Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

26. வெள்ளை யானை பறக்கிறது

மதுராந்தகம் மன்னனுக்குக் கண் பார்வை மங்கிக் காண்டே போனது. "வெள்ளை யானையின் தந்தங்களைத் மதயத்து, கண்களில் பூசிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் மறுபடி கண்பார்வை வந்துவிடும்," என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

வெள்ளை யானையை உயிரோடு பிடித்து வந்தால், - ஊரையே பரிசாகத் தருவதாக அறிவித்தான். மன்னன். இந்தக் செய்தி பரமார்த்தருக்கும், அவரது சீடர்களுக்கும் எட்டியது.

"குருநாதா! நமக்குத் தெரிந்தவரை யானை கருப்பு நிறமாகத்தானே இருக்கிறது? வெள்ளை யானை கூட உன் என்ன?” எனக் கேட்டான், மட்டி.

"தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளையாக இருக்குமாம்." என்றான் மடையன்.

"குருவே! அந்த யானையைப் பிடித்துவர உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா?" என்று கேட்டான், முட்டாள்.

உடனே குருவுக்குக் கோபம் வந்து விட்டது!

"கோழையே! என்னால் முடியாத காரியம்கூட உண்டா? ஆனால், இந்திரனுக்கும் எனக்கும் போன ஜென்மத்தில் இருந்தே தீராத பகை. அதனால் அங்கே போவதற்கு நான் விரும்பவில்லை." என்று கூறியபடி தாடியை உருவிக் கொண்டார்.

"குருதேவா! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது... வீட்டுக்கு வெள்ளை அடிப்பது மாதிரி, யானைக்கும் வெள்ளை அடித்து விட்டால் என்ன?" என்று கேட்டான், மண்டு,

"ஆமாம் குருவே! யானையின் மேல் சுண்ணாம்பு தடவி விட்டால் போதும். கருப்பு யானை வெள்ளையாக மாறிவிடும்! என்று குதித்தான், மூடன்.

"ராஜாவுக்குத்தான் சரியாகக் கண் தெரியாதே! அதனால் வளால் நம் மோசடியைக் கண்டுபிடிக்க முடியாது!" என்று மகிழ்ந்தான், முட்டாள்.

ஆகா! ஆளுக்கு ஒரு ஊர் பரிசாகக் கிடைக்கப் போகிறது. இனிமேல் நாம் எல்லோரும் குட்டி ராஜாக்கள்தான்!" என்றபடி மண்ணில் புரண்டான், மட்டி.

"பலே, பலே! இப்போதுதான் உங்கள் மூளை நன்றாக வேலை செய்கிறது!" எனப்பாராட்டினார், பரமார்த்தர்.

அப்போதே தன் சீடர்களை அழைத்துக் கொண்டு, யானைப்பாகனிடம் போனார்.

"ஒரு நாளைக்கு மட்டும் உங்கள் யானையை வாடகைக்குக் கொடுங்கள். தேவையான பணம் தருகிறோம். நீங்களும் கூடவே வரவேண்டும்," என்று வேண்டினான் மட்டி.

பணத்துக்கு ஆசைப்பட்ட பாகனும் "சரி" என்று சம்மதித்தான்.

நன்றாக இருட்டிய பிறகு, பானை பானையாகச் சுண்ணாம்பு கொண்டுவந்தான் , மடையன்.

அதை எடுத்து அபிஷேகம் செய்வது போல, யானையின் மேல் ஊற்றினான். முட்டாள்.

கொஞ்சம் சுண்ணாம்பை வாரி எடுத்து, பயந்து கொண்டே யானையின் வாயில் பூசிவிட்டான், மண்டு.

பரமார்த்தரும் தம் கைத் தடியால் வரி வரியாக வெள்ளை அடித்தார்.

“குருவே! யானை கருப்பாக இருக்கும்போது தந்தம் வெள்ளையாக இருக்கிறது. அதுபோல யானை வெள்ளையாக இருந்தால், தந்தம் கருப்பாக அல்லவா இருக்க வேண்டும்?" எனக் கேட்டான், பாகன்.

"ஆமாம்! நீ சொல்வதும் சரிதான்!" என்றபடி அடுப்புக் கரியைத் தேய்த்து, தந்தங்களில் பூசிவிட்டான், முட்டாள்.

"இது தேவலோகத்தில் இருந்து பிடித்து வந்தது என்பதை அரசன் நம்ப வேண்டும். அதனால் இரண்டு இறக்கைகள் கட்ட வேண்டும்," என்றார் பரமார்த்தர்.

குருவின் யோசனையை உடனே செயல்படுத்தினான், மூடன்.'

எல்லா வேலையையும் முடிந்தது. யானையைச் சுற்றி வந்து பார்வையிட்ட குரு, "அற்புதம்! இது இந்திர லோகத்து யானையேதான்!" என்றபடி அதன் தும்பிக்கையைத் தொட்டுக் கும்பிட்டார்.

மறுநாள், அரண்மனைக்கு முன்னால் மக்கள் கூட்டம் 'ஜேஜே' என்று இருந்தது. வெள்ளை யானையைப் பார்ப்பதற்காக மந்திரிகள் புடைசூழ மன்னனும் வந்தான்.

திறந்த வெளியில் கட்டி இருந்த யானையைப் பார்த்த அரசன், "அதிசயமாக இருக்கிறதே! இந்த யானையை எங்கிருந்து பிடித்து வந்தீர்கள்?" என்று கேட்டான்.

"தேவலோகம் வரை தேடிக் கொண்டு போனோம்!" என்று புளுகினான், மண்டு.

"ஐயோ! இதைப் பிடிக்க நாங்கள் பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்!" என்றான் மூடன்.

"தந்தம் மட்டும் கருப்பாக இருக்கிறதே?" என்று மந்திரி கேட்டதும்,

“அது வைரம் பாய்ந்த தந்தம்! அப்படித்தான் இருக்கும்!" என்றான் முட்டாள்.

இவர்கள் பேசிக் கொண்டே இருக்கும்போது, திடீரென்று பாக்த காற்று அடிக்க ஆரம்பித்தது. உடனே யானையின் மீது கட்டப்பட்ட இறக்கைகள் பிய்த்துக் கொண்டு கீழே விழுந்தன.

உடனே பலத்த மழையும் பெய்ய ஆரம்பித்தது. மழை நீர் யானையின் மீது பட்டதும் கொஞ்சம் கொஞ்சமாகச் சுண்ணாம்பு எல்லாம் கரைந்து, வெள்ளை யானை கருப்பாக மாறியது.

இதைப் பார்த்த குருவுக்கும் சீடர்களுக்கும் பயத்தால் உடம்பு வெட வெட' என்று நடுங்கியது!

சிறிது நேரத்திலேயே பரமார்த்தரின் சாயம் வெளுத்து விட்டது; ஊகும் கறுத்து விட்டது. வழக்கம்போல் தண்டனைக்கு ஆளானார்கள்.

தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளை .

அரசாங்க வைத்தியரிடம் போனான், மடையன்.

"நான் உங்களுக்கு உதவியாக இருக்கிறேன்" என்று கூறினான்.

"சரி.. சீக்கிரம் ஓடிப் போய் சில மூலிகைகளைப் பறித்து வா"என்றார் வைத்தியர்.

எப்படியும் வேலை கிடைத்துவிட வேண்டும் என்று நினைத்தான், மடையன். அதனால், நிதானமாக எழுந்து, நொண்டு போல நடித்தான்.

"அடப்பாவி! பாம்பு கடித்த ஆளுக்குப் பச்சிலை பறித்து வரச் சொன்னால், இப்படி நொண்டுகிறாயே?" என்று திட்டினார். வைத்தியர்.

மடையனுக்குக் கோபம் ஏற்பட்டது. "யாரைப் பார்த்து நொண்டி என்றாய்? இதோ பார் என் பலத்தை" என்றபடி தன் கால்களால் வைத்தியரை எட்டி உதைத்தான்.

தூரப் போய் விழுந்த வைத்தியர், "யாரங்கே... என்னை ஏமாற்றிய இவனைத் தூணில் கட்டி வைத்து, சுற்றிலும் நூறு கழுதைகளை அவிழ்த்து விடுங்கள். எல்லாம் சேர்ந்து இவனை உதைக்கட்டும்” என்று ஆணையிட்டார்.

தலைமைப் புலவரிடம் போய் சேர்ந்தான்,முட்டாள்.

"பழைய ஓலைகளில் எழுதி இருப்பதைப் படித்துச் சொல்ல வேண்டும். இதுதான் உன் வேலை" என்றார் புலவர்.

இவரிடம் குருடனைப் போல் நடித்தால் கடைசி வரையில் வேலையில் இருக்கலாம், என்று முடிவு செய்தான், முட்டாள்

புலவர் ஓர் ஓலையைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். பாளோ. ஒரு கண்ணை மூடிக் கொண்டு, ஒரு கண்ணை ப்பார்த்து, "கூஜா கோணியுடன் அம்மன் ஆலயம் சென்றார்"  என்று படித்தான்,

"அட முட்டாளே! ராஜா ராணியுடன் அம்மன் ஆலயம் சென்றார். என்பதைத் தப்பும் தவறுமாகப் படிக்கிறாயே, உனக்கென்ன கண் குருடா?" என்று கேட்டார் புலவர்.

"புலவா! என் கண்கள் ஒன்றும் குருடு இல்லை! இதோ பார்!" என்றபடி இரண்டு கண்ணையும் திறந்து காட்டினான், முட்டாள்.

"என்னையா ஏமாற்றினாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்" என்ற புலவர் இவனை இழுத்துச் சென்று இரண்டு கண்களிலும் சூடு போடுங்கள் என்று உத்தரவிட்டார்.

மூடனோ, நேராக அரசனிடமே சென்றான். ஊமை மாதிரி நடித்தால் வேலை கிடைத்து விடும் என்று நம்பி, பேசாமல் நின்றான்.

"என்ன வேண்டும்?" என்று கேட்டான் மன்னன்.

அப்போதும் பேசவில்லை மூடன்.

"நான் கேட்கிறேன். நீ பேசாமல் நிற்கிறாயே? ஊமையா?" என்று கேட்டான். அரசன்.

"பெப்... பெப்...பே..." என்று ஊமை மாதிரி பேசினான் மூடன்.

"ஐயோ பாவம்! ஊமை போலிருக்கிறது" என்றான் மன்னன்.

அதற்குள் பொறுமை இழந்த மூடன், "பாவம் பார்த்தது போதும் மன்னா! இந்த ஊமைக்கு ஏதாவது வேலை போட்டுக் கொடுங்கள்" என்று பேசினான்.

அவன் நன்றாகப் பேசுவதைக் கேட்ட அரசன், "வாய் இருந்தும் ஊமை மாதிரி நடித்து என்னை ஏமாற்றிய இவன் வாயைத் தைத்துவிடுங்கள்!" என்று கட்டளை இட்டான்.

குருவும், மண்டுவும் மடத்தில் இருந்தனர். "அந்த நான்கு பேரும் வேலையில் சேர்ந்து விட்டார்கள் போலிருக்கிறது. வேலை முடிந்து, நிறைய பணத்துடன் திரும்பி வருவார்கள். அதனால், பானையில் இருக்கும் பழைய சோற்றை நாய்க்குக் கொட்டி விடு! புதிய சோறாகவே பொங்கிச் சாப்பிடலாம்," என்றார். பரமார்த்தகுரு.

அவர் சொன்னபடி சோற்றை வாரி நாய்க்குக் கொட்டினான், மண்டு.

சற்று நேரத்துக்கெல்லாம் அழுது புலம்பியவாறு வந்து நின்ற சீடர்களைக் கண்டதும், "ஐயோ! இருந்த பழைய சோற்றையும் நாய்க்குப் போட்டு விட்டோம்! இனி எதைச் சாப்பிடுவது?" என்று புலம்பியபடி, பசியால் மயங்கி விழுந்தார், பரமார்த்தர்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.