சமஸ்கிருதம் கடவுள் பேசிய மொழியாக இருக்கலாம்;அநேக அருள்வாக்கு கொண்ட மொழியாக இருக்கலாம். அது வேறு விசயம். அதனால்,பயன் உண்டா என்பதற்குப் பதில் வேண்டும்.
தமிழைப் போற்ற வேண்டுமானால், பரப்ப வேண்டுமானால் மதத்திலிருந்து பிரிக்க வேண்டும். விஞ்ஞானம், பொது அறிவு தமிழில் ததும்ப வேண்டும்.
தமிழில்பொது அறிவுக்குப் பத்திரிக்கை இல்லை.
தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரிகத்தையும் இழந்தான்.