Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

நற்றிணை 341-350

நற்றிணை 341,

மதுரை மருதன் இளநாகனார், குறிஞ்சித் திணை – தலைவன் காதலர் இருவரைக் கண்ட வேளையில் சொன்னது
வங்க வரிப் பாறைச் சிறு பாடு முணையின்,
செம்பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
விளையாடு இன்னகை அழுங்கா பால் மடுத்து,
அலையா உலவை ஓச்சி சில கிளையாக்
குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும், 5
துணை நன்கு உடையள் மடந்தை; யாமே
வெம்பகை அரு முனைத் தண் பெயல் பொழிந்தென,
நீர் இரங்கு அரை நாள் மயங்கி கூதிரொடு
வேறு புல வாடை அலைப்ப,
துணை இலேம், தமியேம், பாசறையேமே. 10

Natrinai 341,

Mathurai Maruthan Ilanākanār, Kurinji Thinai – What the hero said when he saw a young couple

The young woman is with a mountain
dweller, drinking liquor in a bowl with
with red dots, after hating to play on the
boulders with silvery lines. They play,
laugh and talk, swaying sticks.
She is in the company of her lover.
I on the other hand am alone in the harsh
battlefield with rage, where loud, cold
rains fall in the confusing, chilly night time,
and the northern wind blows and causes
me distress.
Notes: வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைவன் சொல்லியது. செம்பொறி – சிவந்த வரிகள், சிவந்த புள்ளியுமாம்.

பொ. வே. சோமசுந்தரனார் உரை – இச்செய்யுள் தெளிவின்றிக் கிடக்கின்றது. இதன் உரையும் பொருந்திய உரையாகக் காணப்படவில்லை. இதன்கண் மடந்தை என்றது பிறள் ஒருத்தியை என்று கோடல் சிறப்பாகத் தோன்றவில்லை. ஒருவாறு மடந்தை (தலைவி) யேனும் இல்லத்தின்கண் குன்றகக் குறவனோடு நொடி பயிற்றும் துணையுடையவள், அதாவது நம் குன்றிற்கு உரிமையுடையோனாகிய நம் புதல்வனோடு நொடி பயிற்றும் துணை ஒன்றனையுடையவள் என்றவாறு என்க. இச் செய்யுளின் உண்மையான பாடம் கிடைக்கவில்லை என்றே கொள்ளல் வேண்டும். முணைவு – முனைவு (முணைவு) முனிவு ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 88). அலையா – அலைத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. கிளையா – கிளைத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

Meanings:

வங்க வரி – silvery lines, white lines, பாறை – rocks, சிறு பாடு – little difficulty, முணையின் – due to hating it, செம் பொறி – red lines, red dots, அரக்கின் – made of wax, வட்டு – bowl, நா – tongue, வடிக்கும் – pouring, விளையாடு – playing, இன் நகை – sweet laughter, அழுங்கா – not removed, பால் மடுத்து – drinking milk, drinking liquor, அலையா – swirling, not causing sorrow (அலையா – அலைத்து), உலவை ஓச்சி – lifts and plays with some twigs, சில கிளையா – utters few words (கிளையா – கிளைத்து, சொற்களைக் கூறி), குன்றக் குறவனொடு – with a mountain dweller, குறு நொடி பயிற்றும் – they do small talk, they do light talk, துணை நன்கு உடையள் – she is in good company, மடந்தை – the young woman, யாமே – me (தன்மைப் பன்மை, first person plural, ஏ – அசை நிலை, an expletive), வெம்பகை – extreme enmity, அரு முனை – difficult battlefield, தண் பெயல் பொழிந்தென – since cool rains fell, நீர் இரங்கு – rain sounds, அரை நாள் – midnight, மயங்கி – confused, கூதிரொடு – with chillness, வேறு புல வாடை அலைப்ப – as the northern wind of another country blows and causes pain, துணை இலேம் – I am without my partner (தன்மைப் பன்மை, first person plural), தமியேம் – I am alone – (தன்மைப் பன்மை, first person plural) பாசறையேமே – I am in the battle camp (தன்மைப் பன்மை, first person plural, ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 342,

மோசிகீரனார், நெய்தற் திணை – தோழி சொன்னது

‘மா என மதித்து மடல் ஊர்ந்து, ஆங்கு
மதில் என மதித்து வெண்தேர் ஏறி,
என் வாய் நின் மொழி மாட்டேன் நின் வயின்
சேரி சேரா வருவோர்க்கு, என்றும்
அருளல் வேண்டும் அன்பு உடையோய்!’ என, 5
கண் இனிதாகக் கோட்டியும் தேரலள்;
யானே, எல் வளை, யாத்த கானல்
வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த
சென்னிச் சேவடி சேர்த்தின்,
என்னெனப்படுமோ என்றலும் உண்டே. 10

Natrinai 342,

Mosikeeranār, Neythal Thinai – What the heroine’s friend said

I said to my friend, “He is riding a palm
stem horse thinking of it as a real horse.
He is coming past a mirage respecting it
as a wall. I told him to tell you what he
wants and that I will not be able to do it.
Shower your graces on this man who is
coming to our street desiring you”.
Even though I asked her tenderly with
sweet looks, slanting my head, my friend
wearing bright bangles did not understand
the situation.
I wonder what will happen if I fall at her
red feet at the seashore grove surrounded
by fences, where swarming honey bees drop
fragrant flowers that create delicate patterns
on the ground. It is possible that she might
ask me about him!

Notes:

தலைவனுக்கு குறை நேர்ந்த தோழி, ஆற்றாளாய்த் தனக்குள்ளே சொல்லியது. என் வாய் நின் மொழி மாட்டேன் (3) – ஒளவை துரைசாமி உரை – என் வாயால் நீ கூறற்குரியவற்றை கூற வல்லேனல்லேன். சேரா – சேர என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். ‘Madal Ēruthal’ is the act of the hero climbing a palmyra frond or stem horse and having it dragged through town. He does this when the heroine does not respond to his love. He wears erukkam flower garlands or bone necklaces and subjects himself to street laughter. This is his last-ditch effort to get the heroine. Poems 146, 152, 220, 342 and 377 are about Madal Ēruthal.

Meanings:

மா என மதித்து – considering it as a horse, மடல் ஊர்ந்து – riding the palm frond/stem horse, ஆங்கு – there, மதில் என மதித்து – respecting the boundaries, considering the walls, வெண்தேர் – a mirage, ஏறி – rising, என் வாய் – my mouth, நின் மொழி – your words, மாட்டேன் – I will not, நின் வயின் – to you, for you, சேரி – street, settlement, community, சேரா வருவோர்க்கு – to the man who is coming here desiring union with you, என்றும் – always, அருளல் வேண்டும் – you should shower your graces, அன்பு உடையோய் – oh one with kindness, என – thus, கண் – eyes, இனிதாக – sweetly, கோட்டியும் – even after slanting my head, தேரலள் – she did not understand, யானே – me, எல் வளை – one wearing bright bangles (அன்மொழித்தொகை), யாத்த – bound by fences, surrounded by fences, கானல் – seashore grove, வண்டு – honey bees, உண் – drink, நறு வீ – fragrant flowers, நுண்ணிதின் – delicately, finely, வரித்த – created patterns, decorated, சென்னி – head, சேவடி – perfect feet, red feet, சேர்த்தின் – if I place on them, if I fall at them, என் எனப்படுமோ – how is it considered (ஓ – ஐயம், doubt), என்றலும் உண்டே – it is possible (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 343,

கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறி
அடையாது இருந்த அம் குடிச் சீறூர்த்
தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும்
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து,
உகு பலி அருந்திய தொகு விரல் காக்கை 5
புன்கண் அந்திக் கிளை வயின் செறியப்,
படையொடு வந்த பையுள் மாலை
இல்லை கொல், வாழி தோழி, நம் துறந்து
அரும் பொருட் கூட்டம் வேண்டிப்
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே? 10

Natrinai 343,

Karuvūr Kathapillai Sāthanār, Pālai Thinai – What the heroine said to her friend

May you live long, my friend!
Mullai vines have spread on the
stony wasteland path that does
not reach the lovely small village
with cow dung dust on the streets,
aerial roots of a banyan tree where
god resides rubs the backs of nearby
cows, and crows with close toes eat
the food offerings that are left there,
and move away to be with their flocks
at the twilight hour.
Are there no such painful evenings in the
country where he went,
abandoning us to earn precious wealth?
Notes: பிரிவிடை ஆற்றாளாயச் சொல்லியது. இறைச்சி (1) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – ஆலமரத்தின் கீழ் இடும் பலியுணவைத் தின்ற காக்கை தம் இனத்துடன் தங்கும் என்றது, தலைவியின் நலனுண்ட பசலை நெற்றியிலே தங்கியது என்பதனைக் குறித்தது. இறைச்சி (2) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – ஆலமரத்தின் விழுது பசுவின் முதுகை வருடும் என்றது தோழி அருகிருந்து ஆற்றுவதால் தான் உயிர் வாழ்ந்திருப்பதாய் குறிப்பித்தற்காம். குறுந்தொகை 46 – மன்றத்து எருவின் நுண் தாது, நற்றிணை – 271 பைந்தாது எருவின் வைகு, கலித்தொகை 103 – தாது எரு மன்றத்து, கலித்தொகை 108 – தாது உக்கன்ன தாது எரு மன்றத்து, Puranānūru 33 – தாது எரு மறுகின், புறநானூறு 215 – தாது எரு மறுகின், புறநானூறு 311 – தாது எரு மறுகின். Natrinai 258, 281, 293, 343 and 367 have references to food offerings to crows.

Meanings:

முல்லை – jasmine vines, தாய – spread, கல் அதர் – stony path, சிறு நெறி – small path, narrow path, அடையாது இருந்த அம் குடிச் சீறூர் – small town with beautiful settlements where it does not reach, தாது எரு மறுகின் – with streets with cow dung dust, with streets with pollen dust, ஆ புறம் தீண்டும் – cows rub their backs on them, நெடு வீழ் இட்ட – dropped long aerial roots, கடவுள் ஆலத்து – god in the banyan tree, உகு பலி அருந்திய – ate the offerings that were left, தொகு விரல் காக்கை – crows with toes that are close, புன்கண் அந்தி – painful twilight time, கிளை வயின் செறிய – reach the flocks, go to the flocks, படையொடு வந்த – came with weapons, பையுள் மாலை இல்லை கொல் – are there are no painful evenings, வாழி – அசை நிலை, an expletive, may you live long, தோழி – oh friend, நம் துறந்து – abandoning us, அரும் பொருட் கூட்டம் வேண்டி – desiring to collect precious wealth, பிரிந்து – separated, உறை காதலர் சென்ற நாட்டே – the country that he went to live (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 344 ,

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி

அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல்
இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம்
காவல் கண்ணினம் ஆயின், ஆயிழை,
நம் நிலை இடை தெரிந்து உணரான், தன் மலை 5
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம்
சாரல் நீள் இடைச் சால வண்டு ஆர்ப்ப,
செல்வன் செல்லும் கொல் தானே, உயர் வரைப்
பெருங்கல் விடரகம் சிலம்ப இரும்புலி
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்துச் 10
செந்தினை உணங்கல் தொகுக்கும்,
இன் கல் யாணர்த் தம் உறைவின் ஊர்க்கே?

Natrinai 344,

Mathurai Aruvai Vānikan Ilavēttanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby

My friend with pretty jewels!
We are planning to guard the big field
in the beautiful mountains, with its
dark, tender millet, with sapphire-hued
sheaths, bent like trunks of dark, female
elephants.
Not understanding us, will he, the man
with a sandal-smeared, bright, handsome
chest on which bees swarm,
go back to his sweet, prosperous mountain,
where the roars of a tiger that killed an
elephant echo in the caves and crevices
of the soaring mountains, and mountain
dwellers heap their drying millet thinking
that the roars are those of heavy thunder
and that rainfall will arrive soon?
Notes: வரைவு கடாயது.

உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – யானையைப் புலி கொன்று முழங்கிய முழக்கத்தை இடி முழக்கமெனக் கருதிக் காய வைத்த தினையைத் தொகுப்பர் என்றது, தலைவனை வர இயலாதபடி ஊரினர் அலரெடுத்து மொழியவும், வேறுபட்ட தலைவியைக் கண்டா அன்னை கட்டு கழங்கு முதலியவற்றால் வேறுபட உணர்ந்து, தினைப்புனம் காக்கும் தலைவியை இல்வயிற் செறித்து வெறி அயர்வள் என்பதனை உள்ளுறுத்திற்று. ஐது (1) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மென்மை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வியப்புடையது. யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

Meanings:

அணி வரை மருங்கின் – in the beautiful mountains, ஐது வளர்ந்திட்ட – grown delicately, grown in an amazing manner, மணி ஏர் தோட்ட – with sapphire like (colored) sheaths (ஏர் – உவம உருபு, a comparison word), மை ஆர் ஏனல் – dark pretty millet, இரும் பிடித் தடக் கையின் – like the large trunks of black female elephants, தடைஇய – are bent, are thick (தட என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினை, சொல்லிசை அளபெடை), பெரும் புனம் காவல் கண்ணினம் – we are considering to guard the big field, ஆயின் – but, ஆயிழை – oh one with beautiful/chosen ornaments (அன்மொழித்தொகை), நம் நிலை இடை தெரிந்து உணரான் – he does not understand our situation, தன் மலை – his mountain, ஆரம் நீவிய – sandal paste rubbed, அணி – beautiful, கிளர் ஆகம் – bright chest, சாரல் நீள் இடை – through the long mountain paths, சால – greatly, வண்டு ஆர்ப்ப – as bees hum, செல்வன் செல்லும் கொல் – will he leave (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), தான், ஏ – அசை நிலைகள், expletives, உயர் வரைப் பெருங்கல் விடரகம் சிலம்ப – echoing in the lofty mountain caves, இரும்புலி களிறு தொலைத்து – big tigers that kill elephants, உரறும் கடி இடி – roaring heavy thunder, மழை செத்து – thinking that rainfall is arriving, செந்தினை உணங்கல் தொகுக்கும் – collect the fine/red drying millet, இன் கல் – sweet mountain, யாணர் – prosperous , தம் உறைவின் ஊர்க்கே – to the town where he lives (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 345,

நம்பி குட்டுவனார், நெய்தற் திணை – தோழி
தலைவனிடம் சொன்னது

கானல் கண்டல் கழன்று உகு பைங்காய்
நீல் நிற இருங்கழி உட்பட வீழ்ந்தென,
உறு கால் தூக்க தூங்கி ஆம்பல்
சிறுவெண்காக்கை ஆவித்தன்ன
வெளிய விரியும் துறைவ! என்றும் 5
அளிய பெரிய கேண்மை நும் போல்,
சால்பு எதிர் கொண்ட செம்மையோரும்
தேறா நெஞ்சம் கையறுபு வாட,
நீடின்று விரும்பார் ஆயின்,
வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தெளிவே! 10

Natrinai 345,

Nampi Kuttuvanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero

Oh lord of the seashore where strong winds
blow, fresh unripe fruits of thālai trees loosen
and fall into the vast blue backwaters, and
swaying white waterlily flowers open like the
yawning mouths of small white seagulls!
If gracious people like you with deep
friendships do not desire for a long time,
and let fine people like you, who trusted, to
suffer helplessly with confusion in their hearts,
how is it possible for them to live their lives?
May your clarity fade away! Let her suffer!
Notes:

பிரிவிடை ஆற்றாது வருந்திய தலைவியிடம் ‘விரைவில் மணம் புரிவேன்’ என்று தெரிவிக்கக் கருதினான். அப்பொழுது தோழி கடிந்து உரைத்தது.

ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பா உரையில், இப்பாட்டைக் காட்டி ‘இஃது ஆற்றாத தலைவியைக் கடிதின் வரைவேன் எனப்பிரு தலைவன் தெரிவிக்கப் புக்குழித் தோழி தெளிவிடை விலக்கியது’ என்பர் நச்சினார்க்கினியர்.

உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – உறுகால் தூக்கக் கண்டலின் கழன்று உகு காய்கள் கழிநீருள் வீழ்ந்தமையால் ஆம்பல் வெளிய விரியும் என்றது, தலைவன் பிரிவு அலைத்தலால் தலைவி மேனி மெலிந்து வேறுபடுவது கண்டு ஏதிலாட்டியர் வாய் விரிந்து அலர் தூற்றுகின்றனர் என்பது.

பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – துறைவ நும் போல் என்றது தன்மை பன்மை மயக்கம்.

Meanings:

கானல் – seashore grove, கண்டல் – thālai trees, Pandanus odoratissimus, கழன்று உகு பைங்காய் – fresh/green unripe fruits that get loose and fall down, நீல் நிற இருங்கழி உட்பட வீழ்ந்தென – since they fall into the blue colored vast/dark backwaters (நீல் – கடைக்குறை, poetical license which consists in the shortening of a word by elision of one or more letters in the end), உறு கால் தூக்க – as strong wind blows and moves, தூங்கி ஆம்பல் – white waterlilies sway, சிறுவெண்காக்கை ஆவித்தன்ன – like the yawning of small white gulls, Indian black-headed sea gulls, Larus ichthyactus, வெளிய – white, விரியும் – the flowers open, துறைவ – oh lord of the seashore (அண்மை விளி), என்றும் – forever, அளிய – gracious, பெரிய கேண்மை – great friendship, நும் போல் சால்பு – greatness like yours, எதிர் கொண்ட செம்மையோரும் – the fine people who face that, தேறா நெஞ்சம் – heart with no clarity, heart that does not understand, கையறுபு வாட – wilt helplessly, நீடின்று – long time, விரும்பார் ஆயின் – if they do not desire that, வாழ்தல் – living, மற்று எவனோ – how is it possible (ஓ – அசை நிலை, an expletive), தேய்கமா – let it fade away (மா- வியங்கோள் அசைச் சொல், an expletive signifying command), தெளிவே – let your clarity fade away (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 346,

எயினந்தை மகன் இளங்கீரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளித்
தண் கார் தலைஇய நிலம் தணி காலை,
அரசு பகை நுவலும் அரு முனை இயவின்
அழிந்த வேலி அம் குடிச் சீறூர்
ஆள் இல் மன்றத்து, அல்கு வளி ஆட்டத், 5
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை,
இன்று நக்கனை மன் போலா என்றும்
நிறையுறு மதியின் இலங்கும் பொறையன்
பெருந்தண் கொல்லிச் சிறு பசுங்குளவிக்
கடி பதம் கமழும் கூந்தல் 10
மட மா அரிவை தட மென்தோளே.

Natrinai 346,

Eyinanthai Makan Ilankeeranār, Pālai Thinai – What the hero said to his heart

Absorbing water from the eastern
sea and climbing to the west,
rain clouds become dark, and
come down, cooling the land.
Because of our firm effort,
we are here in the town’s
square, abandoned due to war
between kings, with no people,
a ruined, beautiful small town
with fences. The tormenting
winds make it difficult to stay here.
Today you are happy, thinking about
the curved, delicate arms of the dark
young woman with fragrant hair
adorned with fresh jasmine flowers from
Poraiyan’s huge, cool Kolli Mountain
that flourishes like the full moon.
Notes:

பொருள்வயிற் பிரிந்த தலைவன் ஆற்றானாய்த் தன் நெஞ்சிடம் கூறியது. There are references to Kolli Mountain goddess in Natrinai 185, 192, 201, 346 and 362. தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம். உரியியல் 25), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம். உரியியல் 26).

Meanings:

குண கடல் முகந்து – absorbing from the eastern sea, குடக்கு ஏர்பு – climbing to the west, இருளி – becoming dark, தண் கார் தலைஇய நிலம் தணி காலை – when the cool rains fell on the land reducing heat (தலைஇய – சொல்லிசை அளபெடை), அரசு பகை – enmity of kings, நுவலும் – expressing, அரு முனை இயவின் – in the difficult battle field, அழிந்த வேலி அம் குடிச் சீறூர் – ruined beautiful small town with hedge/fences, ஆள் இல் மன்றத்து – in the common grounds without people, அல்கு வளி ஆட்ட – winds blow, தாள் வலி ஆகிய – with strong work effort, வன்கண் இருக்கை – difficult staying place, இன்று நக்கனை மன் போலா – it appears that you are happy today (மன் – அசை நிலை, an expletive), என்றும் – always, நிறையுறு மதியின் இலங்கும் – shining like the full moon (மதியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), flourishing like the perfect moon, பொறையன் பெருந்தண் கொல்லி – huge cool Kolli Mountain of Poraiyan (Chēran), சிறு பசுங்குளவிக் கடி பதம் கமழும் கூந்தல் – hair with the heavy fragrance of small fresh jasmine, Millingtonia hortensis, Wild jasmine, மட மா அரிவை – naive dark young woman (மா – கருமை, மாந்தளிர் மேனி), தட – large, curved, மென்தோளே – delicate arms, delicate shoulders (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 347,

பெருங்குன்றூர் கிழார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

முழங்கு கடல் முகந்த கமஞ்சூல் மா மழை
மாதிர நனந்தலை புதையப் பாஅய்,
ஓங்கு வரை மிளிர ஆட்டி பாம்பு எறிபு,
வான் புகு தலைய குன்றம் முற்றி,
அழி துளி தலைஇய பொழுதில் புலையன் 5
பேழ்வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன,
அருவி இழிதரும் பெரு வரை நாடன்,
‘நீர் அன நிலையன், பேர் அன்பினன்’, எனப்
பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி,
வேனில் தேரையின் அளிய, 10
காண விடுமோ தோழி, என் நலனே?

Natrinai 347,

Perunkundrūr Kilār, Kurinji Thinai – What the heroine said to her friend

My beauty is pitiable oh friend!
It is like toads that bury themselves
under the ground in summer.
Will it survive until I hear words
of praises like, “He’s sweet like water”
and “He’s a very kind man,” that are
said by supplicants who receive gifts
from the lord of the lofty mountains,
where waterfalls come down with roaring
sounds of wide-mouthed thanummai
drums beat by drummers, from rain and
thunder that attack snakes and break
mountains after clouds absorb water from
the loud ocean, grow full and dark, spread,
causing the wide land to be hidden on all
directions, rise to the sky and surround
the sky-touching, soaring mountain peaks?

Notes:

தலைவன் வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாகிய தலைவியைத் தோழி பொறுத்திரு என வற்புறுத்த, தலைவி நொந்து உரைத்தது. இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மலையிடத்து பெய்யும் மழையால் அருவி தண்ணுமை போல முழங்கிப் பெருகும் என்றது, தலைவன் வந்து சென்றவுடன் பறை முழங்கியது போல ஊரெங்கும் அலர் எழுந்தது எனக் குறித்தது.

உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – மாமழை மாதிரம் புதையப் பாஅய் என்றது தலைவன் சான்றோர் சூழ்தர எழுவதாகவும், பாம்பு எறிபு என்றது ஏதிலார் கூறும் அலர் சிதைப்பதாகவும், குன்றம் முற்றித் தலைஇய பொழுதில் என்றது மனையகம் போந்து வரைபொருள் தந்து மணம் பேசுங்காலையும், தண்ணுமை போல முழங்கி அருவி இழிதரும் என்றது தலைவனுடைய தலைமை நலம் பலர் அறிந்து பாராட்ட விளங்குவதாகவும் உள்ளுறை கொள்ளப்படும். வெள்ளிப்படைக் கூற்றில் காண விடுமோ தோழி என் நலனே என்று மறுத்தாள். புலையன் (5) – ஒளவை துரைசாமி உரை – புலைத் தொழில் செய்பவன். There is a convention that thunder ruins and kills snakes. Puranānūru 17, 37, 58, 126, 211, 366, 369, Akanānūru 68, 92, 119, 182, 202, 274, 323, 328, Kalithokai 45, 113, Kurunthokai 158, 190, 268, 391 and Natrinai 37, 51, 114, 129, 238, 255, 264, 347 and 383 have similar descriptions of thunder ruining or killing snakes. கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம். உரியியல் 57). நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).

Meanings:

முழங்கு கடல் முகந்த – took water from the roaring ocean, கமஞ்சூல் மா மழை – full huge clouds, pregnant dark clouds (கம என்னும் உரிச்சொல் நிறைவுப் பொருளில் வந்தது), மாதிர – in all directions, நனந்தலை – wide spaces, புதைய – to be hidden, பாஅய் – they spread, ஓங்கு வரை – lofty mountains, மிளிர ஆட்டி – attacking and causing the peaks to roll down, பாம்பு எறிபு – attacking snakes, வான் புகு தலைய குன்றம் – sky-touching tall mountain peaks, முற்றி – surrounding, அழி துளி தலைஇய – with heavy rain (தலைஇய – சொல்லிசை அளபெடை), பொழுதில் – at that time, புலையன் பேழ்வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன – like the sounds from wide-mouthed thannummai drums hit by drummers, அருவி இழிதரும் – waterfalls flow down, பெரு வரை நாடன் – lord of the lofty mountains, நீர் அன நிலையன் – he has the nature of water (அன – இடைக்குறை, உவம உருபு, a comparison word), பேர் அன்பினன் – he is a very kind man, எனப் பல் மாண் கூறும் பரிசிலர் – those who get gifts utter many such words, நெடுமொழி – words of praise, வேனில் தேரையின் – like the toads in summer that hide under the ground due to the heat (தேரையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), அளிய – pitiable, காண விடுமோ – will it allow me to see, தோழி – friend, என் நலனே – my beauty, my virtue (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 348,

வெள்ளிவீதியார், நெய்தற் திணை – தலைவி சொன்னது

நிலவே நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பிப்,
பால் மலி கடலின் பரந்து பட்டன்றே;
ஊரே ஒலிவரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டிக்,
கலி கெழு மறுகின் விழவு அயரும்மே;
கானே பூ மலர் கஞலிய பொழில் அகம் தோறும் 5
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே;
யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு
கனை இருங்கங்குலும் கண்படை இலெனே;
அதனால் என்னொடு பொருங் கொல் இவ் உலகம்?
உலகமொடு பொருங் கொல், என் அவலம் உறு நெஞ்சே? 10

Natrinai 348,

Velliveethiyār, Neythal Thinai – What the heroine said

The moon spreads its many rays
in the blue sky which appears like
an ocean filled with milk.
People in this town are celebrating
festivals on the streets with uproars.
Bees hum with their loving partners
in forest gardens filled with flowers.
I alone am unable to sleep in this very
dark night. I am full of grief and in deep
sorrow. My lovely jewels fall off my body.
Will the world be fight with me? Will my
distressed heart fight with the world!
Notes:

தலைவிக்கு தலைவன்பால் வேட்கை பெருகிற்று. அது தாங்க இயலாது, அவள் கூறியது. நீல் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீலம் என்பது குறைந்து நின்றது. குறுந்தொகை 6 – நனந்தலை உலகமும் துஞ்சும் ஓர் யான் மன்ற துஞ்சாதேனே. சும்மை, கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

Meanings:

நிலவே – the moon (ஏ – அசை நிலை, an expletive), நீல் நிற விசும்பில் – in the blue sky (நீல் – கடைக்குறை, poetical license which consists in the shortening of a word by elision of one or more letters in the end), பல் கதிர் பரப்பி – spreads its many rays, பால் மலி கடலின் பரந்து பட்டன்றே – it is spread and appears like the ocean filled with milk (கடலின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஏ – அசை நிலை, an expletive), ஊரே – the people in town (ஊர் – ஆகுபெயர், a word which implies a different meaning that is connected to the original meaning, ஏ – அசை நிலை, an expletive), ஒலிவரும் சும்மையொடு – they raise loud noises, மலிபு – abundantly, தொகுபு – together, ஈண்டி – approaching, கலி கெழு – with sounds, மறுகின் – in the streets, விழவு அயரும்மே – the town celebrates festivals (அயரும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது), கானே பூ மலர் – flowers in the forest, கஞலிய – flourishing, பொழில் அகம் தோறும் – in all the groves, தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே – bees hum with their beloved partners (இமிரும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது), யானே – I (பிரிநிலை, exclusion), புனை இழை – fine jewels, ஞெகிழ்த்த – loosened (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), புலம்பு கொள் அவலமொடு – with lonely sorrow, கனை இருங்கங்குலும் – at night when it is very dark, கண்படை இலெனே – I am not able to sleep (ஏ – அசை நிலை, an expletive), அதனால் – so, என்னொடு பொரும் கொல் இவ் உலகம் – will this world fight with me, உலகமொடு பொரும் கொல் – will it be fight with the world, என் அவலம் உறு நெஞ்சே – my heart that is distressed (ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 349,

மிளை கிழார் நல்வேட்டனார், நெய்தற் திணை – தலைவன் தனக்குள் சொன்னது, தோழி கேட்கும்படியாக

கடுந்தேர் ஏறியும், காலில் சென்றும்
கொடுங்கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும்,
கைதை தூக்கியும், நெய்தல் குற்றும்
புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடு
வைகலும் இனையம் ஆகவும், செய் தார்ப் 5
பசும்பூண் வேந்தர் அழிந்த பாசறை
ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத
பெரும் புண் உறுநர்க்குப் பேஎய் போலப்,
பின்னிலை முனியா நம் வயின்,
என் என நினையும் கொல், பரதவர் மகளே? 10

Natrinai 349,

Milai Kilār Nalvettanār, Neythal Thinai – What the hero said to himself, as the heroine’s friend listened nearby

I came riding fast chariots and on
foot, plucked adumpu flowers
near the curved backwaters,
removed thālai blossoms, and
plucked waterlilies to give to her.
With a heart that feels that I have
united with her, I do this every day.
Like a ghoul that comes wearing
well-made garlands and gold
ornaments, to protect the wounded
soldiers in battle camps of ruined
kings, in battles where elephants
are ruined, in battle fields with
bright lances, I came here without
hatred.
What does she think about me,
the fisherman’s daughter?
Notes: தன்னைத் தலைவி எவ்வாறு எண்ணுகிறாளோ என வருந்திச் சொல்லியது.

ஒளவை துரைசாமி உரை – மெய்தொட்டு பயிறல் (தொல்காப்பியம், களவியல் 11) என்ற நூற்பா உரையில் இப்பாட்டைக்காட்டித் ‘தோழி நம்வயிற் பரதவர் மகளை என்னென நினையும் கொல் என்றது’ என்பர் நச்சினார்க்கினியர். பேஎய் – ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோன் பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும் (தொல்காப்பியம். பொருள் 79). அழுவம் (7) – ஒளவை துரைசாமி உரை – பள்ளம்; ஈண்டு கடல் மேற்று. ஆழம் அழுவம் என வந்தது.

Meanings:

கடுந்தேர் ஏறியும் – riding on fast chariots, காலில் சென்றும் – walking, going by foot, கொடுங்கழி – curved backwaters, மருங்கின் – nearby, அடும்பு மலர் கொய்தும் – plucked adumpu flowers, Ipomoea pes caprae, கைதை – thālai trees, Pandanus odoratissimus, தூக்கியும் – lifting (lifting her to pluck), swaying (to pluck), நெய்தல் குற்றும் – plucked waterlilies, புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு – with my heart that felt like I united with her, வைகலும் – daily, இனையம் ஆகவும் – all this, செய் தார் – well-made garlands, பசும்பூண் வேந்தர் – kings with new gold ornaments, அழிந்த – ruined, பாசறை – battle camp, ஒளிறு வேல் அழுவத்து – in the ocean-like battle field with bright lances/spears, களிறு பட – elephants are ruined, பொருத – battling, பெரும் புண் உறுநர்க்கு – to those who have big wounds, பேஎய் போல – like a ghoul (பேஎய் – இன்னிசை அளபெடை), பின்னிலை – standing behind, முனியா – without hatred, நம் வயின் – toward me, என் என நினையும் கொல் பரதவர் மகளே – I wonder what the fisherman’s daughter thinks about me (கொல் – ஐயம் என்ற பொருளில் வந்த இடைச்சொல், a particle which implies doubt, ஏ – அசை நிலை, an expletive)

நற்றிணை 350,

பரணர், மருதத் திணை, தலைவி தலைவனிடம் சொன்னது

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப்
பழனப் பல் புள் இரிய கழனி
வாங்கு சினை மருதத் தூங்கு துணர் உதிரும்
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என்
தொல் கவின் தொலையினும் தொலைக சார 5
விடேஎன் விடுக்குவென் ஆயின் கடைஇக்
கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை
சாடிய சாந்தினை வாடிய கோதையை
ஆகில் கலம் கழீஇ அற்று,
வாரல் வாழிய கவைஇ நின்றோளே. 10
Natrinai 350,

Paranar, Marutham Thinai – What the heroine said to her husband

My beauty that I have kept
for so long, is as splendid
as Iruppai city ruled by
King Virān who gifts chariots,
where flocks of birds in the field,
frightened by thannumai drums
of men harvesting white paddy,
flee to the bent branches of
marutham trees
making them drop their flowers.
If it must be spoiled, I don’t care.
You have a wilted garland and sandal
smeared on your chest from the firm,
round breasts of another woman.
So, you are like a discarded clay pot.
Even if I refuse, your hands embrace
me. Please leave me alone. May the
woman who embraces you flourish!
Notes:

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனிடம் கூறியது. கவவு (7) – கவவு அகத்திடுமே (தொல்காப்பியம், சொல் 357). உள்ளுறை (1) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – உழவரின் தண்ணுமைக்கு அஞ்சிப் பறவைகள் அகன்று மருத மரத்திற் செறியப் பூக்கள் உதிருமென்றது, தலைவியிடத்து அன்பின்றி பழப்பதற்கு அஞ்சித் தலைவன் அவளை நாடி வருவதாகத் தலைவி கருதுவதை உணர்த்திற்று. உள்ளுறை (1) – ஒளவை துரைசாமி உரை – நெல் அரிவோர் எழுப்பும் தண்ணுமை முழக்கத்துக்கு அஞ்சிப் புள்ளினம் இரிதலால் மருதின் துணர் உதிரும் என்றதனால், நின் மார்பின் நலன் நுகரும் பரத்தையின் ஆரவாரம் கேட்டு ஏனை நின் பெண்டிர் அஞ்சி நீங்கினராக, அதனால் பிறந்த அலர் ஊர் எங்கும் பரவி விட்டது. அதனை மறைத்து என்பால் வருதல் என்னை (எதற்காக) என உள்ளுறை கொள்ளப்படும். Akananuru 40 and 204 have references of thannumai drums used in the fields while harvesting. Thannumai drums were beaten during cattle raids. They were also beat by the forest bandits while attacking.
Meanings: வெண்ணெல் அரிநர் – those who harvest white rice paddy, தண்ணுமை வெரீஇ – getting afraid of the drum sounds (வெரீஇ – சொல்லிசை அளபெடை), பழன – in the fields, பல் புள் இரிய கழனி – many birds feeding in the fields, வாங்கு சினை மருத – curved branches of the marutham trees, arjuna tree, தூங்கு துணர் உதிரும் – hanging clusters (flowers) drop, தேர் வண் – donating chariots, விராஅன் – Virān (விராஅன் – இசைநிறை அளபெடை), இருப்பை அன்ன – like Iruppai city, என் தொல் கவின் தொலையினும் – even if I lose my prior beauty, தொலைக – let is get lost, சார – to get near me, விடேஎன் – I will not let, என் விடுக்குவென் ஆயின் – if I allow, கடைஇ – leaping (கடவி, தாவி, செலுத்தி, சொல்லிசை அளபெடை), கவவுக் கை தாங்கும் – you are embracing me with your hands, மதுகைய – they are firm, குவவு – raised, rounded, முலை – breasts, சாடிய சாந்தினை – you are with rubbed sandal paste, வாடிய கோதையை – you are with a wilted garland, ஆகில் – so, கலம் கழீஇ அற்று – like a discarded pot (கழீஇ – சொல்லிசை அளபெடை), வாரல் – do not come (வாரல் – அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று), வாழிய கவைஇ நின்றோளே – may the woman who embraces you live long (கவைஇ – சொல்லிசை அளபெடை, ஏ – அசை நிலை, an expletive)

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.