டாக்டர் அம்பேத்கர் ஆரம்பத்தில் இந்து மதத்தை திருத்தலாமா என்று எண்ணினார், பிறகு அதை திருத்த முடியாது ஒழிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்..
தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான்..
பார்ப்பனர்கள் தம் உயர்விற்கும் தமிழர்களின் இழிவிற்குமே தீபாவளி போன்ற பண்டிகைகளை உண்டாக்கியுள்ளனர்..
மனிதனுக்கு அறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சி வளர்ச்சியும் இல்லாத காலத்தில்தான் கடவுள் நினைப்பு தோன்றியிருக்க வேண்டும்..
மதங்கள் என்பவை எல்லாம் மனிதனால் உண்டாக்கப்பட்டவையே..
பேராசை இல்லாவிட்டால் எந்த மனிதனும் தனது புத்திக்கும் அனுபவத்திற்கும் ஒவ்வாததை ஒரு காலமும் நம்பிப் பின்பற்றமாட்டான்..
நம் நாடு ஏழை நாடு, கடவுளுக்கு ஏன் செல்வங்களைப் பாழாக்க வேண்டும்?..
சாமி குழந்தைகளைக் கொடுக்கிறது என்று சொல்லுகிறார்களே, அந்தச் சாமி கஞ்சியையும் ஊற்றுமா?..
மனிதன் முன்னேற்றத்தை தடுக்க ஏற்படுத்தியவையே கடவுளும் மதங்களும்..
கடவுள் என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; சூழ்ச்சிக்காரர் செய்த தந்திரம்..
சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், கடவுள் இல்லை என்பவர்கள் உலகத்தில் எப்படி இருக்க முடியும்?..
கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன், பார்ப்பனனைச் சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமொன்றுமில்லை..
ஆசையும், சுயநலமும் அற்றவனுக்குக் கடவுள் மற்றும் மோட்சம் தேவை இல்லை..
பகுத்தறிவு, சுத்ந்திரம் உள்ள மனிதனுக்கு கடவுள் அருள் எதற்காகத் தேவை?..
திருவிழா என்பது கண்ணடிக்கும் கான்பிரன்சு..
வகுப்புவாதம் கூடாது என்று கூறும் சர்க்கார் நாமம் போட்டால் இரண்டாண்டு கடுங்காவல்; பூணுல் அணிந்தால் ஜென்ம தண்டனை என்று சட்டம் செய்திருக்க வேண்டாமா?..