நற்றிணை 361,
மதுரைப் பேராலவாயர், முல்லைத் திணை – தோழி சொன்னது
சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரி
தானும் சூடினன், இளைஞரும் மலைந்தனர்,
விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலி மாப்,
படுமழை பொழிந்த தண் நறும் புறவில்,
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப, 5
மாலை மான்ற மணன் மலி வியல் நகர்த்
தந்தன நெடுந்தகை தேரே, என்றும்
அரும் படர் அகல நீக்கி
விருந்து அயர் விருப்பினள் திருந்திழையோளே.
Natrinai 361,
Mathurai Perālavāyar, Mullai Thinai – What the heroine’s friend said
He wore small mullai flowers
with great scents. The youngsters
with him also wore them.
When rains fell in the cool forest
in the fragrant, confusing evening,
the noble man came and landed,
bright bells with long clappers ringing
and creating fine music, riding his
chariot drawn by gold-decked horses
as swift as the wind in the sandy yard
of her large house, removing her great
sorrow, as she with perfect jewels
desired to celebrate his arrival.
Notes:
தலைவன் வினை முடிந்து திரும்புகிறான். தலைவியின் துன்பம் நீங்கப்பட்டதைத் தோழி கூறியது. பொலம் படை மா: அகநானூறு 114 – பொலம்படைக் கலி மா, அகநானூறு 124 – பொன் இயல் புனை படைக் கொய் சுவல் புரவி, நற்றிணை 78 – பொலம் படைக் கலி மா, நற்றிணை 361 – பொலம் படைக் கலி மா, புறநானூறு 116 – பொலம் படைக் கலி மா, புறநானூறு 135 – ஒளிறு படைப் புரவிய தேரும், புறநானூறு 359 – பொலம் படைய மா, மலைபடுகடாம் 574 – பொலம் படைப் பொலிந்த கொய் சுவற் புரவி. மான்ற (6) – ஒளவை துரைசாமி உரை – மால் என்பதன் அடியாகப் பிறந்த பெயரெச்சவினை.
Meanings:
சிறு வீ முல்லை – jasmine with small flowers, பெரிது கமழ் அலரி – flowers with great fragrance, தானும் சூடினன் – he wore, இளைஞரும் மலைந்தனர் – the youngsters also wore, விசும்பு கடப்பன்ன – as swift as the passing/moving wind, பொலம் படை – decorated with gold saddles, கலி மா – fast horses, படுமழை பொழிந்த – heavy rains had fallen, தண் நறும் புறவில் – in the cool woodland with fine scents, நெடு நா ஒண் மணி – bright bells with long tongues/clappers, பாடு சிறந்து இசைப்ப – creating fine music, மாலை மான்ற – in the confusing evening time (மான்ற – மால் என்பதன் அடியாகப் பிறந்த பெயரெச்சவினை), மணல் மலி வியல் நகர் – large house filled with sand, தந்தன நெடுந்தகை தேரே – brought the chariot of the esteemed man (ஏ – அசை நிலை, an expletive), என்றும் – always, அரும் படர் அகல நீக்கி – thus removing her great sorrow, விருந்து அயர் விருப்பினள் – she with a desire to celebrate, திருந்திழையோளே – the young woman with perfect jewels (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 362,
மதுரை மருதன் இளநாகனார், பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
வினை அமை பாவையின் இயலி, நுந்தை
மனை வரை இறந்து வந்தனை; ஆயின்
தலைநாட்கு எதிரிய தண் பத எழிலி
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த
கடுஞ் செம்மூதாய் கண்டும் கொண்டும் 5
நீ விளையாடுக சிறிதே; யானே,
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி,
அமர் வரின் அஞ்சேன், பெயர்க்குவென்;
நுமர் வரின் மறைகுவென், மாஅயோளே. 10
Natrinai 362,
Mathurai Maruthan Ilanākanār, Pālai Thinai – What the hero said to the heroine
Oh beautiful dark young woman!
You have crossed the boundaries
of your father’s house to be with me,
moving like Kolli goddess.
The first rains have come and the
beauty-filled forest abounds
with the intensely-red velvet bugs.
You play here with them for a while.
I will go to the sandy area behind
thick-trunked vēngai trees that
have been peeled by young elephants.
If robbers come, I will chase them.
If your relatives come, I will hide!
Notes:
தலைவனும் தலைவியும் உடன்போக்கு மேற்கொண்டனர். சுரத்தில் தலைவன் தலைவியிடம் சொன்னது. இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மழ களிறு உறிஞ்சிய வேங்கை அங்ஙனம் உறிஞ்சுதலானே கெடாதவாறு போல, எத்தகைய பகைவர் வந்து மோதினும் அஞ்சேன் என்றதாம். வினை அமை பாவையின் இயலி (1) – ஒளவை துரைசாமி உரை – நல்ல தொழிற்பாடு அமையச் செய்த பாவையொன்று நடப்பதுபோல நடந்து, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இயந்திரம் அமைந்த கொல்லிப் பாவைப் போல இயங்கா நின்று. நற்றிணை48 – கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர் வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது அமர் இடை உறுதர நீக்கி, நீர் எமர் இடை உறுதர ஒளித்த காடே. They surface during the rainy seaon, on sandy soils. They are kept in boxes by young kids and fed tender grass. They are not the silk producing worms or caterpillars. Akanānūru poems 14, 54, 74, 134, 283, 304, 374, Kalithokai 85 and Natrinai 362 have references to these little red bugs that look like velvet pieces. There are references to Kolli Mountain goddess in Natrinai 185, 192, 201, 346 and 362.
Meanings:
வினை அமை பாவையின் இயலி – moving like Kolli mountain’s moving goddess, moving like a well-made doll (பாவையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), நுந்தை – your father, மனை வரை – house boundary, இறந்து வந்தனை – you crossed and came, ஆயின் – hence, தலைநாட்கு – on the first days, எதிரிய – began, தண் பத எழிலி – cool clouds, அணி மிகு கானத்து – in the beauty-filled forest, அகன் புறம் பரந்த – spread everywhere, கடுஞ் செம் மூதாய் – pattupoochi with intense red, Trombidium grandissimum, இந்திர கோபம், கண்டும் கொண்டும் – see and take, நீ விளையாடுக சிறிதே – you play for a little while, யானே – I, மழ களிறு – young elephants, உரிஞ்சிய – peeled, பராரை – thick tree trunk (பரு அரை பராரை எனப் புணர்ந்தது), வேங்கை – Kino Tree, Pterocarpus marsupium, மணல் இடு மருங்கின் – in the place with sand, இரும் புறம் – on the wide side, பொருந்தி – staying, அமர் வரின் – if fight comes (with robbers), அஞ்சேன் – I will not be afraid, பெயர்க்குவென் – I will chase them away, நுமர் வரின் – if your relatives come, மறைகுவென் – I will hide, மாஅயோளே – oh dark beautiful young woman (இசைநிறை அளபெடை, ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 363,
உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
‘கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத்
தெண் கடல் நாட்டுச் செல்வென் யான்’ என
வியங்கொண்டு ஏகினை ஆயின், எனையதூஉம்
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன்
பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு 5
வம்மோ தோழி மலி நீர்ச் சேர்ப்ப,
பைந்தழை சிதைய, கோதை வாட,
நன்னர் மாலை நெருநை நின்னொடு
சில விளங்கு எல் வளை ஞெகிழ,
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே. 10
Natrinai 363,
Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the ocean with abundant
water! If you command your
charioteer to ride and leave for the
land with clear water,
with thālai fences and groves
surrounded by backwaters,
please bring some sand from your
seashore,
so that the skilled metalsmith who
does not tire, can attach the broken
joints of my friend’s anklets,
which were ruined when she spent
the evening with you yesterday
chasing crabs,
as her leaf garment got crushed,
flower garland faded and her few
bright bangles became loose.
Notes:
பகற்குறி வந்து நீங்கும் தலைவனிடம் கூறியது. யான் ஆற்றுவிக்கும் இடத்துக் கவன்றால் நீ ஆற்றுவி எனச் சொல்லியது. கையுறை நேர்ந்த தோழி தலைவனிடம் கூற்றியதுமாம்.
ஒளவை துரைசாமி உரை – களிப்பும் உலர்ந்தவழி வெடிக்காத பண்பும் உடைய மண்ணே வார்ப்பு அச்சுகட்கு வேண்டப்படுவது. அஃது எல்லாவிடத்துமின்றி சிற்சில நீர்த்துறைகளிலே காணப்படும். ஆட்டுவோள் (10) – ஒளவை துரைசாமி உரை – ஆட்டுதலை உடையவள். செய்யுளாகலின் ‘ஆ’ ‘ஓ’ ஆயிற்று.
Meanings:
கண்டல் வேலி – thālai fence, Pandanus odoratissimus, கழி சூழ் படப்பை – groves surrounded by backwaters, தெண் கடல் நாட்டுச் செல்வென் யான் என – if you say that you will go to the country with clear ocean water, வியம் கொண்டு ஏகினை ஆயின் – if you go commanding your charioteer to ride (வியம் – ஏவல்), எனையதூஉம் உறு வினைக்கு அசாவா – not lazy even a little bit to do his work (எனையதூஉம் – இன்னிசை அளபெடை), உலைவு இல் – without getting tired, கம்மியன் – a skilled worker (metal smith), பொறி அறு – joints broken, பிணைக் கூட்டும் – will attach the pieces together, துறை மணல் கொண்டு வம்மோ – you come bringing sand from your seashore (மோ – முன்னிலையசை, an expletive of the second person), தோழி – my friend’s, மலி நீர்ச் சேர்ப்ப – oh lord of the sea with abundant water (சேர்ப்ப – அண்மை விளி), பைந்தழை சிதைய – fresh leaf clothes crushed, கோதை வாட – garland faded, நன்னர் – good, மாலை – evening, நெருநை- yesterday, நின்னொடு – with you, சில – few, விளங்கு – bright, splendid, எல் வளை ஞெகிழ – bright bangles got loose, அலவன் ஆட்டுவோள் – the young woman who played with the crabs (ஆட்டுவோள் – செய்யுள் ஆகலின் ‘ஆ’ ஓவாயிற்று), சிலம்பு ஞெமிர்ந்து எனவே – since her anklets got crushed (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 364,
கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும்
மயங்கு இருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி,
ஆர்கலி வானம் நீர் பொதிந்து இயங்கப்,
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப,
இன்ன சில் நாள் கழியின், பல் நாள் 5
வாழலென் வாழி தோழி! ஊழின்
உரும் இசை அறியாச் சிறு செந்நாவின்
ஈர் மணி இன் குரல் ஊர் நனி இயம்பப்,
பல் ஆ தந்த கல்லாக் கோவலர்
கொன்றை அம் தீம் குழல் மன்று தோறு இயம்ப, 10
உயிர் செலத் துனைதரும் மாலை
செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே.
Natrinai 364,
Kidangil Kāvithi Perunkotranār, Mullai Thinai – What the heroine said to her friend
The promised time has passed.
During days and confusing nights
with pitch darkness,
clouds in the sky carry water and
come down as rains with loud noises.
The dewy northern winds blow
and sorrow has gripped me.
If a few days pass like this,
I will not live for long.
May you live long, my friend!
In the evening that causes life to
depart rapidly,
very sweet sounds from fine bells with
small clappers are heard
in the common grounds in town,
uneducated cattle herders play sweet
music with kondrai pods to which
many cows respond.
Evening times become one with the
faultless rain.
Notes:
பிரிவிடை வருந்தி உரைத்தது. கொன்றை விதைக் குழல்: அகநானூறு 54 – கோல் கைக் கோவலர் கொன்றை அம் குழலர், நற்றிணை 364 – கல்லாக் கோவலர் கொன்றை அம் தீம் குழல் மன்று தோறு இயம்ப, கலித்தொகை 106 – கொன்றைத் தீம் குழல் முரற்சியர் வழூஉ சொல் கோவலர். துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19). கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53). நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).
Meanings:
சொல்லிய பருவம் கழிந்தன்று – the time that he said he would come has passed, எல்லையும் – during the day, மயங்கு இருள் நடுநாள் – confusing dark midnight, மங்குலோடு ஒன்றி – join the clouds, ஆர்கலி வானம் – very loud sky, நீர் பொதிந்து – filled with water, இயங்க – started to shower rain, பனியின் வாடையொடு – with the chillness of the northern winds, with the northern winds with dew, முனிவு வந்து இறுப்ப – sorrow has come and gripped me, இன்ன சில் நாள் கழியின் – if a few days passed like this, பல் நாள் வாழலென் – I will not live for many days, வாழி – அசை நிலை, an expletive, may you live long, தோழி – my friend, ஊழின் உரும் இசை – the sound of the usual thunder, அறியா – knowing (செய்யா என்னும் வினையெச்சம்), சிறு செந்நாவின் ஈர் மணி – bells with small beautiful tongues/clappers, இன் குரல் ஊர் நனி இயம்ப – very sweet sounds are heard near town, பல் ஆ தந்த – bringing many cows, கல்லாக் கோவலர் – uneducated cattle herders, கொன்றை அம் தீம் குழல் – sweet lute music with their flutes made from kondrai/laburnum seeds, Golden Shower Tree, Cassia fistula, மன்று தோறு இயம்ப – sounds in the common areas, உயிர் செலத் துனைதரும் மாலை – this evening which can take lives rapidly, செயிர் தீர் – faultless, மாரியொடு ஒருங்கு தலைவரினே – if it comes as one with the rain, if it unites and comes with the rain (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 365,
கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரகோவனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அருங்கடி அன்னை காவல் நீவி,
பெருங்கடை இறந்து மன்றம் போகிப்,
பகலே பலரும் காண, வாய்விட்டு
அகல்வயற் படப்பை அவன் ஊர் வினவிச்,
சென்மோ, வாழி தோழி, பல் நாள் 5
கருவி வானம் பெய்யாது ஆயினும்,
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
வான் தோய் மா மலைக் கிழவனை,
‘சான்றோய் அல்லை’ என்றனம் வரற்கே.
Natrinai 365,
Killimankalankilār Makanār Chērakōvanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
May you live long, my friend!
Let’s escape mother’s rigorous
guard, cross the huge gate,
reach the public grounds, and
inquire about his town
with wide fields and groves.
Let’s go and open our mouths
and talk during the day when
many can see us.
Let us tell the lord of the sky-high,
lofty mountains,
……….where,
……….even if the clouds do not rain
……….with thunder and lightning,
……….waterfalls come down with
……….roars in the mountain slopes,
that he is not a wise man.
Notes:
கருவி வானம் (6) – H.வேங்கடராமன் உரை – இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய மேகங்கள். குறுந்தொகை 102 – சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே.
உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – வானம் பெய்யாதாயினும் அருவி அயம் திகழும் என்றது, தலைமகன் வரைபொருளோடு வாராது சான்றோரை விடுப்பினும் நம் தமர் மகட்கொடை நேர்வர் எனத் தோழி உள்ளுறுத்து உரைத்தாள் எனக் கொள்க.
Meanings:
அருங்கடி – harsh protection, அன்னை காவல் – mother’s guard, நீவி – going past, பெருங்கடை இறந்து – passing the large gates, மன்றம் போகி – going to the common grounds, பகலே பலரும் காண – during the day when many will see, வாய்விட்டு – opening our mouths, அகல்வயல் – wide fields, படப்பை – grove, அவன் ஊர் வினவி சென்மோ – let us go and ask about his town (மோ – தன்மை அசைநிலை, an expletive of the first person), வாழி – அசை நிலை, an expletive, may you live long, தோழி – oh friend, பல் நாள் கருவி வானம் பெய்யாது ஆயினும் – even if the clouds do not rain for many days with thunder and lightning, அருவி ஆர்க்கும் – waterfalls flow loudly, அயம் திகழ் – with abundant water, சிலம்பின் – on the mountain slopes, வான் தோய் மா மலை கிழவனை – the lord of the sky-high tall mountains, சான்றோய் அல்லை – you are not a wise man, என்றனம் – we will say so, வரற்கே – to come (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 366 ,
மதுரை ஈழத்துப் பூதன் தேவனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ்
வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்திழை அல்குல், பெருந்தோள் குறுமகள்
மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇக்,
கூதிர் முல்லைக் குறுங்கால் அலரி 5
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த
இரும் பல் மெல் அணை ஒழிய, கரும்பின்
வேல் போல் வெண்முகை விரியத் தீண்டி,
முதுக்குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை
மூங்கில் அம் கழைத் தூங்க ஒற்றும் 10
வட புல வாடைக்குப் பிரிவோர்
மடவர் வாழி இவ் உலகத்தானே.
Natrinai 366,
Mathurai Eelathu Poothan Thevanār, Pālai Thinai – What the hero said to his heart
They are pititable! May they live long in
this world, those separated from their
beloved partner in this cold season,
when the chilly northern wind blows,
opening the spear-like, white buds of
sugarcanes and attacking nests hanging
on bamboo, built with struggles, by wise
weaver birds,
abandoning sleep on the perfectly washed,
thick, soft, sapphire-hued hair with lovely
five-part braids adorned with short-stemmed
mullai flowers swarmed by male honey bees
along with their females,
of their lover with thick arms, who wears on
her waist strands of mixed gems and a delicate,
loose garment between which perfect jewels,
worn on her mound resembling raised hoods
of cobras, glitter, as she moves.
Notes: பொருள்வயின் பிரிய எண்ணிய நெஞ்சிடம் கூறியது.
உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – கரும்பின் வெண்முகையிடத்து பிரிவின்றி இருக்கும் இதழை வாடை தீண்டிப் பிரிவிக்கும் என்றது, பிரிவின்றி இயலும் எமது வாழ்க்கையில் பொருள் வேட்கை தோன்றி என்னைப் பிரியச் செய்கிறது என்றும், முதுகுரீஇ முயன்று செய் குடம்பையை மூங்கிற் கழை அசைத்து அலைப்பது போல யாம் அரிதின் முயன்று பெற்ற காதலின்ப நுகர்ச்சியைப் பொருட் பிரிவு தோன்றி வறுத்துகிறது என்றும் உள்ளுறை கொள்க.
இறைச்சி (1) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மணமற்ற கரும்பின் முகையை வாடை தீண்டும் என்றது, தலைவன் நிலையில்லாத பொருளை விரும்பி முயல்கின்றான் என்பதாம்.
இறைச்சி (2) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – தூக்கணாங்குருவிக் கூட்டை வாடை மூங்கிலால் மோதச் செய்யுமென்றது, பொருள் விருப்பத்தால்வருந்துமாறு நெஞ்சம் தலைவனை அலைக்காநின்றது என்பது உணர்த்தவாம். இமைக்கும் திருந்திழை அல்குல் (2-3) – பின்னத்தூர்
அ. நாராயணசாமி ஐயர் உரை – அரவு சீறி எழுந்தாற்போன்ற அல்குல். நுண்ணியவெளியதுகிலைஉடுத்தவழிஅத்துகில்அசையுந்தோறும்உள்ளிருந்துகண்இமைத்தல்போலுதலானேஇமைக்கும்அல்குல்என்றானுமாம். கலித்தொகை 125 – தட அரவு அல்குல், நற்றிணை 366 – அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ் வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் திருந்திழை அல்குல், குறிஞ்சிப்பாட்டு 102 – பை விரி அல்குல்.
Meanings:
அரவுக் கிளர்ந்தன்ன – like a snake lifting his hood, விரவுறு – mixed, பல் காழ் – many gems, வீடுறு – loosely worn, நுண் துகில் – delicate fabric, ஊடு வந்து – coming between, இமைக்கும் – they glitter, திருந்திழை – perfect jewels, அல்குல் – mound, பெருந்தோள் – thick arms, குறுமகள் – young woman, மணி – sapphire, ஏர் ஐம்பால் – beautiful five-part hairstyle, மாசு அறக் கழீஇ – washed without blemish (கழீஇ – சொல்லிசை அளபெடை), கூதிர் முல்லை – cold season’s mullai flowers, குறுங்கால் அலரி – short-stemmed flowers, மாதர் வண்டொடு – along with female honeybees, சுரும்பு பட – male honeybees swarming, முடித்த – braided, இரும் பல் – very thick (lots of hair), மெல் அணை – soft bed, ஒழிய – abandoing, கரும்பின் – sugar cane’s, வேல் போல் வெண்முகை – spear-like white buds, விரிய – blossoming, தீண்டி – touching, hitting against, முதுக்குறைக் குரீஇ – a very wise bird (குரீஇ – சொல்லிசை அளபெடை), முயன்று – with effort, worked very hard, செய் – built, குடம்பை – nest, மூங்கில் – bamboo, அம் – beautiful, கழைத் தூங்க – hanging on the bamboo, ஒற்றும் – attacks, வட புல வாடைக்குப் பிரிவோர் – those who separate in this season with cold northern winds that blow from the north (வாடை – ஆகுபெயராய் வாடை வீசும் காலத்துக்காயிற்று), மடவர் – they are ignorant, வாழி – அசை நிலை, an expletive, may they live long, இவ் உலகத்தானே – in this world (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 367,
நக்கீரர், முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கொடுங்கண் காக்கைக் கூர்வாய்ப் பேடை
நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ, கிளை பயிர்ந்து,
கருங்கண் கருனைச் செந்நெல் வெண்சோறு
சூருடைப் பலியொடு கவரிய குறுங்கால்
கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும் 5
மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி
மெல்லியல் அரிவை! நின் பல் இருங்கதுப்பின்
குவளையொடு தொடுத்த நறு வீ முல்லைத்
தளை அவிழ் அலரித் தண் நறுங்கோதை
இளையரும் சூடி வந்தனர்; நமரும் 10
விரி உளை நன் மாக் கடைஇ,
பரியாது வருவர் இப் பனிபடு நாளே.
Natrinai 367,
Nakkeerar, Mullai Thinai – What the heroine’s friend said to her
A female crow with curved eyes
and sharp beak embraces her
trembling feathered child, and
calls her flocks to eat food offerings
of fine white rice and karunai yam
with black spots, that have been
left for gods, in the famed Sirukudi
village belonging to Aruman of
ancient lineage, with fine houses
on short posts, with abundant food.
Oh delicate young woman!
He’ll come without delay in this
cold, dewy season, riding his chariot
yoked to wide-tufted fine horses.
His attendants have arrived wearing
cool fragrant garlands woven with
fine, scented jasmine and bluelilies,
like those on your dark, thick hair.
Notes: வரவு மலிந்தது. தலைவனின் குறித்த பருவத்தில் வருகின்றான் என்பதை அறிவுறுத்தியது.
உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – காக்கையின் பெடை தன் பார்ப்பைத் தழுவிக் கொண்டு சோற்றுப்பலியைக் கவர வேண்டி, கிளையை அழைத்து மனையின்கண்ணே சூழ்ந்திருக்கும் என்றது, நீயும் நின் மகவினைத் தழுவினையாகிக் கேள்வன் கொணருகின்ற நிதியத்தை ஆர்த்துமாறு சுற்றத்தாரை அழைத்து சூழ நிறுத்தி மனையறம் நிகழ்த்துவாயாக என்றதாம். Karunai yam is mentioned in Natrinai 367, Puranānūru 395, 398 and Porunaratruppadai 115. Natrinai 258, 281, 293, 343 and 367 have references to food offerings that crows eat. The word Sirukudi is the name of a particular village indicated with the name of a leader in 6 poems – Akanānūru 54-14 (பண்ணன்), Akanānūru 117-18 (வாணன்), Akanānūru 204-12 (வாணன்), Akanānūru 269-22 (வாணன்), Natrinai 340-9 (வாணன்), Natrinai 367-6 (அருமன்). Elsewhere, it means a small village or a small community.
Meanings:
கொடுங்கண் காக்கை – crow with curved eyes, கூர்வாய்ப் பேடை – female with sharp beak, நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ – embraced the trembling feathered/winged child (தழீஇ – சொல்லிசை அளபெடை), கிளை பயிர்ந்து – calls the flock, கருங்கண் கருனை – yam with black spots, elephant foot yam, செந்நெல் – fine paddy, red paddy, வெண்சோறு – white rice, சூருடைப் பலியொடு – given as offering to god, கவரிய – to seize, to eat, குறுங்கால் – short legs, short posts, கூழுடை நல் மனை – fine houses with food, fine houses with wealth, குழுவின இருக்கும் – they are together, மூதில் – ancient houses, அருமன் பேர் இசைச் சிறுகுடி – Sirukudi village of Aruman with great fame, மெல்லியல் அரிவை – delicate natured young woman, நின் – your, பல் இருங்கதுப்பின் – like those on your thick dark hair, குவளையொடு தொடுத்த – strung with blue waterlilies, நறு வீ முல்லை – fragrant mullai flowers, தளை அவிழ் அலரி – flowers that are opening loosening their tightness, தண் நறுங்கோதை – cool fragrant garlands, இளையரும் – also the servants, also the attendants, சூடி வந்தனர் – they came wearing, நமரும் – our man, விரி உளை நன் மாக் கடைஇ – ride the wide-tufted fine horses (கடைஇ – சொல்லிசை அளபெடை), பரியாது வருவர் – he will come without delay, he will come without sorrow, இப் பனிபடு நாளே – on this cold winter day (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 368,
கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பெரும்புனம் கவரும் சிறு கிளி ஓப்பி,
கருங்கால் வேங்கை ஊசல் தூங்கிக்,
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து, நும்மொடு
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ?
நெறிபடு கூழைக் கார் முதிர்பு இருந்த 5
வெறி கமழ் கொண்ட நாற்றமும், சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி,
வறிது உகு நெஞ்சினள், பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே,
ஐய! அஞ்சினம், அளியம் யாமே. 10
Natrinai 368,
Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Is there anything sweeter than
chasing small parrots in our large
millet field, playing on swings tied
to black-trunked vēngai trees,
wearing leaf skirts covering our
tall, lifted loins, and playing with
you in the waterfalls?
Smelling the strong fragrance in
her curly, black hair, and looking
at the pallor on her small forehead,
mother sighed hot breaths with an
empty, broken heart.
Lord! We are afraid! We are pitiable!
Notes:
தலைவியை தாய் இற்செறிப்பாள் என்பதனை உணர்ந்து வரைவு கடாயது. யாய் (9) – ஒளவை துரைசாமி உரை – ஈண்டு இற்செறிப்பின் மேற்று யாய், நற்றாய். வறிது – வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40).
Meanings:
பெரும்புனம் – big millet field, கவரும் – they eat, they take, சிறு கிளி – small parrots, ஓப்பி – chase, கருங்கால் வேங்கை – black-trunked kino tree, Pterocarpus marsupium, ஊசல் – swing (ஊஞ்சல்), தூங்கி – to sway, to swing, கோடு ஏந்து அல்குல் – lifted loins with lines, tall lifted loins, தழை அணிந்து – wearing leaf skirts, நும்மொடு – with you, ஆடினம் வருதலின் – more than playing with you, இனியதும் உண்டோ – is there anything sweeter?, நெறிபடு – curly, wavy, perfect, கூழைக் கார் முதிர்பு இருந்த – in her very black hair, வெறி கமழ் கொண்ட – with strong fragrance, நாற்றமும் – and fragrance, சிறிய – small (forehead), பசலை பாய்தரு நுதலும் நோக்கி – seeing spreading pallor on her forehead, வறிது உகு நெஞ்சினள் – with an empty broken heart, பிறிது ஒன்று சுட்டி – considering about something, வெய்ய உயிர்த்தனள் யாயே – her mother sighed hot breaths, her mother sighed deeply ஐய அஞ்சினம் – sir we are scared, அளியம் யாமே – we are pitiable (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 369,
மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர
நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக,
எல்லை பைபயக் கழிப்பி, முல்லை
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை
இன்றும் வருவது ஆயின், நன்றும் 5
அறியேன், வாழி தோழி! அறியேன்,
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி,
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக்
கங்கை அம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன, என் 10
நிறை அடு காமம் நீந்துமாறே.
Natrinai 369,
Mathurai Olai Kadayathār Nalvellaiyār, Neythal Thinai – What the heroine said to her friend
May you live long, oh friend!
The sun’s heat subsides and
it reaches the mountains,
flocks of herons with full wings
fly high in the sky as daytime
ends little by little,
and mullai blossoms open their
petals in this greatly sad evening.
I do not know if it will distress me
today, this love of mine, in which I
struggle, which is like the fierce flood
of the Ganges river that goes over its
shores and breaks dams as it flows
down as white waterfalls from the
summits of the tall Himalayas with
soaring gnemai trees.
Notes:
வரைந்து கொள்ளாது தலைவன் பொருள்வயின் பிரிந்த வேளையில் தோழியிடம் கூறியது. வரலாறு: கங்கை.
Meanings:
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர – the sun’s heat decreases and it reaches the mountains, நிறை பறைக் குருகினம் – herons/storks/cranes with full wings, விசும்பு உகந்து ஒழுக – fly high in the sky, எல்லை பைபயக் கழிப்பி – day time ends slowly and slowly (பைபய – பையப்பைய பைபய என மருவியது), முல்லை அரும்பு வாய் அவிழும் – when jasmine budsopen their petals, பெரும் புன் மாலை – greatly sad evening, இன்றும் வருவது ஆயின் – if it will come again today, நன்றும் – greatly, அறியேன் – I will not know, வாழி – அசை நிலை, an expletive, may you live long, தோழி – oh friend, அறியேன் – I do not know, ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து – from the tall Himalayas with tall gnemai trees, உச்சி வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவி – white waterfalls that flow from the summits, கங்கை அம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும் – of the beautiful big Ganges river that flows past the shores, சிறை அடு – breaking the dam, கடும் புனல் அன்ன – like the fierce flood, என் நிறை அடு காமம் நீந்துமாறே – to swim in love which ruins my fullness (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 370,
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார், மருதத் திணை – தலைவன் பாணனிடம் சொன்னது
வாராய் பாண, நகுகம்! நேரிழை
கடும்புடைக் கடுஞ்சூல் நம் குடிக்கு உதவி,
நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்
விளங்கு நகர் விளங்கக் கிடந்தோள் குறுகி,
‘புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ் வரித் 5
திதலை அல்குல் முது பெண்டு ஆகி,
துஞ்சுதியோ மெல் அம் சில் ஓதி?’ எனப்,
பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி,
உள்ளினென் உறையும் எற் கண்டு, மெல்ல
முகை நாள் முறுவல் தோற்றி, 10
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே.
Natrinai 370,
Uraiyūr Kathuvāy Sāthanār, Marutham Thinai – What the hero said to the messenger bard
Come here oh bard! Let us laugh!
The woman with perfect jewels,
lying in our bright, flourishing house,
her body shining with ghee and white
mustard paste, had just given birth to
our son, a gift to our family, surrounded
by relatives.
I approached her and asked, “Oh woman
with delicate, lovely hair, beautiful lines
and pallor spots on your loins!
You have become a mature woman with
the birth of our son. Are you sleeping?”
and rubbed a kuvalai blossom on her
very beautiful stomach.
She looked at me who stood there thinking
about her beauty, smiled, her smile resembling
fresh jasmine buds, and covered with her hands
her flower-like, esteemed, fine eyes decorated
with kohl.
Notes:
பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனைத் தலைவி ஊடி நின்றாள். தலைவன் இதைப் பாணனிடம் கூறியது. கலித்தொகை 118 – முகை முகம் திறந்தன்ன முறுவலும்.
Meanings:
வாராய் பாண – come here oh bard, நகுகம் – let us laugh, நேரிழை – the woman wearing perfect jewels (அன்மொழித்தொகை), கடும்புடை – surrounded by relatives, கடுஞ்சூல் – first pregnancy, late pregnancy, நம் குடிக்கு – for our family, உதவி – helped, நெய்யோடு இமைக்கும் ஐயவி – white mustard mixed with ghee, white mustard mixed with oil, திரள் காழ் – thick seeds, round seeds, விளங்கு நகர் விளங்க – the flourishing house shining, கிடந்தோள் – she was lying down, குறுகி – went near, புதல்வன் ஈன்றென – since she gave birth to a young son, பெயர் பெயர்த்து – got the title as a mother, அவ் வரி – beautiful lines, திதலை அல்குல் – loins with pallor spots, முது பெண்டு ஆகி – has become a mature woman, துஞ்சுதியோ – are you sleeping, மெல் அம் சில் ஓதி – oh woman with delicate beautiful fine hair (பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, an attributive compound), என பல் மாண் – with many esteem, அகட்டில் குவளை ஒற்றி – touched her stomach with blue waterlilies, உள்ளினென் உறையும் எற் கண்டு – looked at me who was thinking and staying there, மெல்ல முகை நாள் முறுவல் – smile like a new jasmine bud, தோற்றி – created, தகை – beautiful, with esteem, மலர் உண்கண் – flower-like eyes decorated with kohl, கை புதைத்ததுவே – hid with her hands (ஏ – அசை நிலை, an expletive)