Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

யாளியைத் தேடிய கௌசிகன்

“இதனால் சகலமான பேருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் காட்டிலே திரியும் பயங்கர யாளியை யார் உயிருடனோ, பிணமாகவோ பிடித்துவந்தாலும் அவர்களுக்கு ராஜகுமாரி யசஸ்வினியை மண முடித்துத் தருவதோடு பாதி ராஜ்ஜியமும் அளிக்கப் படும். 'டமடமடம்' என்று அறிவிப்பைத் தொடர்ந்து முரசறையப்பட்டது.

பிழைப்பைத் தேடி ஊர்விட்டு ஊர் வந்த கௌசிகன், கவுணியன், கயாதரன் மூவரும் இதைக் கேட்டனர்.

"அந்த யாளியைப் பிடிக்க நாம் முயன்றா லென்ன?” என்று கேட்டான் கௌசிகன்.

"விளையாடுகிறாயா? அதன் நாக்கு ஆறடிக்கு நீள்கிறதாம்! மேய்ச்சலுக்குப் போன ஆடு, மாடு, மனுஷன் எல்லாத்தையும் நாக்காலேயே அடிக்கிற அது கிட்டே  மாட்டினா என்ன ஆவோம்?" என்றான் கயாதரன்.

"பயப்பட்டா சாதனை செய்ய முடியாது! எதையாவது நல்லவிதமா சாதிச்சுப் பேர் வாங்கணும்! இப்படியே கூலிக்கு வேலை செஞ்சு கோட்டையாகட்ட முடியும்? என்னிக்காவது ஒரு நாள் மரணம் நிச்சயம். துணிஞ்சுதான் பார்ப்பமே" என்றான் கவுணியன்.

"அதோட நாக்குலே பசை இருக்குமோ?" என்று சந்தேகக்குரலில் கயாதரன் கேட்க, "உன்னை அது நாக்கை நீட்டி சுருட்டிக்குமே, அப்பத் தெரிஞ்சுக்குவே" என்று நக்கலாகச் சொன்னான் கவுணியன்.

"பேசாம இருடா! அவன் ஏற்கெனவே பயந்திருக் கான்" என்று அடக்கினான் கௌசிகன்.

மூவரும் அரசவைக்குச் சென்று மன்னரிடம் தாங்கள் யாளியைப் பிடிப்பதாகக் கூறினர்.

வேந்தர் மூவரையும் ஏற இறங்கப் பார்த்து, “மூன்று பேருமாகப் பிடித்து வந்தால் யாருக்கு இளவரசியைத் திருமணம் செய்து தருவது?” என்று கேட்க, அருகிலிருந்த அமைச்சர், “மூவரில் ஒருவரை அரசிளங்குமரியே தேர்ந்தெடுக்கட்டும்” என்றார்.

நண்பர்கள் மூவரும் இதை ஒப்புக்கொண்டு சென்றனர். நகர எல்லையில் ஒரு முனிவர் மயக்கமா யிருப்பதைக் கண்டு முதலுதவி செய்தனர். மயக்கம் தெளிந்து எழுந்த அவருக்குத் தங்களிடமுள்ள பழங்கள், சத்துமாவு முதலியவற்றைக் கொடுத்தனர்.

பசி தீர்ந்த ரிஷி மகிழ்ச்சியுடன், “வாலிபர்களே உங்களின் இரக்க குணம் உங்களுக்கு மேன்மையான வாழ்வைத் தரும்" என ஆசீர்வதித்து அவர்களின் நோக்கத்தைக் கேட்டறிந்தார்.

“வெற்றியுண்டாகட்டும். ஒற்றுமையாய் செயல் படுங்கள். என்னாலான கைம்மாறு ஒன்று தருகிறேன்" என்றவர் ஒரு மைச்சிமிழைக் கொடுத்தார்.

“இதிலுள்ள அஞ்சனத்தை இரு புருவத்துக்கும் நடுவில் தடவிக்கொண்டால் மூன்றே முக்கால் நாழிகை எவர் பார்வையிலும் தென்படமாட்டீர்கள்! தவறான காரியங்களுக்கு இதைப் பயன்படுத்தினால் விளைவு விபரீதமாகிவிடும்” என எச்சரித்துத் தன் வழி சென்றார்.

மூவரும் கடவுளின் அருளை வியந்தபடி வழி நடந்தனர். மூவரும் மையைத் தடவிக்கொண்டு ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி காட்டில் அலைந்து யாளியை தூரத்தில் கண்டனர். அதன் பற்களும் முகவிகாரமும் பூதாகாரமான வடிவமும் அவர்களை நிலைகுலைய வைத்தன.

பத்தடி தள்ளி சப்தமிடாமல் அதைப் பின் தொடர்ந்தனர். "மனிதவாடை அடிக்கிறது. ஆனால், யாரையும் காணோமே என்று புலம்பியது யாளி. இவர்களும் ஒன்றரை மணி நேரத்துக்கொரு தடவிக்கொண்டே இருந்தனர்.

விடியும் தறுவாயில் யாளி தன் தலை நண்பர்கள் பின்சென்றனர்.

குகையா அது! அரண்மனை மாதிரி பல அலங்காரங்களுடன் இருந்தது. யாளி சிறிது நேரத்தில் உறங்க, நண்பர்கள் குகையைச் சுற்றிப்பார்த்தனர். மாட்டுக்கொட்டில், குதிரைக்கொட்டடி, கோழிப் பண்ணை எல்லாம் நிறைந்து இருந்தன.

மாட்டுக்கொட்டிலிலிருந்த ஒரு மாடு “ மனிதர் களே” என்றழைக்கவும் திடுக்கிட்டனர்.

"உனக்கு நாங்கள் தெரிகிறோமா?" என மெல்லிய குரலில் கேட்டனர்.

"ஆமாம். என் பார்வையிலிருந்து எதுவும் தப்ப முடியாது. மந்திரமாயங்கள், மூலிகைமைகள் என் னிடம் செல்லாது. நான் ஒரு அபூர்வப் பிராணி. நான் போடும் சாணம் தங்கமாயிருக்கும். எனது கோநீர் பன்னீராயிருக்கும். இந்த யாளி ஒரு அரக்கன். மந்திர சக்தியால் தன் நாக்கை இஷ்டத்துக்கு நீட்ட முடியும். என் மகிமையெல்லாம் இந்த அரக்கன் பட்டிருப்பதை  நான் விரும்பவில்லை. என்னை விடுவித்து அழைத்துச் செல்லுங்கள். உங்களைக் கோடீஸ்வரராக்குகிறேன்”  என்றது.

"நணபர்களே! நாம் இப்பசுவுடன் சென்று விடுவோம். நாம் முனிவர் சொன்னபடி ஒற்றுமையாய் தங்கத்தைப் பகிர்ந்துகொண்டு வாழ்வோம். எதற்கு யாளியைப் பிடிக்கும் ஆபத்தான காரியத்தில் இறங்க வேண்டும்?' என்றான்.

“முன்வைத்த காலைப் பின்வைக்கக்கூடாது. சாமர்த்தியம் வேறு. சம்பாத்தியம் வேறு. தொடங்கிய செயலை முடிப்பவனே வீரன். நான் வருவதற்கில்லை" என்று ஆணித்தரமாகச் சொன்னான் கௌசிகன்.

“இன்று நாம் ஒற்றுமையாயிருக்கலாம். நமக்கு வாய்க்கும் மனைவியர் பொறாமை கொண்டவரா யிருந்து விட்டால் நம் நிம்மதி அழிந்துவிடும். அதனால் பசுவின் லாபங்களை நீ மட்டுமே அனுபவித்துக் கொள். நீ போகலாம்" என்றான் கவுணியன்.

பசுவோடு சென்று விட்டான் கயாதரன்.

பன்றிக் கூட்டத்தில் ஒரு பன்றி பிரசவவேதனை யில் துடித்துக்கொண்டிருந்தது. நண்பர்கள் இரு வரும் அதற்கு உதவினர். அழகழகாய் எட்டுக் குட்டி களை ஈன்ற பன்றி,

“தோழர்களே! எல்லோரும் அருவருப்பாய் முகத்தைச் சுளிக்கும் எங்களுக்கும் உதவும் ஈரமனம் கொண்ட உங்களுக்கு ஒரு பரிசு தர விரும்புகிறேன். யாளியாகிய அரக்கன் தூக்கத்திலிருந்து எழுந்து வேட்டைக்குச் செல்கையில் நான்கு பக்கமும்  மணிகள்  கட்டிய       போர்வையை மடித்து வைப்பான். அது மந்திரப் போர்வை. நினைத்த இடத்துக்குப் பறந்து செல்லும். சொல்லும் இடத்தில் இறங்கும். நீங்களிருவரும் அதில் ஏறித் தப்பிவிடுங்கள்" என்றது.

இதைக் கேட்டு கவுணியன் பரவசப்பட்டான்.

“கௌசிகா! ஓர் இடத்தில் முடங்கிக்கிடக்க எனக்குப் பிடிக்காது. பல நாடுகள் சுற்ற வேண்டும். பலவித அனுபவங்கள் பெறவேண்டும் என்பதே என் லட்சியம். இளைஞர்களான நாம் இந்த அரக்கனுக்கு இரையாக வேண்டுமா? நன்கு யோசி. நீயும் வா. நாம் பறந்துவிடலாம்” என்றழைத்தான்.

“நண்பனே! போர்வையில் உன் போல் ஆசை கொண்டோரை அழைத்துச் சென்று வருமானம் தேடிக் கொள். மன்னனாவதே என் குறிக்கோள்” என்று உறுதியாகச் சொல்லிவிட்டான்.

மறுநாள் யாளி வெளியே சென்றதும் மணிப் போர்வையை விரித்து, பன்றி சொல்லிக் கொடுத்த மந்திரத்தைச் சொல்லி கவுணியன் அதில் ஏறி அமர்ந்தான். போர்வை ஜிவ்வென்று பறந்து சென்றது.

காட்டில் அதைப் பார்த்த யாளி நாக்கை நீட்டியது. ஆறு அடிக்கு மேல் அதனால் நீட்ட முடியவில்லை . போர்வையில் பயணம் செய்க கவுணியன் ஏளனமாய் நகைத்தான்.

 

யாளி அரக்கன் குகைக்குத் திரும்பி வந்த கர்ஜித்தது. எல்லா இடங்களையும் பார்வையிட்டபே பசுவைக் காணாமல் மேலும் கோபமுற்றது.

நோய் கண்டு இறந்த கோழிகளை குகைக்கு வெளியே வீசியது. அன்று இரவு யாளி உறங்கியதும் நோயுற்ற கோழிகளுக்கெல்லாம் வைத்தியம் செய்தான் கௌசிகன். அவனுடைய பரம்பரையே மிருக வைத்தியம்தான். கற்ற தொழில் கைகொடுத்தது. அதோடு குதிரையின் முதுகிலிருந்த புண்ணுக்கும் பச்சிலை பறித்து வந்து கசக்கி அப்பினான்.

குதிரை நன்றியோடு “நண்பரே! பட்டினியாகக் கிடக்க நேர்ந்தால் என்னையும் இவன் உணவாக்கிக் கொள்வான். என்னை உங்களோடு அழைத்துச் செல்லும் படி வேண்டுகிறேன். அவனது உயிர்நிலை அவன் கைவிரல் மோதிரத்துக்குள் இருக்கிறது. அவன் மூர்ச்சை யாவது மல்லிகைப்பூவின் நறுமணத்தால். அதை எடுத்து வந்து அவனை மோப்பம் பெறச் செய்யுங்கள். அவன் மயங்கியதும் அவன் கைவிரலிலுள்ள மோதிரத்தை எடுத்து வாருங்கள்” என்றது.

குதிரை சொன்னபடி யாளி மயக்கமுற சிவப்புக்கல் மோதிரத்தை எடுத்து வந்தான்.

“நேரமானால் வாசனை பழக்கமாகி எழுந்துவிடும் என்று துரிதப்படுத்தியது குதிரை. அதே நேரம் சுளுந்தில் காட்டிய சிவப்புக்கல் உருகி இரத்தம் போல் கொட்டியது.

“எடு. கத்தியால் நெம்பு” என்றது.

அப்படியே செய்தான். உள்ளே ஒரு புழு நெளிந் தது. குதிரையின் சொற்படி நசுக்கினான். இறந்த யாளி அரக்கனை அங்கிருந்த ஒரு பெட்டியில் போட்டு அரசரிடம் கொண்டுபோய்க் காட்டினான்.

அரசர் வாக்களித்தபடி தன் குமாரி யசஸ்வினியை மணமுடித்துக் கொடுத்து ராஜ்ஜியத்தையும் ஒப்படைத் தார். தனக்கு உதவி செய்த குதிரையைப் பட்டத்ததுக் குதிரையாக்கிக் கொண்டான் கெளசிகன்.

அரசர் குகைக்குச் சென்று நிம்மதியாய் ஓய்வெடுத்தார்.  

 

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.