இனமானம் தன்மானத்திலும் பெரிது. உண்மையிலும் பெரிது, பட்டம் பெற்ற கல்வியிலும் பெரிது, பண ஊற்றுள்ள உத்தியோகத்திலும் பெரிது..
மனிதனுக்கு எல்லாவற்றையும் விட முக்கியமான உணர்ச்சியாக, மான-அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத் தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக்கின்றது. "மனிதனுக்குப் பிறப்புரிமை சுயமரியாதைதான்."
விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவையின்றேல் பட்டம் பல பெற்றாலும் பணம் பல கோடி சேர்த்தாலும் பலன் இல்லை..
மனிதன் சுயமரியாதையை, தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ள வேண்டும்..
மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்..
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு..
தெரியாத-புரியாத கடவுளை மனிதன் நம்பித்தான் ஆகவேண்டும் என்பதான கட்டாயம் ஏற்பட்டு, மனிதன் நம்ப ஆரம்பித்ததன் பயனே இவ்வளவு பொய்களையும் நம்பவேண்டியவனாகிவிட்டான்.
ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப்படுகிறதோ, அவைகளையெல்லாம் மாற்றுவதுதான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம்.
மனிதனுக்கு எல்லாவற்றையும்விட முக்கியமான உணர்ச்சியான மான – அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத் தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், “மனிதன்”, “மானுடன்” என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள்.
ஆதலின் மனிதன் என்பவன் மானமுடையோன். எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம்தான். அத் தன்மானமாகிய சுயமரியாதையைதான் மனிதன் பிறப்புரிமையாகக் கொண்டிருக்கின்றான்.
சீர்திருத்தமும், சுயமரியாதையும் சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம். தற்போது நம் மக்களுக்கு வேண்டியது படிப்புமட்டும் அல்ல, அறிவும் வேண்டும், சுயமரியாதையும் வேண்டும், தன்மான உணர்ச்சியும்,எதையும் பகுத்துணரும் திறனும், ஆராய்ந்து அறியும் அறிவும் தான் மிகவும் தேவை. மனிதன் உலகில் தன் சுயமரியாதையை தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ள வேண்டும்.
பார்ப்பனர்கள் நம்மைச் சூத்திரர்கள் என்று கூப்பிட்டால் நாம் அவர்களை மிலேச்சர்கள் என்று கூப்பிட வழக்கப்படுத்தவேண்டும்