Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

பகுதி 1 (நட்புப்பிரித்தல்)

1. எருதும்சிங்கமும்
தென்னாட்டில்மகிழாருப்பியம்என்றுஓர்ஊர்இருந்தது. அங்குவர்த்தமானன்என்றபெயருடையஒருவணிகன்இருந்தான். அவன்வெளிநாடுகளில்வாணிகம்செய்யவிரும்பி, தன்னிடம்இருந்தசரக்குகளைக்கட்டைவண்டியில்ஏற்றிக்கொண்டுபுறப்பட்டான். ஒருகாட்டுவழியாகப்போகும்போதுவண்டிமாடுகளில்ஒன்றுகாலிடறிவிழுந்துவிட்டது. அந்தமாட்டின்கால்பிசகிஅதுநொண்டியாகிவிட்டது.
இதைக்கண்டவணிகன், அந்தமாட்டைஅவிழ்த்துவிட்டுத்தன்சரக்குகளைஆட்களின்தலையில்ஏற்றிக்கொண்டுபுறப்பட்டான். அந்தமாட்டைப்பார்த்துக்கொள்வதற்காகஓர்ஆளைவைத்துவிட்டுப்போனான்.

‘சாகிறமாட்டுக்குக்காவலென்னகாவல்!'என்றுஅந்தஆளும்புறப்பட்டுப்போய்விட்டான்.
ஆனால், அந்தமாடுசாகவில்லை. நொண்டிக்காலோடுமெல்லமெல்லநகர்ந்துநகர்ந்துசென்றுகாட்டில்நன்றாகமேய்ந்தது. தீனிஏறஏறஅதுகொழுத்துவளர்ந்தது. ஊட்டத்தினால்அதன்கால்ஊனமும்சரியாகிவிட்டது. பிறகுஅதுஅந்தக்காடுமுழுவதும்விருப்பம்போல்சுற்றித்திரிந்து, நன்றாகமேய்ந்துபெரியஎருதாகிவிட்டது.
அந்தக்காட்டைஒருசிங்கம்ஆண்டுவந்தது. அந்தச்சிங்கம்தண்ணிர்குடிப்பதற்காகஒருநாள்யமுனையாற்றுக்குச்சென்றது. அப்போதுஅந்தப்பக்கத்தில்திரிந்துகொண்டிருந்தஎருதுமுழக்கம்செய்தது. கடல்முழக்கம்போல்அந்தமுழக்கம்பெரிதாகஇருந்தது. சிங்கம்அதற்குமுன்அத்தகையபேரொலியைக்கேட்டதில்லையாகையால், நடுங்கிப்போய்விட்டது.இதேதுபுதிதாகஇருக்கிறதே!என்றுபயந்துஅதுதண்ணிர்குடிக்கவும்மறந்துநின்றுவிட்டது.
சிறிதுதூரத்தில்இரண்டுநரிகள்நின்றுகொண்டிருந்தன. சிங்கத்தின்அமைச்சன்பிள்ளைகளாகியஅவைஇதைப்பார்த்துவிட்டன. அவற்றில்ஒருநரி, மற்றொன்றைப்பார்த்து, “நம்அரசன்ஏன்நடுங்கிநின்றுவிட்டான்?" என்றுகேட்டது.
"அதைப்பற்றிநமக்கென்னகவலை? அதைத்தெரிந்துகொள்வதால்நமக்கென்னஇரைகிடைக்கப்போகிறதா, அல்லதுபெருமைகிடைக்கப்போகிறதா. தனக்குத்தொடர்பில்லாதஒருகாரியத்தில்தலையிடுகிறவன்ஆப்புப்பிடுங்கியகுரங்குபோல்அவதிப்படவேண்டியதுதான்" என்றதுஇன்னொருநரி.
“அப்படியல்ல. என்னஇருந்தாலும்சிங்கம்நம்அரசன். அரசர்களுக்குப்பணிசெய்வதுபெருமையானது. அதனால்பெரியோர்களுடையநட்புஉண்டாகும்; பலஉதவிகளும்கிடைக்கும். நாய்கள், ஈரம்சிறிதும்இல்லாதஎலும்பையும், பல்லசையும்வரைவிடாமல்கெளவிக்கடித்துத்தின்னும். ஆனால்மிகுந்தபசியோடிருக்கும்சிங்கமோமதயானையைஅடித்துக்கொன்றுதன்பசியைத்தீர்த்துக்கொள்ளுமேயல்லாமல், சிறியஉயிர்களைக்கொல்லாது. நாய், ஈனத்தனமாகத்தன்வயிற்றைஒடுக்கிவாலைக்குழைத்துக்குழைத்துமுகத்தைப்பார்த்துக்கெஞ்சிஎச்சிலைவாங்கியுண்ணும். ஆனால்யானையோ, எவ்வளவுபசியிருந்தாலும், சிறிதும்கெஞ்சாது. தன்பாகன்வலியக்கொண்டுவந்துஊட்டஊட்டஉணவையுண்ணும். இப்படிப்பட்டபெருமையுடையவர்களோடுசேர்ந்துவாழ்வதேவாழ்க்கை" என்றதுமுதல்நரி,
"சிங்கத்திற்குநாம்அமைச்சர்கள்அல்லவே, இதைப்பற்றிஏன்சிந்திக்கவேண்டும்?" என்றுமறுத்ததுஇரண்டாவதுநரி.

‘எந்தஒருகாரியத்தையும்தந்திரமாகச்செய்தால்உயர்வையடையலாம். யோசனையில்லாவிட்டால்சிறுமைதான்உண்டாகும். நல்லசெயல்களைச்செய்துநன்மையடைவதுஅரியதுதான். தீயசெயல்களைச்செய்துகேடடைவதுஎளிது.
'ஏரியின்நீரைக்கரைபோட்டுக்கட்டுவதுஅரிது. அதைஉடைத்துக்கெடுப்பதுஎளிது. ஒருகல்லைமலையில்ஏற்றுவதுஅரிது. அதைக்கீழேஉருட்டிவிடுவதுஎளிது. அரியனவாயிருந்தாலும்பெரியசெயல்களையேசெய்துபெருமையடையவேண்டும். அறிவுடையபெரியோர்கள்வாழ்வதுஒருகணம்போல்இருந்தாலும்பெருமையோடும்புகழோடும்வாழ்வார்கள். கருமைநிறமுள்ளகாக்கையோ, எச்சிலைத்தின்றுகொண்டுபலநாள்உலகில்வாழ்ந்திருக்கும். பெருமையும்சிறுமையும்அவரவர்செயலால்ஏற்படுவதே! இவற்றில்அருமையானசெயல்களைச்செய்கின்றவர்களுக்கேபெருமையுண்டாகும்’ என்றுகூறியதுமுதல்நரி.
‘நல்லதுஇப்பொழுதுஎன்னசெய்யவேண்டும்’ என்றுகேட்டதுஇரண்டாவதுநரி.
'நம்மன்னனாகியசிங்கம்வருத்தப்பட்டகாரணத்தைஅறிந்து, அதன்மனத்துயரத்தைநீக்குவேன். அவனுடையஅமைச்சனாகஇருந்துநம்நரிக்குலத்துக்குஇன்பவாழ்வுஏற்படச்செய்வேன்’ என்றதுமுதல்நரி,
“மோந்துபார்ப்பவர்கள்போல்வந்து, கடித்துவிடக்கூடியதன்மையுடையவர்கள்அரசர்கள். அரசர்களும், தீயும், பாம்பும்ஒரேமாதிரிதான்' என்றுஇரண்டாவதுநரிகூறியது.
‘நெருங்கிவளர்ந்திருக்கும்கொடி, பக்கத்தில்இருக்கும்மரத்தின்மேலேதான்படரும். அதுபோல, பெண்களும், மன்னர்களும்அருகில்இருந்துஇனிமையாகப்பேசுபவர்களிடமேஅன்புகொள்ளுவார்கள். நானும்என்திறமையால்சிங்கத்தின்நட்பைப்பெறுவேன்’ என்றுஉறுதியாகக்கூறியதுமுதல்நரி.
‘நன்று, நீவெற்றியடைக!’ என்றுஇரண்டாவதுநரியும்மனந்துணிந்துவாழ்த்துக்கூறியது.
முதல்நரிவிடைபெற்றுக்கொண்டுசிங்கத்தின்முன்னேசென்றுகைகூப்பிநின்றது.
'இந்தநாள்வரைஉன்னைக்காணோமே, எங்குபோயிருந்தாய்?' என்றுகேட்டதுசிங்கம்.
‘அரசே, ஒன்றுமில்லாமல்வந்துஎன்னபயன்? இப்போதுதங்களிடம்வரவேண்டியகாரியம்ஏற்பட்டதால்வந்தேன். என்னைச்சிறியவன்என்றுஎண்ணிஒதுக்கிவிடாதீர்கள். உங்களுக்குவெற்றியும்பெருமையும்உண்டாகும்படிசெய்வேன். நல்லஅறிஞர்களின்துணைகொண்டேஅரசர்கள்நீதிகளைஇயற்றுவார்கள். அவர்களுடையஅரசும்பெருமையுடன்விளங்கும். ஒளிபொருந்தியவாளும், இனிமையானஇசையும்இன்பந்தரும்யாழும், பரந்தஉலகமும், அழகியபெண்களும், அறிவுநிறைந்தபெரியோரும், பயன்மிக்கநூல்களும்ஆகியஇவையெல்லாம், வைத்துக்காப்பாற்றுகின்றவர்களின்தன்மையாலேதான்சிறப்படையும். அதுபோல்அரசுசிறக்கஅறிஞர்துணைதேவை’ என்றதுநரி.
‘நரியே, நீஅமைச்சருடையமகன்அல்லவா? அதனால்தான்உயர்ந்தஆலோசனைகளைக்கூறுகின்றாய். நீஎன்னிடமேஇருந்து, உண்மையாகவேலைசெய்துவா!’ என்றுசிங்கம்கூறியது.
உடனேநரிதுணிச்சலுடன் 'அரசே, தங்கள்மனத்தில்ஏதோபயம்ஏற்டெடிருக்கிறதுபோல்தோன்றுகிறதே!' என்றுகேட்டது.
'ஆம், இதுவரைஇந்தக்காட்டில்நான்கேட்டறியாதஒருபெருமுழக்கத்தைக்கேட்டேன். அதனால்என்மனம்கலங்கியிருக்கின்றது. முழக்கம்எவ்வளவுபெரியதோ, அவ்வளவுபெரியதாய்அந்தமுழக்கம்செய்தமிருகமும்இருக்கவேண்டும்அல்லவா? அந்தமிருகம்என்னைக்காட்டிலும்பெரியதாய்இருக்குமோஎன்றுஅஞ்சுகிறேன். வழுக்கிவிழஇருந்தவனுக்குஊன்றுகோல்கிடைத்ததுபோல்சரியானசமயத்தில்நீவந்தாய். என்கவலைநீங்கஒருவழிகூறு’ என்றுமனம்விட்டுப்பேசியதுசிங்கம்.
‘அரசேவெறும்ஒலியைக்கேட்டுப்பயப்படுவதுசரியன்று. முன்ஒருநரிஇதுபோலத்தான், பெரும்
சத்தத்தைக்கேட்டுப்பயந்தது. கடைசியில்பார்த்தால்அதுவெறும்தோல்முரசாகஇருக்கக்கண்டது. நீங்கள்பயப்படவேண்டாம். நான்போய்இந்தமுழக்கத்தின்காரணத்தைஅறிந்துவருகிறேன்' என்றுசொல்லிநரிபுறப்பட்டது.
காட்டுக்குள்ளேதேடிக்கொண்டுசென்றநரி, சிறிதுதூரத்தில்அந்தக்காளைமாட்டைக்கண்டது. அதனுடன்பேசிஅதன்நட்பைப்பெற்றது. சிங்கத்திடம்திரும்பிவந்து, அரசே, 'அதுநம்மைப்போல்ஒருமிருகம்தான். ஆனால்முரட்டுமிருகம், இருந்தாலும்அதுதங்களுடன்நட்புக்கொள்ளவேவிரும்புகிறது' என்றுகூறியது.
'அப்படியானால், அதைஇங்கேஅழைத்துவா’ என்றுசிங்கம்கூறியது.
நரிஅவ்வாறேஎருதைஅழைத்துவந்துசிங்கத்திடம்விட்டது. எருதும்சிங்கமும்அன்றுமுதல்உயிர்நண்பர்களாய்வாழத்தொடங்கின. சிங்கம்அந்தஎருதையேதன்அமைச்சனாக்கிக்கொண்டது. இவ்வாறுபலநாட்கள்கழிந்தன.
ஒருநாள்காட்டுமிருகங்களும்அமைச்சர்களாகியநரிகளும்ஒன்றுகூடி, அரசனுக்கோநம்மிடம்அன்பில்லை. இரையேநமக்குச்சரியாகக்கிடைக்கவில்லை. இனிநாம்என்னசெய்வது?’’ என்றுஆலோசித்துக்கொண்டிருந்தன. அப்போதுமுதல்நரிஇரண்டாவதுநரியைப்பார்த்து, 'யானைதன்மத்தகத்தைக்கொத்துவதற்குத்தானேபாகனிடம்அங்குசத்தைஎடுத்துக்கொடுத்ததுபோல், இந்தமாட்டையும்சிங்கத்தையும்நட்புக்கூட்டிவைத்துநமக்குநாமேகேடுசெய்துகொண்டோம். தங்களால்தாங்களேகெட்டமூன்றுபேருடையகதைபோல்இருக்கிறதுநமதுகதையும்' என்றுவருத்தத்துடன்கூறியது.
'இப்போதுநாம்என்னசெய்வது?’ என்றுஇரண்டாவதுநரிகேட்டது.
‘கவலைப்படாதே, சூழ்ச்சியாகஅவ்விருவருடையநட்பையும்குலைத்துவிடுவோம். பிறகுநாம்இந்தக்காட்டையேநம்கைவசப்படுத்திக்கொள்ளலாம்' என்றுஉறுதியுடன்பேசியதுமுதல்நரி. மேலும்அதுதொடர்ந்து, ‘எப்படியோகைவிட்டுப்போனதைமீண்டும்கைகூடச்செய்வதும், இடையூறுகள்வராமல், தடுத்துக்கொள்வதும், முயற்சியினால்அருமையானசெல்வத்தைத்தேடிஅடைவதும், எல்லாவற்றையும்நன்குஆராய்ந்துசெய்வதும்ஆகியகாரியங்களில்வல்லவன்தான்சரியானஅமைச்சன்’ என்றது.
‘இவ்வளவுநெருங்கியநட்பாய்இருக்கும்சிங்கத்தையும், எருதையும்நம்மால்பிரிக்கமுடியுமா? இதுஆகிறகாரியமா?’ என்றுகேட்டதுஇரண்டாவதுநரி.
‘பூ! சூழ்ச்சியால்ஆகாதகாரியம்எதுவும்இல்லை. காகம்கரும்பாம்பைக்கொன்றதும், முயல்ஒருசிங்கத்தைக்கொன்றதும், நண்டொன்றுகொக்கைக்கொன்றதும்எல்லாம்சூழ்ச்சியால்தான்!’ என்றுகூறியதுமுதல்நரி.
‘உண்மைதான். சூழ்ச்சியால்இவர்கள்நட்பைப்பிரிக்கமுடியுமேயல்லாமல்வேறுவழியில்லை. நீஅதற்கானதைச்செய்' என்றதுஇரண்டாவதுநரி,
சிங்கம்தனியாகஇருக்கும்வேளைபார்த்து, ‘அரசே, தங்களுக்குஒருதீமைஏற்படஇருப்பதைஅறிந்துநான்எச்சரிக்கவேவந்தேன்’ என்றுபுதிர்போட்டதுபோல்கூறியது.
'அப்படியென்னதீமையது?’ என்றுசிங்கம்கேட்டது.
‘அரசே, இதைப்பற்றிமுன்னாலேயேசொல்லியிருப்பேன். ஆனால், உங்கள்மனத்தில்உள்ளவிருப்பத்தின்காரணமாகநான்சொல்லக்கூடியஉண்மையைப்பொய்யாகஎண்ணிவிடுவீர்களோஎன்றுபயப்பட்டேன். அந்தப்பயத்தினால்தான்இதுவரைஎதுவும்சொல்லவில்லை' என்றுநல்லவன்போலப்பேசத்தொடங்கியநரிமேலும்தொடர்ந்துகூறியது. "ஆனால், என்மனம்கேட்கவில்லை. நீங்கள்என்னநினைத்தாலும், எவ்வளவுகோபம்கொண்டாலும், எவ்வாறுதண்டித்தாலும்அதைப்பற்றிக்கவலைப்படாமல்தங்களுக்குத்தீங்குவராமல்காப்பாற்றவேண்டியவழிகளைச்செய்யவேண்டியதுஎன்கடமைஎன்றுதோன்றியது. தங்களுக்குநேரானபுத்திசொல்லி, செய்யவேண்டியதைச்செய்யும்படிசெய்துவிட்டால்தான், பகைவர்கள்ஒழிவார்கள்என்றுஉறுதிகொண்டேன். நல்லஆலோசனைகள்சொல்லிஅரசனுடையமயக்கத்தைஅகற்றுவதும், தகுந்தசூழ்ச்சிகளைச்செய்துபகைவர்களைஅழிப்பதும், முன்னோர்கள்இயற்றிவைத்தஆட்சிநூல்முறைதப்பாமல்அரசாளச்செய்வதும்அமைச்சர்களின்கடமையல்லவா? அதனால்தான்நான்இனிமேலும்சும்மாயிருக்கக்கூடாதென்றுதுணிந்துவந்தேன். அரசே, தாங்கள்பழையசேனைஅமைச்சரைவிலக்கிவிட்டு, இந்தக்கொம்புமாட்டைஅந்தப்பதவியில்வைத்துக்கொண்டீர்கள். தாங்களோஅதனிடம்நட்புக்கொண்டு, அன்பினால், அதைஉயர்ந்தஇடத்தில்வைத்தீர்கள். ஆனால்அந்தப்பொல்லாதமாடோ, தானேஇந்தக்காட்டைஅரசாளவேண்டும்என்றுநினைக்கிறது. அதற்குஎப்போதுவேளைவரும்என்றுகாத்திருக்கிறது!"
இதைக்கேட்டதும்சிங்கத்திற்குச்சிரிப்பாகவந்தது.' சே! என்னவார்த்தைசொன்னாய்? அந்தஎருதுஎன்னிடம்வந்துசேர்ந்தபோதுஎன்னிடம்என்றும்நட்பாகஇருப்பதாகஆணையிட்டுக்கூறியதேதன்வாக்குறுதியைமீறிஅதுஎன்அரசைத்தரன்ஆளநினைக்குமா? ஒருகாலும்அப்படியிருக்காது’ என்றுமறுத்துக்கூறியது.
‘அரசே, எதையும்நான்நன்றாகவிசாரியாமல்சொல்லவேமாட்டேன். தன்பலத்திற்குஉங்கள்பலம்ஈடாகாதென்றுஎன்எதிரிலேயேதங்களைஇகழ்ந்துபேசியதுஅந்தமாடு. இன்னும்அதுஎவ்வளவுகொழுப்பாய்ப்பேசியதுதெரியுமா? இதற்குமேலும்தாங்கள்என்னைநம்பவில்லைஎன்றால், நான்என்னசொல்லஇருக்கிறது?’ என்றுநரிசலித்துக்கொண்டது.
‘அரசரைஇகழுகின்றஓர்அமைச்சனையும், பிறஅமைச்சர்கள்பலரும்வருந்தும்படிசெய்கின்றஅரசனையும்திருமகள்விலகிச்செல்வாள். ஆட்சியும்அவர்கள்கையைவிட்டுப்போய்விடும், நல்லகுலத்தில்பிறந்தவர்களாகவும், அறிவிற்சிறந்தவர்களாகவும்உள்ளவர்களைவிலக்கிவிட்டுஒரேஒருவனைமட்டும், தலைமைஅமைச்சனாகவைத்தவுடன்அவனுக்குஆணவம்உண்டாகி, அவன்அரசையேகைப்பற்றிக்கொள்ளஎண்ணமிடுகிறான். கடைசியில்அவன்தன்அரசனையேகொல்லவும்நினைப்பான். தம்மைப்பெருமைப்படுத்திப்போற்றுகின்றவர்களுக்குகைமாறுசெய்யாமல், மூடர்களுக்குஉபகாரம்செய்யமுந்திக்கொண்டுசெல்பவர்கள்தமக்குத்தாமேகெடுதல்செய்துகொள்பவர்கள்ஆவார்கள். நஞ்சுகலந்தசோற்றையும், அசைந்துஆடுகின்றபல்லையும், வஞ்சகர்களின்நட்பையும், தன்னைமிஞ்சிநடக்கின்றஅமைச்சர்களையும்,உடனுக்குடன்அகற்றிவிடவேண்டும். இல்லாவிட்டால், அதனால்பெருந்துன்பம்உண்டாகும்’ என்றுபலவாறாகநரிஎடுத்துக்கூறியது.
'அப்படிஅந்தஎருதுஎனக்குஎன்னதீமைசெய்துவிட்டது, சொல்!' என்றுசிங்கம்கேட்டது.
‘அரசே, அதுதங்களைஇகழ்ந்துபேசுகிறதேஅதுஒன்றேபோதாதா?’ என்றுநரிகேட்டது.
'இருக்காது. நாமேஅதன்நட்பைவிரும்பிஏற்றுக்கொண்டோம். அப்படியிருக்கஅதுநமக்குத்தீமைசெய்யநினைக்கக்காரணமேயில்லை. அப்படியேஅதுதீமைசெய்யமுற்பட்டாலும், அதைப்பொறுத்துக்கொள்ளவேண்டுமேயல்லாமல்நாம்அதற்குத்தீமைசெய்யக்கூடாது’ என்றுசிங்கம்பெருந்தன்மையுடன்கூறியது.
அப்போதுஅந்தநரிஇடைமறித்து, ‘அரசே, அரசபதவியிலும்செல்வத்திலும்ஆசையில்லாதவர்கள்யாரேனும்இருக்கிறார்களா? அந்தக்காளைமாடுபொல்லாதது. அதைநீங்கள்நம்பிக்கொண்டிருப்பதேசரிஇல்லை. எப்போது, எந்தவகையால்உங்களைக்கொல்லலாம்என்றுஅதுசமயம்பார்த்துக்கொண்டிருக்கிறது. நல்லஅறிவுடையஅமைச்சர்கள்சொல்லும்புத்திமதிமுதலில்நஞ்சைப்போல்தோன்றினாலும்பின்னால், அளவில்லாதசெல்வத்தையும், வாழ்க்கையையும், இன்பத்தையும்உண்டாக்கும். தீயவர்களின்ஆலோசனைமுதலில்அமுதம்போலத்தோன்றுமேனும், விரைவில்எல்லா
வற்றையும்இழக்கச்செய்யும். தனக்குவேண்டியவர்களைவிட்டுவிட்டுவேண்டாதவர்களின்உதவியைநாடுகின்றஒருவன், துன்பம்என்கிறமுதலையின்வாயில்அகப்பட்டு, துணைசெய்வார்யாருமின்றிஉயிரைஇழக்கநேரிடும். அமுதுாற்றிவளர்த்தாலும்எட்டிமரத்தின்நச்சுக்குணம்மாறாது. பாலுற்றிவளர்த்தாலும்பாம்புநஞ்சைத்தான்கக்கும். தேனைஊற்றிஊற்றிவளர்த்தாலும்வேப்பமரத்தின்கசப்புமாறாது. அதுபோல, தீயவர்களுக்குஎத்தனைநன்மைசெய்தாலும்அவர்களுடையகெட்டஎண்ணம்மாறாது. தீயவர்களைஅடியோடுஅழித்துவிடவேண்டும். அப்போதுதான்தீமைஅழியும். இத்தனையும்ஏன்சொல்லுகிறேன்என்றால், அரசனுக்குஒர்அபாயம்வந்தால்அதைமுன்கூட்டியேஅறிவிப்பதுஅமைச்சன்கடமையாகும். தன்அறிவினாலேஅந்தஅபாயம்வராமல்தடுப்பதும்அரசனுக்குமனஉறுதிஉண்டாக்குதலும்அந்தஅமைச்சனுக்குரியகடமைகளாகும். நான்இவ்வளவுஎடுத்துச்சொல்லியும்தாங்கள்உணர்ந்ததாகத்தெரியவில்லை. மதம்பிடித்தயானையைப்போல்மனம்போனவழியில்செல்வதும், பெருங்கேடுஏற்பட்டகாலத்தில், அமைச்சர்களைவெறுத்துப்பேசுவதும்மன்னர்களின்இயல்பாகப்போய்விட்டது’ என்றதுநரி.
‘சரி, நான்இன்றுஅந்தஎருதைஇதுபற்றிக்கேட்கிறேன்” என்றதுசிங்கம். 'சரிதான், சரிதான்! இதைவிடவேறுஎன்னஆபத்துவேண்டும்? சூழ்ச்சிக்காரன்ஒருவனைப்பற்றியயோசனைகளைமனத்தில்வைத்துக்கொள்ளாமல், அவனிடமேவாய்விட்டுச்சொன்னால்அதைவிடஆபத்துவேறுஎன்னவேண்டும்?
'தனக்கென்றுசிறப்பாகஆசிரியர்கூறியஉபதேசமொழிகளையும், தன்மனைவியிடம்கண்டஇன்பத்தையும், தன்னிடம்இருக்கும்செல்வத்தையும், தன்கல்வியையும், வயதையும், தான்செய்யும்தருமத்தையும், தன்ஆலோசனையையும்பிறர்அறியக்கூறக்கூடாது .கூறினால், அதனால்ஏற்படும்பயன்அழிந்துபோகும்’ என்றுஉபதேசம்புரிந்ததுநரி.
“என்னைஅந்தமாடுஎன்னசெய்துவிடமுடியும்?’ என்றுசிங்கம்தன்வலிமையும்ஆங்காரமும்தோன்றக்கேட்டது.
அந்தமாட்டைநம்புவதேகூடாது. அதைப்பக்கத்தில்வைத்திருப்பதேசரியல்ல. அதைமேலும்கூடவைத்துக்கொண்டிருந்தீர்களானால்மூட்டைப்பூச்சியால்அழிந்தசீலைப்பேனைப்போல்அழியநேரிடும்” என்றுஎச்சரித்ததுநரி.
அந்தஎருதுஎன்னைக்கொல்லநினைத்திருக்கிறதுஎன்பதைநான்எப்படித்தெரிந்துகொள்வது?’ என்றுசிங்கம்கேட்டது.

'இப்போதுஅதைத்தெரிந்துகொள்ளமுடியாது. அதுவாலைமுறுக்கிக்கொண்டு, கொம்பைஅசைத்துஎகிரிக்குதித்துப்பாயவரும்போதுதான்தெரியும்! அரசே, உங்கள்நன்மைக்காகத்தான்இவ்வளவும்சொன்னேன். மனத்தில்வைத்துக்கொள்ளுங்கள். வாய்விட்டுச்சொல்லிவிடாமல்நீங்கள்எதற்கும்தயாராகஇருங்கள். அந்தமாடுதங்களைப்பாயவரும்போதுநீங்கள்அசட்டையாகஇருந்துவிடாதீர்கள். உயிருக்குஆபத்துஏற்பட்டுவிடும். பாயவரும்மாட்டைஉயிர்பதைக்கப்பதைக்கவதைத்துக்கொல்லுங்கள்’ என்றுசொல்லிவிட்டுநரிசிங்கத்திடமிருந்துபுறப்பட்டது. எருதைப்போய்க்கண்டது.
‘நரியப்பா, நலம்தானே?’ என்றுநலங்கேட்டுவரவேற்றதுஎருது.

காளையரசே! இந்தச்சிங்கஅரசனிடம்சேவைசெய்துவாழ்பவர்களுக்குநலம்எங்கிருந்துவரும்? பொல்லாதபாம்புபோலஎப்போதும்கொலைத்தொழிலேகுறியாய்வாழும்இந்தச்சிங்கத்தைச்சேர்ந்துவிட்டோம். நமக்குக்கிடைக்கும்செல்வத்தால்அதன்பயன்கிடையாது. நாம்எண்ணுகின்றஏண்ணங்களாலும்ஏதும்பயனில்லை. நாம்எதைத்தான்அனுபவிக்கமுடிகிறது?’ என்றுநரிகேட்டது.
நரியப்பா, மனத்தில்வஞ்சகம்இல்லாமல், மன்னன்மணமறிந்துநடந்துகொண்டால்துன்பமுண்டோ? எவ்வளவுகோபக்காரராகஇருந்தாலும்நம்மிடம்அன்பாய்இருப்பார்களே! தங்கள்சுற்றத்தாரைப்போலநம்மையும்கருதிஉயர்வுதருவார்களே!’ என்றுஎருதுகூறியது.
காளையரசே, செல்வத்தையடைந்துஅதனால்கிடைக்கும்இன்பத்தைஅடையாதவர்கள்இல்லை. பெண்களின்இன்பத்தையடைந்துஅதனால்தங்கள்பலம்இழக்காமல்வாழ்ந்தவர்கள்இல்லை. கொடியசாவுக்குத்தப்பிவாழ்ந்தவர்களும்இல்லை. அதுபோல்அரசர்கள்மனம்விரும்பும்படிநடக்கக்கூடியவர்களும்இந்தஉலகத்தில்இல்லை.
‘தீயவர்களைச்சேர்ந்துநலமடைந்தவர்கள்யாருமேஇல்லை. பிச்சைக்குப்போய்துன்பப்படாதவர்கள்ஒருவரும்இல்லை. களவுத்தொழிலினாலேபெருஞ்செல்வத்தைஉண்டாக்கிக்கொண்டவர்கள்எவரும்இல்லை. அதுபோலபயமற்றஅரசர்களாலேவாழ்வுஅழியாதவர்களும்யாருமேஇல்லை.
‘நல்லஇடத்தைஅடைந்து, தங்கள்நல்லகாலத்தினாலே, நல்லபொருளைஅடைந்துநல்லதோழர்களைப்பெற்று, நடுக்கமில்லாதமனவுறுதிபடைத்தவர்கள்சிலநாள்இன்பவாழ்வுவாழ்வார்கள். மற்றவர்கள்எப்போதுஎந்தக்கணத்தில்அழிவார்கள்என்றுசொல்லமுடியாது’ என்றுகூறிமுடித்ததுநரி.
‘நரியப்பா, இதெல்லாம்எதற்காகச்சொல்கிறாய். அரசர்உனக்குஎன்னகேடுநினைத்தார்?” என்றுகாளைகேட்டது.
‘அரசர்வஞ்சகமாய்நடந்துகொண்டாலும்அதைவெளியில்சொன்னால், சொல்பவர்களுக்குத்தான்அவமானம்உண்டாகும். இந்தச்செய்திஅரசனுக்குச்சிறிதுதெரிந்தாலும்என்னைக்கொன்றுவிடுவான்?.
'இருந்தாலும்நீயும்நானும்மனம்ஒன்றியநண்பர்கள். ஆகையால்தான்சொல்கிறேன். நாளைக்குச்சிங்கமன்னன்தன்சேனைகளுக்கெல்லாம்ஒருபெரியவிருந்துவைக்கப்போகிறான். அதற்குஉன்னைத்தான்கொன்றுகூறுபோடஎண்ணியிருக்கிறான்' என்றுகூறிமுடித்ததுநரி.
இதைக்கேட்டதும்அந்தஎருதின்நெஞ்சுகலங்கியது. நரியப்பா, அரசன்என்னைக்கொல்லநினைத்ததற்குஎன்னகாரணம்?’ என்றுநாக்குழறக்கேட்டது. ப_2
. “இளைத்தவர்கள்மேல்எல்லாருக்குமேகோபம்வரும்என்பார்கள். கொடியஅரசர்களின்கோபத்திற்குக்காரணம்யாரால்அறியமுடியும்?
பரந்துகிடக்கும்கடலின்ஆழத்தைஅளந்தாலும்அளக்கலாம்; உலகத்தின்சுற்றளவைஅளந்தாலும்அளக்கலாம்; மலையின்உயரத்தைஅளந்தாலும்அளக்கலாம்; பெண்களின்மனத்தைஅளந்தாலும்அளக்கலாம்; தன்னிடம்வருபவர்களைஇரைக்காகக்கொல்லும்இந்தஅரசர்களின்மனத்தையாராலும்அளக்கமுடியாது.

'மின்னல்கொடிபோன்றபெண்களின்மனம்எப்போதும்காமுகரையேவிரும்பிநிற்கும். பொன்னெல்லாம்உலோபிகள்சேர்த்துவைத்திருக்கும்பொருளோடுதான்போய்ச்சேரும். பெருமழையும்கடலிலேபோய்த்தான்பெய்யும். அதுபோல், அரசர்களும்அருகதைஇல்லாதவர்களைத்தான்விரும்பிக்கூடுவார்கள்.
'ஏதாவதுஒருகாரணத்தால்அரசன்கோபம்கொண்டிருந்தால், வேறொருகாரணம்கூறிஅவன்மனத்தைத்திருத்திவிடமுடியும். காரணம்இல்லாமலேகோபம்கொண்டவனைஎப்படிமனம்மாற்றமுடியும்? அன்றுஉன்னைஅழைத்துவந்துஅதிகாரம்கொடுத்ததுசிங்கம். இன்றுகொல்லநினைக்கிறது. இதையெல்லாம்நினைத்தால்பாவமாயிருக்கிறது!’ என்றுநரிஇரக்கபாவத்துடன்பேசியது.

'துட்டர்களுக்குதொடர்ந்துநன்மைசெய்வதும், மூடர்களிடம்இனியமொழிபேசுவதும், ஊமைக்குஉபதேசம்செய்வதும்நட்டமேதவிரஒருநன்மையும்இல்லை.
‘அறிவில்லாதவனுக்குநல்லறிவுபுகட்டுவதும், தீயஅற்பர்களிடத்தும்தன்இல்லாமைகூறிஇரப்பதும், துன்பமும்நோயும்தரும்பெண்களைக்காப்பதும், கல்லின்மேல்எறிந்தகண்ணாடிவளையல்போல்பயனின்றிக்கெடும்.
‘உப்புமண்நிலத்தில்பெய்தமழையும், செவிடர்களுக்குச்செய்தஉபதேசமும், தீயவர்களுக்குப்படைத்தசோறும்ஒன்றுதான்.
‘சந்தனமரக்காட்டிலும், தாமரைக்குளத்திலும், தாழைச்செடியிலும்பாம்பும்முதலையும்முள்ளும்சேர்வதுபோல்அரசர்களைத்துட்டர்கள்போய்ச்சூழ்ந்துகொள்வார்கள்.
'ஆகவேநல்லறிவுபடைத்தவர்கள், மன்னர்களிடம்போய்ச்சேர்ந்தால், அம்மன்னர்களைமனமாறுபாடடையச்செய்வதும், அவர்களைக்கொல்லநினைப்பதும், சூதுகள்புரிவதும்துட்டர்களின்இயற்கைநீதியேயாகும்,’
இப்படியெல்லாம்நரிகூறியதும்அந்தமாடுதுயரத்துடன், சிங்கமன்னனின்இனியசொல்லும், ஆதரவானபேச்சும், அன்புப்பார்வையும்எல்லாம்உண்மைஎன்றுநான்நினைத்துக்கொண்டிருந்தேன். கடைசியில்அவன்என்னைக்கொன்றுவிடமுடிவுசெய்துவிட்டானா? இதுநீதியா? நியாயமா?’ என்றுகேட்டது.
‘உனக்குநமதுமன்னன்வணக்கம்சொல்லியதும், உன்னைத்தழுவிக்கொண்டதும், அருகில்வைத்துஉபசாரங்கள்செய்ததும்எல்லாம், ஒருநாள்கொன்றுவிடலாம்என்றஎண்ணத்தோடுதான்.
‘கடவுள்இருளைக்கடக்கவிளக்கைப்படைத்தார். கடலைக்கடக்கத்தோணியைஉண்டாக்கினார். ஆனால்தீயவர்நெஞ்சில்உள்ளவஞ்சகத்தைக்கடக்கத்தக்கஎதையும்அவர்உண்டாக்கவில்லை.
‘யானையின்வெறியைஅங்குசத்தால்அடக்கலாம். வெயிலின்கொடுமையைவிசிறியால்தணிக்கலாம். அற்பர்களின்வெறியைஅடக்கமட்டும்வழியில்லை. அவர்கள்செத்தால்தான்அதுஅவர்களோடுசேர்ந்துஅழியும்.
'பூவில்இருக்கும்தேனைஉண்டுஇன்பமாகவாழ்வதைவிட்டு, யானையின்மதநீரைஉண்ணப்போய்அதன்முறம்போன்றகாதினால்அடிபட்டுச்சாகும்வண்டு. அதுபோல்நல்லவர்கள்பேச்சைக்கேட்காமல், தீயவர்கள்சொல்வதைக்கேட்டுஒழிந்துபோவதுதுடுக்குடையஅரசர்களின்தன்மை.

‘தீயவர்களின்சேர்க்கையால்நல்லவர்களும்நட்டம்அடைவார்கள்; அதனால்ஒருநன்மையும்வராது. ஒருகாகம், ஒர்ஒட்டகத்தைஅழித்தகதையும்இதைப்போன்றதுதான்.
கொடியவர்களோடுகூடியவர்கள்யாராயிருந்தாலும்அவர்கள்உயிர்விட்டுஒழியவேண்டியதுதான். மூர்க்கத்தனமுள்ளஅரசர்கள்கையில்இறப்பதைவிடப்போரில்இறப்பதுசிறப்பாகும்.
போரில்உயிர்விட்டால்சுவர்க்கம்போகலாம்இல்லாவிட்டால்இந்தஉலகத்தைஆளலாம். வீணாக, ஒன்றுக்கும்பயனில்லாமல்உயிரைவிட்டால், சொர்க்கமும்கிடைக்காது; பூமியும்கிடைக்காது; நரகத்தில்தான்போய்ச்சேரவேண்டும் .
பகைவர்களோடுபோரிட்டுஇறந்தவர்கள்இறந்தவர்களாகக்கருதப்படமாட்டார்கள். உயிருக்குப்பயந்துகொண்டுஉயிரோடுஇருப்பவர்கள்வெறும்நடைப்பிணங்களேயன்றிவேறல்லர்.
அறிவில்லாதவர்கள், தங்களுக்கிருக்கும்பலத்தைவைத்துக்கொண்டுமற்றவர்களைச்சிறியவர்கள்என்றுமதித்துவிடுகிறார்கள். இதுஎப்படியிருக்கிறதென்றால்சிட்டுக்குருவியைஅற்பமென்றுநினைத்துகடைசியில்கடலரசன்தன்வீராப்புஅடங்கியதைப்போலிருக்கிறது.’ என்றுபலகதைகளைக்கூறி, நரிகாளைமாட்டுக்குக்கோபத்தைஉண்டாக்கிவிட்டது.
எல்லாவற்றையும்உண்மைஎன்றுநினைத்துக்கொண்டஎருது,'ஒப்புயர்வில்லாதஅந்தச்சிங்கத்தைச்சண்டையிட்டுக்கொல்லஎப்படிமுடியும்? அதற்குஒருதந்திரம்நீசொல்லவேண்டும்’ என்றுநரியைத்தானேகேட்டது.
'சிங்கம்உன்னைக்கொல்லவரும்போது, கோபத்துடன்வரும். அப்போதுஅதன்உடல்நடுங்கிக்கொண்டிருக்கும். வாயைப்பிளந்துகொண்டுகண்கள்சிவக்கஅதுபாய்ந்துவரும். அந்தசமயம்பார்த்துவாலைத்தூக்கிக்கொண்டுதலையையும்கொம்பையும்ஆட்டியபடிஎதிரில்சென்றுபோரிடு’ என்றுநரிவழிசொல்லியது.
இவ்வாறுஎருதைமுடுக்கிவிட்டுநரி, நேரேசிங்கத்திடம்சென்றது.
'இன்றுஎருதுதங்களைக்கொல்லவருகிறதுஅரசே, எச்சரிக்கையாயிருங்கள்’ என்றுசொல்லிவிட்டுச்சென்றது.
சிறிதுநேரத்தில்எருதுஅங்கேவந்தது. அப்போதுசிங்கம்கோபத்தோடுஅதைஉற்றுப்பார்த்தது. அதன்கண்கள்சிவந்திருந்தன. இதைக்கண்டதும், நம்மோடுசண்டைசெய்யச்சிங்கம்தயாராகஇருக்கிறதுஎன்றுநினைத்துக்காளைமாடுவாலைத்தூக்கிக்கொண்டுகொம்பைஆட்டியபடிஒடிவந்தது.
சிங்கம்அதன்வாயைப்பிளந்துகொண்டுஅதன்மேல்சீறிப்பாய்ந்தது. மண்ணும்விண்ணும்அதிர,

கடலும்மலையும்அதிர, அவைஒன்றொடொன்றுமோதிப்போரிட்டகாட்சிபார்க்கப்பயங்கரமாயிருந்தது. இரண்டுநரிகளும்இந்தப்பயங்கரமானகாட்சியைஒருபுதர்மறைவில்நின்றுபார்த்துக்கொண்டிருந்தன. காரணமில்லாமல்அவையிரண்டும்ஒன்றையொன்றுஉதைப்பதும்மோதுவதும்அறைவதும்கண்டஇரண்டாவதுநரிக்குமனம்பொறுக்கவில்லை.

அது, முதல் , நரியைப்பார்த்து, 'போதும், அரசர்க்குத்துன்பம்உண்டாக்குவதுதெய்வத்துரோகம்அல்லவா? சண்டையைவிலக்கிமீண்டும்நட்பைஉண்டாக்கிவிடுவதுதான்சரி.
'உண்மையில்லாமல்புண்ணியம்தேடுவோரும், உறவினர்களைக்கெடுத்துச்செல்வம்சேர்ப்போரும், பலாத்காரத்தினால்பெண்களைஅடைவோரும், உயிருக்குயிரானஇருவரைக்கெடுத்துத்தாம்வாழநினைப்போரும்உலகில்இன்பமடையமாட்டார்கள். துட்டபுத்திகெட்டதைப்போலவும், இரும்பைஎலிதின்றதென்றசெட்டியைப்போலவும்துன்பமடைவார்கள். ஆகவே, நீஇப்போதேபோய்அவர்கள்சண்டையைவிலக்கிவிடு' என்றுபலவாறாகஎடுத்துச்சொல்லியது.
இதைக்கேட்டமுதல்நரிஒருவாறாகமனம்தேறிச்சிங்கத்தைநோக்கிச்சென்றது. அதற்குள்சிங்கம்எருதைக்கொன்றுவிட்டது.
செத்துக்கிடந்தமாட்டைக்கண்டுசிங்கம்கண்ணிர்விட்டுப்புலம்பிக்கொண்டிருந்தது,
அருகில்சென்றமுதல்நரி, சிங்கத்தைப்பார்த்து, 'சண்டைக்குவந்தவனைத்தானேகொன்றீகள்? இதற்குஏன்அழவேண்டும்அரசே?' என்றுகேட்டது. .
ஒருநன்மையும்தராதநச்சுமரமானாலும், நாம்வளர்த்ததைநாமேவெட்டுவதென்றால்உளம்பொறுக்குமோ, உலகம்புகழும்ஓர்அமைச்சனைக்கொல்லுகின்றஅரசனுக்குப்பெரும்கேடுவராதா?’ என்றுகூறிச்சிங்கம்வருந்தியது.
‘அரசே, கடமைப்படிநடவாதவர்களையும், தன்சொல்கேளாதமனைவியையும், மனத்தில்கபடம்நினைத்திருக்கும்தோழனையும், பெரும்போரிலேபுறமுதுகிட்டுஓடும்சேனையையும், ஆணவவெறிபிடித்திருக்கும்அமைச்சனையும்முன்பின்பாராமல்அழித்துவிடுவதேசிறந்தநீதியாகும். இவர்களால்கிடைத்தஇன்பத்தைப்பற்றிஅரசர்கள்நினைத்துப்பார்க்கவேண்டியதில்லை.”
இப்படிப்பலவிதமாகக்கூறி, அந்தச்சிங்கத்தின்நெஞ்சில்இரக்கமேஇல்லாமல்அடித்துவிட்டதுமுதல்நரி.
பிறகு, இரண்டாவதுநரியையும்சேர்த்துக்கொண்டுசெத்துக்கிடந்தஎருதின்உடலைஇழுத்துச்சென்றுகாட்டின்வேறொருபக்கத்தில்கொண்டுபோய்ப்போட்டுத்தன்இனமாகியநரிகளுக்கெல்லாம்விருந்திட்டுத்தானும்தின்றுமகிழ்ந்திருந்தது.

2. ஆப்புபிடுங்கியகுரங்கு
பழையஊர்ஒன்றில்ஒருகோயில்இருந்தது. கோயில்திருப்பணிக்காகமரங்களைஅறுத்துக்கொண்டுவந்துபோட்டிருந்தார்கள். அந்தமரங்களின்ஒன்றைஇரண்டாகஅறுத்துக்கொண்டிருந்ததச்சன், பாதிஅறுத்தபின்அறுத்தபிளவிலேஆப்புவைத்துவிட்டு, மீதியைஅறுக்காமல்சென்றுவிட்டான். கோயிலையடுத்திருந்தமாதுளைமரச்சோலையில்பலகுரங்குகள்இருந்தன. அந்தக்
குரங்குகளில்சில, தாவிவிளையாடிக்கொண்டேமரம்அறுத்துக்கிடந்தஇடத்திற்குவந்துசேர்ந்தன. அவற்றில்ஒருகுரங்குபாதிபிளந்துகிடந்தமரத்தின்மேல்வந்துஉட்கார்ந்தது. அதுசும்மாயிருக்காமல், அந்தமரப்பிளவில்வைத்திருந்தஆப்பை
அசைத்துஅசைத்துப்பிடுங்கியது. ஆப்பைப்பிடுங்கியவுடன், பிளந்திருந்தமரத்தின்இருபகுதிகளும்நெருங்கின. அவற்றிற்கிடையிலேமாட்டிக்கொண்டஅந்தக்குரங்குஉடல்நசுங்கிஉயிர்விட்டது.
ஆகையால்தனக்குத்தொடர்பில்லாதஒருகாரியத்தில்தலையிடக்கூடாது.

3. முரசொலிகேட்டநரி

ஒருநரிபசியினால்இரைதேடித்திரிந்துகொண்டிருந்தது. அப்போதுஒருபெருஞ்சத்தம்கேட்டது. அதுகேட்டுநரிநெஞ்சம்துணுக்குற்றது. தன்னைப்போலஇரைதேடிக்கொண்டுஏதேனும்பெரியமிருகம்ஒன்றுபுறப்பட்டிருக்கிறதோஎன்றுஅதுபயந்தது. தன்பசிதீருமுன்தான்பிறிதொரு

மிருகத்தின்பசிக்குவிருந்தாகிவிடக்கூடுமோஎன்றுகலங்கியது. இருந்தாலும், இதுஎன்னஎன்றுதெரிந்துகொள்ளவேண்டும்என்றுமனத்தைத்திடப்படுத்திக்கொண்டது. மெல்லமெல்லஅதுகாட்டைச்சுற்றிக்கொண்டுஒலிவந்ததிசைநோக்கிச்சென்றுஒருபோர்க்களத்தையடைந்தது. அங்குயாரும்இல்லை. ஆனால், அங்கிருந்துதான்ஒலிவந்தது. நரி, மெல்லமெல்லநெருங்கிச்சென்றுபார்த்தது. ஒருமரத்தடியில்பழையபோர்முரசுஒன்றுகிடந்தது. அதற்குநேரேமேலேஇருந்தமரக்கிளை, காற்றில்மேலும்கீழுமாகஅசையும்போது, அந்தமுரசைத்தாக்கியது. அதுதாக்கும்போதெல்லாம்பெரும்சத்தம்கேட்டது. இதைநேரில்கண்டபிறகு, அந்தநரி, 'பூ! வெறும்தோல்முரசுதானா? இதற்காநான்இவ்வளவுபயப்பட்டேன்!' என்றுசொல்லிக்கொண்டேபோய்விட்டது.

4. தங்களால்தாங்களேகெட்டோர்
முன்காலத்தில்ஒருசாமியார்இருந்தான். அவன்பெயர்தேவசன்மாஎன்பது. அவன்பிச்சையெடுத்துப்பிழைத்துவந்தான். பிச்சையெடுத்துச்சேர்த்தகாசையெல்லாம்அவன்ஒருகந்தையில்முடிந்துவைத்திருந்தான். அவன்பணம்சேர்த்துவைத்திருப்பதுயாருக்கும்தெரியாது. ஆனால், இதைஎப்படியோஆஷாடபூதிஎன்றபார்ப்பனன்தெரிந்துகொண்டுவிட்டான். ஆஷாடபூதிஒருதிருடன்திருடிப்பிழைப்பதேஅவன்தொழில். சாமியாருடையகந்தையைத்திருடிஎடுத்துக்கொண்டுவிட்டால், பிறகுநாள்தோறும்திருடவேண்டியதில்லை. அந்தப்பணத்தைக்கொண்டுபலநாள்இன்பவாழ்வுநடத்தமுடியும்என்றுஆஷாடபூதிநினைத்தான். இதற்குஅவன்ஒருசூழ்ச்சிசெய்தான்.
ஆஷாடபூதிசாமியாரிடம்வந்து, அவன்காலில்விழுந்துவணங்கினான். தனக்குத்திருமணமாகவில்லைஎன்றும், தன்னைச்சீடனாகஏற்றுக்கொண்டு, நல்லவழிகாட்டவேண்டும்என்றும்வேண்டினான். தேவசன்மாவும்அவனைத்தன்சீடனாகஏற்றுக்கொண்டான். ஆஷாடபூதியும்மிகவும்நல்லவன்போல்சாமியாருக்குப்பணிவிடைகள்செய்துவந்தான்.
இப்படியிருந்துவரும்நாளில்ஒருநாள், ஓர்அந்தணன்இவர்களுக்குவிருந்துவைத்தான். விருந்துண்டுவிட்டுப்புறப்பட்டஅவர்கள்நெடுந்துாரம்சென்றபிறகு, ஆஷாடபூதிதன்தலையில்கிடந்தஒருதுரும்பைக்காட்டி, 'சுவாமி, நமக்குச்சோறுபோட்டஅந்தணன்வீட்டிலிருந்துஇந்தத்துரும்புஎன்னையும்அறியாமல்ஒட்டிக்கொண்டுவந்துவிட்டது. உணவளித்தவன்வீட்டுப்பொருளைஒருதுரும்பானாலும்எடுத்துவரலாமா? இதோநான்ஒடிப்போய்இதைத்திருப்பிக்கொடுத்துவிட்டுவந்துவிடுகிறேன்’ என்றுஓடினான். சிறிதுதூரம்சென்றுஒருமறைவானஇடத்தில்நெடுநேரம்உட்கார்ந்திருந்துவிட்டுஅவன்திரும்பிவந்தான்.
இந்நிகழ்ச்சிக்குப்பிறகு, தேவசன்மாவுக்குதன்சீடன்மேல்நம்பிக்கைஅதிகமாகியது.
ஒருநாள்சாமியாரும்சீடனும்ஒருகுளக்கரையைஅடைந்தார்கள். குளத்தில்இறங்கிக்கால்
கைகழுவிக்கொண்டுவருவதற்காகசாமியார்போகும்போது, கரையில்இருந்தஆஷாடபூதியிடம்என்றும்விட்டுப்பிரியாததன்கந்தைமுடிப்பைக்கொடுத்து. வைத்திருக்கும்படிகூறிவிட்டுப்போனான்
சாமியார்கைகால்கழுவிக்கொண்டுதிரும்பும்போது, குளத்தின்கரையில்மற்றொருபக்கத்தில், இரண்டுஆட்டுக்கடாக்கள்முட்டிமோதிச்சண்டை

போட்டுக்கொண்டிருந்தன. துரத்திலிருந்துஇதைப்பார்த்துக்கொண்டிருந்தஒருநரிஅவற்றின்தலையிலிருந்துவழிந்துதரையில்கிடக்கும்இரத்தத்தைக்குடிப்பதற்காகஅங்குவந்தது. இரண்டுகடாக்களுக்குஇடையில்புகுந்துஇரத்தம்குடிக்கத்தொடங்கியநரிஅவற்றின்இடையில்சிக்கிமுட்டுப்பட்டுமோதுண்டுஉயிரைஇழந்தது. இந்தவேடிக்கையைப்பார்த்துக்கொண்டேசாமியார்தேவசன்மாதன்னைமறந்துநின்றுகொண்டிருந்தான்.
இந்தவேளைபோனால்இன்னொருவேளைவாய்க்காதுஎன்றுஎண்ணியஆஷாடபூதிஅப்போதே, சமியாரின்கந்தைமுடிப்பைஎடுத்துக்கொண்டுஓடிவிட்டான். காட்டுக்குள்எங்கோசென்றுமறைந்துவிட்டான். திரும்பிவந்தசாமியார்தன்சீடனைக்காணாமல்மனம்வருந்தினான். அவனைத்தேடிக்கொண்டுஊர்ஊராகஅலைந்தான்.
அலைந்ததுதான்மிச்சம். கடைசிவரைஅவன்ஆஷாடபூதியைக்கண்டுபிடிக்கவில்லை.
அறிவின்மையால்தேவசன்மாதன்கைப்பொருளைஇழந்தான். யோசனையில்லாமல்ஆட்டுக்கடாப்போரில்நடுவில்சென்றுமாட்டிக்கொண்டுநரிஉயிரிழந்தது.
இதுதான்தங்களுக்குத்தாங்களேகேடுசெய்துகொண்டகதை.

5. கரும்பாம்பைக்கொன்றகாகம்
ஒருமரக்கிளையில்ஆணும்பெண்ணுமாகஇரண்டுகாகங்கள்கூடுகட்டிக்கொண்டுவாழ்ந்துவந்தன. அந்தக்காகங்கள்அம்மரக்கிளையில்நெடுநாளாகத்தங்கியிருந்துவந்தன. அந்தமரத்தில்இருந்தஒருபொந்துக்குக்கரும்பாம்புஒன்றுபுதிதாகவந்துசேர்ந்தது. அந்தக்கரும்பாம்பு, பெண்காகம்இடுகின்றமுட்டைகளைஎல்லாம்ஒன்றுவிடாமல்குடித்துக்கொண்டிருந்தது. காகங்களால்இதைப்பொறுத்துக்கொண்டிருக்கமுடியவில்லை.
ஆண்காகம்தன்உயிர்நண்பனானநரியொன்றிடம்போய்யோசனைகேட்டது.
'அந்தப்பாம்பைக்கொல்வதற்குநான்ஒருவழிசொல்கிறேன். அரசியாரின்குளியல்அறைக்குப்பறந்துபோ. அவர்கள்குளிக்சுச்செல்லும்போதுகழற்றிவைக்கும்நகைகளில்ஒன்றைக்கொண்டுவந்துபொந்தில்போட்டுவிடு. பிறகுஎன்னநடக்கிறதுஎன்றுபார்!' என்றதுநரி.

காகம்அப்பொழுதேஅரண்மனைக்குப்பறந்துசென்றது. அரசிஅப்போதுதான்நகைகளைக்கழற்றிவைத்துவிட்டுக்குளிக்கத்தொடங்கினாள். காகம்போய்ஒருநகையைக்கெளவிக்கொண்டுபறந்தது. அரசிகூவினாள். உடனேவேலைஆட்கள்ஓடிவந்தார்கள். அரசிநடந்ததைக்கூறியதும்வேலையாட்கள்காகத்தைப்பின்தொடர்ந்துஒடிவந்தார்கள், காகம்பறந்துவந்து, பாம்புஇருந்தபொந்துக்குள்நகையைப்போட்டுவிட்டுவேகமாகப்பறந்துசென்றது. பின்தொடர்ந்துவந்தவேலைக்காரர்கள்இதைக்கண்டார்கள். உடனேவேகமாகஓடிவந்துஅந்தமரப்பொந்தைப்பிளந்தார்கள். உள்ளேயிருந்தபாம்புசீறிக்கொண்டுவெளியில்வந்தது. அரண்மனையாட்களில்ஒருவன், தன்வாளால்அதைஇருதுண்டாகவெட்டிப்போட்டான். பிறகுவேலைக்காரர்கள்பொந்துக்குள்கிடந்தநகையைஎடுத்துக்கொண்டுபோய்அரசியிடம்கொடுத்தார்கள்.
காகங்கள்எவ்விதமானகவலையும்இல்லாமல்முட்டையிட்டுக்குஞ்சுபொரித்துமேலும்பலநாட்கள்இன்பமாகவாழ்ந்துவந்தன.
சூழ்ச்சியினால்எதையும்எளிதாகமுடிக்கலாம்என்பதற்குஇந்தக்கதைஓர்எடுத்துக்காட்டாகும்.

6. சிங்கத்தைக்கொன்றமுயல்
ஓர்அடர்ந்தகாட்டில்சிங்கம்ஒன்றுஇருந்நதுஅதுஅந்தக்காட்டில்இருந்தமற்றவிலங்குகளைஎல்லாம்கண்டபடிவேட்டையாடிக்கொன்றுதின்றுகொண்டிருந்தது. இவ்வாறுநாளுக்குநாள்அதன்வெறிச்செயல்அதிகமாகிக்கொண்டுவந்தது. இதைக்கண்டமற்றவிலங்குகளெல்லாம்ஒன்றாகக்கூடிஅந்தச்சிங்கத்தினிடம்சென்றன.
'சிங்கம், இந்தக்காட்டில்உள்ளவிலங்குகளைஎல்லாம்கண்டபடிவீணாகக்கொன்றுகொண்டிருக்கவேண்டாம். இப்படிச்செய்துகொண்டிருந்தால்விரைவில்இந்தக்காட்டில்விலங்குகளேஇல்லாமல்போய்விடும். ஆகையால்நாங்கள்இதற்குஒர்ஏற்பாடுசெய்கிறோம். நாள்ஒன்றுக்குஒருவிலங்குஆகஉனக்குஇரையாகஅனுப்பிக்கொண்டிருக்கிறோம்' என்றன.
சிங்கம்இந்தஏற்பாட்டுக்குஒப்புக்கொண்டது. அதுபோல்ஒவ்வொருநாளும்ஒவ்வொருவிலங்காகவந்துசிங்கத்திற்குஇரையாகிக்கொண்டிருந்தன.
ஒருநாள்ஒருமுயலின்முறைவந்தது.' இனிநாம்பிழைக்கமுடியாது. இருந்தாலும்ஒருமுயற்சிசெய்துபார்க்கலாம். இதில்நாம்வெற்றிபெற்றால்காட்டுவிலங்குகளைஎல்லாம்காப்பாற்றியபெருமைநமக்குச்சேரும். நாமும்சாவினின்றுதப்பலாம்’ என்றுஅந்த

முயல்ஒருசிந்தனைசெய்தது.

சிங்கத்தின்பசிவேளைக்குச்செல்லவேண்டியமுறைப்படிசெல்லாமல், நெடுநேரம்கழித்துச்சென்றதுமுயல். வேளைதப்பிவந்தமுயலைக்கண்டசிங்கத்திற்குக்கோபம்வந்துவிட்டது.
‘ஏ, அற்பமுயலே, பெரியமதயானைகூடஎன்பசிவேளைக்குத்தப்பிவந்ததில்லை. நீஏன்பிந்திவந்தாய்?’ என்றுசீறியது.
ஐயா, கோபம்கொள்ளாதீர்கள். உங்கள்பசிவேளைக்குச்சரியாகவந்துசேரவேண்டும்என்றுசரியானநேரத்தில்தான்புறப்பட்டேன். ஆனால்வழியில்மற்றொருகொடியசிங்கத்தைக்கண்டு, எங்கேஅதன்கண்ணில்பட்டால்அதற்குஇரையாகிவிடுவோமோஎன்றுபயந்துஓரிடத்தில்ஒளிந்துகொண்டிருந்தேன். மெல்லமெல்லஅந்தச்சிங்கம், அங்கிருந்தஒருபெரியகுகைக்குள்நுழைந்துசென்றதைக்கண்டபிறகு, வெளிப்பட்டுவேகமாகஉங்களிடம்வந்துசேர்ந்தேன்’ என்றதுஅந்தமுயல்.
‘என்னைத்தவிரஇன்னொருசிங்கமும்இந்தக்காட்டில்இருக்கிறதா? எங்கேஅதைக்காட்டுபார்க்கலாம்! 'என்றதுசிங்கம்.
உடனேமுயல்சிங்கத்தைஅழைத்துக்கொண்டுபோய்ப்பக்கத்தில்இருந்தஒருபாழுங்கிணற்றைக்காட்டியது. சேறும்நீருமாகஇருந்தஅந்தக்கிணற்றுக்குள்சிங்கம்எட்டிப்பார்த்தது. தெளிவாகக்கிடந்தஅந்தக்கிணற்றுநீரில்சிங்கத்தின்நிழல்தெரிந்தது.
முயல்சொல்லியமற்றொருசிங்கம்அதுதான்என்றுஎண்ணியஅந்தமூடச்சிங்கம், ஆத்திரங்கொண்டுகிணற்றுக்குள்ளேபாய்ந்தது. கிணற்றுக்குள்இருந்தசேற்றில்சிக்கிஅதுவெளியில்வரமுடியாமல்உயிரிழந்தது.
சூழ்ச்சியினால்யாரையும்வெல்லலாம்என்பதற்குஇந்தக்கதைநல்லஎடுத்துக்காட்டாகும்.

7. கொக்கைக்கொன்றநண்டு
நாள்தோறும்மீன்களைக்கொத்தித்தின்றுஉடல்வளர்த்துவந்தஒருகொக்குஇருந்தது. அதுவழக்கம்போலஒருகுளத்திற்குமீன்கொத்தித்தின்னச்சென்றது. அப்போதுகுளத்தின்கரையில்ஒருபால்நண்டுமிகக்கவலையோடுநின்றுகொண்டிருந்தது.
அந்தநண்டைப்பார்த்து, 'நீஏன்கவலையோடிருக்கிறாய்?' என்றுகொக்குக்கேட்டது.
என்னசொல்வேன்! கொலைகாரர்களாகியவலைகாரர்கள்இந்தப்பக்கத்திலுள்ளஏரி, குளம்எல்லாம்வலைவீசிஒருசின்னஞ்சிறுபொடிமீன்கூடவிடாமல்பிடித்துக்கொண்டுபோய்விட்டார்கள். நாளைக்குஇந்தக்குளத்திற்குவரவேண்டும்என்றுபேசிக்கொண்டுபோயிருக்கிறார்கள். நாளைக்குவந்துபிடித்துக்கொண்டுபோய்சந்தைக்கடைகளிலேவைத்துவிற்றுவிடுவார்கள். இவர்கள்கைக்குத்தப்புவதுஎப்படிஎன்றுதான்சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்’ என்றுபால்நண்டுபதில்கூறியது.
'நண்டே, நண்டே, பால்நண்டே! அந்தப்பழிகாரவலைகாரர்கள்வருமுன்னேதப்புவிக்கநான்ஒருவழிசிந்தித்திருக்கிறேன். அந்தப்படிசெய்தால்எல்லாமீன்களுமேஉயிர்தப்பலாம்' என்றுகொக்குகூறியது. 'எப்படி?’ என்றுநண்டுஆவலோடுகேட்டது. ‘எப்படியாவது, அந்தமீன்களையெல்லாம்இங்கேகூட்டிக்கொண்டுவா. நான்ஒவ்வொருமீனாகத்தூக்கிக்கொண்டுபோய்இன்னொருகுளத்தில்விட்டுவிடுகிறேன்’ என்றதுகொக்கு.

கொக்குசொன்னதைநம்பியஅந்தநண்டு, மீன்களிடம்போய்இந்தயோசனையைக்கூறியது. எப்படியும்வலைகாரர்களிடமிருந்துதப்பினால்போதும்என்றிருந்தமீன்கள்இந்தக்கருத்தைஉடனேஒப்புக்கொண்டன. கொக்கைக்கொன்றநண்டு 47 மீன்கள்எல்லாம்கரையோரத்திற்குவந்தன. கொக்குஒவ்வொருநடைக்கும்ஒவ்வொருமீனாகக்கொத்திக்கொண்டுபறந்துசென்றது. சிறிதுதுரம்சென்றதும்அந்தமீன்களைக்கொத்தித்தின்றது. வயிறுநிரம்பியபிறகு, கொண்டுபோனமீன்களைஒருபாறையில்காயப்போட்டுவைத்தது.
மீன்கள்எல்லாவற்றையும்கொத்திக்கொண்டுசென்றபின்நண்டுதான்மிஞ்சியது. நண்டின்தசையையும்தின்னலாம்என்றஆசையோடு, அதையும்கொத்திக்கொண்டுபறந்துசென்றது. பறந்துசெல்லும்வழியில்நண்டுகீழேபார்த்தது. எங்குபார்த்தாலும்மீன்எலும்புகள்தரையில்கிடப்பதைக்கண்டதும், அதுகொக்குசெய்தசெயல்என்னவென்றுபுரிந்துகொண்டது.'மீன்களையெல்லாம்தின்றதுபோதாமல்நம்மையும்இந்தக்கொக்குகொல்லத்துணிந்துவிட்டது. சூழ்ச்சியை, சூழ்ச்சியால்தான்வெல்லவேண்டும். நம்மைஇதுகொல்லுமுன்இதைநாம்கொன்றுவிடவேண்டும்’ என்றுஎண்ணியநண்டு, மெல்லத்தன்முன்னங்கால்கள்இரண்டையும்நீட்டி, கொக்கின்கழுத்தைவளைத்துப்பிடித்துநெருக்கியது. கழுத்துநசுங்கியதும், கொக்குக்கீழேவிழுந்துஇறந்தது. நண்டுவேறொருகுளத்திற்குப்போய்த்தன்இனத்தோடுசேர்ந்துகொண்டது.
பெரும்பகையையும்சூழ்ச்சியால்வெல்லலாம்என்பதுஇக்கதையிலிருந்துவிளங்குகிறது.

8. மூட்டைப்பூச்சியால்இறந்தசீலைப்பேன்
ஓர்அரசனுடையபடுக்கையில்சீலைப்பேன்ஒன்றுவாழ்ந்துவந்தது. அரசனும்அரசியும்உறங்கும்நேரம்பார்த்துஅதுஅவர்கள்உடலைக்கடித்துஇரத்தத்தைஉறிஞ்சிவாழ்ந்துவந்தது. ஒருநாள்கொள்ளிவாய்ப்பிசாசுவந்ததுபோல்ஒருசிறுமூட்டைப்பூச்சிஅங்குவந்துசேர்ந்தது. அதுசீலைப்பேனைநெருங்கி, 'நான்உன்நண்பனாகஇருக்கவிரும்புகிறேன்’ என்றுகூறியது.
'இல்லைஇல்லை, வேண்டாம். முள்போன்றஉன்பற்களால்அரசன்துங்குவதற்குமுன்னாலேயேநீகடித்துவிடுவாய். உன்னால்என்வாழ்வுக்கும்முடிவுவந்துவிடும்’ என்றுசீலைப்பேன்மறுத்துக்கூறியது.
'நான்அப்படித்துடுக்குத்தனமாகநடந்துகொள்ளமாட்டேன். நீசொன்னபடிகேட்டுக்கொண்டிருப்பேன்'என்றுகெஞ்சியதுமூட்டைப்பூச்சி.
'சரி, அப்படியானால்இங்கேயேஇரு. எப்பொழுதும்வெடுக்கென்றுகடிக்காதே. அரசனும்அரசியும்உறங்குகின்றநேரம்பார்த்துமெதுவாகக்கடித்துஇரத்தம்குடித்துஉன்பசியைப்போக்கிக்கொள்’ என்றுகூறிஅந்தமூட்டைப்பூச்சிக்குச்சீலைப்பேன்".இடம்கொடுத்தது. கெஞ்சிஇடம்பிடித்துக்கொண்டஅந்தமூட்டைப்பூச்சி, அன்றுஇரவேஅரசனும்அரசியும்படுக்கைக்குவந்துவிழித்துக்கொண்டிருக்கும்போதே, அரசனைவெடுக்கென்றுகடித்துவிட்டது.
'ஏதோஎன்னைக்கடித்துவிட்டது’ என்றுஅரசன்கூறியதும்வேலைக்காரர்கள்விளக்குடன்ஒடிவந்தார்கள்.
அரசனைக்கடித்தமூட்டைப்பூச்சிவேலைக்காரர்கள்வருவதற்குள்எங்கோஒருமூலையில்போய்ஒளிந்துகொண்டுவிட்டது. நடந்ததுஅறியாதசீலைப்பேன்அவர்கள்கண்ணில்தட்டுப்பட்டதுஉடனேஅவர்கள், ' நீதானேஇந்தப்பொல்லாதவினையைச்செய்தாய்?’ என்றுசொல்லிக்கொண்டே, சீலைப்பேனைநசுக்கிக்கொன்றுவிட்டார்கள். வகைதெரியாமல்நட்புக்கொண்டஅந்தச்சீலைப்பேன், பாவம்இறந்துஒழிந்தது.
ஒருவனுடையதன்மையைஉணராமல்அவனுடன்நட்புக்கொள்ளக்கூடாது.

9. ஒட்டகத்தைச்கொன்றகாகம்
ஒருகாட்டில்சிங்கம்ஒன்றுஅரசுசெய்துகொண்டிருந்தது. அதற்குஅமைச்சர்களாகஒருநரியும்ஒருபுலியும், ஒருகாக்கையும்இருந்துவந்தன. ஒருநாள்ஒட்டகம்ஒன்றுவழிதப்பிஅந்தக்காட்டுக்குள்வந்துவிட்டது. அதைக்கண்டகாகம், சிங்கத்தினிடம்அழைத்துக்கொண்டுவந்துவிட்டது. சிங்கம்அதற்குஅடைக்கலம்கொடுத்து, அதையும்தன்அமைச்சர்களில்ஒருவனாகஇருக்கும்படிகூறியது.
எல்லாம்ஒன்றாகப்பலநாட்கள்இருந்தன. ஒருநாள்சிங்கம்நோயுற்றிருந்ததால், தன்அமைச்சர்களாகியபுலி, நரி, காகம், ஒட்டகம்ஆகியவற்றைப்பார்த்து, ' என்பசியைத்தீர்க்கஏதாவதுஇரைதேடிக்கொண்டுவாருங்கள்’ என்றுகூறியது.
அவைநான்கும்காடெல்லாம்சுற்றித்திரிந்துஎங்கும்இரைகிடைக்காமல்திரும்பிவந்தன.
ஒட்டகத்திற்குத்தெரியாமல், காகம்மற்றஇரண்டையும்அழைத்துக்கொண்டுசிங்கமன்னனிடம்சென்றது.
‘மன்னா, காடுமுழுவதும்தேடிப்பார்த்துவிட்டோம். எங்கும்இரைகிடைக்கவில்லை” என்றுகாகம்கூறியது.
“அப்படியானால்என்பசிக்குஎன்னபதில்சொல்லுகிறீர்கள்? உங்கள்கருத்துஎன்ன?’ என்றுசிங்கம்கேட்டது.
'மன்னாஒட்டகம்இருக்கிறதே!’ என்றுகாகம்கூறியது. ‘சிவசிவ! நினைப்பதும்பாவம்’ என்றுசிங்கம்தன்காதுகளைமூடிக்கொண்டது.
“மன்னவா, ஒருகுடியைக்காப்பாற்றஒருவனைக்கொல்லலாம். ஒருநகரைக்காப்பாற்றஒருகுடியைக்கெடுக்கலாம். ஒருநாட்டைக்காப்பாற்றஒருநகரையேஅழிக்கலாம். இந்தநீதியைக்கொண்டுதான், பஞ்சபாண்டவர்கள், தங்கள்மகன்அரவானைப்போர்க்களத்தில்பலியிட்டுவெற்றிஅடைந்தார்கள்’ என்றுகாகம்எடுத்துக்கூறியது.
‘அடைக்கலமாகவந்தவர்களைஅழிப்பதுசரியல்ல' என்றுமீண்டும்சிங்கம்மறுத்துக்கூறியது.
‘அரசே, அடைக்கலமாகவந்ததைநீங்களாகக்கொல்லவேண்டாம். அதன்ஒப்புதலின்பேரிலேயேஅதைக்கொன்றுபசிதீரலாம்' என்றுகாகம்கூறியது. சிங்கம்அதற்குப்பதில்எதுவும்கூறவில்லை. காகம், அதுபேசாமல்இருப்பதேஒப்பியதாகும்என்றுஎண்ணிக்கொண்டு, நரியையும்புலியையும்கூட்டிக்கொண்டுஅவ்விடத்தைவிட்டுச்சென்றது.
ஒட்டகம்வந்தவுடன், நான்குமாகமீண்டும்சிங்கமன்னனிடம்வந்தன.
‘அரசே! இந்தக்காடுமுழுவதும்இரையேஅகப்படவில்லை. என்னைக்கொன்றுஉண்ணுங்கள்’ என்றுகாகம்கூறியது.
‘உன்னுடலும்எனக்கோர்உணவாகுமா?' என்றுசிங்கம்பதில்கூறியது.
உடனேநரி, 'என்னைத்தின்னுங்கள்’ என்றது.
‘உன்னைத்தின்றாலும்என்பசியடங்காதே' என்றுசிங்கம்கூறியது.
புலிமுன்வந்து,' அரசேஎன்னைச்சாப்பிடுங்கள்!' என்றுவேண்டியது,
'நீயும்என்பசிக்குப்போதுமானவன்அல்ல’ என்றுமீண்டும்சிங்கம்மறுத்துக்கூறியது.
இதையெல்லாம்பார்த்துக்கொண்டிருந்தஒட்டகம்' நம்மைக்கொல்லத்தான்சூழ்ச்சிநடக்கிறது’ என்றுதெரிந்துகொண்டது. ஆயினும்வேறுவழியில்லாமல், 'அரசே, நான்மிகுந்ததசைஉடையவன், என்னைக்கொன்றுதின்னுங்கள்? என்றுகூறியது.
அதுசொல்லிமுடிப்பதற்குமுன்னால், சிங்கம்என்னசொல்கிறதுஎன்பதையும்எதிர்பார்க்காமல், புலிஅதன்மேல்பாய்ந்தது.
சிங்கம்இறந்துபோனஒட்டகத்தின்இரத்தத்தைக்குடித்தது. புலிஅதன்மூளையைச்சுவைத்துத்தின்றது. நரிஅதன்ஈரலைக்கடித்துத்தின்றுமகிழ்ந்தது. காகமோ, தசையைக்கொத்தித்தின்றுவயிறுபுடைத்தது.
கொடியவர்களுடன்கூடியவர்கள்மடிவதுதிண்ணம்என்பதைஇந்தக்கதைஎடுத்துக்காட்டுகிறது.

10. கடலைவென்றசிட்டுக்குருவி
ஒருகடற்கரையில்மேய்ந்துவாழ்ந்துவந்ததுஓர்ஆண்சிட்டு. அந்தச்சிட்டுக்குஒருமனைவிச்சிட்டுஇருந்தது. இரண்டும்கடற்கரையில்இருந்தஒருசெடியின்கீழ்கூடுகட்டிவாழ்ந்துவந்தன. பெண்சிட்டுக்குச்சினைஏற்பட்டவுடன்அதுஆண்சிட்டைப்பார்த்து 'நான்எங்கேமுட்டையிடுவது?' என்றுகேட்டது.
'எங்கேஇடுவது? இங்கேயேஇடவேண்டியதுதான்! இதைவிடவேறுஇடம்நமக்குஎங்கேயிருக்கிறது?’ என்றுபதில்சொல்லியதுஆண்சிட்டு.
'கடற்கரையில்முட்டையிட்டுவைத்தால்அலையடித்துகடல்எடுத்துக்கொண்டுபோய்விட்டால்என்னசெய்வது?’ என்றுபெண்சிட்டுக்கலங்கியது. 'போடி, போ! பெண்புத்திஎன்பதுசரியாகஇருக்கிறது. நாம்இன்னார்என்றுநினைத்துப்பார்க்காமல்அந்தக்கடல்நம்முட்டைகளைஎடுத்துக்கொண்டுபோனால், அதுபடும்பாடுநாயும்படாது!’ என்றுஅந்தஆண்சிட்டுக்குருவிவீராப்புப்பேசியது.
'என்னபுத்தியோடுஇப்படிப்பேசுகிறாய்? வாயடக்கமில்லாதஆமைஇறந்தகதைஉனக்குத்தெரியாதா? அந்தஆமையின்கதையும்மூன்றுமீன்

களுடையகதையும்தெரிந்தால்நீஇப்படிப்பேசமாட்டாய்! என்றுபெண்சிட்டுக்கூறிஅந்தக்கதைகளையும்விளக்கமாகச்சொல்லியது.
'அதுகிடக்கட்டும், நமக்குள்ளஇடம்இதுதான்! இங்கேதானேநீஉன்முட்டைகளையிடு' என்றுகட்டாயமாகக்கூறியதுஆண்சிட்டு. இதைக்கேட்டுக்கொண்டிருந்தகடலரசன் ‘ஓகோ! இவற்றின்சமர்த்தைப்பார்க்கலாம்!’ என்றுமனத்திற்குள்நினைத்துக்கொண்டது.
பெண்குருவியிட்டுவைத்தமுட்டையைஅலையடித்துக்கொண்டுபோய்விட்டது.
இதைக்கண்டஆண்சிட்டுக்குருவிகடலைப்பார்த்து, 'ஏ, கடலே, இப்போதேஎன்முட்டையைத்திருப்பிக்கொண்டுவந்தால்சும்மாவிட்டுவிடுகிறேன். இல்லாவிட்டால்உனக்குத்துன்பம்ஏற்படச்செய்வேன்’ என்றுகூறியது.
கடல்அதற்குப்பதில்ஒன்றும்பேசவில்லை.
சிட்டுக்குருவி, உடனேபறந்துசென்றுஎல்லாச்சிட்டுக்களையும்அழைத்தது. சிட்டுக்கள்எல்லாம்ஒன்றுசேர்ந்தபின்மற்றபறவைகளைஎல்லாம்அழைத்துக்கொண்டுபறவைஅரசனைநோக்கிப்பறந்ததுஅந்தஆண்சிட்டு. பறவையரசன்கருடன்முன்போய், கருடதேவா, பறவைக்குலங்களுக்கேபெரியபழிஏற்பட்டுவிட்டது. கடலரசன்எங்கள்முட்டைகளையடித்துக்கொண்டுபோய்விட்டான். இக்கணமேஅதைத்திரும்பப்பெறாவிட்டால், யாரும்நம்குலத்தைமதிக்கமாட்டார்கள்’ என்றுவருத்தத்துடன்கூறியது.
கருடன்உடனேதிருமாலிடம்பறந்துசென்றுமுறையிட்டது. திருமால்உடனேகடலரசனைஅழைத்து,' ஏன்முட்டையைஎடுத்துச்சென்றாய்? இப்பொழுதேகொண்டுவந்துஅந்தச்சிட்டுக்குருவியிடம்கொடுத்துவிடு. இல்லைஎன்றால்என்கோபத்துக்குஆளாவாய்’ என்றுகட்டளையிட்டார்.
கடவுளின்கட்டளையைக்கேட்டகடலரசன்பயந்துநடுங்கிஉடனேமுட்டைகளைக்கொண்டுவந்துசிட்டுக்குருவிகளிடம்கொடுத்துவிட்டான்.
கூட்டுமுயற்சியால்ஆகாதகாரியம்உலகத்தில்என்னஇருக்கிறது? எதுவுமேஇல்லை.

11. வாயடக்கம்இல்லாதஆமை
இரண்டுஅன்னங்களும்ஒர்ஆமையும்ஒருகுளத்தில்இருந்தன. அன்னங்களும்ஆமையும்மிகவும்நட்புடன்வாழ்ந்துவந்தன. இவ்வாறுஇருந்துவரும்போது, நெடுநாள்மழைபெய்யாததால்அந்தக்குளத்துநீர்வற்றிப்போயிற்று. இதைக்கண்டஅன்னங்கள்இரண்டும்வேறொருகுளத்துக்குப்போகத்தீர்மானித்தன. அவைதங்கள்நண்பனானஆமையைவிட்டுப்போகமனமில்லாமல், அதைஎவ்வாறுஅழைத்துப்போவதெனச்சிந்தனைசெய்தன. கடைசியில்ஒருமுடிவுக்குவந்து, அந்தஆமையைஅழைத்து, ‘நாங்கள்இரண்டுபேரும்இந்தக்குச்சியின்இருநுனியையும்கவ்விக்கொண்டுபறக்கிறோம். நீஅதன்நடுப்பாகத்தைஉன்வாயினால்பற்றிக்கொண்டுவா. இடையில்வாய்திறக்காதே’ என்றுகூறின.

ஆமையும்சரியென்றுஅந்தக்குச்சியைவாயினால்பற்றிக்கொண்டது. அன்னங்கள்இரண்டும், இரண்டுபக்கமும்குச்சியைக்கவ்விக்கொண்டுபறந்தன. வானத்தில்ஆமைபறக்கும்புதுமையைக்கண்டஅந்தஊரில்இருந்தவர்கள், வியப்புத்தாங்

காமல்கைகொட்டிஆரவாரம்செய்தார்கள். இதைக்கண்டஅந்தஆமை,' எதற்காகச்சிரிக்கிறீர்கள்!’ என்றுஅவர்களைக்கேட்பதற்காகத்தன்வாயைத்திறந்தது. உடனேஅதுபிடிநழுவித்தரையில்விழுந்துஇறந்துபோய்விட்டது.

12. மூன்றுமீன்கள்
ஒருகுளத்தில்மூன்றுமீன்கள்இருந்தன.அவற்றின்பெயர்வருமுன்காப்போன், வருங்கால்காப்போன், வந்தபின்காப்போன்என்பனவாகும்.
ப-4
அவைமூன்றும்ஒருகவலையும்இல்லாமல்பலநாட்கள்ஒன்றாகவாழ்ந்துவந்தன. ஒருநாள், வலைஞர்கள்வந்துநாளைஇந்தக்குளத்தில்மீன்பிடிக்கவேண்டும்என்றுபேசிக்கொண்டார்கள். இதைக்கேட்டவுடன்வருமுன்காப்போன்என்றமீன், மற்றமீன்களைப்பார்த்து, 'இப்பொழுதேநாம்மற்றோர்இடத்திற்குப்போய்விடவேண்டும்’ என்றுசொல்வியது.
அதற்குவருங்கால்காப்போன்என்றமீன் 'என்னஅவசரம்? அந்தச்சமயத்திற்குப்பார்த்துக்கொள்ளலாம். சமயத்திற்குத்தகுந்தாற்போல்தந்திரம்செய்துதப்பித்துக்கொள்ளலாம்' என்றுகூறியது.
வருமுன்காப்போன்என்றமீன், இந்தக்கருத்தைஒப்புக்கொள்ளாமல்அப்பொழுதேஅந்தக்குளத்தைவிட்டுமற்றொருகுளத்திற்குப்போய்

விட்டது. வருங்கால்காப்போன், வந்தபின்காப்போன்முதலியமீன்களெல்லாம்அந்தக்குளத்திலேயேஇருந்தன. பேசிச்சென்றபடிமறுநாள்வலைஞர்கள்மீன்பிடிக்கவந்தார்கள். எல்லாமீன்களையும்வலைவீசிப்பிடித்தார்கள். அப்போதுவலையில்அகப்பட்டுக்கொண்டவருங்கால்காப்போன்செத்தமீன்போல், விரைத்துக்கிடந்தது. அதைக்கண்டுஒருசெம்படவன்கரையில்தூக்கிஎறிந்தான். அதுயாரும்காணாமல்தண்ணிருக்குள்புகுந்துமறைந்துகொண்டது. வந்தபின்காப்போனும், மற்றமீன்களும்வழிதெரியாமல்அகப்பட்டுக்கொண்டுசெம்படவர்கள்கையிலேசிக்கிமடிந்துபோயின.
முன்னாலேயேஎதையும்நினைத்துப்பார்த்துமுடிவுசெய்பவன்உறுதியாகப்பிழைத்துக்கொள்வான். அவ்வப்போதுசிந்தித்துவேலைசெய்யும்அறிவுடையவனும்எப்படியாவதுபிழைத்துக்கொள்வான். எதையும்எப்போதும்சிந்திக்காதவன்பிழைக்கவேமாட்டான்.

13. குரங்குக்குஅறிவுசொன்னகொக்கு
ஒருகாட்டில்பலகுரங்குகள்வசித்துவந்தன. ஒருநாள்இரவுகுளிர்தாங்காமல்அவைகுளிர்காய்வதற்குஎங்கேபோகலாம்என்றுயோசித்துக்கொண்டிருந்தன. அப்போதுதூரத்தில்மின்மினிப்

பூச்சிகள்பறந்துகொண்டிருப்பதைக்கண்டுதீஎன்றுநினைத்துக்கொண்டு, அந்தஇடத்தைநோக்கிச்சென்றன. குரங்குகள்பேசிக்கொண்டதைக்கேட்டு, மரத்தின்மேல்உட்கார்ந்திருந்தஒருகொக்கு 'குரங்குகளேஅதுதீயல்ல; மின்மினிப்பூச்சி’ என்றுகூறியது. இதைக்கேட்டதும்அந்தக்கூட்டத்தில்இருந்தஒருகுரங்குக்குமிகவும்கோபம்வந்துவிட்டது. உடனேஅதுமரத்தின்மேல்பாய்ந்துசென்றுஅந்தக்கொக்கைப்பிடித்து, 'நீயாஎனக்குஅறிவுபுகட்டுகிறவன்?' என்றுகேட்டுஅப்படியேஒருபாறையில்அடித்துக்கொன்றுவிட்டது.
தீயவர்களுக்குநல்லதுசொல்லக்கூடாது.

14 சாட்சிசொன்னமரம்
ஒருபட்டணத்தில்இரண்டுவணிகப்பிள்ளைகள்இருந்தார்கள். ஒருவன்பெயர்நல்லபுத்தி. இன்னொருவன்பெயர்கெட்டபுத்தி. இரண்டுபேரும்பணம்சேர்ப்பதற்காகவெளியூருக்குச்சென்றார்கள். அங்கேநல்லபுத்திக்குஆயிரம்பொன்கிடைத்தது, கெட்டபுத்திக்குஎதுவும்கிடைக்கவில்லை.
நல்லநோக்கமுடையநல்லபுத்தி, கெட்டபுத்தியைப்பார்த்து, 'கவலைப்படாதே, நாம்இருவரும்ஆளுக்குஐநூறுபொன்னாகப்பங்கிட்டுக்கொள்ளலாம்' என்றுகூறினான்.
'சரியென்றுஒப்புக்கொண்டகெட்டபுத்தி, 'நாம்உடனேஇவ்வளவுபணத்தையும்ஊருக்குஎடுத்துச்சென்றால்கெடுதல்உண்டாகும். இங்கேயேஒருமரத்தின்கீழ்ப்புதைத்துவைப்போம். மற்றொருநாள்வந்துஎடுத்துக்கொண்டுபோவோம்’ என்றான்.
இதுபொருத்தமாகத்தோன்றவே, நல்லபுத்திஒப்புக்கொண்டான். உடனேஅங்கொருமரத்தடியில்பள்ளம்தோண்டிப்பணத்தைப்புதைத்துஓர்அடையாளம்வைத்துவிட்டுஇருவரும்ஊருக்குள்சென்றார்கள்.
கெட்டபுத்திஅன்றுஇரவேதிரும்பிவந்துஆயிரம்பொன்னையும்அடித்துக்கொண்டுபோய்விட்டான்.
சிலநாள்கழித்துஇருவரும்அந்தமரத்தடிக்குவந்துபார்த்தார்கள். பணம்காணவில்லை. உடனே, கெட்டபுத்திமுந்திக்கொண்டுநல்லபுத்தியைப்பார்த்து, 'நண்பாஇப்படிமோசம்செய்யலாமா?' என்றுகேட்டான்,
'நீதான்எடுத்துக்கொண்டுஎன்னைஏமாற்றுகிறாய்!' என்றான்நல்லபுத்தி.
இருவருக்கும்சண்டைவந்துவிட்டது. கடைசியில்வழக்குமன்றத்திற்குப்போனார்கள். ஊர்வழக்காளர்அவர்களுடையவழக்கைவிசாரித்தார். பிறகு, 'ஏதாவதுசாட்சிஉண்டா?' என்றுகேட்டார். 'எங்கள்இருவரையும்தவிரஅந்தஇடத்தில்வேறுயாரும்சாட்சியில்லை’ என்றான்நல்லபுத்தி.
'அந்தமரமேஇதற்குச்சாட்சிசொல்லும்’ என்றான்கெட்டபுத்தி.
‘உண்மைதானா? காலையில்வாருங்கள்அந்தமரத்தையேகேட்போம்’ என்றுசொல்லிவழக்காளர்போய்விட்டார்.
வீட்டுக்குவந்தகெட்டபுத்திதன்தந்தையைஅழைத்துமரப்பொந்தில்போய்ஒளிந்துகொண்டு, மரம்சாட்சிசொல்வதுபோல்பேசச்சொன்னான்.
‘தம்பி, கொக்கின்முட்டையைத்திருடியநாகத்தைப்போல்நமக்குத்துன்பம்ஏற்படக்கூடும். இந்தக்கெட்டநினைப்பைவிட்டுவிடு’ என்றுஅறி
வுரைகூறினார்அவர். ஆனால், கெட்டபுத்திஅவர்பேச்சைக்கேட்கவில்லை. அவரைவலுவாகஇழுத்துச்சென்றுஅந்தமரப்பொந்தில்ஒளிந்து. கொள்ளும்படிவற்புறுத்தினான்.
பொழுதுவிடிந்தது. ஊர்வழக்கர்தன்ஆட்களோடுநல்லபுத்தியையும்கெட்டபுத்தியையும்அழைத்துக்கொண்டுவந்துமரத்தைச்சாட்சிசொல்லும்படிகேட்டார்.
மரம்பேசியது : ‘நல்லபுத்திதான்பணத்தைஎடுத்தான்!' ஏன்றுஅழுத்தந்திருத்தமாகக்கூறியது.'ஆ! என்னபுதுமை! மரம்சாட்சிசொல்லுகிறதே!” என்றுஊர்வழக்காளர்ஆச்சரியப்பட்டார்.

‘இதுசூது!’ என்றுதெரிந்துகொண்டநல்லபுத்தி, மரத்தில்ஏறிஅந்தப்பொந்தில்நெருப்பைமூட்டினான். நெருப்பின்சூடுதாங்காமல், கெட்டபுத்தியின்தந்தைமரப்பொந்தின்உள்ளிருந்தபடியே' கெட்டபுத்தி, உன்னால்கெட்டேன்!’ என்றுபதைபதைத்துக்கதறினான். நெருப்பில்வெதும்பிஇறந்துபோனான்.
இதைக்கண்டஊர்வழக்காளர்அரசரிடம்போய்நிகழ்ந்ததைக்கூறினார்.
பொன்முழுவதையும்நல்லபுத்திக்குக்கொடுக்கும்படிசொல்லி, கெட்டபுத்தியைஅரசர்சித்திரவதைசெய்துகொல்லும்படிஉத்தரவிட்டார்.
பிறரைக்கெடுக்கநினைப்பவர்கள்தாங்களேகெட்டொழிவார்கள்.

15. கொக்குமுட்டைதின்றபாம்பு

ஒருகொக்குஇருந்தது. அதுஇடுகிறமுட்டைகளையெல்லாம்ஒருநாகப்பாம்புதெரியாமல்வந்துதின்றுகொண்டிருந்தது. என்னசெய்வதென்றுதெரியாதகொக்கு, தனக்குத்தெரிந்தநண்டுஒன்றிடம்போய்என்னசெய்யலாம்என்றுகேட்டது. அதுஓர்அருமையானவழிசொல்லிக்கொடுத்தது. ஒருகீரிவளையிலிருந்துபாம்புப்பொந்துவரைவரிசையாகமீனைப்போட்டுவைக்கச்சொல்லியது.

கொக்குஅவ்வாறேபிடித்துக்கொண்டுபோய்ப்போட்டது. கீரிப்பிள்ளைஒவ்வொருமீனாகத்தின்றுகொண்டேபாம்பின்பொந்திற்குவந்துசேர்ந்தது. அங்கிருந்தபாம்போடுசண்டையிட்டு, அதைக்கடித்துக்கொன்றுவிட்டது.
திருட்டுப்பிழைப்புஎன்றும்ஆபத்துதான்.

16. ‘எலிஇரும்பைத்தின்றது’
ஒருபட்டணத்தில்இரண்டுசெட்டிமார்கள்இருந்தார்கள். இருவரும்நெடுநாள்நண்பர்களாகஇருந்தார்கள். அவர்களில்ஒருவன், அயல்நாடுபோகவேண்டியிருந்ததால், தன்னிடம்உள்ளஆயிரம்துலாம்இரும்பையும், தன்நண்பனிடம்பாதுகாப்பாகவைத்துவிட்டுவெளிநாட்டுக்குப்போய்விட்டான்.
வெளிநாடுசென்றவன்திரும்பிவந்துகேட்டபோது, 'இரும்பையெல்லாம்எலிதின்றுவிட்டது' என்றுநண்பன்கூறிவிட்டான்.' சரி, போனால்போகிறது!’ என்றுசொல்லிவிட்டு, மீண்டும்அவன்முன்போலநண்பனாகவேஇருந்துவந்தான்.
பிறகுஒருமுறைஅந்தநண்பனுடையவீட்டில்ஒருவிருந்துநடந்தது. விருந்துக்குஅந்தவெளிநாடுசென்றுவந்தவணிகன், தன்நண்பனுடையவீட்டில்எண்ணெய்தேய்த்துக்கொண்டான். நண்பனுடையபிள்ளைக்கும்எண்ணெய்தேய்த்துவிட்டான். பிறகுஅந்தப்பிள்ளையையும்கூட்டிக்கொண்டுகுளத்திற்குகுளிக்கச்சென்றான். குளித்தபின், அந்தப்பிள்ளையைத்தகுந்தஓரிடத்தில்ஒளித்துவைத்துவிட்டுத்தான்மட்டும்திரும்பிவந்தான்.
வீட்டுக்குத்திரும்பிவந்துசேர்ந்தவணிகனைப்பார்த்து, அவனுடையநண்பன் 'என்பிள்ளைஎங்கே?’ என்றுகேட்டான். :உன்பிள்ளையைப்பருந்துதூக்கிக்கொண்டுபோய்விட்டது!' என்றான்வணிகன். உடனேமற்றவணிகனுக்குக்கோபம்வந்துவிட்டது. 'எங்கேயாவதுபிள்ளையைப்பருந்தெடுத்துப்போகுமா?’ என்றுசண்டைக்குவந்துவிட்டான். வாய்ச்சண்டைமுற்றிக்கைச்சண்டையாகிவிட்டது. உடனேஅங்கிருந்தவர்கள்இருவரையும்ஊர்வழக்காளர்முன்னேஅழைத்துச்சென்றார்கள்.
வழக்காளர்அந்தவணிகனைப்பார்த்து 'ஏனையாஇதுஎன்னவேடிக்கை! எங்கேயாவதுபிள்ளையைப்பருந்துதுக்கிக்கொண்டுபோகுமா?' என்றுகேட்டார்.

‘ஐயா, ஆயிரம்துலாம்இரும்பில்ஓர்அணுவும்மீதிவையாமல், எலிகடித்துத்தின்றிருக்கும்போது, பிள்ளையைப்பருந்துதூக்கிப்போவதுஎன்னஅதிசயம்?’ என்றுகேட்டான். ‘இந்தஅதிசயம்எங்கேநிகழ்ந்தது!’ என்றுவழக்காளர்விசாரித்தார்.
உடனேஅவன்முன்நடந்தவைகளைக்கூறினான்.
'அப்படியானால், நீசெய்ததுசரிதான்!' என்றுசொல்லிவிட்டு, வழக்காளர்அந்தவணிகனுடையநண்பனைப்பார்த்து,'ஆயிரம்துலாம்இரும்பையும்நீதிருப்பிக்கொடுத்தால், அவன்உன்பிள்ளையைத்திருப்பிக்கொடுப்பான்’ என்றுதீர்ப்பளித்தார்.
'சரி'யென்றுஒப்புக்கொண்டுஇருவரும்திரும்பினார்கள்.
அந்தநண்பன்முன்இரும்பைத்திருடிவிற்றபோதுவிலைகுறைத்திருந்தது. இப்போதுவிலைகூடிவிட்டபடியால்அவன்பெருநஷ்டப்பட்டுவீடுவாசல்எல்லாவற்றையும்விற்றுஆயிரம்துலாம்இரும்பையும்வாங்கிக்கொடுக்கவேண்டியிருந்தது. இதனால்அவன்ஏழையாகிவிட்டான்.
வஞ்சகம்செய்பவர்கள்வாழமாட்டார்கள்.

17. வாழ்வுதந்தகிழட்டுவாத்து
ஒருகாட்டில்ஓர்ஆலமரம்இருந்தது. அதன்கிளைகளில்ஒருவாத்துக்கூட்டம்தங்கிஇருந்தது.
அந்தஆலமரத்தின்அடியில்புதிதாகஒருகொடிமுளைத்தது. அந்தக்கொடிஇலேசாகப்படரத்தொடங்கியது. அதைக்கண்டஒருகிழட்டுவாத்துமற்றவாத்துகளைப்பார்த்து, இந்தக்கொடி, மரத்தைப்பற்றிக்கொண்டுசுற்றிப்படருமானால்நமக்குஆபத்துஏற்படும். யாராவதுஇதைப்பிடித்துக்கொண்டுமரத்தின்மேல்ஏறிவந்து, நம்மைப்பிடித்துக்கொன்றுவிடக்கூடும். இப்பொழுதேநாம்இந்தக்கொடியைவேரோடுபிடுங்கிஎறிந்துவிடவேண்டும்என்றுசொன்னது.
ஆனால்மற்றவாத்துக்கள்அந்தக்கிழட்டுவாத்தின்பேச்சைமதிக்கவில்லை. 'இதுஎன்னவேலையற்றவேலை’ என்றுஅலட்சியமாகப்பேசிவிட்டுஅதைப்பற்றிக்கவலைப்படாமலேயேஇருந்துவிட்டன. அந்தக்கொடியோநாளுக்குநாள்வளர்ந்துபெரிதாகநீண்டுமரத்தைச்சுற்றிப்படர்ந்தது.
'ஒருநாள்எல்லாவாத்துக்களும்இரைதேடப்போயிருந்தன. அப்போதுஅந்தவழியாகவந்தஒருவேடன்அந்தவாத்துக்களைப்பிடிக்கநினைத்தான். மரத்தைச்சுற்றிப்படர்ந்திருந்தகொடியைப்பிடித்துக்கொண்டுமிகஎளிதாகஅதன்மேல்ஏறினான். ஏறிக்கண்ணிவைத்துவிட்டுஇறங்கிச்சென்றுவிட்டான். இரைஉண்டும், விளையாடியும், திரும்பியவாத்துக்கள்எதிர்பாராமல்அந்தக்கண்ணியில்சிக்கிக்கொண்டன.
கிழட்டுவாத்துமற்றவாத்துக்களைப்பார்த்துநான்சொன்னதைக்கேட்காததால்இவ்வாறுஅகப்பட்டுக்கொள்ளநேர்ந்தது. இனிஎல்லோரும்சாகவேண்டியதுதான்’ என்றுசொன்னது.
மற்றவாத்துக்களெல்லாம்அந்தக்கிழட்டுவாத்தைநோக்கி, 'ஐயா, பெரியவரே! ஆபத்துக்குநீங்கள்தான்அடைக்கலம். இனிஎன்னசெய்யவேண்டுமென்றுநீங்கள்தான்சொல்லவேண்டும். எப்படியும்நம்உயிர்தப்பினால்போதும்' என்றுகூறின.
அறிவும்நல்லெண்ணமும்கொண்டஅந்தக்கிழட்டுவாத்துக்குத்தன்இனத்தினர்அழிந்துபோகக்கூடாதுஎன்றுதோன்றியது. அத்தோடுமற்றவாத்துக்களைப்பார்க்கஇரக்கமாகவும்இருந்தது. 'சரி, நான்சொல்வதைக்கேளுங்கள், வேடன்வரும்போதுஎல்லாரும்செத்தபிணம்மாதிரிச்சாய்ந்துவிடுங்கள். செத்தவாத்துக்கள்தானேஎன்றுஅவன்எச்சரிக்கையற்றுஇருக்கும்போதுதப்பிவிடலாம்என்றுவழிகூறியது.
விடிகாலையில்வேடன்வந்தான். வேடன்தலையைச்சிறிதுதொலைவில்கண்டதுமேஎல்லாவாத்துக்களும்செத்ததுபோல்சாய்ந்துவிட்டன. மரத்தின்மேல்ஏறிப்பார்த்தவேடன்உண்மையில்அவைஇறந்துபோய்விட்டனஎன்றேஎண்ணினான். உயிருள்ளவாத்துக்களாயிருந்தால்அவன்அவைஒவ்வொன்றின்கால்களையும்கயிற்றால்கட்டிப்போட்டிருப்பான். ஆனால், அவைசெத்தவாத்துக்கள்தானேஎன்றுகால்களைக்கட்டாமலே,கண்ணியிலிருந்துஎடுத்துத்தரையில்போட்டான்.
ஒவ்வொன்றாகமரத்தின்மேலேயிருந்துதரையில்வீழ்ந்ததும்அவைவலியைப்பொறுத்துக்கொண்டுசெத்தமாதிரியேகிடந்தன. எல்லாவாத்துக்களையும்அவன்கண்ணியிலிருந்துஎடுத்துக்கீழேபோட்டுமுடித்தவுடன், கீழேஇறங்கினான்.
அவன்பாதிவழிஇறங்கும்போது, கிழட்டுவாத்துகுறிப்புக்காட்டியது. உடனேஎல்லாவாத்துக்களும்படபடவென்றுஅடித்துக்கொண்டுபறந்துமரத்தின்மேல்ஏறிக்கொண்டன.
வேடன்ஏமாற்றத்துடன்திரும்பிச்சென்றான்.
அனுபவமும், நல்லறிவும், நல்லெண்ணமும்உள்ளபெரியோர்சொல்லுக்குக்கீழ்ப்படிந்துநடந்தால்எப்போதும்நன்மையுண்டு.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.