொருள் 39) என்பதனால் அமைப்பர் நச்சினார்க்கினியர்.

Meanings:

நினைத்தலும் நினைதிரோ ஐய – have you thought about it oh sir, அன்று – in the past, நாம் – we, பணைத் தாள் ஓமை – omai tree with huge trunk, Toothbrush Tree, Dillenia indica, படுசினை பயந்த – dried up huge branches that yielded, பொருந்தா – not suitable, புகர் நிழல் – dappled shade, இருந்தனெமாக – when we were there, நடுக்கம் செய்யாது – without making us tremble, நண்ணுவழித் தோன்றி – appearing nearby, appearing on the way, ஒடித்து மிசைக் கொண்ட – broke and ate, ஓங்கு மருப்பு யானை – an elephant with lifted tusks, பொறிபடு தடக்கை – spotted large trunk, சுருக்கி – curled, rolled, பிறிது ஓர் ஆறு இடையிட்ட அளவைக்கு – trumpeted like it had heard something different on the path, வேறு உணர்ந்து – understood it to be different, என்றூழ் – sunny, விடர் அகம் சிலம்ப – causing sounds in the mountain caves/crevices, புன்தலை – soft-headed, head with parched hair, head with scanty hair, மடப் பிடி புலம்பிய குரலே – the painful trumpeting sound of a naive female elephant (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 319,

வினைத்தொழில் சோகீரனார், நெய்தற் திணை – தலைவன் சொன்னது

ஓதமும் ஒலி ஓவின்றே, ஊதையும்
தாது உளர் கானல் தவ்வென்றன்றே,
மணன் மலி மூதூர் அகல் நெடுந்தெருவில்
கூகைச் சேவல் குராலோடு ஏறி,
ஆர் இருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும், 5
அணங்கு கால் கிளரும் மயங்கு இருள் நடுநாள்
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின்
தட மென் பணைத்தோள் மடம் மிகு குறுமகள்
சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி,
மீன் கண் துஞ்சும் பொழுதும், 10
யான் கண் துஞ்சேன்; யாது கொல் நிலையே?

Natrinai 319,

Vinaitholil Chokeeranār, Neythal Thinai – What the hero said

The sounds of waves have ended,
cold winds spread pollen
and the seashore grove is desolate.
In the sand-filled ancient town,
a male owl along with its female goes
to the wide, long street and hoots in the
huge, dark town square at this confusing
midnight time, when ghouls roam.
I am unable to sleep even when fish
go to sleep, thinking about embracing
the naïve woman with curved, delicate arms
like bamboo, pretty breasts with pallor spots,
lovely like Kolli goddess, whose beauty is
analyzed by many. What is happening to me?
Notes: தலைவி இற்செறிக்கப்பட்டாள். அதனை அறிந்து ஆற்றானாகியத் தலைவன் தனக்குத் தானே கூறியது.

ஒளவை துரைசாமி உரை – ‘பண்பிற் பெயர்ப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 12) எனத் தொடங்கும் நூற்பாவில், ‘பரிவுற்று மெலியினும்’ என்றதற்கு இப்பாட்டைக் காட்டி, இஃது இரவுக் குறியிற் பரிவுற்றது என்பர் நச்சினார்க்கினியர். நெடுநல்வாடை85 – தவ்வென்று அசைஇ தா துளி, குறுந்தொகை 356-4 தவ்வெனக் குடிக்கிய. பாவை (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கொல்லிப்பாவை, ஒளவை துரைசாமி உரை – பாவை.

Meanings:

ஓதமும் ஒலி ஓவின்றே – ocean sounds have ended (ஓவின்று – இறந்தகாலத் தெரிநிலை வினைத்திரிசொல், ஏ – அசை நிலை, an expletive), ஊதையும் – also the cold wind, தாது உளர் கானல் – the seashore grove with spreading pollen, தவ்வென்றன்றே – it does not have sounds, it has lost its luster (ஏ – அசை நிலை, an expletive), மணல் மலி மூதூர் – ancient town with abundant sand, அகல் நெடுந்தெருவில் – on the wide long street, கூகைச் சேவல் குராலோடு ஏறி – male owl with its female climbed, ஆர் இருஞ் சதுக்கத்து – in the harsh dark town square, அஞ்சுவரக் குழறும் – hoots causing fear, அணங்கு கால் கிளரும் – ghouls rise up and roam, மயங்கு இருள் நடுநாள் – confusing dark midnight, பாவை அன்ன – like Kolli goddess, like a doll, பலர் ஆய் வனப்பின் – with beauty analyzed by many, தட – large, curved, மென் – delicate, பணைத்தோள் – bamboo-like arms, மடம் மிகு குறுமகள் – naive young girl, சுணங்கு அணி – with pallor spots, வன முலை – pretty breasts, முயங்கல் – embracing, உள்ளி – thinking, மீன் கண் துஞ்சும் பொழுதும் – even when fish sleep, யான் கண் துஞ்சேன் – I do not sleep, யாது கொல் – what (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), நிலையே – situation (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 320,

கபிலர், மருதத்திணை – பரத்தை சொன்னது

‘விழவும் உழந்தன்று, முழவும் தூங்கின்று,
எவன் குறித்தனள் கொல்?’ என்றி ஆயின்,
தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின்
இளையோள் இறந்த அனைத்தற்கு பழ விறல்
ஓரிக் கொன்ற ஒரு பெருந்தெருவில் 5
காரி புக்க நேரார் புலம் போல்
கல்லென்றன்றால், ஊரே அதற்கொண்டு,
காவல் செறிய மாட்டி, ஆய் தொடி
எழில் மா மேனி மகளிர்
விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே. 10

Natrinai 320,

Kapilar, Marutham Thinai – What the concubine said

The festivities have ended and drums
have stopped roaring.
The young woman walks on the street
with her leaf skirt, swaying her hip as
she goes.
If you ask me what she was thinking,
I will tell you. The whole town laughs
at her with great uproar, sounding like
the uproar that rose when Kāri killed Ōri
of ancient victories, and then went to his
huge street.
Dark-colored, pretty women with
well-made bangles have protected their
husbands from her and attained benefits.
Notes:

பரத்தையிடமிருந்து பிரிந்து வந்த தலைவன் வேறொரு பரத்தையின் மனைக்குச் செல்கின்றான். அதனை அறிந்த முதல் பரத்தை இகழ்ந்து கூறியது. Natrinai poems 77, 100, 170, 291 and 320 have references to Malaiyamān. There are references to Kāri killing Ōri in Natrinai 320, Akanānūru 209, and Sirupānātruppadai 110-111. Kāri killed Ōri and then gave away Ōri’s Kolli Mountain to the Chēra king (Akanānūru 209). Poems 6, 52, 265 and 320 have references to Ōri. விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57)
Meanings:

விழவும் உழந்தன்று – the festivals have ended, முழவும் தூங்கின்று – the drums are sleeping, the drums have stopped, எவன் குறித்தனள் கொல் என்றி ஆயின் – if you ask ‘what was she was thinking?’ (கொல் – அசை நிலை, an expletive, என்றி – முன்னிலை ஒருமை), தழை அணிந்து – wearing a leaf skirt, அலமரும் அல்குல் – with swaying hips, with swaying waist, தெருவின் – in the street, இளையோள் – the young woman, இறந்த அனைத்தற்கு – when she went, பழ விறல் – ancient victory, ஓரிக் கொன்ற – killed king Ōri, ஒரு பெருந்தெருவில் – on a big street, காரி – king Kāri, புக்க – entered, நேரார் புலம் போல் – like the land of enemies, கல்லென்று அன்று ஆல் ஊரே – the town raised uproars (கல்லென்று – ஒலிக்குறிப்பு, ஆல் – அசைநிலை, an expletive), அதற்கொண்டு – since then, காவல் செறிய மாட்டி – protected well, ஆய் தொடி – beautiful bangles, chosen bangles, எழில் – beautiful, மா மேனி – dark colored body, மகளிர் – young women, விழுமாந்தனர் – they attained benefits (விழுமம் என்ற உரிச் சொல்லடியாகப் பிறந்த தெரிநிலை வினைமுற்று), தம் கொழுநரைக் காத்தே – protecting their husbands (ஏ – அசை நிலை, an expletive)

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.