Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

நற்றிணை 321-330

நற்றிணை 321,

மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது

செந்நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை
பாடு இன் தெள் மணித் தோடு தலைப்பெயரக்,
கான முல்லைக் கயவாய் அலரி
பார்ப்பன மகளிர் சாரல் புறத்து அணியக்,
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை, 5
புல்லென் வறுமனை நோக்கி, மெல்ல
வருந்தும் கொல்லோ திருந்திழை அரிவை?
வல்லைக் கடவுமதி தேரே, சென்றிக,
குருந்து அவிழ் குறும் பொறை பயிற்றப்
பெருங்கலி மூதூர் மரம் தோன்றும்மே. 10

Natrinai 321,

Mathurai Alakkar Gnālār Makanār Mallanār, Mullai Thinai – What the hero said to the charioteer

From the forest with red soil,
herders with short-haired goats
with clear, sweet bells return home.
Forest jasmine flowers that
Brahmin women on the mountain
slopes wear have blossomed.
In the evening time when the
sun’s rays reach the mountains,
my wife wearing perfect jewels will
feel sad when she sees our dull and
desolate house.
Ride fast, oh charioteer!
The trees in our noisy, ancient town
will appear between the small
boulders where kuruntham flowers bloom.

Notes:

வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது.

Meanings:

செந்நிலப் புறவின் – from the forest with red soil, புன் மயிர்ப் புருவை – goats with short hair, goats with soft hair, goats with parched hair, பாடு இன் தெள் மணி – clear sweet sounding bells, தோடு தலைப்பெயர – herds return, herds move, கான முல்லை – forest jasmine, கயவாய் அலரி – wide opened flowers, பார்ப்பன மகளிர் – Brahmin women, சாரல் புறத்து – on the mountain slopes, அணிய – near, கல் சுடர் சேரும் – sun reaches the mountains, கதிர் மாய் மாலை – evening when the suns rays hide, புல்லென் வறுமனை நோக்கி – looking at the dull empty house, மெல்ல வருந்தும் கொல்லோ – she feel sad gently (கொல் – அசைநிலை, an expletive ஓ – அசைநிலை, an expletive), திருந்திழை அரிவை – the young lady with perfect jewels, வல்லைக் கடவுமதி தேரே – ride the chariot fast (மதி – முன்னிலை அசை, an expletive of the second person), சென்றிக – please go, you proceed (செல்க என்னும் வியங்கோள் வினைதிரிசொல்), குருந்து அவிழ் – kuruntham flowers open, wild orange, citrus indica, குறும் பொறை – small hills, small boulders, பயிற்ற – getting close, பெருங்கலி – great uproar, மூதூர் – ancient town, மரம் தோன்றும்மே – the trees will appear (தோன்றும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது)
நற்றிணை 322,

மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது அல்லது தலைவி தோழியிடம் சொன்னது

ஆங்கனம் தணிகுவது ஆயின், யாங்கும்
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை,
வாய் கொல், வாழி தோழி, வேய் உயர்ந்து
எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை,
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர், 5
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி, வாள் வரிக்
கடுங்கண் வயப் புலி ஒடுங்கும் நாடன்
தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது,
நன்னுதல் பசந்த படர் மலி அரு நோய்
அணங்கு என உணரக் கூறி, வேலன் 10
இன் இயம் கறங்கப் பாடிப்,
பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே.

Natrinai 322,

Mathurai Pālasiriyan Chēnthan Kotranār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, or What the heroine said to her friend

May you live long, oh friend!
Pallor has spread on the fine
forehead,
unable to embrace the wide, cool
and fragrant chest of the man from
the country, where bamboos grow
tall, broken, dense and tangled,
and a cruel, mighty male tiger with
sword-like stripes, lies in wait for
those who travel on the difficult path,
to feed his flesh-hungry female.
Saying that this affliction is caused
by the wrath of Murukan,
the diviner sings with sweet instruments
and scatters many flowers as offerings.
If the affliction goes away, there would
be nothing more cruel than this.
Is this not true?
Notes:

களவில் வந்தொழுகும் தலைவன் சிறைப்புறமாக இருக்கும்போது கூறியது. தலைவியின்கூற்று. தோழியின்கூற்றுமாம். வரைவுகடாயது.

உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – ஆண்புலி பெண்புலியுற்ற பசிபோக்கச் சுரத்திடைச் சென்று மறைந்திருக்குமென்றது, தலைவியின் பிரிவுத் துயர் போக்க வரைந்தெய்துதற்கு வேண்டும் பொருளைத் தலைவன் ஈட்டச் சென்று வருவானாக என்பதை உள்ளுறுத்தது. வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார்வேலைத் (பிள்ளையான முருகனின் வேல்) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேல் என்றார்.

Meanings:

ஆங்கனம் தணிகுவது ஆயின் – if it will get reduced, யாங்கும் இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை – there is nothing else more cruel than this, வாய் கொல் – is this true (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), வாழி – அசை நிலை, an expletive, may you live long, தோழி – oh friend, வேய் உயர்ந்து – bamboos are tall, எறிந்து – cut, broken, செறித்தன்ன – like they are tight together, பிணங்கு அரில் – intertwined, tangled, விடர் முகை – mountain caves, ஊன் தின் – meat eating, பிணவின் உயங்கு பசி களைஇயர் – to remove the hunger of its mate (களைஇயர் – சொல்லிசை அளபெடை), ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி – to attack people who go on the difficult path, வாள் வரி – bright stripes, sword-like stripes, கடுங்கண் வயப் புலி ஒடுங்கும் – a cruel mighty tiger hides, a fierce mighty tiger stalks, நாடன் – the man from such country, தண் கமழ் – cool and fragrant, வியல் மார்பு உரிதினின் பெறாது – unable to get his wide chest, நன்னுதல் பசந்த – pallor has spread on the fine forehead, படர் மலி அரு நோய் – sorrow-filled disease that is difficult to remove, அணங்கு என உணரக் கூறி – said that it was affliction (incurring the wrath of Murukan), வேலன் இன் இயம் கறங்கப் பாடி – Velan (Murukan priest, diviner) singing with many sweet instruments, பல் மலர் சிதறி – scattering many flowers, பரவுறு பலிக்கே – for the offering with prayers (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 323,

வடம வண்ணக்கன் பேரிசாத்தனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது

ஓங்கித் தோன்றும் தீம் கள் பெண்ணை
நடுவணதுவே தெய்ய, மடவரல்
ஆயமும் யானும் அறியாது அவணம்
மாய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின்
கிளைமை கொண்ட வளை ஆர் முன் கை 5
நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்;
புலி வரி எக்கர்ப் புன்னை உதிர்த்த
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி,
வண்டு இமிர் இன் இசை கறங்க திண் தேர்த்
தெரி மணி கேட்டலும் அரிதே, 10
வரும் ஆறு ஈது, அவண் மறவாதீமே.

Natrinai 323,

Vadama Vannakkan Pērisathanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero, while arranging for a day tryst

The small seashore village of her
father,
……….the young woman with bangles on her
……….forearms, who spoiled her fine beauty
……….because of your confusing friendship,
is in the midst the tall palmyra palms
with sweet sap.
My naive friends and I will be there,
unaware of the presence of each other.
Punnai trees, on the strips of sand dunes
that appear like the stripes of tigers, have
dropped heavy pollen, and male and female
honeybees hum sweet music. It is difficult
to hear your clear chariot bells.
This is the path to use. Do not forget the place!
Notes:

தோழி இரவுக்குறி நேர்ந்தது. இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புன்னை உதிர்ந்த தாதினை வண்டுகள் இமிர்ந்து உண்ணும் என்றதனால், தலைவியின் நலத்தை அஞ்சாது உண்டு, மகிழ்ந்திருக்கலாம் என்பது. தேனோடு (8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் – பெண் வண்டுகளுடனே. வண்டு (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் – ஆண் வண்டு.

Meanings:

ஓங்கித் தோன்றும் தீம் கள் பெண்ணை – palmyra trees with sweet sap that are tall, Borassus flabellifer, நடுவணதுவே – it is in the middle, தெய்ய – அசை நிலை, an expletive, மடவரல் ஆயமும் யானும் – my naive group of friends and myself, அறியாது – not aware, அவணம் – that place, மாய – confusing, நட்பின் – due to friendship, மாண் நலம் ஒழிந்து – spoiling her fine beauty, நின் கிளைமை கொண்ட – who has your friendship, வளை ஆர் முன் கை நல்லோள் – the fine young woman with bangles in her forearm, தந்தை சிறுகுடிப் பாக்கம் – the small seashore village of her father, புலி வரி – tiger stripes, எக்கர்ப் புன்னை – sand dune punnai trees, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, உதிர்த்த மலி தாது – dropped heavy pollen, ஊதும் – humming, தேனோடு – with female honey bees, ஒன்றி – involved, வண்டு இமிர் இன் இசை கறங்க – loud sweet music of male bees, திண் தேர் – sturdy chariot, தெரி மணி கேட்டலும் – to hear the clear bells, அரிதே – difficult, வரும் ஆறு – arriving path, ஈது – this, அவண் – that place, மறவாதீமே – do not forget (முன்னிலை வினைத் திரிசொல்)

நற்றிணை 324,

கயமனார், குறிஞ்சித் திணை அல்லது பாலைத் திணை – தலைவன் தோழனிடம் சொன்னது, அல்லது தலைவியை வழியில் கண்டோர் சொன்னது

அந்தோ! தானே அளியள் தாயே!
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள் கொல்,
பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள்?
கோடு முற்று யானை காடுடன் நிறைதர,
நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின் 5
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி,
அம் சில் ஓதி இவள் உறும்
பஞ்சி மெல் அடி நடை பயிற்றும்மே.
Natrinai 324,

Kayamanār, Kurinji Thinai or Pālai Thinai – What the hero said to his friend, or what those who saw the heroine on the path said

Her pitiable mother who bears
this pain and grief! What will
happen to her? Her beloved
daughter, her body like gold,
has gone to the jungle where
elephants have mature tusks.
She is playing like she is rolling
her ball in the large house of her
wealthy father with a spear that
shines like it has been rubbed
with oil. The young woman with
fine and beautiful hair walks on
feet as soft as cotton.
Notes:

ஒளவை துரைசாமி உரை – இஃது இடைச் சுரத்து கண்டோர் சொல்லியது.

பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தலைமகன் பாங்கற்குச் சொல்லியது, இடைச்சுரத்துக் கண்டோர் சொல்லியதூஉமாம். In poems Natrinai 12, 305, 324 and Kurunthokai 396, which were all written by Kayamanār, there are references to a ball played by the heroine.

Meanings:

அந்தோ – aiyo, alas, தானே அளியள் – she is pitiable, தாயே – her mother (ஏ – அசை நிலை, an expletive), நொந்து அழி அவலமொடு – grieving and deeply distressed, என் ஆகுவள் கொல் – how will she handle it (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), பொன் போல் மேனி – body like gold, தன் மகள் நயந்தோள் – the woman who desires her daughter, the woman who pines for her daughter, கோடு – tusks, முற்று – mature (big), யானை காடுடன் நிறைதர – in the elephant-filled forest, நெய் பட்டன்ன – like rubbed with oil/ghee, நோன் – strong, காழ் எஃகின் – with an iron spear, செல்வத் தந்தை – rich father, இடனுடை வரைப்பின் – in the large house, ஆடு – playing, பந்து உருட்டுநள் போல – as if she were rolling a ball, ஓடி – she runs, அம் சில் ஓதி இவள் – she with beautiful fine hair, உறும் பஞ்சி மெல் அடி நடை பயிற்றும்மே – she walks on her feet as gentle as cotton (பயிற்றும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது)

நற்றிணை 325,

மதுரைக் காருலவியங்கூத்தனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது

கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை
இரை தேர் வேட்கையின் இரவில் போகி,
நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த
அர வாழ் புற்றம் ஒழிய, ஒய்யென
முரவாய் வள் உகிர் இடப்ப வாங்கும், 5
ஊக்கு அருங்கவலை நீந்தி, மற்று இவள்
பூப்போல் உண்கண் புது நலம் சிதைய,
வீங்கு நீர் வாரக் கண்டும்,
தகுமோ பெரும? தவிர்க நும் செலவே.

Natrinai 325,

Mathurai Kārulaviyan Koothanār, Pālai Thinai – What the heroine’s friend said to the hero

Lord! Please avoid travel!
After seeing her flower-like,
kohl-rimmed eyes fill up with
tears as she cries, her fine
beauty ruined,
is it proper that you go on
difficult, forked paths where
a thick-haired male bear with
bent head, prowls for food at
night, and with his broken,
sharp claws digs into a termite
mound where snakes live, built
over a long time, destroying it
rapidly and sucking its contents
with his mouth?
Notes:

தோழி செலவு அழுங்குவித்தது. முரவாய் வள் உகிர் (5) – ஒளவை துரைசாமி உரை – மடிந்த வாயும் கூர்மையும் உடைய நகங்களால் தோன்றி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஒடிந்த வாயையுடைய பெரிய நகங்களாலே பறித்து. இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கரடி இரைதேடும் வேட்கையால் புற்று அகழ்ந்து உண்ணும் என்றது, தலைவியின் காமம் தலைவனைக் கூடும் விருப்பத்தின் மிகுதியால் இவள் உயிர் உண்ணும் என்பது உணர்த்தற்காம். Natrinai 125, 325, 336 and Akanānūru 8, 72, 81, 88, 112, 149, 247, 257 and 307 have references to bears attacking termite mounds.

Meanings:

கவி தலை – bent head, எண்கின் – bear’s, பரூஉ மயிர் ஏற்றை – a thick haired male (பரூஉ – இன்னிசை அளபெடை), இரை தேர் – searching for food, வேட்கையின் – with desire, இரவில் போகி – went at night, நீடு செயல் – created over a long time, சிதலைத் தோடு – termite swarms, புனைந்து எடுத்த – created and lifted, அர வாழ் புற்றம் – termite mound where snakes live, ஒழிய – ruining, ஒய்யென – rapidly (விரைவுக்குறிப்பு), முரவாய் – curved ends, broken ends, வள் உகிர் – strong claws, thick claws, இடப்ப வாங்கும் – digs and eats the termite combs, ஊக்கு அருங்கவலை – harsh forked paths that are difficult to even think about, நீந்தி – passing, மற்று இவள் – and her, பூப்போல் – flower-like, உண்கண் – kohl-rimmed eyes, புது நலம் சிதைய – beauty ruined, வீங்கு நீர் – overflowing tears, abundant tears, வாரக் கண்டும் – even on seeing them drip tears, தகுமோ – is it fitting, is it proper (ஓகாரம் எதிர்மறை), பெரும – oh lord, தவிர்க நும் செலவே – please avoid your travel (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 326,

மதுரை மருதன் இளநாகனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது

கொழுஞ்சுளைப் பலவின் பயங்கெழு கவாஅன்,
செழுங்கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கு இனம்
மீன் குடை நாற்றம் தாங்கல் செல்லாது
துய்த்தலை மந்தி தும்மும் நாட!
நினக்கும் உரைத்தல் நாணுவல், இவட்கே 5
நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப்
பசலை ஊரும் அன்னோ; பல் நாள்
அறி அமர் வனப்பின் எம் கானம் நண்ண,
வண்டு எனும் உணராவாகி,
மலர் என மரீஇ வரூஉம் இவள் கண்ணே. 10

Natrinai 326,

Mathurai Maruthan Ilanākanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero

Oh man from the country
where mature clusters of jackfruits
with luscious segments hang on the
curved, big branches of trees in the
mountain ranges that yield great
benefits, and stork flocks resting
there tear and eat fish, and a female
monkey with fuzzy hair on her head
sneezes, unable to bear the stench!
I am embarrassed to tell you about
the pallor spreading on her eyes,
……….the color of dried flowers
……….of the delicate peerkkai vine,
on which bees that come daily to our
lovely forest swarm, thinking they
are flowers.

Notes: களவு ஒழுக்கத்தின்கண் வந்து ஒழுகும் தலைவனிடம் வரைவு கடாயது.
உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பலாமரத்தின் கிளையிலிருந்து கொக்கு மீனைத் தின்னுதலால் உண்டான நாற்றத்தால் மந்தி தும்மும் என்றது, தினைப்புனத்தே தலைவன் தலைவியோடு இன்பம் துய்த்ததையும், அதனால் அலர் பரந்ததையும், சினந்ததையும் உணர்த்திற்று.

Meanings:

கொழுஞ்சுளைப் பலவின் – with jackfruit trees with fruits with luscious segments, Artocarpus heterophyllus, பயம் கெழு கவாஅன் – benefit yielding adjoining mountains (கவாஅன் – இசை நிறை அளபெடை), செழுங்கோள் – mature clusters, full clusters, வாங்கிய – curved, மாச் சினை – big branches, கொக்கு இனம் – stork flocks, crane flocks, மீன் – fish, குடை – digging, நாற்றம் தாங்கல் செல்லாது – unable to tolerate the stinking odor, துய்த்தலை மந்தி தும்மும் – a female monkey with fuzzy head hair coughs, நாட – oh man from such country, நினக்கும் உரைத்தல் நாணுவல் – I am embarrassed to tell you (நாணுவல் – தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending), இவட்கே – for her, நுண் கொடிப் பீரத்து – of ridge gourds with delicate vines, Luffa acutangula, ஊழ் உறு பூ என – like old flowers that had dried out, பசலை ஊரும் – pallor spreads, அன்னோ – alas, பல் நாள் – many days, அறி அமர் வனப்பின் – with known beauty, எம் கானம் – our forest, நண்ண – reaching, வண்டு – bees, எனும் உணராவாகி – not knowing, மலர் என மரீஇ வரூஉம் – they come and swarm them thinking they are flowers (மரீஇ – சொல்லிசை அளபெடை, வரூஉம் – இன்னிசை அளபெடை), இவள் கண்ணே – her eyes (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 327,

அம்மூவனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்,
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச்
சாதலும் இனிதே, காதல் அம் தோழி,
அந்நிலை அல்ல ஆயினும், ‘சான்றோர்
கடன் நிலை குன்றலும் இலர்’ என்று உடன் அமர்ந்து, 5
உலகம் கூறுவது உண்டு என, நிலைஇய
தாயம் ஆகலும் உரித்தே, போது அவிழ்
புன்னை ஓங்கிய கானல்
தண்ணந்துறைவன் சாயல் மார்பே.

Natrinai 327,

Ammoovanār, Neythal Thinai – What the heroine said to her friend

Oh beloved friend!
If trusting the man who
cares for us is to be blamed,
then it is better to die
with sleepless, crying eyes.
Even if that is not natural,
those who are wise will not
swerve from responsibilities,
in the opinion of the world.
It would be nice to have the right
of ownership of the gentle chest
of the lord of the cool shores
where tall punnai trees flourish
in the groves with blossoming buds.

Notes:

தலைவன் வரையாது நெடுங்காலம் வந்தொழுகினான். அது கண்டு ஆற்றுக என்றுரைத்த தோழியிடம் தலைவி கூறியது. இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – புன்னை போது அவிழ்கின்றது என்றது, தம்மை நயன்தாரைக் கைவிடும் தலைவனது கடற்கரையில் புன்னை போது அவிழ்வது எங்ஙனம் என வியந்தது என உணர்த்திற்று. சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).

Meanings:

நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின் – if trusting the one who cares is to be blamed, பாடு இல கலுழும் கண்ணொடு – with sleepless crying eyes, சாஅய்ச் சாதலும் இனிதே – it is sweeter to suffer and die (சாஅய் – இசை நிறை அளபெடை, இனிதே – ஏ அசை நிலை, an expletive), காதல் அம் தோழி – my loving beautiful friend, அந்நிலை அல்ல ஆயினும் – even if that situation is not natural, சான்றோர் கடன் நிலை குன்றலும் இலர் என்று – that those who are wise will not shrink from situations with responsibilities, உடன் அமர்ந்து உலகம் கூறுவது உண்டு என நிலைஇய – is the opinion that the world says (நிலைஇய – சொல்லிசை அளபெடை), தாயம் ஆகலும் உரித்தே – to have the right by marriage is fitting (ஏ – அசை நிலை, an expletive), போது அவிழ் – buds opened, புன்னை ஓங்கிய – punnai trees flourishing, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, கானல் – seashore grove, தண்ணந்துறைவன் – the lord of the cool shores (தண்டுறைவன் என்பது தண்ணந்துறைவன் ஆவது, அம் – சாரியை, விரிக்கும் வழி விரித்தல்), சாயல் மார்பே – to rest on his chest, his gentle chest (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 328,

தொல்கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது

கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கிச்,
சிற்சில வித்திப் பற்பல விளைந்து
தினை கிளி கடியும் பெருங்கல் நாடன்
பிறப்பு ஓரன்மை அறிந்தனம் அதனால்,
அது இனி வாழி தோழி, ஒரு நாள் 5
சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்பு
பெரும் பெயல் தலைக புனனே இனியே
எண் பிழி நெய்யொடு வெண்கிழி வேண்டாது,
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெருஞ்சாரல்
விலங்கு மலை அடுக்கத்தானும், 10
கலம் பெறு விறலி ஆடும் இவ் ஊரே.

Natrinai 328,

Tholkapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to her

He’s from the towering mountains
where yams are in the ground,
honeycombs hang from above, few
millet seeds become many plants,
and the parrots that come to attack
millet are chased.
We understand that he comes from
a lineage that is close to ours. May his
heritage flourish!
In our huge mountains with sandal trees,
female dancers who don’t desire sesame
oil dipped white fabric, receive jewels for
gifts instead. May the clouds rise up with
strength, rain heavily with thunder and
lightning and drench our field!
Notes:

தோழி வரைவிடை ஆற்றாளாகிய தலைவியை வற்புறுத்தியது.

உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – (1) – கிழங்கு கீழவீழ்ந்து தேன் மேல்தூங்கி என்றது, அவன் நம்பால் வைத்த கீழாக வேரூன்றி இறங்கி, மேலே காணும்போதெல்லாம் தேனினும் இனிமை செய்கின்றது என்பது. (2) – சிற்சில வித்தி பற்பல விளைந்தென்றது, ஓரோ ஒருகால் இயற்கைப் புணர்ச்சியிலே நீ இன்பம் நல்க அதனைப் பெற்றான் ஆதலின், அதற்கீடாகப் பல்லாயிரம் நன்மையை நினக்கு அளிக்க நாடியிருப்பவன் என்பது. (3) – கிளி கடியமென்றது, அவ்வன்பு கெடாதபடி பாதுகாக்குமென்பது. (4) – எண்ணெய் கிழி வேண்டாது விறலி ஆடுமென்றது, அவன் பெருந்தகைமை நோக்கவே, அருங்கலம் முதலாயின வேண்டாது நம் சுற்றத்தார் நின்னைக் கொடுக்க உடன்படுவர் என்பது. வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1. This is the only poem with a reference to fabric dipped in sesame oil.

Meanings:

கிழங்கு கீழ் வீழ்ந்து – yams/tubers go down into the ground, தேன் மேல் தூங்கி – honeycombs hang from above, சிற்சில வித்தி – planted few seeds, பற்பல விளைந்து – and obtained many, தினை – millet plants, கிளி கடியும் – that parrots attack, parrots are chased, பெருங்கல் நாடன் – man from the big mountains, பிறப்பு – heritage, ஓர் அண்மை – close to ours, அறிந்தனம் – we have understood, அதனால் – so, அது இனி வாழி தோழி – may his hertage flourish oh friend, ஒரு நாள் – one day, சிறு பல் – a few small, கருவித்து ஆகி – clouds with thunder and lightning, வலன் ஏர்பு – climb with strength, பெரும் பெயல் தலைக புனனே – may heavy rains fall in our field (ஏ – அசை நிலை, an expletive), இனியே – after this (ஏ – அசை நிலை, an expletive), எண் பிழி – sesame squeezed, நெய்யொடு – with oil, வெண்கிழி – piece of white cloth, வேண்டாது – not desiring, refusing, சாந்து தலைக்கொண்ட – filled with sandal trees, ஓங்கு பெருஞ்சாரல் – towering big mountain slopes, விலங்கு மலை – crossing mountains, blocking mountains, அடுக்கத்தானும் – in the mountain ranges, கலம் பெறு – getting jewels (as gifts), விறலி ஆடும் இவ் ஊரே – this town where viralis dance, in this town where female artists dance (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 329,

மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது

வரையா நயவினர் நிரையம் பேணார்
கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன்
இடு முடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது,
புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு
இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி 5
செங்கணைச் செறித்த வன்கண் ஆடவர்
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும்,
அத்தம் இறந்தனர் ஆயினும், நத் துறந்து
அல்கலர் வாழி தோழி, உதுக்காண்,
இரு விசும்பு அதிர மின்னி, 10
கருவி மா மழை கடல் முகந்தனவே.

Natrinai 329,

Mathurai Marutham Kilār Makanār Sokuthanār, Pālai Thinai – What the heroine’s friend said to her

May you live long, oh friend!
Look there!
Huge masses of clouds
have drawn water from the ocean,
and are roaring thunder along
with lightning in the dark skies.
He of limitless kindness will not
seek hellish traits.
He will not stay there, even though
he went on the wasteland path,
where cruel men fasten on their
red arrows the soft feathers that fall
off an old spotted vulture that had
recently laid eggs,
when it flaps its wings in anger,
unable to get a spot in the place
with stink, to eat the flesh from the
corpses of murdered people.
Notes:

பிரிவிடை மெலிந்த தலைவியைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது. இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – (1) பருந்துகள் பிணத்தின் ஊனைத் தின்ன மாட்டாமல் விலகி இருக்கும் என்றது, தலைவியின் நெற்றியில் உள்ள பசலை அவர் வரும் நாளில் தானே அகலும் என்பது. (2) – மறவர் தம் கணையுடன் அதர் பார்த்திருப்பர் என்றது, ஊர்ப்பெண்டிர் அலர் தூற்ற அற்றம் பார்த்திருப்பர்என்பது குறித்தவாறு. கருவி மா மழை (11) – இடி மின்னல் முதலாய தொகுதிகளையுடைய கரிய மேகங்கள். புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, H.வேங்கடராமன் உரை – ஈன்ற அணிமையால் நெருங்காது வெறுத்துக் கடந்து போன புள்ளிகளையுடைய முதிய பருந்து. N. Kandasamy has interpreted these words as “a spotted old vulture crowded by a flock of new-born vultures.” Dr. V. S. Rajam interprets the words as “an old vulture with marks from the stampede of young ones”. மலைபடுகடாம் 49 – புனிறு இல் காட்சி, பொவே. சோமசுந்தரனார் உரை – ‘புனிறு இல் காட்சி’ என்றது இளங்குழந்தைகளையுடையார் யார் ஒருவரேனும் வந்தில்லாத கூட்டம் என்றவாறு.

Meanings:

வரையா – limitless, நயவினர் – he is kind, நிரையம் பேணார் – he does not respect hellish traits, he will not seek hellish traits, கொன்று – killed, ஆற்றுத் துறந்த – abandoned on the path, மாக்களின் – of people, அடு – killed, பிணன் – corpses, இடு – placed, முடை மருங்கில் – in a place where there is flesh stench, தொடும் இடம் பெறாஅது – unable to get a spot to dig and eat (பெறாஅது – இசை நிறை அளபெடை), புனிற்று – new eggs, young chicks, நிரை – row, கதித்த – with anger, with hatred, பொறிய – with marks, with spots, முது பாறு – an old vulture, பிணம் தின்னும் கழுகு, Indian vulture, Gyps indicus, இறகு புடைத்து – flapped its wings, இற்ற – dropped, பறை – flying, புன் தூவி – soft feathers, dull feathers, செங்கணைச் செறித்த – fastened on their fierce arrows, decorated their red arrows, வன்கண் ஆடவர் – fierce men, ஆடு கொள் நெஞ்சமோடு – with a heart waiting to win, அதர் பார்த்து – looks at the path, அல்கும் – stays there, அத்தம் இறந்தனர் ஆயினும் – even if he went through the path, நத் துறந்து – abandoning us, அல்கலர் – he will not stay away, வாழி – அசை நிலை, an expletive, may you live long, தோழி – oh friend, உதுக்காண் – look there (உது – இடைச்சுட்டு), இரு விசும்பு அதிர – dark sky roars, மின்னி – lightning, கருவி மா மழை – dark clouds with lightning and thunder, கடல் முகந்தனவே – they have drawn from the ocean since rainy season is approaching (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 330,

ஆலங்குடி வங்கனார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது

தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து
மட நடை நாரைப் பல் இனம் இரிய,
நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து,
நாள் தொழில் வருத்தம் வீட சேண் சினை
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் 5
யாணர் ஊர! நின் மாண் இழை மகளிரை
எம் மனைத் தந்து நீ தழீஇயினும், அவர் தம்
புன் மனத்து உண்மையோ அரிதே, அவரும்
பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து
நன்றி சான்ற கற்பொடு 10
எம் பாடு ஆதல், அதனினும் அரிதே.

Natrinai 330,

Ālankudi Vankanār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero

Oh man from the rich town
where a male buffalo with huge
horns and a rough nape
jumps into a huge, cool water pond
with a big splash after a tiring day of
labor,
……….causing many flocks of storks with
……….delicate steps to fly away in fear,
and rests in the dark, sweet shade of
a punnai tree with tall branches!
Even if you bring to our house your
women with lovely jewels and embrace
them, it is difficult to know what is in their
lowly minds. Also, it would be even more
difficult for them to be virtuous like us and
bring forth proud girls with bangles and boys.
Notes:

தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தது. எம் பாடு ஆதல் (11) – ஒளவை துரைசாமி உரை – எம்போலும் குலமகளிர் எய்தும் பெருமையை உடையராதல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – எம் பக்கத்து அமர்தல். உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – எருமைக்கடா நாரையினம் இரியப் பொய்கையில் பாய்ந்து வருத்தம் நீங்கிய பின் தொழுவம் புகாது மருத மர நிழலிலே தங்கும் என்றது, தலைவன் காமக்கிழத்தியரைத் துய்த்து, பின்னர் அவரை அஞ்சி அகலுமாறு வெறுத்துச் சேரிப் பரத்தையிடம் முயங்கிக் கிடந்து பின்னும் பாணன் கூட்டிய புதிய பரத்தையிடம் தங்கியிருந்தான் என்பதனை உள்ளுறுத்திற்று. யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

Meanings:

தட மருப்பு – huge horns, curved horns, எருமை – buffalo, பிணர்ச் சுவல் – rough nape, rough neck, இரும் போத்து – large/dark male, மட நடை நாரை – storks with delicate walk, white stork – Ciconia ciconia or pelican or crane, பல் இனம் – many flocks, இரிய – moved away, நெடு நீர்த் தண் கயம் – huge cool water pond, துடுமெனப் பாய்ந்து – jumped with a big sound, நாள் தொழில் – day’s job, வருத்தம் வீட – tiredness to go away, சேண் – long, tall, சினை – branches, இருள் புனை மருதின் – of marutham tree with darkness, Terminalia arjuna, இன் நிழல் வதியும் – it rests in the sweet shade, யாணர் ஊர – oh man from prosperous town (ஊர – அண்மை விளி), நின் மாண் இழை மகளிரை எம் மனைத் தந்து – your women with esteemed jewels who you bring to our house, நீ தழீஇயினும் – even though you embrace them (தழீஇயினும் – சொல்லிசை அளபெடை), அவர் தம் புன் மனத்து உண்மையோ அரிதே – it is difficult to know what is in their lowly minds (ஏ – அசை நிலை, an expletive), அவரும் – them, பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து – to bring forth girls with new bangles and boys, நன்றி சான்ற – with gratitude, கற்பொடு – with virtue, with chastity, எம் பாடு ஆதல் – to be proud like us, அதனினும் – more than that, அரிதே – it is rare (ஏ – அசை நிலை, an expletive)

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.