நன்றி விசுவாசம் உடையவன் எவனோ அவன் மாத்திரம் மனிதன் ஆவான்..
மனிதன் வேட்டி, வீடு இவைகள் கொஞ்சம் பழசானாலும் மாற்றிக் கொள்கிறான். ஆனால் பழமைப் பித்தை மட்டும் பிடிவாதமாக மாற்றிக் கொள்ள மறுக்கிறார்..
மாறுதலுக்கு வளைந்து கொடுக்காத மனிதன் மாள வேண்டியதுதான்..
மனிதனுக்கு உள்ள பண ஆசையும், பதவி ஆசையும் எப்படிப்பட்டவனையும் கெடுத்து, ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்யத் தூண்டுகின்றன..
அறிவிற்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததை(கடவுள்) பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனில்லை..
- சிந்திப்பவன் மனிதன், சிந்திக்க மறுப்பவன் மதவாதி; சிந்திக்காதவன் மிருகம்; சிந்திக்க பயப்படுகிறவன் கோழை..
மனிதனுடைய நலம் என்பவற்றுள் எல்லாம் தலை சிறந்த நலம் அவன் மனத் திருப்தியே ஆகும்..
ஒழுக்கம் என்பது தனக்கும், அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடப்பதும் நடந்தபடி சொல்வதும் ஆகும்..
பிறருக்கு ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்வதைவிட தன்னிடம் அது எந்த அளவு இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும்..
பக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து. பக்தி இல்லாவிட்டால் நட்டம் இல்லை; ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்..
வரவுக்கு மேல் செலவு செய்வது விபச்சாரத்தனம் செய்வதைப் போன்றதாகும்..
பழி என்றால், மானக்கேடு என்றால், இழிவு என்றால் உயிர் விடவும் வேண்டும்..
உண்மையைப் பேசும்போது பழிப்புக்கு ஆளாவது பற்றி கவலை கொள்ளக்கூடாது.
பிறருக்கு எவ்விதத் தொல்லையும் தராத வாழ்வே ஒழுக்கம். இது எல்லாவித பேத நிலையும் ஒழிந்த நிலையில்தான் வளரமுடியும்.
என்றைக்கும் வரவுக்கு மிஞ்சிய செலவு செய்துவிட்டு கடனாளியாக மாறிப் பிறரை ஏமற்றுவது இழுக்கு; இதைவிட விபச்சாரம் என்பது இழிவானதல்ல.
விபச்சாரத்தைவிட மோசமான பண்பு – அதிகச் செலவு செய்து அதற்காகக் கடன் வாங்கித் திண்டாடுவதுதான்.
30 ரூபாய் சம்பாதிக்கிறவனும் கடனாளி; 1,000 ரூபாய் சம்பாதிக்கிறவனும் கடனாளி என்றால் என்ன அர்த்தம்?தன்னை அடக்காதவனுக்குத்தான் தரித்திரம் உண்டாகும். தன்னை அடக்காதவள்தான் விபச்சாரி.
- நம் மக்கள் அறிவு பெறவேண்டுமானால் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளை வெறுத்து ஒதுக்க வேண்டும்.
உலகில் பத்திரிகைகள் இரண்டு விதமானவை. தமது வாழ்க்கைக்கு ஒரு வழி வேண்டுமென்று சுயநலம் கருதுபவர்களால், மக்களைப் பின்பற்றி நடத்தப்படும் பத்திரிகை ஒன்று.
மக்கள் சமூகத்தில் சில கொள்கைகளைப் பரப்பவேண்டுமே என்று பொதுநலம் கருதுபவர்களால், ஒரு குறிப்பிட்ட லட்சியத்தையே பின்பற்றி நடத்தப்படும் பத்திரிகை மற்றொன்று.
ஒவ்வொரு மனிதனின் இலட்சியமும், தான் மனிதனாகப் பிறந்தது மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றுவதற்காக என்றிருக்க வேண்டும். புதுமைக்கு மக்களை திருப்ப வேண்டும் புதுமைகளை மக்கள் உணரும் படிச் செய்யவேண்டும். ஒவ்வொருவரும் பழமையை விட்டுக் காலத்திற்கேற்ப முன்னோக்கிச் செல்லவேண்டும்.