Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

20. சோம்பேறித்தனம் துன்பத்தையே தரும்

ஓமலூர் என்ற ஊரில் துக்காராம் என்ற இளைஞன் இருந்தான். அவன் முழுச் சோம்பேறி. உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு வந்ததில்லை. எப்பொழுது பார்த்தாலும் எங்கே யாவது முடங்கிக் கிடப்பான். வயிறு பசிக்கும்போது மட்டும் எழுந்து சில வீடுகளுக்குச் சென்று கையேந்துவான்.

ஆரம்பத்தில் அவன் மேல் பரிதாபப்பட்டு உணவளித்து வந்த சிலர், அவன் முழுச் சோம்பேறி என்று அறிந்ததும், கையை விரித்து விட்டனர்.

"எருமை மாடு போல், உடம்பை வளர்த்துக் கொண்டிருக்கிறாயே. ஏதாவது வேலை வெட்டி செய்து சாப்பிடுவதுதானே!" என்று சிலர் அவனுக்குப் புத்திமதி போல் சொல்லிப் பார்த்தார்கள்.

ஆனால், துக்காராமுக்கு அந்தப் புத்திமதியா வலம்! அவன் எப்பொழுதும் போலவே சோம்பேறி பாகவே இருந்து காலத்தைக் கழிக்க நினைத்தான்.

ஆனால், அந்த ஊர் மக்கள் அவனுக்கு உணவளிக்கத் தயாராக இல்லை. ஆகவே பல நாட்கள் அவன் பட்டினி கிடக்க வேண்டி வந்தது.

ஒரு நாள்-

'இனி இந்த ஊரில் இருந்தால் ஒரு வாய் உணவின்றிப் பட்டினியாகவே இறந்து விடுவோம். ஆகவே, அடுத்த ஊருக்குச் சென்று சுகமாய்ப் பிச்சை யெடுத்து வாழலாம்!' என்று நினைத்துத் துக்காராம் உடனே கிளம்பினான்.

ஒரு காட்டுப் பகுதியில் அவன் சென்று கொண்டிருந்தபோது ஒரு பாழடைந்த மண்டபத்தைக் கண்டான். அவனுக்கு மிகுந்த களைப்பாக இருக்கவே, அந்த மண்டபத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டுச் செல்லலாம் என்று நினைத்து அந்த மண்டபத்திற்கு வந்தான்.

அந்த மண்டபத்தில் ஒரு ராட்சசன் வசித்து பந்தான். அந்த விஷயம் தெரியாததால், அவன் மண்டபத்தின் திண்ணைமீது தாவி ஏறி அமர்ந்தான்.

அவனுக்குப் பசியோ உயிர் போயிற்று. மண்டபத்திதின் அருகிலேயே மாமரங்களும், யா மரங்களும் நிறையக் கனிகளோடு கொய்யா மரங்கல் இருந்தன. அவனும் அவைகளைப் பார்த்தான். ஆனால், அவன்தான் முழுச்சோம்பேறி ஆயிற்றே ஆகவே எழுந்து சென்று பறிக்க மனமின்றி அந்தத் திண்ணையிலேயே உடம்பை நீட்டிப் படுத்தான்.

'ஆகா என்ன அருமையான இடம் என்ன சுகமான காற்று. இந்நேரம் இந்த இடத்தில் அறுசுவை உணவு இருந்தால் சாப்பிட எவ்வளவு நன்றாக இருக்கும்!' என்று நினைத்தான்.

இவனது நடவடிக்கைகளையும், எண்ணங்களை யும் அறிந்துகொண்ட ராட்சசன் சற்றுத் தொலைவில் மறைந்து நின்று கொண்டு அவனுடன் சிறிது விளையாடிப் பார்க்க விரும்பினான்.

துக்காராம் அறுசுவை உணவு வேண்டியிருப்பதை உணர்ந்த அவன், தனது மாய சக்தியினால் துக்காராமின் முன் அறுசுவை உணவைத் தோன்றச் செய்தான்.

திடீரென்று தன் முன்னால் வாழை இலையில் அறுசுவை உணவு இருப்பதைப் பார்த்த அவன் தன் எண்ணம்தான் இந்த உணவைக் கொண்டு வந்திருக்கிறது என்று நினைத்து, அந்த உணவு வகைகளை ருசித்து வயிறு புடைக்க உண்டான்.

வயிறு நிறைந்ததும் அவனுக்குத் தூக்கம் கண்களைச் சுழற்றியது.

 

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.