Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

நவரத்ன நாதஸ்வரம்!

பாக்கியத்தம்மாளுக்கு உடம்பு சரியில்லாமல் போனதால் தனது காய்கறிக்கடைக்குக் கீர்த்தியை அனுப்பினாள். கடைக்கு ஒரு கிழவர் வந்தார்.

''குழந்தாய்! என்னிடம் பணமில்லை . இரக்கப் பட்டு ஏதாவது காய் கொடுத்தால் சமைத்து சாப்பிடு வேன்" என்றார். ஒரு பெரிய புடலங்காயை எடுத்துக் கொடுத்தான் கீர்த்தி.

அவர் சில புடலைவிதைகளைக் கொடுத்து "இதை உன் வீட்டருகில் நடு. இது உன்னைப் பணக் காரனாக்கும்” என்று சொல்லிச் சென்றார்.

பாக்கியத்தின் கடைக்குப் பக்கத்தில் கடை போட்டிருந்த நாகமணி பாக்கியத்தம்மாளிடம் வத்தி வைத்தாள்.

பாக்கியம் படுகோபத்தோடு மகனுக்காகக் காத்திருந்தாள். கீர்த்தி சந்தோஷத்தோடு வந்து புடலைவிதைகளைக் கொடுத்து கிழவர் சொன்னதைக் கூறினான. ஆமாம! சுயயாட காய போயடைடுப போகிறோமே என்று யாராவது எதையாவது தந்தா இளிச்சவாய்த்தனமா கேட்டு வரதா? நாளைக்கே இது முளைச்சு பணத்தைக் கூடையிலே அள்ளப் போறோம்" என்று சொல்லி ஆத்திரத்தோடு அதை சன்னல் வழியாக வீசினாள்.

கீர்த்தி வருத்தத்தோடு தூங்கப் போனான். மறு நாள் காலை எழுந்து நீள நீளமாய்த் தொங்கும் புடலங்காய்களைக் கண்டு ஆச்சரியமடைந்தான்.

உள்ளே சமையலறைக்கு ஓடி, "என்னமோ சொன்னீங்களே! வந்து பாருங்க! நேற்றைக்கு நீங்க வீசின விதை முளைச்சு, பெரிய கொடியாகி நீளமான புடலங்காய்களாகாய்ச்சிருக்கு" என்றான்.

பாக்கியத்துக்குத் தன் கண்களையே நம்பமுடிய வில்லை! கொடி கொள்ளாத காய்கள்!

மளமளவென்று ஏணியில் ஏறி புடலங்காய்களைப் பறித்துப் போட்டாள். முந்தைய நாள் கோள் மூட்டிய நாகமணி, “என்ன பாக்கியம்? எப்ப புடல் விதைச்சே? நேத்து நான் வந்தப்பகூட பாக்கலியே?'' என்று அங்கலாய்த்தாள். பக்கத்திலே ஒரு வேப்பமரமும் அரசமரமும் இருந்தன. அதன்மேல் பற்றிப் படர்ந்து கொடி மேலே ஏறியிருந்தது.

மொத்த வியாபாரிகள் வண்டியைக் கொண்டு வந்து புடலங்காயைக் கட்டுக்கட்டாக வாங்கிப் விட்டாள்.

பெரிய மாடி வீடு கட்டினார்கள். அந்த மாடியைக் தாண்டியும் கொடி மேலே போயிற்று. ஒரு நாள் கீர்த்தி கெட்டியாகக் கயிறு போலிருந்த கொடியைப் பிடித்துக்கொண்டு மேலே மேலே போய்க் கொண்டிருந்தான்.

முடிவே இராதோ என்று தோன்றியது. ஓடும் மேகங்களைப் பார்த்தான். நிலவின் குளர்ச்சியை அனுபவித்தான்.

திடீரெனப் படிகள் வந்தன. அதில் ஏறினான். ஓர் அரண்மனைக்குள் அது அழைத்துச் சென்றது.

'இது தேவலோகமா? இந்திரனது அரண் மனையா? ஒருவேளை வைகுண்டமோ? ஏன் யாரையும் காணவில்லை ?' என்று யோசித்தபடி நடந்தான்.

திடீரெனப் பொருள்கள் ஆடின. “யார் உள்ளே? நரவாசனை அடிக்கிறதே!'' என்று உறுமும் குரல் கேட்டது. கீர்த்தி சடாரென்று ஒரு மறைவிடத்தில் ஒளிந்து கொண்டான்.

வந்தவன் ஒரு ராட்சதனாக இருக்க வேண்டும்! பூதாகராமான உடல். கறுப்பு நிறம். கோரைப்பற்கள்; செம்பட்டை முடி. பருத்த தொந்தி. ஆசனத்தில் அமர்ந்துகொண்டு ஒரு மணியை அழுத்தினான்.

ஒரு குள்ளபூதம் வந்தது.

“போய் நவரத்ன நாதஸ்வரத்தை எடுத்து வா" என்று உத்தரவிட்டான் அரக்கன்.

குள்ளபூதம் குடுகுடுவென்று ஓடிப்போய் ஒரு நாதஸ்வரத்தைக் கொணர்ந்தது. அதில் மிகவும் அழகாக நவரத்னங்கள் பதிக்கப்பட்டிருந்தன.

"மனிதர்களுக்குப் பணம் கொடுத்தால்தான் ஆடு, மாடு, பன்றிகளைத் தருகிறார்கள்" என்றபடி ராட்சதன் அதை ஊத ஆரம்பித்தான்.

என்ன அதிசயம்! தங்க நட்சத்திரங்களாக வந்து விழுந்தன. அவற்றைச் சேகரித்து ஒரு சிறு பையில் போட்டுக் கட்டி அரக்கனிடம் நீட்டியது குட்டி பூதம். அரக்கன் அதை எடுத்துக்கொண்டு படிகள் வழியே இறங்கிச் சென்றான்.

அவன் போனதும் மறைவிடத்திலிருந்த கீர்த்தி வாசனின் காதைப் பிடித்து வெளியே இழுத்தது குட்டி பூதம்.

கீர்த்தி நடுங்கினான். குட்டி பூதம், “பயப்படாதே! நான் உன்னைக் காட்டிக் கொடுக்கமாட்டேன். இந்த அரக்கனைக் கொல்வதற்காகக் கடவுள் அனுப்பிய தூதன் நீ!"

கீர்த்தி ஆச்சரியத்துடன் “அரக்கனை நான் கொல்வதா? நடக்கக்கூடிய காரியமா?'' என்று கேட்டான்.

“இல்லையேல் நட்டவுடனே முளைக்கும் அதிசயப் படல்விதையை உன்னிடம் ஏன் கொடுக்கிறார்? சற்று நேரத்தில் அரக்கன் ஏதாவது மிருகத்தோடு வருவான். அவன் பார்க்க இந்த நவரத்ன நாதஸ் வரத்தோடு நீ ஓடு. அவனால் தலைகீழாகத்தான் இறங்க முடியும். நான் ஒரு மந்திரக்கோடாரி தரு கிறேன். உன் வீட்டு மொட்டைமாடியில் குதித்ததும் அந்தக் கோடாரியால் புடலங்கொடியை வெட்டி விடு” என்று மந்திரக்கோடாரியையும் நவரத்ன நாதஸ்வரத் தையும் கொடுத்தது குட்டி பூதம்.

அரக்கன் ஓர் ஆட்டோடு வந்தான். அவன் பார்க்க படிகளில் ஓடிய கீர்த்தியைப் பின்தொடர்ந்தான் அரக்கன். குட்டி பூதம் சொன்னபடி மொட்டைமாடி யில் குதித்தவுடன் கொடியை மந்திரக்கோடாரியால் ஒரே போடாகப் போட, அரக்கன் அலறியபடி விழுந்து உயிரைவிட்டான்.

புடலங்கொடி வாடிவிட்டதே என்று வருந்திய தாயிடம் நவரத்ன நாதஸ்வரத்தை வாசித்துக் காண் பித்தான்.

இப்போது கீர்த்திவாசன் பெரிய நகைக்கடையின் எஜமானராகி விட்டான்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.