நற்றிணை 371,
ஒளவையார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
காயாங்குன்றத்துக் கொன்றை போல
மா மலை விடர் அகம் விளங்க மின்னி,
மாயோள் இருந்த தேஎம் நோக்கி,
வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்ப்,
பெயல் தொடங்கினவே பெய்யா வானம்; 5
நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி
அழல் தொடங்கினளே ஆயிழை, அதன் எதிர்
குழல் தொடங்கினரே கோவலர்,
தழங்கு குரல் உருமின் கங்குலானே.
Natrinai 371,
Avvaiyār, Mullai Thinai – What the hero said to his charioteer
The wooded hills with kāyā flowers
are covered with kondrai blossoms,
appearing like bright lightning in the
lofty mountain crevices.
I turn toward to where my
dark-colored, beautiful woman lives.
Rain has started to pour hiding
everything in sight in the wide, dark
sky that had not rained in the past.
Her bright shining bangles slips down,
and the young woman wearing beautiful
jewels starts to cry. The cattle herders
there play flutes that sound like thunder
that roars at night time.
Go faster, my charioteer!
Notes:
வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் கூறியது.
Meanings:
காயாங்குன்றத்து – on the hills with kāyā trees, Memecylon edule, கொன்றை போல – like kondrai flowers, laburnum with golden yellow flowers, Golden shower tree, Cassia fistula, மா மலை – tall mountains, விடர் அகம் – inside the crevices, விளங்க மின்னி – causing bright lightning strikes, மாயோள் – the dark colored woman, மாந்தளிர் மேனியோள், இருந்த தேஎம் – the direction that she was (தேஎம் – இன்னிசை அளபெடை), நோக்கி – looked, வியல் – wide, large, இரு – dark, விசும்பு அகம் புதையப் பாஅய் – spread hiding the wide sky, பெயல் தொடங்கினவே – rain has started to pour (ஏ – அசை நிலை, an expletive), பெய்யா வானம் – sky that did not rain until now, நிழல் திகழ் சுடர்த் தொடி – bright shiny bangles, ஞெகிழ – slipping down, ஏங்கி – pining, அழல் தொடங்கினளே – she started to cry (ஏ – அசை நிலை, an expletive), ஆயிழை – the woman with chosen jewels, the woman with beautiful jewels (சுட்டுப் பெயர், demonstrative pronoun, அன்மொழித்தொகை), அதன் எதிர் – front of her, குழல் தொடங்கினரே – they started to play their flutes (ஏ – அசை நிலை, an expletive), கோவலர் – the cattle herders, தழங்கு குரல் – roaring sounds, உருமின் – thunder, கங்குலானே – at night (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 372,
உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அழிதக்கன்றே தோழி, கழி சேர்பு
கானல் பெண்ணைத் தேனுடை அழி பழம்,
வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு,
அள்ளல் இருஞ்சேற்று ஆழப் பட்டெனக்,
கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு 5
அன்ன வெண்மணற்று அகவயின், வேட்ட
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து, இனிது நோக்கி
அன்னை தந்த அலங்கல் வான்கோடு
உலைந்தாங்கு நோதல் அஞ்சி, ‘அடைந்ததற்கு
இனையல் என்னும்’ என்ப, மனை இருந்து, 10
இருங்கழி துழவும் பனித்தலைப் பரதவர்
திண் திமில் விளக்கம் எண்ணும்
கண்டல் வேலிக் கழி நல்லூரே.
Natrinai 372,
Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
Don’t feel sad, oh friend!
Your noble mind desires to unite
with the lord of the shores with
white sand that appears like the
curved conch shells,
where, an over-ripe, honey-sweet
palmyra fruit from a tree in the
groves near the brackish waters,
snaps from its stem and falls into
the black mud, causing the
big-petaled blue waterlily blossoms
to become sad, and bevy of herons
fly away in fear.
The people in this fine town with thālai
hedges, who stay at home counting lights
lit by fishermen trembling in the cold,
who go to fish on the vast backwaters in
in cold weather, think that you are sad,
and tell you “Do not worry” when the
stick your mother gave to you, looking
at you sweetly, to chase birds, broke.
Notes:
தாய் இற்செறிப்பாள் என அஞ்சிய தலைவியிடம் தோழி கூறியது.
உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பனம்பழம் நெய்தல் வருந்தச் சேற்றில் விழக்கண்டு குருகினம் இரியுமென்றது, தலைமகன் களவொழுக்கெங் கெட நின்னை மணப்பின் அலர்வாய்ப் பெண்டிர் இரிந்தொழிவர் என்பதாம். இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – மகளிர் தம் மனையிலிருந்து திமில் விளக்குகளை எண்ணுவர் என்றது, தலைவியும் தோழியும் இல்லிருந்து தலைவன் தந்த துன்பங்கள் எண்ணுவாராயினர் என்பது உணர்த்தவாம். மூக்கு – பொ. வே. சோமசுந்தரனார் உரை, ஐங்குறுநூறு 213 – மூக்கு = காம்பு. வளைக் கோட்டு (5) – ஒளவை துரைசாமி உரை – சங்குகள் நிறைந்த, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வளையாகிய சங்கு போன்ற. மணற்று (6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மணலையுடையது என்னும் முற்றெச்சம். வான்கோடு (8) – ஒளவை துரைசாமி உரை – தலையுடைய மெல்லிய கோல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – குழையுடைய பெரிய கோடு. நற்றிணை6 – அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி, நற்றிணை 24 – விளவின் ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு, நற்றிணை 372 – பெண்ணைத் தேனுடை அழி பழம் வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு அள்ளல் இருஞ்சேற்று ஆழப் பட்டென, ஐங்குறுநூறு 213 – நறு வடி
மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த.
Meanings:
அழிதக்கன்றே – it is not fitting for you to feel sad, do not feel sad (ஏ – அசை நிலை, an expletive), தோழி – oh friend, கழி சேர்பு கானல் பெண்ணை – palmyra tree in the groves near the backwaters, Borassus flabellifer, தேன் உடை அழி பழம் – an over-ripe honey-sweet fruit, வள் இதழ் நெய்தல் வருந்த – blue waterlilies with huge/thick petals to be sad, மூக்கு இறுபு அள்ளல் இருஞ்சேற்று ஆழப் பட்டென – since it fell into the black mud when the stem snapped, கிளைக் குருகு இரியும் – flocks of herons/egrets/storks fly away, துறைவன் – man from this port/shore, வளைக் கோட்டு அன்ன வெண்மணற்று – with white sand that is like the curved conch, with white sand with conch shells on the banks, அகவயின் – in the place, வேட்ட அண்ணல் உள்ளமொடு – with esteemed mind that desires, அமர்ந்து இனிது நோக்கி – sitting and looking sweetly, அன்னை தந்த அலங்கல் வான் கோடு – the big swaying stick that mother gave, உலைந்தாங்கு – breaking, நோதல் – suffering in pain, அஞ்சி – fearing, அடைந்ததற்கு இனையல் என்னும் – “do not feel sorry for what happened” they say, என்ப – அசை நிலை, an expletive, they say, மனை இருந்து – staying at home, இருங்கழி துழவும் – search in the vast/dark backwaters, பனித்தலை பரதவர் – the fishermen who are trembling in the cold, திண் திமில் விளக்கம் எண்ணும் – they count the lights that fishermen have on their sturdy boats, கண்டல் வேலிக் கழி நல் ஊரே – the people in this fine town with backwaters with thālai trees fences, Pandanus odoratissimus (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 373,
கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிட
ம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
முன்றில் பலவின் படுசுளை மரீஇப்,
புன்தலை மந்தி தூர்ப்ப தந்தை
மைபடு மால் வரை பாடினள் கொடிச்சி,
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு
சூருடைச் சிலம்பின் அருவி ஆடிக், 5
கார் அரும்பு அவிழ்ந்த கணிவாய் வேங்கைப்
பா அமை இதணம் ஏறி, பாசினம்
வணர் குரற் சிறு தினை கடிய,
புணர்வது கொல்லோ நாளையும் நமக்கே?
Natinai 373,
Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
Will he join us tomorrow,
the lord of the mountains,
……….where a monkey with a small
……….head tears jackfruit segments
……….from a fruit on a tree in the
……….front yard and throws the seeds
……….down and a mountain girl pounds
……….milky white aivanam rice and
……….sings the praises of the mountains
……….surrounded by dark clouds in her
……….father’s land,
to play in the waterfalls on the fierce
mountain and to climb on the wide
platform on the vēngai tree with dark
buds that open to predict harvest,
and to chase parrot flocks that come to
eat the heavy, bent clusters of tiny millet?
Notes: அன்னை இற்செறிக்க எண்ணுகின்றாள் எனக் குறிப்பால் கூறியது.
உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – மூன்றிலிடத்து நின்ற பலவின் முது சுளையைப் பொருந்தி மந்தி உண்ணக் கொடிச்சி மால்வரை பாடி ஐவன நெல்லைக் குறுவள் என்றது, யாம் தலைமகனோடு இருந்து இன்புறுவேமாகத் தமர் தினை விளைவு பேசி அதனைக் கொய்தற்குச் சூழ்வாராயினர் என்பது. சூர் (5) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அச்சம். ஒளவைதுரைசாமிஉரை– சிறு தெய்வம். அச்சம் செய்யும் இயல்பினால் அது சூர் எனப்பட்டது. The vēngai tree is considered to be an astrologer since it produces flowers right before millet harvest. When the mountain dwellers see vēngai buds open, they start harvesting the millet.
Meanings:
முன்றில் – front yard (இல் முன்), பலவின் – of the jackfruit tree, Artocarpus heterophyllus, படுசுளை மரீஇ – tears the jackfruit segments that are there (மரீஇ – சொல்லிசை அளபெடை), புன்தலை – small head, delicate head, head with parched hair, மந்தி – female monkey, தூர்ப்ப – throws, தந்தை – father, மைபடு – with clouds, மால் வரை – tall mountains, dark mountains, பாடினள் – she sang, கொடிச்சி – mountain girl, ஐவன – Oryza mutica, mountain rice, வெண்ணெல் – white rice paddy, குறூஉம் – she pounds (இன்னிசை அளபெடை), நாடனொடு – with the man from such country, சூருடைச் சிலம்பின் அருவி ஆடி – played in the waterfalls on the fierce mountain slopes, played in the waterfalls on the mountain slopes with deities, கார் அரும்பு – dark buds, அவிழ்ந்த – opened, கணிவாய் – one who calculates time, one who is like an astrologer, one who predicts harvest, வேங்கை – vēngai tree, kino tree, Pterocarpus marsupium, பா – wide, அமை – erected, இதணம் – platform, ஏறி – climbed, பாசினம் – green parrot flocks, வணர் – bent, குரல் – spears, clusters, சிறு – small, tiny, தினை – millet, கடிய – to protect, புணர்வது கொல்லோ – will he join (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை), நாளையும் நமக்கே – tomorrow with us (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 374,
வன்பரணர், முல்லைத் திணை – தலைவன் வழியில் கண்டோரிடம் சொன்னது
முரம்புதலை மணந்த நிரம்பா இயவின்
ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக்
களரிப் புளியின் காய் பசி பெயர்ப்ப
உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர்!
முற்றையும் உடையமோ மற்றே, பிற்றை 5
வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல்
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப,
விருந்து அயர் விருப்பினள் வருந்தும்
திருந்திழை அரிவைத் தேமொழி நிலையே.
Natrinai 374,
Vanparanar, Mullai Thinai – What the hero said to those on the path
Oh strangers with tall umbrellas
raised above your head,
who ate the unripe tamarind fruits
growing in the parched land,
to get rid of your hunger in the
never-ending path filled with pebbles,
where there is a small village with
salt merchants, that appears tall!
My young wife with perfect jewels,
long, lovely, sapphire-colored hair,
and sweet words was sad,
because I left, her tears wetting her
chest with spots. Now she will desire
to cook festive foods for me.
Notes:
வினை முற்றி மீளும் தலைவன் சுரத்தில் கண்டாரிடம் கூறியது.
பொ. வே. சோமசுந்தரனார் உரை – பின்பு பிற்றை என்பது போல முன்பு முற்றை எனத் திரிந்தது போலும்.
Meanings:
முரம்புதலை மணந்த – place filled with pebbles, நிரம்பா இயவின் – in the never ending path, in the path that is unable to go on, ஓங்கித் தோன்றும் – appearing tall, உமண் பொலி சிறுகுடி – small village with salt merchants, களரி – salty land, புளியின் காய் – unripe fruits of tamarind trees, பசி பெயர்ப்ப – for hunger to be gone, உச்சிக் கொண்ட – held above the head, ஓங்கு குடை வம்பலீர் – oh strangers with tall umbrellas, முற்றையும் – before, உடையமோ – I received (உடையம் – தன்மைப் பன்மை, first person plural, ஓ – அசை நிலை, an expletive), மற்றே – மற்று, ஏ – அசைநிலைகள், expletives, பிற்றை – after that, வீழ் மா மணிய – having the attributes of desirable dark sapphires, appearing like desirable sapphire gems, புனை நெடுங்கூந்தல் – beautiful long hair, நீர் வார் – dripping tears, புள்ளி ஆகம் நனைப்ப – wetting her chest with spots, விருந்து அயர் விருப்பினள் – she with the desire to be hospitable to me who is coming as a new person, she is with the desire to cook festive foods for me who has come as a new person, வருந்தும் – is sad, திருந்திழை அரிவை – the young woman with perfect jewels, தேமொழி – sweet words, honey like words, நிலையே – situation (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 375,
பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி, நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நீடு சினைப் புன்னை நறும் தாது உதிரக்,
கோடு புனை குருகின் தோடு தலைப்பெயரும்
பல் பூங்கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப!
அன்பு இலை, ஆதலின், தன் புலன் நயந்த
என்னும் நாணும் நன்னுதல் உவப்ப, 5
வருவை ஆயினோ நன்றே, பெருங்கடல்
இரவுத்தலை மண்டிலம் பெயர்ந்தென, உரவுத் திரை
எறிவன போல வரூஉம்
உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே.
Natrinai 375,
Pothumpil Kilār Makanār Venkanni, Neythal Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the shores with abundant water,
where groves are filled with many flowers,
and herons that adorn the tall punnai tree
branches fly away with their flocks causing
fragrant flower pollen to drop!
You have no love for her! She is shy even
with me who cares for her. So, make the
young woman with a fine brow happy.
Come to our town with seaside groves and
sand dunes, where strong ocean waves crash
on the shore as though they are attacking,
caused by the full moon that rises at night!
Notes:
தலைவன் வரையாது நெடுங்காலம் வந்தொழுக, தலைவியின் நிலையை உணர்த்தி வரைவு கடாயது. மண்டிலம் (7) – ஒளவை துரைசாமி உரை – வட்டம், ஈண்டு முழுத் திங்கள் மேற்று.
உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புன்னைக் கிளைகளில் வைகிய குருகினம் அதன் மகரந்தம் உதிருமாறு கொம்பை அலைத்தெழுந்து செல்லுஞ் சேர்ப்பன் என்றதனால், களவொழுக்கம் மேற்கொண்டு தலைவிபால் வைகிய நீ அவள் அழுது கண்ணீர் வடிக்குமாறு கையகன்று போயினை. இனி அங்கனமின்றி பிரியாது உறைவாயாக என்பதாம். இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – திங்களைக் கண்டு கடல் பொங்கி அலை எழுந்து ஆரவாரிக்கும் என்றது, நீ வரைவொடு வருதல் கண்டு எமர் எதிர்கொண்டு மகிழ்ந்து ஆரவாரிப்பர் என்றதாம்.
Meanings:
நீடு சினைப் புன்னை – punnai trees with tall branches, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, நறும் தாது உதிர – causing fragrant pollen to drop, கோடு புனை குருகின் தோடு – the flocks of herons/egrets, storks adorning the branches, தலைப்பெயரும் – they move away, பல் பூங்கானல் – seashore grove with many flowers, மல்கு நீர்ச் சேர்ப்ப – oh lord of the shores with abundant water, அன்பு இலை – you have no love, you have no kindness (இலை – இல்லை என்பதன் விகாரம்), ஆதலின் – so, தன் – self, புலன் – intelligence, நயந்த – desired, என்னும் – even to me, நாணும் – she is shy, நன்னுதல் – the young woman with a fine forehead (நன்னுதல் – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, an attributive compound), உவப்ப – to make her happy, வருவை ஆயினோ – if you come (ஓ – அசை நிலை, an expletive), நன்றே – it would be nice, (ஏ – அசை நிலை, an expletive), பெருங்கடல் – the vast ocean, இரவுத்தலை – at night, மண்டிலம் பெயர்ந்தென – because the full moon rose up, உரவுத் திரை எறிவன போல வரூஉம் – strong waves come like they are attacking (வரூஉம் – இன்னிசை அளபெடை), உயர் மணல் – sand dunes, படப்பை – groves, எம் உறைவின் ஊரே – the town where we live (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 376,
கபிலர், குறிஞ்சித் திணை – தோழி கிளிகளிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ
இறைஞ்சிய குரல பைந்தாட் செந்தினை,
வரையோன் வண்மை போல பல உடன்
கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்,
குல்லை குளவி கூதளம் குவளை 5
இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன்,
சுற்று அமை வில்லன், செயலைத் தோன்றும்
நல் தார் மார்பன், காண்குறின், சிறிய
நன்கு அவற்கு அறிய உரைமின், பிற்றை
அணங்கும் அணங்கும் போலும், அணங்கி 10
வறும்புனம் காவல் விடாமை
அறிந்தனிர் அல்லிரோ, அறன் இல் யாயே?
Natrinai 376,
Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to the parrots, as the hero listened nearby
Oh parrots! You who are here with
your flocks of relatives with curved
beaks to eat our red millet on big, bent
spears, as big as the trunks of elephants
with ears as large as winnowing trays,
that are generous to you like a donor
who gives without limits!
Carry a short message to our man who
is under an asoka tree, wearing a strand
tied with kullai, kulavi, koothalam,
kuvalai and illam flowers on his head,
adorned with a fine garland on his chest,
and bearing a tightly strung bow.
Don’t you know her unfair mother will not
allow her to guard the millet field any more,
and fearing, might arrange for a veriyāttam
ritual to appease tormenting Murukan?
Notes:
Natrinai 54, 70, 102, 277 and 376 are messenger poems, where the heroine sends messages to the hero through birds and a bee. Poem 83 is an address to an owl by the heroine’s friend. யானையின் முறம் போன்ற செவி – நற்றிணை 376 புறநானூறு 339, நற்றிணை 376, கலித்தொகை 52 – முறஞ்செவி யானை, கலித்தொகை 42 – முறஞ்செவி வாரணம். அறன் இல் யாய் – குறுந்தொகை 244, 262, நற்றிணை 63, 145, 376.
Meanings:
முறம் செவி யானை – elephants with wide ears like a முறம்/winnowing tray, தடக் கையின் – like big/curved trunks (இன் உருபு ஒப்புப் பொருளது), தடைஇ – are bent (தட என்னும் உரிச்சொல் அடியாகப் பிறந்த வினையெச்சம், சொல்லிசை அளபெடை), இறைஞ்சிய குரல – with curved spikes, with curved spears (குரல – குறிப்புப் பெயரெச்சம்), பைந்தாள் – fresh stalks, செந்தினை – red millet, வரையோன் – a man who gives without limits, வண்மை போல – like that charity, பல உடன் – with many, கிளையோடு உண்ணும் – eat with its flock, வளைவாய்ப் பாசினம் – parrot flocks with curved beaks, குல்லை – marijuana or basil, குளவி – malai malli, panneer poo, Millingtonia hortensis, கூதளம் – koothalam, Convolvulus ipome, a three-lobed nightshade vine, குவளை – blue waterlilies, இல்லமொடு – illam tree, சில்லம், தேற்றா மரம், Strychnos potatorum Linn, மிடைந்த – created, woven, ஈர்ந்தண் கண்ணியன் – the man wearing a cool flower strand on his head, சுற்று அமை வில்லன் – the man with a perfectly tied bow, செயலை – asoka tree, Saraca indica, தோன்றும் – appearing, நல் தார் மார்பன் – the man wearing a fine garland on his chest, காண்குறின் – if you see him, சிறிய – little bit, நன்கு அவற்கு அறிய உரைமின் – tell him clearly for him to understand (முன்னிலைப் பன்மை ஏவல் வினைமுற்று விகுதி, a verbal command plural suffix), பிற்றை – after that, அணங்கும் அணங்கும் போலும் – Murukan will torment her (when mother arranges veriyāttam) – அணங்கி – her mother causing distress to her, வறும்புனம் காவல் விடாமை – not letting her go to the dried field to protect it, அறிந்தனிர் அல்லிரோ – don’t you know, அறன் இல் யாயே – mother without fairness (அறன் – அறம் என்பதன் போலி, யாயே – ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 377,
மடல் பாடிய மாதங்கீரனார், குறிஞ்சித் திணை – தலைவன் தோழி கேட்பத் தன்னுள்ளே கூறியது
மடல் மா ஊர்ந்து மாலை சூடிக்,
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும்
ஒண்ணுதல் அரிவை நலம் பாராட்டி,
பண்ணல் மேவலமாகி அரிது உற்று,
அது பிணி ஆக, விளியலம் கொல்லோ, 5
அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த
பசுங்கதிர் மதியத்து அகல் நிலாப் போல,
அளகம் சேர்ந்த சிறுநுதல்,
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே?
Natrinai 377,
Madal Pādiya Māthankeeranār, Kurinji Thinai – What the hero said, as the heroine’s friend listened
It would be difficult
for me to wear a garland,
climb on a palm stem horse
and go around to great big
countries and towns, to sing
the praises of the young
woman with a bright forehead.
That would bring a lot of pain.
Won’t I rather die?
I am wasting away thinking of
this young woman with a small
forehead surrounded with hair,
that resembles the wide moon
with cool rays, in the huge, dark
sky, that is reduced by a snake.
Notes:
தலைவியைச் சந்திக்கத் தலைவன் தோழியை அணுகுகின்றான். அவன் வரைந்து கொள்ள வேண்டும் என்பதால் அவள் மறுத்துக் கூறவே, தலைவன் கூறியது. விளியலம் (5) – ஒளவை துரைசாமி உரை – விளியலம் என்ற எதிர்மறை முற்று ஓகார எதிர்மறை புணர்ந்து விளிகுவம் என்ற உடன்பாட்டுப் பொருள் தந்தது. அரவு நுங்கு மதி: குறுந்தொகை 395 – அரவு நுங்கு மதியினுக்கு, அகநானூறு 114 – அரவு நுங்கு மதியின், அகநானூறு 313 – அரவு நுங்கு மதியின், நற்றிணை 377 – அரவுக் குறைபடுத்த பசுங்கதிர் மதியத்து, புறநானூறு 260 – பாம்பின் வை எயிற்று உய்ந்த மதியின், கலித்தொகை 15 – பாம்பு சேர் மதி போல, கலித்தொகை 104 – பால் மதி சேர்ந்த அரவினை, பரிபாடல் 10-76 – அரவு செறி உவவு மதியென, பரிபாடல் 11 – பாம்பு ஒல்லை மதியம் மறையவரு நாளில், சிறுபாணாற்றுப்படை 185 – மதி சேர் அரவின். Poems 146, 152, 220, 342 and 377 are about Madal Ēruthal.
Meanings:
மடல் மா ஊர்ந்து – riding on the palmyra frond/stem horse, Borassus flabellifer, மாலை சூடி – wearing a garland, கண் அகன் வைப்பின் – in the wide spaces, நாடும் – and country, ஊரும் – and towns, ஒண்ணுதல் அரிவை – young woman with a bright forehead, நலம் – beauty, பாராட்டி – appreciating, பண்ணல் – to do it, மேவலம் ஆகி – me going, me with desire (ஒளவை துரைசாமி உரை – விரும்பினோமாகி, H. வேங்கடராமன் உரை – செல்வேமாகி, மேவலம் – தன்மைப் பன்மை, first person plural), அரிது உற்று – it is difficult, அது பிணி ஆக – since that is painful, விளியலம் கொல்லோ – won’t I die rather than climb on the madal horse (விளியலம் – தன்மைப் பன்மை, first person plural, கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை), அகல் இரு விசும்பின் – in the wide dark sky, அரவு – snake, குறைபடுத்த – reduced (by swallowing), பசுங்கதிர் – cool rays, மதியத்து – the moon’s, அகல் நிலாப் போல – like the wide moon, அளகம் சேர்ந்த – with hair, சிறுநுதல் – small forehead, கழறுபு – it hurts, மெலிக்கும் – it reduces, நோய் ஆகின்றே – it has become this disease (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 378,
வடம வண்ணக்கன் பேரி சாத்தனார், நெய்தற் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
யாமமும் நெடிய கழியும் காமமும்
கண்படல் ஈயாது பெருகும், தெண் கடல்
முழங்கு திரை முழவின் பாணியின் பைபயப்
பழம் புண் உறுநரின் பரவையின் ஆலும்,
ஆங்கு அவை நலியவும் நீங்கியாங்கும் 5
இரவு இறந்து எல்லை தோன்றலது, அலர்வாய்
அயல் இல் பெண்டிர் பசலை பாட
ஈங்கு ஆகின்றால் தோழி, ஓங்கு மணல்
வரி ஆர் சிறு மனை சிதைஇ வந்து
பரிவுதரத் தொட்ட பணி மொழி நம்பிப், 10
பாடு இமிழ் பனி நீர்ச் சேர்ப்பனொடு
நாடாது இயைந்த நண்பினது அளவே.
Natrinai 378,
Vadama Vannakkan Perisāthanār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
The long nights pass slowly.
Your feelings of love increase
and your eyes are unable to sleep.
The clear ocean waves roar
like the throbbing beats of drums
and the sounds of the ocean
come little by little, like the
moans of those with old wounds.
Even when the night has passed,
daytime has not appeared and
there is no end to your distress.
Women in nearby houses gossip
on seeing the pallor on your body.
It has come to this, my friend!
This is because of the close friendship
we made without proper judgment,
with the lord of the cold-water shores,
who came and broke our little sand
house with kolams, and spoke enticingly.
Notes:
தலைவன் பிரிவால் வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவித்தும் ஆற்றாளாயினள். அவளிடம் தோழி கூறியது. கலித்தொகை 51- தெருவில் நாம் ஆடும் மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய கோதை பரிந்து வரிப் பந்து கொண்டு ஓடி நோதக்க செய்யும் சிறு பட்டி. புறநானூறு 209 – தெண் கடல் படு திரை இன் சீர்ப் பாணி தூங்கும். வரி ஆர் சிறு மனை (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கோலமிட்ட சிறிய மணல் சிற்றில், ஒளவை துரைசாமி உரை – கோலமிட்ட சிறு மணல் வீடு. Natrinai 123, 283 and 378 have descriptions of kolams.
Meanings:
யாமமும் நெடிய கழியும் – the long nights pass slowly, காமமும் கண்படல் ஈயாது பெருகும் – feelings of love increases and the eyes cannot close to sleep, தெண் கடல் முழங்கு திரை – the clear ocean’s loud waves, முழவின் பாணியின் – like the beats of drums (பாணியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), பைபய – very slowly (பையப்பைய பைபய என மருவியது), பழம் புண் உறுநரின் – like those with old wounds, பரவையின் ஆலும் – the waves make sounds in the ocean, ஆங்கு – there, அவை நலியவும் – these cause distress, நீங்கியாங்கும் – even after leaving, இரவு இறந்து – night passing, எல்லை தோன்றலது – daytime has not appeared, அலர்வாய் – mouths that gossip, அயல் இல் பெண்டிர் – women who live in nearby houses, பசலை பாட – they gossip about the pallor on your body, ஈங்கு ஆகின்றால் தோழி – the situation has become such oh friend (ஆல் – அசைநிலை), ஓங்கு மணல் – tall sand mounds, வரி ஆர் சிறு மனை – small house with kolams/lines/designs, சிதைஇ – broke (சொல்லிசை அளபெடை), வந்து – came, பரிவுதரத் தொட்ட – with kindness touched, பணி மொழி நம்பி – believing his enticing/humble words, பாடு இமிழ் – loud sounding, பனி நீர்ச் சேர்ப்பனொடு – with the lord of the cold water shores, நாடாது – not analyzing, இயைந்த – being close, நண்பினது அளவே – the extent of the friendship (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 379,
குடவாயிற் கீரத்தனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது அல்லது தலைவி தோழியிடம் சொன்னது
புன்தலை மந்தி கல்லா வன்பறழ்
குன்று உழை நண்ணிய முன்றில் போகாது,
எரி அகைந்தன்ன வீ ததை இணர
வேங்கை அம் படுசினைப் பொருந்தி, கைய
தேம்பெய் தீம்பால் வெளவலின், கொடிச்சி 5
எழுது எழில் சிதைய அழுத கண்ணே,
தேர் வண் சோழர் குடந்தைவாயில்
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த
பெயல் உறு நீலம் போன்றன; விரலே
பாஅய் அவ் வயிறு அலைத்தலின், ஆனாது 10
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில்
ஓங்கு இருஞ்சிலம்பில் பூத்த
காந்தள் அம் கொழு முகை போன்றன சிவந்தே.
Natrinai 379,
Kudavāyil Keerathanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, or What the heroine said to her friend
An untrained, strong child
of a soft-headed female monkey
which does not leave the front
yard of a house in the mountain,
staying on the huge branches of
a vēngai tree with
flame-like, dense clusters of
flowers, snatched from the hands
of a mountain girl, a cup of milk
mixed with sweet honey.
She cried, and her pretty eyes
resembling paintings were ruined.
Her crying eyes are like the kuvalai
flowers that blossom in the rain-fed
moat at Kudanthaivāyil fort of
Chōlan who donates chariots.
She beat her stomach with her spread
fingers and they became red like the
thick buds of the kānthal flowers that
blossom on the slopes of the lofty
Pothiyil Mountain where moving clouds
crawl on tall peaks.
Notes:
தோழி தலைவியின் மடமை கூறியது. இல்லத்தில் காப்பு கைம்மிக்க காலத்தில் தலைவி தோழிக்குச் சொல்லியதுமாம். தேம்பெய் தீம்பால் (5) – ஒளவை துரைசாமி உரை – தேன் பெய் தீம்பால் தேம்பெய் தீம்பால் என வந்தது. தேனென் கிளவி முன் வல்லெழுத்து இயையின்……மெல்லெழுத்து மிகினும் மானமில்லை – தொல்காப்பியம், எழுத்து 132. எழுது எழில் (6) – ஒளவை துரைசாமி உரை – கையெழுதப் பிறந்த அழகு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஓவியர் எழுதற்குரிய அழகு.
வயிற்றில் அடித்தல் – நற்றிணை 179 – அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள், நற்றிணை 379 – அவ் வயிறு அலைத்தலின், நற்றிணை 398 – அவ் வயிறு அலைப்ப உடன் இயைந்து ஓரை மகளிரும், அகநானூறு 106 -பாணன் எறியும் தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறே. வரலாறு: சோழர், குடந்தைவாயில். தேம்பெய் – தேனென் கிளவி வல்லெழுத்து இயையின் மேல் நிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும் ஆ முறை இரண்டும் உரிமையும் உடைத்தே வல்லெழுத்து மிகு வழி இறுதி இல்லை. மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை (தொல்காப்பியம், புள்ளிமயங்கியல் 46).
Meanings:
புன்தலை மந்தி – female monkey with scanty head hair, soft-headed female monkey, கல்லா வன் பறழ் – untrained young child, குன்று உழை நண்ணிய முன்றில் போகாது – not leaving the front yard of the house in a place near the mountains, எரி அகைந்தன்ன – flame like, வீ – flower, ததை இணர – with dense clusters, வேங்கை அம் – of a vēngai tree, Pterocarpus marsupium, படுசினை – beautiful large branches, பொருந்தி – stays, கைய தேம் பெய் தீம் பால் வெளவலின் – since it plucked from her hand the bowl with honey added milk (கைய – குறிப்புப் பெயரெச்சம், தேம் தேன் என்றதன் திரிபு)), கொடிச்சி எழுது எழில் சிதைய – mountain girl’s painting-like beauty got ruined, அழுத கண்ணே – her crying eyes (ஏ – அசை நிலை, an expletive), தேர் வண் சோழர் – Chōla king who donates chariots, குடந்தைவாயில் – Kudanthaivāyil town, மாரி அம் கிடங்கின் – moat with rain water, ஈரிய – wet, மலர்ந்த – blossomed, பெயல் உறு நீலம் போன்றன – like blue waterlilies, விரலே – fingers (ஏ – அசை நிலை, an expletive), பாஅய் – spread, அவ் வயிறு அலைத்தலின் ஆனாது – since she beat them on her stomach, ஆடு மழை – moving clouds, தவழும் – crawl, spread, கோடு உயர் பொதியில் – Pothiyil Mountain with tall peaks, ஓங்கு இருஞ்சிலம்பில் – on the lofty huge mountain slopes, பூத்த – blossomed, காந்தள் அம் கொழு முகை போன்றன சிவந்தே – red like its fat buds of glory lily flowers (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 380,
கூடலூர்ப் பல்கண்ணனார், மருதத் திணை – தோழி தலைவனின் தூதுவனாக வந்த பாணனிடம் சொன்னது
நெய்யும் குய்யும் ஆடி மையொடு
மாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும்
திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற
புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே;
வால் இழை மகளிர் சேரித் தோன்றும் 5
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால்
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்
எழாஅல் வல்லை ஆயினும் தொழாஅல்;
கொண்டு செல் பாண நின் தண்துறை ஊரனைப்,
பாடு மனைப் பாடல் கூடாது நீடு நிலைப் 10
புரவியும் பூண் நிலை முனிகுவ
விரகு இல மொழியல், யாம் வேட்டது இல்வழியே.
Natrinai 380,
Koodalūr Palkannanār, Marutham Thinai – What the heroine’s friend said to the messenger bard, who was sent by the hero
Ghee, smoke and the kohl decorating
her son have stained her clothes and
shoulders. Her delicate breasts with
pale spots that feed sweet milk to her
son embracing him, have the odor of
recent childbirth.
To the man who unites with women
wearing fine jewels, who live in the
settlement, she is not suitable.
So, do not play music with your small
lute with gold-like strings, even if it
is good. Do not greet me. Take your
lord of the cool shores and go away.
Your horses hate being tied for such
a long time. Do not utter useless words
that I do not desire to hear!
Notes: வாயில் மறுத்தது.
Meanings:
நெய்யும் குய்யும் ஆடி – oil/ghee and smoke have smeared (குய் – தாளிப்பு), மையொடு – with the kohl from the young son, மாசு பட்டன்றே – they have been stained (ஏ – அசை நிலை, an expletive), கலிங்கமும் – and clothes, தோளும் திதலை – the arms have pallor, the shoulders have pallor, மென் முலைத் தீம் பால் பிலிற்ற புல்லிப் புதல்வன் – embracing and feeding the son sweet milk from delicate breasts, புனிறு – given birth recently, நாறும்மே – there is stink (செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது), வால் இழை மகளிர் சேரித் தோன்றும் தேரோற்கு – to the man with the chariot who appears in the settlement/village with women with pure jewels, ஒத்தனெம் அல்லேம் – she is not suitable (ஒத்தனெம் – தன்மைப் பன்மை, first person plural, அல்லேம் – தன்மைப் பன்மை, first person plural), அதனால் – so, பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ் எழாஅல் – playing your sweet-sounding small lute with gold-like metal strings (புரை – உவம உருபு, a comparison word, எழாஅல் – இசை நிறை அளபெடை), வல்லை ஆயினும் – even if it is good, தொழாஅல் கொண்டு செல் பாண – go away bard taking him along without greeting/praising, நின் தண்துறை ஊரனை – your lord of the cool ports, பாடு மனைப் பாடல் கூடாது – not singing in my proud house, நீடு நிலைப் புரவியும் பூண் நிலை முனிகுவ – the horses hate being tied for a long time, விரகு இல மொழியல் – do not utter useless words, யாம் வேட்டது இல்வழியே – when I do not desire (ஏ – அசை நிலை, an expletive)