நற்றிணை 381,
ஒளவையார், முல்லைத் திணை – தலைவி சொன்னது
அருந்துயர் உழத்தலின் உண்மை சான்ம் எனப்
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்;
கரை பொருது இழிதரும் கான் யாற்று இகு கரை
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல,
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை 5
யாங்கனம் தாங்குவென் மற்றே? ஓங்கு செலல்
கடும் பகட்டு யானை நெடுமான் அஞ்சி,
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்கத்,
தேர் வீசு இருக்கை போல,
மாரி இரீஇ மான்றன்றால் மழையே. 10
Natrinai 381,
Avvaiyār, Mullai Thinai – What the heroine said
Confusing me, rain has arrived,
like the charity of the kind king Anji
with fast horses and fierce, proud
elephants, who donates chariots
for his fame to flourish far and wide.
I am suffering with extreme distress.
If I die, the truth of my love will become
evident. If I do not, do I not love him?
I am like the beautiful, tender leaves
of an uprooted kadampam tree on the
shores of a raging forest stream that
breaks its banks as it flows.
How will I tolerate this pain?
Notes:
பிரிவிடை ஆற்றாளாகிய தலைவி பருவ வரவின்கண் கூறியது. வரலாறு: அஞ்சி. சான்ம் (1) – ஒளவை துரைசாமி உரை – சாலும் என்பது ஈற்றசை உகரம் கெட்டுச் சான்ம் என நின்றது. ஈற்று மகரமெய் மகரக்குறுக்கம். மான்றன்றால் (10) – ஒளவை துரைசாமி உரை – மயக்குகின்றது ஆகலான், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஒரு தன்மையாய் பெய்யாநின்றது. மான்றன்று – அகநானூறு 300 – வேங்கடசாமி நாட்டார் உரை – மயங்கிவிட்டது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மயங்கியது, அகநானூறு 340 – வேங்கடசாமி நாட்டார் உரை – மயங்கியது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மயங்கியது. Athiyamān Nedumān Anji is the king referred in this poem. This is the only poem in Natrinai that has a reference to Athiyamān.
Meanings:
அருந்துயர் உழத்தலின் – due to suffering in great sorrow, உண்மை சான்ம் என – truth is evident as witness, பெரும்பிறிது இன்மையின் – if there is no death, இலேனும் அல்லேன் – I am not without, கரை பொருது இழிதரும் – crashing against the shores and flowing, கான் யாற்று இகு கரை – eroding shores of a forest stream, வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல – like the beautiful tender sprouts of an uprooted kadampam tree, Anthocephalus cadamba, Kadampa Oak, நடுங்கல் ஆனா நெஞ்சமொடு – with a heart with constant trembling, இடும்பை யாங்கனம் தாங்குவென் – how will I tolerate this pain, மற்றே – also, ஓங்கு செலல் – running fast, கடும் – fierce, பகட்டு யானை – proud elephants, நெடுமான் அஞ்சி – Neduman Anji, Anji of swift horses, ஈர நெஞ்சமோடு – with a kind heart, இசை சேண் விளங்க – fame to flourish in far places, தேர் வீசு இருக்கை போல – like his court where he donates chariots, மாரி இரீஇ மான்றன்றால் – the rains have arrived with confusion (இரீஇ – சொல்லிசை அளபெடை, மான்றன்று – மால் என்பதன் அடியாகப் பிறந்த இறந்தகால முற்றுவினைத் திரிசொல், ஆல் – அசை நிலை, an expletive), மழையே – the clouds (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 382,
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கானல் மாலைக் கழி நீர் மல்க,
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த
ஆனாது அலைக்கும் கடலே மீன் அருந்திப்,
புள்ளினம் குடம்பை உடன் சேர்பு உள்ளார்
துறந்தோர் தேஎத்து இருந்து, நனி வருந்தி, 5
ஆர் உயிர் அழிவது ஆயினும் நேரிழை,
கரத்தல் வேண்டுமால் மற்றே பரப்பு நீர்த்
தண்ணந்துறைவன் நாண,
நண்ணார் தூற்றும் பழி தான் உண்டே.
Natrinai 382,
Nikandan Kalaikōttu Thandanār, Neythal Thinai – What the heroine said to her friend
In the seashore grove,
backwaters are flooded
in the evening time; blue
waterlily blossoms close
their rows of petals and sway
endlessly; birds reach their
nests after feeding on ocean fish.
Oh friend with perfect jewels!
Even if my beautiful life is lost,
I should hide my pain rising from
seeing the places I was with him
before he separated, so that the
lord of the vast cool shores who left
me without consideration does not
get embarrassed, being blamed and
slandered by our enemies.
Notes:
களவில் வந்தொழுகும் தலைவன் வராததால் வருந்திய தலைவியை ஆற்றுப்படுத்துகின்றாள் தோழி. அவளிடம் தலைவி கூறியது. தேஎத்து (5) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தங்கியிருந்த இடத்து, ஒளவை துரைசாமி உரை – தேஎத்து என ஏழாவதன் பொருள்பட வருவதாயினும் ஈண்டு நான்காவதற்குரிய பொருட்டுப் பொருள்பட வந்தது. நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).
Meanings:
கானல் – seashore grove, மாலை – evening time, கழி நீர் மல்க – water in the backwaters rise, நீல் நிற நெய்தல் – blue colored waterlilies (நீல் – கடைக்குறை, poetical license which consists in the shortening of a word by elision of one or more letters in the end), நிரை இதழ் பொருந்த – rows of petals close, ஆனாது அலைக்கும் – they sway endlessly, கடலே மீன் அருந்தி புள்ளினம் – the birds that eat fish from the ocean, குடம்பை உடன் சேர்பு – they reach their nests, உள்ளார் துறந்தோர் – he who separated without thinking (துறந்தோர் – ஒருமை பன்மை மயக்கம்), தேஎத்து இருந்து – staying in the place (தேஎத்து – இன்னிசை அளபெடை), நனி வருந்தி ஆர் உயிர் அழிவது ஆயினும் – even if I am very sad and lose my beautiful life, நேரிழை – oh woman with perfect jewels (விளி, அன்மொழித்தொகை), கரத்தல் வேண்டுமால் – I need to hide it (வேண்டுமால் – ஆல் அசைநிலை, an expletive), மற்றே – மற்று, ஏ – அசை நிலைகள், expletives, பரப்பு நீர்த் தண்ணந்துறைவன் – for the lord of the expansive cool shores (தண்டுறைவன் என்பது தண்ணந்துறைவன் ஆவது, அம் – சாரியை, விரிக்கும் வழி விரித்தல்), நாண – to feel shy, to be embarrassed, நண்ணார் தூற்றும் பழி தான் உண்டே – there is slander and blame from those who are enemies (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 383,
கோளியூர்கிழார் மகனார் செழியனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கல் அயல் கலித்த கருங்கால் வேங்கை
அலங்கல் அம் தொடலை அன்ன குருளை
வயப் புனிற்று இரும் பிணப் , வயப் புலி
புகர் முகம் சிதையத் தாக்கி, களிறு அட்டு,
உரும் இசை உரறும் உட்குவரு நடுநாள் 5
அருளினை போலினும், அருளாய் அன்றே,
கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில்
பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு
ஓங்கு வரை நாட, நீ வருதலானே.
Natrinai 383,
Kōliyur Kilār Makanār Cheliyanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Oh lord of the lofty mountains!
Even though it appears as if
you are gracious to my friend,
you are not doing her any favor
by coming in the pitch darkness
of midnight on fearful paths
when thunder that ruins snakes
roars loudly,
and a strong male tiger with
a hungry female that gave birth
to cubs looking like the
swaying strands of vēngai flowers
from black-trunked trees flourishing
in the mountains, attacks and kills
a male elephant with spots on his face
to feed his mate, and roars loudly.
Notes:
களவில் வந்தொழுகும் தலைவனை வழியில் உள்ள ஏதம் கருதித் தோழி உரைத்தது. இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – ஆண்புலி தன் பிணவுக்காகக் களிறு அடும் என்றது, தலைவியை வரைந்து கொள்ளக் கடிதின் முயன்று பொருள் ஈட்டி வெற்றியோடு வருக எனத் தலைவற்கு உணர்த்தவாம். (அன்று) 6 – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அசை நிலை, ஒளவை துரைசாமி உரை – அன்றே என்றவிடத்து அன்றென்னும் எதிர்மறைக் குறிப்பும் எதிர்மறை ஏகாரமும் புணர்ந்து ஆம் என உடன்பாட்டுப் பொருள் தந்தன. There is a convention that thunder ruins and kills snakes. Puranānūru 17, 37, 58, 126, 211, 366, 369, Akanānūru 68, 92, 119, 182, 202, 274, 323, 328, Kalithokai 45, 113, Kurunthokai 158, 190, 268, 391 and Natrinai 37, 51, 114, 129, 238, 255, 264, 347 and 383 have similar descriptions of thunder ruining or killing snakes. Natrinai 29, 148, 332, 383 and Akanānūru 112, 147 and 238 have descriptions of male tigers desiring to kill, to feed their mate that has recently given birth. Akanānūru 3 has a description of a male vulture, Akanānūru 21 of a male wild dog and Akanānūru 85 of a male elephant desiring to feed their mates who have given birth recently. Vēngai flowers are bright yellow in color. Akanānūru 12, 228, Natrinai 383 and Paripādal 14 have descriptions of vēngai flowers appearing like the markings on tigers. Kalithokai 46 has a description of a bee swarming a tiger, mistaking it for a vēngai tree with flowers.
Meanings:
கல் அயல் – near the mountains, கலித்த – flourishing, கருங்கால் வேங்கை – vēngai trees with black trunk, அலங்கல் அம் தொடலை – swaying beautiful strands, அன்ன குருளை – like cubs, வயப் புனிற்று இரும் பிணப் பசித்தென – since the female that gave birth was hungry, வயப் புலி – strong tiger, புகர் முகம் சிதையத் தாக்கி – attacks breaking the spotted face, களிறு – male elephant, அட்டு – killing, உரும் இசை – thunder sound, உரறும் – tiger roars, உட்குவரு – causing fear, நடுநாள் அருளினை போலினும் அருளாய் அன்றே – you are not helping by coming at midnight even though you appear to be gracious to her (அன்று – அசை நிலை, an expletive, ஏ – அசை நிலை, an expletive), கனை இருள் புதைத்த – pitch darkness covered, அஞ்சுவரும் இயவில் – in the fierce path, பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு – with thunder that ruins snakes, ஓங்கு வரை நாட – oh lord of the lofty mountains, நீ வருதலானே – as you come (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 384,
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
பைம்புறப் புறவின் செங்கால் சேவல்
களரி ஓங்கிய கவை முட் கள்ளி
முளரி அம் குடம்பை ஈன்று இளைப்பட்ட
உயவு நடைப் பேடை உணீஇய, மன்னர்
முனை கவர் முது பாழ் உகு நெல் பெறூஉம் 5
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை மலர்ந்த
நன்னாள் வேங்கைப் பொன் மருள் புதுப் பூப்
பரந்தன நடக்க, யாம் கண்டனம் மாதோ,
காண் இனி, வாழி என் நெஞ்சே, நாண் விட்டு
அருந்துயர் உழந்த காலை 10
மருந்து எனப்படூஉம் மடவோளையே.
Natrinai 384,
Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the hero said to his heart
May you live long, oh heart!
In the wasteland path filled with
kalli trees with thorns, a place
abandoned after an enemy king
raided the land,
a red-legged male pigeon collects
paddy grains that have dropped
from unattended plants, to feed
his female sitting in a lovely nest
built with twigs on a tall, forked
tree branch since she is tired
protecting their new brood of
hatchlings.
When I see her walk on the spread,
new vēngai blossoms that appear
like gold, the young woman becomes
medicine to my great sorrow.
Notes: உடன்போக்கின் பொழுது தலைவன் கூறியது. ஈன்று இளைப்பட்ட (3) – பிள்ளைகளை ஈன்று அவற்றைக் காவல் செய்யுமாறு பொருந்திய, H.வேங்கடராமன் உரை – பிள்ளைகளைப் பெற்று அவற்றைக் காத்தலால் சோர்வுற்றுத் தளர்ந்த. நன்னாள் வேங்கை (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நல்ல நாட்காலையில் மலர்ந்த வேங்கை, ஒளவை துரைசாமி உரை – திருமணக் காலம் நோக்கி மலர்ந்த வேங்கை.
Meanings: பைம்புறப் புறவின் – of a pigeon with beautiful back, செங்கால் சேவல் – a male with red legs, களரி – wasteland, ஓங்கிய – tall, கவை – split, forked, முட் கள்ளி – prickly pear cactus or Euphorbia Tirucalli, முளரி – twigs, அம் குடம்பை – beautiful nest, ஈன்று இளைப்பட்ட – has new chicks and is protecting them, உயவு நடைப் பேடை – a female with tired walk, உணீஇய – to eat (சொல்லிசை அளபெடை), மன்னர் முனை கவர் – kings seized in battles, முது பாழ் – ancient ruined, உகு நெல் பெறூஉம் – gets dropped rice paddy (பெறூஉம் – இன்னிசை அளபெடை), அரண் இல் – without protections, சேய் நாட்டு – far away country, அதர் இடை- in the wasteland path, மலர்ந்த நன்னாள் வேங்கை – blossomed fine day-fresh flowers of vēngai trees, vēngai trees that have blossomed announcing wedding, Kino Tree, Pterocarpus marsupium, பொன் மருள் புதுப் பூ – gold-like new flowers, பரந்தன – spread, நடக்க – when she walked, யாம் கண்டனம் – I saw (தன்மைப் பன்மை, first person plural), மாதோ – மாது, ஓ – அசை நிலைகள், expletives, காண் இனி – see now, வாழி என் நெஞ்சே – may you live long my heart, நாண் விட்டு – letting shyness go, அருந்துயர் உழந்த காலை – when there is great suffering, மருந்து எனப்படூஉம் – she is considered to be medicine (எனப்படூஉம் – இன்னிசை அளபெடை), மடவோளையே – the young woman, the naïve woman (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 385,
பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தற் திணை – பாடல் முழுவதும் கிடைக்கவில்லை
எல்லை சென்ற பின் மலரும் கூம்பின,
புலவு நீர் அடைகரை யாமைப் பார்ப்போடு
அலவனும் அளைவயிற் செறிந்தன கொடுங்கழி
இரை நசை வருத்தம் வீட மரமிசைப்
புள்ளும் பிள்ளையொடு வதிந்தன, அதனால் 5
பொழுதன்று ஆதலின் தமியை வருதி,
எழுது எழில் மழைக்கண் – – – – – – – –
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – -.
Natrinai 385,
Unknown Poet, Neythal Thinai – parts of the song and colophon are missing
Flowers have closed
after the light has left,
tortoises with young
and crabs settle in their holes,
birds with chicks rest on trees
after hardships of searching for
food in the curved backwaters,
and you come alone at this
untimely hour.
Her moist eyes are like painting.
Notes: தோழியின் கூற்று என்பது போலத் தெரிகின்றது.
Meanings:
எல்லை சென்ற பின் – after daytime ended, after light left, மலரும் கூம்பின – and flowers have closed, புலவு நீர் அடைகரை – in the shores of the stinking water, யாமைப் பார்ப்போடு – tortoise with its little ones, அலவனும் – and the crabs, அளை வயிற் செறிந்தன – settled in their holes, கொடுங்கழி – curved backwaters, இரை நசை – desire for food, வருத்தம் வீட – sorrow to go away, மர மிசைப் புள்ளும் பிள்ளையொடு வதிந்தன – birds lived on the trees with their young, அதனால் – so, பொழுதன்று ஆதலின் தமியை வருதி – you come alone at an untimely hour, எழுது எழில் மழைக்கண் – her moist eyes, her cool eyes- – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
நற்றிணை 386,
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல்,
துறுகண் கண்ணிக் கானவர் உழுத
குலவுக் குரல் ஏனல் மாந்தி ஞாங்கர்,
விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது,
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன் 5
அணங்குடை அரும் சூள் தருகுவென் என நீ
நும்மோர் அன்னோர் துன்னார் இவை எனத்
தெரிந்து அது வியந்தனென் தோழி, பணிந்து நம்
கல் கெழு சிறுகுடிப் பொலிய
வதுவை என்று அவர் வந்த ஞான்றே. 10
Natrinai 386,
Thangāl Āthireyan Chenkannanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
My friend!
The man from the mountain
………. where a huge, angry, small-eyed
……….male pig comes to eat bent
……….clusters of millet in a field plowed
……….by forest men wearing tight flower
……….strands, and sleeps in dense bamboo
……….thickets on the mountain slopes,
……….without fear of tigers that live in the
……….the mountain caves,
said that he would give a precious promise
before god,
and you said to him that people of his
stature do not do that.
I was surprised on the day that he came
humbly to our rock-filled small village to
celebrate a wedding with you.
Notes:
பரத்தையிற் பிரிந்து தலைவியிடம் வருகின்றான் தலைவன், அவள் ஊடுகின்றாள். தோழியிடம் அவன் இரந்து நிற்க, அவளும் உடன்பட்டாள். தோழி தலைவன் முன்றிலில் வந்து நிற்கின்றான் என்பதைத் தலைவியிடம் உள்ளுறையால் கூறுகின்றாள். புலவர் பெயர் – ஒளவை துரைசாமி உரை – தண்கால் ஆத்திரையன் செங்கண்ணனார்.
உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பன்றி குறவருடைய ஏனற் கதிரைத் தின்று வேங்கைக்கு அஞ்சாது சாரலிலே துஞ்சும் என்றது, தலைமகன் பரத்தையரின்பம் துய்த்து உலகம் இகழும் இகழ்ச்சிக்கு அஞ்சாது நின் முன்றிலில் காத்து வைகினான் என்பதாம். பணிந்து (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பணிந்து என்னுஞ் சொல் உரையில் (பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரையில்) வாளா விடப்பட்டது. அதனை நம் ஏவற்குப் பணிந்து வதுவை அவர் வந்த ஞான்றென இயைத்துக் கொள்க. ஒளவை துரைசாமி உரை – வியந்து பணிந்தேன் என மாற்றுக (தோழி பணிந்ததாகக் கொள்கின்றார்).
Meanings:
சிறுகண் பன்றி – small eyed pig, பெருஞ்சின ஒருத்தல் – a male with great rage, a boar with great rage, துறுகண் – dense, கண்ணி – flower garlands, flower strands, கானவர் உழுத – forest dwellers plowed, குலவு – bent, குரல் ஏனல் – clusters of millet, spears of millet, மாந்தி – ate, ஞாங்கர் – that place, there, விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது – not afraid of the tigers that sleep in the caves, கழை வளர் சாரல் துஞ்சும் – sleeps in the bamboo growing mountain ranges, நாடன் – man from such country, அணங்குடை – with divine wrath, god fearing, அரும் சூள் தருகுவென் என – he said, ‘I will give a precious/rare promise’, நீ நும்மோர் அன்னோர் துன்னார் இவை என – you said to him that people like him do not say that, தெரிந்து – knowing, அது வியந்தனென் – I was surprised for that, தோழி – my friend, பணிந்து – humbly, நம் கல் கெழு சிறுகுடிப் பொலிய – our mountainous village to be splendid, our mountainous small village to celebrate, வதுவை என்று அவர் வந்த ஞான்றே – when he came for marriage (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 387,
பொதும்பில் கிழார் மகனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நெறி இருங்கதுப்பும், நீண்ட தோளும்,
அம்ம நாளும் தொல் நலம் சிதைய,
ஒல்லாச் செந்தொடை ஒரீஇய கண்ணிக்
கல்லா மழவர் வில்லிடை விலங்கிய
துன் அருங்கவலை அருஞ்சுரம் இறந்தோர் 5
வருவர், வாழி தோழி, செரு இறந்து
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த
வேல் கெழு தானைச் செழியன் பாசறை
உறை கழி வாளின் மின்னி, உதுக்காண்,
நெடும் பெருங்குன்றம் முற்றி 10
கடும் பெயல் பொழியும், கலி கெழு வானே.
Natrinai 387,
Pothumpil Kilār Makanār, Pālai Thinai – What the heroine’s friend said to her
The former beauty of your curly,
black hair and long arms are being
lost every day,
since your lover went through harsh,
forked wasteland paths
where garlanded, crude warriors
shoot fine arrows from their bows,
blocking the paths.
He will come back!
May you live long, oh friend!
Look there! Heavy rains are falling
from loud skies which surround
the tall, huge mountain peaks,
along with lightning strikes that look
like flashing swords removed from
scabbards by warriors, in the battle
camp of Pāndiyan King Neduncheliyan
who went to battle in Ālankānam,
causing fear to enemies.
Notes:
பிரிவிடை வருந்தியத் தலைவியை பருவம் காட்டித் தோழி வற்புறுத்தியது. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரனையும் சோழனையும் (சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் கிள்ளிவளவன்), ஐந்து வேளிர் குறுநில மன்னர்களையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் தோற்கடித்தான். வரலாறு: செழியன், ஆலங்கானம். There are references to Thalaiyālangam battle in Puranānūru 19, 23, 25, 76, Natrinai 387, Mathuraikkānji 55, 127, and Akanānūru 36, 175 and 209. கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).
Meanings:
நெறி – curly, orderly, இருங்கதுப்பும் – black hair, நீண்ட தோளும் long arms, அம்ம – அசை நிலை, an expletive, listen to me, நாளும் – daily, தொல் நலம் சிதைய – losing their former beauty, ஒல்லா – not agreeable, செந்தொடை – fine arrows, sharp arrows, arrows that don’t miss their mark, ஒரீஇய – removed (சொல்லிசை அளபெடை), கண்ணி – flower garlands, flower strands, கல்லா மழவர் – uneducated wasteland warriors, வில்லிடை – between bows, விலங்கிய – blocking, துன் அருங்கவலை – fierce forked paths that are difficult for those who go, அருஞ்சுரம் – difficult wasteland, இறந்தோர் – the man who went, வருவர் – will come, வாழி – அசை நிலை, an expletive, may you live long, தோழி – oh friend, செரு இறந்து ஆலங்கானத்து – went to the battle in Ālankanam, அஞ்சுவர – causing fear, இறுத்த – stayed, வேல் கெழு தானைச் செழியன் – Pāndiyan king with his spear carrying warriors, பாசறை – in the battle camp, உறை கழி – removed from scabbards, வாளின் மின்னி – flashing swords, உதுக்காண் – look there (உது – இடைச்சுட்டு), நெடும் பெருங்குன்றம் முற்றி – tall huge mountains surrounded, கடும் பெயல் பொழியும் – it is raining heavily, கலி கெழு வானே – the loud skies (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 388,
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார், நெய்தற் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழி தோழி, நன்னுதற்கு
யாங்கு ஆகின்று கொல் பசப்பே, நோன் புரிக்
கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித்
திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ,
நடுநாள் வேட்டம் போகி, வைகறைக் 5
கடல் மீன் தந்து கானல் குவைஇ,
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து
தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்திப்,
பெரிய மகிழும் துறைவன் எம்
சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே? 10
Natrinai 388,
Mathurai Marutham Kilār Makanār Perunkannanār, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby
May you live long, oh friend!
Why does my fine forehead become
sallow when he has not left my tiny
heart, the lord of the seashore,
where fishermen rest under the striped
shade of tall, dark punnai trees on the
seashore grove, with their relatives,
happily drinking honey-fragrant liquor,
leaving in heaps the fish that they had
caught and brought to the shore at dawn,
after leaving at night with bright lamps
on their sturdy boats with throwing
spears tied to strong, twisted ropes?
Notes:
தலைவன் மணம் புரியாது களவு நீட்டித்து ஒழுகுவதால் தலைவி வருந்துவாள் எனக் கவலை கொண்ட தோழியிடம் கூறியது. உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பரதவர் படகொடு மீன் பிடித்துக் கழிச்சோலையில் குவித்துப் புன்னையின் நிழலிலே சுற்றத்துடன் கள்ளுண்டு மகிழும் துறை என்றது, தலைவன் தேரில் வேற்று நாட்டிற்குச் சென்று பொருள் ஈட்டிக் கொணர்ந்து முன்றிலே குவித்து தலைவி மனையில் சுற்றத்தாரொடு மகிழ்ந்து தலைவியை மணந்து தலைவியின் நலன் நுகர்வான் என்பதனை உள்ளுறுத்திற்று.
Meanings:
அம்ம – listen to me, இடைச் சொல், a particle, வாழி – அசை நிலை, an expletive, may you live long, தோழி – oh friend, நன்னுதற்கு – to the fine forehead, யாங்கு ஆகின்று கொல் பசப்பே – how does it become sallow (கொல் – அசை நிலை, an expletive), நோன் புரிக் கயிறு – strong twisted ropes, tightly twisted ropes, கடை – ends, யாத்த – tied, கடு நடை – rapidly, எறி உளி – throwing spear/steel, திண் திமில் பரதவர் – fishermen in sturdy boats, ஒண் சுடர்க் கொளீஇ – light bright lamps (கொளீஇ – சொல்லிசை அளபெடை), நடுநாள் வேட்டம் போகி – go fishing at midnight, வைகறைக் கடல் மீன் தந்து – bring fish at dawn, கானல் குவைஇ – heap it in the seashore grove (குவைஇ – சொல்லிசை அளபெடை), ஓங்கு இரும் புன்னை வரி நிழல் – dappled shade of the tall dark punnai trees, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, இருந்து – stay, தேம் கமழ் தேறல் – honey-fragrant liquor, sweet smelling liquor (தேம் தேன் என்றதன் திரிபு), கிளையொடு மாந்தி – drink with their relatives, பெரிய மகிழும் – they enjoy greatly, துறைவன் – the man from such port, எம் சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே – does not know leaving from my small heart (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 389,
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
வேங்கையும் புலி ஈன்றன, அருவியும்
தேம்படு நெடு வரை மணியின் மானும்,
அன்னையும் அமர்ந்து நோக்கினளே, என் ஐயும்
களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை
ஏவல் இளையரொடு மா வழிப்பட்டெனச், 5
‘சிறு கிளி முரணிய பெருங்குரல் ஏனல்
காவல் நீ’ என்றோளே, சேவலொடு
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம்
முதைச் சுவல் கிளைத்த பூழி, மிகப் பல
நன் பொன் இமைக்கும் நாடனொடு, 10
அன்புறு காமம் அமைக நம் தொடர்பே.
Natrinai 389,
Kaveripoompattinanathu Chenkannanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby
Vēngai trees have put out tiger-colored flowers,
and waterfalls in the honey-producing mountains
appear like sapphire.
My father has gone in search of wild animals,
taking with him untrained young workers who kill
male elephants with fine arrows.
Mother looked at me calmly and said, “You go and
protect the big clusters of millet in our field from the
tiny parrots that come to attack them.”
Let it be kind, our loving relationship with the man
from the mountain country, where fine gold shines
often in the dust in old fields, dug up by jungle hens
with scaly legs, that go with their roosters!
Notes:
பகற்குறி வந்தொழுகும் தலைவன் கேட்பச் சொல்லியது. இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கோழி கிளறிய புழுதியிடம் நன்பொன் இமைக்கும் என்றது, செல்வக் குறைவில்லாத போதும் தலைவியின் சுற்றத்தார்க்கு மணங் கொடை நேரவில்லை என்று இரங்கியதாம். வேங்கை மலரும் புலியும் – அகநானூறு 12 – வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம் புலி செத்து வெரீஇய புகர் முக வேழம், அகநானூறு 141 – புலிக்கேழ் உற்ற பூ இடைப் பெருஞ்சினை நரந்த நறும்பூ நாள் மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை, அகநானூறு 227 – புலிக் கேழ் வேங்கை, அகநானூறு 228 – வேங்கை ஒள் வீப் புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், நற்றிணை 389 – வேங்கையும் புலி ஈன்றன, குறுந்தொகை 47 – வேங்கை வீ உகு துறுகல் இரும்புலிக் குருளையின் தோன்றும், ஐங்குறுநூறு 396 – புலிப் பொறி வேங்கைப் பொன் இணர். புலி (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலர்க்கு உவமை ஆகுபெயர். வேங்கை மலர்ந்தவுடன் தினை கொய்தலும் தலைவியை இல்வயிற் செறித்தலும் வழக்காதலானே தொடர்பற்று விட்டது என்று இரங்கினாள் தலைவனைப் பிரிப்பதற்குக் காரணமாயிருத்தலின், அதன் கொடுமை தோன்றப் புலியென்ற பெயரால் கூறினாள். சிறு கிளி முரணிய பெருங்குரல் ஏனல் (6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கிளிகள் கொய்து அழிக்கின்ற பெரிய கதிர்கள், சிறு பசுங்கிளிகள் நமக்கு மாறாகப் படிந்துண்ணும் பெரிய கதிர்கள். Millet harvesting time is when vēngai trees put out flowers. This has been described in poems 125, 259, 313 and 389. விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).
Meanings:
வேங்கையும் புலி ஈன்றன – vēngai trees have yielded flowers the color of tiger spots (the yellow colored flowers fall on boulders and the boulders then appear like tigers), அருவியும் – the waterfalls, cascading streams, தேம்படு – with honey, with honeycombs (தேம் தேன் என்றதன் திரிபு), நெடு வரை – tall mountains, மணியின் மானும் – are bright like sapphire gems (மணியின் – இன் உருபு ஒப்புப் பொருளது), அன்னையும் அமர்ந்து நோக்கினளே – mother looked at me with calm looks (அசை நிலை, an expletive), என் ஐயும் – my father, களிற்று முகம் திறந்த – split open the male elephant’s face, கல்லா – uneducated, untrained, விழுத் தொடை – fine arrows, arrows that don’t miss their mark, ஏவல் இளையரொடு – with young workers, மா வழிப்பட்டென – since he has gone in search of animals, சிறு கிளி முரணிய பெருங்குரல் ஏனல் காவல் நீ என்றோளே – ‘you go to protect the big clusters of millet that are attacked by the tiny parrots’ she said (அசை நிலை, an expletive), சேவலொடு சிலம்பின் போகிய – go with their males in the mountain slopes, சிதர் கால் வாரணம் – jungle fowl with scales on their legs, முதைச் சுவல் – old field on high ground, கிளைத்த – dug up, scratched and brought up, பூழி – dust, மிகப் பல நன் பொன் இமைக்கும் – lots of fine gold shines, நாடனொடு – with the man from such country, அன்புறு காமம் அமைக – let it be kind love, நம் தொடர்பே – our relationship (ஏ – அசை நிலை, an expletive)
நற்றிணை 390,
ஒளவையார், மருதத் திணை – பரத்தை தன்னுடைய தோழியிடம் சொன்னது, அல்லது தலைவி தோழியிடம் சொன்னது
வாளை வாளின் பிறழ, நாளும்
பொய்கை நீர்நாய் வைகு துயில் ஏற்கும்
கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை
ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ, 5
விழவின் செலீஇயர் வேண்டும் மன்னோ,
யாணர் ஊரன் காணுநன் ஆயின்,
வரையாமையோ அரிதே வரையின்
வரை போல் யானை, வாய்மொழி முடியன்
வரை வேய் புரையும் நல் தோள் 10
அளிய தோழி, தொலையுந பலவே.
Natrinai 390,
Avvaiyār, Marutham Thinai – What the concubine said to her friend, or what the heroine said to her friend
I want to go to the festival,
covering my beautiful, wide
loins, with a garment made with
tender leaves of beautiful āmpal
blossoms,
growing in the fields surrounding
Venni, belonging to the charitable
King Killi, where otters sleep in ponds
without killing vālai fish that turn
back and forth like swords.
If the man from the rich town sees her
it would be rare if he does not marry her.
If he marries, many women with fine arms
that look like bamboo from the mountain
of Mudiyan, a man of honest words,
who owns elephants, will lose. It is a pitiful
situation, oh friend!
Notes:
உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பொய்கையில் வாளை பிறழ அதனைக் கொள்ளாத நீர்நாய் உறங்கும் என்றது, தலைவன் விழாக்களத்தே ஒருத்தியைக் கொள்ளவும் அவளைக் கடிந்து போக்காது பரத்தை தன் மனையகத்து இருந்தனள் என்பதாம். உள்ளுறை தலைவி கூற்றிற்கும் பொருந்தும். முடியன் (9) – ஒளவை துரைசாமி உரை – தென் ஆர்க்காடு மாவட்டத்துத் திருக்கோவலூர் வட்டத்தின் தென் பகுதியில் வாழ்ந்த ஒரு வள்ளல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முடியின் என்றது மலையமான் திருமுடிக்காரியை. வரலாறு: கிள்ளி, வெண்ணி. Chōla king Karikālan beat Chēramān Perunchēralāthan and 11 Vēlirs at the Venni battlefield in the Chōla country. There are references to this battlefield in Akanānūru 55, 246, Puranānūru 66 and Porunarātruppadai 147. யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).
Meanings:
வாளை வாளின் பிறழ – scabbard fish turn back and forth like swords, scabbard fish leap like swords, Trichiurus haumela (வாளின் – இன் உருபு ஒப்புப் பொருளது), நாளும் பொய்கை நீர்நாய் வைகு துயில் ஏற்கும் – the otter in the pond sleeps every day, கைவண் கிள்ளி – charitable Killi (Chōla king), வெண்ணி சூழ்ந்த வயல் வெள் ஆம்பல் – white waterlilies growing in the ponds surrounding Venni, உருவ நெறித் தழை – beautiful sprouts/tender leaves, ஐது அகல் அல்குல் – beautiful/delicate wide loins, அணி பெற – making it beautiful, தைஇ – wearing (சொல்லிசை அளபெடை), விழவின் செலீஇயர் வேண்டும் – I want to go to that festival (செலீஇயர் – சொல்லிசை அளபெடை), மன்னோ – மன், ஓ அசை நிலைகள், expletives, யாணர் ஊரன் காணுநன் ஆயின் – if the man from the rich town sees, வரையாமையோ அரிதே – it would be rare if he does not marry (ஏ – அசை நிலை, an expletive), வரையின் – if he marries, வரை போல் – mountain like, யானை – elephant, வாய்மொழி – honest words, முடியன் வரை – Mudiyan’s mountain, வேய் புரையும் நல் தோள் – fine arms that are like bamboo, அளிய தோழி – pitiable my friend, தொலையுந பலவே – many will lose (ஏ – அசை நிலை, an expletive)