Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

அதில் என்ன சந்தேகம்?

பெருமாள் என்ற மேதாவி இருந்தான். அவன் ஓர் அழகிய கிளியை வளர்த்து அதற்கு அதில் என்ன சந்தேகம்?" என்ற ஒரு வார்த்தையைப் பேசக் கற்றுக் கொடுத்தான்.

வீட்டுத்தோட்டத்தில் ஓர் இடத்தில் நூறு பொன்னைப் புதைத்து வைத்து, “இங்கே தோண்டினால் புதையல் கிடைக்குமா?" என்று கேட்டான். அதற்குக் கிளி, “அதிலென்ன சந்தேகம்?" என்று சொன்னது.

இந்த ஒரு கேள்வியையே கேட்டுப் பழகி இருந்த களி வேறெந்தக் கேள்விக்கும் பதில் சொல்வதில்லை. பணத்தை எவருமறியாமல் வெவ்வேறு இடங்களில் புதைத்துவிட்டு பலரறிய இந்தக் கேள்வியைக் கேட்பான் பெருமாள்.

"பெருமாளின்  கிளி புதையல் ரகசியத்தைச் ' அதுவும் அவனுக்கு மட்டுமே சொல்லும்" என்று ஊரில் செய்தி பரவியது.

காசிக்கு என் அண்ணனுடன் போய்விடலாமென்றிருக் கிறேன். ஒரு வாரம் வந்து பழகிக்கொள்'' என்றான் பெருமாள்.

பேராசைக்காரன் கிளிக்கு தினமும் பழங்கள் கொடுத்து நட்பாக்கிக்கொண்டான். அதன் பிறகு அவன் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் அது "அதிலென்ன சந்தேகம்?” என்று கேட்டது.

அந்த இடத்தைத் தோண்டினால் புதையல் இருந்தது.

“இதோ பார்! கிளியை ரொம்பத் தொந்தரவு பண்ணாதே! வாரம் ஒரு தடவை புதுப்புது இடத் துக்கு அழைத்துக்கொண்டு போய் கேள்" என்று சொல்லி ஆயிரம் வராகன்களோடு கம்பி நீட்டினான் பெருமாள்.

கிளியைப் புதிய இடங்களுக்குக் கூட்டிச் சென்று கேள்வியைக் கேட்க, கிளியும் தயங்காமல், “அதி லென்ன சந்தேகம்?" என்றது. தோண்டிப் பார்த்தால் ஒன்றுமில்லை! நான் ஒரு பைத்தியக்கார முட்டாள்' என்று தலையிலடித்துக் கொண்டான் அவன்.

"அதிலென்ன சந்தேகம்?" என்றது கிளி!

பெருமாள் தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை புறப்பட்டான். ஒரு காட்டு வழியில் திருடர்கள் பதுங்கியிருப்பதைக் கண்டான். மனைவியிடம், "சொன்னால் கேட்டால் தானே! வைரஹாரம் ரொம்ப ராசியானது. போட்டுக் கொண்டு புறப்பட்டால் விஷ ஜந்துகள் கண்ணில் தென்படாது என்றேன். இதோ பார் நட்டுவாக்களி" என்று கையிலிருந்த கம்பால் சருகுகளை அடித்தான்.

கணவர் காரணமில்லாமல் எதுவும் சொல்லமாட்டார் என்பதால் பெருமாளின் மனைவி பயந்தது போல் நடித்தாள்.

“சரி வா, அதைப் போட்டுக் கொண்டு வந்து விடலாம்” எனத் திரும்பி நடந்தான் பெருமாள்.

திருடர்கள் “இன்று நமக்கு சரியான வேட்டை ! வைர ஹாரத்தை விடுவானேன்?" என்று பேசாதிருந்தனர்.

பெருமாள் ஊருக்குள் போய் ஆட்களுடன் வர திருடர்கள் பிடிபட்டனர்.

பெருமாள் தவறு செய்யும் போதெல்லாம்,“பெருமாள் மடையா, பெருமாள் முட்டாள்” என்று திட்டி விட்டு நாக்கைக் கடித்துக் கொள்வார்.

ஒரு தடவை “பெருமாள்! உன் பெயரை மாற்றி வைத்துக் கொண்டு வந்தால்தான் உனக்கு வேலை" என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார்.

“சரிங்க முதலாளி. எங்க குலவழக்கப்படி பத்துக் கலம் நெல் தானம் கொடுத்தால்தான் பேரு மாத்த முடியும். அதுக்கு நான் எங்கே போவேன்?” என்றான் பெருமாள்.

"தொலைகிறது. நானே தரேன்” என்றார் எஜமானர்.

“ஆனா ஒரு நிபந்தனை” என்றான் பெருமாள்.

“என்ன நிபந்தனை?" என்று கேட்டார்.

“மறுபடி பேர் மாற்றச் சொல்லக்கூடாது. வேலையிலிருந்து விலக்கக் கூடாது'' என்றான் பெருமாள். எஜமானர் ஒப்புக் கொண்டார். ஒருவாரம் கழித்துப் பெருமாள் திரும்பி வந்தான்.

இப்போ உன் பெயரென்ன?" என்று ஆவலுடன் கேட்டார் முதலாளி.

"பெத்த பெருமாள்."

இதைக் கேட்டதும் முதலாளி மூர்ச்சையானார்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.