முன்னொரு காலத்தில் மோஜுத் என்ற பெயர் கொண்ட ஒரு மனிதன் இருந்தான்.
அவன் தான் சிறு அதிகாரியாக பதவி வகிக்கும் ஒரு நகரத்தில் அவ வாழ்ந்து வந்தான், மாறும் அவன் எடைக்கற்களை பரிசோதிக்கும் அதிகாரியாகவே கடைசி வரை தன் நாட்களை நமசித்துவிடுவான் என்பது போல தோன்றியது.
ஒருநாள் அவன் அவனுடைய வீட்டிற்கு அருகில் உள்ள பழைய கட்டிடத்தின் தோட்டம் வழியாக நடந்து கொண்டிருந்தபோது, இதர் என்றழைக்கப்படும் சூபிகளின் மர்ம வழிகாட்டி பளிச்சென்ற பச்சை நிறத்தில் உடை உடுத்திக்கொண்டு அவன் முன் தோன்றி” பிரகாசமான எதிர்காலம் உடைய மனிதனே! உன்னுடைய வேலையை விட்டுவிட்டு மூன்று நாளில் ஆற்றோரத்தில் என்னை சந்தி.” என கூறிவிட்டு பிறகு மறைந்துவிட்டார். மோஜுத் அவனுடைய அலுவலக மேலதிகாரியிடம் சென்று அவன் சென்றாக வேண்டும் என கூறினான்.
விரைவில் நகரத்தில் உள்ள அனைவரும் இதைப் பற்றி கேள்விப்பட்டு, பாவம் மோஜுத்! அவன் பைத்தியமாகிவிட்டான்! என கூறினர். ஆனால், அவனுடைய வேலைக்கு நிறைய ஆட்கள் காத்திருந்த காரணத்தால், அவர்கள் விரைவில் அவனை மறந்துவிட்டனர்.
சொல்லப்பட்ட தினத்தில், மோஜுத் இதரை சந்தித்தான், அவர்,”உன்னுடைய உடைகளை கிழித்துக்கொண்டு ஆற்றுக்குள் குதி. யாராவது உன்னை காப்பாற்றக்கூடும்” என கூறினார். மோஜுத் தான் பைத்தியமாகிவிட்டோமோ என ஆச்சர்யப்பட்டாலும் கூட அவன் அவர் சொன்னதை செய்தான்.
அவனால் நீந்த முடியும் என்பதால், அவன் மூழ்கவில்லை . ஆனால் வெகு தூரம் அடித்துச் செல்லப்பட்டான். ஒரு மீனவன் அவனைப் பிடித்து”முட்டாளே, ஆற்றோட்டம் வேகமாக உள்ளது. நீ என்ன செய்ய முயற்சி செய்தாய்? என கேட்டுக் கொண்டே அவனைப் படகிற்குள் தூக்கிப் போட்டான். மோஜுத்” எனக்கு உண்மையிலேயே தெரியாது” எனகூறினான். மீனவன்”நீ ஒரு பைத்தியம், ஆனால் நான் ஆற்றோரத்தில் இருக்கும் என்னுடைய குடிசைக்கு உன்னை அழைத்து செல்கிறேன், பிறகு நாம் உனக்காக என்ன செய்யமுடியும் என்பதை பார்க்கலாம்” என கூறினான்.
மோஜுத் நன்றாக படித்தவன் என கண்டுகொண்ட பிறகு எழுதவும் படிக்கவும் மோஜுத்திடம் இருந்து மீனவன் கற்றுக்கொண்டான். மாற்றாக மோஜுத்திற்கு உணவு தரப்பட்டது மற்றும் மீனவனுக்கு மோஜுத் அவனுடைய வேலையிலும் உதவி செய்தான்.
ஒரு சில மாதங்களுக்கு பிறகு, இதர் இந்த முறை திரும்பவும் மோஜுத்தின் படுக்கையின் கால்மாட்டில் தோன்றி,”இப்போது எழுந்து இந்த மீனவனை விட்டு கிளம்பு, உனக்கு தேவையானது அளிக்கப்படும்” என கூறினார்.
மோஜுத் உடனடியாக குடிசையை விட்டு வெளியே வந்தான், அவன் ஒரு மீனவனைப் போல உடை அணிந்திருந்தான், மற்றும் ஒரு நெடுஞ்சாலையை அடையும் வரை அவன் அலைந்துகொண்டிருந்தான். அதிகாலை விடிந்து கொண்டிருந்தபோது அவன் ஒரு விவசாயி அவனது கழுதையின் மீது சந்தைக்கு சென்றுகொண்டிருப்பதை பார்த்தான்.
விவசாயி,”நீ வேலை தேடுகிறாயா? ஏனெனில் எனக்கு சந்தையில் வாங்கும் பொருட்களை கொண்டு வர உதவிக்கு ஒரு ஆள் வேண்டும்” என கேட்டான். மோஜுத் அவனைப் பின்தொடர்ந்தான். அவன் விவசாயியிடம் கிட்டதட்ட இரண்டு வருடங்கள் வேலை செய்தான், அந்த காலகட்டத்தில் அவன் மற்றவை பற்றி தெரிந்துகொண்டது சிறிதளவே, விவசாயத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொண்டான்.
ஒருநாள் மதியம் அவன் ஆட்டுரோமத்தை அறுத்து கொண்டிருந்தபோது இதர் அவன்முன் தோன்றி” அந்த வேலையை விட்டுவிடு, மோசூல் நகரத்திற்கு நட, மற்றும் உன்னுடைய சேமிப்பை உபயோகப்படுத்தி தோல் வியாபாரியாக மாறு” என கூறினார். மோஜுத் அவர் சொன்னபடி செய்தான். மோசூலில் அவன் ஒரு தோல் வியாபாரியாக அறியப்பட்டான் அவன் அவனுடைய தோல் வியாபாரத்தை மூன்று வருடங்கள் செய்தான், அப்போது அவன் இதரை பார்க்கவேயில்லை.
அவன் ஒரு பெரும் தொகையை சேமித்துவிட்டான், மற்றும் ஒரு வீடு வாங்குவதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தான். இதர் அவன் முன் தோன்றி”உன்னுடைய பணத்தை என்னிடம் தா, இந்த நகரத்தை விட்டு வெகுதூரத்தில் உள்ள சமர்கண்ட் வரை செல், மற்றும் அங்கு உள்ள ஒரு மளிகை கடையில் வேலை செய்” எனக் கூறினார்.
மோஜுத் அதைச் செய்தான். இப்போது அவன் சந்தேகமில்லாமல் பிரகாசத்தின் குறியீடுகளை காட்ட தொடங்கினான். அவன் நோயுற்றவர்களை குணப்படுத்தினான், அவனுடைய ஓய்வு நேரத்தில் அவன் அருகில் இருந்தவர்களுக்கு உதவி செய்தான், மற்றும் அற்புதத்தை பற்றிய அவனுடைய அறிதல் மேலும் மேலும் ஆழமாகியது.
சமய குருமார்களும், தத்துவவாதிகளும் அவனை சந்தித்தனர், அவர்கள் அவனிடம் நீங்கள் யாரிடம் கற்றீர்கள்? என கேட்டனர். "அதைச் சொல்வது கடினம்” என மோஜுத் கூறினான். அவனுடைய சீடர்கள் நீங்கள் எப்படி உங்கள் வாழ்வை தொடங்கினீர்கள்? என கேட்டனர்.”சிறு அதிகாரியாக தொடங்கினேன்” என அவன் கூறினான்.
மற்றும் உங்களுடைய தேடுதலுக்கு வாழ்க்கையை அர்பணிப்பதற்காக அதனை விட்டுவிட்டீர்களா? என அவர்கள் கேட்டனர். "இல்லை நான் வெறுமனே அதனை விட்டுவிட்டேன்” என அவன் கூறியபோது யாருக்கும் அவன் சொல்வது புரியவில்லை. அவனுடைய வாழ்க்கை சரிதையை எழுதுவதற்காக மக்கள் அவனிடம் வந்தனர்.
உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் என்னவாக இருந்தீர்கள்? என அவர்கள் கேட்டனர். “நான் ஆற்றுக்குள் குதித்தேன், ஒரு மீனவனாக மாறினேன், பின் நடு இரவில் அவனுடைய குடிசையை விட்டு வெளியேறினேன். அதற்கு பிறகு, நான் ஒரு விவசாய கூலியாக மாறினேன். நான் ஆட்டுரோமத்தை வெட்டிக்கொண்டிருக்கும்போது, நான் மாறிவிட்டேன் மற்றும் மோசூலுக்கு சென்றேன், அங்கு தோல் வியாபாரியாக மாறினேன், அங்கு சிறிது பணத்தை சேமித்தேன்.
ஆனால் அதை கொடுத்துவிட்டேன். பிறகு சமர்கண்டிற்கு நடந்தேன் அங்கு ஒரு மளிகை கடையில் வேலை செய்தேன். மற்றும் நான் இப்போது இங்கு இருக்கிறேன்.” ஆனால் இந்த விவரிக்கமுடியாத நடத்தை உங்களுடைய வித்தியாசமான அற்புதத்தையும், உங்களின் அருமையான ஆனந்த வாழ்வையும் எந்த விதத்திலும் விளக்கவில்லையே என வாழ்க்கை சரிதம் எழுதுபவர்கள் கேட்டனர்.”அது அப்படித்தான்” என மோஜுத் கூறினான். எனவே வாழ்க்கை சரிதம் எழுதுபவர்கள் மோஜுத்திற்காக ஒரு அருமையான மற்றும் விறுவிறுப்பான கதையை உண்டாக்கினர். ஏனெனில் எல்லா துறவிகளும் அற்புதமான ஒரு கதையை கொண்டிருக்கவேண்டும், மற்றும் அந்த கதை கண்டிப்பாக கேட்பவரின் ஆசைக்கு தகுந்தபடி இருக்கவேண்டும், என்று நாம் நினைக்கிறோம்.
அது வாழ்க்கையின் உண்மைகளின்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை, மற்றும் இதரைப்பற்றி நேரடியாக பேச யாருக்கும் அனுமதியில்லை. அதனால்தான் இந்த கதையும் உண்மையல்ல. இது ஒரு வாழ்வின் பிரதிபலிப்பு. இது சிறந்த சூபிகளில் ஒருவரது உண்மை வாழ்க்கைப் பிரதிபலிப்பு.