Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

கதாசிரியர் அறிமுகம்

தாராசங்கர் பந்த்யோபாத்தியாய் (1889 - 1971) 

சரத்சந்திரருக்குப் பிறகு வங்காளிக் கதையிலக்கியத்தின் தலைவர் . சிறுகதை - நாவல் , நாடகம் , பாடல்கள் எழுதுவதில் தேர்ந்தவர் . அவரைப்பற்றி ரவீந்திரரின் கூற்று நினைவு கூரத்தக்கது - "மண்ணையும் மனிதனையும் அறிந்தவர். அவற்றுடன் இணைந்தவர் " இந்த இணைப்பு வெளிப்புறத்தைச் சார்ந்ததல்ல உள்ளார்ந்ததாகும். சரத் நினைவுப் பரிசு (1947), ரவீந்திரர் நினைவுப் பரிசு (1955), சாகித்திய அகாதமிப் பரிசு (1956), ஞானபீடப் பரிசு (1966) பெற்றவர் - கல்கத்தா , வடக்கு வங்காளம் , ஜாதவ்பூர் - ரவீந்திர பாரதி பல்கலைக் கழங்களின் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர் - மாநிலங்களவையின் நியமன உறுப்பினராகவும் சாகித்திய அகாதமியின் ஃபெலோவாகவும் இருந்திருக்கிறார் - இவருடைய கதைகளும் நாவல்களும் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன , திரைப்படங்களாகவும் ஆக்கப் பட்டுள்ளன - பீர்பூம் மாவட்டத்தில் லாப்பூர் கிராமத்தில் பிறந்து கல்கத்தாவில் மரணமடைந்தார் . பீர்பூமின் சிதைந்த ஜமீன்தார் குடும்பம் ஒன்றைச் சார்ந்தவர் . தொழில் - எழுத்து . இந்திய அரசின் 'பத்ம பூஷண்' விருது பெற்றவர்.

பனம்பூல் (1899      - 1979) 

உண்மைப் பெயர் பலாயி சாந்த் முகோபாத்தியாய் தொழில் - மருத்துவம் * கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பயின்று - பிறகு நீண்ட காலம் பாகல்பூரில் மருத்துவப் பணி புரிந்து விட்டுப் பின்னர் கல்கத்தாவில் வசிக்கத் தொட்ங்கினார் . கவிதை , கதை , நாவல் , நாடகம் , கட்டுரை எழுதுவதில் நிபுணர் - உள்ளடக்கத்தின் பிரகாசத்திலும் , கட்டமைப்புத் திறனிலும் சிறந்த எண்ணற்ற சிறுகதைகள் எழுதியுள்ளார் - கல்கத்தா பல்கலைக்கழகத்தின் சரத் நினைவுப் பரிசு (1952), ஆனந்தா பரிசு (1961), ரவீந்திரர் நினைவுப் பரிசு (1962) பெற்றவர் - இவருடைய கதைகள் - நாவல்களின் பாத்திரங்களின் பல்வகைத் தன்மை வாசகரை ஈர்த்து வியப்பிலாழ்த்துகிறது . இவர் 1975 ஆம் ஆண்டில் 'பத்ம பூஷண்' விருது பெற்றார்.

அசிந்த்ய குமார் சென் குப்தா (1903 - 1976) 

'கல்லோல்' குழுவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் , கதை , நாவல் , கவிதை, நாடகம் , வாழ்க்கை வரலாறு , குழந்தை இலக்கியம் படைப்பதில் சிறந்தவர் . கூரிய பார்வை , ஆழ்ந்த மனிதாபிமானம் , அளவற்ற பரிவு இவை இவருடைய படைப்புகளில் நிறைந்துள்ளன நீதித்துறையில் பணிபுரிந்து மாவட்ட நீதிபதியாக ஓய்வு பெற்றார் இவரது கூர்மையான ஆய்வுப் பார்வை கிழக்கு வங்காளத்து ஏழை முஸ்லிம் மக்கள் - அரசாங்க அதிகாரிகள் , தலைநகரத்தின் உயர் மட்டத்து மனிதர்கள் ஆகிய சமூகத்தின் பல்வேறு பிரிவுகளையும் ஊடுருவிப் பார்த்து இலக்கியம் படைத்தது இவரது படைப்புகள் மொழியின் நளினத்தில் சிறந்தவை . இவர் ரவீந்திரர் நினைவுப் பரிசு (1975) பெற்றவர்.

பிரேமேந்திர மித்ரா (1904 - 1988) 

*'கல்லோல் ' குழு எழுத்தாளர்களில் ஒருவர் - கவிதை , கதை , பாடல் : கட்டுரை , குழந்தை இலக்கியம் , திரைக்கதை , இவற்றைப் படைப்பதில் தேர்ந்தவர் . இவர் படைத்த 'கனாதா ', 'பராசர் வர்மா ' போன்ற பாத்திரங்கள் சிறுவர் , வயது முதிர்ந்தவர் இரு பிரிவினரையும் ஒருங்கே கவர்ந்தன. இவருடைய வாழ்க்கையின் ஒரு பகுதி காசியில் கழிந்தது . இவர் பலவகையான பணிகளில் ஈடுபட்டிருந்தார் - சிறிது காலம் கல்கத்தா வானொலியின் இலக்கிய ஆலோசகராக இருந்தார். ஆனால் இறுதிவரை இவர் புகல் * பெற்றது இலக்கியத்தில்தான் - இவரது எழுத்தில் மனித வாழ்க்கை யின்பால் பரிவு வெளிப்படுகிறது . வெளிப்புற வாழ்க்கையைவிட அகவயமான தேடலிலேயே இவருக்கு ஆர்வம் அதிகம். மனத்தின் ஆழத்தில் நுழைய விரும்புகிறார் இவர் . சரத் நினைவுப் பரிசு (1955), ரவீந்திரர் நினைவுப் பரிசு (1958), சாகித்ய அகாதமிப் பரிசு (1967) பெற்றவர் . 'பத்மஸ்ரீ விருதும் பெற்றார்.

அன்ன தா சங்கர் ராய் (1904) 

பிறந்தது ஒரிஸ்ஸாவிலுள்ள டெங்கானலில் - 1927ஆம் ஆண்டில் ஐ சி எஸ்.ஸில் சேர்ந்து 1951ஆம் ஆண்டில் அதிலிருந்து விலகினார். 1927 முதல் 1929 வரை இங்கிலாந்தில் வசித்தார் . 1957-ல் ஜப்பான் பயணம் , 1963-ல் மேற்கு ஜெர்மனி , இங்கிலாந்து பயணம் - 1962-ல் சாகித்திய அகாதமிப் பரிசு பெற்றார் . பயண நூல் 'பத்தேபிரவாஸே' (1931) இவருக்குப் புகழ் சேர்த்தது . இலக்கியத்தின் பலதுறைகளிலும் சிறந்த படைப்பாளி . முக்கிய நாவல்கள் சத்ய சத்ய' (1932 - 42) ஆறு பாகங்கள் ; 'ரத்னா ஓ ஸ்ரீமதி" (1956 - 73) 3 பாகங்கள் 50 வருடங்களாகச் சிறுவர்களுக்காகக் கதை எழுதி வருகிறார் . இவருடைய 'சடா ' எனப்படும் எதுகைப் பாடல்கள் புகழ் பெற்றவை . இவருடைய சிறுகதைத் தொகுப்புகள் இரண்டு கல்ப (1960), கதா (1970) கதையின் உருவத்தின் பல்வேறு சாத்தியக் கூறுகள் : உள்ளடக்கம் இரண்டிலும் அக்கறை கொண்டவர் - நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவமளித்துக் கதை எழுதுவதில் விருப்பமில்லை கதைகளில் அவர் காட்ட விரும்புவது உண்மையின் தேடல் . இவருடைய படைப்புகளை இரண்டு கால கட்டங்களாகப் பிரிக்கலாம். முதல் கட்டம் 1930-1956. இரண்டாவது கட்டம் 1959லிருந்து தொடங்கியது - இந்த இரண்டாவது கட்டத்தின் முதல் கதை மீன் பியாசி முதல் கட்டத்தில் வெளிப்புற வாழ்க்கையின் உண்மை நிலையை ஆராய்ந்தார் , இரண்டாவது கட்டத்தில் உட்புற வாழ்க்கையை ஆராய்கிறார் , தொடக்க காலத்தில் ஒரியா - வங்காளீ , ஆங்கிலம் இம்மூன்று மொழிகளிலும் எழுதினார். இப்போது ஆங்கிலத்தில் மட்டும் எழுதிகிறார். இவர் பல பரிசுகளும் விருதுகளும் பெற்றவர் , சாகித்திய அகாதமியின் ஃபெலோ - வங்காளி அகாதமியின் தலைவர் - கல்கத்தாவில் வசித்தபடியே முழு நேர இலக்கியப் பணி செய்பவர்.

சதிநாத் பாதுரி (1906-1965) 

பீகாரின் பூர்ணியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். வெகுகாலம் அரசியலில் ஈடுபட்டிருந்தார் . பீகார் காங்கிரஸ் வட்டாரத்தில் அறிமுகமானவர் . ஆகஸ்ட் இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். இந்தச் சிறை வாழ்க்கையை கருவாகக் கொண்டு முதல் நாவல் ஜாகரி 1943 எழுதினார் . இந்த நாவல் இவருக்குப் புகழ் கொணர்ந்தது - மேற்கு வங்க அரசின் ரவீந்திரர் நினைவுப் பரிசு தொடங்கப்பட்டபோது முதல் பரிசு இந்த நாவலுக்கே கிடைத்தது - சிறுகதை - நாவல் - கட்டுரை எழுதுவதில் தேர்ந்தவர் இவருடைய சக்தி பிரமண் காஹானி ஓர் அசாதாரணப் படைப்பு , உள்ளத்தில் ஆழத்தில் அனாயசமாகப் பயணிக்கிறார். மனித உள்ளத்தின் மிகநுண்ணிய பிரச்சினைகளை ஈவிரக்கமின்றி ஆய்வதில் திறன்மிக்க சதிநாத் எழுத்தாளர்களின் எழுத்தாளர் - இவருடைய டோடாயி சரித் மானஸ் (இரண்டு பாகங்கள் ) இந்திய நாவல் வரலாற்றில் இணையற்றது , இவர் புகழ் பெற்ற இந்தி எழுத்தாளர் ஃபணிசுவர் நாத் ரேணுவின் இலக்கிய ஆசான்.

ஆஷா பூர்ணா தேவி (1974) 

மனித உள்ளத்தின் இரகசியங்களை வெளிக் கொணர்வதில் அரிய திறனுள்ளவர் மனித வாழ்க்கையிடம் எல்லையற்ற பரிவு கொண்டவர் - எளிய , சாதாரண வாழ்க்கையில் திரைமறைவில் உறைந்துள்ள நுண்ணிய விசித்திரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் அசாதாரணத் திறமை இவருக்கு உண்டு . வங்க சமூகத்தையும் குடும்ப வாழ்க்கையையும் திறம்படச் சித்தரித்துள்ளார் . லீலா பரிசு , ரவீந்திரர் நினைவுப் பரிசு (1966) சரத் நினைவுப் பரிசு (1985) பெற்றவர் . இவருடைய பல நூல்கள் திரைப்படமாக்கப் பட்டுள்ளன.

சுபோத் கோஷ் (1910 - 1980) 

அசாதாரணத் திறன் வாய்ந்த எழுத்தாளர் - கதை , நாவல் - கட்டுரை படைப்பதில் தேர்ந்தவர் . பலதுறைகளிலும் ஈடுபாடு கொண்டவர் . இவர்து வாழ்க்கையின் முதற்பகுதி சோட்டா நாக்பூர்ப் பகுதியில் கழிந்தது - இந்தப் பிரதேசமே இவருடைய பலபடைப்புகளின் பின்புலமாகும். இதற்குச் சிறந்த உதாரணம் இவருடைய நாவல் சகதியா - இவருடைய படைப்புகளில் பல்வகை அனுபவச் செறிவோடு கலைத் தேர்ச்சியும் அறிவுத் தேர்ச்சியும் இணைந்துள்ளன் - பிறந்தது. ஹஜாரபாகில் பழங்குடிகளின் வாழ்க்கையிலிருந்து ராணுவ வாழ்க்கை , மானிட இயலிலிருந்து மென்கலைகள் - எல்லாவற்றிலும் அனாய்சமாக உலவுகிறார் மனிதமனதின் புதைமணலின் இரகசியத்தைக் கண்டுபிடிப்பதில் தேர்ந்தவர் .

ஜோதிரிந்திர நந்தி (1912 - 1982) 

இரண்டாவது உலகப்போருக்குப் பிற்பட்ட நடுத்தர , கீழ் மட்டத்து மக்களின் வாழ்க்கையைச் சித்திரிப்பதில் தேர்ந்தவர் - சிந்தனைச் செல்வரான இந்த எழுத்தாளர் உள்ளத்தின் உணர்ச்சிகளை ஆராய்வதில் தனித்தன்மையைக் கையாள்கின்றார் - இவருடைய மொழி நடையும் தனித்தன்மை வாய்ந்தது உணர்ச்சிப் போராட்டங்களைச் சித்திரிப்பதில் திறன் வாய்ந்தவர் . இவருடைய கதைகள் - நாவல்களில் சமகால சமூகத்தின் தவறுகள் மட்டுமின்றி, மனித வாழ்க்கையில் இயற்கையின் அழுத்தமான தாக்கமும் இடம் பெறுகிறது . இந்த விஷயத்திலும் தனித்தன்மை வாய்ந்தவர் இவர்.

நரேந்திரநாத் மித்ரா (1916 - 1975) 

குறைவாகப் பேசுபவர். இனிமையாகப் பேசுபவர். இவருடைய கதைகள் நாவல்களும் ஒரு வகையில் உரையாடல்களே. நடுத்தர வாழ்க்கையின் தேர்ந்த ஓவியர் - அறியவொண்ணாத மனித மனதின் இரகசியங்களையும் இதயத்தின் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதில் இவரது கூர்மையான நோக்கு தெரிகிறது நம்மிடையே மிகச்சிறந்த சிறுகதைகளை அதிக எண்ணிக்கையில் நரேந்திரநாத் எழுதியிருக்கிறார் என்று பல எழுத்தாளர்கள் சொல்லுவார்கள் . கதையைவிட வடிவமைப்பிலும் பாத்திரப் படைப்பிலும் இவரது அனாயாசத் திறமி கண்கூடு - கல்கத்தாவில் செய்திப் பத்திரிகையொன்றில் பணியாற்றினார். ஃப்ரீத்பூரில் பிறந்தவர்

நாராயண் கங்கோபாத்தியாய் (1918 - 1970) 

நரேந்திர நாத்தின் சக மாணவர் . இருவரும் ஒரே சமயத்தில் இலக்கியப் பணியைத் தொடங்கினர் . நாராயண் கங்கோபாத்தியாயின் உண்மைப் பெயர் தாரக்நாத் கங்கோபாத்தியாய் , பிறந்தது தினாஜ்பூரில் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் வங்காளிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார் . சிறுகதை , நாவல், கவிதை , நாடகம் , திரைக்கதை , கட்டுரை , சிறுவர் இலக்கியம் - பாடல் - செய்திப் பத்திரிகைக்கான கட்டுரை ஆகிய பலதுறைப் படைப்பிலும் தேர்ந்தவர் - முதல் நாவல் உபநிவேஷ் (1944) மூலம் புகழ் பெற்றார் . வெளியுலகம் , மன உலகம் இரண்டுமே இவருடைய படைப்புகளில் இணைந்துள்ளன . இவர் ரொமாண்டிக் எழுத்தாளர். கூடவே நடப்பியல் எழுத்தாளருங்கூட கவிதைத்தன்மையும் வெளிப்பாட்டுச் செறிவும் நிறைந்த மொழியில் இவர் தம் கற்பனையுலகைப் படைக்கிறார் மனிதனோடு இயற்கையும் இவருடைய படைப்புகளில் இடம் பெறுகிறது . ஈவிரக்கமின்றி சமூகத்தைப் பகுத்து ஆராய்வதோடு ரொமாண்டிக் மனப்போக்கும் இயற்கையில் காதலும் கொண்டவர்

சந்தோஷ் குமார் கோஷ் (1920 - 1945) 

இவர் நரேந்திரனாத் மித் ரா , நாராயண் கங்கோபாத்தியாய் ஆகியோருடன் இலக்கிய உலகில் நுழைந்தார் . பிறந்தது ஃப்ரீத்பூரில் - வாலிபத்தின் பின்பகுதி முதல் கல்கத்தாவாசி - எப்போதும் நகர வாழ்க்கையையே சித்திரிக்கிறார் கிராம வாழ்க்கை பற்றி எழுதுவதில்லை . கதை, நாவல், நாடகம், கவிதை , கட்டுரை படைப்பதில் சிறந்தவர் , தேர்ந்த மொழிச் சிற்பி . இவருடைய கதையில் வடிவத்துக்கு முக்கிய இடமுண்டு. கதை சொல்லும் முறை முக்கியமென்று கருதுகிறார் . கூர்மையான, பண்பட்ட , சற்றுக் கேலி கலந்த மொழியில் இதயத்தின் மிக நுண்ணிய உணர்வுகளையும் வெளிப்படுத்தும் அசாதரணத் திறமை படைத்தவர். இவர் வாழ்க்கையை நேசிப்பவர் . இந்த நேசத்தில் ஓரளவு வேதனையும் நம்பிக்கையின்மையும் கலந்துள்ளன. தாம் வாழும் காலம் , கையாளும் கலை இவையிரண்டிலும் அக்கறை கொண்டவர் - சிறிது காலம் டில்லியில் வசித்தார் - கல்கத்தாவின் புகழ்பெற்ற பத்திரிகையொன்றில் பணிபுரிந்தார்.

சமரேஷ் பாசு (1921 - 1983) 

நரேந்திரநாத் - நாராயண் , சந்தோஷ் குமார் - ஆகியோருடன் இணைத்துக் குறிப்பிடத்தக்க பெயர் சமரேஷ் பாசு - இவர் நகரத்தின் எழுத்தாளர் அல்லர் - வங்க மண்ணுடன் நெருங்கிய கலைஞர் . வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டவர் . பிறந்தது டாக்காவில் - தம் வாழ்க்கையில் பல்வேறு வேலைகள் பார்த்தவர் - இறுதியில் இலக்கியத்தையே முழுநேரப் பணியாகக் கொண்டார் . மனித வாழ்க்கை பற்றி அறிய இவரது ஆவலும் , அவ்வாழ்க்கையிடம் பரிவும் எல்லையற்றவை . இது அவரது படைப்புகளில் தெரிகிறது மனிதனைப்பற்றி மட்டுமின்றி இயற்கையைப் பற்றியும் எழுதுகிறார் . கால்கூட் என்ற பெயரில் பயண அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட நாவல்கள் எழுதுகிறார் - பாடல் இயற்றுகிறார் , தாமும் பாடுவார் . இவரிடம் மாணிக் பந்தோபாத்தியாய் , தாராசங்கர் பந்தோபாத்தியாய் ஆகியோரின் தாக்கமுண்டு - எனினும் இவர் தமக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டுள்ளார். இவர்தம் சொந்த அனுபவங்கள் மூலம் வாழ்க்கையை உணர்ந்திருக்கிறார் . இந்த அனுபவத்தோடு இணைந்திருக்கிறது அழுத்தமான ஈடுபாடு

பிமல் கர் (1921-)

சிந்தனைச் செறிவுள்ள எழுத்தாளர் - தமக்குரிய தனிப்பார்வையில் வாழ்க்கையைப் பார்க்கிறார் - இளம்வயதில் மருத்துவம் படித்தார் . ஆனால் இக்கல்வி முற்றுப் பெறவில்லை - பிற்காலத்தில் கதை , நாவல்களில் மருத்துவரின் பற்றற்ற பார்வையைக் கையாண்டார் . வங்காளிக் கதையிலக்கியத்தில் புதிய நடையை அறிமுகப்படுத்தினார் . அறிவும் சிந்தனையும் இவருடைய ஆயுதங்கள் - உணர்ச்சியை இவர் ஒதிக்கிடவில்லை . ஆனால் ஒரு போதும் உணர்ச்சி வசப்படவில்லை , சிறு வயது ஹஜாரி பாகில் கழிந்தது . பிறந்தது கல்கத்தாவுக்கருகில் 24 பர்கானா மாவட்டத்தில் வாழ்க்கைக்கு அடுத்தாற்போலவே சாவையும் பார்த்தார் - இவருடைய படைப்புகளின் வாழ்க்கையுணர்வும் சாவின் உணர்வும் இணைந்து இடம் பெற்றுள்ளன . இவருடைய பல கதைகள் திரைப்படமாக்கப் பட்டுள்ளன.

ரமாப்த சௌதுரி (1922) 

தற்கால வங்காளி இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் , இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் எழுதத் தொடங்கினார் . பிறந்தது கரக்பூரில் - சிறுதுகாலம் சோட்டா நாக்பூர் பகுதியில் பணிபுரிந்தார் . பல்வேறு பயணங்கள் செய்தபின் இப்போது கல்கத்தாவின் தினசரிப் பத்திரிகை ஒன்றின் ஒரு துறைக்கு ஆசிரியர் - ஒரு சமயம் காட்டைப் பின்புலமாகக் கொண்டு பல சிறு கதைகள் எழுதியுள்ளார் . இப்போது நகர வாழ்க்கையே இவரது படைப்புகளில் இடம் பெறுகிறது . இவரது கதைகள் பல திரைப்படமாக்கப் பட்டுள்ளன . இவரது மொழி பண்பட்டது. நளினம் நிறைந்தது இவர்து கதைகளின் உள்ளடக்கத்தில் பல்வேறு தன்மைகள் உண்டு . எழுதும் முறையிலும் இவர் தனித்தன்மையை வெளிப்படுத்துகிறார். வாழ்க்கையின் பல துறைகளில் ஆழ்ந்த வர் - ரவீந்திரா நினைவுப் பரிசும் (1971) சாகித்திய அகாதமிப் பரிசும் (1988) பெற்றவர்.

சையது முஸ்தபா சிராஜ் (1930 -) 

நாட்டு விடுதலைக்குப் பிற்காலத்து இளம் எழுத்தாளர்களில் ஒருவர் . மூர்ஸிதாபாத் மாவட்டக் கிராமமொன்றில் பிறந்தவர் - வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றவர் - மூர்ஷிதாபாதில் நாடோடி நாடகக் குழுவில் பாடல்கள் எழுதினார் (1950-1958), அதற்குமுன் பத்திரிகைகளில் பணிபுரிந்தார் (1949-1950). இப்போது கல்கத்தா தினசரியொன்றில் பணியாற்றுகிறார், தாராசங்கரைப் பின்பற்றி எழுதத் தொடங்கிப் பிறகு தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டார் . முதல் கதை தேஷ் பத்திரிகையில் வெளிவந்த காதலும் திரும்பிவரும் ரயிலும் - முக்கியமாக எழுத்தின் மூலமே வாழ்க்கை நடத்துகிறார் : இவருடைய படைப்புகளில் கிராம மக்களும் நகர மக்களும் இடம் பெறுகின்றனர் - சமூகப் பிரச்சினைகளில் தீவிர அக்கறையுள்ளவர் - நிறைய எழுதிகிறார்.

மதி நந்தி (1921 - )

வடக்குக் கல்கத்தாவில் ஒரு மேற்குடியில் பிறந்தார் - தானியங்கிப் பொறியிலில் டிப்ளமோ பெற்றவர் . அரசுப் போக்குவரத்துத் துறையில் இரண்டாண்டுப் பயிற்சிக்குப்பின் பி ஏ பாஸ் செய்து பத்திரிகைத் துறையில் பணி செய்யத் தொடங்கினார் , இப்போது கல்கத்தாவின் தினசரியொன்றில் விளையாட்டுப் பகுதியின் ஆசிரியர் - கிரிக்கெட் பிரியர் - கிர்க்கெட் விளையாட்டைக் கருவாகக் கொண்டு மூன்று நூல்கள் எழுதியுள்ளார் . தேஷ் பத்திரிகையில் வெளியான சாத் (1956) கதை மூலம் வாசகர் கவனத்தை ஈர்த்தார் . அனாவசிய விவரங்களற்ற. நேரடியான முறையில் கதை சொல்கிறார் - யதார்த்த மண்ணில் உறுதியாக நின்று கொண்டு மனிதன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார். நடுத்தர . கீழ் மட்டத்து மக்களின் வாழ்க்கையைத் திறம்படச் சித்திரிப்பவர்.

சுநீல் கங்கோபாத்தியாய் (1934-) 

பிறப்பு ஃப்ரீத்பூரில் . கவி கதாசிரியர் , தேஷ் பத்திரிகையில் வெளியான ஏக்டி கவிதா என்ற கவிதை மூலம் அறிமுகமானவர் - ஜனங்களால் அதிகம் நேசிக்கப்படுபவர் , கவி சுநீலா , கதாசிரியர் சுநீலா என்று சொல்வது கடினம் பலவகைப் பணிகளுக்குப்பின் தற்போது கல்கத்தாப் பத்திரிகையொன்றில் பணி புரிகிறார் . 1960-ம் ஆண்டு அமெரிக்கப் பயணம் செய்தார். நிறைய எழுதிகிறார். சிலகதைகள் திரைப்படமாக்கப் பட்டுள்ளன் - பரிச்சயமான நடுத்தர மக்களின் வாழ்க்கையின் பலதிறப்பட்ட உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் திறமையாகவும் மனதைக் கவரும் முறையில் சித்திரிக்கிறார் - மொழியில் நளினம் . சொல்லும் முறையில் அழகு, கதையின் ஈர்ப்புத்திறன் - இவையெல்லாம் இவரை மக்களின் அபிமான எழுத்தாளராச் செய்துள்ளன.

பிரபுல்ல ராய் (1934-) 

பிறந்தது டாக்காவில் - வட்டார வாழ்க்கையைச் சித்திரிக்கும் நாவல் எழுதி இலக்கியப் பணியைத் தொடங்கினார் . தேஷ் -இல் வெளியான நாவல் பூர்வ பார்வத்ய மூலம் அறிமுகம் பெற்றார் - இவரது பெரும் படைப்பான கேயா பாத்கிரார் நெளகா (இரண்டு பாகங்கள் ) தற்கால வங்காளி வாழ்க்கையில்ன் வரலாறாகும் . தற்போது ஒரு கல்கத்தாப் பத்திரிகையின் ஒரு பகுதிக்கு ஆசிரியர் - இவர்து சில கதைகள் திரைப்படமாக்கப் பட்டுள்ளன மனப்பூர்வமான ஈடுபாட்டோடு கவர்ச்சியான முறையில் கதைகள் எழுதுகிறார் . கதையின் அமைப்பு , பாத்திரப் படைப்பு இரண்டிலும் திறமை பெற்றவர்.

சீர்வேந்து முகோபாத்தியாய் (1935 -) 

கிழக்கு வங்காளத்தில் மைமன்சிங்கில் பிறந்தவர் - ஆசிரியராகப் பணிபுரிந்தார் . 1959-ஆம் ஆண்டு தேஷ் பத்திரிகையில் ஜலதரங்க என்ற சிறுகதை மூலம் புகழ் பெற்றார் , இவருடைய கதைகளிலும் நாவல்களிலும் உண்மை வாழ்வுக்கும் ஆழ் மனத்து உணர்ச்சிகளுக்குமிடையே இழுபரிப் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது - இவருடைய கதைகளில் நிலையற்ற தன்மையில்லை . நிலையான நம்பிக்கை இருக்கிறது - சுயசரிதைப் பாணியில் எழுதும் கதைகளில் இவர் உள் மன உலகின் ஆழத்தில் சத்தியத்தைத் தேடுகிறார்

தேபேஷ் ராய் (1936 - ) 

வங்காளி மொழியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார் . அறுபதுகளில் வங்காளிச் சிறுகதை இயக்கத்தின் தலைமை வகித்த எழுத்தாளர்களில் ஒருவர் - கதை சொல்லும் முறையிலும் பயன்படுத்தும் மொழியிலும் மிகவும் அக்கறை காட்டுபவர் - இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு தேபேஷ் ராயில் சிறுகதைகள் 1969-ஆம் ஆண்டில் வெளியாயிற்று - 1972 ஆம் ஆண்டில் இவரது முதல் நாவல் யயாதி வெளிவந்தது . தேஷ் பத்திரிகையில் வெளியான ஹாட்காட்டா கதைமூலம் வாசகரின் கவனத்தை ஈர்த்தார் நூறுக்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.

 

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.