Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

பகுதி 2 -நட்புஉண்டாக்குதல்

1. நான்குநண்பர்கள்

தெளிவானநீர்ஓடும்கோதாவரிக்கரையில்ஓர்இனியகாடுஇருந்தது. அந்தக்காட்டில்இருந்தஓர்இலவமரத்தில்ஒருகாகம்வாழ்ந்துவந்தது!
ஒருநாள்விடியற்காலையில்அந்தக்காகம்தன்இனத்துடன், ஒருகுளத்தில்போய்க்குளித்து, சிறகுகளைக்காயவைத்துக்கொண்டிருந்தது. அப்போதுஅங்கேஒருவேடன்வந்துசேர்ந்தான். அவன்தன்கைகளில், வலையும், வில்லும், அம்புகளும்வைத்திருந்தான். வேட்டையாடவந்தஅவனைக்கண்டவுடன்எல்லாக்காகங்களும்பறந்துஓடிவிட்டன. இலவமரத்துக்காகம்மட்டும்ஒடவில்லை. இந்தக்கொடியவன்என்னசெய்கிறான்என்றுபார்க்கவேண்டும்என்றுஅதுஒருசோலைக்குள்ளேபோய்ஒளிந்துகொண்டது. அந்தவேடன்வலையைவிரித்துவைத்துஅதைச்சுற்றித்தீனியும்போட்டுவைத்தான். ஏதாவதுபறவைகள்வந்துஅகப்படாதாஎன்றுஎதிர்பார்த்துஅவன்ஓரிடத்தில்ஒளிந்துகொண்டிருந்தான். அப்போதுபுறாக்கூட்டம்ஒன்றுஅந்தவழயாகப்பறந்துவந்தது. அருகில்இருந்தமரத்தில்இறங்கியஅந்தப்புறாக்கள்கீழேகிடந்ததானியங்களைக்கண்டன.
அந்தப்புறாக்களின்அரசனும்அந்தக்கூட்டத்தோடுவந்திருந்தது. அதுமிகுந்தஅறிவுள்ளது. அந்தஅரசப்புறாதன்கூட்டத்தைப்பார்த்து, ‘காட்டில்தானியம்கிடப்பதென்றால், தானாகவந்துகிடக்காது. யாரோஇதைக்கொண்டுவந்துஎதற்காகவோபோட்டுவைத்திருக்கவேண்டும். இதைநன்றாகத்தெரிந்துகொள்ளாமல்நாம்போய்த்தின்னக்கூடாது. ஆராயாமல்நாம்இதைத்தின்னப்புகுந்தால்புலியால்மாய்ந்தபார்ப்பனன்போலத்துன்பமடையநேரிடும்' என்றுமற்றபுறாக்களைஎச்சரித்தது.
அப்போதுஅந்தப்புறாக்களில்ஒன்று 'இப்படிஒவ்வொன்றுக்கும்யோசனைசெய்துகொண்டிருந்தால்நாம்இரையேஇல்லாமல்இறந்துபோகவேண்டியதுதான்! எப்படியும்எந்தெந்தக்காலத்தில்என்னென்னநடக்கவேண்டுமோ, அந்தந்தக்காலத்தில்அதுஅதுஅப்படிஅப்படிநடந்தேதீரும்' என்று
ப--5 சொல்லியது. உடனேஎல்லாப்புறாக்களும்இறங்கித்தீனிதின்னப்போய்வலையில்மாட்டிக்கொண்டன.
இதைக்கண்டஅந்தஅரசப்புறாஎல்லாப்புறாக்களும்சிக்கிச்சாகும்போது, தான்மட்டும்உயிர்பிழைத்திருப்பதுதக்கதல்லஎன்றுமனத்தில்நினைத்துக்கொண்டு, தானும்வலையில்போய்வீழ்ந்துஅகப்பட்டுக்கொண்டது.
அப்போதுஅதன்மனத்தில்ஓர்அருமையானஎண்ணம்தோன்றியது.

'வேடனிடம்அகப்படாமல்தப்பவேண்டுமானால், எல்லோரும்இந்தவலையைத்துக்கிக்கொண்டுஒன்றாகப்பறப்பதைத்தவிரவேறுவழியில்லை' என்றுஅரசப்புறாமற்றபுறாக்களைப்பார்த்துக்கூறியது.
உடனேஎல்லாப்புறாக்களும்கூடிப்பறந்தன. வலையைஎடுத்துக்கொண்டுஅவைவானத்தில்பறந்ததைக்கண்டவேடன்கலங்கிப்போனான். புறாக்கள்தான்அகப்படவில்லைஎன்றால், வலையும்போச்சேஎன்றுமனம்வருந்தினான்.
'இந்தப்புறாக்கள்எவ்வளவுதூரம்தான்இப்படியேபறந்துஒடப்போகின்றன. விரைவில்களைப்படைந்துகீழேவிழத்தான்நேரிடும். அப்போதுஅவற்றைப்பிடித்துக்கொள்வதோடுவலையையும்திரும்பப்பெறலாம்' என்றுஎண்ணிக்கொண்டுஅந்தவேடன்அவற்றின்பின்னாலேயேஓடினான். ஆனால், அவனுக்குத்தான்விரைவில்களைப்புவந்ததேதவிரஅந்தப்புறாக்கள்களைக்கவேயில்லை. அவைவெகுதொலைவில்பறந்துபோய்அவன்கண்ணுக்குத்தெரியாமல்மறைந்துவிட்டன.
என்னநடக்கிறதென்றுபார்ப்பதற்காகஇலவமரத்துக்காகமும்பின்னால்பறந்துசென்றுகொண்டேயிருந்தது.
வலையோடுபுறாக்கள்பறந்துசென்றுகொண்டிருக்கும்போதுஒருகாடுகுறுக்கிட்டது. அதைக்கண்டவுடன்அரசப்புறா, 'எல்லோரும்இங்கேஇறங்குங்கள். என்நண்பனானஎலிஒன்றுஇங்கேஇருக்கிறது’ என்றுகூறியது. எல்லாப்புறாக்களும்அங்கேஇறங்கின. சிறகுகளைப்படபடவென்றுஅடித்துக்கொண்டுபுறாக்கள்கூட்டமாகஇறங்கியதைக்கண்டவுடன், என்னவேஏதோஎன்றுபயந்துபோனஅந்தஎலி, தன்வளைக்குள்ளேஒடிப்போய்ஒளிந்துகொண்டது.
அதன்வளைக்குநேரேஇறங்கியபுறாவரசன், 'நண்பா, நண்பாஎன்எலிநண்பா, இங்கேவா’ என்றுவளைத்துளையில்மூக்கைவைத்துக்கொண்டுகூப்பிட்டது.
நண்பனின்குரலைக்கேட்டுவெளியில்வந்ததுஅந்தஎலி. அதுதன்நண்பன்நிலையைக்கண்டுமனம்வருந்தியது.
‘எதையும்முன்னும்பின்னும்சிந்தித்துச்செய்யக்கூடியஅறிவாளியானநீஎப்படிஇந்தவலையில்சிக்கினாய்?’ என்றுஅந்தஎலிகேட்டது.
'எவ்வளவுசிறந்தஅறிவிருத்தாலும்எவ்வளவுசாமார்த்தியம்இருந்தாலும்விதியைமீறமுடியுமா? எந்தஇடத்தில், எந்தக்காலத்தில், எப்படிப்பட்டகாரணத்தினால், யாரால்எவ்வளவுநல்வினைதீவினைகளின்பயனைஅனுபவிக்கவேண்டுமோ, அந்தஇடத்தில்அந்தக்காலத்தில், அப்படிப்பட்டகாரணத்தால், அவரால்அல்வளவும்அனுபவித்துத்தானேஆகவேண்டும்!’ என்றுபுறாபதில்கூறியது.
கடலில்திரியும்பீன்களும், வானில்பறக்கும்பறவைகளும், தம்மைத்தொடர்ந்துவீசப்படுகின்றவலையில்சிக்குகின்றன. குன்றுபோன்றபெரியயானையும், வெம்மையானதன்நஞ்சினால், எவரையும்கொல்லக்கூடியபாம்பும், நெஞ்சின்நிலைதளர்ந்துதம்மைப்பிடிப்பவர்க்குக்கட்டுப்பட்டுவிடுகின்றன. வானில்இருக்கும்பெரும்சுடர்களானகதிரவனும், நிலவும்கூடகிரகணப்பாம்பால்பீடிக்கப்படுகின்றன. அறிவில்மிக்கபுலவர்களும்வறுமைக்குஆட்படுகின்றனர். அறிவில்லாதஅற்பர்களின்கையிலேபெரும்பணம்போய்க்குவிகிறது. எல்லாம்அவரவர்நல்வினைதீவினைகளின்பயனேயாகும், இந்தவினையின்பயனையாராலும்தள்ளமுடியாது.'
இவ்வாறுகூறியஅந்தஎலி, தன்நண்பனானஅரசப்புறாவையும்அதன்கூட்டத்தையும்சிக்கவைத்துக்கொண்டிருந்தஅந்தவலையைத்தன்கூர்மையானபற்களால்அறுத்தெறிந்துஅவற்றைவிடுவித்தது. அரசப்புறாவும்அந்தஎலியும்ஒன்றுடன்ஒன்றுமிகஅன்பாகநெடுநேரம்பேசிக்கொண்டிருந்தன. பின்எலியிடம்விடைபெற்றுக்கொண்டுபுறாக்கள்பறந்துசென்றன.
அவைசென்றபின்அந்தஎலிமீண்டும்தன்வளைக்குள்ளேபோய்நுழைந்துகொண்டது.
புறாக்களைத்தொடர்ந்துபறந்துவந்தஇலவமரத்துக்காகத்திற்குஅந்தஎலியின்மீதுஅன்புபிறந்தது. ஆகவே, அதுகீழேஇறங்கிவந்து, எலிவளையின்வாயிலில்மூக்கைவவத்துஅந்தஎலியைக்கூப்பிட்டது. எலிவளையின்உள்ளேயிருந்தபடியே, 'நீயார்? ஏன்என்னைஅழைத்தாய்?’ என்றுகேட்டது.
'நான்ஒருபுறாவரசனின்பின்னால்வந்தேன். உன்னுடையபெருந்தன்மையையும், நற்குணத்தையும், நட்புத்திறத்தையும், மரியாதைப்பண்பையும்பாசவுறவையும்கண்டுமனம்வசப்பட்டேன். நானும்உன்நண்பனாகஇருக்கவிரும்புகிறேன், அதற்காகவேஅழைத்தேன்’ என்றுகாகம்கூறியது.
அதற்குஅந்தஅறிவுமிகுந்தஎலி, 'நானோஉன்னால்தின்னப்படும்இரைகளில்ஒன்றாயுள்ளவன். நீயோஎன்னைப்போன்றஎலிகளைக்கொன்றுதின்னும்இனத்தைச்சேர்ந்தவன். நானும்நீயும்நட்பாய்இருப்பதுஎனக்குப்பேராபத்தாய்முடியுமேயல்லாமல்வேறல்ல. நரியோடுநட்புக்கொண்டாடியமான், வலையில்சிக்கிக்கொண்டதுபோல், எனக்குத்தீங்குவரக்கூடும், ஆகையால்உன்னுடன்நண்பனாயிருக்கநான்விரும்பவில்லை’ என்றுபதில்சொல்லிவிட்டது.
அதைக்கேட்டகாகம், மனங்கரையும்படியாகஇவ்வாறுகூறியது:
'ஐயோ! எலியே, நீஎன்னசொல்லிவிட்டாய். என்குணம்தெரியாமல்இவ்வாறுபேசிவிட்டாய். உன்னைக்கொன்றுதின்றால்ஒருவேளைப்பசிகூடஎனக்குத்தீராதே. ஆனால், நட்பாகஇருந்தால்எத்தனையோகாலம்நாம்நன்றாகவாழலாமே! ‘அந்தப்புறாவரசனிடம்உள்ளதுபோல்என்னிடமும்நீநட்பாகஇருந்தால், என்உயிருள்ளஅளவும்நான்நட்புமாறாமல்இருப்பேன். இதுஉண்மை. சூதாகச்சொல்லும்வார்த்தைஅல்ல.
‘அலைவீசிக்கொண்டிருக்கும்கடல்பரப்பிலே, எரியும்கொள்ளிக்கட்டைபோய்நுழைந்தால்கடல்நீராவற்றிவிடும்? கொள்ளித்தீதானேஅணையும். அறிவுள்ளமேலோரிடம்கோபம்பற்றிஎரியாது. அவர்கள்கடலைப்போன்றதங்கள்விரிந்தநெஞ்சால்அந்தக்கோபத்தீயைஅணைத்துவிடுவார்கள்’ என்றுஇலவமரத்துக்காகம்எடுத்துக்கூறியது.
‘உங்கள்காக்கைப்புத்தியேஒருநிலையில்லாதது. உன்னைநண்பனாகச்சேர்ப்பதால், என்னுடையசெயல்கள்ஒன்றும்ஆகப்போவதில்லை. மேலும்அவைகெட்டுத்தான்போகும். நானும்நீயும்எவ்வாறுகலந்துவாழமுடியும்?
'கப்பல்கடலில்தான்ஓடும். அதைத்தரையில்ஓட்டமுடியாது. தேர்பூமியின்மீதுதான்ஓடும். அதைக்கடலில்ஓட்டிச்செல்லமுடியாது. சேரக்கூடாதவைசேர்ந்தால்அந்தஉறவுதிடமாகநிலைப்பதில்லை. கெட்டுப்போவதேதவிரஅந்தச்சேர்க்கையால்ஆகும்சிறப்புஎதுவும்இல்லை.
'பெண்களிடத்தும், ஒழுக்கம்கெட்டவர்களிடத்தும்நியாயத்தைஎதிர்பார்த்தும், தீயவர்களிடம்ஒருநன்மையைச்செய்துகொள்ளஎதிர்பார்த்தும், நட்புக்கொண்டுஅதனால்இன்பம்அடைந்தவர்கள்உலகத்தில்இல்லவேஇல்லை. பாம்பைமடியில்கட்டிக்கொண்டவர்களைப்போல், அவர்களுக்குஎந்தக்கணமும்துன்பம்தாம்ஏற்படும்என்றுஎலிகாகத்தின்உறவைமறுத்துரைத்தது.
'எலியே, நீசொல்வதுஉண்மைதான். தீயவர்களின்உறவுஒருக்காலும்சேர்க்கக்கூடாதுதான். ஆனால், என்னைஒருகாக்கைஎன்பதற்காகஒதுக்கித்தள்ளிவிடாதே. நான்உனக்குஎன்றும்உயிர்நண்பனாவேன். நீஎன்நட்பைஏற்றுக்கொள்ளாமல்தள்ளிவிட்டால், நான்என்உயிரைவிட்டுவிடுவேன், சத்தியம்!
'செல்வத்தினால்மனிதர்களுக்குள்நட்புஉண்டாகும். ஒன்றாகக்கூடித்தின்பதால், பறவைகளுக்குள்நட்புஉண்டாகும். கோபபுத்தியால்துட்டர்களுக்குள்ளேநட்புஉண்டாகிவிடும்.
மென்மையானஊசிகாந்தத்தைக்கண்டவுடன்போய்ஒட்டிக்கொள்ளும். இரும்புத்துண்டுகளோ, நெருப்பில்கலந்துவருத்தப்பட்டபின்பேஒன்றாகஒட்டிக்கொள்ளும். அதுபோல, கண்டவுடனேநல்லவர்கள்நண்பர்களாகிவிடுவார்கள். தண்டனையடைந்தபின்ஒன்றுசேர்ந்துபுல்லர்கள்நண்பர்களாயிருப்பார்கள்.

`உன்அறிவின்உயர்வையும், உன்நெஞ்சில்உள்ளநட்பின்தன்மையையும், அந்தநட்பைநீபாதுகாக்கும்முறையையும்கண்டு, உன்நட்பைப்பெறஎண்ணியேநான்உன்னிடம்வந்தேன். என்நிலைமையைநீநன்றாகஅறிந்துகொள்ளவேண்டும். அன்புஒன்றுக்காகவேநான்உன்னைநாடிவந்திருக்கிறேன்’ என்றுகாக்கைகூறியது.
இவ்வளவுஉறுதிமொழிகள்கூறியபின், அந்தஎலி, இந்தஇலவமரத்துக்காகத்தைநம்பிவிட்டது. நம்பிக்கைபிறந்தவுடன்அதன்முகத்தில்மலர்ச்சிதோன்றியது. மலர்ந்தமுகத்துடன்அதுகாகத்தைநோக்கி, `நன்று, இனிநாம்என்றும்நண்பர்களாய்இருப்போம்' என்றுஆதரவானபதிலையளித்தது.
அன்றுமுதல், காகம்தனக்குக்கிடைக்கும்மானிறைச்சிமுதலியவற்றில்எலிக்கும்ஒருபங்குகொண்டுவந்துகொடுத்துவந்தது. இப்படியாய்ப்பலநாட்கள்அவைஒன்றுக்கொன்றுஉதவியாய்இருந்துவந்தன. Highlights ஒருநாள்காகம்எலியிடம்வந்து, இந்தக்காட்டில்இரைஎளிதாகக்கிடைக்கவில்லை. எனக்குத்தெரிந்தஆமைஒன்றுஇருக்கிறது. அதனிடம்சென்றால்குளத்தில்இருக்கும்மீன்களையெல்லாம்நமக்குஉண்ணத்தந்திடும். நன்றாகச்சாப்பிட்டுக்கொண்டுநலமாகஇருக்கலாம்' என்றுகூறியது. `சரி, நானும்அங்குவருகிறேன். எனக்குஅங்கேஒருவேலையிருக்கிறது. அதைநான்அங்குசென்றபின்உனக்குத்தெரிவிக்கிறேன்' என்றுஎலிசொல்லியது.
உடனேகாகம், தன்கால்களால்எலியைத்தூக்கிக்கொண்டுஆமையிருக்கும்குளத்தைநோக்கிப்பறந்தது.
அங்குபோய்ச்சேர்ந்ததும், ஆமைவெளியில்வந்து, காகத்தைஅன்பாகவரவேற்றுநலம்விசாரித்தது. பேசிக்கொண்டிருக்கும்போது, காகத்தைநோக்கிஆமை, `இந்தஎலியார்?’ என்றுகேட்டது.
`ஆமைநண்பனே, நாம்முன்வருந்திச்செய்ததவத்தால்நமக்குஅருமையாகக்கிடைத்தநண்பன்இந்தஎலி. இதன்பெருமையையாராலும்சொல்லமுடியாது' என்றுசொல்லிப்புறாஅரசன்வேடன்வலையில்அகப்பட்டுக்கொண்டதையும்அதைஎலிமீட்டதையும்விளக்கமாகக்கூறியது.
அத்தனையும்கேட்டஆமை, `ஆ! இவன்உண்மையானநண்பனே!' என்றுசொல்லிஅன்புபாராட்டி, காகத்திற்கும்எலிக்கும்விருந்துவைத்துஅவற்றோடுமகிழ்ச்சியாகஇருந்தது.
ஒருநாள்ஆமைஎலியைநோக்கி, `உன்சொந்தஊர்எது? உன்னுடையவரலாறுஎன்ன? நீஇங்குவரக்காரணம்என்னஎன்றுகேட்டது.
எலிதன்வரலாற்றைச்சொல்லத்தொடங்கியது.
என்னுடையசொந்தஊர்சம்பகாவதிஎன்பது. அங்கேஒருமடத்தில்நான்இருந்துவந்தேன். அந்தமடம்ஒருசைவத்துறவியுடையது. அந்தச்சைவத்துறவிநாள்தோறும்தெருவில்பிச்சைஎடுத்துவந்து, தான்உண்டதுபோகமீதியைவேறுயாரேனும்பரதேசிகள்வந்தால்கொடுப்பதற்கென்றுஒருசிறுபாத்திரத்தில்வைத்திருப்பான். அவன்மீத்துவைக்கும்சோற்றைஇரவில்நான்வந்துவயிறுபுடைக்கத்தின்பேன், அவன்கையில்அகப்படமாட்டேன். இப்படிப்பலநாட்கள்என்வாழ்க்கைஇன்பமாகநடந்தது.
ஒருநாள்அந்தசைவத்துறவியின்மடத்துக்குஇன்னொருசந்நியாசிவந்திருந்தான். இருவரும்பலவிதமானசாத்திரங்களைப்பற்றிப்பேசிக்கொண்டேயிருந்தார்கள். இரவுவெகுநேரமாகியும்அவர்கள்பேச்சுமுடிந்துதூங்கப்போவதாகத்தெரியவில்லை. எனக்குப்பசிபொறுக்கமுடியவில்லை. ஆகவேஅவர்கள்தூங்கும்முன்னாலேயேஅந்தப்பாத்திரத்தில்இருந்தசோற்றைத்தின்னத்தொடங்கினேன். நான்சோறுதின்னும்சத்தம்கேட்டுசைவத்துறவிஅதட்டிஎன்னைத்துரத்திவிட்டான். அப்போதுஅவனுக்குஏதோஒருயோசனைதோன்றியிருக்கிறது.
தன்னோடுபேசாமல்ஏதோநினைவாய்இருப்பதைக்கண்டுஅங்குஅமர்ந்திருந்தசந்நியாசிஅவனைநோக்கி, `திடீர்என்றுஎன்னயோசனை?' என்றுகேட்டான். “அந்தஎலிகுதித்தோடியதைப்பார்த்துத்தான்யோசனையில்ஆழ்ந்துவிட்டேன். நான்தெருத்தெருவாகச்சுற்றிப்பிச்சையெடுத்துக்கொண்டுவருகிறசோற்றையெல்லாம்இதுஇங்கிருந்துகொண்டேதின்றுகொழுத்துப்போய்விட்டது. எவ்வளவுவேகமாகஅதுகுதித்துப்பாய்கிறது! அதைப்பிடிக்கக்கூட'முடியவில்லை. இப்படிமதமதப்பானஅச்சமில்லாதஎலியைநான்,[ பார்த்ததேயில்லை’ என்றுசைவத்துறவிகூறினான்.
‘இந்தஎலிஒன்றுதானா, இங்குஇன்னும்வேறுஎலிகள்இருக்கின்றனவா?’ என்றுவந்திருந்தசந்நியாசிகேட்டான்.
‘ஒன்றுதான்’ என்றுசொன்னான்சைவத்துறவி.
“அப்படியானால், உன்சோற்றுப்பருக்கையினால்மட்டும்இதுகொழுக்கவில்லை. இதுகொழுத்திருப்பதற்குவேறொருகாரணம்உண்டு. இந்தஇடத்திலேநாம்மண்வெட்டியால்வெட்டிப்பார்க்கவேண்டும்’ என்றான்.
“ஏன்?” என்றுசைவத்துறவிவிவரம்புரியாமல்கேட்டான்.
“எவனிடத்தில்பொருள்இருக்கிறதோ, அவன்கொழுப்பாகஇருக்கிறான்என்றுசொல்வார்கள். அதுபோல, இந்தஎலிஇருக்குமிடத்தில்ஏதோபுதையல்இருக்கவேண்டும்’ என்றுவந்திருந்தசந்நியாசிகூறினான்.
`உடனேஅவர்கள்எலிவளையிருந்தஇடத்தைவெட்டத்தொடங்கினார்கள். உண்மையில்அங்குஅவர்களுக்குத்தங்கப்புதையல்கிடைத்தது. அவர்கள்அந்தத்தங்கநாணயங்களைஎடுத்துக்கொண்டார்கள். நான்பயந்துபோய்வேறொருவளையில்பதுங்கிக்கொண்டேன். மறுபடிபசியெடுத்தபோது, நான்அங்குசோறுதின்னப்போனேன். அந்தத்துறவிதுரத்திக்கொண்டுவந்துஎன்னைஅடித்து! விட்டான். அன்றுமுதல்இன்றுவரைஅந்தமடத்திற்குத்திரும்பிப்போகவேஎனக்குப்பயமாகஇருக்கிறது. இப்போதுஒர்ஆண்டாகக்காட்டில்தான்இருந்துவருகிறேன்.
‘அறிவும்கல்வியும்நன்மையும்பயனும், வன்மையும்இன்பமும்எல்லாம்பொருளினால்தான்உண்டாகின்றன.
`சுதியில்லாதபாட்டும், உறவினர்இல்லாதநாடும், அறிவில்லாதவர்கவிதையும், நல்லமனைவியில்லாதவீடும், கணவன்இல்லாதபெண்ணின்அழகும்வீண்பாழே! பொருள்இல்லாதவர்களுக்குஉலகவாழ்வேபாழ்!
`கதிரவன்இல்லையென்றால்கண்ணுக்குத்தெரிவனஎல்லாம்மறைந்துபோகும். அதுபோல்பொருள்இல்லாதவர்களுக்குஎல்லாநன்மைகளும்மறைந்துபோகும்.
'அந்தச்சைவத்துறவிஎன்னைஅடித்துவிரட்டும்போது, 'தங்கப்புதையலின்மேல்இருந்துகொண்டுஎன்சோற்றைத்தின்றுகொழுத்தஎலியே, இப்போதுஉன்தங்கம்பறிபோச்சே! இன்னும்உனக்குவெட்கம்இல்லையா?' என்றுகேட்டான். அதுஎனக்குஇன்னும்வேதனையாகஇருக்கிறது. அந்தவேதனைநீங்கநீதான்ஒருவழிசொல்லவேண்டும். அதற்காகவேஉன்னிடம்வந்துசேர்ந்தேன்’ என்றுஎலிகூறியது.
'கவலைப்படாதே, இந்தக்காகத்திற்குநீஒருசெல்வம்போலஉற்றநண்பனாகக்கிடைத்தாய். நீங்கள்இருவரும்என்னிடம்வந்துசேர்ந்ததேபெரும்பாக்கியம். நட்பாகியபெரும்செல்வம்நம்மிடம்இருக்கிறது. அதைநமக்குக்கொடுத்ததெய்வத்தைவழிபட்டுக்கொண்டுநாம்நலமாகஇருப்போம்’ என்றுஆமைகூறியது.
ஆமைகுளத்திலிருந்துமீன்களைக்கொண்டுவரும். காகம்எங்கிருந்தாவதுஇறைச்சிகொண்டுவரும். எலிஊருக்குள்போய்ச்சோறுகொண்டுவரும். மூன்றும்ஒன்றாகக்கூடியிருந்துகொண்டு, நாள்தோறும்உண்டுஅன்புடன்பேசிக்காலம்கழித்திருக்கும்.
இப்படிஅன்போடுஅவைஒன்றாகவாழும்நாளில்ஒருநாள்ஒருமான்ஓடிவந்தது. அந்தமான்நடுங்கிக்கொண்டேநின்று, மருண்டுமருண்டுவிழித்தது.
‘சிறிதும்அறிவில்லாதநண்பனே, ஏன்நடுங்குகின்றாய்? என்றுஅந்தமூன்றுநண்பர்களும்கேட்டன.
‘யமனையொத்தகொடியவேடன்ஒருவன், நஞ்சுதோய்ந்தஅம்புகொண்டுஎன்னைக்கொன்றுவீழ்த்தவந்தான். நான்அதற்குத்தப்பிஓடிவந்தேன். இப்போதுநான்உங்கள்அடைக்கலம், என்னைநீங்கள்தான்காப்பாற்றவேண்டும்' என்றுஅந்தமான்கூறியது.
‘நல்லது. நீயார், எங்குள்ளவன்என்றெல்லாம்சொல்லு’ என்றுஅவைகேட்டன.
'எனக்குத்தாய்தந்தையர்யாரும்கிடையாது. சுற்றத்தாரும்ஒருவரும்இல்லை. காடுதான்எனக்குவீடு. என்மீதுஅன்புகொண்டுஎன்னைக்காப்பாற்றினீர்களானால், உங்களையேதாய்தந்தையராகவும், உற்றசுற்றத்தாராகவும்கொண்டு, என்றும்உங்களைப்பிரியாமல்வாழ்வேன்’ என்றுஅந்தமான்கூறியது.
அந்தமானின்சொற்களில்உண்மையிருந்தது. எனவேஅவைமூன்றும்அதைநம்பின.
‘நல்லது, நீஇங்கேயேஎங்களுடன்இரு. இனிநாம்நால்வரும்நண்பர்களாகவாழ்வோம்’ என்றுகூறிமானைத்தங்கள்கூட்டத்தில்சேர்த்துக்கொண்டன.
புதிதாகவந்தஅந்தமான்வகைதெரியாமல்ஒருவேடன்விரித்திருந்தவலையில்மாட்டிக்கொண்டது. அதுதுயரத்தோடுகத்தியதைக்கேட்டுக்காகம், மற்றநண்பர்கள்இருவரையும்கரைந்துஅழைத்தது. காகத்தின்குரல்கேட்டுஏதோஆபத்துவந்துவிட்டதுஎன்றுஎண்ணிக்கொண்டே, ஆமையும், எலியும்அந்தத்திசைநோக்கிவிரைந்துசென்றன, அப்போதுகரைந்துகொண்டேஎதிரில்வந்தகாகம், 'அந்தமான்குட்டிஒருகொடியவேடனுடையவலையில்சிக்கிக்கொண்டுவிட்டது. இப்போதேநாம்அதைவிடுவிக்கவேண்டும்' என்றுகூறியது.
மூன்றும்விரைந்துமான்வலைப்பட்டிருந்தஇடத்தைஅடைந்தன. சிறந்தஅறிவுடையநீஎப்படிஇந்தவலையில்மாட்டிக்கொண்டாய்?' என்றுஅவைகேட்டன,
‘எல்லாவிளக்கமும்பின்னால்சொல்லுகிறேன். வேடன்வந்துஎன்னைக்கொல்வதற்குமுன்னால்விடுவித்துவிடுங்கள்’ என்றுமான்பதறியது.
'வலையில்அகப்பட்டுவிட்டதற்காகஏன்இப்படிப்பதறித்துடிக்கிறாய்? ஏன்இப்படிப்பயப்படுகிறாய்?' என்றுஎலிகேட்டது.
'முன்ஒருநாள், நான்என்அம்மாவுடன்இருக்கும்போதுஒருவேடன்வலைவிரித்திருந்தான். அதைத்தாண்டிப்போய்நான்ஒருசோலைக்குள்புகுந்துகொண்டேன். ஆனால், அந்தப்பாவி
வேடன், என்னைத்தொடர்ந்தோடிவந்துஉயிரோடுபிடித்துக்கொண்டான். என்னைஅவன்அந்தநாட்டுஅரசருக்குக்காணிக்கையாகக்கொண்டுபோய்க்கொடுத்தான். அவர்தம்பிள்ளைகளுக்குவிளையாடக்கொடுத்தார். அவர்கள்என்னோடுவிளையாடிமகிழ்ந்தார்கள். நான்ஓடிவிடாதபடிஅவர்கள்என்னைக்கட்டிவைத்திருந்தார்கள். ஒருநாள்பகல்நேரத்தில்இடிமுழக்கத்துடன்மழைபெய்தது. அப்போதுமற்றமான்குட்டிகளோடுகூடிச்சுதந்திரமாகஓடிஆடித்திரிந்து, விரும்பியதழைகளைஒடித்துத்தின்பதுஎப்போது, அந்தக்காலம்எப்போதுவரும்?’ என்றுநான்அழுதுகொண்டிருந்தேன்.
'நான்வருந்திஅழுதுகொண்டிருப்பதைக்கண்டஇளவரசர்கள், 'பாவம், ஏனோஇதுவருத்தமாகஇருக்கிறது. இதைநாம்கட்டிப்போட்டுவைத்திருப்பதுநல்லதல்ல' என்றுஇரக்கப்பட்டுஎன்னைவிடுவித்துவிட்டார்கள். அதன்பிறகுதான்நான்இந்தக்காட்டுக்குவந்துசேர்ந்தேன். இப்போதுமீண்டும்வேடர்கள்கையில்அகப்பட்டுக்கொண்டால்என்னதீமைசெய்வார்களோ, தெரியவில்லையே! அதுதான்எனக்கும்பயமாகஇருக்கிறது! சீக்கிரம்என்னைவிடுவியுங்கள்!' என்றுமான்குட்டிகூறியது.
எலிசிறிதும்காலந்தாழ்த்தாமல், அந்தவலையைத்தன்பற்களால்கொறித்துஅறுத்துவிட்டது. வலைஅறுந்தவுடன்மான்வெளிப்பட்டுத்தங்கள்இடத்தைநோக்கிநடந்தது. அப்போது, அந்தக்கொடியவேடன்அங்குவந்துசேர்ந்துவிட்டான். வேடனைக்கண்டவுடன்மான்குட்டிதுள்ளிஓடியது. எலிஅங்கிருந்தவளைக்குள்ஓடிமறைந்துகொண்டது. ஆமையால்தான்வேகமாகநடக்கமுடியவில்லை. மெல்லமெல்லஊர்ந்துகொண்டிருந்தது. மானைத்தொடர்ந்துஓடிக்கொண்டிருந்தவேடன், வழியில்ஆமையைக்கண்டதும், அதைப்பிடித்துத்தன்தோள்பைக்குள்போட்டுக்கொண்டுஓடினான்.
இதைப்பார்த்துக்கொண்டிருந்தகாகம், எலியிடம்வந்து 'அந்தவேடன்ஆமையைத்தூக்கிக்கொண்டுமானைவிரட்டிப்போகிறான். மான்ஓடித்தப்பிவிடமுடியும். ஆனால், ஆமைசிக்கிக்கொண்டுவிட்டதே. போய்மானைக்கண்டுஇதற்குஒருவழிபார்க்கவேண்டும்வா!’ என்றுகூறியது.
'வேடனிடமிருந்துநம்நண்பனானஆமையைவிடுவிக்காமல்நாம்உயிருடன்வாழ்வதுசரியல்ல. வா, வா, விரைவில்போவோம்’ என்றுஎலிதுள்ளிக்குதித்தோடியது.
காகம்வேகமாகப்பறந்துசென்றுஓடிக்கொண்டிருந்தமானைக்கண்டது.
'மான்குட்டி, மான்குட்டி, உன்னைவிரட்டிக்கொண்டுவந்தவேடன், வழியில்தென்பட்டஆமையாரைத்தூக்கிக்கொண்டுஓடிவருகிறான். இப்போதுஅவரைநாம்காப்பாற்றவேண்டும். நான்ஒருவழிசொல்கிறேன். கேட்கிறாயா? என்றுகேட்டது.
காக்கையண்ணா , சீக்கிரம்சொல்லுங்கள்!' என்றுமான்குட்டிமேல்மூச்சுகீழ்மூச்சுவாங்கக்கூறியது.
'அதோ , நமதுகுளம்அருகில்தான்இருக்கிறது. குளத்தைநெருங்கியவுடன்அதன்கரையில்நீசெத்ததுபோல்விழுந்துகிட. செத்தபிணத்தைக்கொத்துவதுபோல்நான்உன்மேல்நின்றுகொத்திக்கொண்டிருக்கிறேன். இந்தக்காட்சியைக்கண்டதும்வேடன்உன்னைத்தூக்கிக்கொண்டுபோகவருவான். அவன்வருமுன்ஆமையிருக்கும்தோள்பையைக்கீழேவைத்துவிட்டுத்தான்உன்னைத்தூக்கவருவான். அவன்தரையில்பையைவைத்தவுடன்நமதுஎலியார்அதன்வாயைக்கத்தரித்துவிடுவார். உடனேஆமையார்பக்கத்தில்இருக்கும்குளத்திற்குள்நழுவிவிடுவார். வேடன்உன்னைத்தொடுமுன்நீஅம்புபோல்பாய்ந்துசென்றுஅருகில்எங்காவதுஒளிந்துவிடு. நானும்வானில்பறந்துமரங்களுக்குள்மறைந்துவிடுகிறேன்’ என்றதுகாகம்.
'அருமையானதிட்டம். அப்படியேசெய்வோம்’ என்றுசொல்லிமான்குளக்கரையில்போய்விழுந்துகிடந்தது. காகம்பின்னால்வந்துகொண்டிருக்கும்எலியிடம்பறந்துசென்றுதன்திட்டத்தைக்கூறியது. பின்திரும்பிவந்து, விழுந்துகிடந்தமானின்மேல்உட்கார்ந்துஅதைக்கொத்தித்தின்பதுபோல்பாசாங்குசெய்துகொண்டிருந்தது.
மானைவிரட்டிக்கொண்டுவந்தவேடன், “இதோஅந்தமான்செத்துவிழுந்துகிடக்கிறது. இதைஎடுத்துக்கொண்டுபோகலாம்என்றுநினைத்தான். தன்தோளில்ஆமைபோட்டுக்கட்டியிருந்தபையைக்குளக்கரையில்இறக்கிவைத்துவிட்டு, மானைத்தூக்கஓடினான்.
உடனேஎலிபாய்ந்தோடிவந்துஅந்தப்
பையைகடித்துக்குதறிஎறிந்தது. வேடன்மானைநெருங்கிச்சென்றவுடன், இலேசாகக்கண்ணைத்
திறந்துதிறந்துபார்த்துக்கொண்டிருந்தமான், வெடுக்கென்றுதுள்ளிஎழுந்துஓடியது. அதைவிடமனமில்லாமல்வேடன்துரத்திக்கொண்டுஓடினான். மானோகாட்டுமரங்களுக்கிடையே, வளைந்துவளைந்துஒடிஒருபுதரில்போய், வேடன்கண்ணுக்குத்தெரியாமல்மறைந்துவிட்டது. அதற்குள்ஆமைகுளத்திற்குள்இறங்கிவிட்டது. எலிவளைக்குள்பதுங்கிவிட்டது. காகம்மரத்தின்மேல்ஏறியமர்ந்துகொண்டது.
வேடன், ஒடிஇளைத்துஒன்றுமில்லாமல்ஏமாந்துதிரும்பினான்.
வேடன்அங்கிருந்துபோனபின், காகம், வேடன்போய்விட்டான்!' என்றுஅறிவித்துக்கரைந்தது.
அந்தக்குரல்கேட்டதும்ஒளிந்திருந்தஎலிஒடிவந்தது. மறைந்திருந்தமான்பாய்ந்துவந்தது. குளத்திலிருந்தஆமைகரைக்குவந்தது. நான்கும்மகிழ்ச்சியாகப்பேசிக்கொண்டிருந்தன. அந்தநான்கும்ஒன்றுக்கொன்றுஉற்றஉதவியாகஇருந்துபெற்றஇன்பம்பெரிது. அவைவாழ்நாள்முழுவதும்ஒற்றுமையாகஇருந்துமகிழ்ச்சியாகவாழ்க்கைநடத்தின.
நல்லவர்கள்நட்புப்போல்இலாபமானதுவேறுஎதுவும்இல்லை.

2. புலியால்மாய்ந்தபார்ப்பனன்
ஒருகாட்டில்ஒருகிழட்டுப்புலிஇருந்தது. அதுபோதுமானபலம்இல்லாததால்உணவுதேடமுடியவில்லை. ஓர்ஏரிக்கரையில்போய்நீராடிவிட்டுக்கையில்தருப்பைப்புல்லும்ஒருதங்கக்காப்பும்வைத்துக்கொண்டுஉட்கார்ந்திருந்தது. அப்போதுவேதம்படித்தபார்ப்பனன்ஒருவன்அந்தவழியாகப்போய்க்கொண்டிருந்தான். அவனைஅந்தப்புலிகூப்பிட்டது.
'அந்தணா, இதோபார்! இந்தக்காப்பைஉனக்குத்தருகிறேன். இங்கேவா!’ என்றுபுலிகூறியது.
தங்கக்காப்பைக்கண்டவுடன்பார்ப்பனனுக்குஆசையுண்டாகிவிட்டது. ஆனால், புலியின்அருகில்செல்லவும்பயமாயிருந்தது. புலியாரே, நீர்மிகவும்கொடியவராயிற்றே. மனிதர்களைக்கொன்றுதின்பதேஉமதுதொழிலாயிற்றே, அதைவிட்டுவிட்டுஎப்போதுதானம்செய்யக்கிளம்பினர்!’ என்றுதூரத்தில்நின்றுகொண்டேபார்ப்பனன்கேட்டான் .
அதற்குஅந்தப்புலி, ஏ, பார்ப்பனனே, என்னைப்பார், நானோகிழப்புலிஆகிவிட்டேன். எனக்குப்பல்லும்இல்லை; நகமும்இல்லை, பாவம்செய்வதைவிட்டுவிட்டுஇப்போதுதானம்செய்துபுண்ணியம்தேடஆசைகொண்டுவிட்டேன். பயப்படாதே! இதோஇந்தஏரியில்இறங்கித்தலை

முழுகிச்சுத்தமாகவந்துஇந்தக்காப்பைவாங்கிக்கொண்டுபோ!’ என்றுகூறியது.
நல்லதென்றுபார்ப்பனன்ஏரிக்குள்இறங்கினான். ஏரிஒரேசேறும்சகதியுமாகஇருந்தது.

சேற்றில்கால்கள்அழுந்திச்சிக்கிக்கொண்டான்பார்ப்பனன். என்னசெய்வதென்றுதெரியாமல்அவன்திகைத்துக்கொண்டிருந்தான். அதைக்கண்டபுலி,' ஆ! சேற்றில்சிக்கிக்கொண்டாயோ? இதோநான்உன்னைவெளியில்எடுத்துவிடுகிறேன்'என்றுசொல்லிஅவன்மீதுபாய்ந்தது. தன்முன்னங்காலால்அவனைஅறைந்துகொன்றது. அவனுடையஇரத்தத்தைக்குடித்துஅதுபசியாற்றிக்கொண்டது.
முன்யோசனையில்லாமல்கண்டவற்றில்ஆசைகொள்வதுஆபத்தையேஉண்டாக்கும்.

3. வஞ்சகநரி
மகதநாட்டில்சண்பகவனம்என்றுஒருகாடுஇருந்தது. அந்தக்காட்டில்ஒருமான்குட்டிஇருந்தது. அந்தமான்குட்டியுடன்ஒருகாகம்நட்பாய்இருந்துவந்தது. ஒருநாள்காகம்இரைதேடஎங்கோபறந்துசென்றது, அப்பொழுதுமானும்ஓரிடத்தில்இளம்பச்சைப்புல்லைமேய்த்துகொண்டிருந்தது. நாள்தோறும்நல்லஇளம்புல்லைமேய்ந்துதிரிந்ததால், அந்தபின்குட்டிகொழுகொழுவென்றுவளர்ந்திருந்தது.
புல்மேய்ந்துகொண்டிருந்தஅந்தமான்குட்டியின்உடலைக்கண்டஒருதசி, அதைக்கொன்றுதின்னவேண்டும்என்றுஆகைகொண்டது. அந்தஅழகானமான்குட்டியைக்கண்டவுடனேஅதன்நாக்கில்எச்சில்ஊறியது. மானைக்கொன்றுதின்னஅதுஒருதந்திரம்செய்தது.
மானின்அருகிலேபோய், 'என்நண்பா, நலம்தானே?’ என்றுபேச்சைத்தொடங்கியது.

‘நீயார்? உன்னைநான்இதற்குமுன்பார்த்ததாகவேநினைவில்லையே! நீயோஎன்னைத்தெரிந்தவன்போல்பேசுகிறாயே?’ என்றுமான்அந்தநரியைக்கேட்டது.
“மானே, நானும்இந்தக்காட்டில்தான்வாழ்கிறேன். ஆனால், நான்ஒருபாவி. எனக்குஉறவினர்யாரும்கிடையாது. தன்ன்ந்தனியாகஒருதுணையும்இல்லாமல்வீண்வாழ்வேவாழ்ந்துகொண்டிருக்கிறேன். இன்றுஉன்னைக்கண்டபிறகுதான்என்மனத்தில்மகிழ்ச்சிதோன்றியது. உனக்குவேண்டியஉதவிகளைச்செய்துகொண்டு, உன்னிடமேஇருந்துவிடமுடிவுசெய்துவிட்டேன். என்னிடம்நீஇரக்கங்காட்டிஅன்பாகநடந்துகொள்ளவேண்டுகிறேன்” என்றுநரிபதிலளித்தது.
நரியின்தந்திரமானபேச்சைக்கேட்டுஅந்தக்களங்கமில்லாதசின்னமான்குட்டிமயங்கிவிட்டது. அதுகூறியதெல்லாம்உண்மையென்றுஎண்ணிஅதைத்தன்நண்பனாகஏற்றுக்கொண்டுவிட்டது. இரண்டும்ஒன்றாகச்சேர்ந்துசண்பகமரத்தினடியில்போய்இருந்தன.
சிறிதுநேரம்கழித்துஅங்குவந்துசேர்ந்தகாகம்மான்குட்டியைப்பார்த்து,
“மானே, உன்னுடன்புதிதாகவந்துதங்கியிருப்பவன்யார்?’ என்றுகேட்டது. காக்கையண்ணா, இந்தநரிஎன்னோடுநட்பாயிருக்கவந்திருக்கிறது. மிகவும்அன்பாகப்பேசுகிறது!’ என்றுமான்குட்டிகூறியது.

“மானே, புதிதாகவந்தவர்களைஉடனேநம்பிவிடக்கூடாது. ஒருவனுடையகுலமும்முன்நடத்தைகளும்தெரியாமல், அவனுக்குநாம்இடம்கொடுக்கக்கூடாது. அப்படிஇடங்கொடுத்தால், பூனைக்குஇடங்கொடுத்துமடிந்தகழுகைப்போலத்துன்பமடையநேரிடும்’ என்றுகாகம்கூறியது.
அதைக்கேட்டநரிகாகத்தைப்பார்த்து, ‘ஏகாகமே, நீஇந்தமானோடுநட்புச்செய்யும்முன்பு
உன்னுடையகுணம்என்னவென்றுஆராய்ந்தாஇதுநட்புக்கொண்டது? நீங்கள்இருவரும்இப்போதுஉண்மையானநண்பர்களாய்இல்லையா? அதுபோலஏன்என்னையும்கருதக்கூடாது? என்றுமிகவும்தந்திரமாகக்கேட்டது.
இதைக்கேட்டமான்குட்டி, நரிசொல்வதுசரிதான்என்றுமனத்தில்தீர்மானித்துக்கொண்டது. அதுகாக்கையைப்பார்த்துகாக்கையண்ணா, ஒருவனைநாம்புதிதாகப்பார்க்கும்போதுஅவனிடம்நம்பிக்கையுண்டானால்போதாதா? அவனைப்பற்றியாரிடம்போய்நாம்விசாரிக்கமுடியும்? அதுஆகிறகாரியமா? இதுநம்மோடுஇருக்கட்டும்’ என்றுநரிக்காகப்பரிந்துபேசியது.
கடைசியில்காக்கையும்அரைகுறையானமனத்தோடுசரியென்றுஒப்புக்கொண்டது. அதன்பின்அவைமூன்றும்ஒன்றாகவாழ்ந்துவந்தன.
ஒருநாள்நரிமான்குட்டியைப்பார்த்து,' ஓரிடத்தில்அருமையானபயிர்பச்சைப்பசேல்என்றுவளர்ந்திருக்கிறது, வா, உன்னைஅங்கேஅழைத்துச்செல்கிறேன்’ என்றுகூப்பிட்டது.
மான்அதன்கூடப்போய்நன்றாகவளர்ந்திருந்தஅந்தப்பயிரைமேய்ந்துபசிபோக்கிக்கொண்டது. நாள்தோறும்அந்தப்பயிர்க்கொல்லைக்குப்போய்மான்மேய்ந்துவரத்தொடங்கியது
தான்விதைத்துவளர்த்தபயிர்அழிந்துவருவதைக்கண்டகொல்லைக்காரன், தன்பயிர்க்கொல்லையில்வலைகட்டிவைத்திருந்தான். வழக்கம்போல்மேயப்போனமான், அந்தவலையில்சிக்கிக்கொண்டது.
‘என்உயிருக்குயிரானகாகமோநரிேயாவந்தாலொழியஎன்னால்பிழைக்கமுடியாதே’ என்றுதயிரில்சுத்தும்மத்தைப்போல்மான்குட்டிமனத்துயரத்தோடுதுடித்துக்கொண்டிருந்தது.
அப்போதுஅந்தப்பக்கமாகவந்தநரி, மான்வலையில்சிக்கிக்கொண்டிருப்பதைப்பார்த்து, “என்நெடுநாளையஎண்ணம்இன்றுநிறைவேறிற்று. இன்றுநான்நிச்சயமாகஇந்தமானின்எலும்பையும்தசையையும்சுவைத்துச்தின்பேன்” என்றுமனம்மகிழ்ந்திருந்தது.
மான்குட்டிஅதைக்கண்டவுடன், நரியண்ணா, நரியண்ணா! விரைவில்என்னைவிடுவியுங்கள்’ என்றுகதறியது.
“மானே, இன்றுஎனக்குநோன்புநாள். இந்தவலைதோல்வலையாகஇருப்பதால், இன்றுநான்இதைத்தொடவும்கூடாது. நாளைக்குநான்
நிச்சயம்இந்தவலையைஅறுத்துஉன்னைக்காப்பாற்றுகிறேன். ஒருநண்பனுக்காகநான்உயிர்விடவும்தயாராயிருக்கிறேன்’ என்றுவஞ்சகமாகப்பதில்கூறியதுஅந்தநரி. பிறகுகொல்லைக்காரன்வந்துமானைக்கொன்றுபோடும்நேரத்தைஎதிர்பார்த்துஒருசெடிமறைவில்பதுங்கிக்காத்திருந்தது.
பகலெல்லாம்இரைதேடித்தின்றுவிட்டுஇரவுசண்பகமரத்துக்குவந்தகாகம்அங்குமான்குட்டியைகாணாமல்மனங்கலங்கியது. அந்தக்காடுமுழுவதும்பறந்துசென்றுஅதைத்தேடியது. கடைசியில்பயிர்க்கொல்லைக்குவந்துஅதுவலையில்சிக்கிக்கொண்டிருக்கும்பரிதாபக்காட்சியைக்கண்டது.
‘அறிவுள்ளமான்குட்டியே, நீஎப்படிஇந்தவலையில்மாட்டிக்கொண்டாய்?” என்றுகாகம்கேட்டது.
'காக்கையண்ணா, எல்லாம்நீங்கள்சொன்னபேச்சைக்கேளாததால்வந்தபிழைதான்!' என்றுதுயரத்தோடுகூறியதுமான்.
'நண்பர்நரியார்எங்கேகாணோம்?’ என்றுகாகம்கேட்டது.
‘என்இறைச்சியைத்தின்பதற்காகஇங்கேபக்கத்தில்செடிகளுக்குப்பின்னால்ஒளிந்துகொண்டிருக்கிறது' என்றுமான்குட்டிகூறியது.
அப்போதுவலைபோட்டகொல்லைக்காரன்வந்துகொண்டிருந்தான். காகம்உடனேமானைப்பார்த்து, 'இதோ, கொல்லைக்காரன்வருகிறான். நான்சொல்லுகிறபடிகேள். செத்துப்போனதுபோல்படுத்துக்கொள்’ என்றது. உடனேமான்குட்டிஅவ்வாறேசெத்தபிணம்போல்கிடந்தது.
பயிர்க்கொல்லைக்காரன்வந்துபார்த்துவிட்டுஇந்தமான்செத்துப்போய்விட்டதுஎன்றுநினைத்துக்கொண்டுவலையைச்சுருட்டிக்கட்டினான். அவன்வலையைச்சுருட்டிக்கட்டிக்கொண்டிருக்கும்போது, ‘இப்போதேஓடிவிடு’ என்றுகத்தியதுகாகம், மான்குட்டியும்சட்டென்றுதுள்ளிப்பாய்ந்துஓடியது.
‘என்னையேஇந்தச்சின்னமான்குட்டிஏமாற்றிவிட்டுஓடுகிறதே! என்றுகோபம்கொண்டகொல்லைக்காரன், கையில்இருந்தகுறுந்தடியைமான்குட்டிஓடியதிசையில்வீசினான். மான்அதற்குள்சிட்டாய்ப்பறந்துவிட்டது. அவன்வீசியதடியோசெடிமறைவில்பதுங்கியிருந்தநரியின்மேல்விழுந்துஅதைச்சாகடித்துவிட்டது.
ஒருவன்செய்கின்றநன்மையும்தீமையும்அதிகமானால், அதன்பலன்உடனடியாகஅவனுக்குக்கிடைத்துவிடும்என்றஉண்மைஇக்கதையினால்நன்குவிளங்குகிறது.

4. பூனைக்குஇடம்கொடுத்துமாண்டகழுகு
கங்கைக்கரையில்திரிகூடமலைஎன்றுஒருமலையிருந்தது. அதற்கப்பால்ஒருபெரியஇத்திமரம்இருந்தது. அந்தமரப்பொந்தில்ஒருகிழட்டுக்கழுகுவாழ்ந்துவந்தது. அந்தக்கழுகுக்குகண்ணும்தெரியாது, கால்களில்நகமும்கிடையாது. அதற்காகஇரக்கப்பட்டுக்காட்டில்உள்ளபறவைகள்எல்லாம்தாந்தாம்தேடுகின்றஇரையில்சிறிதுசிறிதுகொண்டுவந்துகொடுத்துஅதைக்காப்பாற்றிவந்தன.
ஒருநாள்அந்தஇடத்திற்குப்பூனையொன்றுவந்துசேர்ந்தது. அதுபறவைகளின்குஞ்சுகளைப்பிடித்துத்தின்னும்நோக்கத்தோடுதான்அங்கேவந்தது. அந்தப்பூனையைக்கண்டதும்அங்கிருந்தபறவைக்குஞ்சுகளெல்லாம்பதைபதைத்துக்கத்தின. கண்தெரியாதஅந்தக்கிழக்கழுகுஏதோகெடுதல்வந்துவிட்டதென்றுதுடித்துஅந்தக்குஞ்சுகளைப்பார்த்து, ‘ஏன்பயந்துகத்துகிறீர்கள்’ என்றுகேட்டது.
இதற்குள்அந்தப்பூனைதந்திரமாகநாம்பிழைத்துக்கொள்ளவேண்டும்என்றுஎண்ணி, கழுகின்முன்போய்நின்றுகொண்டு, ஐயா, வணக்கம்” என்றுகூறியது. ‘நீயார்?’ என்றுகழுகுகேட்டது.
'நான்ஒருபூனை!’ எனறதுபூனை.
'நீஇப்பொழுதேஇந்தஇடத்தைவிட்டுஓடிப்போய்விடு! இல்லையானால்உன்உயிர்போய்விடும்' என்றுகழுகுஎச்சரித்தது.
'ஐயாகழுகாரே, முதலில்என்கதையைக்கேளுங்கள். அதன்பின்நீங்கள்என்மேல்கோபித்துக்கொண்டாலும்சரி. சாதிவேறுபாட்டைமனத்தில்கொண்டுமற்றபிராணிகளைக்கொல்லுவதும், சாதிக்கொருநீதிஎன்றமுறையில்உபசாரம்செய்வதும்நேர்மையானமுறையல்ல. அவனவன்கொண்டுள்ளஒழுக்கங்களைக்கண்டபின்பேஎதுசெய்யவேண்டுமோஅதுசெய்யவேண்டும்’ என்றுபூனைகூறத்தொடங்கியது.
'நீஇங்குஎதற்காகவந்தாய்? அதைமுதலில்சொல்’ என்றதுகழுகு.
"நான்கங்கைக்கரையில்வாழ்கிறேன். நாள்தோறும்கங்கைநதியில்உடல்முழுவதும்அமிழக்குளித்து, சாந்திராயணம்என்றவிரதத்தைச்செய்துவருகிறேன். நீர்மிகுந்தபுண்ணியவான்என்றுகேள்விப்பட்டேன். அதனால்உம்மைப்பார்த்துப்போகவேபுறப்பட்டுவந்தேன். ஏனெனில், வயதுமுதிர்ந்தஅறிவாளிகள்எங்கிருக்கிறார்கள்என்று. கேட்டுஅவர்களிடம்தருமோபதேசம்கேட்பதுஒரு
வனுடையகடமைஎன்றுதர்மசாத்திரம்படித்தவர்கள்எல்லோரும்சொல்லுவார்கள். உம்மிடம்அறங்கேட்கவந்தஎன்னைநீர்கொல்லநினைத்துவிட்டீர். இதுசரியா? பகைவர்களும்கூடத்தம்மைஅடுத்தவர்களுக்குநன்மையேசெய்வார்கள். பகைகொண்டுதன்னைவெட்டவருபவனுக்கும்மரம்நிழல்கொடுத்துக்களைப்பாற்றும். நிலவுதீயவன்வீட்டிற்கும்வெளிச்சம்கொடுக்கிறது. பெரியவர்கள், புதியவர்கள்யார்வந்தாலும்அவர்களுக்குஉபகாரம்செய்வார்கள். எவனொருவன்வீட்டிற்கு, ஒருவிருந்தாளிவந்துமுகம்வாடித்திரும்புகிறானோ, அவன்வீட்டுப்புண்ணியத்தைஎடுத்துக்கொண்டுதன்பாவத்தைஅங்கேவிட்டுவிட்டுச்செல்லுகிறான்அந்தவிருந்தாளிஎன்றுசொல்லுவார்கள்.’’ என்றுபூனைசொல்லிக்கொண்டிருந்தது.
'ஆனால், இறைச்சிஅருந்துவதும்அதற்காகஉயிர்களைக்கொல்லுவதும்உங்கள்குலத்துக்குரியகுணம்அல்லவா?’ என்றுகிழட்டுக்கழுகுகேட்டது.
'சிவசிவா! என்னதீயவுரை! பஞ்சமாபாதகத்தில்பெரியபாவம், கொலைப்பாவம். அப்பாவம்செய்பவர்கள்தீயநரகம்அடைவார்கள். அறநூல்கள்பலஅறிந்துள்ளநான், இத்தீயகொலைத்தொழிலைவிட்டுவிட்டேன். நல்லபழவகைகளைஉண்டுவாழ்கின்றவர்கள், பாவச்செயல்செய்யப்ப-7 புகுவார்களா?’ என்றுபூனைதன்னைப்பற்றிஉயர்வாகப்பேசிக்கொண்டது.
கழுகுகடைசியில்அதைநம்பியது. பூனையும்
தன்னோடுஇருக்கஅதுஇடங்கொடுத்தது. பூனைபிறகுகழுகுக்குத்தெரியாமல்மெல்லமெல்லநடந்து

சென்று, இளம்பறவைக்குஞ்சுகளைப்பிடித்துத்தின்றுகொண்டிருந்தது. நாளடைவில்தங்கள்குஞ்சுகளைக்காணாமல்பறவைகள்தேடத்தொடங்கின. இதுதெரிந்தவுடன்பூனைஅங்கிருந்துஓடிவிட்டது.
தங்கள்குஞ்சுகளைத்தேடிவந்தபறவைகள், கழுகிருக்கும்பொந்தருகில்வந்துபார்த்தன. பூனைதான்கொன்றுதின்றகுஞ்சுகளின்வெள்ளெலும்புகளையும்சிறகுகளையும்கழுகுப்பொந்தின்எதிரிலேபோட்டுவைத்திருந்தது. அந்தஎலும்புகளையும்சிறகுகளையும்கண்டபறவைகள், கழுகுதான்தங்கள்குஞ்சுகளைக்கொன்றுதின்றுவிட்டதுஎன்றுநினைத்துக்கோபம்கொண்டன. எல்லாமாகக்கூடிஅந்தக்கிழட்டுக்கழுகைக்கொத்திக்கொத்திக்கொன்றுவிட்டன.
குணம்தெரியாமல்யாருக்கும்இடம்கொடுக்கக்கூடாதுஎன்பதுஇதனால்நன்குவிளங்குகிறது.

5. ஆசையால்நேர்ந்தஅழிவு
ஒருவேடன்காட்டுக்குவேட்டைக்குப்போய்,ஒன்றும்கிடைக்காமல்பலநாள்அலைந்துதிரிந்து

கொண்டிருந்தான். ஒருநாள்அவன்ஒருமானைக்கண்டான். அதன்பின்னேவிரட்டிக்கொண்டுஓடிஅம்பெய்துகொன்றுஅதைத்தூக்கிக்கொண்டுதன்சேரிநோக்கிநடந்தான். வழியில்ஒருபெரியபன்றியைக்கண்டான். உள்ளமான்போதாதென்று, இந்தப்பன்றியைஎய்துகொன்றால்இரண்டுநாள்சாப்பாட்டுக்காகும்என்றுஅதன்மேல்அம்பெய்தான். அந்தப்பன்றிகோபம்கொண்டுஅவன்மேல்பாய்ந்தது. அவனைக்கொன்றுதானும்செத்துவிழுந்தது. அப்பொழுதுஅந்தவழியாகஒருநரிவந்தது. செத்துக்கிடக்கும்வேடனையும்மானையும்பன்றியையும்கண்டு, ஆகா! மூன்றுநாளுக்குச்சாப்பாட்டுக்குப்பஞ்சமில்லை’ என்றுசொல்லிக்கொண்டேவேடன்வைத்திருந்தவில்லின்நானைப்போய்முதலில்கடித்தது. நாண்அறுந்தவுடன், வில்கம்புசடக்கென்றுவிரிந்துநரியின்வயிற்றில்குத்தியது. உடனேஅந்தநரியும்செத்துவிழுந்தது.
ஆசைமிகுந்திருக்கக்கூடாது.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.