Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

நற்றிணை 331-340

நற்றிணை 331,

உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது

உவர் விளை உப்பின் உழாஅ உழவர்
ஒழுகை உமணர் வருபதம் நோக்கிக்,
கானல் இட்ட காவற் குப்பை
புலவு மீன் உணங்கல் படுபுள் ஓப்பி,
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி, 5
‘எந்தை திமில் இது, நுந்தை திமில்’ என
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர்
திண் திமில் எண்ணும் தண் கடற் சேர்ப்ப!
இனிதே தெய்ய, எம் முனிவு இல் நல்லூர்;
இனி வரின் தவறும் இல்லை; எனையதூஉம் 10
பிறர் பிறர் அறிதல் யாவது
தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே.

Natrinai 331,

Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero

Oh lord of the seashore where
those who produce salt await the
arrival of salt merchants who come
in their wagons, delicate young
girls who play with their friends
chase birds that come come to seize
their drying fish and climb on the
protected salt piles and say,
“This is my father’s boat,”This is your
father’s boat,”
as they count the sturdy boats of their
relatives who went fishing in the ocean.
Our good town is without hatred.
If you come to our street, there will not
be any problem.
People don’t know each other, and even
relatives don’t know each other!

Notes:

தோழி இரவுக்குறிக்கு உடன்பட்டது. உழாஅ உழவர் (1) – ஒளவை துரைசாமி உரை – பொருள் விளைவிக்கும் தொழிலுக்கெல்லாம் உழவு பொதுவாகலின், உப்பு விளைவிப்போரையும் உழவர் என்பர். ஆயினும் ஏரால் நிலத்தை உழுவோரின் வேறுபடுத்தற்கு ‘உழாஅ உழவர்’ என்றார். சேரி (12) – ஒளவை துரைசாமி உரை – ஊரைச் சேர இருக்கும் குடியிருப்புச் சேரி எனப்படும். குறுந்தொகை 231 – உ. வே. சாமிநாதையர் உரை – தெரு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தெரு.

Meanings:

உவர் – salt water, விளை – growing, உப்பின் – the salt, உழாஅ உழவர் – got without plowing by those who work in the salt pans (உழாஅ – இசைநிறை அளபெடை), ஒழுகை – carts, உமணர் – salt merchants, வருபதம் நோக்கி – watching when they come, கானல் – seashore grove, இட்ட – placed, காவல் – protected , குப்பை – heap, புலவு மீன் – smelling fish, உணங்கல் – drying, படுபுள் – birds that come to seize, ஓப்பி – chasing, மட நோக்கு – delicate look, ஆயமொடு – with friends, உடன் – together, ஊர்பு – move, ஏறி – climbing up, எந்தை திமில் இது – this is my father’s boat, நுந்தை திமில் – this is your father’s boat, என – thus, வளை நீர் – water surrounding the earth, the ocean, வேட்டம் – fishing, போகிய கிளைஞர் – the relatives who went, திண் திமில் – sturdy boats, எண்ணும் – counting, தண் – cool, கடற் சேர்ப்ப – oh lord of the seashore (சேர்ப்ப – அண்மை விளி), இனிதே – it is sweet (ஏ – அசை நிலை, an expletive), தெய்ய – அசை நிலை, an expletive, எம் – our, முனிவு இல் – without hatred, நல்லூர் – good town, the people in this good town (ஊர் – ஆகுபெயர் ஊர் மக்களுக்கு), இனி வரின் – if you come now, தவறும் இல்லை – it is not a problem, எனையதூஉம் – even a little bit (இன்னிசை அளபெடை), பிறர் பிறர் அறிதல் யாவது – how will anybody know about one another, தமர் தமர் அறியா – our relatives do not know each other, சேரியும் உடைத்தே – it has streets, it has settlements (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 332,

குன்றூர் கிழார் மகன் கண்ணத்தனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

இகுளைத் தோழி! இஃது என்னெனப் படுமோ,
‘குவளை குறுநர் நீர் வேட்டாங்கு,
நாளும் நாள் உடன் கவவவும் தோளே
தொல் நிலை வழீஇய நின் தொடி’ எனப் பல் மாண்
உரைத்தல் ஆன்றிசின் நீயே, விடர் முகை 5
ஈன் பிணவு ஒடுக்கிய இருங்கேழ் வயப் புலி
இரை நசைஇப் பரிக்கும் மலை முதல் சிறு நெறி,
தலைநாள் அன்ன பேணலன் பல நாள்,
ஆர் இருள் வருதல் காண்பேற்கு,
யாங்காகும்மே, இலங்கு இழை செறிப்பே? 10

Natrinai 332,

Kundrūr Kilār Makan Kannathanār, Kurinji Thinai – What the heroine said to her friend

My beloved friend! You have asked me
many times, “Like the people plucking
blue waterlily flowers pining for drinking
water, why do your arms suffer in pain,
causing your bangles to slip, even though
you embrace him every day?”
He comes in the pitch darkness of nights
through the small mountain path, where
a dark-colored male tiger hides in waiting
in the crevice of a cave, to kill and take food
to his hungry female who has just given birth.
He comes on many days like he came on
the first day of our union, not caring about his
own safety. How can my bright jewels stay
tight after seeing him face such danger?
Notes:

பிரிவிடை மெலிந்த தலைவியைத் தோழி களவுக் காலத்து வற்புறுத்த, தலைவி கூறியது. இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பெண்புலியின் பசியைப் போக்க வேண்டி இரை தேடியவாறு ஆண்புலி பதுங்கியிருக்கும் என்றது, இத்தகைய வழியில் வந்து புலியின் இயல்பினை அறிந்தபோதும் தலைவியின் துயர் நீங்குமாறு மணம் முடிக்க கருதிலன் எனக் குறித்தது. இகுளை (1) – ஒளவை துரைசாமி உரை – தோழி என்னும் பொருள்பட வழங்கும் பெயர்த் திரிசொல், இகுளைத் தோழி (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இருபெயரொட்டு. தலைநாள் அன்ன பேணலன் (8) – ச. வே. சுப்பிரமணியன் – இயற்கை இணைவுக் காலம் போன்ற அன்பினைக் கொள்ளாது வருகின்றான், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இயற்கைப் புணர்ச்சிக் காலத்து இருந்தாற்போல் விருப்ப மிகுதியுடையவனாய் வருகின்றான், ஒளவை துரைசாமி உரை – தன் உயிரையையும் பொருளெனக் கருதாமல் இரவுக் குறி வரைந்த அத் தலை நாளில் வந்தாற்போல். யாங்காகும்மே (10) – ஒளவை துரைசாமி உரை – ஏகாரம் எதிர்மறைப் பொருட்டு. Natrinai 29, 148, 332, 383 and Akanānūru 112, 147 and 238 have descriptions of male tigers desiring to kill, to feed their mate that has recently given birth. Akanānūru 3 has a description of a male vulture, Akanānūru 21 of a male wild dog and Akanānūru 85 of a male elephant desiring to feed their mates who have given birth recently. சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

Meanings:

இகுளைத் தோழி – oh my close friend (இருபெயரொட்டு), இஃது என் எனப்படுமோ – how will this be considered, குவளை குறுநர் நீர் வேட்டாங்கு – like the blue waterlily pluckers who desire water, நாளும் நாள் உடன் கவவவும் – even though you embrace him every day, தோளே – your arms, தொல் நிலை வழீஇய நின் தொடி என – your bangles slip down from their original position (வழீஇய – சொல்லிசை அளபெடை), பல் மாண் உரைத்தல் ஆன்றிசின் நீயே – you said it in many nice words (சின் – முன்னிலை அசை, an expletive of the second person), விடர் – crevices, முகை – caves, ஈன் பிணவு – female that has given birth, ஒடுக்கிய – is hiding, இருங்கேழ் வயப் புலி – dark colored strong tiger, இரை நசைஇ – desiring food (நசைஇ – சொல்லிசை அளபெடை), பரிக்கும் – it is stalking, it is waiting, மலை முதல் சிறு நெறி – small path on the mountain, narrow path on the mountain, தலைநாள் அன்ன – like on the first day, பேணலன் – he does not care about his own safety, he comes with desire, பல நாள் ஆர் இருள் வருதல் – coming many days in pitch darkness, காண்பேற்கு – to me who sees that, யாங்கு ஆகும்மே இலங்கு இழை செறிப்பே – how can my bright jewels be tight (ஆகும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது, செறிப்பே – அசை நிலை, an expletive)

நற்றிணை 333,

கள்ளிக்குடிப் பூதம் புல்லனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது

மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்தென,
கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப்
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின்,
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும்
சுரன் இறந்து அரிய, உரன் அழிந்து 5
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து
திருந்திழைப் பணைத்தோள் பெறுநர் போலும்;
நீங்குக மாதோ நின் அவலம், ஓங்கு மிசை,
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர்ப் பொருந்தி 10
நயவரு குரல பல்லி
நள்ளென் யாமத்து உள்ளுதொறும் படுமே.

Natrinai 333,

Kallikudi Pootham Pullanār, Pālai Thinai – What the heroine’s friend said to her

With his heart filled with charity,
to earn precious wealth,
without thinking about the harshness,
your lover went on the wasteland path
which ruins strength,
where a tiger fights with an elephant
with a bright forehead and then drinks
water from a tiny spring near the
pebble-filled path,
clouds have risen up to the vast sky not
performing their raining duties, and
bamboos have dried and lost their beauty.
May your sorrow end! It appears that
he will come and embrace bamboo-like arms
adorned with ornaments.
The lizard on the bright walls of our tall, fine
house of great fame, clucks, spelling good omen in
the middle of the night, whenever we think of him.
Notes:

பொருள்வயின் பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது. பூ நுதல் (4) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பொலிவுபெற்ற நெற்றி, ஒளவை துரைசாமி உரை – மெல்லிய நெற்றி. இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பள்ளத்து நீரை யானையுடன் புலி போர்செய்து உண்ணும் என்றது, அயல்நாட்டினரைப் போரில் வென்று தலைவன் பொருளீட்டி வருவான் என்பதைக் குறிப்பித்தது. There are references to lizard omens in Akanānūru 9, 88, 151, 289, 351, 387, Kurunthokai 16, Natrinai 98, 169, 246, 333 and Kalithokai 11. Natrinai 161 has a reference to bird omen. Natrinai 40 and Mullaippāttu 11 have references to women waiting for good omen.

Meanings:

மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்தென – since the clouds left their job and reached the dark/wide skies, கழை கவின் அழிந்த – bamboos have lost their beauty, கல் அதர் – wasteland path with stones, சிறு நெறி – small path, narrow path, பரல் – pebbles, அவல் – holes, pits, ஊறல் – where water oozes, springs, சிறு நீர் – small springs, மருங்கின் – nearby, பூ நுதல் யானையொடு புலி பொருது – tiger fights with the elephant with a delicate/bright/beautiful forehead, உண்ணும் – drinks, சுரன் இறந்து – passed the wasteland (சுரன் – சுரம் என்பதன் போலி), அரிய என்னார் – not thinking that it is difficult, உரன் அழிந்து – ruining strength, உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி – with a full heart desirous of being charitable, அரும் பொருட்கு அகன்ற காதலர் – your lover who went for precious wealth, முயக்கு எதிர்ந்து திருந்திழைப் பணைத்தோள் பெறுநர் போலும் – it appears that he will come and embrace your bamboo-like arms with perfect jewels, நீங்குக – may it end, மாதோ – மாது, ஓ – அசை நிலைகள், expletives, நின் அவலம் – your sorrow, ஓங்கு மிசை – on a tall place, உயர் புகழ் – high fame, நல் இல் – fine house, ஒண் சுவர்ப் பொருந்தி – staying on the bright walls, நயவரு குரல பல்லி – lizard that clucks in a pleasing manner, lizard with clucks that spell good omen, நள்ளென் யாமத்து – in the pitch darkness of night, உள்ளுதொறும் படுமே – it calls whenever we think of him (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 334,

ஐயூர் முடவனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது

கரு விரல் மந்திச் செம் முகப் பெருங்கிளை
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,
ஓங்கு கழை ஊசல் தூங்கி வேங்கை
வெற்பு அணி நறு வீ கல் சுனை உறைப்பக்,
கலையொடு திளைக்கும் வரையக நாடன், 5
மாரி நின்ற ஆர் இருள் நடுநாள்
அருவி அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி,
மின்னு வசி விளக்கத்து வருமெனின்,
என்னோ தோழி நம் இன் உயிர் நிலையே?

Natrinai 334,

Aiyūr Mudavanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her

If he comes in the pitch darkness of night
through the mountain slopes in the light
of sky-spltting lightning flashes, carrying
his single spear, the lord of the mountains,
……….where a female monkey with black
……….fingers, member of a big troop of
……….red-faced monkeys, plays in the
……….wateralls and swings on tall bamboo
……….and enjoys with her male on vēngai
……….trees which drop their pretty,
……….fragrant flowers into the springs below
……….with rocks,
what will happen to our sweet lives, oh friend?

Notes: களவுக் காலத்தில் தலைவன் இரவுக்குறி வேண்டித் தோழியை இரந்தான். அதற்கு இசைந்த தோழித் தலைவியிடம் கூறியது.

உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மந்தி அருவியாடியும் ஊசலில் தொங்கியாடியும் நறுமலர் சுனையில் உதிருமாறு ஆண் குரங்குடன் புணரும் என்றது, தலைவியும் பகலிலே அருவியாடியும் ஊசலாடியும் மகிழ்ந்து இரவுக்குறியிலே காமவேட்கை தனியுமாறு தலைவனுடன் கூடுதல் இயலும் என்பது உணர்த்தும் உள்ளுறையாம். மின்னல் பிளத்தல்: மின்னு வசிபு – அகநானூறு 162, 212, 322, நற்றிணை 228, 261, மலைபடுகடாம் 97, மின்னு வசி – நற்றிணை 334.

Meanings:

கரு விரல் மந்தி – a female monkey with black fingers, செம் முக – red faced, பெருங்கிளை – large troop, பெரு வரை அடுக்கத்து – on the slopes of the tall mountains, அருவி ஆடி – played in the waterfalls, ஓங்கு கழை ஊசல் தூங்கி – swayed on the tall bamboo, வேங்கை – kino trees, Pterocarpus marsupium, வெற்பு – mountain, அணி நறு வீ – beautiful fragrant flowers, கல் சுனை உறைப்ப – falling into the spring with rocks, கலையொடு திளைக்கும் – enjoys with her male, வரை அக நாடன் – man from such mountains, மாரி நின்ற – rain arriving, ஆர் இருள் நடுநாள் – pitch dark midnight, அருவி அடுக்கத்து – on the mountain slopes with waterfalls, ஒரு வேல் ஏந்தி – carrying a spear, மின்னு வசி விளக்கத்து வருமெனின் – if he comes in the darkness-splitting brightness of lightning, என்னோ தோழி – what will happen my friend, நம் இன் உயிர் நிலையே – to the state of our sweet lives (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 335,

வெள்ளிவீதியார், நெய்தற் திணை – தலைவி சொன்னது

திங்களும் திகழ் வான் ஏர்தரும், இமிழ் நீர்ப்
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே,
ஒலி சிறந்து ஓதமும் பெயரும், மலி புனல்
பல் பூங்கானல் முள் இலைத் தாழை
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ, 5
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு,
மை இரும் பனை மிசைப் பைதல உயவும்
அன்றிலும் என்புற நரலும், அன்றி
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்
யாமம் உய்யாமை நின்றது, 10
காமம் பெரிதே, களைஞரோ இலரே.

Natrinai 335,

Velliveethiyār, Neythal Thinai – What the heroine said

The bright moon rises to the sky,
and the swelling ocean’s waves
hit the shores relentlessly and loudly.
In the groves with many flowers, the
thālai trees bearing leaves with thorny
edges open their tight buds that
resemble vessels pouring out rice, the
wind spreading their undying fragrance.
The ibis on top of a big, dark palmyra
tree cries in pain and distress without
a pause and it touches me to my bones.
A fine lute is stroked all night with no break.
I do not wish to survive! The music is sad!
My desire is great, but my lover is not here!
Notes:

தலைவன் மீது காதல் வேட்கை மிகுந்ததால் துன்புற்ற தலைவி கூறியது.

ஒளவை துரைசாமி உரை – வார்தல், உறழ்தல், வடித்தல், உந்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்பன எட்டு வகைப்படும் இசைக் காரணம் என்பர். என்புற (8) – ஒளவை துரைசாமி உரை – என்பு (எலும்பு) உருகுமாறு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – என் பக்கத்தில். கவர்வு – கவர்வு விருப்பு ஆகும் (தொல்காப்பியம் களவியல் 66).

Meanings:

திங்களும் திகழ் – the bright moon, the splendid moon, வான் ஏர்தரும் – rises up on the sky, இமிழ் நீர் – flowing water, பொங்கு திரை – overflowing waves, abundant waves, புணரி யும் – ocean also, பாடு ஓவாதே – sounds do not stop (ஏ – அசை நிலை, an expletive), ஒலி சிறந்து – with loud noises, ஓதமும் – the flooding waters, பெயரும் – they move, மலி புனல் – abundant waters, பல் பூங்கானல் – grove with many flowers, முள் இலைத் தாழை – thorny leaved thālai trees, Pandanus odoratissimus, சோறு சொரி குடையின் – like rice pouring bowls (குடையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), கூம்பு முகை அவிழ – opening its closed buds, வளி – wind, பரந்து – spreads, ஊட்டும் – pour, விளிவு இல் நாற்றமொடு – with undying fragrance, மை இரும் பனை – dark big palmyra palm trees, Borassus flabellifer, மிசை – above, பைதல – with sadness, உயவும் – in distress, அன்றிலும் – the ibis, red-naped – Pseudibis papillosa or glossy ibis – Plegadis falcinellus, என்புற – near me or touching the bones, நரலும் அன்றி – without stopping the noise, விரல் கவர்ந்து – surrounded with fingers, stroked (the strings) with fingers, உழந்த – sadness, கவர்வின் – desirable, நல் யாழ் – fine lute, யாமம் உய்யாமை நின்றது – does not stop even at midnight, காமம் பெரிதே – my love is great, my desire is great (ஏ – அசை நிலை, an expletive), களைஞரோ இலரே – the man who can remove it is not here (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 336,

கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது

பிணர்ச் சுவல் பன்றி தோல் முலைப் பிணவொடு
கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்,
கல் அதர் அரும் புழை அல்கி கானவன்
வில்லின் தந்த வெண்கோட்டு ஏற்றைப்,
புனை இருங்கதுப்பின் மனையோள் கெண்டிக் 5
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட!
உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும்
இரவின் அஞ்சாய், அஞ்சுவல், அரவின்
ஈர் அளைப் புற்றம் கார் என முற்றி,
இரை தேர் எண்கு இனம் அகழும் 10
வரை சேர் சிறு நெறி வாராதீமே.

Natrinai 336,

Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero

Oh lord of the lofty mountains, where
a forest dweller’s wife with decorated,
dark hair, cuts and shares with their
community, meat of a white-tusked boar
with a rough nape that her husband
ambushed on a difficult rocky path and
killed with his bow,
when the boar stole a lot of millet grains
growing on thick-stemmed plants,
along with his female with shriveled breasts!
You are not afraid to come at night, when
mighty, enraged bull elephants eye strong tigers.
Please do not come on small paths where bears dig
into wet termite mounds with snakes, appearing
like the rainclouds that surround the mountains!
Notes:

இரவுக்குறி மறுத்து வரைவு கடாயது.

உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – தினையைக் கைம்மிகக் கவர்ந்தமை பற்றித் தன் வில்லாற் கொன்று கானவன் கொணர்ந்த பன்றியை மனையவள் குடிமுறை பகுக்கும் என்றது, நீ இவளை மணந்து கொண்டு செய்யும் மனைவாழ்வில், மிகை செய்த பகைவரை வென்று நீ கொணரும் பெரும்பொருளைச் சுற்றமும் துணையும் பெற்று இன்புறுமாறு இவள் பகுத்து அளித்துண்ணும் பண்பு மேம்படுபவள் என்பது. Natrinai 125, 325, 336 and Akanānūru 8, 72, 81, 88, 112, 149, 247, 257 and 307 have references to bears attacking termite mounds.

Meanings:

பிணர்ச் சுவல் – rough nape, பன்றி – pig, தோல் முலைப் பிணவொடு – with its female with skinny breasts, கணைக் கால் – thick stems, ஏனல் – millet, கைம்மிகக் கவர்தலின் – since it took a lot, கல் அதர் – rocky path, அரும் புழை – difficult passage/pass, அல்கி – stayed, கானவன் – forest dweller, வில்லின் தந்த வெண்கோட்டு ஏற்றை – white tusked male that he got with his bow, புனை இருங்கதுப்பின் – with decorated dark hair, மனையோள் – wife, கெண்டி குடி முறை பகுக்கும் – cuts and shares with the community/village, நெடு மலை நாட – oh lord of the lofty mountains, உரவுச் சின வேழம் – strong enraged elephants, உறு புலி பார்க்கும் – they eye strong tigers, இரவின் அஞ்சாய் – you are not afraid to come at night, அஞ்சுவல் – I am afraid (தன்மையொருமை வினைமுற்று), அரவின் ஈர் அளை – snake’s wet hole, புற்றம் – termite mounds, கார் என முற்றி – surrounding it like rainclouds (that surround the mountains), இரை தேர் எண்கு இனம் – herds of bears searching for food, அகழும் – they dig, வரை சேர் – in the mountains, சிறு நெறி வாராதீமே – do not come on the small path, do not come on the narrow path (வாராதீமே – முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல்)

நற்றிணை 337,

சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது

உலகம் படைத்த காலை தலைவ,
மறந்தனர் கொல்லோ சிறந்திசினோரே,
முதிரா வேனில் எதிரிய அதிரல்
பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர்,
நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய 5
செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்,
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம்பால்
தாழ் நறுங்கதுப்பில் பையென முள்கும்
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது,
பிரிந்து உறை மரபின் பொருள் படைத்தோரே? 10

Natrinai 337,

Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the heroine’s friend said to the hero

Oh lord! Since the creation
of the world, did great men
who acquired wealth forget
the tradition of receiving
the benefits of sinking into
sapphire-colored, five-part
braids that hang low,
fragrant like a flower container
just opened,
with early summer’s athiral
and large pathiri flowers with
tiny, hair-like filaments from
thick-trunked trees, placed together
with fragrant mōrōdam flowers?

Notes:

பொருள்வயின் பிரிய எண்ணிய தலைவனிடம் கூறியது. முதிரா வேனில் எதிரிய அதிரல் (3) – ஒளவை துரைசாமி உரை – இளவேனிற் பருவத்தில் மலரும் அதிரற்பூ, பொ. வே. சோமசுந்தரனார் உரை – முற்றாத இளவேனிற் காலத்தை எதிர்நோக்கிய காட்டு மல்லிகை மலர். ஐம்பால் (7) – ஒளவை துரைசாமி உரை – ஐந்து வகையாக முடித்துப் புனையப்படும் கூந்தல். ஐம்பாலாவான குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை என நச்சினார்க்கினியர் கூறுகின்றார். பையென முள்கும் (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கதுப்பில் முள்குவதாவது கதுப்பில் முகம் புதைத்து அதனை நுகர்ந்து மகிழ்தல். சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

Meanings:

உலகம் படைத்த காலை – at the time when the world was created, தலைவ – oh lord (அண்மை விளி), மறந்தனர் கொல்லோ – did they forget (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை), சிறந்திசினோரே – the great people (இசின் – படர்க்கையின் கண் வரும், an expletive of the third person, ஏ – அசை நிலை, an expletive), முதிரா வேனில் – early summer season, எதிரிய அதிரல் – wild jasmine that blossomed, wild jasmine that awaited, பராரை – thick trunk (பரு அரை பராரை எனப் புணர்ந்தது), பாதிரிக் குறு மயிர் – trumpet flowers with short hair/filaments, மா மலர் – dark/large flowers, நறு மோரோடமொடு – with fragrant red catechu flowers, செங்கருங்காலி, உடன் எறிந்து அடைச்சிய – placed together, செப்பு இடந்தன்ன – like a box/container opened, நாற்றம் – fragrance, தொக்கு உடன் – together, அணி நிறம் கொண்ட – having beautiful color, மணி மருள் – sapphire-like, ஐம்பால் – five-part braids, தாழ் நறுங்கதுப்பில் – into low hanging fragrant hair, with low hanging hair, பையென – slowly, முள்கும் – sinking into, embracing, அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது – not getting the great benefits, பிரிந்து உறை – separating and living, மரபின் – with the tradition, பொருள் படைத்தோரே – those who acquired wealth (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 338,

மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரிசாத்தனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

கடுங்கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே;
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர்
நெடுந்தேர் இன் ஒலி இரவும் தோன்றா;
இறப்ப எவ்வம் நலியும் நின் நிலை;
‘நிறுத்தல் வேண்டும்’ என்றி, நிலைப்ப 5
யாங்ஙனம் விடுமோ மற்றே, மால் கொள
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு,
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய
ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறிக்,
கொடு வாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய, 10
உயிர் செலக் கடைஇப் புணர் துணைப்
பயிர்தல் ஆனா, பைதல் அம் குருகே.

Natrinai 338,

Mathurai Ārulaviyanattu Ālampēri Sāthanār, Neythal Thinai – What the heroine said to her friend

You tell me that I should stop
crying. How can I do that and
live when I am suffering?
The harsh rays of the sun have
hid behind the mountains.
He has not appeared at night in
his tall chariot with sweet sounds,
its wheels cutting adumpu creepers.
This has caused me to suffer.
Also, in the common grounds
of the small, flesh-reeking village,
a male heron goes to eat food in the
vast, dark saline land, his female
with curved beak, who is seated in a
nest on the fronds of a tall, swaying
palmyra tree, calls her beautiful mate
to unite. Sorrow spreads inside me!
It feels like my life is departing!
Notes:

ஆற்றுப்படுத்திய தோழியிடம் சொல்லியது. மறைந்தன்று (1) – ஒளவை துரைசாமி உரை – குற்றுகரவீற்று அஃறிணை முற்றுவினை. நின் நிலை நிறுத்தல் வேண்டும் என்றி (4-5) – ஒளவை துரைசாமி உரை – நினது அழுகையை நிறுத்த வேண்டும் என்று சொல்லுகின்றாய், H.வேங்கடராமன் உரை – நீ படும் துன்பத்தை அயலவர் அறியாதபடி மறைத்து ஒழுக வேண்டும் என்கின்றாய். நிலைப்ப யாங்ஙனம் விடுமோ (6) – ஒளவை துரைசாமி உரை – என் மனம் பொறையுற்று நிற்க யாங்ஙனம் விடும், H.வேங்கடராமன் உரை – என் உயிர் நிலைத்து நிற்ப இந்நோய் எப்படி என்னை விட்டு ஒழியுமோ.

உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – கடற்பரப்பில் இரை மேய்ந்துண்ட குருகு, பனையின் மடலேறிப் பேடை குடம்பை குடம்பை சேர்தற்பொருட்டுப் பயிர்தல் ஆனாதாகவும், கடமை மேற்கொண்டு சென்ற நம் காதலர் அதனை முடித்துக் கொண்டு போந்து நும்மை வரைந்து கோடலை நினையாராயினர் என்றுதுனியுறு கிளவியால் உள்ளுறுத்துரைத்தவாறு அறிக.

Meanings: கடுங்கதிர் ஞாயிறு – harsh rays of the sun, மலை மறைந்தன்றே – it hid behind the mountains (ஏ – அசை நிலை, an expletive), அடும்பு கொடி துமிய – chopping adumpu creepers, Ipomoea pes caprae, ஆழி – wheels, போழ்ந்து – splitting, அவர் நெடுந்தேர் – his tall chariot, இன் ஒலி – sweet sounds, இரவும் தோன்றா – it did not appear at night, இறப்ப எவ்வம் நலியும் – it causes affliction, நின் நிலை நிறுத்தல் வேண்டும் என்றி – you tell me that I should hide my sorrow and stop worrying, you tell me that I should hide my suffering from others (என்றி – முன்னிலை ஒருமை), நிலைப்ப – for mind to be stable, for my life to last, யாங்ஙனம் விடுமோ – how will this affliction leave, how will this affliction allow me to live (ஓ – அசைநிலை), மற்றே – மற்று, ஏ – அசைநிலைகள், மால் கொள – causing confusion, வியல் இரும் பரப்பின் – in the wide huge spread land, இரை எழுந்து அருந்துபு – gets up to eat, புலவு நாறு சிறுகுடி – small village with flesh stink, மன்றத்து – in the common grounds, in the public grounds, ஓங்கிய – tall, ஆடு – swaying, அரைப் பெண்ணை – palmyra tree with trunk, Borassus flabellifer, தோடு மடல் ஏறி – sitting on the fronds, கொடு வாய்ப் பேடை – a female with curved beak, குடம்பைச் சேரிய – to come to the nest, உயிர் செலக் கடைஇ – my life is departing (கடைஇ – சொல்லிசை அளபெடை), புணர் துணைப் பயிர்தல் – calling its mate to unite, ஆனா பைதல் – with great sorrow, அம் குருகே – beautiful heron/egret/stork (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 339,

சீத்தலைச் சாத்தனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி

தோலாக் காதலர் துறந்து நம் அருளார்
அலர்வது அன்று கொல் இது என்று, நன்றும்
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி,
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்
அறிந்தனள் போலும் அன்னை, சிறந்த 5
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி,
‘நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல்
ஒண்ணுதல் பெதும்பை நல் நலம் பெறீஇ,
மின் நேர் ஓதி இவளொடு நாளைப்
பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித் 10
தெண் நீர் மணிச் சுனை ஆடின்,
என்னோ மகளிர் தம் பண்பு’ என்றோளே.

Natrinai 339,

Seethalai Sāthanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the heroine, as the hero listened nearby

Your mother came to our rich, splendid,
huge house, embraced me and asked why
your garland is ruined and why you have
lost your brightness. I told her that you
played with me in the pond and that is the
reason. Misunderstanding me, she said,
“Is this what happens to young women
who play with my daughter with a bright
forehead and lightning-like hair, in the
sapphire-hued springs surrounded by
plants with fragrant flowers?
It appears like she is aware that we are
both swimming in distress since your lover
who does not fail in battles in enemy lands,
has left us not showering his graces, and we
worry that gossip that might rise.
Notes:

வரைவு கடாயது. புலரா (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வாட்டமுற்ற, ஒளவை துரைசாமி உரை – அன்பு புலராத. மின் நேர் ஓதி (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கூந்தலையுடைய மின்னலைப் போன்ற இவள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கூந்தலையுடைய மின்னலைப் போன்ற இவள். அகநானூறு 234 உரைகளில் – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மின்னலை ஒத்த கூந்தல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மின்னல் போன்று மெலிந்த எம் காதலியின் கூந்தல். மின் நேர் மருங்குல் (அகநானூறு 126) என வருமிடத்து மின்னலை ஒத்த இடை என இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரையிலும், மின்னல் போன்ற இடை என பொ. வே. சோமசுந்தரனார் உரையிலும் காணப்படுகின்றது.

Meanings:

தோலாக் காதலர் – lover who does not fail, துறந்து – abandoning, நம் அருளார் – not gracious to us, அலர்வது அன்று கொல் இது – won’t gossip arise here (கொல் – ஐயம் என்ற பொருளில் வந்த இடைச்சொல், a particle which implies doubt), என்று நன்றும் – fine, புலரா ஞ்சமொடு – with a sad heart, புதுவ கூறி – she spoke new words, இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் – flood of sorrow that we both swim in, அறிந்தனள் போலும் அன்னை – it appears that mother knew about it, சிறந்த சீர் கெழு வியல் நகர் – splendid fine rich huge house, வருவனள் முயங்கி – she came and embraced, நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல் – garlands with wet petals ruined by water (கலைஇய – சொல்லிசை அளபெடை), ஒண்ணுதல் – bright forehead, பெதும்பை – young woman, நல் நலம் பெறீஇ – obtained fine beauty (பெறீஇ – சொல்லிசை அளபெடை), மின் நேர் ஓதி – lightning-like hair, இவளொடு – with her, நாளை – following day, பல் மலர் – many flowers, கஞலிய – flourishing, வெறி கமழ் வேலி – fragrance-filled fences, தெண் நீர் – clear water, மணி – sapphire colored, சுனை ஆடின் என்னோ மகளிர் தம் பண்பு என்றோளே – ‘is this the nature of women who play in the springs’ she said (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 340,

நக்கீரர், மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது

புல்லேன் மகிழ்ந, புலத்தலும் இல்லேன்,
கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன்
படை மாண் பெருங்குள மடை நீர் விட்டெனக்,
கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை
அள்ளல் அம் கழனி உள் வாய் ஓடிப், 5
பகடு சேறு உதைத்த புள்ளி வெண்புறத்துச்
செஞ்சால் உழவர் கோல் புடை மதரிப்,
பைங்கால் செறுவின் அணை முதல் பிறழும்
வாணன் சிறுகுடி அன்ன என்
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே. 10

Natrinai 340,

Nakkeerar, Marutham Thinai – What the heroine said to the hero

Lord, I will not embrace you nor will
I hate you.
You have caused these to become
loose,
my rounded, perfect, bright bangles,
beautiful like Sirukudi village of Vānan,
where king Cheliyan owning fast chariots
and elephants built a fine, huge reservoir,
and when the sluice gates are open,
thick-finned vālai fish escape, swim against
the water in the canals, and reach the fields
where mud is splattered on their
white skin by plowing buffaloes, and they
roll arrogantly in the muddy water when the
farmers with furrows beat them with sticks.

Notes:
பரத்தையிடம் சென்று மீண்டு வந்த தலைவனிடம் தலைவி நொந்து சொல்லியது. வாயில் மறுத்தது.

ஒளவை துரைசாமி உரை – ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என்ற நூற்பா உரையில் இப்பாட்டைக் காட்டி, ‘இஃது ஆற்றாமை வாயிலாகச் சென்றாற்குக் கூறியது’ என்பர் இளம்பூரணர்; நச்சினார்க்கினியரும் இதுவே கூறுவர்.

உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – குளத்தை உடைத்து சென்ற நீருடன் கால்வாய் வழியே சென்ற வாளை வயலுக்கு ஓடி சேறு புறத்தே சிதற, உழவர்க்கும் அஞ்சாது வரம்பு அடியிலே சென்று தங்கும் என்றதால், மனையகத்தினின்று புறப்பட்ட தலைவன் பாணன் சென்ற வழியே சென்று பரத்தை ஒருத்தியிடம் புகுந்து, ஏனையோர் கூறிய பழி மொழியையும் கேட்டுக் கொண்டு அங்குத் தங்கினான் என்பதும், பரத்தையர் பலரும் விரும்பி அழைக்க அவரிடம் செல்லாது ஒருத்தி இல்லத்தே கிடந்து துயின்று வந்தனன் என்பதும் உள்ளுறுத்தி நின்றது. வரலாறு: செழியன், வாணன், சிறுகுடி. கல்லா யானை (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பாகன் கூறு மொழிக் குறிப்பன்றிப் பிறவற்றைக் கற்றறியாத யானை. படை மாண் பெருங்குளம் (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் – செழியன் பெயராலே செய்த மாட்சிமைப்பட்ட பெரிய குளம், புலியூர் கேசிகன் உரை – செழியனின் படையினைப் போலப் பரப்பினாலே மாட்சி பெற்ற பெருங்குளம், செழியன் படைத்த மாண்போடு கூடிய பெருங்குளம். கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை (4) – ஒளவை துரைசாமி உரை – கால்வழியாகச் சென்று நீரை எதிர்த்துப் போதரும், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – குளத்தினின்றும் புறம் போந்து கால்வாயை அடைந்து சென்று திரும்பிய. The word Sirukudi is the name of a particular village indicated with the name of a leader in 6 poems – Akanānūru 54-14 (பண்ணன்), Akanānūru 117-18 (வாணன்), Akanānūru 204-12 (வாணன்), Akanānūru 269-22 (வாணன்), Natrinai 340-9 (வாணன்), Natrinai 367-6 (அருமன்). Elsewhere, it means a small village or a small community.

Meanings:

புல்லேன் மகிழ்ந – Lord! I will not embrace you, புலத்தலும் இல்லேன் – also I will not hate you, கல்லா யானை – elephants that are trained with limited skills, கடுந்தேர்ச் செழியன் – king Cheliyan with fast chariots, Pāndiyan king, படை மாண் – dug up with esteem, பெருங்குள மடை நீர் விட்டென – since the water was let out through sluices from a big tank, கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை – scabbard fish with thick fins that swim against the water in the canals, Trichiurus haumela, அள்ளல் அம் கழனி உள் வாய் ஓடி – they swim through the mouth of the beautiful field with mud, பகடு சேறு உதைத்த – buffalo kicked mud, புள்ளி – spots, வெண்புறத்து – on the white backs, செஞ்சால் – fine furrows, red furrows, உழவர் கோல் – farmers’ sticks, புடை – strike, மதரி – becoming arrogant, பைங்கால் – fresh canal, செறுவின் அணை முதல் பிறழும் – they roll in the muddy water at the base of the boundary, they leap in the collected water at the base of the boundary, வாணன் சிறுகுடி அன்ன – like Sirukudi village of Vānan, என் கோள் நேர் எல் வளை – my rounded fine bright bangles, நெகிழ்த்த நும்மே – you caused them to become loose (ஏ – அசை நிலை, an expletive)

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.